முருகன்/ Murugan

 


கோவை ஆறுமுகம்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகமலர்ச்சியே வாழ்வின் குறிக்கோள். ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் அதை அவர் அணிந்துள்ள ஆடையோ, புனைந்துள்ள அணிகலன்களோ, அவர் மேனியின் நிறமோ நிச்சயிப்பதில்லை. புன்னகை தவழும் மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தால் போதும். அவர்களைச் சுற்றி உறவும் நட்பும் எப்போதும் வட்டமிடும்.

ஒரு சொற்பொழிவாளர் தன் உரையின் நிறைவாக

“ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புனரவந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!’

என்னும் அருணகிரியாரின் திருப்புகழைப் பாடிமுடித்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர் ஒருவர், “ஐயா! கருணைமிகுந்த முருகன் தனக்கு ஆறுமுகங்கனை வைத்துக்கொண்டு நமக்கெல்லாம் ஒருமுகம் தந்தது ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சொற்பொழிவாளர், “நமக்கெல்லாம் ஒருமுகத்தையே ஆறுமுகங்களாக வகுத்துள்ளாரே’ என்று பதிலளித்ததோடு, அதற்கு விளக்கமும் அளித்தார். பலபேருக்கு முகம் மூஞ்சியாகிவிடுவது மட்டுமல்ல; அடைமொழியும் பெறுகிறது.

சினந்து கொள்வதும் சீறிவருவதுமாக இருந்தால் சிடுமூஞ்சி; அழுதுபுலம்புபவன் அழுமூஞ்சி; தூங்கி வழிபவன் தூங்குமூஞ்சி; உர் என்று முகத்தை வைத்திருப்பவன் குரங்குமூஞ்சி; உதடுகள் இரண்டையும் பசை போட்டு ஒட்டி வைத்திருப்பவன் உம்மணாம்மூஞ்சி; எதற்கெடுத்தாலும் ஏக்கப்பெருமூச்சு விடுபவன் விடியா மூஞ்சி.

இந்த ஆறு மூஞ்சிகளின் பட்டியலில் ஒருபோதும் நாம் இணைந்துவிடக்கூடாது.

மேற்சொன்ன மூஞ்சிகளின் பட்டியலில் சிக்கி வாழ்பவர்களின் அகத்திலே புகுந்து மலர்ச்சியை வழங்கும் மகிமைவாய்ந்த திருத்தலம் ஒன்றுண்டு. அது தான் ஓதிமலை முருகன் திருக்கோவில்.

மூலவர்: ஓதிமலை ஆண்டவர்.

இறைவன்: காசி விஸ்வநாதர்.

இறைவி: காசி விசாலாட்சி.

உற்சவர்: கல்யாண சுப்ரமணியர்.

புராணப்பெயர்: ஞானமலை.

ஊர்: இரும்பறை.

தலவிருட்சம்: ஓதி மரம்.

தீர்த்தம்: சுனை தீர்த்தம்.

விநாயகர்: சுயம்பு விநாயகர்.

ஒருமுறை கயிலை வந்த பிரம்மதேவன் முருகப் பெருமானை கண்டும் காணாததுபோல் நகர்ந்தார். குமரன் பாலகன்தானே என்ற எண்ணம்.

உடனே முருகப்பெருமான் பிரம்மனை அழைத்து பிரணவத்துக்கு பொருள் கேட்க, அவர் பதில் கூறத்தெரியாமல் விழித்தார். உடனே அவரை சிறையிலடைத்தான் முருகன். இரும்பாலான அறையில் பிரம்மனை சிறைவைத்ததால் அந்த இடம் இரும்பறை என பெயர்பெற்றது. சுவாமி மலையில் முருகனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்ட ஈசன், இங்கு வேதாகமங்களுடைய பொருளைக் கேட்க,  மலையின்மீது குருவாக இருந்து ஓதியதால், இத்திருக்கோவில் ஓதியமலை- ஓதிமலை என்று பெயர்பெற்றது.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமைவாய்ந்தது இக்கோவில். ஓலைச்சுவடிகள் கூறும் செய்திகளின்படி சேரமான் பெருமான், மனுநீதிச் சோழன், வஜ்ராங்க பாண்டியன் ஆகிய மூவேந்தர்களும் எட்டு புண்ணிய நதிகளிலிருந்து புனிதநீர் எடுத்துவந்து திருக்குட நன்னீராட்டு விழா நடத்திய பெருமைவாய்ந்த தலம். தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள குன்றுகளில் மிகவும் உயரமானது ஓதிமலை. 70 டிகிரி கோணத்தில் செங்குத்தான இம்மலை தனிமலையாக உள்ளது. அடிவாரத்திலிருந்து 1,800 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் ஆலயம் கற்றளியாக உள்ளது. முற்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இவ்வாலயம் 1932-ல் செங்கற்கலவை நீக்கி கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையின்மேல் கருவறையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடன் நிறைநிலையில் அருள்புரிகிறான் முருகன். அது ஏன் ஐந்து தலை? எட்டுக் கரங்கள்?

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாண சிலை செய்வதற்காக பழனிநோக்கிச் சென்ற சமயம் வழிதெரியாமல் போகவே, இம்மலையின் அடிவாரத்தில் ஈசானிய திக்கில் முருகனை வேண்டி யாகம் நடத்தினார். அப்போது இத்தல முருகன் அவருக்கு வழிகாட்டி, இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குமாரபாளையம் வரை உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு முகங்கள், 12 கரங்களுடன் இருக்கும் முருகன், போகருக்கு வழிகாட்ட ஒருமுகம் நான்கு கரங்களுடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடனும்; குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒருமுகம், நான்கு கரங்களு டனும் இருப்பதாக தலபுராணம் சொல்கிறது.

பிரம்மனை சிறையிலடைத்து தானே படைப்புத் தொழிலைத் தொடங்கிய முருகன், பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்ததுபோலவே தானும் ஐந்து முகங்களுடன் இருந்து படைப்புத் தொழிலைச் செய்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம் எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்துயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகப் பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். அதன்படியே விடுவித்தார் முருகன் என்கிறது தலவரலாறு.

அம்பிகை இல்லாத சிவன்பிரம்மாவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோவிலில் இருக்கிறார். உடன் அம்பிகை வரவில்லை. இரும்பறை கைலாசநாதர் கோவில் என்றழைக்கப்படுகின்ற இத்தலத்தில் அம்பிகை சந்நிதி கிடையாது. மற்ற பரிவார மூர்த்திகளும் கிடையாது. விநாயகர், நந்தி பின்னாளில் வைக்கப்பட்டது. அரசமரமும் ஆலமரமும் இத்தலத்திலுள்ளது விசேஷம்.

சிறப்பம்சங்கள்

✷ மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் அருள்புரிகிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும்.

✷ போகர் யாகம் செய்த இடத்தில் தற்போதும் மணல் வெண்ணிறமாக உள்ளது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாகக் கொடுக் கின்றனர்.

✷ ஐந்து முகங்கள், எட்டு கரங்கள் கொண்ட முருகனின் அமைப்பைக் காண்பது அபூர்வம். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக்கொள்வது மிகுந்த சிறப்பு.
✷ மலைக்கோவில் சோமாஸ் கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள் ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசி விஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சந்நிதிகளில் காட்சிதருவது அற்புதம்.

பஞ்சமுக முருகனின் ஆதிபிரம்ம சொரூபம், இருபத்தியெட்டு சிவாகமங்களிலும், குமார தந்திரத்திலும், சிற்ப சாஸ்திரத்திலும் விளக்கப்படாத அற்புதத் திருமேனியாகும்.

✷ ஞானமலை என்னும் ஓதியங்கிரி பெருமான் அருளும் இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை வரம்கேட்டல் என்கின்றனர். இல்லறம், தொழில், திருமணம், வியாபாரம், விவசாயம் இன்னும் பிற சுபகாரியங்கள் நடந்தேறிட வெள்ளை அரளி, செவ்வரளி மலர்களை இறைவன் திருமுகத்தில் வைத்து பூக்கேட்டல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்திபெற்றது.

பெரும் பதவி வேண்டுபவர்கள், பெரும் பிரச்சினை உள்ளவர்கள், வம்பு, வழக்குகளில் சிக்கி மீளாமல் உள்ளவர்கள் ஓதிமலை முருகனையும், பழநிமலை முருகனையும் வணங்கி வழிபாடுகள் மேற்கொண்டால் சாதகமான வெற்றிகள் கிட்டும். காசிக்குச் செல்வபவர்கள் ராமேஸ்வரம் சென்றால்தான் அதன்பலன் பூர்த்தியடையும் என்பார்கள். அதுபோல ஓதிமலையாண்டவர் தரிசனத்திற்குப்பின் பழநி மலையாண்டவரை தரிசித்தால்தான் அதன் பலன் பூர்த்தியாகும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர்.

கோவில் அமைப்பு

மலையைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பசுமையான வயல்வெளிகளுடன் ஓதிமலை அமைந்துள்ளது. அடி வாரத்திலுள்ள விநாயகரை வணங்கிவிட்டு சற்று சிரமப்பட்டு நடந்துதான் படிகள் ஏறவேண்டும். 300 படிகளுக்கு ஒன்று என்ற கணக்கில் இளைப்பாறும் மண்டபம் உள்ளது. 1,800 படிகள் கடந்து மேலே சென்றால் காவல் தெய்வமாக தம்புராட்டி அம்மன் மேற்கு நோக்கியும், அவளுக்கெதிரே இடும்பன், கடம்பன் சந்நிதி கிழக்கு நோக்கியபடியும், அதற்கடுத்து அக்னி மூலையில் மடப்பள்ளியும் உள்ளது. மேலே தலவிருட்சம் ஓதிமரமும் சுனை தீர்த்தமும் உள்ளது. 15 படிகள் வலப்புறம் கீழே இறங்கினால் ராஜராஜேஸ்வரியுடன் சப்தமாதர்கள் சந்நிதியும், நாகர் சந்நிதியும் உள்ளது. மூலஸ்தானத்துக்குச் சென்றால் இந்திர மயில்வாகனமும் சுவாமி பாதமும் உள்ளது.

அழகுக்கு அழகுசேர்க்கும் விதமாக பஞ்சமுகத்துடன் ஓதிமலையாண்டவர் அருள்புரிகிறார். உற்சவர் கல்யாண சுப்ரமணியர் கருவறையில் வீற்றிருக்கிறார்.

திங்கள், செவ்வாய், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும். மற்றபடி முருகனுக்குரிய சிறப்பு நாட்களில், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் திறந்திருக்கும். தைப்பூசத்தில் ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். மற்றபடி வேறு நாட்களில் செல்ல விரும்புவோர் ஆலய அர்ச்சகரிடம் தொடர்புகொண்டு செல்லலாம்.

ஆதிகாலத்திலிருந்தே திதிகொடுப்பது, தர்ப்பணம் செய்வது விடுபட்டிருந்தாலும் சரி; வேண்டுதல்கள் நிறைவேற்றாமல் விடுபட்டிருந்தாலும் சரி; குலதெய்வங்கள் தெரியாமல் இருந்தாலும் சரி; கிரக தோஷங்கள் எதுவாயிருந்தாலும் சரி; எந்த ரூபத்திலும் தீயசக்திகள் வந்தாலும் சரி- அவற்றை ஓடஓட விரட்டி வாழ்விலே வெற்றிகள் குவிய, வருகிற தைப்பூச பிரம்மோற்சவ விழாவில், தைப்பூசத் திருநாளான 24-1-2016 அன்று ஓதிமலை முருகனுக்கு வாசமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்து ஒருமனதாக வழிபடுவோம்; வளம் பெறுவோம்.

ஆலயத் தொடர்புக்கு:
சுவாமிநாதன் (எ) கார்த்திகேய சிவம் குருக்கள்,
ஓதிமலை ரோடு,
புஞ்சைப்புளியம்பட்டி (வழி),
இரும்பறை
அஞ்சல்- 638459.
மேட்டுப்பாளையம் வட்டம்,
கோவை மாவட்டம்.
அலைபேசி: 98430 44344

அமைவிடம்: கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 48 கிலோமீட்டர் தூரத்தில் புளியம்பட்டி சென்று, அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் சென்றால் இரும்பறையை அடையலாம். பஸ் வசதி உண்டு. அன்னூரிலிருந்தும் மேட்டுப்பாளையத்திலிருந்தும் டவுன் பஸ் வசதி உண்டு.

புகைப்படங்கள்: போட்டோ கருணா


தைப்பூசம்- 24-1-2016
எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்

தைப்பூசம் என்றாலே முருகன் கோவில்களிலெல்லாம் பக்தி ரசம் பெருகும். ஆறுமுகனின் அழகிலும் கருணையிலும் கரைந்துருகுவார்கள். வள்ளல் பெருமான் காட்டியருளிய ஜோதி தரிசனமும் பிரசித்தம். அதுபோல பெருமாள் கோவிலில் இருக்கிறதா?

கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை உள்ளது. இத்திருத்தலத் திற்கு சார க்ஷேத்திரம், வளநகர் ஆகிய பெயர்களும் உண்டு. வடக்கே முடிகொண்டான் ஆற்றுக்கும், தெற்கே குடமுருட்டி ஆற்றுக்கும் இடையே பரந்த நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது.

நான்கு வேதங்களையும் நமக்கு அருளியவர் ஸ்ரீமந் நாராயணன். வேதத்தின் மூலம்தான் நாம் முன்ஜென்ம வினைகளைக் கரைத்துக்கொண்டிருக்கிறோம். வேத கோஷங்களின் மூலம்தான் இறைவனைக் காணமுடியும். அப்படிப்பட்ட வேதத்துக்கும் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தது. ஒரு கல்ப காலத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது, வேதங்களும் அழிந்து போய்விடும் நிலையிலிருந்தன.

அதுகுறித்து மகாவிஷ்ணு யோசித்தபோது, “திருச்சேறைத் திருத்தலத்திலுள்ள மண்ணைக் கொண்டு செய்த பானையில் வேதங்களை வைத்து மூடிவிட்டால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வேதம் அழியாது’ என்று பிரம்மதேவன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குச் சொல்ல, அவரே சாரநாதப் பெருமாளாக அவதாரம் செய்து, திருச்சேறை வந்து பானை தயாரித்து, அதில் வேதத்தை வைத்துக் காப்பாற்றினார் என்கிறது தல புராணம்.

இத்தகைய அதிசய சம்பவம் நடந்த இந்தத் தலம் பஞ்சசார க்ஷேத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது. இக்கோவிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடுகளுடன் தொண்ணூறு அடி உயரம் கொண்டது. ஏழு நிலைகளுடன் விளங்குவது. மூலவர் திருநாமம் சாரநாதப் பெருமாள்; தாயார் சார நாயகி. விமானம் சாரவிமானம். சார புஷ்கரணி காவிரிக்குப் பிரத்யட்சமாகத் திகழ்கிறது.

முற்காலத்தில் வராகமாய் அவதரித்து உலகை எடுத்துக் காத்த பெருமாளே, திருச்சேறையில் சாரநாதப் பெருமாளாகவும் அவதரித்துள்ளார் என்கிறது பிரபந்தம்.

திருமங்கை ஆழ்வார் இக்கோவிலைப் பற்றி பதின் மூன்று பாசுரங்கள் பாடியிருக்கிறார். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம்.

ஒருமுறை காவிரியானவள் தனக்கு கங்கையைவிட அதிக பெருமை வேண்டுமென்று, சார புஷ்கரணியின் மேற்கரையில் அரச மரத்தடியில் அமர்ந்து, சாரநாதப் பெருமாளை வேண்டி கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்துக்கு மகிழ்ந்த சாரநாதப் பெருமாள், கருட வாகனத்தில் பூமாதேவி, நீளாதேவி, சாரநாயகி, மகாலட்சுமி, ஸ்ரீதேவி சகிதம் வந்து தரிசனம் தந்து, காவிரி கேட்ட வரத்தை அளித்தார். காவிரி அன்னைக்கு இறைவன் வரமருளிய நாள் தைப்பூசம்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாத பூச நட்சத்திரத்தில், சாரநாதப் பெருமாள் ஐந்து தேவிகளுடன் தரிசனம் அளிக்கிறார். இதைக் காண்பது மகாமகப் புண்ணியத்திற்கு ஒப்பாகும். இத்தரிசனம் கண்டு, சார புஷ்கரணியில் தைப்பூசத்தன்று புனித நீராடுவது மிகவும் புண்ணியத்தை அளிப்பதாகும்.

தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோவில் இதுதான்.


தைப்பூசம் [24/01/2016]
——————————–

 

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும்.
இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தை மாதம் பூச நட்சத்திரத்தன்று, உலகெங்கும் உள்ள முருகப் பெருமான் ஆலயத்தில் ‘ஓம்’ என்ற பிரணவத்தின் பொருளைப் போதித்த முருகப் பெருமானை வழிபட்டால், சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு.
அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையை அறிந்து, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும், ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம். அந்த அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் வருகிறது.
அந்த தைப்பூச திருநாளில் முருகப் பெருமானை கொண்டாடுவதற்கு காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். ‘வேலை வணங்குவதே வேலை’ எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். நடந்து செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.
பன்னிரு கரத்தாலும் அவன் அள்ளிக் கொடுப்பதால்தான், அவன் ‘வள்ளல்’ என்று பெயர் பெறுகிறான். பூசம் நட்சத்திரமன்று தான் தாய் உமையவள் முருகனிடம் சக்திவேல் கொடுத்தாள். அந்த வேலால் சூரபத்தமனை வென்று அவனை சேவலும், மயிலுமாக மாற்றிய பெருமை முருகப்பெருமானுக்கு உண்டு.
பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். நாளைய தினம் முழு நாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

 

 

>> கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும் & விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? <<

முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்விரதம் இந்த வருடம் 12.11.2015 வியாழக்கிழமை ஆரம்பமாகி ஐந்தாவது தினமான 16.11.2015 திங்கட்கிழமை அன்று சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுவதாக சோதிடம் கணிக்கின்றது.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

அனாதியாகவே “செம்பில் களிம்பு போன்று” ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

*** வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? ***

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.

நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

- வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

சென்ற இதழ் தொடர்ச்சி…

ஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியை “மாபெருந்தேவி’ என்றழைத்து மூன்று சிறப்புகளைச் சேர்க்கிறார். தேவி என்றால் மனைவி. அதாவது பாண்டியனின் மனைவியாக இருந்து, தன் கணவனின் நோய்நீக்க ஞானசம்பந்தரை வரவழைத்து, சம்பந்தரின் தோற்றத்தைக் கண்டு, “இந்த பாலகனுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ’ என்று கலங்கிநின்ற கருணையினால் அவள் பெருந்தேவி. அதுமட்டுமல்ல; தன் கணவன் மீண்டும் சைவம் சார்ந்து ஐந்தெழுத்து ஓதி நன்னெறி சாரவும், அதன்மூலம் நாட்டுமக்களும் நலம்பெற எண்ணியதால் மாபெரும் தேவி. அதாவது மற்றவரின் உடலைப்பற்றி கவலைப்படுகிறார்; உள்ளத்தைப்பற்றி கவலைப்படுகிறார்; ஆன்மாவைப் பற்றி கவலைப்படுகிறார்.

எனவேதான் மங்கையர்க்கரசியை மாபெருந்தேவி என்கிறார். இந்த ஞானசம்பந்தர்தான் முதலில் பெண்மையை இவ்வாறு உயர்த்திக்கூறுகிறார்.

ஒரு மனைவியின் கடமை தன் கணவனை நன்னெறியில் உயர்த்துவதே என்னும் இந்தக் கருத்தை, திருநீலகண்ட நாயனார், திருநீலநக்க நாயனார் போன்றோரின் வரலாறுகளில்- அவர்களின் மனைவியின் வாயிலாக மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறார் சேக்கிழார்.

திருநீலகண்ட நாயனாரின் மனைவி ஒரு சாதாரண இல்லத்தரசி; அவ்வளவுதான். திருநீலகண்டர் கொஞ்சம் உல்லாசப் பேர்வழி.

கோவிலில் சாமிக்குப் போடப்படும் மாலையைப் பாருங்கள். ஆண் தெய்வங்களுக்குப் போடப்படும் மாலை ஒருவிதமாக இருக்கும்; பெண் தெய்வங்களுக்கு போடப்படும் மாலை வேறுவிதமாக இருக்கும். அதாவது பெண் தெய்வங்களுக்கான மாலையின் இருமுனைகள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். திருத்தணி முருகனைப் பாருங்கள். இணைக்காமல் அப்படியும் இப்படியுமாகப் போட்டிருப்பார்கள்.

ஏனென்றால் ஆண்கள் சற்று அப்படி… இப்படி… அப்படித்தான் திருநீலகண்ட நாயனாரும் அயலிடத்தில் உறவு வைத்திருந்தார். “இன்பத் துறையில் எளியரானார்’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். அதாவது சிற்றின்பத்தில் மிக நாட்டம் கொண்டுவிட்டார்.

இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதனும் பலவீனம் இல்லாமல் இருக்கவேமுடியாது. அவர் மிகவும் நல்லவர் என்றால், வெளியே தெரியாமல் இருக்கிறார் என்று பொருள். தொண்ணூறு சதவிகிதம் அப்படித்தான். பத்து சதவிகிதத்தினர் தப்பினால் உண்டு. நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதென்றால், அது நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். பலவீனத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக்கூடாது. இதை எப்படி நாம் புரிந்துகொள்வது? வாரியார் சுவாமிகள் சொல்லுவார்… “12பி பஸ்ஸில் நீ ஏறினா தேனாம்பேட்டைக்குப் போகலாம். 12பி உன்மேல ஏறினா கிருஷ்ணாம்பேட்டைக்குப் போகலாம்’ என்று சொல்வார். சென்னை கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் சுடுகாடு உள்ளது. அதுபோல பலவீனம் என்பது நமது கட்டுப்பாட்டில் இருந்தால் தப்பித்துவிடலாம். அதன் பிடியில் நாம் இருந்தால் அழிவுதான்.

ஒருவர் பஸ்ஸில் போக சில்லரை தேவைப்படுகிறது. அதற்காக அருகிலிருந்த ஓட்டலில் போய் அல்வா சாப்பிடுகிறார். அடுத்தமுறை போகும்போது அல்வா சாப்பிடத் தோன்றுகிறது. பிறகு இவரைப் பார்த்தாலே ஓட்டல் பணியாள் அல்வாவைக் கொண்டுவந்து வைத்துவிடும் அளவுக்கு பழகிவிடுகிறார். முதல் நாள் அல்வாவை இவர் சாப்பிட்டார். இப்போது அல்வா இவரை சாப்பிட்டுவிட்டது. இதுபோல பலவீனம் என்பது மெதுவாகத் தொடங்கும். பின் அது நம்மை அடிமைப்படுத்திவிடும்.

அப்படி பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட திருநீலகண்ட நாயனார், ஒருநாள் அயலாள் இல்லத்துக்குப் போய்விட்டு திரும்பவருகிறார். இதை அவர் மனைவி கவனித்துவிட்டாள். இந்த இடத்தில் ஆண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ஆண்கள் தவறுசெய்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அதை மனைவி நிச்சயம் கண்டு பிடித்துவிடுவாள். யாரும் சொல்லவேண்டியதில்லை. ஆணின் விழிகளே அதைக் காட்டிக்கொடுத்துவிடும். எந்த ஆணும் தவறு செய்துவிட்டு வந்து தாயை ஏமாற்றலாம்; தமக்கையை ஏமாற்றலாம்; மகளையும் ஏமாற்றலாம். ஆனால் மனைவியை ஏமாற்றமுடியாது. திருநீலகண்ட நாயனார் உள்ளே நுழைந்ததுமே அவர் மனைவி எதுவும் பேசாமல் உள்ளறைக்குச் சென்றுவிட்டாள்.

அன்றிலிருந்து அவள் விலகியே இருந்தாள். நாயனார் சில தினங்கள் பொறுத்துப் பார்த்தார். அவள் சமாதானமாவதாகத் தெரியவில்லை. “நம் மனைவிதானே… நாம் தொட்டால் மறுக்கவாமுடியும்?’ என்றெண்ணிய நாயனார் அவளைத் தீண்டச் சென்றார். பின்வாங்கிச் சென்ற அவளை சுவர் தடுத்தது. அதற்குமேல் செல்லமுடியாது. என்ன செய்வது? “என்னைத் தொட்டீர்களானால் உங்கள் தலை வெடித்துவிடும்’ என்று கணவனைப் பார்த்து சொல்லமுடியுமா? வேறுவழியில்லாமல் அவள், “எம்மைத் தீண்டுவீராகில்…’ என்று சொல்லி வாக்கியத்தை முடிக்காமல் “திருநீலகண்டம்’ என்கிறாள்.

அதைக்கேட்ட நீலகண்ட நாயனார் அப்படியே அதிர்ச்சியடைந்து நின்றவர், மெல்ல அங்கிருந்து அகன்றார். “நீலகண்டம்’ என்று சொன்னதும் அவர் ஏன் விலகவேண்டும்?

பெண்கள் மந்திர உபதேசத்தை பிற ஆண்களிடமிருந்து பெறக்கூடாது என்ற நியதி இருந்தது. அவள் தன் கணவனிடமிருந்தே உபதேசம் பெறவேண்டும். கணவன் ஏதாவதொரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்றுவந்து தன் மனைவிக்கு உபதேசிப்பான். மாதா- பிதா- குரு- தெய்வம் என்பது ஆண்களுக்கு. பெண்கள் குரு என்னும் ஸ்தானத்தில் கணவனை வைக்கவேண்டும். பெண்கள் தேவையில்லாமல் சாமியார்கள் இருக்கும் இடத்துக்கெல்லாம் போகக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. சாஸ்திரம் சொல்கிறது. அப்படி திருநீலகண்டம் என்னும் சிவபெருமானின் திருநாம உபதேசத்தை கணவனிடம் பெற்றிருந் தாள் அவள். அதை சொன்னவுடன்தான் நாயனார் நின்றுவிட்டார்.

