வேங்கடாசலபதி

           ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பது வகையான பக்தியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பாதசேவனம்  என்ற பக்தியும் இடம்பெறும். இந்த பாதசேவன பக்திக்கு மிகவும் ஏற்றம் கொடுத்துப் பாடியுள்ள பல பாடல்களை இன்றும் நாம் காணலாம். பாதசேவனத்தின் பெருமையைப் பேசாத அடியார்களே இல்லை.

ஸ்ரீ ஆதிசங்கரர் பாடிய ஷட்பதி ஸ்தோத்திரத்தில் “ஸ்ரீமகாவிஷ்ணுவின் சரணார விந்தங்களை வணங்குகிறேன்’ என்று, ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களை எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்! “ஸ்ரீபதிபாதார விந்தே…’ ஸ்ரீ என்றால் மகாலட்சுமி. ஸ்ரீபதே என்றால் லட்சுமி நாராயணன். பாதாரவிந்தே என்றால் திருவடித்தாமரை.

“திவ்யதுநீ மகரந்தே
பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே-
ஸ்ரீபதி பாதார விந்தே
பவ பய கேதச்சிதே வந்தே//’

இந்த பாதத் தாமரையிலிருந்து தேன் சுரக்கிறது. தாமரையிலிருந்து தேன் சுரப்பது இயற்கை. எந்தத் தேன் சுரக்கிறது? “திவ்யதுநீ மகரந்தே’ என்று சொல்கிறார். “திவ்யதுநீ’ என்றால்தேவலோகத்து நதி. “மகரந்தம்’ என்பது இங்கு தேனைக் குறிக்கும். “தேவலோகத்து நதியாகிய தேன் சுரக்கிறது. பகவானின் பாதத் தாமரையிலிருந்து கங்கையாகிய தேன் சுரக்கிறது. அப்படிப்பட்ட பாதக்கமலங்களைப் பணிவோம்’ என்கிறார். “பாதக்  கமலங்களிலிருந்து சுகந்தம் (பரிமளம்) வீசுகிறது. எவ்வளவு ருசித்தாலும் திகட்டாத ஆனந்தம் தரும் நறுமணம் (பரிபோகே)’ என்கிறார் சங்கரர்.

அந்த திகட்டாத ஆனந்தம்தான் சச்சிதானந்தம். இது அத்வைதத்தின் உச்சநிலை. பிரம்மம்தான் சச்சிதானந்தம். பகவானுடைய பாதசேவனத்தைப் பற்றிவிட்டால் நமது பயம், துக்கம், வேதனையெல்லாம் அழிந்துபோகிறது. ஸ்ரீ சங்கரர் இயற்றிய ஸ்தோத்திர சிகரமான “ஸ்ரீசௌந்தர்ய லஹரி’ என்ற துதியில்- 25-ஆவது பாடலான “த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே’ என்ற பாடலில், “அம்பிகையின் பாதக் கமலங்களை மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றோர் பூஜிக்கிறார்கள்; மும்மூர்த்திகளும் தங்கள் தலையை தேவியின் பாதத்தில் வைத்து நமஸ்கரிக்கின்றார்கள்’ என்கிறார். அம்பிகையின் பாதத்தை நாம் சேவிக்கும்போது மும்மூர்த்திகளையும் பூஜித்த பலன் நமக்கு கிடைத்துவிடுகிறது.

ஸ்ரீமத் ராமாயணத்தில் பல இடங்களில் “பாதத்தின் மேல் ஆணை’ என்று வருகிறது. உத்தர காண்டத்தில் ராமபிரானின் ஆட்சிக்காலம். வீதியிலே திரியும் ஒரு சாதாரண குடிமகன், இராவணனின் அசோகவனத்தில் சீதாதேவி இருந்தது பற்றி அவதூறாகப் பேசியதை ராமபிரான் அறிகிறான். அவனது மனம் எல்லையற்ற வேதனைப்படுகிறது. அக்னி பரீட்சைக்கு ஆட்படுத்தி சீதாதேவியின் தூய்மை நிரூபிக்கப்பட்ட பின்பும்கூட, கற்பின் சிகரமான ஜானகியைப் பற்றிய அவதூறு கிளம்பிவிட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறான் ராமன். தன் மனசாட்சிக்கு சீதாதேவியின் தூய்மை நன்றாகத் தெரிந்திருந்தும்கூட, அன்னை ஜானகியை நாடுகடத்த தீர்மானித்துவிட்டான். அந்தச் செயலை  பகிரங்கமாகச் செய்ய நினைக்கவில்லை. சீதாதேவியிடம் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. லட்சுமணனிடம் ஆணையிடுகி றான். “”லட்சுமணா, சீதா கருவுற்றிருக்கிறாள். 

கர்ப்பிணிப் பெண்ணின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும். ஒருநாள் இரவாவது காட்டிற்குச் சென்று ரிஷிபத்னிகளுடனும், ரிஷிகளுடனும் தங்கியிருக்க ஆவல்படுவதாக அறிந்தேன். ஆகவே நீ அவளை வனத்தில் விட்டுவிட்டு வந்து விடு. அவள் ஆசைப்பட்டதுபோல வனம் அனுப்பப்படுகிறாள் என்று சொல்லிவிடு” என்று ஆணையிடுகிறான் ராமன்.

அங்கு நிற்கும் தன் சகோதரர்கள், மற்றவர்களை நோக்கிக் கூறுகிறான். “”இது எனது முடிவான தீர்மானம். இதற்கு யாரும் மறுப்பு கூறாதீர்கள். லட்சுமணா, தாமதிக்காதே. உடனே இதை நிறைவேற்றுவாயாக.

இதை நீ நிறைவேற்றாவிட்டால்- இதற்கு நீ மறுப்பு கூறினால் என் வெறுப்பிற்கு ஆளாவாய். 

இதை நான் என் பாதங்கள்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்கிறான் ராமபிரான்.

இப்படி பாதங்கள்மீது ஆணையிட்டுக் கூறும் நிகழ்ச்சியை ஆரண்ய காண்டத்திலும் பார்க்க முடிகிறது. கர தூஷணர்கள், பதினாயிரம் அரக்கர்களுடன் போரிடப் புறப்படும்போது ராமன்,“”லட்சுமணா, நீ சீதாதேவியை அழைத்துக் கொண்டு குகைக்குப்போ. அங்கு வில், அம்புகளுடன் தயாராய் இரு. நீ எக்காரணத்தைக் கொண்டும் 

வெளியில் வராதே. அத்தனை அரக்கர்களுடனும் நான் தனியாக நின்று போரிட்டு அழிப்பேன். இப்படி நான் சபதம் எடுத்திருக்கிறேன். இந்தப் போர் வெற்றியை நான் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை” என்று ராமன் சொல்கிறான்.

