நவராத்திரி/Navarath

விஜயதசமி என்றால் என்ன ?

வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.

நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.

அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்

விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.

வட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியைகொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.

எனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.

குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.

……………………………………………………………………………………………………………………………..

நவராத்திரி விரதமும் – சக்தி வழிபாடும்

தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலா

ள் அபிராமி கடைக் கண்களே

 

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;
சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;

இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.

நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள்.

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ் உலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர். ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.
அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட கடப்பிடிக்கப் பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம்.

இவ் நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும்ம் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள். கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபல்யமானது. இவ் வழக்கம் தற்பொழுது இலங்கையிலும் பின்பற்றப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ் விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூசைகள் செய்வார்கள். ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும். இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள்

என்பது ஐதிகம்.

முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலை யாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸுரனைக் கொன்ற மஹாதுர்க்கை யாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாஸுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அஸுரர்களைக் கொன்று ஜகத்தை ரக்ஷித்த மகாசரஸ்வதி யாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள்

என்பது ஐதீகம்

கொலுவைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேதியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம்.

ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப்பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசை கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்கவேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.

புதிய தொழில் தொடங்க உகந்த நாள் விஜயதசமி நன்னாளாகும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும். அன்றைய தினம் பாடசாளைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும்.

10வது தினமான விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜய தசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை “சண்டிகா தேவியாக” (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. துன்பத்தை – அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் அம்பிகை உயிர்களிடத்தே காணப்படும் அசுரத்தன்மைகளை அழிக்க சண்டிகாதேவியாக, துர்க்காதேவியாக அல்லது காளி தேவியாகத் தோன்றி அவற்றை சங்காரம் செய்கின்றாள் எனலாம். இவ் வெற்றித் திருநாள் சைவ பெருமக்ககளால் அம்பிகை ஆலயங்களில் (தற்போது எல்லா ஆல்யங்களிலும்) “மானம்பூ விழா” அல்லது “வன்னிவாழை வெட்டு” விழாவாக கொண்டாடப் பெற்றுவருகின்றது. வன்னி மரக் கிளைகள் குத்தப் பெற்ற கன்னிவாழையை மகிஷாசுரன் ஆக ஆவாகணம் செய்து அதனை வெட்டி விழுத்துவதன் மூலம் மகிஷாசுரனைச் சங்கரித்தல் நிகழ்வு நடைபெற்று அதன் வெற்றியை வெற்றித் திருநாளாக கொண்டாடுதலே மானம்பு அல்லது கன்னிவாழை வெட்டுவிழாவாகும். பணிப்புலம் முத்துமாரி அம்பிகை, காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் சென்று அங்கு வன்னிவாழை வெட்டு விழா நடைபெறுகின்றது.

இலங்கையிலும்,தமிழகத்திலும் சரஸ்வதி பூசை எனவும், இந்தியாவில் வட மாநிலங்களில் துர்கா பூஜை எனவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.
இந்தியாவில் கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.
தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இவ் விரதத்தின் சிறப்பம்சமாகும்.
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது சைவமக்களின் நம்பிக்கை.

நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

1. முதலாம் படியில்:- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;

2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :- மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி:-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள்:- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.

4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.

6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்

இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.
அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.

மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் “படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.

“தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்” என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

நவராத்திரி வரலாறு

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நவராத்திரி விரதம் உருவானதற்கான புராணக் கதை.

சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.
தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள்.

அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள்
ராஜாக்களுக்கு அடிமை.
பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.

இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள்.

சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான்.
இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள்.

இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்

இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டியே நடைபெறுகின்றன.

மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.

சிவகதி வேண்டி சிவராத்திரி விரதம்
செல்வச் சிறப்போடு வாழ நவராத்திரி விரதம்

வியாச‌ர் கூறிய இரண்டு ந‌வராத்திரிகள் – அரிய ஆன்மீக தகவல்

Posted on September 16, 2014 by vidhai2virutcham

வியாச‌ர் கூறிய இரண்டு ந‌வராத்திரிகள் – அரிய ஆன்மீக தகவல்

நவராத்திரி விரத பலன்…

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக் கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்க டாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்தி ரி.

நவராத்திரி விரத காலம்…

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியா ச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த

விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களை யும் கேட்கிறான் ஜனமஜே யன் (நவராத் ரே துஸம்ப்ராப்தே கிம்கர்தவ்யம் த்வி ஜோத்தம…). அதற்கு வியாச மகரிஷி, ‘நவராத்திரி இரண்டுவகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாத ம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந் த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசை க்குப் பிறகு 9 நாட்கள்) கொ ண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்ற வை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்புண்டு. நோய்கள், இயற்கை சீற்றங்க ள், மனக் குழப்பங்கள் போன் றவையும் ஏற்படலாம். ஆக வே இந்த கால ங்களில் புத்தி மான்களும், நல்லதையே வி ரும்புபவர்களும் சண்டி தேவி யை ஆராதனம் செய்ய வேண் டும் என்று வியாசர் கூறுகிறார்.

‘கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத் தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மைகளைப்பெற்றிட விநா யகர் வழிபாடும், சண்டிகையின் வழிபா டும் நமக்கு உதவும் என்பது முன்னோர் வாக்கு.

அருள் தரும் நவராத்திரி!

‘நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவராத்தி ரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். ‘நவ’ எனில் ‘புதுமையான’ என் றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக் கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையா ன புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்க ளில் அனைவரும் அம்பிகை யை வழிபடுதல் வேண்டும்.

அவள்தானே உலகுக்கெல் லாம் மூல கரு (‘விச்வஸ்ய பீஜம்’) அவளை வழிபடுவதா ல், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிக ளுக்கும் நன்மை உண்டாகு ம் என்பது நிச்சயம்.

விரத நியதிகள்…

ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவ ராத்திரியின் துவக்க நாளாக க்கொள்ள வேண்டும் என்கி றது ஸ்கந்த புராணம்.

நவராத்திரி வழிபாடு செய்யு ம் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத் த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத் திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய் ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப் பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்கவேண்டும். அதை பசுஞ் சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம் மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான் கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்க ரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உரு வம் உள்ள சிவப்புக்கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொ ண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண் டும்.

பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாரா க வேண்டும். (இயன்ற வரையி ல் தகுந்த அந்தணர்களை வரவ ழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).

பூஜைமேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம்இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்க ளுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண் ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தி னம் ஆகியவற்றைப் போட்டு, மா விலைளை மேலே வைத்து மங் கல இசை முழங்க, வேத கோஷ ம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.

”தாயே. உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப்போகிறேன். அது நல்லபடியாக நிறைவே ற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதே னும் குற்றம் குறைகள் இருப்பினும் பொ றுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத் தை எங்கள் வீட் டில் நிறையச் செய்ய வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொண்டு பூஜிக்கவேண்டும். பலவிதமா ன பழரசங்கள், இளநீர், மாதுளை, வா ழை, மா, பலா முதலானவ ற்றையும், அன் னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தி யம் செய்து வழிபட வேண்டும்.

இப்படி தினமும் மூன்றுகால பூஜை செய் தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இரு ப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

9 நாட்கள் விரதம் இருக்க இய லாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழி படலாம். அதுவும் இயலவி ல்லை எனில், அஷ்டமி தினத்தி ல் அம்பா ளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தி ல்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினிய ருடன் தோன் றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடி க்கிறார்களோ, அவர்களுக் கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக்கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

விரிவான பூஜை இயலாதெ னில்…

சரி… இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத் தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண் டா?

இதற்கு மிக அருமையாக பதில் சொல்கி றது பவிஷ்ய புராணம். ‘இ துபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவு ம் நீரும் அளித்தா லே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மை யான பக்தியுடன், ‘அம்மா என்னைக் காப்பாற் று’ என்று சக்தியைச் சரணடைந்தா லே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தை யும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண் டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம்.

உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்து க்கு எல்லாம் மூலமான தாயை (”யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”) வண ங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!

நவராத்திரி விரத பலன்…

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமை யானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல் லை என்கின்றன புராணங்கள்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண் ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோ ட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தை யும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம்கிட்டும் . படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடை பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர் கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களி ன் வாழ்க் கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதே போ ன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைக ளின் புத்தக ங்களையும் பூஜையில் வைத்து வழி பட்டு, அன்று அவற்றைப் பயன்படுத் தாமல், அடுத்த நாள் விஜயதசமியன் று அந்தப்பொருட் களை கண்டிப்பாக பயன்படுத்து தல் சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை… குமாரி முதலாக 9 வடிவங்களாக பாவித்து வழி படுவதும் உண்டு.

