ஆன்மிக சிந்தனைகள்

சைவ சமயத்தைச் சார்ந்தோர் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தையும், பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடற் புராணத்தையும், கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தையும் விரும்பிப் படிப்பதுண்டு.

சிவபெருமான் மானிட வடிவில் வந்து பல தெய்வீக லீலைகளை நடத்தினார். திருவிளையாடற் புராணத்தில் இருபத்தைந்து வடிவிலும், பெரிய புராணத்தில் சுந்தரருடன் ஆறு வடிவிலும், திருநாவுக்கரசருடன் இரண்டு வடிவிலும் மற்ற நாயன்மார்கள் சரித்திரத்தில் ஏழு வடிவிலும் வந்து தமது அடியாருக்கு அருள்புரிந்துள்ளார். திருவிளையாடற் புராணம் நான்கு புலவர் பெருமக்களால் எழுதப்பட்டாலும், பரஞ்சோதியாரின் புராணம்தான் இன்று அதிகளவு வழக்கத்திலுள்ளது.

இதில் சிவபெருமான் தருமி என்னும் பக்தனுக்காகவும், மதுரை தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவரான நக்கீரனாரின் தமிழ்ப்புலமையை சோதிக்கும் வண்ணமும் விளையாடியது அறுபத்து நான்கு திருவிளையாட்டுக்களுள் ஒன்றாகும்.

மதுரை மாநகரை வங்கிய சூடாமணி மாறன் என்கிற பாண்டிய குல மன்னன் செவ்வனே ஆட்சி செய்துவந்தான். தனது குலதெய்வமான மதுரை சோமசுந்தரர்மீது அதீத பக்திகொண்டு, இறைவனுக்கு நித்தம் புதுமலர்களால் கொண்டு மாலை சூட்டவும், அர்ச்சனை செய்யவும் பல நறுமலர்களைக் கொண்ட நந்தவனத்தை அமைத்தான்.

“மன்னவர் மன்னன் வங்கிய சூடாமணிமாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன்மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்’
(2434)

என்னும் பாடல்மூலம் இதனை அறியலாம்.

அரண்மனையின் அந்தப்புரத்திற்கு அருகே அந்த அழகிய நந்தவனம் இருந்தது. மன்னன் செண்பக மலர்மீது அதிக பற்றுக்கொண்டதால், அதற்கெனவே தனியாக ஒரு நந்தவனத்தை அமைத்திருந்தான்.

ஒருநாள் இளவேனிற் காலத்தின் மாலைவேளையில் தனது மனைவியுடன் மன்னன் பசுஞ்சோலை சூழ்ந்த அந்தப்புர மண்டபத்தில் அமர்ந்து இயற்கையழகை ரசித்துக் கொண்டிருந்தான். அந்த சோலையில் மயில்கள் ஆனந்தமாக ஆட, குயில்கள் இனிமையாகக் கூவ, மான் குட்டிகள் அங்குமிங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தன. அந்தசமயத்தில் இதமாகத் தென்றல் வீச, மன்னனருகே நெருக்கமாக அமர்ந்திருந்த அரசியின் அடர்ந்த கருங்கூந்தலானது மன்னனின் முகத்தைத் தழுவியது. அந்த கூந்தலிலிருந்து புதுவிதமான நறுமணம் வந்ததை மன்னன் உணர்ந்தான். எத்தனையோ பூக்களின் வாசனையை நன்கு அறிந்திருந்த மன்னனுக்கு இந்த புதுவாசனை ஒரு கிளர்ச்சியை ஊட்டியது.

மேலும் ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது. அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கை யிலேயே மணம் உண்டா அன்றி அவர்கள் சூடும் மலர்கள் மற்றும் பூசும் தைலத்தால் செயற்கையாக மணம்  ஏற்படுகிறதா என்கிற ஐயம் ஏற்பட்டது.

“ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்த பாடல்
செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்றக்
கையுறை வேலான் ஈந்த பொற்கிழி கைக்கொண்டு ஏகி
மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினார் வினைசெய் மாக்கள்.’
(2513)

சங்க மண்டபத்தில் தனக்கேற்பட்ட சந்தேகத்தை ஒரு கேள்வியாக எழுப்பி, அதைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டான். மன்னனின் சந்தேகத்தை அறிந்து அமைச்சர்கள், அறிஞர்கள், புலவர்கள் கூடி விவாதித்தனர். பரிசுத் தொகையோ அதிகம். கேள்விக்கான விடையோ சிக்கலானது. எனவே இந்த அறிவிப்பு குடிமக்களிடையேயும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சோமசுந்தரர் வீற்றிருக்கும் ஆலயத்தின் இளம் அர்ச்சகரான- ஆதி சைவர் குலத் தைச் சார்ந்த தருமி என்பவனுக்கு இந்தப் பரிசுத் தொகை தமக்கு எப்படியாவது கிடைக்கவேண்டுமென்கிற ஆசை எழுந்தது. வறுமையில் தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அந்த ஏழைக்கு ஆயிரம் பொற்காசுகள் பெரும்பேறல்லவா!

தனக்கு அந்த பரிசுத்தொகை கிட்ட அருள்புரியவேண்டுமென்று இறைவன் சோமசுந்தரரிடம் பலவாறு வேண்டினான். அவனுக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட இறைவன், மன்னனின் சந்தேகத்தைப் போக்க கீழ்க்கண்ட பாடலைக் கொடுத்தனுப்பினார்.

“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’
(குறுந்தொகை)

இந்தப் பாடல் வாயிலாக பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்கிற செய்தியை மன்னனுக்கு தருமி தெரிவித்தான். மன்னனுக்கும் இந்தப் பாடலின் பொருள் சரியானதாகப்பட்டது. எனவே தான் அறிவித்தப்படி ஆயிரம் பொற்காசுகளை தருமிக்குத் தரும் வேளையில், அரசவையில் வீற்றிருந்த மூத்த புலவரான நக்கீரர் பாடலில் குறையிருப்பதாகக் கூறி பரிசு கொடுப்பதைத் தடுத்தார். ஏமாற்றமடைந்த தருமி திரும்பிவந்து இறைவன் சோமசுந்தரரிடம் தனக்குப் பரிசு கிட்ட வில்லையென முறையிட்டான். இறைவன் தருமியை அழைத்துக்கொண்டு புலவர் வேடத்தில் அரசவைக்கு வந்தார். தலைமைப் புலவரான நக்கீரனிடம், “”என்ன குற்றம் கண்டீர்கள்?” என வினாவினார்.