“தஸ்மாத் க்ருஹீத்வா வைதேஹீம்
சரபாணிர் தனுர்தர:
குஹா மாஸ்ரய சைலஸ்ய
துர்காம் பாதஸங்குலாம்.’

“”இந்த ஆணையை நீ மீறுவதை நான் விரும்பவில்லை. இதை என் பாதத்தின்மீது ஆணை யிட்டுக் கூறுகிறேன்.”

“சாபிதோ மம பாதாப்யாம்/
கம்யதாம் வத்ஸமா சிரம்//’

என்று பாதத்திற்கு ஏற்றம் கொடுப்பதை பல இடங்களில் காணமுடிகிறது.

ஒடிசா மாநிலத்தில் அவதரித்த ஸ்ரீஜெய தேவர் “கீத கோவிந்தம்’ என்ற மகா காவியத்தை எழுதும்போது பத்தொன்பதாவது அஷ்டபதியில், “கண்ணனிடம் எல்லையில்லாத அன்பும் பிரேமையும் கொண்ட ராதையின் பாதங்களை கண்ணன் தன் தலையின்மேல் வைப்பதாக’ கவி வர்ணிக்கும்போது சற்று தயங்குகிறார். பரம்பொருளான கண்ணனின் தலையின்மேல் ராதையின் பாதங்கள் வைப்பதாக எழுதுவது சரியாகுமா என்று நினைக்கும்போது, கண்ணனே அந்த அஷ்டபதியை நேரில் வந்து பூர்த்தி செய்கிறார்.

“ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம்
தேஹி பத பல்லவ முதாரம்/’

“என் பக்தையான ராதையின் பாதங்களை என் சிரஸில் வைத்துக் கொள்வதில் எனக்குஆனந்தமே. பக்தர்களின் பாதசேவையை பகவான் ஏற்றுக்கொள்கிறார்’ என்கிறார்.

சுவாமி நிகமாந்த தேசிகர் என்ற வைணவ மகான் “ஸ்ரீபாதுகா ஸ்ருதி’ என்னும் ஆயிரம் பாடல்களை ஒரே இரவில் இயற்றி பாதுகையின் மகிமையை உலகிற்கு உபதேசித்தார். 

பகவானின் பாதங்களை நாம் பற்றிவிட்டோமானால் அவருடைய கருணையை நமக்குப் பொழிந்துவிடுகிறார். முற்காலத்திலெல்லாம் பெரியவர்களை வணங்கி, அவர்களுடைய ஆசிகளைப் பெறுவது வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் நமது கலாசாரங்களை எல்லாம் நாம் தொலைத்துவிட்டு அல்லல்படுகிறோம். 

பாரதியார்கூட “கணபதிராயன்  அவன் இரு பாதத்தினைப் பணிவோம்’ என்றுதானே பாடினார்.

பெரியோர்களை வணங்குவோம். பரந்தாம னின் பாதங்களில் வணங்கி நல்ல பேறுகளைப் பெறுவோம். நான் என்ற அகந்தை உணர்வே தலை. அகந்தை கரையுமிடமே இறைவனின் பாதம்!
மும்பை ராமகிருஷ்ணன்

          நான்கு வேதங்களையும் 18 புராணங்களையும் தொகுத்தளித்த வியாசரை மகாவிஷ்ணுவின் அம்சம் என்பர். இவரது புதல்வர் சுக முனிவர். சுகரின் மனம் எப்போதும் அகத்தே இருக்கும்; புறத்தே இராது.

ஒருமுறை சுகரைத் தேடிச் சென்றார் வியாசர். வழியிலிருந்த குளத்தில் சில பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வியாசரைப் பார்த்ததும் ஆடைகளைத் திருத்தினர். அவர்களிடம் வியாசர், “”என் மகன் இப்படிப் போனானா?” என்று கேட்டார். “”இப்போதுதான் போனார்” என்றனர். “”இளைஞனான அவன் வந்ததைப் பற்றி லட்சியம் செய்யாமல் நீராடிக் கொண்டிருந்தீர்கள். முதியவனான என்னைப் பார்த்ததும் உடைகளைத் திருத்துகிறீர்களே…” என்று கேட்டார் வியாசர்.

“”அவர் பிரம்மத்தில் லயித்து புறத்தில் ஜடமாயிருக்கிறார். வயது முதிர்ந்த நீங்களோ இப்படிக் கேட்கிறீர்கள்- புறக்கண்ணில் பார்க்கிறீர்கள்” என்றனர். வியாசர் தலைகுனிந்தார்.

அத்தகைய மகாஞானியான சுகரின் மறு அவதாரம்தான் கபீர்தாசர் என்கின்றனர்.

காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி அவர்களுக்கு முக்தி அளிக்கிறார் சிவபெருமான். அத்தகைய சிறப்புவாய்ந்த காசியில், நெசவுத் தொழில் செய்துவந்தனர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமால்- ஜீஜாபீவி தம்பதியர். கிடைப்பதில் மனநிறைவு கொண்டு, வருவோர்க்கு விருந்தோம்பல் செய்து நல்லறம் நடத்திய அந்தத் தம்பதிக்கு பலகாலம் கடந்தும் பிள்ளைப்பேறு கிட்ட வில்லை.

ஒருநாள் பெரியவர் ஒருவர் வந்தார். விருந்தோம்பலை மகிழ்ச்சியுடன் ஏற்ற அவர், “”இந்த நற்செயல் தொடர உங்களுக்கு ஒரு மகன் உண்டு” என்றார்.

“”வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளை பாக்கியம் எவ்வாறு கிட்டும்?” என்றனர்.

அவரோ, “”என் ஆசீர்வாதம் பொய்க்காது” என்று கூறிச்சென்றார்.

ஒருநாள் தமால் கங்கைக் கரைக்குச் சென்றார். அவரிடம் ஒரு பட்டு நூலுருண்டை இருந்தது. அது கைத்தவறி கங்கையில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. அதை எடுப்பதற்காக ஓடினார். ஆனால் முடியவில்லை. சற்று தூரம் சென்றவர் ஓடிவந்த களைப்பால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கில் நோக்கியபோது அழகான ஆண்குழந்தையொன்று படுத் திருப்பதைக் கண்டார் தமால். அக்கம்பக்கம் மனிதர்களோ வீடுகளோ இல்லை. இதுதான் இறைவன் தந்த குழந்தை என்று மகிழ்ந்த அவர், குழந்தையை எடுத்துக்கொண்டு இல்லம் வந்துசேர்ந்தார். அந்தக் குழந்தையே கபீர்தாசர்.

வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவானவர் சுகரைப் பார்த்து, “”சுகா, பூவுலகில் அதர்மம் தலைதூக்குகிறது. எனவே நீ அங்கு பிறந்து நாம மகிமை, மத ஒற்றுமை போன்றவற்றை வளர்க்கவேண்டும்” என்றார்.

அதற்கு சுகர், “”சுவாமி, நான் கர்ப்பம் புகமாட்டேன்” என்றார்.

“”நீ காசியில் குழந்தையாகவே அவதரி” என்றார் மகாவிஷ்ணு.

அவ்வாறு வந்த சுக முனிவரே கபீர்தாசர் என்பர். கபீர்தாசர் வளர்ப்புத் தந்தையின் மரபுப்படி மசூதிக்குச் சென்று அல்லாவைத் தொழுவார். அவருக்கு இயற்கையாகவே ராமபக்தியும் இருந்தது. அந்த சமயத்தில் ராமானந்தர் என்பவர் மகாகுருவாக விளங்கி வந்தார். அவரிடம் ராமநாம உபதேசம் பெறவேண்டும் என்பது கபீரின் ஆசை. ஆனால் அவர் இஸ்லாமியர் என்று, ராமானந்தரின் சீடர்கள் அனுமதிக்கவில்லை.

ராமானந்தர் அதிகாலையிலேயே கங்கையில் நீராடும் வழக்க முடையவர். இதையறிந்த கபீர்தாசர் ஒருநாள் ராமானந்தர் செல்லும் பாதையோரம் படுத்துக்கொண்டார். அவ்வழியே வந்த ராமானந்தரின் பாதம் கபீர்மீது பட, “”ராம் ராம்” என்றார் ராமானந்தர். சட்டென எழுந்த கபீர்தாசர், “”சுவாமி, தங்களின் ஸ்பரிச தீட்சையும் கிடைத்தது; ராமநாம உபதேசமும் பெற்றேன்” என்று நெகிழ்ந்தார். ராமானந்தரும் மகிழ்ந்து, “”ராமநாமம் ஜெபித்து மேன்மையடை வாயாக” என்று ஆசீர்வதித்தார்.

கபீருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்தனர். இஸ்லாமிய சம்பிரதாயப்படி ஆண்களுக்குச் செய்யப்படும் சடங்கை செய்துகொள்ள கபீர் மறுத்துவிட்ட காரணத்தால், இஸ்லாமியப் பெண் அல்லாத சுந்தரா என்னும் பெண்ணை கபீருக்கு மணம் முடித்தனர்.

யார் இந்த சுந்தரா? சுகர் தேவலோகத்திலிருந்தபோது அவரை மணந்துகொள்ள விரும்பினாள் ரம்பை. ஆனால் சுகர் கடும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரென்பதால் அவள் எண்ணம் ஈடேற வில்லை. இப்போது சுகர் மனிதராய்ப் பிறந்திருப்பதை அறிந்து, தானும் மானிடப் பெண் ணாய்ப் பிறந்து சுகரை மணந்து கொண்டாள் ரம்பா.

கபீரும் சுந்தராவும் மனமொத்த தம்பதியாய் வாழ்ந்தனர். கமால் என்ற மகனையும் பெற்றனர். ராம்- ரஹீம் நாமத்தில் திளைத்தபடி நெசவுத் தொழிலைச் செய்தனர். விருந்தோம்பலையும் செய்துவந்தனர்.

மச்சேந்திரநாதர் என்பவரின் சீடரான கோரக்கர் என்பவர் மகாசித்தி பெற்றவர். அதேசமயம் அகந்தையும் இருந்ததால் மற்றவர்களை வாதில் வெல்ல ஊர் ஊராகச் சென்றார். அப்படி அவர் காசிக்கு வந்தபோது ராமானந்தரை வாதுக்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள், “”இவர் மிகுந்த அகந்தை கொண்டவர். இவருடன் வாதிட வேண்டாம்” என்று குருவைத் தடுத்தனர். அப்போது அங்குவந்த கபீர்தாசர் ராமானந்தரை வணங்கி, “”குருவே, நான் வாதாட அனுமதி தாருங்கள்” என்றார்.

ராமானந்தர் அமைதியாக இருக்கவே, அதையே அனுமதியாக எண்ணி வெளியே வந்த கபீர்தாசர், தன் கையிலிருந்த நூலுருண்டையை மேலே தூக்கி யெறிந்து அதன்மீது அமர்ந்து, “”கோரக்கரே, வாதாட வாரும்” என்றார்.

“”உமது மாயவித்தை என்னிடம் வேண்டாம். கீழே இறங்கி வா” என்றார் கோரக்கர்.

கபீர் கீழே வர, கோரக்கர் ராமானந்தர்போல கபீருக்கு காட்சி தந்தார்.

இதைக்கண்ட உண்மை யான ராமானந்தர், “”ராமச் சந்திரா! நீதான் கபீரைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார்.

அப்போது கபீருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அவர் கோரக்கரின் குரு மச்சேந்திரரைப்போல காட்சி தந்தார்.

வியப்படைந்த கோரக்கர் மகாவிஷ்ணுபோல காட்சி தந்தார்.

உடனே கபீர் சரபமூர்த்தியாக காட்சி தந்தார். இப்படி பற்பல சித்துவிளையாடல்கள் நடந்தன. கோரக்கர் கபீரின் குரு பக்தியை உணர்ந்து, “”ராமானந்தரின் உயர்ந்த சீடன் நீ. ஞானம் பெற்று நீடூழி வாழ்வாயாக” என வாழ்த்தி அங்கிருந்து அகன்றார்.

ஒருசமயம் நூறு சாதுக்கள் கபீர்தாசரை நாடிவந்து, “”நாங்கள் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. பசியால் வாடுகிறோம். எங்களுக்கு உணவளிக்க வேண்டும்” என்றனர்.

வீட்டிலோ மிகக்குறைந்த அளவே தானியங்கள் இருந்தன. என்ன செய்வதென்று கபீர்தாசர் திகைத்தபோது, அவர் மனைவி சுந்தரா, “”நான் சொல்வதைக் கேளுங்கள். இதுவரை நாடி வந்தோருக்கு உணவளிக்கும் கடமையிலிருந்து  நாம் வழுவியதில்லை. இப்போதும் வழுவக்கூடாது. இங்குள்ள பெருவணிகனான சௌகாருக்கு என் மீது மோகம் உண்டு. வந்திருக்கும் நூறு பேருக்கான உணவுப்பண்டங்களை அவன் தரட்டும். நான் ஓரிரவு அவனுக்கு அடிபணிகிறேன்” என்றாள்.
வேறுவழியின்றி அதற்கு சம்மதித்த கபீர், வணிகரிடம் சென்று விவரத்தைக் கூறி பொருட்களைப் பெற்றுவந்து, நூறு சாதுக்களுக்கு உணவளித்தார். இரவானதும் அவரே தன் மனைவியை அழைத்துச் சென்று வணிகன் இல்லத்தில் விட்டுவந்தார்.