=> பி.சந்திரமெளலி

——————————————————————————————————————————————————————————————————————————————————
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்..
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..
கொள்ளையின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்..
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்..
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்..
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்..
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்..
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்..
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
பாரதியார்
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்..<br /><br /><br /><br /><br /><br />
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..<br /><br /><br /><br /><br /><br />
கொள்ளையின்பம் குலவு கவிதை<br /><br /><br /><br /><br /><br />
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்..<br /><br /><br /><br /><br /><br />
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே<br /><br /><br /><br /><br /><br />
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..<br /><br /><br /><br /><br /><br />
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்<br /><br /><br /><br /><br /><br />
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்..<br /><br /><br /><br /><br /><br />
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்..<br /><br /><br /><br /><br /><br />
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்..<br /><br /><br /><br /><br /><br />
கீதம் பாடும் குயிலின் குரலைக்<br /><br /><br /><br /><br /><br />
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்..<br /><br /><br /><br /><br /><br />
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்<br /><br /><br /><br /><br /><br />
குலவு சித்திரம் கோபுரம் கோயில்<br /><br /><br /><br /><br /><br />
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்..<br /><br /><br /><br /><br /><br />
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.<br /><br /><br /><br /><br /><br />
பாரதியார்

 


பொன்மலை பரிமளம்சரஸ்வதி பூஜை 13-10-2013


          மயமலைச் சாரலில் அமர்ந்து வேதங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார் வியாசர். அப்போது, சிறுமியான சரஸ்வதி தன் தோழிகளுடன் கலகலவென்று பேசி விளையாடிக் கொண்டிருந்தாள். சரஸ்வதியின் சப்தம் வியாசருக்கு இடையூறாக இருந்தது. பலமுறை சொல்லியும் கேட்காததால் கோபமுற்ற வியாசர், “நீ பூமிக்குள் மறைந்துபோவாய்’ என்று சாபமிட்டார். பயந்துபோன சரஸ்வதி, வியாசரை வணங்கி சாபவிமோசனம் கேட்டாள். கைகூப்பிய நிலையில் தன்முன் நிற்கும் அவள்மீது இரக்கப்பட்டு, “நீ பூமிக்குள் மறைந்தாலும் நதியாக மாறி மக்களை புனிதம் பெறச்செய்வாய். அதேசமயம் நீ தேவரூபமாக மாறி கல்விச் செல்வத்தையும் அளிப்பாய். நானே உன்னை வணங்கும் காலம் வரும். என் சாபம் உனக்கு வரம்!’ என்று அருளினார்.

பூமிக்குள் நதியாக மாறியதால் சரஸ்வதி நதியானாள். இந்த நதிதான் அலகாபாத் திரிவேணியில் கங்கை, யமுனை நதிகள் கூடுமிடத்தில் அந்தர்வாகினியாக வந்து சங்கமிக்கிறாள் என்கிறது புராணம்.

அறிவியல் கூற்றின்படி, சரஸ்வதி நதியானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்திலும் சில பழமை வாய்ந்த நூல்களிலும் சிந்து நதியைப்போன்று சரஸ்வதி நதியும் பரந்து விரிந்து ஓடியதாக சான்றுகள் உள்ளன.  கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் முதல் 1,800 கிலோமீட்டர் வரையிலான நீளத்தையும், மிகுந்த அகலத்தையும், ஆழத்தையும் கொண்ட நதியென்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 300-க்கும் கி.மு. 400-க்கும் இடைப்பட்ட காலத்தில், பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இமயமலையின் அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. அதனால் சரஸ்வதியின் உற்பத்தி தடைப்பட்டு மறைந்துவிட்டது. இதன் காரணமாகவே வளமான பூமியான ராஜஸ்தானில் பாலைவனம் தோன்றியது என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இமயமலை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பனியில் நிறைந்துள்ளது. இங்குள்ள பந்தர்பூஞ்ச் பகுதியில்தான் சரஸ்வதி நதி பிறந்தது. இது வற்றாத நதியாக ஓடியதாக வரலாறு கூறுகிறது.

ஜோத்பூரிலுள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையம் சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியில் வெற்றிகண்டுள்ளது. ராஜஸ்தான் பாலைவனத்தில் பதின்மூன்று இடங்களில் தோண்டப் பட்டதாகவும், அதில் 35 முதல் 40 மீட்டர் ஆழத்தில் தண்ணீர்ப் படுகை இருப்பதாகவும், அந்தத் தண்ணீர் பரிசுத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ அறிக்கை.

பராசக்தியின் அருளால் தோன்றியவள் சரஸ்வதி என்று சொல்லப்பட்டாலும், பிரம்மனால் படைக்கப்பட்டவள் என்றும் புராணம் கூறுகிறது.

சரஸ்வதி அவதரித்தது குறித்து பலவாறு சொல்லப்பட்டாலும், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி அவதரித்தாள் என்ற கருத்து நிலவுகிறது. எனவே நவராத்திரி காலங்களில் மூல நட்சத்திரத்தன்று சரஸ்வதி பூஜையைத் தொடங்கி மூன்று நாட்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. விஜயதசமியன்று புதிய கல்வி மற்றும் கலை சம்பந்தமான பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பது விதியாகும்.

வேதங்களில் புகழப்படும் பல தெய்வங்களில் முக்கியமான தெய்வம் சரஸ்வதி. அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும்; யாகம் நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப்படுகிறாள்.

நதி ரூபமாக அந்தர்வாகினியாக இருக்கும்போது மக்களைப் புனிதப்படுத்தும் சரஸ்வதி, தேவரூபத்தில் கலைவாணியாக மாறி தனி சக்தி பெற்று, பிரம்மனுக்கு மனைவியாகவும் ஆனாள் என்றும் புராணம் கூறுகிறது.


பொதுவாக நாம் சரஸ்வதியை கலைவாணியாக- தெய்வ ரூபமாக வழிபடுகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல; இங்கு தோன்றிய எல்லா மதங்களும் கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதியைப் போற்றுகின்றன.

புத்த, ஜைன மதங்களிலும் சரஸ்வதி வழிபடப்படுகிறாள். திபெத் மக்கள்  சரஸ்வதி தேவியை “யங்சன்ம’ என்ற பெயரிலும்; ஜப்பான் நாட்டினர் “பென்டன்’ என்ற பெண் தெய்வமாகவும்; கிரேக்கர்கள் “ஆதினே’ என்றும்; ரோமானியர் “மினர்வா’ என்றும் வழிபடுகிறார்கள்.

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடக சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய அஷ்ட வடிவங்களை ரிக்வேதம் குறிக்கிறது.

கலைமகளின் வாகனம்  மயில் என்று குறிப்பிட்டாலும், சில நூல்கள் அன்னப் பறவையின்மேல் வீற்றிருப்பதாகவும் கூறுகின்றன.

பொதுவாக நம் மனக்கண்முன் வீணை தாங்கிய  சரஸ்வதி திருவுருவம் நினைவுக்கு வரும். வெண்தாமரை மலரில் வெண்ணிற ஆடையணிந்து அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் மேல் வலது கையில் அட்சமாலையும், கீழ் இடதுகையில் ஓலைச்சுவடியும், மற்ற கரங்களில் வீணை தாங்கியும் காட்சி தருவாள். அவள் கைகளில் உள்ள வீணையின் பெயர் கச்சபீ. இந்த வீணையை சிவபெருமான் பிரம்மனிடம் கொடுத்தார். பிரம்மன், தன் மனைவிக்குப் பரிசளித்தார்.

நான்கு கரங்களுடன் காட்சி தரும் சரஸ்வதி எட்டுக் கைகளுடனும் சில திருத்தலங்களில் காட்சி தருகிறாள். மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றை கைகளில் தாங்கிய தோற்றத்தில் காட்சி தரும் சரஸ்வதியின் ரூபம் சற்று உக்கிரமாகத் திகழும். இந்த தேவி சம்பாசூரனை வதைத்தாள் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது. எட்டுக் கைகள் கொண்ட சரஸ்வதியை சியாமளா என்று போற்றுவர்.

சில தலங்களில் வீணை இல்லாமலும் காட்சி தருகிறாள். இவளை ஞான சரஸ்வதி என்பர்.

நான்கு தலைகளுடன் வீணை ஏந்திய சரஸ்வதி, திருவிடைமருதூர்  ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அருள்புரிகிறாள். இங்கு பிரம்மரூபியாக சரஸ்வதி திகழ்வதாக ஐதீகம்.

வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி, நம் உடலில் வெவ்வேறு பெயர்களுடன் வியாபித்திருக்கிறாள் 
என்று சாக்த தந்திர நூல்கள் கூறுகின்றன. தலையில் வசினிவாக் தேவதையாகவும், நெற்றியில் காமேஸ்வரியாகவும், புருவமத்தியில் மோகினியாகவும், கழுத்தில் விமலாவாகவும், இதயத்தில் அருணாவாக் தேவதையாகவும், நாபியில் ஜயினியாகவும், மர்மஸ்தானத்தில் சர்வேஸ்வரியாகவும், மூலாதாரத்தில் கௌனியாகவும் வியாபித்திருக்கிறாள் என்று கூறப்படுகிறது.

நீல சரஸ்வதி, உக்ரதாரா, சகவதாரா, நீலதாரா என்பவை சரஸ்வதியின் அம்சங்கள். சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும் வீற்றிருக்கிறாள்.

தமிழகத்தில் கூத்தனூரில் சரஸ்வதிக்கென்று தனிக்கோவில் உள்ளது. இங்கு சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இவளை ஞானசரஸ்வதி என்பர். 

திருச்சிக்கு அருகிலுள்ள உத்தமர் கோவிலில் பிரம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில் தனிச்சந்நிதியில் சரஸ்வதி அருள்புரிகிறாள். தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் திருத்தலத்தில் ஒரே சந்நிதியில் பிரம்மனும் சரஸ்வதியும் காட்சி தருகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் வியாசரின் சாபத்தால் நதி ரூபமாகவும், தெய்வ ரூபமாகவும் மாறிய சரஸ்வதிக்கு காஷ்மீரில் ஆதிசங்கர பகவத்பாதர் கட்டிய கோவிலின் அருகில், வேதவியாசர் சரஸ்வதிக்கு ஒரு சிறிய கோவில் கட்டியிருக்கிறார். மேலும், ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம், பாஸர் என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும் வேத வியாசர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. வியாசர் சரஸ்வதியை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்.

ஸ்ரீபிரம்மாவின் மனதிலிருந்து சரஸ்வதி அவதரித்ததாகவும் புராணத்தகவல் உண்டு. அந்த நாள் தை மாதத்தில் வரும் “வசந்த பஞ்சமி’யாகும். இதனை மகாபஞ்சமி என்றும் சொல்வர்.

பகவான் கிருஷ்ணர்  முதன்முதலில் சரஸ்வதியை பூஜித்துப் பேறுபெற்ற நாள் வசந்த பஞ்சமி என்று புராணம் கூறுகிறது. அதன்விளைவாக ராஜதந்திரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்து விளங்கினார். 

தனது வித்தைகளை மீண்டும் நினைவுக்கு வர வரம்பெற்றார்.

மகாகவி காளிதாசருக்கும், ராமாயணம் இயற்றிய கம்பருக்கும், குமரகுருபரருக்கும் ஸ்ரீசரஸ்வதி தேவி பல வழிகளில் துணை நின்று உதவியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன.

சரஸ்வதி தேவி பூவுலகில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற தலங்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானதாக திருக்காளத்தி விளங்குகிறது.

சீர்காழி, திருமறைக்காடு, திருக்கருகாவூர், திருநெய்தானம், இராமேஸ்வரம், கண்டியூர் போன்றவையும் சரஸ்வதி வழிபட்ட தலங்களாகும்.

வேதங்களில் இன்னொரு சரஸ்வதியும் உண்டு. அவள் வேதசரஸ்வதி ஆவாள். ஜடாமகுடம் தரித்து, அபயமுத்திரையோடு பத்மாசனத்தில் காட்சி தரும் இந்த வேதசரஸ்வதி நதி ரூபமானவள். நீர்ப்பறவையை வாகனமாகக் கொண்டவள்.

கல்வி, கலை, ஞானம், வேதம் இவற்றின் தலைவியான ஸ்ரீசரஸ்வதி ஒருவருக்கு ஒருமுறை அருள்புரிந்தால், அது நிரந்தர மாக அவர்களைவிட்டு என்றும் பிரியாமல் நிலைத்திருக்கும். ஸ்ரீசரஸ்வதியை தியானித் தால் அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.            றையாற்றலின் தத்துவத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கி, குண்டலினி உள்ளிட்ட பல்வேறு யோகங்களை எளிமைப்படுத்தி பலருக்கும் கற்பித்து, வாழ்நாளெல்லாம் மனிதகுல நன்மைக்கு பெருந்தொண்டாற்றியவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி. நவகிரகங்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஏற்புடையதாகவும், தீமை செய்யும் அலைகளை நல்லவையாகவும் மாற்றும் சூட்சும வித்தையையும் “பஞ்சபூத நவகிரகத் தவம்’ என்னும் தியான முறையாக அவர் வடிவமைத்துத் தந்துள்ளார். உலகெங்குமுள்ள அவரது லட்சக்கணக்கான அடியவர்கள் இதைச் செய்து பயன்பெறுகின்றனர். “ஓம்’ வாசகர்களுக்காக இங்கே அந்தத் தவமுறை…

பஞ்சபூதங்களின்மீதும் நவகிரகங்களின்மீதும் மனதையும் அறிவையும் செலுத்தி தவம் செய்வதையே பஞ்சபூத நவகிரகத் தவம் என்கிறோம். நட்சத்திரங்கள், கோள்களின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஆற்றல் நிலவுலகில் வாழும் உயிர்களை பாதிக்கின்றன. குறிப்பாக மனிதர்களின் உயிருக்கும், உடலுக்கும், மனதிற்கும் நன்மை- தீமைகளை ஏற்படுத்துவதாய் அமைகின்றன. மனித மனம் விரியும்பட்சத்தில், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நன்மையையும் அள்ளித்தரும். அப்படி முழு அறிவைப் பெற்ற நிலையில் மனமானது அமைதியையும் நிறைவையும் பெறும். விரிந்த மனதும் தெளிந்த நுண்ணறிவும் வாழ்வில் வெற்றியை ஏற்படுத்தும்.

பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆனவை. நாமும் பஞ்சபூதங்களால்ஆனவர்கள்.

பருவுடல்- நிலம்.

ரத்தம்- நீர்.

உடல் சூடு- நெருப்பு.

மூச்சு- காற்று.

உயிர்- ஆகாயம்.
ஆகாயமே மற்ற பூதங்களிலும் மனிதர்களுக்குள்ளும் இருப்பதால், ஐந்து பூதங்களையும் பிரபஞ்சத்தையும் மனித மனதால் உணரமுடியும். அந்த ஆகாயமே உயிராகவும் இருப்பதால் உயிர்க்கலப்பு எதனோடும் ஏற்பட முடியும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்று ஒவ்வொரு பூதத்தின் பெருமை உணர்தல், உயிர்க் கலப்புப் பெறுதல், உற்பத்தி ரகசியம் தெரிந்துகொள்ளல், காப்புப் பெறுதல், பயன்கொள்ளல் என்பனவற்றை உணர்ந்து தியானித்தலே பஞ்சபூதத் தவம் எனப்படுகிறது.

அடுத்து நட்சத்திரம், கோள்களை நினைத்து நவகிரகத் தவம் செய்ய வேண்டும். சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் ஒவ்வொன்றிலும் மனதைச் செலுத்தவேண்டும். ஒவ்வொரு கிரகத்தின் பெருமை, சூரியனைச் சுற்றி வரும் காலம், நிறம், நமது எந்த உடலுறுப்போடு தொடர்புள்ளது என்பவற்றைத் தெரிந்து தியானிக்க வேண்டும். அந்த கிரகங்கள் நமக்கு செய்யக்கூடிய நன்மைகள்- அந்த கிரகத்திலிருந்து வரக்கூடிய அலைகளை நாம் ஏற்றுப் பயன் கொள்ள வேண்டும்.

அந்தந்த கிரகத்தினுடைய ரசாயன அமைப்பிற்குத் தக்கவாறும், மனிதர்களுடைய கருவமைப்பிற்குத் தக்கவாறும் கோள்களிலிருந்து வரும் அலைகளின் பாதிப்பு அமையும். கிரகங்களிடம் நட்புணர்வோடு உயிர்க்கலப்பு பெறுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்பதையும், நன்மைகள் விளையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பஞ்சபூதத் தவம் செய்யும் முறை

முதலில் கீழுள்ள நான்கு வேண்டுதல்களை மும்மூன்று முறை சொல்லி தியானிக்கவும்.

1. காப்பு: அருட்பேராற்றல் இரவு- பகல் என எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமைவதாகுக.