இங்கே வேறொன்றையும் கவனிக்கவேண்டும். “எம்மைத் தீண்டுவீராகில்’ என்று சொல்லுகிறாள். “என்னை’ என்று சொல்லவில்லை. “எம்மை’ என்பது பன்மைச் சிறப்பு சொல். “நாம், நம்மை, எம்மை’ என்று யார் சொல்லுவார்? அது சிவனுடைய வாக்கு. இந்த அம்மாள் திகைத்துப்போய் என்ன சொல்வதென்று புரியாமல் வாய்திறக்க, அவளுக்குள் புகுந்த சிவபெருமான் அருளிய வாக்கே அது.

அதுசரி; அவள் தன் கணவனை ஏன் தொட அனுமதிக்கவில்லை. தன் கணவன் இன்னொரு பெண்ணைத் தீண்டியவர். அந்தப் பெண்ணோ பல ஆடவரால் தீண்டப்பெற்றவள். பல ஆடவர் தொட்ட பெண்ணைத் தீண்டிய கணவன் தன்னைத் தீண்டினால், அது பிற ஆடவர் தன்னைத் தொடுவதற்கு சமம் என்பதால் அவள் அனுமதிக்க வில்லை. எத்தகைய உயரிய மனம் பாருங்கள்.

அதுமுதல் நாயனார் தன் மனைவியருகே செல்வதில்லை. அப்படியே அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். எப்படி வாழ்கிறார்கள்? இந்த விஷயம் பக்கத்து வீட்டுக்குக்கூட தெரியாமல் வாழ்கிறார்கள். அதுவல்லவா குடும்பம்! இன்று நம்வீட்டு விஷயம் தெருவுக்குள் நுழையும்போது முதல் வீட்டுக்கே தெரிகிறதே. இங்கே ஒரு விஷயம் சொல்கிறேன். கணவன்- மனைவிக்குள் சண்டை வருவது இயல்பு. ஆனால் அது யாருக்குத் தெரியக்கூடாதென்றால் உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது. நாம் சரியாக குடும்பம் நடத்துவதற்கு அர்த்தம் என்னவென்றால்,
கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது. எப்போது ஒரு வீட்டில் தாய்க்கும் தந்தைக்கும் சண்டை என்று பிள்ளைகளுக்குத் தெரிகிறதோ, அவர்கள் நம்பிக்கை குலைந்து போவார்கள். எதிர்கால வாழ்வு இருண்டுவிட்டதாக பயப்படுவார்கள். உங்கள் தாம்பத்தியம் எப்படி ரகசியமானதோ, அப்படி உங்கள் சண்டையும் ரகசியமானது.

இங்கே நாயனாரின் மனைவி, தனக்கும் கணவனுக்கும் உள்ள இடைவெளி பற்றி அடுத்த வீட்டுக்குக்கூட தெரியாமல் வாழ்கிறாள். இதுதான் பெண்மையின் சிறப்பு. நம் வீட்டுக்குறையை அடுத்த வீட்டில் சொல்லக்கூடாது. ஆலோசனை கேட்கக்கூடாது. இறுதியாக சிவபெருமான் வேறு வடிவில் வந்து நாயனாரை வம்புக்கிழுக்கிறார்.

“நீ பொய்யன்’ என்று கண்டபடி ஏசுகிறார்.

நாயனார் தவறு செய்யாவிட்டாலும் அதை மௌனமாகக் கேட்டுக்கொண்டு நிற்கிறார்.

சில நேரங்களில் நமக்கே அந்த அனுபவம் நேர்ந்திருக்கும். நாம் தவறு செய்திருக்க மாட்டோம். ஆனால் சம்பந்தமில்லாமல் நம்மைத் திட்டுவார்கள். “நாம் எதுவும் செய்யவில்லையே. இப்படி திட்டுகிறார்களே’ என்று கோபம்கூட வரும். இதற்குக் காரணம் என்ன? யாருக்கும் தெரியாமல் ஒரு தவறை செய்துவிட்டு நாம் தப்பித்திருக்கலாம். அப்போது வாங்கவேண்டிய திட்டோ தண்டனையோ இப்போது தவறு செய்யாவிட்டாலும் வந்துசேர்கிறது. தவறு செய்யாமல் நாம் திட்டுவாங்க நேர்கிறதென்றால் அது அதற்கானதல்ல. எப்போதோ செய்த தவறு நேர் செய்யப்படுகிறது. இதுதான் வாழ்க்கை. கணக்கு எப்போதுமே தவறாது.

நாயனாரின் மனைவி பார்க்கிறாள். தவறு செய்யாத தன் கணவன் ஏச்சுக்கு ஆளாவதை அவளால் சகிக்கமுடியவில்லை. “எனக்கு துரோகம் செய்த உனக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்’ என்று சொல்லும் பெண்களை நாம் காண்கிறோம்.

நாயனாரின் மனைவியோ அவரை இக்கட்டிலிருந்து விடுவிக்க எண்ணுகிறாள்.

ஆனால் என்ன வழி? அதை சிவபெருமான் சொல்லுகிறார். “நீ தவறு செய்யாதவர் என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் இறங்கி சத்தியம் செய்’ என்கிறார்.

நாயனார் திகைக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் தொடுவதில்லையே. அப்போது அந்த சிக்கலைத் தீர்க்க முன்வருகிறாள் அவள். ஒரு குச்சியை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொண்டு சத்தியம் செய்கிறார்கள். சிவபெருமான் அவர்களுக்கு காட்சிதந்து அருளுவதாக புராணம் கூறுகிறது. இதில் திருநீலகண்ட நாயனாரின் மனைவியுடைய மாண்பு தலைநிமிர்ந்து நிற்கிறது. வேறொரு இல்லத்தரசியின் தனிச்சிறப்பை தொடர்ந்து காண்போம்.

(அடுத்த இதழிலும்…)

———————————————————————————————————————–எஸ்.பி. சேகர்

திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தின் நடுவில், மணி முத்தா நதியின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் எனும் பழமலைநாதரின் ஆலயம். ஐந்துநிலை கோபுரங் களுடன்கூடிய இந்த பழமையான ஆலயத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை சமேதராக இறைவன் அருள்பாலிக்கிறார். இவ்வாலய இறைவனை அடியார்கள் பலர் பாடியுள்ளனர். அதில் சுந்தரர் பாடியது வியப்பூட்டுவது.

இறை தரிசனத்துக்காக ஊர் ஊராகச் சென்றுவந்த சுந்தரர், விருத்தாசலத்துக்கும் வந்து பழமலைநாதரை தரிசித்துவிட்டு, தனைமறந்த களிப்பேருவகையில் தெற்கே திருவாரூர் நோக்கிக் கிளம்பிவிட் டாராம். தன்மேல் பாடல் புனையாமல் கிளம்பிய சுந்தரரின் செயலைக் கண்ட இறைவன், தன் புதல்வனான முருகப்பெருமானை அழைத்து விவரம் சொல்லி, சுந்தரரை திரும்பக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். முருகனும் மயிலேறிப் பறந்து, காட்டு ஓடையொன்றினருகே சுந்தரரை மடக்கி, இறைவன் முன்பு கொண்டுவந்து நிறுத்தினார். அப்போதுதான் சுந்தரர் இறை தரிசனம் முடித்த உவகையில் பதிகம் பாடாமல் சென்றதை உணர்ந்து வருந்தினார்.

உடனே “நஞ்சிடை’ என்று தொடங்கி “மெய்யை முற்றப்பொடி’ என முடியும் திருப்பதிகம் பாடி ஈசனுள்ளம் குளிரவைத்தார்.

சுந்தரரின் வறுமையை அறிந்திருந்த ஈசன், அவரது பாடலுக்கு 12 ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக அளித்தாராம். அப்போது சுந்தரர், “”அய்யனே! நான் திருவாரூர் செல்கிறேன். வழியில் கள்வர் பயமுண்டு.

எனவே நான் திருவாரூர் சென்றவுடன் இந்தப் பொற்காசுகள் கிடைக்கும்படி செய்தால் அகமகிழ்வேன்” என்று சொன்னார். அதை ஏற்றுக்கொண்ட ஈசன், “”சுந்தரா, இந்தப் பொற்காசுகளை இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டுவிட்டுச் செல். திருவாரூரில் கமலாலயக் குளத்தில் அது உனக்கு மீண்டும் கிடைக்கும்” என்று அருளினார்.

அவ்வண்ணமே சுந்தரரும் திருவாரூர் சென்று, கமலாலயக் குளத்திலிருந்த அந்தப் பொற்காசுகளைத் திரும்ப எடுத்து தன் வறுமை நீங்கப்பெற்றார்.

எங்கேயோ பணம் செலுத்தி, எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் இன்றைய வங்கிகளின் ஏ.டி.எம். உத்தியை, அன்றே தம் திருவிளையாடல் வழி நிகழ்த்திக்காட்டிய இறைவனின் லீலையை என்னவென்பது!

சுந்தரரை திரும்ப அழைத்துவந்து, தந்தை பாடல் பெறுவதற்கு உதவிய குமரக் கடவுள், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகிலேயே தெற்கே வேடப்பராகவும், மேற்கே மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பராகவும் கோவில் கொண்டு மக்கள் குறை தீர்த்துவருகிறான். இந்த கொளஞ்சியப்பரை நாடி தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து தங்கள் குறைநீங்கிச் செல்கின்றனர்.

கோவில் குருக்களில் ஒருவர் மணிகண்ட குருக்கள், “”கொளஞ்சியப்பரின் அற்புதங் களைப் பேசி விவரிக்க முடியாது. இங்குவரும் பக்தர்கள் முருகனிடம் மட்டுமின்றி, அவரது தூது வரான முனியப்பரின் முன்பும் தங்கள் குறைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்து, நிவர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டு போய்விடுவார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் பக்தர்களின் குறைகளும் காணாமல் போய்விடும். இவ்வாலயத்து இறைவனின் மகிமை களை நான் சொல்வதைவிட நீங்களே பக்தர்களிடம் கேட்டறிவது இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

சென்னை போரூரிலிருந்து கொளஞ்சியப்பரை தரிசிக்கவந்த சிவபிரபு என்பவரை நாம் முதலில் அணுகினோம். முன்னாள் சேர்மனாக இருந்த அவர், படித்துமுடித்து வேலைக்காகக் காத்திருந்த தன் மகனுக்காக கொளஞ்சியப்பரிடம் முறையிட்டு அர்ச்சனை செய்தாராம். விரைவிலேயே அவர் மகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்த அற்புதத்தைக் கூறினார். “”என் மகனின் முதல் மாத சம்பளத்தை இந்தக் கோவிலின் ராஜகோபுரப் பணிக்காகக் கொடுத்துவிட்டோம். அதோடு எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொளஞ்சியப்பரின் மகத்துவங்களைச் சொல்லி இங்கே அனுப்பிவைக்கிறோம்” என்கிறார் உற்சாகமாய். அவர் மனைவியும் அதை ஆமோதித்தார்.

திண்டிவனம் அருகேயுள்ள கோரம்பட்டு ஊரைச் சேர்ந்த கண்ணம்மாளின் பிரச்சினை வேறுமாதிரி யானது. கணவர் நடராஜனுக்கு திடீரென கால்முட்டி வீங்கிப்போனது. கூடவே கண் பார்வையும் மங்கலானது. மருத்துவர்களிடம் உரிய பதிலின்றிப் போகவே, மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவரான கொளஞ்சியப்பரிடம் கணவனை அழைத்துவந்து உளமுருகி வேண்டினார். சில நாட்களிலேயே கால்வீக்கம் வற்றி, கண்பார்வையும் பழைய நிலைக்குத் திரும் பியது. இந்தமுறை அவர் தனது சுகக்குறைவைப் போக்கும்படி மணவாளநல்லூர் நாதனிடம் வந்திருக்கிறார். “”என் புருஷனை சுகப்படுத்தியது மாதிரியே எனக்கும் நோய் நீக்கி சுகம் தருவார் இந்த கொளஞ்சியப்பர்!” என நம்பிக்கையுடன் சொல்கிறார் கண்ணம்மாள்.

விக்கிரவாண்டி ஜெயலட்சுமி, கை- கால் செயலிழந்துபோன தனது அண்ணனை இங்கே கொண்டுவந்து தங்கவைத்த பிறகு, கையூன்றி எழுந்து நடக்கும்படிச் செய்த இறைவனின் கருணையைச் சொல்லி, தற்போது இங்கே அடிக்கடி வந்து செல்வதாகக் கூறுகிறார்.