சுந்தராவுக்கு புத்தாடைகள் வழங்கிய வணிகன், நீராடிவிட்டு ஒரு அறையில் இருக்குமாறு கூறினான். சற்று நேரத்தில் அந்த வீட்டின் வாசலை காவலர்கள் தட்டினர். திறந்து பார்த்த சௌகார் அதிர்ச்சியடைய, “”இங்கே திருட்டுப்பொருள் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டனர் காவலர்கள். “”அப்படி ஏதும் இல்லையே” என்று சௌகார் சொல்ல, “”அந்த அறைக்கதவைத் திற” என்று சொல்லி கதவைத் திறந்து பார்க்க, அங்கே சுந்தரா இருந்தாள். “”இது என்ன அநியாயம்” என்று சொல்லி வணிகனை அடித்த காவலர்கள், சுந்தராவை அழைத்துவந்து கபீரின் வீட்டில் விட்டுச் சென்றனர்.

பொழுதுவிடிந்ததும் கபீர் காவல்சாலைக்குச் சென்று, “”நான்தான் என் மனைவியை வணிகன் வீட்டில் விட்டுவந்தேன். நீங்கள் ஏன் இரவே மீட்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.

“”நாங்கள் வணிகன் வீட்டுக்குச் செல்லவு மில்லை; உங்கள் மனைவியை மீட்கவுமில்லை” என்றனர் காவலர்கள். கபீர்தாசர் இது ராமபிரானின் திருவருளே என்றுணர்ந்து நெகிழ்ந்தார்.

இவ்வாறு ராமபிரானின் திருவருளை பல சந்தர்ப்பங்களில் அனுபவித்த கபீர்தாசர் சீதா ராம திவ்ய தரிசனமும் பெற்றார்.

தம் இறுதிநாள் நெருங்குவதை உணர்ந்த கபீர்தாசர் மக்ஹர் என்ற இடத்திற்குச் சென்றார். தட்சன் யாகம் செய்த அந்த இடம் சிவபெருமானால் சபிக்கப்பட்ட பூமி என்றும்; அங்கு இறப்பவர்களுக்கு மோட்சம் கிட்டாது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. அதைப் புனிதப்படுத்தும் நோக்கோடு அங்கு சென்ற கபீர், ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாராம். சற்று நேரத்தில் அங்கிருந்து ஒரு ஜோதி வெளியாகி வானில் கலந்ததாம். அறைக்கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை என்பது ஒரு வரலாறு.

அவர் முஸ்லிம்களின் முக்கிய கடமையான மெக்காவுக்கு புனிதப் பயணம் சென்றாரென்றும்; அங்கு பக்தி மார்க்கத்தைப் பரப்பி அங்கேயே சமாதி அடைந்தாரென்றும்; தற்போதும் அந்த சமாதியை மக்கள் வணங்குகிறார்கள் என்றும் இன்னொரு வரலாறு சொல்கிறது.

எவ்வாறாயினும் ஒரு சிறந்த பக்தி நெறியை மக்களுக்கு உணர்த்தி, எண்ணற்ற ராமநாம சங்கீர்த்தனங்களைப் பாடி, இன்றளவும் மக்களால் போற்றி வணங்கப்படுகிறார் கபீர்தாசர்.

“ஹரி போலோ ஹரி போலோ’ என்று கபீர்தாசர் பாடிய பாடல் ஒன்று உண்டு.

“”நண்பனே, ஹரியின் நாமத்தை இடைவிடாமல் சொல்லுங்கள். “என்னுடையது’ என்று சொல்லி என்ன பயன் கண்டீர்கள். ஹரி நாமம் சொல்லாவிடில் யாவும் மாயையே. ஹரியின் குணத்தைப் பாடுங்கள். பாடி ஆடிக்கொண்டே வைகுண்டம் ஏகுங்கள்!” என்கிறார் கபீர்தாசர்.

மத  ஒற்றுமையை வலியுறுத்தி, பக்தி நெறியையும் வளர்த்த கபீர்தாசரின் காலம் கி.பி. 1440 முதல் 1518 வரை என்பர். இவ்வாண்டு 23-06-2013 அன்று கபீர்ஜெயந்தி வடமாநிலங்களில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும்.

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

இந்த வருடம் 4-5-2013 முதல் 28-5-2013 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை “கர்ப்ப ஓட்டம்’ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா? யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன்’ என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “”உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். 

“”அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

“”உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றான்.

“”அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன்.

“”நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்” என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், “”அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை” என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், 

அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன், “”அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது. 

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்?  எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்; நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்; அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

சூரிய காயத்திரி

“ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி 
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்.’