2. இடத்தூய்மை: நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின.

3. அருட்பேராற்றல் உடலிலே, உயிரிலே அலை அலையாகப் பாய்ந்து நிரம்புவதை உணர்கிறேன்.

4. அன்னைக்கு வணக்கம்; தந்தைக்கு வணக்கம்; ஆசான் அவர்களுக்கு வணக்கம்.

இதன்பின் பஞ்சபூதங்களில் ஒன்றான மண் என்ற தத்துவத்தின்மீது தவத்தைத் தொடங்குவோம். நிலத்திற்கு அறிகுறியாக இந்தப் பூவுலகையே மனதில் கொள்வோம்.

● இந்தப் பூவுலகம் மிகப்பெரியது. 25,000 மைல் சுற்றளவுடையது. மண், உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவற்றாலானது. தன்னைத்தானே மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொள்கிறது. சூரியனின் பாதையில் நாள் ஒன்றுக்கு சுமார் 16 லட்சம் மைல் ஓடுகிறது. இத்தகைய வியத்தகு கோள் இந்த நிலம்.

● இதன் பெருமையையும் மதிப்பையும் மன விரிவுகொண்டு மதித்துப் போற்றுவோம்.

● இதனோடு ஒன்றிக்கலந்து உயிர்த் தொடர்புகொண்டு, அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக்கொள்வோம்.

● பிரபஞ்சப் பரிணாமத்தில் மண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.

● இந்த நிலவுலகம் என்ற மண்ணினாலும், மண்ணிலிருந்தும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.

● மண்ணைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்திக்கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.

மண் என்ற நிலவுலகின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.

(இரண்டு நிமிடம் உலகத்தை எண்ணி தியானிக்கவும்.)

அடுத்து பிரபஞ்சப் பரிணாமத்தில் நான்காவது தத்துவமாகிய நீரின்மீது தவம் தொடங்குவோம்.

● இந்தப் பூவுலகம் நூற்றுக்கு 72 பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீரினுடைய இருப்பை மேகங்களிலும், தாவரங்களிலும், உயிரினங் களிலும் நாம் காணமுடிகிறது. நீர் உயிர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.

● நீரின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.

● நீரோடு ஒன்றிக் கலந்து உயிர்க்கலப்புப் பெறுவோம்.

● பிரபஞ்சப் பரிணாமத்தில் நீரின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.

● நீரிலிருந்தும், நீரினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம். 

● நீரைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்து கின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.

நீரின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். 

(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).

பிரபஞ்சப் பரிணாமத்தில் மூன்றாவது தத்துவமாகிய நெருப்பின்மீது தவம் இயற்றுவோம்.

● பூமி தன்னைத்தானே வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் கனத்தஅணுக்களெல்லாம் நடுமையத்தில் நெருக்கமாகக் கூடிக்கொண்டிருக்கின்றன. அந்த நெருக்கத்தால் அணுச்சிதைவு ஏற்பட்டு எப்பொழுதும் ஒரு பெரிய நெருப்பு பூமியின் நடுமையத்தில் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய கனல் பூமியின் மேற்பகுதி வரை வந்து, அங்கு வாழும் உயிர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பெரு நெருப்பையே தவத்திற்கு மனதில் கொள்வோம். 

● நெருப்பின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.

● நெருப்போடு ஒன்றிக் கலந்து, உயிர்க்கலப்புப் பெறுவோம்.

● பிரபஞ்சப் பரிணாமத்தில் நெருப்பின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.

● நெருப்பிலிருந்தும், நெருப்பினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்பு பெறுவோம்.

● நெருப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துகின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.
● நெருப்பின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.

(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).

பிரபஞ்சப் பரிணாமத்தில் இரண்டாவது தத்துவமாகிய காற்றின்மீது தவத்தைத் தொடங்குவோம்.

● நிலவுலகைச் சுற்றி சுமார் 19 மைல் உயரத்திற்கு அடர்த்தியாகவும், அதற்கு மேல் லேசாகவும் கவசம்போல் சூழ்ந்து காற்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.

● உயிர்களின் வாழ்க்கைக்கு காற்று எவ்வளவு அவசியம் என்பதை உணர்வோம்.

● மனவிரிவு கொண்டு காற்றின் பெருமை யையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.

● அதனோடு ஒன்றிக்கலந்து, உயிர்த்தொடர்பு கொண்டு அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.

● பிரபஞ்சப் பரிணாமத்தில் காற்றின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.

● காற்றிலிருந்தும், காற்றினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.

● காற்றைப் பயனுள்ள முறையில் பயன் படுத்திக் கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.
காற்றின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.

(இரண்டு நிமிடம் தியானிக்கவும்).

பிரபஞ்சப் பரிணாமத்தில் முதல் தத்துவமாகிய விண்ணின்மீது தவம் தொடங்குவோம்.

● இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களுக்கெல்லாம் காரணமாகிய நுண்ணிய மூலக்கூறுதான் விண் என்ற உயிராற்றல். நம் உடலில் உயிராற்றலாகவும், 

பிரபஞ்சம் முழுவதும் ஆற்றல் களமாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது விண். இந்த விண்ணின் சேர்க்கைதான் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற மற்ற நான்கு பூதங்களும்.

● மனவிரிவு கொண்டு விண்ணின் பெருமை யையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.

● அதனோடு ஒன்றிக் கலந்து, உயிர்க்கலப்புப் பெற்று அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.

● பிரபஞ்சப் பரிணாமத்தில் விண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.

● விண்ணிலிருந்தும், விண்ணினாலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் காப்புப் பெறுவோம்.

● விண்ணைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் விஞ்ஞானத்தை அறிந்துகொள்வோம்.

விண்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். 

(பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண் நிறைந்த சக்திக் களத்தை நோக்கி இந்தத் தவத்தை இரண்டு நிமிடம் இயற்றவேண்டும்.)

நவகிரகத் தவம்

விண் நிறைந்த சக்திக் களமாகிய பிரபஞ்சத் தில் பலகோடி நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். 

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான் இப்பூவுலகம் சுற்றி வந்துகொண்டிருக்கும் சூரியன். சூரியனையும் அதைச் சார்ந்த கோள்களையும் நவகோள்கள் என்று அழைக்கிறோம். சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாக் கோள்களிலிருந்தும் வருகின்ற காந்த அலைகளும், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியான தொடர்புள்ளவை. இப்பொழுது இக்கோள்களின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.

சூரியன்மீது தவம் தொடங்குவோம்.

● சூரியன் ஒரு மாபெரும் நெருப்புக்கோளம். இதன் விட்டம் 8.7 லட்சம் மைல் என்று கணக்கிட்டுள்ளார்கள். சூரியன் பூமியைவிட 1,400 மடங்கு உருவத்தில் பெரியது. 25 நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.

● சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள எலும்போடு தொடர்புடை யவை.

● சூரியனுடைய காந்த அலைக்கதிர்கள் வாழ்வில் வெற்றியையும் அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவையனைத்தையும் அளிக்க வல்லவை.

● சூரியனின் காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும்  ஒன்றுபடுத்திக் கொள்வோம். அவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்து கொண்டிருக்குமாக.

சூரியனின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். 

(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
புதன் என்ற கோள்மீது தவம் இயற்றுவோம்.

● சூரியனிலிருந்து சுமார் மூன்று கோடி மைல்களுக்கப்பால் முதல் வட்டப் பாதையில் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கக்கூடிய கோள் புதன். இதன் விட்டம் 3,030 மைல்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 88 நாட்களை எடுத்துக்கொள்கிறது.

●  புதன், பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள தோலோடு தொடர்புடையன.

● இந்த காந்த அலைக்கதிர்கள் நமக்கு அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவை அனைத்தையும் அளிக்க வல்லவை.

● புதனுடைய பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.
புதன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். 

(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)

சுக்கிரன் என்ற கோள்மீது தவம் தொடங்குவோம்.

● இது சூரியனிலிருந்து இரண்டாவது வட்டப்பாதையில் சுமார் ஆறு கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கிறது. இதனுடைய விட்டம் 7,625 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது சூரியப் பாதையில் ஒருமுறை சுற்றிவர 225 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

● சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடு தொடர்புடையன.

● இக்கதிர்கள் நமக்கு மனமகிழ்ச்சியையும், உயர் நட்பையும், வாழ்க்கை வளங்களையும் அளிக்கவல்லது.

● சுக்கிரனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்விக்குமாக.

சுக்கிரன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். 

(இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)

புரட்டாசி மாதத்தில் துர்க்கா நவராத்திரி கொண்டாடுவதுபோல, ராமநவமியை அனுசரித்து லலிதா நவராத்திரியையும்; ஆடி மாதத்தில் வாராஹி நவராத்திரியையும்; மாசி மாதத்தில் சியாமளா எனப்படும் மாதங்கி நவராத்திரியையும் சாக்தர்கள் கொண்டாடுவர். இதில் சியாமளா தேவியைப் பற்றி சிறிது சிந்திப்போமா?

யாழ்ப்பாணர் குலத்தை வடமொழியில் மதங்கர் குலம் என்பர். அந்த குலத்தில் வந்தவர் மதங்க முனிவர். (ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே.) மதங்க  முனிவரின் தந்தை தேவி உபாசகர். அவரிடமே மந்திர தீட்சை பெற்ற மதங்கர், கடும் தவம் மேற்கொண்டு அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார்.

மதங்கர் முன் தோன்றிய அன்னை, “”நீ வேண்டும் வரத்தைக் கேள்” என்றாள்.

மதங்கரோ, “”அன்னையே! காண்பதற்கரிய உனது காட்சியே கிடைத்தபின் வேறென்ன வேண்டும்! நான் வேண்டும் வரம் எதுவுமில்லை” என்றார்.

அம்பிகை விடவில்லை. “”தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றாள்.

மதங்கருக்கு இமவான் நண்பன். இமவான் தவம் செய்து பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான் அல்லவா? அந்த நினைவு மதங்கருக்கு வரவே, “”தாயே, வரம் தந்தேதான் ஆகவேண்டும் என்றால், தாங்கள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்” என்றார். அன்னையும் இணங்கினாள்.

மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் திருமகளாக- சியாமளா அம்சமாக உதித்தாள் அம்பிகை. அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர். அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர்.

சியாமளா அம்சமாகப் பிறந்த தேவி, மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் சொல்வர். சியாமளம் என்றால் நீலம் கலந்த பச்சை நிறம். வடநாட்டில் தேவியை சியாமா என்பார்கள்.

சாக்த வழிபாட்டில் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, இந்த்ராணி, சாமுண்டி, வாராஹி, சியாமளா ஆகியோரை சப்த மாதர் என்பர்.

காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, கமலாத்மிகா, மாதங்கி ஆகிய பத்து தேவியரை தசமகாவித்யா என்பர்.

இவ்விரண்டிலும் சியாமளா எனப்படும் மாதங்கி இடம்பெறுகிறாள்.

“மாதா மரகத ஸ்யாமா மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீம் கடம்பவன வாஸினீம்
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பல நிலயே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே.’

“மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.”

மேற்கண்ட இரண்டு துதிகளைக் கேட்டாலே மகாகவி காளிதாசரின் நினைவு வரும். ஒன்றுமறியாப் பேதையாக இருந்தவனை காளிதாசனாக்கி, “ரகு வம்சம்’, “குமார சம்பவம்’, “மேக சந்தேசம்’ போன்ற தலைசிறந்த நூல்களை இயற்ற வைத்தவள் மாதங்கிதேவி. காளிதாசன் வணங்கிய தேவியை உஜ்ஜயினியில் இன்றும் தரிசிக்கலாம்.

இசையரசி டி.கே. பட்டம்மாள் அவர்கள் பாடிய ஸ்யாமளா தண்டகம் அந்நாளில் பிரசித்தம்.

இந்த தேவியைப் பற்றி சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரு சகஸ்ரநாமங்கள் உள்ளன.

மாதங்கி அவதாரத்தைப்பற்றி, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது பிரம்மனின் மனதிலிருந்து ஒரு மகன் தோன்றினார். அவரே மதங்கர். (மதங்கம் என்றால் யானை.) பிரம்மன் மதங்கரிடம் “தவம் செய்’ என்று கூற, அது பிரளய காலமாதலால் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அப்போது அங்கு வந்த நாரதர், “”பிரளய காலத்திலும் அழியாத இடம் திருவெண்காடு. எனவே அங்கு சென்று தவம் செய்” என்று கூறினார். அதன்படியே திருவெண்காடு சென்று தவம் மேற்கொள்ள, மதங்கரின் தவத்தைக் கலைக்க மன்மதன் வந்தான். அவனை, “”சிவனாரது நெற்றிக்கண் சுடரால் எரிவாய்” என சபித்தார் மதங்கர். அடுத்து மகாவிஷ்ணுவானவர் மோகினி வடிவில் வர, “”திருவெண்காட்டில் மோகினி வடிவுடனேயே இருப்பீர்” என்றார். மதங்கரின் தவத்தில் மகிழ்ந்து அவர்முன் தோன்றிய விநாயகர், அஷ்டசித்திகளையும் மதங்கருக்கு வழங்கினார். இறுதியில் சிவபெருமானும் தரிசனம் தந்தருளினார்.

“தேவி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும்’ என்று மதங்கர் தவத்தைத் தொடர, அவ்வண்ணமே ஆடி மாத வெள்ளிக்கிழமை அதிகாலையில், மதங்க தீர்த்தத்தில் முகிழ்த்த நீலோத்பல மலரில் சியாமளாவாக அவதரித்தாள் தேவி. அந்தக் குழந்தையை மதங்கர் அன்புடன் வளர்த்தார் என்கிறது திருவெண்காடு தலபுராணம். (திருவெண்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மதங்காஸ்ரமம் உள்ளது.)

“கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.’

“நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.’

மேற்கண்ட பாடல்கள் அபிராம பட்டர் தம் அந்தாதியில் மாதங்கி குறித்துப் பாடியவை.

முத்துசுவாமி தீட்சிதரின் முன்னோர்கள், வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்தவர்கள். இது பிரம்மன் பூஜித்த தலம். இங்குள்ள பச்சைக் கல்லாலான தேவிக்கு மரகதவல்லி என்றே பெயர். தீட்சிதர் தேவியை,

“மரகதவல்லி மனஸா ஸ்மராமி’ என்றே பாடியுள்ளார். சென்னை தம்புசெட்டித் தெருவிலுள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலுள்ள தேவியும் மரகதவல்லியே. இவர்களெல்லாம் பச்சை வண்ணத்தினளான சியாமளா தேவியின் அம்சம் நிரம்பியவர்கள்.

ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா தேவி. பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் என்பர். மதுரை மீனாட்சி கோவிலில் சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.

வீணை, கிளி, புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை, காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கடும்பாடி அம்மனும் ராஜசியாமளையே.மகா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள் சியாமளா தேவி. இவள் பராசக்தியின் மந்த்ரினி- அதாவது அமைச்சராக செயல்படுபவள். பராசக்திக்கு உகந்த நேரத்தில் உகந்த ஆலோசனை கூறுபவள். எனவே, வாக்கு சித்தி, அறிவுக்கூர்மை, சகல கலைகளிலும் வல்லமை, மந்திரசித்தி பெற விரும்புவோருக்கு சியாமளா உபாசனை மிகச்சிறந்தது.

“கேய சக்ர ரதாரூட
மந்த்ரினி பரிஸேவிதா
மந்த்ரிணி அம்பா விரசித
விடிங்கவத தோஷிதா’

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். அதாவது, பண்டாசுரனின் சகோதரன் விடிங்கனை, கேய சக்கர ரதத்தில் அமர்ந்து போரிட்டு வென்றாளாம் சியாமளாதேவி.

“மாதங்கி சாமளையாம்
பண்டை படிவைத்து உலகாள்’

என்று குறிப்பிடுகிறது உலகம்மை கலித்துறை அந்தாதி என்னும் நூல்.

“ஸங்கீத யோகினி, ஸ்யாமா, ஸ்யாமளா, மந்த்ரிணி, மந்த்ரிநாயகி, சஸிவேஸானி, ப்ரதானேஸி, சுகப்ரியா, வீணாபதி, ஸமுத்ரிணி, நீலப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாஸினி, ப்ரியசப்ரியா’ என்றெல்லாம் லலிதா உபாக் யானம் சியாமளாவைத் துதிக்கிறது.

“சரிகமபத நிரதாம் வீணா
ஸங்க்ராந்த ஹஸ்தாம்
ஸாந்தாம் ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபர காந்தாம் நமாமி
சிவ காந்தாம்’

என்னும் காளிதாசனின் சியாமளா நவரத்ன மாலாவின் ஒரு துதியுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம். சியாமளாவைப் பணிந்து கலையருள் பெறுவோம்; ஞானம், சாந்தி பெற்று வாழ்வோம்!