சரி; நோய்நொடி மட்டும்தான் தீர்ப்பாரா இவ்வாலய இறைவன்? இல்லை; நலிவடைந்த தொழிலை முன்னேற்றம் காணவைத்தது கொளஞ்சியப்பரின் அருள்தான் என்கிறார் கடலூர் சம்பத். தனது டிரைவிங் ஸ்கூல் நலிவடையும் நிலையில் கொளஞ்சியப்பரை தரிசித்து முறையிட்டு, அவர் அருளால் தொழிலில் முன்னேற்றம் கண்ட அவர், இப்போது தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடிவருகிறார்.

“”நல்ல சம்பந்தம் கிடைக்கவும், மகளுக்கு நல்வாழ்வு அமையவும் கொளஞ்சி யப்பரின் ஆசீர்வாதம் வேண்டி வந்தோம்” என்கிறார் அவர்.

தன்னை நாடி வருபவர்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் பேதமின் றித் தீர்க்கும் பெருங்கருணை கொளஞ்சியப்பருடையது. கடலூர் பாலகிருஷ்ணனின் மகள் ரம்யாவின் குழந்தையில்லாக் குறையைத் தீர்த்தது, மற்றொருவருக்கு குடும்பப் பகையைத் தீர்த்தது, வேறொருவருக்கு பிடித்த உயர்கல்விப் படிப்புக்கு இடம் கிடைக்க அருளியது என நீண்டபடியே செல்கிறது கொளஞ்சியப்பரின் அற்புதங் கள்.

அற்புதங்கள் பலவற்றைக் கேட்டு ஆச்சரியத்துடன் திரும்பிய நம்மிடம், “”இங்கே பங்குனி உத்திரத் திருவிழாவும், வைகாசி விசாகத்தை யொட்டி நடைபெறும் பத்து நாட்கள் உற்சவமும் விசேஷமானவை. அப்போது கொளஞ்சியப்பரின் அருள்வேண்டியும், அவரருளால் நிறைவேறிய காரியங்களுக்கு நன்றி தெரிவித்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். பலர் பால்குடமும் காவடியும் எடுத்து தம் பக்தியை வெளிப்படுத்துவார்கள். லட்சார்ச்சனை, பூஜையென கோவிலே உற்சாகம்கொள்ளும். கொளஞ்சியப்பரும் குறையின்றி அருளி பக்தர்கள் நிறைந்த மனதுடன் செல்ல துணைநிற்பார்” என்கிறார்கள் கோவில் குருக்களான உமாபதி, வி. மணிகண் டன், எ. மணிகண்டன், ஓதுவார் சங்கரன் ஆகியோர்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே சேலம் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் ஆலயம். பேருந்து முதல் அனைத்துவித மான போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

ரு வீட்டுத் திண்ணையில் சிலர் அமர்ந்து கோஷ்டியாக வேதம் ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது இறை சிந்தனையில் தோய்ந்தவராய் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தார் மாபெரும் சித்தரான போகர். நடந்து நடந்து கால்கள் வலிலிக் கவே, அந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

போகருக்கு தாகம் எடுத்தது. குடிப்பதற்கு சிறிது தண்ணீர் தரமுடியுமா என்று வேதம் ஓதிக் கொண்டிருந்தவர்களைக் கேட்டார்.

அவர்கள் மிக அலட்சியமாக அவரைப் பார்த்தார்கள். “எங்களுக்கு சமமாக நீ இதே திண்ணையில் வந்து அமர்வதாவது’ என்று எச்சரித்தது அவர்களின் பார்வை. “வேதம் ஓதுபவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்குத் தாங்கள் தண்ணீரோ வேறு உணவுப் பொருளோ தருவதில்லை’ என்று கண்டிப்பாகக் கூறினார்கள் அவர்கள்.

போகர் திகைத்தார். “தாகம், பசி போன்றவை எல்லா மனிதர் களுக்குமுள்ள பொதுவான உணர்வுகள்தானே? மனிதனை மனிதனாகப் பார்க்க இவர்கள் மறுக்கிறார்களே? ஜாதி அகங்காரம் அல்லவா இவர்களை இவ்விதம் பேசத் தூண்டுகிறது? மனித சமுதாயம் ஏன் இன்னும் இத்தனை குறுகிய மனப்பான்மையுடன் திகழ்கிறது?’

அவர் வருத்தமடைந்தார்.

அப்போது அங்கே வெள்ளை நிறத் தில் ஒரு பூனை ஓடி வந்தது. “”என்னருகே வா!” என்று பூனையை அன்போடு அழைத்தார். என்ன ஆச்சரியம்! அது மிகுந்த சொந்தத்தோடு அவர் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டது.

அதன் காதில் மெல்லிலிய குரலிலில் ஏதோ சொன்னார் போகர். அடுத்த கணம் அந்தப் பூனை வாய்திறந்து கணீரென்று வேதம் ஓத ஆரம்பித்தது!

வேதம் ஓதியவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். “ஒரு பூனையை வேதம் ஓதச் செய்துவிட்டாரே இவர்!

நிச்சயம் இவர் மிகப்பெரிய சித்தராகத் தான் இருக்கவேண்டும். இவரைப் போன்ற மகானுக்குத் தண்ணீர் தராதிருந்தால் அது பாவமல்லவா?’ அவர்கள் பரபரப் படைந்தார்கள்.

அவர்கள் அவருக்குத் தண்ணீர் தந்தது மட்டுமல்ல; அவரின் காலடியில் விழுந்து தாங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து மன்னிப்பும் கேட்டார்கள். போகர் உடனடியாக அவர்களை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டார். மனிதர்கள் தவறுவது சகஜம். தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அவர்கள் தவறுசெய்த பாவத்திலிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்று சொல்லிலி, குற்ற உணர்ச்சியால் தவித்த அவர்களை ஆறுதல்படுத்தினார்.

மனிதர்களிடையே ஜாதி உயர்வு- தாழ்வு பார்ப்பது பாவம் என்பதையும்; வேதம் ஓதுவதால் மட்டுமே ஒருவர் உயர்ந்தவர் ஆகிவிடமாட்டார் என்பதையும்; வேத நெறியின்படி நடப்பவரே உயர்ந்தவர் என்பதையும் போகர் தெளிவுபட அறிவித்தார்.

“”வேதம் ஓதினாலேயே உயர்ந்தவர் என்றால் இந்தப் பூனையும் அவர்களுக்கு இணையானது என்று சொல்லமுடியுமா? வேதத்தைத் தொடர்ந்து கேட்கும் ஒரு கிளி, தான் கேட்ட வேதத்தை ஓர் எழுத்துவிடாமல் அப்படியே திருப்பிச் சொல்லக்கூடும். சொன்னதைச் சொல்வதல்லவா கிளிப் பிள்ளையின் குணம்? அதனால் என்ன பயன்? அந்தக் கிளி உயர்ந்ததாகிவிடுமா?

வேதம் அறிவுறுத்தும் “அகம் பிரம் மாஸ்மி, சத்யம் வத, தர்மம் சர!’ போன்ற புனித வாக்கியங்களில் உள்ள உன்னதமான கருத்துகளை அறிந்து அனுசரிப்பதல்லவோ தேவை? வேதத்தில் ஜாதி உயர்வு- தாழ்வு எங்குமே பேசப்படவில்லையே? தொழிலால் வகுக்கப்பட்ட பிரிவில் உயர்வு- தாழ்வு கற்பித்தது மனிதனின் சூழ்ச்சியல்லாமல் வேறென்ன?”

இவ்விதம் போகர் பேசப்பேச, அவர்கள் அவரின் கருத்தாழமிக்க பேச்சில் கட்டுண்டு மயங்கினார்கள். அவர் சொன்ன அத்தனை கருத்துகளையும் ஒப்புக்கொண்டார்கள்.

இறுதியில் தாங்கள் அனைவரும் கடும் வறுமையால் சிரமப்படுவதாகவும்; தங்களின் வறுமை தீர அவர் ஒரு வழி காட்ட வேண்டுமென்றும் அவரை வேண்டிக்கொண்டார்கள்.

போகர் தன்னிடமிருந்த ஆதிரசத்தால் அவர்களின் இல்லங்களிலிருந்த இரும்பை யெல்லாம் ஒருகணத்தில் தங்கமாக்கினார். அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். போகரை வணங்கி நன்றி தெரிவித்தார்கள். அவர்களை வாழ்த்திவிட்டுத் தன்வழியே நடந்தார் போகர். 

மீண்டும் கடும் தவத்தில் ஈடுபட்டார். தவ ஆற்றலிலின் காரணமாக ரசமணிக் குளிகை களை உருவாக்கினார். அந்தக் குளிகைகள், வாயிலிலிட்டுக் கொண்டால் நினைத்ததை எல்லாம் செய்யவல்லவை.

போகருக்கு இரும்பைப் பொன்னாக்கு வது உள்படப் பல்வேறு அற்புதங்களைச் செய்யக்கூடிய ஆதிரசம் மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. தன்வசமிருந்த ஆதிரசம் அவருக்குப் போதவில்லை. ரோமாபுரியில் ஒரு கிணற்றில் ஆதிரசம் அபரிமிதமாக இருப்பதாக ஞான திருஷ்டியால் அறிந்தார். உடனே ரோமாபுரி சென்று அந்த ரசத்தைப் பெற்றுவர விரும்பினார்.

ரசமணிக் குளிகைகளில் ஒன்றை வாயிலிலிட்டுக் கொண்டார். அடுத்த கணம் ரோமாபுரி யில் இருந்தார் அவர்! ஒரு சுரைக்குடுவை நிறைய ஆதிரசத்தை நிரப்பிக்கொண்ட அவர் மீண்டும் வானில் பறந்து தமிழகம் வந்து அகத்தியர் தவம்செய்த பொதிகை மலையில் இறங்கினார். அங்கே தொடர்ந்து தவத்தில் ஈடுபடலானார். தவம் செய்யச் செய்ய அவர் முகம் அளவற்ற பொலிலிவடைந்தது. அவரைச் சுற்றியும் அவர் இருந்த இடத்தைச் சுற்றியும் ஒரு பொன்னொளி பரவியது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் லிலிங்கப் பிரதிஷ்டை செய்ய முயன்று கொண்டிருந்த காலகட்டம் அது. எவ்வளவோ முயற்சி செய்தும் லிலிங்கம் நிலைநிற்கவில்லை. கருவூர்ச் சித்தர் லிலிங்கப் பிரதிஷ்டை செய்ய மிகவும் சிரமப்படுவதாக அறிந்தார் போகர். அவருக்கு உதவ எண்ணினார். ஆனால் தம் தவத்தை இடையே நிறுத்திவிட்டுத் தஞ்சாவூர் வரை செல்ல அவருக்கு விருப்பமில்லை.

லிங்கத்தை எப்படிப் பிரதிஷ்டை செய்வது என்ற விவரத்தைத் தெளிவாக ஓர் ஓலையில் எழுதினார். ஒரு காகத்தை அருகில் அழைத்து அதன் கழுத்தில் அந்த ஓலையைக் கட்டி, “”கருவூராரிடம் கொடுத்து வா” என்று சிறகைத் தடவிக் கொடுத்து அனுப்பினார்.

அந்தக் காகம் அவர் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தது. அந்த ஓலையைக் கழுத்தில் சுமந்த வாறே பறந்து தஞ்சாவூருக்குச் சென்று கருவூராரிடம் அதைக் கொடுத்தது.

ஓலையைப் படித்துப் பார்த்த கருவூரார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எந்த வகையில் பிரதிஷ்டை செய்தால் லிலிங்கம் நிலைபெற்று நிற்கும் என்பதற்கான சூட்சுமம் அந்த ஓலையில் தெளிவாக்கப்பட்டிருந்தது. போகர் சொன்னபடியே லிலிங்கத்தை தஞ்சைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் கருவூரார்.

இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் ஒருசேரத் தரக்கூடிய நாராயண மந்திரத்தை, கோவில் கோபுரத்தின் மேலேறி நின்று அனைவருக்கும் உபதேசித்தாரே ராமானுஜர்? அதுபோன்றதொரு  செயலை போகரும் நிகழ்த்தினார். 

சிவபெருமானான தட்சிணாமூர்த்தி, தன் மனைவி உமையம்மைக்கு அருளிச் செய்த ஞான விளக்கத்தைத் தன் மாணவர்களுக்கு போதிக்கலானார்.

இறைவன் இறைவிக்குச் சொன்ன தத்துவத்தை அனைவருக்கும் போதித்தல் சரியல்ல என மற்ற சித்தர்கள் போகரைக் கண்டித் தார்கள். ஆனால் தாம் செய்த செயலிலில் தவறேதும் இருப்பதாக போகர் கருதவில்லை. சித்தர்கள் அனைவரும் சுவாமி தட்சிணாமூர்த்தியிடம் சென்று போகர் செய்த செயல் குறித்து முறையிட் டார்கள்.