          ன்னிரண்டாழ்வார்களால் பாடல் பெற்ற வைணவத் தலங்கள் நூற்று எட்டாகும். இவற்றை நூற்றெட்டு வைணவத் திருப்பதிகள் என்று வைணவ  பக்தர்கள் கூறுவர். ஆனாலும் இந்த நூற்று எட்டில் பொதுவாக திருப்பதி என்று சொன்னால் அது திருவேங்கடமென்னும் தலத்தையே குறிக்கும்.திருவேங்கடத்தின் பெருமையைப் பற்றி பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவற்றில் குலசேகராழ்வார் பாடல்கள், இத்தலத்தில் பிறப்பதானால் உண்டாகும் பெருமையை விளக்கும் பாடல்களாகும். குலசேகராழ்வார், “மீண்டும் இனி எனக்குப் பிறவி வேண்டாம். அப்படி ஒருவேளை மறுபடி பிறப்பதுதான் விதியெனில், அது மனிதப் பிறவியாக இல்லாவிடினும் திருமலையில் உள்ள கோனேரியில் வாழும் பறவையாகவோ, சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் மீனாகவோ, அதன் கரையில் மரமாகவோ பிறக்க வேண்டும். அப்படியோர் பேறு கிடைத்தால் அதை இந்திர பதவியைவிட உயர்ந்ததாகக் கருதுவேன்’ என்று பாடியுள்ளார். பெருமாளின் சந்நிதியில் படியாய்க் கிடந்தாவது அவன் பவளவாய் காணவேண்டும் என்பது ஆழ்வாரின் அற்புத ஆசை.இத்தகு சிறப்புவாய்ந்த திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோவில் அரையராக திருப்பணி செய்துவந்தார். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் திருமாலின் தெற்கு வீடு என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கோவில் அரையராக ராமானுஜர் சேவைசெய்து வந்தார். இந்நிலையில் ராமானுஜர், தம் சீடர்களுடன் தல யாத்திரை செய்யும்போது திருவேங்கடத்திற்கு வந்து கீழ்த்திருப்பதியில் தங்கியிருந்தார். பல தலங்களுக்கு நடந்தே சென்று வந்திருந்ததால் அனைவருக்கும் கடுமையான பசி உண்டாயிற்று.அப்போது ராமானுஜரின் சீடரும், திருமலையில் அவர் பெயரில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தவருமான அனந்தாழ்வார் நான்கு அடியார்களுடன் ராமானுஜரிடம் வந்தார். தம் குருவான ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜரும் தன் சீடனை மார்புறத் தழுவிக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார் அனந்தாழ்வார்.அனைவரும் உண்டு மகிழ்ந்ததும் அனந்தாழ்வார் ராமானுஜரிடம், “”சுவாமி! தங்கள்வருகையை எதிர்பார்த்து திருமலை நம்பி சுவாமிகள் மலைமீது ஆவலுடன் காத்திருக்கிறார். தேவரீர் அங்கே எழுந்தருள வேண்டும்” என்று கூறினார். அதற்கு ராமானுஜர், “”அனந்தாழ்வானே, இத்திருவேங்கடமலை நித்திய சூரிகளும் தவ சிரேஷ்டர்களும் உலவும் மலை. இம்மலையில் நான் கால் வைத்து நடப்பது அபசாரமாகாதா?” என்று கேட்டார்.

அதற்கு அனந்தாழ்வார், “”சுவாமி, திருவரங்கத்தில் தங்களுடன் திருப்பணி செய்துகொண்டிருந்த என்னை, இத்திருமலையில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யுமாறு தாங்கள்தானே அனுப்பி வைத்தீர்கள். அடியேன் இம்மலையில் கால் வைத்து ஏறும்போது தாங்கள் வரக்கூடாதா? தங்களைப் போன்றவர்கள் வருவதால்தான் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்” என்று கூறி ராமானுஜரையும் சீடர்களையும் அழைத்தார்.

அதன்படி ராமானுஜர் திருமலையின் வீதியிலே வரும்போது, அவருடைய உறவினரும் குருவுமான திருமலை நம்பி எதிரில் வர, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

“”சுவாமி, அடியேனை வரவேற்கத் தாங்களே வரவேண்டுமா? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்தால் போதாதா?” என்று ராமானுஜர் கேட்டார். அதற்கு நம்பி, “”ராமானுஜா, நானும் அப்படித்தான் நினைத்தேன். வீதியில் வந்து நான்கு திசைகளிலும் பார்த்தேன். அங்கு என்னைவிடச் சிறியவன் யாரும் இல்லை. அனைவரும் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் நானே வந்தேன்” என்றார். நம்பியின் சொற்களைக் கேட்ட ராமானுஜர், “”சுவாமி, தேவரீரைவிட உயர்ந்தவர் வேங்கடவன் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்லி உள்ளம் உருகினார்.

வைணவ சமயத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று பிறர் படும் துயரத்தை தனதெனக் கொள்ளுதல்; அவர்களின் துயரைத் தீர்த்தல்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் கற்றுக்கொண்ட எட்டெழுத்து மந்திரமாகிய நாராயண மந்திரத்தை- தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஊரில் உள்ளவர்கள் எல்லாம் துயர்தீர்ந்து மோட்சமடைய வேண்டுமென்ற கருணையினால், தம் குருநாதருக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி நின்று அனைவருக்கும் உபதேசித்தவர் ராமானுஜர். பிறர் துன்பத்தைப் போக்கி நன்மை செய்வதற்காக தனக்கு எத்தகைய துன்பம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனே உண்மையான வைணவன் என்ற கொள்கையின் சின்னமாக விளங்கியவர் ராமானுஜர்.

வைணவத்தின் மற்றொரு கொள்கை பணிவுடைமை. நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கேற்ப, பக்தியின் எல்லை கண்ட பரமபக்தர்கள் தம்மை “நான்’ என்று சொல்ல மாட்டார்கள். “அடியேன்’ என்றே கூறுவார்கள். மற்றொரு அடியாரைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் பக்தியிலும் கல்வியிலும் தம்மைவிடக் குறைந்தவராக இருந்தாலும், அவரை “தேவரீர்’ என்றே கூறுவார்கள். அக்கொள்கைக்கேற்பவே, ராமானுஜரும் திருமலை நம்பியும் சந்தித்துக்கொண்டது வைணவத்தின் இரு பெருங்கொள்கைகள் சங்கமமானது போன்ற தெய்வீகமான காட்சியாகும். இந்நிகழ்ச்சி திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தில், “யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பி போலே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை நம்பி, “”ராமானுஜா, நீயும் உன் சீடர்களும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். கோனேரியில் நீராடி வேங்கடவனை வணங்கிவிட்டு திருவமுது செய்யலாம்” என்று கூறினார். இதைக் கேட்ட ராமானுஜர், “”சுவாமி, தாங்கள் மறந்துவிட்டீர்களா? தேவரீர் அனந்தாழ்வாரிடம் அறுசுவையான உணவைக் கொடுத்தனுப்பி இருந்தீர்களே? 

அந்த தேவாமிர்தத்தைப் போன்ற திருவமுதை உண்டுவிட்டுத்தானே வருகிறோம்” என்றார்.

ராமானுஜர் கூறியதைக் கேட்ட திருமலை நம்பி ஆச்சரியத்துடன், “”ராமானுஜா, நான் அனந்தாழ்வானிடம் உணவு கொடுத்தனுப்பவில்லையே” என்று கூறி அனந்தாழ்வாரை அழைத்தார். அனந்தாழ்வாரோ, “”இப்பொழுதுதானே தங்களைப் பார்க்கிறேன்” என்றார். 

இதுகேட்டு ராமானுஜர் அதிசயித்தார்.

உடனே திருமலை நம்பி, “”ராமானுஜா, தன் குழந்தை பசியோடிருப்பதை எந்தத் தாயாவது பொறுத்துக்கொள்வாளா? அதுபோல் நீயும் உன் சீடர்களும் பசியோடிருப்பதை அறிந்த திருவேங்கடமுடையான் அனந்தாழ்வார் வடிவத்தில் வந்து உங்கள் அனைவருக்கும் தாமே உணவு பரிமாறியிருக்கிறார். ராமானுஜா, நீ வைணவத்தை வாழ்விக்கப் பிறந்தவன். வைணவத்துக்கு உடையவன்; பக்தர்களுக்கும் உடையவன். உன் பக்தியே பக்தி, உன் பாக்கியமே பாக்கியம்!” என்று அன்புடன் கூறினார். ராமானுஜரின் மற்றொரு திருநாமம் “உடையவர்’ என்பதாகும்.