எடுத்த காரியத்தை ஜெயமாக்கும் பராசக்தி

இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம். தை மாதம் தை அமாவாசை என்று கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே ‘நவராத்திரி’ விழாவாகும். இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும். நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி ‘விஜயதசமி’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நவராத்திரியில் துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக் கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ’ என்றால் வெற்றி என்று பொருள். ‘விஜயீ பவ’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான். 9 நாள் நவராத்திரி விழா, விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைத்தனர். இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம்.

அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதி களும் மிக முக்கிய மாக கருதி பூஜை செய்யப் படு கிறது. சாதாரண மாக நம் இல்லங் களில் எந்த நல்ல காரி யங்கள், விசேஷங் கள், முக்கிய பேச்சு வார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும் உறைகின்றான் என்பதை உணர்த்தவே இந்த நவராத்திரியில் இந்த திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள்,
முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும். பொதுவாக பிறந்த நாள் கொண்டாடும்போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ராம நவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு
பெறுகிறது. ஆதி சக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர்.

காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன், மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும், அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புத்தியும், ஞானமும், செல்வமும் ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டுமின்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள், நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும்.

அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும், மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். நவராத்திரியில் வரும் நவமி மகா நவமி என்றும் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், கல்வி கூடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள்.

எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், பைக், சைக்கிள் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு திருஷ்டி கழித்து, எலுமிச்சம்பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள். இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். இன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள், புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள். இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள்.

அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் இன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்து வேண்டிக் கொள்வார்கள். நவராத்திரியின் தத்துவமே ஆதிசக்தியான அன்னை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள் என்பதே. எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து வணங்கும் கலாசாரம் ஏற்பட்டது.

இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும் ஜெகன்மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும் ஆயுத பூஜையன்றும் விஜயதசமியன்றும் அன்னை பராசக்தியை வணங்குவோம். அவள் அருள் பெறுவோம்.

- ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

யாழ். அரியாலையில் சரஸ்வதிக்கு தனிக் கோவில்

உலகிலேயே கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு என்று விரல் விட்டு எண்ண கூடிய அளவிலேயே தனிக் கோவில்கள் உள்ளன.

ஆனால் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதிக்கு என்று ஒரு தனிக் கோவில் இருக்கின்றது.

அரியாலை மேற்கு பிரதேசத்தில் இக்கோவில் அமையப் பெற்று உள்ளது.

நாட்டின் புகழ் பூத்த கவிஞர்களில் ஒருவரான வே. ஐயாத்துரையின் குடும்பத்தினர் இக்கோவிலை பராமரித்து வருகின்றனர்.

நாம் அறிந்த வரை இலங்கையில் சரஸ்வதிக்கு என்று இருக்கின்ற ஒரே ஒரு கோவில் இதுவே ஆகும்.சிவபெருமானுக்கு ஒருநாள் சிவராத்திரி; திருமாலுக்கு ஒருநாள் வைகுண்ட ஏகாதசி. ஆனால் அம்பிகைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி! இதை சாரதா நவராத்திரி என்றும் அழைப்பர்.

(ஸ்ரீவித்யா உபாசகர்கள், பராசக்தியின் சேனைத் தலைவியான வாராஹி நவராத்திரியை ஆடி மாதத்திலும்; பராசக்தியின் மந்திரியான சியாமளா நவராத்திரியை மாசி மாதத்திலும்; லலிதா நவராத்திரியை பங்குனி மாத ராமநவமி சமயத்திலும் கொண்டாடுவர்.)

சாரதா நவராத்திரியின் முதன் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையை வழிபடுகிறோம்.

பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் எந்த நல்ல செயல்களைத் தொடங்கினாலும் வெற்றிபெறும் என்பதால், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் உட்பட பல செயல்களை விஜயதசமியில் தொடங்குகிறோம்.

வங்காளிகள் இவ்விழாவை துர்க்கா பூஜை என்ற பெயரில் மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள். சஷ்டியில் ஆரம்பித்து விஜயதசமியன்று விசர்ஜனம் செய்வர். கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை போல வங்காளிகளுக்கு துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாம் சரஸ்வதியை நவராத்திரியின்போது பூஜிப்போம். ஆனால் வங்காளிகள் தை மாதத்தில் வசந்த பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதியைப் பூஜிக்கின்றனர். எவ்வாறாயினும் மூன்று தேவியர் வழிபாடென்பது  இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலுமே நடைபெறுகிறது.

கஜமுகாசுரனை அழிக்க கணபதி வினோத வடிவம் கொண்டார். இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்மமாக வடிவம் கொண்டார். மகிஷனை அழிக்க ஹரிஹர புத்திரன் என்னும் சாஸ்தா அவதரித்தார். சூரபத்மாதியர்களை அழிக்க சிவனே  கந்த னாக அவதரித்தார். இராவணனை அழிக்க மகாவிஷ்ணு மனித வடிவம் கொண்டார்.  அசுரர்கள் பெற்ற வரத்திற்கேற்ப இறை அவதாரங்கள் நிகழ்ந்தன.

அதுபோல, பெண் பலவீனமானவள் என்ற எண்ணத்தில், பெண்களால் அழிவு நேரக்கூடாது என்ற வரத்தை  மகிஷாசுரன் பெறவில்லை. எனவே, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சக்திகள் ஒருங்கிணைந்த துர்க்கையாக பராசக்தி அவதாரம் எடுத்தாள். மகிஷாசுரனை வதைத்தாள். ஆகவே இந்த அன்னை வெற்றிக்குத் துணைபுரிபவள். மன்னர்கள் போருக்குச் செல்லும்போது துர்க்கையை வணங்கிச் செல்வது மரபு.

அதுபோல கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். படைக்கும் தொழில் செய்யும் பிரம்மதேவனின் சக்தி அம்சமே சரஸ்வதி தேவி. இவள் துர்க்கா சரஸ்வதியாக சும்ப நிசும்ப ராட்சஸர்களை அழித்தவள். சும்ப நிசும்பர்களை அழித்த சரஸ்வதியைக் குறித்து தேவர்கள் 32 துதிகள் செய்தனர் என்று துர்க்கா சப்தசதி கூறுகிறது.

ஸர்வஸ்ய புத்தி ரூபேண
ஜனஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதே
ஸ்வர்க அபவர்கதே தேவி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி வினாசானாம்
சக்தி பூதே சனாதனி
குணஸ்ரயே குணமயி
நாராயணி நமோஸ்துதே

என்னும் துதிகளில் சரஸ்வதி அம்சமும் குறிக்கப்படுகிறது.

தேவி பாகவதம் சரஸ்வதியின் அவதாரத்தை எவ்வாறு குறிக்கிறது என்று காண்போமா?

கணேச ஜனனி துர்க்கா ராதா
லக்ஷ்மி சரஸ்வதி ஸாவித்ரி ச
ஸ்ருஷ்டி விதௌ ப்ரக்ருதி
பஞ்சதாஸ்ம்ருதா.

ஆதிசக்தியிலிருந்து ஐந்து பிரதான சக்திகள் தோன்றின. அவற்றுள் சரஸ்வதியும் ஒருத்தி. துர்க்கா, ராதா, லட்சுமி, சாவித்ரி ஆகியோர் மற்ற சக்திகள்.

மகாவித்யா, மகாவாணி, பாரதி, வாக் சரஸ்வதி, ஆர்யா, ப்ராம்மி, காமதேனு, வாகீஸ்வரி, ருத்ர வாகீஸ்வரி, விஷ்ணு வாகீஸ்வரி, பர சரஸ்வதி, பாலா சரஸ்வதி, நகுலி சரஸ்வதி, வாணி சரஸ்வதி, சம்பத் சரஸ்வதி, தாரகா சரஸ்வதி என கலை மகளுக்குப் பல திருநாமங்கள் உண்டு.

“ஐம்’ என்பது சரஸ்வதியின் வாக்பவ பீஜ மந்திரம். இது ஓங்காரம் போன்று மூன்று வேதங்களின் முதல் அட்சரங்களால் (அ, இ, ஏம்) பிணைக்கப்பட்ட பீஜாட்சரம் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

சரஸ்வதி தேவியின் லீலாவினோதங்கள் சிலவற்றைக் காண்போமா?