“”பாடலில் பொருள் குற்றம் உள்ளது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் எந்தவிதமான மணமும், வாசமும் கிடையாது” என்றார் நக்கீரர். “”தேவலோகப் பெண்களுக்கும் இது பொருந்துமா?” என புலவர் வடிவில் வந்த இறைவன் வினவ, நக்கீரர், “”பொருந்தும்” என வாதிட்டார். கடைசியாக, “”ஈசனின் மனைவியான உமைக்கும் இது பொருந்துமா?” என வினாவினார். “”அதற்கும் இதே விடைதான்” என உறுதிபட வாதிட்டார் நக்கீரர். இறைவன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்துகாட்டி, நக்கீரனிடம் மீண்டும் கேட்டார். வந்திருப்பது இறைவன் என அறிந்தும் நக்கீரர் தனது கொள்கையிலிருந்து சற்றும் மாறுபடாமல், “”இயற்கையாகவே பெண்களின் கூந்தலுக்கு மணமில்லை” என்றார். பின்னர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பத்தால் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியெழுந்ததும், பாண்டியன் இறைவன் பாதம் பணிந்து பொறுத்தருளுமாறு வேண்டியதும், தருமிக்கு பரிசுத் தொகை கிடைத்ததும் அனைவரும் அறிந்ததே.

இதில் அறியவேண்டிய உட்பொருள் என்னவென்றால், யாராக இருந்தாலும் (இறைவனேயானாலும்) குற்றம் இருப்பின் அதை துணிவுடன் எடுத்துரைக்கும் நெஞ்சுரமும் நேர்மையும் வேண்டுமென்பதே.

நக்கீரர் அகத்திய முனிவரிடம் தமிழ் இலக்கணத்தைக் கற்றவர். சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் முதலாவதான “திருமுருகாற்றுப்படை’ (ஆற்றுப்படை என்றால் ஆற்றுப்படுத்துதல்) என்கிற தெய்வீகப் பாசுரத்தை முருகப்பெருமானுக்காகப் பாடினார். இதுதவிர நெடுநல்வாடை, நற்றிணை போன்றவற்றையும் இயற்றியுள்ளார். சுந்தரர், நக்கீரரைப் பற்றி திருத்தொண்டர் தொகையில் சொல்லும்போது, “பொய்யடிமை இல்லா புலவர்க்கும் அடியேன்’ என கூறியுள்ளார்.

நம்பியாண்டார் நம்பி,

“தரணியிற் பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர்
அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே’

என திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடியுள்ளார்.

பொய்யாமை, எந்த நிலையிலும் உண்மை பேசுதல்- அதை உறுதியுடன் பேசுதல் என்னும் மிகச்சிறந்த பண்பு வேண்டுமென்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

பரிகார பூஜை செய்வதற்காக நவகிரக கோவில்களுக்குச் செல்கிறோம்.

அங்கே கடைப்பிடிக்கவேண்டிய நியதிகள் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. எல்லா ஆலயங்களுக்குமே இவை பொருந்துபவைதான்.

ஆலய நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்கவேண்டாம்.

முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது.

போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம்.

புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை.

தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்யவேண்டாம்.

பூஜைக்கு அமாவாசை, பௌர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

தலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர்.
நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர் அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்கவேண்டும்.

வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

பொருட்கள் தரமாக இருந்தால் அனைத் தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது.

முதலில் விநாயருக்கு அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.

ஆலயத்திற்குள் யாருடனும் பேசவேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்கவேண்டும்.

சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச்செல்லுங்கள்.

மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக்கூடாது.

பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.

பால்கோவா, இனிப்புகள், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

திரைபோட்டபின் பிரதட்சிணம் வர வேண்டாம்.

விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு, சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள்.

ஒரு பிரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி, பின் அடுத்ததைத் துவங்கவும்.

கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது.

பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்றவேண்டாம்.

நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்றவேண்டாம்.

அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது.

பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

வேகமாக பிரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது.

பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாத வற்றுடன் சேர்ந்துவிடக்கூடாது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்றவேண்டும்.

திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது.

ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழேவைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது.

பெற்ற விபூதி குங்கும பிரசாத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.

காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை.

அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

சுவாமி சந்நிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.

கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சந்நிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.

சங்கல்பம் மிக முக்கியம்.

கோபுர தரிசனம் கோடி நன்மை.

சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்குப் போடாதீர்.

கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்றுநேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவுசெய்யவும்.

ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்கவேண்டும்; மாறக்கூடாது.

பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்குமேல் இருக்கக்கூடாது.

காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்யவேண்டும்.

இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பிரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

நவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு.

தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வயதிற்குள் செய்துவிடுங்கள்.

இயல்பான- முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
சின்னச்சின்ன பூஜைகளைவிட, அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக் குரிய அனுமதி கிடைக்கும்.

ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது—சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

""சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?'' என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், ""நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,'' என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
முன்னேற

#தமிழ் #தமிழ்மொழி #Tamil

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்..!யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான். ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர். மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.
சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்..!

யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான். ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர். மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.

ஷீர்டி கிராமத்தின் அருகே இருந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த மாதவராவை பாம்பு தீண்டிவிட்டதே? நாகப்பாம்பின் கொடிய விஷம் அவர் மேனியெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது.

ஷீர்டி சாயிபாபாவின் பரம பக்தரான அவர், தன் உயிரை பாபா காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் பாபாவின் மசூதியைத் தேடி ஓடிவந்தார். “என்னைக் காப்பாற்றுங்கள் பாபா!’ என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் ஏறத் தொடங்கியபோது, பாபாவின் உரத்த குரல் எச்சரித்தது. “நில். ஏறாதே, இறங்கு!’ என்று அளவற்ற அதிகாரத்தோடு கட்டளையிட்டது அது.

என்ன இது! இப்படிச் சொல்கிறாரே பாபா? தம் அடியவரை பாபா கைவிடுவது வழக்கமில்லையே? தம் உயிரைக் காப்பாற்றச் சொல்லிலிப் படிகளில் ஏறியவரை பாபா ஏன் இறங்கச் சொல்கிறார்? அங்கே கூடியிருந்தவர்கள் திகைத்தார்கள். மாதவராவ் திடுக்கிட்டு அப்படியே நின்றார்.

ஆனால் மிகச்சில கணங்களில் பாபாவின் வார்த்தைகளில் உள்ள உண்மை தெரிந்தது. அவர்“ஏறாதே, நில்!’ என்றது மாதவராவை அல்ல; மாதவராவின் உடலிலில் ஏறிக்கொண்டிருந்த பாம்பின் விஷத்தை! அவர் “இறங்கு’ என்று கட்டளையிட்டதும் மாதவராவுக்கல்ல; அந்த விஷத்திற்குத்தான்.

அடுத்த கணமே அந்த தெய்வத்தின் கட்டளைக்குப் பணிந்து மாதவராவின் உடலிலில் கிடுகிடுவனெ ஏறிக்கொண்டிருந்த விஷம் அப்படியே ஏறாமல் நின்றது. பின் உடலை விட்டுக் கிடுகிடுவென இறங்கவும் தொடங்கியது. எந்த இடத்தில் பாம்பு கடித்ததோ அந்த இடத்தின் வழியாகவே அந்தக் கொடிய நஞ்சு பூமியில் திரவமாக வடிந்து விழுந்தது.