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார், திருமலையில் தம் குருநாதர் பெயரில் “ராமானுஜர் நந்தவனம்’ என்ற அழகான பூந்தோட்டத்தைஅமைத்து ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். ஒருநாள் அவர் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு சர்ப்பம் அவரைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த அடியார்கள், “”சுவாமி, உங்களை சர்ப்பம் தீண்டிவிட்டது. சர்ப்பத்தின் விஷம் தலைக்கேறும்முன் வைத்தியம் செய்துவிட்டு பிறகு பூப்பறிக்கலாம்” என்றனர்.

அதற்கு அனந்தாழ்வார், “”அன்பர்களே! அடியேன் வலிமையுடையவனாக இருந்தால் வழக்கம்போல இந்த சுவாமி புஷ்கரணியில் நீராடி ஏழுமலையானை சேவிக்கப் போகிறேன். சர்ப்பம் வலிமையுடையதாக இருந்தால் வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியில் நீராடி பரமபதநாதனுக்கு சேவை செய்யப் போகிறேன். அடியார்கள் மரண பயம் அடைவதில்லை” என்றார். திருமலையான் அவரை தன்வசமே வைத்துக்கொண்டான்.

“வேம்’ என்றால் “சுட்டெரிக்கும் தீ’ என்பது பொருள்; வேங்கடம் என்பது நம் பாவ வினைகளைச் சுட்டெரித்துப் புனிதர்களாக்கும் தலம்.

இவ்வாண்டு ராமானுஜ ஜெயந்தி 14-5-2013 அன்று அமைகிறது. வினைகள்  நீங்கி வீடுபேறு அடையவிரும்புவோர் உடையவரையோ, எம்பெருமானாகிய திருமலையப்பனையோசரணடைந்தால், “தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் தரும்பிரானல்லவோ’ அவன்!

படங்கள்: எம்.என்.எஸ்.

டி.ஆர். பரிமளரங்கன்

உத்ராயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் தை அமாவாசை நீராடல் முக்கிய இடம்பெறுகிறது.

வடக்கே புனித நீர் நிலைகள் பல இருந்தாலும், தென்னகத்தில் தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரி நதிக்கரையில் முன்னோர்களுக்கான பூஜையை மேற்கொண்டால், குடும்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

காவேரிக் கரையிலுள்ள திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்வது ஸ்ரீரங்கம். இங்கு பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் அருட்பார்வை, தென்பகுதியில் அமைந்துள்ள “அம்மா மண்டபம்’ படித்துறையை நோக்கி உள்ளதால், இந்தப் படித்துறை மிகவும் சிறப்புப் பெறுகிறது.

முன்னோர்களுக்கான பூஜையை அரசமரத்தடியில் அமர்ந்து மேற்கொள்வதை சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. அரசமரத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதால், அரசமரம் மிகவும் போற்றப்படுகிறது.

இந்த அம்மா மண்டபப் படித்துறை வளாகத்தில் நான்கு அரச மரங்கள் பரந்து காட்சி தருகின்றன. இங்கு பிதுர் பூஜைக்கென்று தகுந்த இடம் உள்ளது.

பிதுர் பூஜையின் ஒரு பகுதியாக, பசுவை அந்தணர் ஒருவருக்கு தானம் தருவது புனிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பூஜை செய்து, கோ ஜலத்தைப் பெறுவது புனிதத்திலும் புனிதமென்று வேத நூல்கள் கூறுகின்றன. மேலும், இந்த வளாகத்தில் காவேரித் தாயார் கோவில் கொண்டுள்ளாள். இக்கோவிலுக்குப் பின்புறமுள்ள வன்னி மரத்தடியில் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பிதுர் வழிபாடு செய்வது அளப்பரிய புண்ணியத்தைத் தரும். அதனால், பிதுர்கள் (முன்னோர்கள்) மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.

பிதுர் தர்ப்பணத்தின்போது அரசமரத்தடியில் எள்ளும் நீரும் அளிப்பதால், பசியுடன் இருக்கும் முன்னோர் களுக்கு அது ஒரு வருடத்திற்கான உணவாகிறது.

ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வரும் வடநாட்டினர், ராமேஸ்வரம் அக்னி கடற்கரையில் மேற்கொள்ளும் பிதுர் பூஜையைவிட, இங்கு பிண்டம் வைத்து பிதுர் பூஜை செய்வதையே விரும்புகிறார்கள். காரணம், ராமேஸ்வரம் கடற்கரையில் அரசமரம் இல்லை. இங்கு அரச மரங்கள் சூழ்ந்திருப்பதுடன், கஜராஜனான யானை தினமும் இங்கு வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்னும் நம்பிக்கைதான்.

மறைந்த பெற்றோருக்கு ஒவ்வொரு அமாவாசை யன்றும் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. இயலாத நிலையில் உத்ராயன புண்ணிய காலமான தை மாதம், தட்சிணாயன காலமான ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் அளித்தல் வேண்டும் என்பர்.

புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய வழிபாடு செய்யும்போது கறுப்பு எள் என்ற தானியம் அவசியம் இடம்பெற வேண்டும். பிண்டம் வைத்துப் பூஜிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். கறுப்பு எள் பூதப்பிசாசு மற்றும் தீயசக்திகளை விரட்டும். பிண்டம் வைப்பதால் மறைந்த முன்னோர்கள் அதில் உறைவதாக ஐதீகம்.

பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது சிலர் கோ பூஜையையும் மேற்கொள்வர். அப்போது, பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வர். இப்படிச் செய்வதால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டும். பித்ருக்கள், பித்ருலோகத்திலோ நரகத்திலோ இருந்தாலும் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம்.

ஆற்றங்கரையில் பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது, ஆற்றில் நீர் இல்லாவிட்டால் அங்குள்ள அரசமரத்தின் வேர்ப்பகுதியில் பிண்டங்களை வைத்து, எள்ளும் தண்ணீரும் கலந்த நீரினை ஊற்றினால் அது பிதுர்களுக்கு உடனே சென்றுவிடுவதாக சாஸ்திரம் கூறுகிறது.