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

வேடனாக இருந்த வால்மீகி நாரதரிடம் ராம நாம உபதேசம் பெற்று அந்த மந்திரத்தை ஓதத் தொடங்கினார். “ராம’ என்று உச்சரிக்க வராமல் “மரா’ என்று உச்சரித்தே இறையருள் பெற்றார். அதன்பின் ராமாயணம் இயற்றத் தொடங்கும் சமயத்தில், வேடனொருவன் ஒன்றாக இருந்த இரு பறவைகள் மீது அம்பெய்தான். அதில் அடிபட்டு ஆண் பறவை கீழே விழுந்தது. அதைக் கண்டு வருந்திய வால்மீகி,

“மாநிஷாத பிரதிஷ்டாம் த்வமகம:
சரஸ்வதி: ஸமா: யத் கௌஞ்ச
மிதுனாதேகம் அவதீ: காமமோஹிதம்’

என்று சபித்தார். அதாவது, “ஏ வேடனே! காமத்தில் திளைத்திருந்த அந்த இரு பறவைகளில் ஆண் பறவையைக் கொன்று விட்டாயே. அதனால் நீ பல்லாண்டு வாழ மாட்டாய்’ என்று சாபமிட்டார்.

அதன்பின், ராமாயண காவியம் இயற்ற ஆரம்பிக்கும் வேளையில் இத்தகைய துக்ககரமான சொற்கள் வெளிப்பட்டுவிட்டனவே என்று மிகவும் வருந்தினார். அப்போது நாரதர், “”வருந்த வேண்டாம் முனிவரே.  நீ கூறியது மகாவிஷ்ணுவுக்கு மங்களாசாசனம் தான். “ஹே லட்சுமிபதியே, நீ பல்லாண்டு வாழ்வாயாக. காமமோகம் கொண்டவனான இராவணனை அழித்தீரல்லவா?’ என்பதே நீ கூறியதன் பொருள். சரஸ்வதியே உமது வாக்கில் அமர்ந்து இத்தகைய மங்களச் சொற்களை உகுத்துள்ளாள். அவள் அருளால் உன் வாக்கிலிருந்து ராமாயணம் மிளிரும்” என்றாராம்.

கம்பரும் ராமாயணமும்

கம்பநாட்டாழ்வார் சரஸ்வதி தேவியின் அருளால்தான் ராமாயண காவியம் படைத்தார் என்பர். சரஸ்வதியின் திருவுளப் படியே அது ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றப் பட்டது.

சரஸ்வதியும் ஒட்டக்கூத்தரும்

மூன்று சோழ அரசர்களிடம் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். பூந்தோட்டம் சரஸ்வதியின் அருளால்தான் அவர் புலமை பெற்றார் என்பர். பூந்தோட்டத் திலுள்ள சரஸ்வதி ஆலயம் ஒட்டக்கூத்தரால் அமைக்கப் பெற்றதென்றும்; அவர் பெயரா லேயே அத்தலம் கூத்தனூர் என்று பெயர் பெற்றதென்றும் கூறுவர். ஒட்டக்கூத்தர் சரஸ்வதி புகழ்பாடி அந்தாதி இயற்றியுள்ளார்.

புருஷோத்தமனுக்கு சரஸ்வதியின் அருள்!

சாரங்கபாணி தீட்சிதர் என்பவர் கும்ப கோணத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மகன் புருஷோத்தமன் பிறவி ஊமை. மருந்துகள், மந்திரங்கள், தந்திரங்கள் என எதுவும் பயன்தரவில்லை. அவர் பூந்தோட்டம் சரஸ்வதி ஆயலத்துக்கு வந்து உள்ளன்புடன் ஒரு மண்டலம் பூஜை செய்தார். பூஜை முடியும் நாளில் ஒரு சுமங்கலிப் பெண் அவரிடம் வந்து “வாயைத் திற!’ என்றாள். வாயைத் திறந்ததும், அந்தப் பெண் தன் வாயிலிருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து, “சாப்பிடு’ என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தாள். தாம்பூலம் உண்ட புருஷோத்தமன் கவிபாடத் தொடங்கினார். அந்த ஞானத்தைக் கொண்டே அன்னையின் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்தார் என்று கல்வெட்டு கள் கூறுகின்றன.

குமரகுருபரரும் சரஸ்வதியும்

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிறுவனான குருபரன் செந்திலாண்டவன் அருளால் பேசும் வல்லமை பெற்று கந்தர் கலிவெண்பா பாடினார். பின்னர் பாண்டிய மன்னன் முன்பு மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடினார். அப்போது ஒரு சிறு பெண் அங்கு வந்து, பாண்டிய மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலையை குமரகுருபரனுக்கு அணிவித்து மீனாட்சியாகக் காட்சியளித்து மறைந்தாள்.

அதன்பின்னர் பல தலங்களையும் தரிசித்து காசி சென்ற குருபரர், அங்கு மடம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்தார். அதற்கு அப்பகுதியை ஆண்ட முகம்மதிய மன்னனிடம் இடம் கேட்டார். “இந்துஸ்தானி மொழியில் வாதிட்டு வென்றால் இடம் தருகிறேன்’ என்று அவர் கூறிவிட, அம் மொழியை அறிந்திராத குமரகுருபரர் சரஸ்வதி அன்னையை மனதாரத் துதித்து “சகலகலாவல்லி மாலை’ பாடினார். அன்னை யின் அருளால் பன்மொழி ஞானம் கைவரப் பெற்று, தன் எண்ணப்படி காசியில் மடத்தை நிறுவினார். அந்த மடத்தை இப்போதும் காசி யில் கங்கைக் கரையோரம் காணலாம்.

இவ்வாறு சரஸ்வதி அருளால் பெரும்புலமை பெற்றோர் பலருண்டு.

ஆதிசங்கரரும் சாரதையும்

கர்நாடக மாநிலம், சிருங்கேரி மடத்தில் கோவில் கொண்டுள்ள சாரதா தேவி சரஸ்வதியே. இவள் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். இந்த தேவி இங்கு எவ்வாறு குடியமர்ந்தாள்?

பிரம்மதேவர் மண்டனமிஸ்ரராக அவதரித்தார். பிரம்மபத்தினி சரஸ்வதி தேவி மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியாக அவதாரம் செய்தாள். சிவாம்சமான ஆதிசங்கரர் மண்டனமிஸ்ரருடன் 17 நாட்கள் வாதம் செய்தார். அதற்கு நடுவராக இருந்தவள் உபயபாரதி. மண்டனமிஸ்ரர் தோற்கும் தறுவாயில், “என்னையும் வாதத்தில் வென்றால்தான் நீங்கள் வெற்றி பெற்றவராவீர்’ என்று கூறிய உபயபாரதி, காம சாஸ்திரம் சம்பந்தமாகக் கேள்வி கேட்டாள். பிரம்மச்சாரியான ஆதிசங்கரர் அதுபற்றி அறியாத வராகையால் ஒரு மாதம்அவகாசம் கேட்டுக்கொண்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அமருகன் என்ற அரசன்இறந்துவிட, அவனுடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சங்கரர், மன்னன் மனைவியிடம் காமசாஸ்திரம் சம்பந்தமாக அறிந்துகொண்டு மீண்டும் மண்டனமிஸ்ரர் இல்லம் நோக்கி வந்தார். அவரை வரவேற்ற இருவரும், “நீங்கள் சதாசிவ அம்சம் என்பதை அறிவோம். போட்டி யில் வென்றவர் நீங்களே’ என்று பணிந்தனர். மண்டனமிஸ்ரர் சுரேஷ்வரர் என்ற பெயரில் சங்கரரின் சீடரானார். அப்போது உபயபாரதி மறையத் தொடங்க, ஆதிசங்கரர் அவளிடம், “தாங்கள் சரஸ்வதி தேவியே என்பதை நானறி வேன். என் கோரிக்கையேற்று சிருங்கேரியிலும் காஞ்சியிலும் சாந்நித்யம் கொண்டருள வேண்டும்’ என்று வேண்டினார். சரஸ்வதியும் அதற்கிணங்கினாள். அதனால்தால் சிருங்கேரி மடத்தையும் காஞ்சி காமகோடி மடத்தையும் சாரதாபீடம் என்று கூறுகின்றனர்.

காஞ்சி காமாட்சி கோவிலில் பணிபுரிந்த ஊமை ஒருவருக்கு மூகன்என்றே பெயர். சுமங்கலியாய் வந்த காமாட்சி தாம்பூலத்தை உமிழ்ந்து உண்ணச் சொல்ல, ஊமை கவிஞனா னார். “மூக பஞ்சசதி’ என்னும் பெயரில், சௌந்தர்யலஹரிபோல 500 துதிகள் பாடினார். மூக சங்கரர் என்னும் பெயரில் காஞ்சி மடாதி பதியாகவும் எழுந்தருளினார். அவர் பாடிய துதிகளை காஞ்சி காமாட்சி ஆலயத்தில் கல்வெட்டுகளாக இன்றும் காணலாம்.

சரஸ்வதியின் அருளுக்கு எல்லை உண்டோ?