பாபா கடகடவென்று சிரித்தார். “”அன்பனே!

நான் ஏறாதே என்று சொன்னதும் உன் உடலிலில் ஏறிக் கொண்டிருந்த விஷம் என் கட்டளைக்குப் பணிந்து கீழே இறங்கிவிட்டதே? அந்த விஷம் இறங்கி பூமியை நனைத்திருப்பதைப் பார். இனி உனக்கென்ன கவலை? மேலே வா!” என்று பாசத்தோடு அழைத்தார்.

கூட்டம் இந்த வியப்பான காட்சியைப் பார்த்து திகைத்திருந்தது. அடியவர்களைக் காப்பாற்றுவதில் பாபா காட்டும் வேகத்தை அறிந்து அனைவர் கண்களும் தளும்பின. மாதவராவ் இரண்டாம் பிறவி அடைந்ததாகவே உணர்ந்து, கண்களில் கண்ணீர் வழிய பாபாவின் கால்களில் விழுந்து வணங்கினார். பாபா ஒருபோதும் தம் அடியவர்களைக் கைவிடுவதில்லை என்பதை கூட்டம் புரிந்துகொண்டது.

உடலிலில் ஏறும் விஷத்தை இறக்குவது மட்டுமல்ல பாபாவின் வேலை. மனதில் ஏறும் காமம், குரோதம் போன்ற விஷங்களையெல்லாம் இறக்கக் கூடியது பாபாவின் நாமம். பாபாவின் அடியவர்கள் அவரை எண்ணி தியானம் செய்தும், அவர் நாமத்தைப் பலமுறை உச்சரித்தும் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

பாபாவைப் பொறுத்தவரை உலகில் உள்ள எல்லா ஆண்களும் அவரது சகோதரர்கள். ஒரே கடவுளுக்குப் பிறந்த பிள்ளைகள். இதில் ஜாதி, மத வேறுபாடு இல்லை. அதுபோல் எல்லாப் பெண்களும் அவரவர் வயதையொட்டி பாபாவின் சகோதரிகள் அல்லது தாய்மார்கள். “எனக்கு எண்ணற்ற அம்மாக்கள் இருக்கும்போது என் உடல் நலத்தைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?’ என்று கேட்டுவிட்டு அவர் சிரிப்பதுண்டு.

காமத்தைத் துறக்க வேண்டும் என்பது பாபா போதித்த போதனைகளில் மிக முக்கியமானது. ஒருசமயம் பாபாவை தரிசிக்க இரு பெண்கள் வந்தார்கள். அவர்களில் இளையவளான ஒருத்தி மிகுந்த எழிலோடு விளங்கினாள். அவளைப் பார்த்த பாபாவின் அடியவர் களில் ஒருவரான சந்தோர்க்கர் என்பவர் அந்த அழகை வியந்து சற்றுநேரம் பார்த்துக் கொண்டே இருந்தார். பாபாதான் ஒரு பார்வையிலேயே மற்றவர்களின் மனதில் ஓடும் ரகசிய எண்ணங்களைக்கூட படித்துவிடுவாரே?

தன் அடியவரின் முதுகில் ஒரு தட்டுத் தட்டினார் பாபா. “”அன்பனே! இயற்கையில் எல்லா அழகும் ரசிப்பதற்குரியதுதான். ஆனால் உன் உள்ளத்தைக் கறைபடியாமல் பார்த்துக்கொள். காமப் பிசாசு மனதின் உள்ளே புகுந்துவிட்டால், ஒருநாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் அது உள்ளிருந்து தன் வேலையைக் காட்டாமல் விடாது. எனவே காமம் புகாமல் மனதை பக்திக் கவசம் கொண்டு மூடிக் காக்க வேண்டியது அவசியம்” என்றார். அந்த அன்பர் வெட்கத் துடன் தலைகுனிந்து கொண்டார்.

இந்துக்கள் தங்கள் முறைப் படி அவரை வணங்குவார்கள். இஸ்லாமியர்கள் அவர்கள் முறைப்படி பாபாவைத் தொழுவார்கள். இரண்டையும் அன்போடு ஏற்பார் பாபா. அவரவர்விரும்பியவாறு காட்சி தந்தார் அவர்.

மேலோட்ட மாகப் பார்த்தால் ஒரு சராசரி பாமரனைப்போல அவர் தென்படுவார். ஆனால் எல்லாரும் நினைத்து நினைத்து வியக்கும் வகையில் புத்திசாலிலித்தனமாக அவர் செயல்படுவார். தண்ணீரால் விளக்கெரிப்பது உள்பட பல அற்புதச் செயல்களைச் செய்த போதும் அவர் குழந்தை போல தான் தென்படுவார். அப்படியே கள்ளம் கபடமில்லாமல் மென்மையான குரலிலில் பேசுவார். ஆனால் தன் அடியவர்களைக் காப்பாற்றுவதற்காக சிற்சில நேரம் வஞ்சக மனம் கொண்டோரிடம் கடுமையாக அவர் சீறுவதும் உண்டு. அப்போது அவர் முகத்தைப் பார்த்தால் ருத்ர தாண்டவமாடும் பரமசிவனைப் பார்ப்பதுபோல் இருக்கும். தீயவர்களைக் கடிந்து நல்லவர்களைக் காப்பாற்றுவதில் அத்தனை உக்கிரம் அவருக்குண்டு.“பரித்ராணாய சாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே’ என்ற கண்ணனின் வழித்தோன்றல்தானே அவர்? பலரது நோயை குணப்படுத்தும் அற்புதஆற்றல் பாபாவிடம் உண்டு. தங்கள் நோய் தீரவேண்டும் என்று பாபாவின் அருளை நாடிவரும் அடியவர்களும் ஏராளம் உண்டு. தன்னை நாடிய அடியவரின் நோயை பாபா தீர்க்காமல் இருந்ததே இல்லை. பிறவிப் பிணியையே தீர்த்து வைக்கக்கூடிய அருளாளரான அவருக்கு உடல் பிணியைத் தீர்ப்பது ஒரு பொருட்டா என்ன?
பாபா மருந்தெனப் பரிந்துரைப்பவை பலவும் எளிய பொருட்களாகத்தான் இருக்கும். நோயை குணப்படுத்தும் சக்தி உண்மையில் அந்தப் பொருளில் இருக்கவில்லை. அந்தப் பொருளில் பாபா செலுத்துகிற ரகசிய சக்தியில் இருந்தது அது.