கடவுளான தான் சொன்ன செய்திகளை, அதுவும் அந்தரங்கமாகத் தன் மனைவிக்கு உபதேசித்த செய்திகளை எப்படி அடுத்தவர் களுக்கு போகர் உபதேசிக்கலாம் என்றறிய சிவபெருமான் போகரைத் தன்முன் வரச் சொல்லிலிக் கட்டளையிட்டார். தன்னை தரிசிக்கவந்த போகரிடம் அவரது செயல் குறித்து விளக்கம் கேட்டார். “நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’

என்று சொன்ன கவிஞர் நக்கீரர் பரம்பரை யில் வந்தவர் அல்லவா சித்தர் பாடல்களின் ஆசிரியரான போகர்?

“”ஞானம் எப்போதும் தனியுரிமையல்ல. அது அனைவருக்குமானது. எல்லாரும் பயன்பெறவே அந்த ஞான விளக்கத்தைத் நான் என் மாணவர்களுக்குச் சொன்னேன். அதை நான் அறிந்தும் மாணவர்களுக்கு போதிக் காமல் இருந்தால் அதுதான் குற்றம்!” என போகர் விளக்கம் சொன்னார். அந்த விளக்கம் சிவன் மனதைக் குளிரச்செய்தது.

சிவனே போகரின் செயலை அங்கீகரித்து விட்டதால், போகர் செய்யும் செயல்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்குமென் றும்; அதை இனி யாரும் விமர்சிக்கலாகாது என்றும் மற்ற சித்தர்கள் முடிவெடுத்தார்கள். அதன்பிறகு பிற சித்தர்களிடையே சிவனா லேயே மதிக்கப்படுபவர் என்ற வகையில் போகரின் மதிப்பு பலமடங்கு கூடியது.

சிவனின் அருளைப்பெற்ற போகர், முருகன் குடிகொண்ட பழனி மலையில் அமர்ந்து கடுந்தவம் இயற்றலானார். அவரது உக்கிர மான தவத்தை மெச்சி அவர்முன் தோன்றினான் தமிழ்க் கடவுளான முருகப் பெருமான். ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டு தோகை மயில்மேல் தோன்றிய முருகப் பெருமானின் அற்புதக் காட்சி போகரை ஆன்மிகப் பரவசத்தில் ஆழ்த்தி யது. சித்தர் பாடல்கள் மூலம் தமிழை வளர்த்த போகர் மேல் முருகனுக்கு விசேஷக் கருணை இருந்தது.

பழனியில் நவபாஷாணத்தில் தனக்கு ஒரு சிலை செய்யவேண்டுமென்று கட்டளையிட்ட முருகன், அந்தச் சிலையை எங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் அவருக்கு அருளிவிட்டு மறைந் தான்.

முருகப் பெருமான் சொன்னவாறே நவபாஷாணங்களை இணைத்து ஓர் அழகிய முருகன் சிலையை உருவாக்கினார் போகர். அது முருகன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பின்னர் இறைவனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டு ஊறி வெளிவந்த பஞ்சாமிர்தத்தை மட்டுமே போகர் உணவாக உட்கொண்டார். நவபாஷாண முருகன் சிலையில் பட்டதால் அந்தப் பஞ்சாமிர்தம் போகருக்கு நோயற்ற வாழ்வு தந்தது.

பழனியில் வாழ்ந்த போகர் பக்தி நெறியில் தோய்ந்து வாழ்ந்து எண்ணற்ற சித்தர் பாடல்களை இயற்றி, பழனியிலேயே முக்தியடைந்தார். போகரின் சமாதி பழனி ஆலயத்தின் உட்பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் ஒரு புவனேஸ்வரி அம்மன் சிலையைத் தொடர்ந்து பூஜித்து வந்தார்.

அந்தச் சிலை பழனியில் இப்போதும் உள்ளது. அந்தச் சிலைக்கும் போகரின் சமாதிக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறதென்றும்; இப்போதும் போகர் அதிகாலை வேளைகளில் சுரங்கப் பாதை வழியாக புவனேஸ்வரி அம்மன் இருக்குமிடம் வந்து பூஜை செய்துவிட்டுத் திரும்புகிறார் என்றும் கூறுவதுண்டு.

போகர் இன்றும் வாழ்வதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். சித்தர்களுக்கு அழிவேது? என்றும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்பவர்கள் தானே அவர்கள்? பொன்னுடல் இல்லா விட்டாலும் புகழுடல் கொண்டு அருள் புரிய அவர்கள் எப்போதும் தயாராய் இருக்கிறார்கள். மாபெரும் சித்தரான போகரைத் தியானிப்பவர்களுக்கு நோயற்ற வாழ்வும் இம்மை- மறுமைச் செல்வங்களும் கிட்டுமென்பதில் ஐயமில்லை.

(தொடரும்)

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
மலர்வேள். கை.அரவிந்த்குமார்s Foto
மலர்வேள். கை.அரவிந்த்குமார்s Foto
மலர்வேள். கை.அரவிந்த்குமார்s Foto
மலர்வேள். கை.அரவிந்த்குமார்s Foto

திருவாவினன்குடி (பழனி) குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது . சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.ஆனால் இவை இரண்டுமே மூன்றாவது அறுபடை வீடாக கருதப்படுகின்றது. பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.பழனி மலையிலே அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது. திரு – லட்சுமி ஆ – காமதேனு இனன் – சூரியன் கு – பூமாதேவி டி – அக்கினிதேவன் இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது. தல வரலாறு: நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், “பழம் நீ’ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், “பழநி’ என மருவியது. முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து “பழம் நீ” என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்று ஆகிவிட்டது என்றும் பழனி ஸ்தல புராணம் கூறுகிறது. அமைவிடம் : மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது. மலையின் மகிமை : பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை. திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதி தேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும். பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன. தலப்பெருமை: தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடஅடைக்கலமாவார்கள். இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி’ என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்.”தண்டம்’ என்றால் “கோல்’ அல்லது “அபராதம்’ என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. “இவ்வுலக வாழ்வு நிலையற்றது’ என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு “சோதனைகள்’ என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர். சித்தர் போகர் : இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது. முருகன் கையில் அருணகிரியார்!:மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார். தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். “சர்ப்பவிநாயகர்’ என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் “பாதவிநாயகர்’ இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம். மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே “மூன்றாம் படை வீடு’ ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துõரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், “திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டுமும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர். முருகனுக்கு அன்னாபிஷேகம்: பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம். சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முதல் வணக்கம் இடும்பனுக்கே…!: தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது. இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி துõக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. தைப்பூச விழா சிறப்பு: தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது. பங்குதாரராக முருகப்பெருமான் : மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவாவினன்குடி வேலாயுத சுவாமி : திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார். இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார். தல விருட்சம் : இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும். திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும். மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. ஆறுமுகனின் ஆண்டிக்கோலம் : மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார். ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், “நவபாஷாணம்” எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும். பூஜை சிறப்பு : இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம். அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார் தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம். அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம். தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது. பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன.புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். செலுத்துகின்றனர்.

……………………………………………………………………………………………………………………………

தைப்பூசம் வரலாறு

தைப்பூசம் வரலாறு
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.

எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.

அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.   சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.   முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

……………………………………………………………………………………………………………………………பொன்மலை பரிமளம்

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித்தரும் உன்னதத் திருநாள் தை மாத பூச நட்சத்திர நாள்.

இந்நாளில் நடந்த நிகழ்வுகள் பல! அதில் சில…

ஒரு யுகத்தின் துவக்கத்தின்போது, தைப்பூசத் திருநாளன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதை உணர்த்தவே பல்வேறு திருத்தலங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

இந்த நாளில்தான் சூரியனும், கடகத்தின் நடு நட்சத்திரமாகிய பூசமும் ஒன்றையொன்று மகரத்தில் சந்திக்கும் அற்புதம் நடைபெறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தைப்பூசம் முருகப்பெருமானுக்குரிய விழாவாக முருகன் திருத்தலங்களில் கொண்டாடப் படுகிறது.

சூரனை வதம் செய்வதற் காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு, தன் ஞானசக்தியால் வேல் வழங்கி ஆசிவழங்கினாள்.

வேல் என்பதும் ஜோதி என்பதும் வேறல்ல. பார்வதி தேவியின் சக்தியிலிருந்து அவதரித்ததால் அந்த வேலாகிய ஜோதி முருகனுக்குத் தங்கையாகிறாள் என்கிறது புராணம்.இந்த வேல் பிரம்மவித்யா சொரூபமானது.

சக்தியின் வடிவாய்- சக்தியிடமே உருவான வேல், கந்தனின் தங்கை என்றும்; அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாள் தைப்பூசத் திருநாள் என்றும் போற்றி வழிபடுகிறார்கள் முருகனின் அடியார்கள். முருகனையும் ஜோதியையும் (வேல்)  எப்போதும் பிரிக்கமுடியாது. எனவேதான் புராணங்கள் ஜோதியாகிய சக்தி வேலை “ஷண்முகி’ என்று போற்றுகின்றன.

இந்த வேல்தான் சூரபத்மனை இரண்டா கப் பிளந்து ஞானத்தை அளித்தது. எனவே, ஞானத்தின் அம்சம் வேல். அந்த வேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானை “ஞானவேல்முருகன்’ என்று போற்றுகின்றன ஆகமங்கள்.

பேசமுடியாத நிலையிலிருந்த குமர குருபரர் திருச்செந்தூர் முருகனின் தாள் பணிந்திட, முருகன் அவரது நாவில், ஞானவேல் கொண்டு அட்சரம் எழுத, குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவைப் பாடினார்.

மாயையே உருவாகத் திகழ்ந்த கிரௌஞ்ச மலையைப் பொடிப்பொடியாக்கியதும் இந்த வேல்தான்.

தன் படைவீரர்களின் தாகம் தணிக்க திருச்செந்தூர் கடற் கரையில் நாழிக்கிணற்றினைத் தோற்றுவித்ததும் இந்த சக்திவேல் என்கிறது கந்தபுராணம்.

திருப்பரங்குன்றத்தில் வேலுக்குதான் முதல் பூஜை நடைபெறுகிறது.

மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேல்கோட்டம் தியான மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் வேல்தான் மூலவர். சுமார் ஆறரை அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய வேல் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப்பகுதியில் பஞ்சபூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வேலின் முகப்பில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில், விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபம் “சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வகையில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது.

வேல் வழிபாடு முருகன் வழிபாடு மட்டுமல்ல; ஜோதி வழிபாடும், சக்தி வழிபாடுமாகும். தைப்பூசத்தில் ஷண்முகியாம் வேலாகிய ஜோதியை வழிபடும் பொழுது, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம்.

“ஓம் ஜெயஜெய மகாவீர பகவான் ஸ்ரீஸ்கந்தா நமோநம!
ஓம் ஜெயஜெய மகாஜோதி சக்தி சரவணபவாயி நமோநம!’

இதேபோல், தைப்பூசத் திருநாளில் ஜோதி வழிபாடு போற்றப்படும் திருத்தலம் வடலூர் ஆகும்.

“பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்ற வரிக்கு ராமலிங்க வள்ளலார் கூறும் விளக்கம்:

பசித்திரு என்பது உடல்பசியைக் குறிப்பதல்ல;
ஆன்மிகப்பசி. தனித்திரு என்பது  தனியே
அமர்ந்து இறைவனை தியானம் செய்வதாகும்.

பசித்திருந்தும் தனித்திருந்தும் அடையும் பேரின்ப நிலையைத் தக்கவைத்துக்கொள்வதே விழித்திருக்கும் நிலையாகும்.

ராமலிங்க அடிகளார் கூறிய பத்துக்கட்டளைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவை:

✶ தான் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். (“உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்’ என்று திருமந்திரம் சொல்லும். இதுவே வள்ளலார் காட்டும் முதல்படி.

✶ தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்று எண்ணுவது.

✶ உலகமெல்லாம் இன்பமாக வாழவேண்டுமென்று நினைப்பது.

✶ ஆறறிவு மனிதர்கள் மட்டுமல்ல; ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் அனைத்தும் வாழவேண்டும்; கொல்லாமை வேண்டும்.

✶ பறவைகள், ஊர்வனமீது அன்புகாட்டி உதவுவது, ஆகாரமிடு வது.

✶ புழுவுக்கும் நீர்வாழ் மீனுக்கும் இரக்கம் காட்டுவது.

✶ ஓரறிவுடைய பயிர்கள் வாடுவது கண்டு வருந்துவது; அது வாடாமல் இருக்க வழிவகுப் பது.

✶ எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணுதல்; எவ்வுயிர்த்திரளும், என்னுயிர் என்று எண்ணுவது. ஓரறிவு உயிர்களிடத்தும் அன்புகொண்டு அதற்காகத் தியாகம் செய்வது.