அரசமரம் இல்லாதபோது, ஆற்று மணலில் சிறிது பள்ளம் பறித்து பிண்டங்களை அதில் புதைத்தாலும் அது மேலுலகம் செல்வதாகக் கூறப்படுகிறது. பிதுர் பூஜை செய்ததும் அன்னதானம் செய்வதும், பசுவுக்கு அகத்திக் கீரையை உணவாகக் கொடுப்பதும் போற்றப்படுகிறது. மேலும், அன்று தெய்வ வழிபாடுகளும் போற்றப் படுகின்றன. அதற்காக அம்மா மண்டப வளாகத்தில் பல சந்நிதி கள் உள்ளன. மேலும் தான- தர்மங்கள் செய்வதற்கும், வஸ்திர தானம் செய்வதற்கும், பசுதானம், அன்னதானம் செய்வதற்கும் சகல வசதிகளும் உள்ளதால், தை அமாவாசை போன்ற நாட்களில் இந்த அம்மா மண்டபப் படித்துறை திருவிழாக் கூட்டம் போல் நிறைந்து காணப்படும்.

இத்தலம் ஸ்ரீரங்கநாதர் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.

மகத்துவம் மிகுந்த மந்திரம்

மகத்துவம் மிகுந்த மந்திரம்
சதாசர்வ காலமும் நாராயணரின் திருநாமத்தை உச்சரித்தபடியே ஈரேழு உலகங்களையும் வலம் வருபவர் நாரதர். அடிக்கொரு முறை உச்சரிக்கும் ‘நாராயணா’ என்ற திருமந்திரத்தின் பலனை அறிந்து கொள்ளும் ஆவல் நாரதருக்கு எழுந்தது. தனது தந்தையான பிரம்ம தேவரிடம் சென்று விளக்கம் கூறும்படி கேட்டார்.நாராயண மந்திர விளக்கம்…….. ‘ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தின் பலன் யாது என்று உனக்கு தெரிய வேண்டுமானால், கோதாவரிக்கரையில் இருக்கும் வண்டிடம் சென்று கேள்!’ என்று கூறினார் பிரம்மதேவர். அதன்படி நாரதர், குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த வண்டிடம், ‘ஓம் நமோ நாராயணாய நம’ என்ற மந்திரத்தின் அர்த்தம் யாது என்று கேட்டார்.நாரதர் கூறிய மந்திரத்தைக் கேட்டதும் வண்டானது மறுநொடியே தனது உயிரை விட்டது. இதனை பார்த்த நாரதர், பதறியடித்துக் கொண்டு பிரம்மதேவரிடம்   வந்தார். ‘தந்தையே! நாராயணாய மந்திரத்தின் பலன் என்ன என்று எனக்கு தெரிந்து விட்டது. அந்த மந்திரத்தைச் சொன்னால், அதைக் கேட்பவன் செத்துப் போய்விடுவான்’ என்றார்.நாரதருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி………… அதைக் கேட்டு புன்முறுவல் பூத்தபடி,   ‘சரி! யமுனா நதிக்கரையில் உள்ள ஆலமரத்தில் இப்போதுதான் பிறந்த கிளி உள்ளது. அதனிடம் சென்று மந்திரத்திற்கான அர்த்தம் கேள்’ என்றார் பிரம்மதேவர். நாராயண மந்திரத்திற்கான அர்த்தம் அறியும் ஆவலில் கிளியிடம் சென்று அர்த்தம் கேட்டார் நாரதர். மறுநொடி அந்த கிளியும் உயிரை விட்டு விட்டது.அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் நாரதர். குருவி, ஆந்தை என்று மந்திரத்தின் அர்த்தம் கேட்கும் படலம் தொடர்ந்தது. அவைகளும் இறப்பை தழுவின. நாரத முனிவருக்கு சப்த நாடியும் அடங்கி விடுவது போல் தோன்றியது. அவரை பார்த்து பிரம்மதேவர், ‘பூலோகத்தில் சுந்தரபுரம் என்ற ஊரில் அந்தணர் ஒருவர் வீட்டில் உள்ள பசுவுக்கு அழகான கன்று பிறந்துள்ளது. அதனிடம் சென்று மந்திரத்திற்கான அர்த்தம் கேள்!’ என்றார்.அரச குழந்தையிடம்………தந்தையே! நான் அனுபவப்பூர்வமாகவே மந்திரத்தின் பலனை தெரிந்துகொண்டேன். எதற்காக மீண்டும் ஒரு கன்றை பலியிட வேண்டும். அதுவும் இறந்து விட்டால் அந்த பாவத்தை நான் எங்கு சென்று தொலைப்பது’ என்று கூறி மறுத்தார் நாரதர். ஆனால் பிரம்மதேவர், ‘நீ சென்று கேள்’ என்றார்.எப்படியும் மந்திரத்தை உச்சரித்ததும் கன்று இறந்து விடும். அங்கிருப்பவர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று நினைத்தபடி, கன்றிடம் ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தின் அர்த்தம் கேட்டார் நாரதர். எதிர்பார்த்ததுதான்; கன்றின் கதையும் முடிந்து விட்டது. பிரம்மலோகம் சென்ற நாரதரின் நடுக்கத்தை பார்த்ததும் நடந்ததை ஊகித்துக் கொண்ட பிரம்மதேவர், ‘நாரதா!’ என்று அழைத்தார்.’சுவாமி! ஒன்றல்ல… இரண்டல்ல… நாராயண மந்திரத்தின் பலனை ஐந்து முறை பார்த்து தெரிந்து கொண்டுவிட்டேன்’ என்றார் நாரதர். உடனே பிரம்மதேவர், ‘நீ காசி நகருக்கு செல்!. அங்கு அரசனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது’ என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பாக பதறி இடைமறித்தார் நாரதர்.மந்திரத்தின் மகத்துவம்……….. ‘ஐயனே! அந்த குழந்தை இறந்து விடுமே! ஏற்கனவே ஐந்து உயிர்கள் என்னால் இறந்துவிட்டன. இப்போது பூலோக பிறப்புகளில் உயர் பிறப்பான மனிதனையும் அழித்த பாவியாகி விடுவேனே’ என்றார் நாரதர். ‘நீ அங்கு சென்று, அந்த குழந்தையிடம் கேட்டுதான் ஆக வேண்டும்’ என்று உத்தரவிடும் தொனியில் கூறினார் பிரம்மதேவர்.வழியே இல்லை, காசிக்கு சென்று குழந்தையிடம், நாராயண மந்திரத்தின் அர்த்தம் கேட்டார் நாரதர். குழந்தை இறந்து விடும் என்று எண்ணிய நாரதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. அந்த குழந்தை நாரதரிடம் பேசியது, ‘வண்டாக, கிளியாக, குருவியாக, ஆந்தையாக, கன்றாக பிறந்தது நானே.நான் பிறந்த ஒவ்வொரு பிறப்பிலும் தாங்கள் வந்து கூறிய ஓம் நமோ நாராயணாய நம என்ற மந்திரத்தை கேட்டதன் காரணமாக, அந்த பிறவியின் பயனை அடைந்து ஒவ்வொரு முறையும் மேல் பிறப்பை அடைந்தேன். இப்போது உயர் பிறப்பான மனித பிறவியை அடைந்துள்ளேன்.இப்போதும் அந்த மந்திரத்தை கேட்டதால் நான் வைகுண்ட பதவியை அடைவேன்’ என்றது. புரிந்து விட்டது நாரதருக்கு, நாராயண மந்திரத்தினை உச்சரிப்பதும், கேட்பதும் இறைவனடியை சேர்வதற்கான துரிதமான பாதை என்று.