பாபா ஸித்தி அடைந்த  பின்னரும்-  என்றும் வாழும் சித்தரான பாபாவின் அருளால் தங்கள் நோயைத் தீர்த்துக் கொள்ளும் அடியவர்கள் இப்போதும் பலர் உண்டு. நோயைத் தீர்ப்பது பாபாமேல் அவர்கள் கொண்டிருக்கும் பூரண நம்பிக்கைதான். சூட்சும உருவில் பாபா தங்களை குணப்படுத்துவதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் பாபா மேல் கொண்ட நம்பிக்கை இதனால் மேலும் மேலும் வலுவடைகிறது.

பக்தர்களின் எதிர்காலத்தில் நடக்க விருப்பதை பாபா அறிவார். வந்த துன்பம், வந்திருக்கும் துன்பம் இவற்றிலிலிருந்து மட்டுமல்ல; வரவிருக்கும் துன்பத்திலிலிருந்தும் தம் அடியவர்களைக் காப்பாற்றுவதை பாபா ஒரு கடமையாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை காகா சாகேப் தீட்சித் என்ற அன்பர் பாபாவை தரிசிக்க வந்தபோது, “அன்பனே! கவலைப்படாதே. உன் சுமையை நான் சுமக்கிறேன்!” என்று பாபா அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிலி அவரை ஆறுதல்படுத் தினார். அந்த அன்பருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்போது அவருக்குத் துன்பம் தரும் எந்தச் சுமையும் இருக்கவில்லை.

அவர் பாபாவை வணங்கிவிட்டுப்போன சில நாட்களில் அந்த விசித்திரமான சம்பவம் நடந்தது. அவரது ஏழு வயதுப் பெண்குழந்தை ஒரு மர அலமாரி அருகே போனபோது, எப்படியோ அந்த அலமாரி சடாரென்று குழந்தையின் மேலே விழுந்து குழந்தையை மூடிக்கொண்டுவிட்டது. குடும்பத்தினர் அனைவரும் குழந்தை இறந்துவிட்டாள் என்றே கண்ணீர் விட்டுக் கதறத் தொடங்கினர்.

அத்தகைய பெரிய மர அலமாரி மேலே விழுந்தால் பெரியவர்களே பிழைப்பது அரிது. அப்படியிருக்க இனி குழந்தையின் உடல்தான் கிட்டும் என அவர்கள் பதறிக் கதறினார்கள்.

ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த மர அலமாரியைப் பலர் சேர்ந்து தூக்கியபோது, அதன் அடியிலிருந்த குழந்தை கலகலவென்று சிரித்துக் கொண்டே ஓடிவந்து தன் தாயின் காலைக் கட்டிக்கொண்டது! அப்போதுதான் அலமாரிச் சுமை குழந்தையைத் தாக்காமல், அந்தச் சுமையை பாபா தாங்கியிருக்கிறார் என்பதை அந்த அடியவர் புரிந்துகொண்டார்.

ஓடோடிப்போய் பாபாவை வணங்கினார் அவர். பாபா சிரித்துக் கொண்டார். அன்பர்களின் பாவ மூட்டைகளின் சுமையையே வாங்கிச் சுமந்து அவர்களின் முன்வினைகளைத் தீர்க்கும் பாபாவால் ஓர் அலமாரியின் சுமையைத் தாங்க முடியாதா என்ன?

பாபா ஓர் அவதாரமே என்றாலும், அவர் உடல் தரித்து வாழ்ந்தால் அந்தப் பொன்னுடலை நீத்து அருளுடல் அடையவேண்டிய காலம் ஒன்று வரத்தானே செய்யும்?

ஒருநாள் பணியாளன் ஒருவன் கூட்டிப் பெருக்கும்போது ஒரு செங்கல்லை கைதவறிக் கீழே போட்டு உடைத்துவிட்டான். அது சாதாரண செங்கல் அல்ல. பாபாவின் குருநாதர் அவருக்கு அளித்த செங்கல். பாபா உட்காரும் போது கைத்தாங்கலாக வைத்துக்கொள்ளும் செங்கல் அது. ஏனோ அந்த செங்கல் உடைந்தது குறித்து பாபா கவலை கொண்டார். அது புனிதச் செங்கல் என்றும், அது உடைந்தபின் தன்னால் இந்த உடலோடு நெடுநாள் இருக்க முடியாது என்றும் அவர் தமக்குத்தாமே சொல்லிலிக் கொண்டார். அதைக் கூர்ந்து கேட்ட அடியவர்கள் மனம் பதறினார்கள்.
பாபா தாம் ஸித்தி அடைவதற்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்தே வஸே என்ற அன்பரை அழைத்து தம் அருகே அமர்ந்து ராமாயணம் படிக்கச் சொன்னார். ராமாயணத்தை மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பதில் பாபாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் மறுபடி மறுபடி படித்து அந்த அன்பருக்குத்தான் வாய் வலிலித்தது. அவரது சோர்வைப் பார்த்த பாபா அவரை போகச் சொல்லிவிட்டு அமைதியாக தியானத்தில் ஆழ்ந்தார்.

அடுத்துவரும் நாட்களில் பாபாவின் பேச்சு மிகவும் குறைந்துவிட்டது. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடக்கப் போகிறது என்று அன்பர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள்.

“”பாபா! நீங்கள் சென்ற பிறகு எங்களின் கதி என்ன? யாரைப் பற்றுக்கோடாகக் கொண்டு நாங்கள் வாழ்க்கை நடத்துவோம்?” என்று ஓர் அன்பர் வெளிப்படையாகவே ஒருநாள் அவரிடம் கேட்டார்.

“”நான் என் உடலைவிட்டுப் போனாலும் உங்கள் அனைவரையும் காத்து வருவேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்களைக் காப்பாற்ற ஓடோடி வருவேன். சிறிது காலத்திற் குத்தான் நான் மேலே செல்கிறேன். மறுபடியும் உங்களிடம் கட்டாயம் வருவேன். என் அன்பர்களைவிட்டு நான் இருக்க இயலாது. நான் மறைந்தாலும் என் அருள் இயக்கத்தால் இந்தப் பிரதேசம் முழுவதும் சுறுசுறுப்படையும். அதை நீங்கள் பார்த்து மகிழத்தான் போகிறீர்கள்!” என்று பாபா உறுதிபடக் கூறினார். இதை அவர் ஒரு வாக்குறுதிபோலவே தம் அடியவர்களிடம் தெரிவித்தார். அடியவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இவ்விதமெல்லாம் உறுதியளித்து பாபா மெல்ல மெல்லத் தம் அடியவர்களைத் தமது மறைவுக்குத் தயார் செய்தார். 1918 அக்டோபர் பதினைந்தாம் தேதி. அன்று விஜயதசமி நாள். அவர் இயற்கைப் பெருவெளியில் கலக்க நினைத்த நாள்.