✶ எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறான் என்று எண்ணி தொண்டு செய்வது; அதற்காக வாழ்வதே இறைவழிபாடென்று நினைப்பது.

✶ அன்பே வடிவான இறைவனோடு இரண்டறக் கலப்பது.

இந்தப் பத்துப்படிகளை அருளிய வள்ளலார் சுவாமிகள் ஞானசபை நிறுவி, அன்னதானப் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஞானவள்ளல்.

“கடவுள் ஒருவரே, அவர் ஜோதிமயமானவர்’

என்று அருளிய அருட்பிரகாச ராமலிங்க அடிகளார், ஸ்ரீமுக வருடம், தை மாதம் 10-ஆம் தேதி (30-1-1874) வெள்ளிக்கிழமை தைப்பூச நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு ஜோதி யில் இரண்டறக் கலந்தார் என்று வரலாறு கூறுகிறது.

அவர் ஜோதி வடிவத்தை அடைந்ததைக் காட்டும்விதத்தில் வடலூர் திருத்தலத்தில், தைப்பூசத்திருநாளன்று தரிசன வைபவம் நடைபெறும்.

வடலூரிலுள்ள சத்திய ஞானசபையில்- அவர் ஏற்றிய விளக்கு அணையாவிளக்காக ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

தை மாதம் முதல் நாளிலிருந்து- அதாவது உத்தராயன காலத்தில், வான்வெளியில் சூரியன் தன் பயணத்தை மாற்றிக்கொள்கிறான். வடகிழக்காகப் பயணிக்கும் சூரியனின் பிரகாசம் இக்காலக்கட்டத்தில் அதிகரித்து மிகப்பிரகாசமாக இருக்கும் என்று வேதம் சொல்கிறது; அறிவியலும் அதை ஏற்கிறது. தைப்பூச நன்னாள் பௌர்ணமி தினத்தில்தான் வரும். அன்றைய தினம் “காஸ்மிக் எனர்ஜி’ எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பர்.

தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபையில் நடுவில் உள்ள ஜோதியும் ஒரே நேர்கோட்டில் அமையும். இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டும் நிகழும். இதனை அறிவியல் ஆய்வாளர்கள் உண்மை என்று உறுதியளிக்கிறார்கள்.

அறிவியல்ரீதியாக அமைக்கப்பட்ட இந்த ஞானசபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதத் தத்துவங்களைக் குறிக்கும் ஐந்துபடிகளைக் கடந்தால் ஒரு சதுர பீடம் உள்ளது. அந்த பீடத்தில்தான் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் (ஜோதி) தரிசனம் தருகிறது. அதன்முன் ஏழடி உயரம், நான்கடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடிக்கு முன்னால் ஏழு திரைகள் உள்ளன.

கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்வண்ணம், வெள்ளை ஆகிய நிறங்களில் ஆறு திரைகளும்; இவையனைத்தும் கலந்த வண்ணத்தில் ஏழாவது திரையும் உள்ளன. ஆறு வண்ணங்களில் கருப்பு- மாயையையும்; நீலம்- உரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும்; பச்சை- எல்லா உயிர்களுக்கும் அன்பு, கருணை உண்டு என்பதை அறியாதிருத்தலையும்; சிவப்பு- உணர்ச்சிகளை சீரமைக்காததையும்; பொன்னிறம்- ஆசையால் உண்டாகும் துன்பத்தையும்; வெள்ளை-

அகங்காரத்தையும்; இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை உலகப்பற்றுகளை சீரமைத்தல் என்ற தத்துவ உண்மைகளையும் உணர்த்துகின்றன என்பர். இந்த ஏழு திரைகளையும் விலக்கினால் ஜோதி தரிசனம் முழுமையாகக் கிட்டும். ஒவ்வொரு மாதத்திலும் பூச நாளில் ஆறு திரைகள் முழுவதும் விலக்கப்படும். ஏழாவது திரை மட்டும் பாதியளவு விலக்குவர். ஜோதி தரிசனம் முழுமையாகக் கிடைக்கும் நாளன்று ஏழு திரைகளும் விலக்கப்பட்டு ஆறு காலபூஜை நடைபெறும். அந்நாள் தைப்பூசமாகும்.

அருட்செல்வர் ராமலிங்க அடிகளார் ஏற்படுத்திய ஒளிக்கோவிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. 23-5-1867-ல் இங்கு தருமசாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார் வள்ளலார். இதற்காக அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது இந்த அடுப்பு 21 அடி நீளம், இரண்டரை அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது. இங்கு தினமும் காலை ஆறு மணி, எட்டு மணி, பகல் பன்னிரண்டு மணி, மாலை ஐந்து மணி, இரவு எட்டு மணி என ஐந்து முறை அன்னதானம் நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குரு பகவான் என்று ஜோதிடநூல் கூறுகிறது. கோள்களில் ஞானம் தரும் தெய்வம் குரு பகவான். அதுபோல பூச நட்சத்திர நாட்களிலும் தை மாத பூச நட்சத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது எனப்படுகிறது. ஆதலால் தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குரு பகவானாகிய பிரகஸ்பதியையும், தட்சிணாமூர்த்தி கடவுளையும் தியானித்து வழிபடுவதன் மூலம் கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

தைப்பூசத் திருத்தலங்களில் திருவிடைமருதூர் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறை தரிசனம் பெற்றால் தோஷங்கள் நீங்கும். இது குறித்துப் புராணம் கூறும் தகவல்:

வஜன் என்ற சோழ மன்னன், தனக்காக புனித யாத்திரை சென்று திரும்பிய அந்தணர் ஒருவரை சூழ்நிலை வசத்தால் கொன்றுவிட்டான்.

அந்தப் பாவம் அவனை பல வழிகளில் பாடாய்ப்படுத்தியது. மன்னன், பார்க்கவ முனிவரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அவர் திருவிடைமருதூர் சென்று வழிபடுமாறு கூறினார். அதன்படியே மன்னன் திருவிடைமருதூர் சென்று நீராடி, இறைவனை வழிபட்டு தன் பாவத்தைப் போக்கிக்கொண்டான். அந்த நாள் தைப்பூசத் திருநாளாகும். இதேபோல் வரகுணபாண்டியனும் தனக்கேற்பட்ட தோஷங்கள் நீங்க, திருவிடைமருதூர் சென்று நீராடி, அங்குள்ள வில்வ மரத்தை வலம்வந்து இறைவனை வழிபட்டு தோஷங்கள் நீங்கிய நாள் தைப்பூசமாகும். தைப்பூசத்தன்று வில்வமரத்தை பூஜித்து வலம்வந்து வணங்கினால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 26 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது வானவன் மாதேவீச்சுரம் ஸ்ரீவானந்தேஸ்வரர் கோவில். இங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை தைப்பூச நாள் காலையில் சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி வழிபடுகிறான். இந்த சூரிய பூஜையை தரிசித்தால் புனிதம் சேருமென்பது ஐதீகம்.

வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, அவர்களுக்காக சிவபெருமான் திருநடனம் புரிந்தது ஒரு தைப்பூசத் திருநாளில்தான்.

மேலும், தைப்பூச விழா பழனி திருத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறும். மேலும், முருகப்பெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகள் மற்றும் பல திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா கொண்டாடுவதுபோல் மலேசியாவில் அருள்புரியும் பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழாவை முன்னிட்டு காவடி எடுத்து பக்தர்கள் மலையேறி முருகனை தரிசிப்பார்கள்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில், காவேரியின் வடகரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகையரின் சமாதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரம்கூடிய பகுன பஞ்சமியன்று ஆராதனை விழா நடைபெறும்.

முருகப்பெருமான் கோவில்களிலும் சிவாலயங்களிலும் தைப்பூச விழா சிறப் பாகக் கொண்டாடுவதுபோல், திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இரண்டாம் நாளிலிருந்து எட்டாம் நாள்வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷ, குதிரை வாகனங்களில் அம்மன் உலா வருவாள். ஒன்பதாம் நாளன்று தெப்பத்திருவிழா நடைபெறும். பத்தாம் நாள்- தைப்பூசத்திருநாளன்று மாரியம்மன் சமயபுரத்திலிருந்து புறப் பட்டு, ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் வடபுறத் தில் ஓடும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு எழுந்தருள்வாள். அப்போது ஸ்ரீரங்கநாதர், தன் தங்கையான  (வைஷ்ணவி) மாரியம் மனுக்குப் பிறந்தவீட்டு சீர் அளிக்கும் வைபவம் நடைபெறும்.

அண்ணன் தரும் சீரினைப் பெற்று, அன்று ஆற்றங்கரையில் தங்கி, தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு அன்னை அருளாசி வழங்கும் தைப்பூசத் திருவிழா முக்கிய திருவிழா ஆகும். பிறகு, 11-ஆம் நாள் காலை 5.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, வழியில் உபயங்கள் கண்டருளி இரவு 10.00 மணியளவில் சமயபுரம் எழுந் தருளுவாள்.

இவ்வாறு பலவிதங்களிலும் சிறப்பு பெற்ற தைப்பூசத் திருநாளில் உள்ளன்போடு இறைவனை வணங்கி திருவருள் பெறுவோம்!

 