ஸ்ரீனிவாசப் பெருமாள் உறையும் திருமலைக்கு வேங்கடாசலம் என்ற பெயரும் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்தப் பெயர் அமைவதற்கு ஒரு புராணக்கதை உண்டு.

ஆந்திர மாநிலத்தில், சிவபெருமான் கோவில் கொண்டுள்ள ஸ்ரீசைலத்தின் மேற்குப் பகுதியில் நந்தனபுரம் என்ற நகரம் இருந்தது. அந்த நகரத்தை நந்தன் என்ற அரசன் சிறப்பாக ஆண்டு வந்தான்.

அங்கு நான்கு வேதங்களும் கற்றறிந்த புரந்தரன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு குழந்தைப் பேறு கிட்டாததால், பல தவங்களும் யாகங்களும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பிறந்த தால் அவனுக்கு மாதவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

மாதவன் தந்தையைப் போலவே நான்கு வேதங்களை யும் கற்றதுடன், சகல சாஸ்திரங்களையும் கற்று சிறந்த அறிஞனாக விளங்கி         னான். அதனால் பிரம்மதேஜஸ் (ஒளிபொருந்திய உடலழகு) அவனை வந்தடைந்தது. திருமண வயது வந்தவுடன் சந்திரரேகை என்ற பெண்ணை மாதவனுக்கு மணம் முடித்து வைத்தார் தந்தை புரந்தரன்.

அவன் தன் அழகிய மனைவியுடன் பல இடங்களுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தான். இல்லற இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்தனர் மாதவனும் சந்திரரேகையும்.

ஒருநாள், ஒரு தாமரைத் தடாகத்தின் கரையில் இருவரும் களித்து இன்புற்றிருந் தனர். அப்போது அங்கு விதியின் காரண மாக, ஒரு புலைப்பெண் நிர்வாணமாக வந்து நின்றாள். அவளைக் கண்ட மாதவன் அவள்மீது மையல் கொண்டான். பக்கத்தில் தன் மனைவி இருப்பதையும் மறந்து அந்தப் புலைப் பெண்ணோடு கூடிக்குலாவினான்.

காமத்தால் மதிமயங்கியிருந்த மாதவனை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவனுக்கு மது, மாமிசம் தந்து மூர்க்கனாக வும் முரடனாகவும் மாற்றிவிட்டாள் அந்தப் பெண்.

மதியிழந்த  மாதவன் அவளுடைய அன்பைப் பெறுவதற்காகவும், அவளோடு இன்பம் துய்ப்பதற்காகவும், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தனி வழியே செல்லும் மக்களைத் தாக்கி, அவர்களிட மிருந்து பொன்னையும் பொருளையும் வழிப்பறி செய்து, அவற்றை புலைப்பெண் ணுக்குக் கொடுத்து வாழ்ந்து வந்தான்.

நாளாக நாளாக மாதவனுக்கு பல நோய்கள் வர ஆரம்பித்தன. இறுதியில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண்ணுக்கு வேண்டிய பொருள் களைக் கொண்டுவந்து கொடுக்க அவனால் முடியவில்லை. பயனற்ற அவனை தனியாக விட்டுவிட்டு அவள் வெளியேறி விட்டாள்.

அவள் அவனை விட்டுச் சென்றதாலும், கொடிய பாவங்களைச் செய்ததாலும் மாதவன் மேலும் பித்தனாகி, பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் சேஷகிரியின் பக்கம் வந்து சேர்ந்தான்.
அனந்தன் வடிவாகிய சேஷகிரியின்மீது அவனையறியாமல் நடக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னி தேவன் ஓடிவந்து அவன் கால்களில் பற்றியி ருந்த பாவங்களைப் பற்றி எரியச் செய்தான். அதனால் சுயநினைவைப் பெற்றான் மாதவன்.

சிறந்த வேத விற்பன்னனான மாதவனுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தன. தன் நிலை உணர்ந்தான். சேஷகிரி வாசனை தலைநிமிர்ந்து பார்த்து பக்தியுடன் பாடித் துதித்தான். அவனது நோய்கள் அனைத்தும் நீங்கி, புடமிட்ட பொன்போல் பழைய பிரம்மதேஜஸ் பெற்றான்.

இக்காட்சிகளை வானிலிருந்து பார்த்து அதிசயித்த தேவர்கள், கீழே இறங்கி வந்து மாதவனின் வரலாற்றைக் கேட்டனர். அவன் தன் பிறப்பு முதல் நடந்தவற்றையெல்லாம் கூறினான்.

மாதவன் என்ற மறையவன் இம்மலையின் மீது கால் வைத்த மாத்திரத்திலேயே அவனது பாவங்கள் தொலைந்ததைக் கண்ட வானவர்களும் முனிவர்களும் இம்மலைக்கு வேங்கடாசலம் என்று பெயர் வைத்தனர்.

“வே’ என்ற எழுத்து, தொகுதியாகிய (மொத்த) பாவத்தைக் குறிக்கும். “கட’ என்ற இரண்டாம் பதம் கொளுத்தப்படும் (போக்கும்) என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். அசலம் என்றால் மலை. அதாவது அனைத்துப் பாவங் களையும் சாம்பலாக்கும் மலை என்று பொருள்.

பிரம்மதேஜஸ் பெற்ற மாதவன் அம்மலை மீது அமர்ந்து இந்திரியங்களை அடக்கி பல காலம் கடுந்தவம் செய்து, திருமகள் கொழுநன் (ஸ்ரீனிவாசன்)  அருள்பெற்று பரமபதம் சேர்ந்தான்.

இக்கதையை நாரதர் பிருகு முனிவருக்குக் கூறியதாகவும்; அதை சூத முனிவர் மற்ற முனிவர்களுக்குக் கூறினார் என்றும் வராக புராணம் கூறுகிறது.

வேங்கடாசலபதியை வணங்குவோம்; வேண்டியதைப் பெறுவோம்.