எல்லாரையும் சீக்கிரம் போய்ச் சாப்பிடுங் கள் என்று சொன்னார் பாபா. தம் பக்தையான லட்சுமியை மட்டும் இருக்கச் சொன்னார். தம் தலையணை அடியிலிலிருந்து தாம் வைத்திருந்த ஒன்பது நாணயங்களை எடுத்தார். அவற்றை தம் உள்ளங்கையில் வைத்தவாறு, “”இவை ஒன்பது விதமான கடவுள் ஈடுபாட்டைக் குறிப்பவை.

இவற்றை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்!’ என்று சொல்லிலி கனிவோடு லட்சுமியிடம் கொடுத்தார். லட்சுமி ஒரு விம்மலுடன் அந்த நாணயங்களை வாங்கிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளுக்கு பாபா விடைபெறப் போகிறார் என்ற உண்மை புரிந்துவிட்டது. பாபாவின் தலை சாய்ந்தது.

பாபாவின் பொன்னுடல் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களுமான ஆயிரக்கணக்கான அடியவர்கள் பாபாவின் பொன்னுடலுக்கு வந்து அஞ்சலி செலுத்திக் கதறினார்கள். சாயிபாபாவின் பொன்னுடல் பூட்டிவாடா என்ற இடத்தில் உள்ள திருக்கோவிலிலில் அடக்கம் செய்யப்பட்டது. ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒருபுறம் ஒலிலிக்க,அல்லாஹூ என்ற இஸ்லாமியர்களின் முழக்கம் ஒருபுறம் ஒலிலிக்க, பாபா மண்ணில் புதையுண்டார்.

“நீ என்னைப் பார்த்தால் நான் உன்னைப் பார்ப்பேன்!’ என்பதல்லவா பாபாவின் அருளுரை? இப்போதும் தன்னைப் பார்க்கும் அடியவர்கள் துயரையெல்லாம் துடைப்பவராக பாபா தொடர்ந்து அருளாட்சி செய்துவருகிறார். என்றும் வாழும் சித்தர்களுக்கு அழிவேது? அவர்கள் அழியாத பரம்பொருளின் வடிவமல்லவா?

(தொடரும்)

18-10-2013= மகா அன்னாபிஷேகம், துலா ஸ்தானம்

வ்வாண்டின் ஐப்பசி மாதம் பௌர்ணமி திதியில் பிறப்ப தால் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. துலா ஸ்நானமும், அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறும் வைபவங்கள் என்பதால், ஐப்பசி மாதத்திற்கு மேலும் சிறப் பைக் கூட்டுகின்றன.
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத் தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும், துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந் தார்; அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவியானவள் காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். மேலும், காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு “வீரஹத்தி’ தோஷம் பற்றியது. இதனைப் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல், ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.

ஐப்பசி பௌர்ணமியில் மட்டும் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் தினமும் காலை பதினோரு மணியளவில் ஸ்ரீரத்னசபாபதிக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். பூஜைகள் முடிந்ததும் அந்த அன்னத்தைப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர்.

ஐப்பசி பௌர்ணமியில் சிவலிங்க மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் சிவாம்சம் பெற்றது. அன்று சிவ தரிசனம் செய்து, அன்னாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டால் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பது ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக வைபவத்திற்குப் புகழ்பெற்று விளங்குவது கங்கைகொண்ட சோழபுரம் திருத்தலமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், திருச்சியிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் ஏறக்குறைய தஞ்சை பெரிய கோவிலைப் போல் காட்சி தருகி றது. தஞ்சை பெரிய கோவில் விமானம் நேர் வடிவில் இருப்பதால் ஆண் அம்சம் என்றும், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் விமானம் சற்று வளைந் திருப்பதுபோல் காட்சி தருவதால் பெண் அம்சம் என்றும் கூறப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் மூலவர் பதிமூன்றரை அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்ட லிங்கத் திருவுருவத்தில் அருள்புரிகிறார். ஒரே கல்லாலான ஆவுடையாரின் சுற்றளவு அறுபது அடி. அவரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டி ருக்கும் பெரிய நந்தி கலையம்சம் நிறைந்தது. மூல ஸ்தானத்தின் உட்புற விதானத்தில் சந்திரகாந்தக்கல் பதித்திருப்பதால், நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர்த்திவலை சிவலிங்கத்தின்மேல் விழுந்தவண்ணமிருக்கும். இதனால் இக்கருவறை எந்தக் காலத்திலும் குளிர்ச்சியுடையதாகக் காணப்படுகிறது. ராஜராஜன் மைந்தனான ராஜேந்திரன் காலத்தில் (கி.பி. 1012- 1044) இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இங்கு ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடை பெற்றது. அதற்குப்பின் ஏற்பட்ட போரின் விளைவால் பாண்டிய மன்னர்கள் சோழ அரசர்களை வென்று, கோவிலைத் தவிர அரண்மனை மற்றும் தோட்டங்கள், சுற்றுப்புறக் குடில்களை அழித்தனர். இதனால் கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை.

காலம் கடந்தது; ஆட்சிகள் மாறின; நாடு சுதந்திரம் அடைந்தது. மக்களாட்சி மலர்ந்தது. இருந்தாலும் கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை.

ஒருமுறை காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தபோது இந்த பிரம்மாண்டமான கோவிலின் நிலை கண்டு  வருந்தினார்.

கோவிலில் தினமும்  பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக வைபவங்கள் மறுபடியும் நடைபெற வழிசெய்தார்.

பிரம்மாண்டமான இந்த ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு ஐப்பசி பௌர்ணமியில் நூறு மூட்டை அரிசியில் சமைத்த அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம்- ஆகம விதிப்படி மிகச்சிறப் பாக மன்னர்கள் காலத்தில் நடைபெற்றது போல் நடைபெற ஆரம்பித்தது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த 27 வருடங்களாக எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெறும் இந்த அன்னாபிஷேகம் ஐப்பசி முதல் தேதி, பௌர்ணமி நாளில் (18-10-2013) நடைபெறவிருக்கிறது. பகல் 11.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் ஆரம்பித்து, மாலை 5.00 மணியளவில் மகாதீபாராதனை நடைபெறும்.

இந்த அன்னாபிஷேகம் தஞ்சை பெரிய கோவிலில் அருள்புரியும் ஸ்ரீ பிரகதீஸ் வரருக்கும் வெகுசிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இதேபோல், தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் அன்னா பிஷேக வைபவம் நடைபெறும். திருப்பட்டூரில் அருள்புரியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்திலுள்ள பதினோரு சிவலிங்கங்களுக்கும் ஒரே சமயத்தில் அன்னா பிஷேகம் நடைபெறும். இக்கோவிலிலுள்ள 12 சிவலிங்கங்களையும் பிரம்மதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்று புராணத் தகவல் கூறுகிறது. ஒரே கோவிலில் அருள்புரியும் 12 சிவலிங்கத் திருமேனிகளின் அன்னாபிஷேகத்தை ஒரே சமயத்தில் தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்வு கிட்டும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இதேபோல் திருவண்ணாமலையில் அருள்புரியும் ஸ்ரீஅண்ணாமலையாருக்கும்- மலையைச் சுற்றியுள்ள அஷ்டலிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்று கிரிவலம் வரும் பக்தர்கள் இதனை தரிசித்து இரட்டைப் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த வாய்ப்பு இந்த வருடம் பக்தர்களுக்குக்  கிட்டுகிறது.