…………………………………………………………………………………………………………………………..
ஆஞ்சநேயருக்கு அருளிய முருகப் பெருமான்கோயம்புத்தூர் நகரின் மேற்கில் 15.கி.மீ தூரத்தில் இத்திருக் கோவில் அமைந்து உள்ளது. சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் பல தவங்கள் செய்து பல வரங்களை பெற்றார்கள். வரங்களை பெற்ற பிறகு முனிவர்களை கொடுமைப்படுத்தினார்கள். பொறுத்து பார்த்து நிம்மதி இழந்த முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். “பொறுமையாக இருங்கள். என் சக்தியால் பிறப்பெடுக்கும் முருகன், சூரனை அழிப்பான். அதுவரை நீங்கள் பாதுகாப்பாக மருதமலையில் தங்கி இருங்கள்.“ என்றார் சிவன். இறைவன் அருளியது போல சூரனை அழித்து மருதமலையில் இருந்த முனிவர்களை காப்பாற்றினார் முருகப் பெருமான். திருமுருகனின் வேல், எதிரிகளை அழிக்கும் சக்திபடைத்தது. வேல் முருகனின் வேல் மருதமரமாக உருவெடுத்து அங்கு வசிக்கும் மக்களை இன்றுவரை காக்கிறது என்பது நம்பிக்கை. குசத்துவன் என்ற அரசர், ஆண் குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினார். இதனால் பட்டீஸ்வரரை தினமும் வணங்கி வந்தார். உன் கவலை தீர மருதமலை முருகனை வணங்கு. உன் ஆசை நிறைவேறும்.“ என்றார் ஈஸ்வரர். சிவபெருமான் கூறியது போல் செவ்வாய் தோறும் மருதமலை முருகனை வணங்கினார் மன்னர். வழிபட்ட ஒரு வருடத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ராஜ வம்சத்திற்கு வாரிசு கிடைத்தது. சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ பூதங்களை நம்பாமல் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றால், இதில் ஏதோ காரணம் இருக்கிறது.“ என்ற சிந்தனையுடன் சிவன் கொடுத்த சிவகிரி – சக்திகிரி மலையை சுமந்து வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் பாரம் தாங்காமல், “இந்த இரு மலைகளை எப்படி கீழே வைப்பது? யாராவது இருந்தால் கொஞ்சம் பாரத்தை இறக்கி வையுங்கள் என்று கூறலாமே இந்த பகுதியில் யாரையும் காணவில்லையே“ என்ற சிந்தனையோடு மலையின் பாரத்தை சுமக்க முடியாமல் சுமந்து நடந்து வந்தார் அகத்தியர். வரும் வழியில் இடும்பன் தவத்தில் இருந்தார். அவரை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார் அகத்தியர். “அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன். சிறந்த சிவபக்தனும் கூட“ என்ற எண்ணத்தில் இடும்பன் அருகில் சென்று இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். அசுரன் என்று கூட பாராமல் நல்ல உள்ளத்தோடு மந்திர உபதேசம் செய்யும் அகத்தியர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது இடும்பனுக்கு. அப்போது அகத்தியரிடம் இரண்டு மலைகள் இருப்பதை கவனித்த இடும்பன், “கேட்பதற்கு தவறாக நினைக்க வேண்டாம். எதற்காக இரண்டு மலைகளை இப்படி சுமந்து செல்கிறீர்கள்?.“ என்றார் இடும்பன். இது சிவன் கொடுத்த மலைகள். இதனை மருதமலையில் வைக்க சொல்லி எமக்கு தந்த சிவ உத்தரவு. என்னால் இந்த மலைகளை சுமக்க முடியவில்லை. சிறிது தூரம் நீ சுமந்து கொண்டு வர முடியுமா?.“ என்றார் அகத்திய முனிவர். “இதை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.“ என்று கூறிய இடும்பன், நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடிங்கி, மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன். வேகு தூரம் நடந்து வந்த களைப்பால் பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்தார் இடும்பன். அப்போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு தன் கால்களால் பிடித்து வைத்திருந்தான். “பொடிப்பயல் இவன், நம்மிடமே வித்தை காட்டுகிறானா?“ என்ற கோபம் கொண்டு அந்த சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன். சிறுவனாக இருந்தாலும் அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். இதை அறிந்த இடும்பனின் மனைவி இடும்பி, அகத்திய முனிவரிடம் சொல்லி கதறி அழுதாள். சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த முனிவர், “நீ முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் அகத்தியர். அதன்படி முருகனிடம் சென்று கண்ணீர் விட்டு கதறினாள் இடும்பி. இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். “இடும்ப நீ சுமந்து வந்தது எனக்குரிய மலைகளைதான். நீ காவடி சுமந்து வந்த விதம் சிறப்பானது. இவ்வாறு பக்தர்கள் எனக்காக காவடி எடுத்து வரும் போது, நீ அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“ என்றார் முருகப் பெருமான். மருதமலை வரும் வழியில் இடும்பன், மலையை காவடி தூக்குவது போல் காட்சி தருகிறார். முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். மருதமலை முருகனை வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனை வணங்கினால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும்.
ஆஞ்சநேயருக்கு அருளிய முருகப் பெருமான் </p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p> கோயம்புத்தூர் நகரின் மேற்கில் 15.கி.மீ தூரத்தில் இத்திருக் கோவில் அமைந்து உள்ளது. சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் பல தவங்கள் செய்து பல வரங்களை பெற்றார்கள். வரங்களை பெற்ற பிறகு முனிவர்களை கொடுமைப்படுத்தினார்கள். பொறுத்து பார்த்து நிம்மதி இழந்த முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். “பொறுமையாக இருங்கள். என் சக்தியால் பிறப்பெடுக்கும் முருகன், சூரனை அழிப்பான். அதுவரை நீங்கள் பாதுகாப்பாக மருதமலையில் தங்கி இருங்கள்.“ என்றார் சிவன். இறைவன் அருளியது போல சூரனை அழித்து மருதமலையில் இருந்த முனிவர்களை காப்பாற்றினார் முருகப் பெருமான். திருமுருகனின் வேல், எதிரிகளை அழிக்கும் சக்திபடைத்தது. வேல் முருகனின் வேல் மருதமரமாக உருவெடுத்து அங்கு வசிக்கும் மக்களை இன்றுவரை காக்கிறது என்பது நம்பிக்கை. குசத்துவன் என்ற அரசர், ஆண் குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினார். இதனால் பட்டீஸ்வரரை தினமும் வணங்கி வந்தார். உன் கவலை தீர மருதமலை முருகனை வணங்கு. உன் ஆசை நிறைவேறும்.“ என்றார் ஈஸ்வரர். சிவபெருமான் கூறியது போல் செவ்வாய் தோறும் மருதமலை முருகனை வணங்கினார் மன்னர். வழிபட்ட ஒரு வருடத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ராஜ வம்சத்திற்கு வாரிசு கிடைத்தது. சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ பூதங்களை நம்பாமல் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றால், இதில் ஏதோ காரணம் இருக்கிறது.“ என்ற சிந்தனையுடன் சிவன் கொடுத்த சிவகிரி – சக்திகிரி மலையை சுமந்து வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் பாரம் தாங்காமல், “இந்த இரு மலைகளை எப்படி கீழே வைப்பது? யாராவது இருந்தால் கொஞ்சம் பாரத்தை இறக்கி வையுங்கள் என்று கூறலாமே இந்த பகுதியில் யாரையும் காணவில்லையே“ என்ற சிந்தனையோடு மலையின் பாரத்தை சுமக்க முடியாமல் சுமந்து நடந்து வந்தார் அகத்தியர். வரும் வழியில் இடும்பன் தவத்தில் இருந்தார். அவரை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார் அகத்தியர். “அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன். சிறந்த சிவபக்தனும் கூட“ என்ற எண்ணத்தில் இடும்பன் அருகில் சென்று இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். அசுரன் என்று கூட பாராமல் நல்ல உள்ளத்தோடு மந்திர உபதேசம் செய்யும் அகத்தியர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது இடும்பனுக்கு. அப்போது அகத்தியரிடம் இரண்டு மலைகள் இருப்பதை கவனித்த இடும்பன், “கேட்பதற்கு தவறாக நினைக்க வேண்டாம். எதற்காக இரண்டு மலைகளை இப்படி சுமந்து செல்கிறீர்கள்?.“ என்றார் இடும்பன். இது சிவன் கொடுத்த மலைகள். இதனை மருதமலையில் வைக்க சொல்லி எமக்கு தந்த சிவ உத்தரவு. என்னால் இந்த மலைகளை சுமக்க முடியவில்லை. சிறிது தூரம் நீ சுமந்து கொண்டு வர முடியுமா?.“ என்றார் அகத்திய முனிவர். “இதை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.“ என்று கூறிய இடும்பன், நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடிங்கி, மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன். வேகு தூரம் நடந்து வந்த களைப்பால் பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்தார் இடும்பன். அப்போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு தன் கால்களால் பிடித்து வைத்திருந்தான். “பொடிப்பயல் இவன், நம்மிடமே வித்தை காட்டுகிறானா?“ என்ற கோபம் கொண்டு அந்த சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன். சிறுவனாக இருந்தாலும் அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். இதை அறிந்த இடும்பனின் மனைவி இடும்பி, அகத்திய முனிவரிடம் சொல்லி கதறி அழுதாள். சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த முனிவர், “நீ முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் அகத்தியர். அதன்படி முருகனிடம் சென்று கண்ணீர் விட்டு கதறினாள் இடும்பி. இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். “இடும்ப நீ சுமந்து வந்தது எனக்குரிய மலைகளைதான். நீ காவடி சுமந்து வந்த விதம் சிறப்பானது. இவ்வாறு பக்தர்கள் எனக்காக காவடி எடுத்து வரும் போது, நீ அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“ என்றார் முருகப் பெருமான். மருதமலை வரும் வழியில் இடும்பன், மலையை காவடி தூக்குவது போல் காட்சி தருகிறார். முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். மருதமலை முருகனை வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனை வணங்கினால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும்.

 