 

நவராத்திரி என்றால் அம்பிகைக்கு உகந்த சிறப்பான ஒன்பது நாட்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் நவராத்திரியில் சிவ தாண்டவங்களும் நிகழ்கின்றன என்ற செய்தி வியப்பை அளிக்கிறதல்லவா? கயிலைநாதனாகிய பரமேஸ்வரன் அமாவாசை, பௌர்ணமி தினங்களிலிருந்து பதின்மூன்றாவது நாளாகிய திரயோதசியில், மாலை 4.00 மணிக்குமேல் பிரதோஷ காலத்தில் தாண்டவம் ஆடுவதாகவும்; இச்சமயத்தில் சிவன் கோவிலில் சுவாமி வலம் வருவதும்; தேவாரம், திருவாசகம், வேதபாராயணம் ஆகியவற்றுடன் திருச்சுற்று வழிபாடும் மிக நன்மையை அளிக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த மாலை நேர ஆட்டத்தில் பரமனின் ஆடலுக்கு நந்தி மத்தளம்  முழங்க, நாரதர் யாழிசைக்க, வாணி வீணைமீட்ட, வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட, “ஓம் ஓம்’ என ஒலிக்கும் ஞானவேளையில் அடியார் பணிகின்றபோது, ஈஸ்வரன் ஒரு குழந்தையைப்போல ஆடி மகிழ்கின்றாராம்.

பரமேஸ்வரன், உலகமே நீரில் மூழ்கும் பிரளய காலத்தில் பிரளய தாண்டவம் அல்லது ஊழிக்கூத்து என்ற நடனத்தை ஆடுவதாகவும்; இதை அம்பிகை மட்டுமே பார்த்து ரசிக்கிறாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள் ளது. இதை தேவியின் துதியான லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “மஹாப்ரளய ஸாக்ஷினி’ என்ற நாமம் தெளிவுபடுத்துகிறது.

மேற்கூறிய தாண்டவங்களைத் தவிர பரமேஸ்வரன் ஒன்பது வகையான தாண்டவங்களை ஆடுவதாகவும்;

அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப உடலை வளைத்தும், கால்களை மாற்றியும், கால் விரல்களால் கோலமிட்டும் ஆடுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆண்கள் ஆடும்போது “தாண்டவம்’ என்றும், பெண்கள் ஆடும்போது “லாஸ்யம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த ஆடல்களை பரமேஸ்வரன் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையாக ஆடுகிறார். இவரது ஆட்டத்தின்போது வரையப் படும் கோலங்களிலிருந்து ஒவ்வொரு தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக வெளிப்படுகிறாள் அம்பிகை.இனி ஒன்பது வகை தாண்டவங்களையும் அதற்குரிய தேவிகளையும் அறியலாம்.

நவராத்திரியின் முதல் நாள்: ஆனந்த தாண்டவம். வலது காலைத் தரையில் ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலம். இதில் வரையப்பட்ட கோலம் ரிஷி மண்டல கோலம் எனப்படுகிறது. இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. நவதுர்க்கைகளில் சைலபுத்ரி அல்லது சைலஜா என்ற தேவி முதல் நாளுக்குரிய தேவியாகிறாள்.

இரண்டாம் நாள்: ஸந்தியா தாண்டவம். பகலும் மாலையும் கூடும்வேளையில் இடதுகால் விரலால் பரமசிவன் இடும் கோலத்தின் பெயர் ஸப்த ஒலிக்கோலம். இக்கோலத்திலிருந்து வெளிப்பட்ட கூஷ்மாண்டாதேவி இரண்டாம் நாள் வழிபாட்டுக்குரியவள்.

மூன்றாம் நாள்: திரிபுரதாண்டவம். பரமேஸ்வரன் இடது கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம். இந்த மூன்றாம் நாளுக்குரிய தேவி ப்ரம்மச்சாரிணி என்ற பெயருடன் விளங்குகிறாள்.

நான்காம் நாள்: ஊர்த்துவ தாண்டவம். ஈஸ்வரன் திருவாலங்காடு என்ற இடத்தில் தனக் குச் சரியாக ஆடிய காளியை இந்தத் தாண்டவத் தின் மூலம்தான் தோற்கச் செய்தார். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி ஆடும் நடனம். இந்த ஆட்டத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்திலிருந்து தோன்றிய சந்த்ரகாந்தா தேவி நான்காம் நாளுக்குரிய தேவியாவாள்.

ஐந்தாம் நாள்: புஜங்க தாண்டவம். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற தேவர் களும் அசுரர்களும் முயற்சித்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் வீரியத்தை தேவர்களால் தாங்கமுடியாமல் தவித்திருந்த நிலையில் ஈசன் அக்கொடிய நஞ்சை விழுங்கி நீலகண்டன், நஞ்சுண்டேஸ்வரன் என்ற பெயர் களைப் பெற்றார். அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஈசன் புஜங்க தாண்டவக் கோலம் வரைந்தார். இதிலிருந்து ஸ்கந்தமாதா என்ற பெயருள்ள தேவி ஐந்தாவது நாளுக்குரிய தேவியாகத் தோன்றினாள்.

ஆறாவது நாள்: முனி தாண்டவம். சிறந்த சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்தபோது, அதற்கேற்ப சிவன் ஆடி முனிவரை மகிழ்வுறச் செய்தார். அதனால் இதற்கு முனி தாண்டவமென்ற பெயர் ஏற்பட்டது. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட- முனி தாண்டவக் கோலத்திலிருந்து தோன்றிய காத்யாயனி தேவி ஆறாவது நாளின் தேவியானாள்.

ஏழாவது நாள்: பூத தாண்டவம். பரமேஸ் வரன் யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகை ஆயுதங்களை ஏந்தி பூத தாண்டவக் கோலம் வரைந்தபடி ஆடுகிறார். இந்தக் கோலத்தில் உருவான தேவி ஏழாவது நாளுக்குரிய காலராத்ரி தேவி எனப்படுகிறாள்.

எட்டாவது நாள்: சுத்த தாண்டவம். தண்ட காரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும். இந்தக் கோலத்திலிருந்து உருவான தேவி மஹாகௌரி என்ற பெயர் கொண்டவள். நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபட வேண்டிய தேவியாவாள்.

ஒன்பதாம் நாள்: சிருங்காரத் தாண்டவம். நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்திய நவரசக் கோலத்திலிருந்து, சிவன் மகிழ சித்திதாத்திரி என்ற தேவி தோன்றினாள்.  இவளே ஒன்பதாம் நாள் வழிபாட்டுக்குரிய தேவியாவாள்.

நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப் படி இந்த தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை அடையலாம்.

முதல் நாள்- ஆஸ்துமா சர்க்கரை வியாதி நிவாரணம்.

இரண்டாம் நாள்- கடன் தொல்லையிலிருந்து விடுதலை.

மூன்றாம் நாள்- வயிறு, வாய்வுத் தொல்லை நீங்கிவிடும்.

நான்காம் நாள்- திருமணம் நடைபெறும்.

ஐந்தாம் நாள்- அன்போடுகூடிய மகிழ்வான இல்லறம்.

ஆறாம் நாள்- விஷமுறிவு, நோய் குணமடையும்.

ஏழாம் நாள்- கண்கள் தொடர்பான நோய் தீரும்.

எட்டாம் நாள்- நோயற்ற வலுவான தேகம் பெறலாம்.

ஒன்பதாம் நாள்- வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் சேரும்.

ஸ்ரீராமருக்கு பரசுராமர் இந்த நவராத்திரி வழிபாட்டினைக் கூறியதாகவும், ஸ்ரீராமர் வழிபட்டு நலன்களடைந்ததாகவும் புராணம் கூறுகிறது. சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், மஹிஷாசுரன் போன்ற தீயசக்தி கொண்ட அசுரர்களை வதம்செய்த அன்னை பராசக்தி, நாட்டைப் பிடித்துள்ள தீய சக்திகளையும், நம் மனதிற்குள் தாண்டவமாடும் தீய எண்ணங் களையும் அழித்து, துணைபுரிந்து, எல்லா நலன்களையும் அளிக்க வேண்டுமென்றுஅம்பிகையை இந்த ஒன்பது நாட்களும் வழிபடுவோம்.

மிகத் தீவிரமான பக்தி நெறியைக் கடைப் பிடிக்க இயலாதவர்களும் பிரார்த்தனை மூலம் நற்பயனைப் பெறமுடியும். அன்னை கருணையே உருவானவள். நல்லதை நாட்டி, தீயதை ஓட்டி நம்மைக் காத்தருள்வாள்.