பௌர்ணமியன்று சந்திரன் முழுமையாகத் திகழ்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். சிவன் பிம்பரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்பிரூபிகள். பிம்பம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் அருளும் அந்த அன்னபூரணியை தன் வாமபாகத்தில் கொண்ட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது; நாடு செழுமையுடன் திகழும்.
உயர்நிலைக்கு எளிதாய் வழிகாட்டும் தொடர்!
ராதா நடராஜன்
12

புராணங்கள்,  இதிகாசங்கள் என எதை நாம் படித்தாலும் அதிலுள்ள தத்துவத்தை உணர்ந்து கொள்வதில்தான் நம் ஆன்ம முன்னேற்றம் அடங்கியுள்ளது.

சீதையாகிய ஆத்மா ராமனாகிய பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதுதான் இராமாயணத் தின் தத்துவம். ஆத்மா இறைவனுடன் சேர்ந்தால் தான் பிறவியிலிருந்து விடுதலை பெறமுடியும்.

ராமன்- பரமாத்மா.

சீதை- ஆத்மா.

மாயமான்- ஆசை, பாசம் முதலான மாயை.

அனுமன் அசோக வனத்தில் சிறையிலிருந்த சீதையை சந்தித்தல்- சம்சார சிறையில் இருந்தாலும், பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு மட்டும் குரு தரிசனம் கிடைக்கும்.
அக்னிப் பிரவேசம்- அழுக்கான உடலை சிதையில் இடுதல்.

இரண்டு முறை ராமனைப் பிரிந்திருந்தது- உயிர், கர்மப்பலனை அனுபவிக்க பிறப்பு எடுப்பது.

சீதை பூமிக்குள் சரணடைவது- ஆத்மா இறைவனைச் சேருவது.

இந்த தத்துவம் புரிந்து மனதில் பதிந்துவிட்டால், நம் ஆத்மா இறைவனை சேருவதற்கான முயற்சி களையும் செய்யத் தொடங்குவோம்.

மகாபாரதத்தின் சாரம்

அதிக ஆசை, ஆணவம், அகங்காரம் முதலான துர்குணங்களின் காரணமாகவே ஒவ்வொரு பாத்திரமும் துயரமடைகிறது. தர்மவழியில் இறைவனை சரணடைந்து வாழ்ந்தால், போராட்டமான இந்த வாழ்விலும் நிலைத்த நிம்மதியைப் பெறமுடியும் என்பதுதான்.
பகவத் கீதையின் சாரம்:

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையது எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகின்றாய்?

எதை நீ கொண்டு வந்தாய்,

அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்,

அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை நீ கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

பலனை எதிர்பார்க்காமல் காரியத்தைச் செய்- அதுவே உன்னை நல்வழிப்படுத்தும்.

மனது அலைபாயும் போதெல்லாம் இந்த வரிகளைப் படித்தால் நிம்மதி  உண்டாகும்.

பலருக்கும் ஏன் பக்தியின் பலன் கிடைப்பதில்லை?

திடமான நம்பிக்கை, வைராக்கியம் இல்லாது போவதால் பக்தி பலிப்பதில்லை. நினைப்பது நடக்காதபோதும், துன்பங்கள் வரும்போதும் இறைவன்மேல் கோபம் கொள்ளும் மனநிலைதான் பலருக்கும் உள்ளது. “கடவுளுக்கு கண்ணே இல்லை’ என்று பலரும் வெறுத்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஒரு பெண்மணி சுவாமி படங்களைக் கழற்றி தெருவில் வீசிவிட்டார். சிலர் துயரங்களைக் கண்டு மனம் வெறுத்து, “இனி நான் பூஜையே செய்யமாட்டேன். கோவிலுக்குச் செல்லமாட்டேன்’ என்கிறார்கள். இதுவா உண்மையான பக்தி? கடலில் கட்டிப்போட்டபோதும் சிவனை நம்பிக்கையுடன் வேண்டி கரையேறிய திருநாவுக்கரசு சுவாமிகள்போல் திடமான நம்பிக்கையையும் வைராக்கியத்தையும்- சிறிதாவது நாம் முயன்று பெற வேண்டும்.

இறைவனை வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. “மின்னாயிரம்’ என்று துவங்கும் அபிராமி அந்தாதி பாடலில் (எண்- 55) “முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே’ என்று அபிராமி பட்டர் கூறுவது எவ்வளவு உண்மை!

“தகுதியில்லாத- உபயோகமில்லாத என்னைக் கொடுத்து உன்னைப் பெற்றேன்’ என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.

“தந்ததுஎன் தன்னைக் கொண்டது உன் தன்னைச்
சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என் பால்’

என்ற வரிகள், இறைவனுக்கு நம்மால் எந்தப் பயனும் இல்லை என்பதை விளக்கும். அவனைப் பெற்று பயனடைய வேண்டியது நாமே!

பொருள் அறிந்து இறைப் பாடல் களைப் படிக்கவேண்டும். அது உணர்விலே இடம்பெற்றால்தான்  “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ முடியும்.

கோவில்களுக்குப் போகும்போதும் முறையாக வழிபாடு செய்யும் முறையைத் தெரிந்து வழிபடவேண்டும்.

“கங்கை ஆடில்என்? காவிரி ஆடில்என்?
கொங்கு தண்குமரி துறை ஆடில்என்?
ஓங்குமா கடல் ஓதநீர் ஆடில்என்?
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே.’

“கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
ஆடினாலும் அறனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.’
என்கிறது தேவாரம்.

எவ்வளவு தீர்த்த யாத்திரைகள் செய்தாலும் ஈசன்மேல் உண்மையாக அன்பு இல்லாதவரது பக்தி, ஓட்டைக் குடத்தினில் நீர் அடைத்ததைப்போலவே என்று திருநாவுக்கரசர் கூறுவதை சற்று நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, தீர்த்த யாத்திரை மற்றும் கோவில்களுக்குச் செல்வதை உல்லாசப் பயணம்போல் வைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு நிமிடமும் பக்தியை வளர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, 40 நாட்கள் மது முதலியன அருந்தாமல் இருப்பது வழக்கம். இதன் நோக்கம் என்னவென்றால், என்றுமே தீய பழக்கங்களிலிருந்து விலகி யிருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இன்றைய நிலை என்ன? மலைக்குச் சென்று திரும்பியவுடனே மறுபடியும் தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். “”இப்படிச் செய்வதால் ஐயப்பன் அருள் பூரணமாகக்  கிடைப்பதில்லை” என்று பல வருடமாக சீரிய முறையில் வாழ்ந்துவரும் குரு சுவாமிகள் கூறுகின்றனர். எனவே பூரணமாகப் பலனைப் பெறும் அளவில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது மற்றும் எல்லா வழிமுறைகளின் நோக்கம்- இதயத்தின் உள்ளிருக்கும் ஜோதியை நாம் உணரவேண்டும் என்பதுதான்.