அறுபடை வீடுகள்01.திருப்பரங்குன்றம்
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் “திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.02. திருச்செந்தூர்
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.03. பழநி
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.04. சுவாமிமலை சிவகுருநாதன்
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். “தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்’ என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் “”சிவகுருநாதன்” என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.05. திருத்தணி முருகன்
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.06. சோலைமலை
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,”" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். “”அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்
அறுபடை வீடுகள்</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>01.திருப்பரங்குன்றம்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>02. திருச்செந்தூர்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>03. பழநி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. </p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>04. சுவாமிமலை சிவகுருநாதன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>05. திருத்தணி முருகன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. </p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>06. சோலைமலை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்
……………………………………………………………………………………………………………………………..
திருப்புகழ் என்ற மகா மந்திரம்அருணகிரிநாதர், தன் பாடல்கள் மூலம் சந்தங்களுக்குத் தனிச் சுவை கூட்டிய முருகனடியார். அவருடைய திருப்புகழ், ஒரு ராணுவ அணிவகுப்பு போன்ற சீரான ஓசை நயத்துடன் கேட்போரை பெரிதும் உற்சாகம் கொள்ள வைக்கும். வாலிப வயதில் காமத்தில் ஆழ்ந்து, அதுதான் வாழ்க்கை எ ன்று கருதிய அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் காத்தவர் அவரது தமக்கையார். தம்பியைத் திருத்தவே முடியாதோ என்று அஞ்சிய அவர், ஒரு கட்டத்தில் அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தன்னிடம் பணம் இல்லாததால், தன்னையே யாருக்காவது விற்று அதனால் பணம் பெற்று சந் தோஷமாக இருக்கச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார் அருணகிரியார்.உடனே தான் பிறந்து, வாழ்ந்து வந்த திருவண்ணாமலையில் அருணாச லேஸ்வரர் ஆலய கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ள குதித்தார். ஆனால், அவரது பரம்பரை தெய்வமான முருகன் அவ ரைத் தாங்கிக் காப்பாற்றி அருளினார். அப்போது முருகன் அருளால் பிறந்ததுதான் ‘முத்தைத் தரு பத்தித் திருநகை…’ என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடலோடு ஆரம்பித்து திருப்புகழ் இயற்றிய அவர் பின்னாட்களில் திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் என்று மொத்தம் சுமார் 6000 பாடல்களை இயற்றி முருகனுக்கு சேவை செய்தார்.இவற்றில் வெறும் 1600 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன! இந்தப் பாடல்கள் சிலவற்றில் காணப்படும் சமஸ்கிருத சொற்களிலிருந்து அவர் அந்த மொழி யையும் நன்கு அறிந்திருந்த புலமை வெளிப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் இனிமையான இசையாக இன்று ஒலிக்கப்படுவதற்குக் காரணமானவர் வள்ளிமலை சுவாமிகள். இவர் அர்த்தநாரி என்ற இயற்பெயரில் இப்போதைய கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தவர். மைசூர் சமஸ்தானத்தில் சமையல்காரராகப் பணியாற்றியவர். கன்னட மொழி மட் டுமே தெரிந்தவர். அவர் ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு முருகன் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஒரு கணிகை திருப்புகழ் பாடலுக்கு நடனமாடியதைக் கண்டார். நடனத்தைவிட திருப்புகழின் சொல் அலங்காரத்தில் மனம் பறிகொ டுத்தார், அர்த்தநாரி. அன்று முதல் தொடர்ந்து முருகனை வழிபட ஆரம்பித்தார்.
திருவண்ணாமலைக்கு வந்த அவர் ரமண மகரிஷியை தரிசித்தார். தனக்கு ஏதேனும் மந்திரம் உபதேசிக்கும்படி வேண்டி நின்றார். ‘‘கீழே ஒருத்தர் இருக்கார், அவர் சொல்லுவார், போ’’ என்று மலையடிவாரத்துக்கு மகரிஷி அவரை அனுப்பி வைத்தார்.அவர் சந்திக்கச் சொன்னது சேஷாத்ரி சுவாமிகளை. அர்த்தநாரியைப் பார்த்ததுமே, சுவாமிகள், ‘‘வா’’ என வாஞ்சையுடன் அழைத்தார். ‘‘திருப்புகழ் ஒரு மகா மந்திரம். அதனை இசையோடு பாடு, ஏற்றம் பெறுவாய்’’ என்று உபதேசம் செய்தார். தமிழே தெரியாதிருந்த அர்த்தநாரிக்கு பளிச்சென்று திருப்புகழ் பாட வந்தது – சந்தங்களில் எந்த சிக்கலும் இல்லாமல். அதுவரை சம்பிரதாயமாக ஓதப்பட்டு வந்த திருப்புகழுக்கு இசை அலங்காரம் செய் வித்தார். அவர் வகுத்துத் தந்த இசை வழியாகத்தான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெரும் புகழ் பெற்றார். அனைத்து முருகனடியார்களும் திருப்பு கழைப் பாடிப்பாடி இன்றளவும் வாய் மணக்க, வாழ்க்கை மணக்க வாழ்கிறார்கள்.பொதுவாகவே ஒரு மந்திரம் என்பது ஒரு கடவுள் சம்பந்தப்பட்டது. ஆனால், அருணகிரியாரின் திருப்புகழ் என்ற மகா மந்திரம், விநாயகர், சிவன், பார் வதி, முருகன், மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என்று ஏழு கடவுளர்களைப் போற்றுகிறது. ‘ஓம், ஐம், க்லீம்…’ என்பன போன்ற மந்திரங்களில் ஒலிதான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மகா மந்திரத்திலோ ஒலியுடன், பொருளும் தனிச் சிறப்புப் பெறுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற மகா மந்திரத்தில் முருகனுக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது எதனால் என்றால், அவன் மட்டுமே பிற ஆறு கடவுளர்களுடன் நெருங் கிய சாந்நித்தியம் கொண்டவன். நம்மில் பலர் கணபதி சுப்பிரமணியன், சக்தி வேலன், சிவ சுப்பிரமணியன், ராம (வெங்கட) சுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், அனுமந்த குமார் என்றெல்லாம் பெயர் கொண்டிருக்கிறோம்.இதிலிருந்தே முருகன் அந்த ஆறு இறையம்சங்களோடும் இணைந்தவர் என்பது புரியும். இதனாலேயே ‘அதி சமய சாஸ்திரப் பொருளோனே’ என்று அருணகிரியார் முருகனைப் புகழ்கிறார். இத்தகைய மகா மந்திரத்தால் ஏழு சுவாமிகளையும் பூஜை செய்து வருகிறார் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன். அட்சரம் பிசகாத, சந்தங்களில் இட றாமல், படிகள் ஏறி இறங்கும் – ஏறி இறங்கும் தொனியாக இவர் நாவிலிருந்து புறப்படும் திருப்புகழ் பதிகங்கள் புது மெருகு பெறுகின்றன என்றே சொல்லலாம். ஏழு கடவுளர்களில் அந்தந்த சுவாமிக்கேற்ற மலர்களால் திருப்புகழ் பாடி இவர் பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது.இடையிடையே பாடல்களில் பதம் பிரித்து, அந்தந்த பதங்களுக்கு விளக்கம், சிலசமயம், புதுமையான விளக்கம் கொடுத்து இவர் பூஜை நடத்துவது கண்ணுக்கும் கருத்துக்கும் அரிய தோர் ஆன்மிக விருந்தாக அமைகிறது என்பது உண்மை. அந்த பூஜையில் கலந்து கொள்வோர் எண்ணமெல்லாம் ஈடேறுவதும் கூடுதல் ஆன்மிக ஆதாயம்! ஆற்றல் மிக்க ஆன்மிக சொற்பொழிவாளராக, கவிஞராக, எழுத்தாளராகப் பரிமளிக்கும்தான், திருப்புகழை அந்தப் பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல், பூஜைக்காகவும் எடுத்தாள்வது முருகனின் பேரருளே என்று நெகிழ்ந்து சொல்கிறார்.
திருப்புகழ் என்ற மகா மந்திரம்</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>அருணகிரிநாதர், தன் பாடல்கள் மூலம் சந்தங்களுக்குத் தனிச் சுவை கூட்டிய முருகனடியார். அவருடைய திருப்புகழ், ஒரு ராணுவ அணிவகுப்பு போன்ற சீரான ஓசை நயத்துடன் கேட்போரை பெரிதும் உற்சாகம் கொள்ள வைக்கும். வாலிப வயதில் காமத்தில் ஆழ்ந்து, அதுதான் வாழ்க்கை எ ன்று கருதிய அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் காத்தவர் அவரது தமக்கையார். தம்பியைத் திருத்தவே முடியாதோ என்று அஞ்சிய அவர், ஒரு கட்டத்தில் அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தன்னிடம் பணம் இல்லாததால், தன்னையே யாருக்காவது விற்று அதனால் பணம் பெற்று சந் தோஷமாக இருக்கச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார் அருணகிரியார்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>உடனே தான் பிறந்து, வாழ்ந்து வந்த திருவண்ணாமலையில் அருணாச லேஸ்வரர் ஆலய கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ள குதித்தார். ஆனால், அவரது பரம்பரை தெய்வமான முருகன் அவ ரைத் தாங்கிக் காப்பாற்றி அருளினார். அப்போது முருகன் அருளால் பிறந்ததுதான் ‘முத்தைத் தரு பத்தித் திருநகை...’ என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடலோடு ஆரம்பித்து திருப்புகழ் இயற்றிய அவர் பின்னாட்களில் திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் என்று மொத்தம் சுமார் 6000 பாடல்களை இயற்றி முருகனுக்கு சேவை செய்தார்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இவற்றில் வெறும் 1600 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன! இந்தப் பாடல்கள் சிலவற்றில் காணப்படும் சமஸ்கிருத சொற்களிலிருந்து அவர் அந்த மொழி யையும் நன்கு அறிந்திருந்த புலமை வெளிப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் இனிமையான இசையாக இன்று ஒலிக்கப்படுவதற்குக் காரணமானவர் வள்ளிமலை சுவாமிகள். இவர் அர்த்தநாரி என்ற இயற்பெயரில் இப்போதைய கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தவர். மைசூர் சமஸ்தானத்தில் சமையல்காரராகப் பணியாற்றியவர். கன்னட மொழி மட் டுமே தெரிந்தவர். அவர் ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு முருகன் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஒரு கணிகை திருப்புகழ் பாடலுக்கு நடனமாடியதைக் கண்டார். நடனத்தைவிட திருப்புகழின் சொல் அலங்காரத்தில் மனம் பறிகொ டுத்தார், அர்த்தநாரி. அன்று முதல் தொடர்ந்து முருகனை வழிபட ஆரம்பித்தார்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
திருவண்ணாமலைக்கு வந்த அவர் ரமண மகரிஷியை தரிசித்தார். தனக்கு ஏதேனும் மந்திரம் உபதேசிக்கும்படி வேண்டி நின்றார். ‘‘கீழே ஒருத்தர் இருக்கார், அவர் சொல்லுவார், போ’’ என்று மலையடிவாரத்துக்கு மகரிஷி அவரை அனுப்பி வைத்தார்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>அவர் சந்திக்கச் சொன்னது சேஷாத்ரி சுவாமிகளை. அர்த்தநாரியைப் பார்த்ததுமே, சுவாமிகள், ‘‘வா’’ என வாஞ்சையுடன் அழைத்தார். ‘‘திருப்புகழ் ஒரு மகா மந்திரம். அதனை இசையோடு பாடு, ஏற்றம் பெறுவாய்’’ என்று உபதேசம் செய்தார். தமிழே தெரியாதிருந்த அர்த்தநாரிக்கு பளிச்சென்று திருப்புகழ் பாட வந்தது - சந்தங்களில் எந்த சிக்கலும் இல்லாமல். அதுவரை சம்பிரதாயமாக ஓதப்பட்டு வந்த திருப்புகழுக்கு இசை அலங்காரம் செய் வித்தார். அவர் வகுத்துத் தந்த இசை வழியாகத்தான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெரும் புகழ் பெற்றார். அனைத்து முருகனடியார்களும் திருப்பு கழைப் பாடிப்பாடி இன்றளவும் வாய் மணக்க, வாழ்க்கை மணக்க வாழ்கிறார்கள். </p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>பொதுவாகவே ஒரு மந்திரம் என்பது ஒரு கடவுள் சம்பந்தப்பட்டது. ஆனால், அருணகிரியாரின் திருப்புகழ் என்ற மகா மந்திரம், விநாயகர், சிவன், பார் வதி, முருகன், மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என்று ஏழு கடவுளர்களைப் போற்றுகிறது. ‘ஓம், ஐம், க்லீம்...’ என்பன போன்ற மந்திரங்களில் ஒலிதான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மகா மந்திரத்திலோ ஒலியுடன், பொருளும் தனிச் சிறப்புப் பெறுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற மகா மந்திரத்தில் முருகனுக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது எதனால் என்றால், அவன் மட்டுமே பிற ஆறு கடவுளர்களுடன் நெருங் கிய சாந்நித்தியம் கொண்டவன். நம்மில் பலர் கணபதி சுப்பிரமணியன், சக்தி வேலன், சிவ சுப்பிரமணியன், ராம (வெங்கட) சுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், அனுமந்த குமார் என்றெல்லாம் பெயர் கொண்டிருக்கிறோம்.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இதிலிருந்தே முருகன் அந்த ஆறு இறையம்சங்களோடும் இணைந்தவர் என்பது புரியும். இதனாலேயே ‘அதி சமய சாஸ்திரப் பொருளோனே’ என்று அருணகிரியார் முருகனைப் புகழ்கிறார். இத்தகைய மகா மந்திரத்தால் ஏழு சுவாமிகளையும் பூஜை செய்து வருகிறார் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன். அட்சரம் பிசகாத, சந்தங்களில் இட றாமல், படிகள் ஏறி இறங்கும் - ஏறி இறங்கும் தொனியாக இவர் நாவிலிருந்து புறப்படும் திருப்புகழ் பதிகங்கள் புது மெருகு பெறுகின்றன என்றே சொல்லலாம். ஏழு கடவுளர்களில் அந்தந்த சுவாமிக்கேற்ற மலர்களால் திருப்புகழ் பாடி இவர் பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இடையிடையே பாடல்களில் பதம் பிரித்து, அந்தந்த பதங்களுக்கு விளக்கம், சிலசமயம், புதுமையான விளக்கம் கொடுத்து இவர் பூஜை நடத்துவது கண்ணுக்கும் கருத்துக்கும் அரிய தோர் ஆன்மிக விருந்தாக அமைகிறது என்பது உண்மை. அந்த பூஜையில் கலந்து கொள்வோர் எண்ணமெல்லாம் ஈடேறுவதும் கூடுதல் ஆன்மிக ஆதாயம்! ஆற்றல் மிக்க ஆன்மிக சொற்பொழிவாளராக, கவிஞராக, எழுத்தாளராகப் பரிமளிக்கும்தான், திருப்புகழை அந்தப் பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல், பூஜைக்காகவும் எடுத்தாள்வது முருகனின் பேரருளே என்று நெகிழ்ந்து சொல்கிறார்.
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?

ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.

உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.

கந்தசஷ்டி விரதத் தத்துவம்!

கே. சுவர்ணா        காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.

அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார். 

வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.

முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார். 

அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன. 

அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.

கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.

கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்த முசுகுந்தன் இம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் பெற்றான் என்பதை புராண வரலாறுகள் மூலம் அறியலாம்.

முசுகுந்தன் என்ற சோழ சக்கரவர்த்தி, தேவாசுரப் போர் நடந்தபோது இந்திரனுக்குத் துணை நின்றவன். சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகள் செய்தான். போரின்போது தனக்கு உதவிசெய்த முசுகுந்தனுக்கும் இந்திரன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்.

திருமணவிழாவில் கலந்துகொண்ட முசுகுந்தன், வசிஷ்ட முனிவரிடம் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்தான். முறைப்படி சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அவனது வழிபாட்டில் திருப்தி யுற்ற முருகப்பெருமான் முசுகுந்தனுக்குக் காட்சி தந்து, “”வேண்டும் வரம்யாது?” என்று கேட்டார். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்களும் தனக்குத் துணைபுரிய அருளவேண்டுமென முசுகுந்தன் வரம் வேண்டினான்.

முருகப்பெருமான் அவ்வாறே வரமருளினார். 

ஆனால் வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் “மானிடர்க்கு உதவி செய்வதில்லை’ என்று கூறி மறுத்தனர். அதனை ஏற்காத முருகப்பெருமான் அவர்களை மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டுமுசுகுந்தனுக்கு துணைசெய்ய ஆணையிட்டார். மானிடர்களாகப் பிறந்த நவ வீரர்கள் துணையுடன் முசுகுந்தன் விண்ணுலகும் மண்ணுலகும் புகழ அரசாண்டு, கயிலையில் கணநாதர் நிலையை அடைந்தான்.

அகங்காரத்தின் வடிவமான சூரபன்மன், குரோதத்தின் வடிவமான சிங்கமுகன், மோகத்தின் வடிவமான தாருகாசுரன் ஆகிய மூவரையும் முருகப்பெருமான் அழித்தது மனிதனின் அகங்காரம், குரோதம், மோகம் ஆகிய தீய இயல்புகளை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறிப்பதே. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட, சூரபன்மன் மட்டும் கடைசிவரை போராடி முருகப் பெருமானால் ஞானம் அருளப் பெற்று அவரால் ஆட்கொள்ளப் பட்டான்.

குரோதம், மோகம் போன்றவற்றை ஒழித்துவிட்டாலும் ஆணவத்தை அடியோடு அழிக்க முடியாது என்பதையே சூரசம்ஹார நிகழ்வு உணர்த்துகிறது.

முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது- ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.

கந்தர் சஸ்டி கவசம் – Kanda Shasti Kavasam
கந்தர் சஸ்டி கவசம்

காப்பு
நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போக்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா

சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண் கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்

கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக !
வருக ! வருக! மயிலோன் வருக!
இந்திரன் வடிவேல் வருக! வருக!

வாசவன் மருகா! வருக! வருக!
நேச குறமகள் நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறு இடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரஹண பவனார் சடுதியில் வருக!
ரஹண பவச, ரரரர ரரர
ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ,வீரா நமோ நம!
நிபவ சரஹண நிற நிற நிர்றென

வசர ஹணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை ஆளும் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க

விரைந்து என்னை காக்க வேலோன் வருக !
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடி ஆறும்
நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும், முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,
துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,
நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,
இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,

திருவடி யதனில் சிலம் பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொககென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண

ரரரர ரரரர,ரரரர ரரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி
டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து

முந்து முந்து,முருகவேள் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று,

உந்திரு வடியை உருதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!

முப்பத்து இருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!
மார்பை இரத்ந வடிவேல் காக்க!

சேரிள முலைமார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!
ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!

வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!

முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!
நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,
நாபிக் கமலம், நவ்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!

ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,
பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுதும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,

கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,
ஆனை அடியினில், அரும்பா வைகளும்

பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,
நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே, பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,

காசும், பணமும், காவுடன் சோறும்,
ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,

ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,
வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,
படியினில் முட்டப், பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறியக்

கட்டு கட்டு, கதறிடக் கட்டு!
முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் ச