ஒரு காரியத்திற்காக இறைவனை வேண்டுதல் கூடாது. “நான் இதைத் தருகிறேன்- அதைத் தருகிறேன்- உன் கோவிலுக்கு வருகிறேன்’ என்று பேரம் பேசக்கூடாது. ஏனெனில் திருவாசகத்தில் குழைத்த பத்து- ஆறாம் பாடலில் கூறப் பட்டதுபோல வேண்டத்தக்கது அறிபவன் அவன். நமக்கு வேண்டியதையும், நமக்கு எது தகுதியோ அதையும் தருபவன் அவன்.

“முற்றத்து முல்லைக்கு மனமில்லை’ என்பதுபோல, அருகிலுள்ள கோவில்களை அலட்சியம் செய்துவிட்டு தூரத்திலுள்ள கோவில்களுக்கே போக நினைக்கிறார்கள் பலர். அருகிலுள்ள சிறுபிள்ளையாராக இருந்தாலும், அந்தக் கோவிலை சுத்தமாக வைத்து உண்மையாக பக்தி செலுத்தினால் அதுவே சிறந்தது. அந்த சிலையிலேயே நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தெய்வத்தையும் கற்பனை செய்து வழிபட முடியும். எப்படியெனில்,

“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’

அவர் அல்லவா?

“எனக்கு பக்தியைக் கொடு- கடவுளே உன் நினைவைக் கொடு- வைராக்கியம் வேண்டும்’ என்று தொடர்ந்து வேண்ட வேண்டும். அவனருளால்தான் அவன் தாளை நினைக்க முடியும் என்கிறது சிவபுராணம். “முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவன்தான் உன்னைத் துதிக்க முடியும்’ என்று சக்தியைப் பார்த்துக் கூறுவதாக சௌந்தர்யலஹரி முதல் தோத்திரத்தில் உள்ளது.

இராமகிருஷ்ணர் எவ்வளவு பெரிய மகான்! ஆனால் அவர் அந்த நிலையை அடைய எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்!

ஆரம்ப காலங்களில் தனக்கு பக்தி வரவில்லையே- தரிசனம் கிடைக்கவில்லையே என்று நொந்து தன்னை வருத்திக் கொள்வாராம். கடல் மண்ணை தன் தோல்மேல் தேய்த்துக் கொண்டு அழுவாராம். ஏங்குவாராம். ஆழமான நீர் நிலையின் அடியில் அகப்பட்டவன் மூச்சு விடுவதற்கு  எவ்வளவு தத்தளிப்பானோ- அவ்வளவு தவிப்பு இறைவனை அடைவதில் இருக்கவேண்டும் என்பது அவரது கருத்து. இது அவரது வரலாறு கூறும் உண்மை. இராமகிருஷ்ணரின் பக்தியின் அளவில் ஒரு கால் பங்கு உண்மையான பக்தி செலுத்தினாலே இறைவனை அடைவது நிச்சயம்.

மகா பெரியவர் தனது பக்தர்களிடம் உரையாடிய ஒரு நிகழ்ச்சி…!

“நீங்கெல்லாம் பக்தி வரலியேன்னு எங்கிட்ட புலம்பறீங்க. சிலர் தியானம் பண்ண வரலேங்கிறீங்க. சிலர் வைராக்கியம் இல்லேங்கிறீங்க. இதுக்கெல்லாம் என்னோட பதில்- இறைவன் மட்டும்தான் உங்களுக்கு பக்தியையும் வைராக்கியத்தையும் தரமுடியும். அந்தமாதிரி பக்குவத்தைக் குடுங்கன்னு சாமியை கெட்டியா புடிச்சிண்டு சத் விஷயங்கள் வேணும்னு உருகி அழுதீங்கன்னா- நல்லவங்களா இருந்துக்கிட்டு விடாது பக்தி செலுத்தினா- ஒருநாள், உண்மையில் அருள் கிடைக்கும்.’

மகாபெரியவர் சொன்னதை நாம் செய்முறையாகச் செய்யவேண்டும்.

உண்மையான பக்தி வராவிட்டாலும் உண்மையான அடியார்களுடன் இருந்து பக்தி செலுத்த முயன்று கொண்டிருந்தாலே, அந்த முயற்சியே நம்மை வழிப்படுத்தும். இதைத்தான் திருச்சதகத்தில் மாணிக்கவாசகர்,

“நாடகத்தால் உன்னடியார்போல நடித்து

நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றேன்’

என்கிறார்.

திருமூலர் மனிதனை “நடமாடும் கோவில்’ என்றே குறிப்பிடுகிறார். எனவே சக மனிதனுக்கு உதவுவது- சமுதாய சேவை பக்தி மார்க்கத்தில் முக்கிய அங்கம். உண்மையாக சமுதாய சேவையைச் செய்பவர்கள் சில மணித்துளிகள் இறைவனை நினைத்தாலும், பெரும் பலனைத் தந்துவிடுவான் இறைவன்.

“சர்வம் பிரம்ம மயம்’ என்று சதாசிவப் பிரமேந்தரர் கூறுவதற்கு ஒப்ப, எல்லா பொருட்களுக்கும் உரிய மதிப்பு அளிக்கவேண்டும். முக்கியமாக மண்ணையும் நீரையும் சுத்தமாக வைக்க- காப்பாற்ற சிறு முயற்சியாவது செய்யவேண்டும்.

இறைமையை அனுபவிக்கும் முறை திருவாசகத்தில் திரு அண்டப் பகுதியில் இறைவனை அனுபவிக்கும் முறை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

காற்றின்         இனிமையில்-

நீரின்         குளிர்ச்சியில்-

நெருப்பின்         சூட்டில்-

ஆகாயத்தின் அமைதியில், வியாபகத்தில்-

மண்ணின் திண்மையில்-

உணர்ந்து அனுபவிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. “தசையினைச் “தீச்சுடினும், ஓம்சக்தி என்று மொழியும் திறன் கேட்டேன்’ என்று பாரதியார் சக்தியிடம் வேண்டுகிறார் அல்லவா! அந்த உணர்வுகளை நாமும் பெற வேண்டுமென்று வேண்டுதலாவது செய்யலாம்.

தலையணையின் மென்மையில்- மென்மையான துணிகளை அணியும்போது கிடைக்கும் சுகத்தில்- ஆழ்ந்து உறங்கும் முன் ஏற்படும் அமைதியில்- தூங்கி எழுந்தபின் கிடைக்கும் புத்துணர்ச்சியில்- வெய்யிலில் சென்றுவிட்டு வந்து முகத்தைக் கழுவும்போது கிடைக்கும் சுகத்தில்- ஐஸ்கிரீம் நாக்கில் பட்டு தொண்டையில் இறங்கும் இனிமையில்- அமைதி தரும் புத்தகங்களில்- இனிமையான பாடல்களில்- சிரமப்பட்டு ஒரு வேலையைச் செய்து முடித்தபின் சாதித்த ஒரு திருப்தியில்- ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் போது கிடைக்கும் நிறைவில்- குழந்தையின் சிரிப்பில்- மழைத்துளிகள் விழுந்து மண்ணிலிருந்து ஏற்படும் வாசனையில்- இப்படி எல்லாவற்றிலும் இறைமையை உணர பயிற்சி செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால்  ஊஸ்ரீந்ஸ்ரீட்ஹழ்ற் என்ற தத்துவஞானி கூறுவதுபோல, கடவுள் நமது மூச்சைவிட மிக நெருக்கமாக நம்முள் இருக்கிறார்.

ஒரு மனிதன் இறைவனிடம் கேட்டான்: “”வாழ்க்கை என்றால் என்ன?”

இறைவனின்  பதில்: “”அனுபவமே வாழ்க்கை”.

“”அதை எப்படி அறிவது?”

“”வாழ்ந்து பார், அனுபவத்தைப் பெறமுடியும்.”

“”வாழ்ந்து பார்த்துதான் அனுபவத்தைப் பெறமுடியும் என்றால்- கடவுள் என்பது எதற்காக?”

“”அந்த அனுபவமே நான்தானே.”

“அனுபவமே கடவுள்’ என்பதால் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து, எல்லாவற்றிலும் இறைமையை இணைத்து அனுபவித்து வாழ்ந்தால் அதுதான் உண்மையான பக்தி.

இந்த அனுபவத்தை உணரும் முறைகளைதான் கடந்த பல இதழ்களில் பார்த்தோம்.

காரல்மார்க்ஸ் கூறுவதுபோல, மாற்றம் என்பதே மாற்ற முடியாத சட்டம் என்றால், நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதும் சாத்தியம்தானே? “சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது ஆன்மாவின் இயல்பு என்று சைவசித்தாந்தம் கூறுவதற்கேற்ப, ஆன்மா இறைவண்ணமாதலும் சாத்தியம்தான். நீடித்த இடைவிடாத உறுதியான தியானத்தால்- பக்தி உணர்ச்சியால் அனைவரும் இக- பர சுகத்தைப் பெற்று, வீடுபேற்றையும் நிச்சயம் பெறமுடியும்.

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ளம் என்னகத்தேபொங்குகின்றது என்று எண்ணி போற்றி நின்றால் போதுமடா!

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியது என்று
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா!
-பாரதியார்

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
-திருநாவுக்கரசர்

ஒவ்வொரு மூச்சிலும் பக்தியை வளர்ப்போம்.
திருநாராயணனின் திருப்பாதங்கள் போற்றி!
திருச்சிற்றம்பலம்.

(நிறைந்தது)

11

சித்தர் பாடல்களைப் பார்க்கும்போது மிக சாதாரண விஷயமாகத் தெரியும். பல வார்த்தைகளுக்கு அர்த்தமும் புரியாது. நேரிடையாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் இருக்கும். பொருளுணர்ந்து பார்க்கும்போதுதான் தத்துவம் புரியும். இதில் சிலவற்றை அறிந்துகொண்டு மனதில் போட்டுவைத்தால் இறையுணர்வு எப்போதும் இருக்கும்.

“மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால் ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?’

குதம்பை என்றால் காதில் அணியும் ஒரு நகை. இந்தப் பாடலை எழுதியவரும் குதம்பைச் சித்தர்தான்.

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியானது சஹஸ்ராரத்தை அடையும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அதன்விளைவாக அமிர்தத் தேன் உடலெங்கும் பரவும். இந்த அமிர்தத் தேனைத்தான் மாங்காப்பால் என்று இங்கே குறிப்பிடுகிறார். “மங்கா’ என்றால் நிலைத்த, என்றும் பொலிவான என்று பொருள். மங்கா என்பதுதான் கவிதைக்காக மாங்கா என்று பாடப்பட்டுள்ளது.

தேங்காப்பால் என்பது சிற்றின்பங்களைக் குறிக்கும்.

பேரின்பத்தை உணர்ந்தவர்கள் சிற்றின்பத்தை நாடமாட்டார்கள். இப்படி இறை இன்பத்தை உணர்ந்தவர்களுக்கு கரும்பும் துவர்க்குமாம்; செந்தேனும் புளிக்குமாம். இதைத்தான் அருணகிரியார் “கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே’ என்று கந்தர்

அலங்காரத்தில் கூறியுள்ளார்.

அது சரி; அந்த மாங்காப்பாலை உண்ணும்விதம் எப்படி?

அழுகணிச் சித்தர் பாடல் ஒன்று இதை விளக்கும்.

“உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரம் தானெடுத்து
கச்சை வடம் புரிய காயலூர் பாதையிலே
வச்சு மறந்தல்லோ- என் கண்ணம்மா
வகை மோசமானேன்டி.’

ஆக்ஞையில் (இரு புருவங்களுக்கு நடுவில் தியானம் செய்து) பிரம்ம எந்திரத்தை தரிசித்து நினைத்தால் அமிர்தத் தேனைப் பருகமுடியும். பேரின்பம் பெறமுடியும் என்பது கருத்து.

மச்சி என்பது உள்நாக்குக்கு மேலே.

ஊசிமுனை வாசல் என்பது பிரம்ம எந்திரம். இதற்குதான் காயலூர் பாதை எனப் பெயர்.

வானுதிரம் என்றால் குண்டலினி சக்தி.

கச்சை வடம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலிய மூச்சு இயங்கும் நாடிகள்.

நடுநெற்றியைத்தான் திரு அண்ணாமலை என்று குறிப்பிடுவர். காரணப்பெயராகவே திருவண்ணாமலை சேத்திரம் அமைந்துள்ளது. “அண்ணாமலையை நினைத்தால் முக்தி’ என்பதன் பொருள், நடுநெற்றியில் ஒளியை தரிசிப்பதுதான்.

ஞானக்கண்ணை மறந்து உலக வாழ்வில் திரிவதை, “வச்சி மறந்தல்லோ வகை மோசம் போனேன்’  என்று குறிப்பிடுகிறார்.

இப்படி பேரின்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிட்டால் என்னவாகும்?

பிறப்பு- இறப்பு என்ற வட்டம் தொடரும்.

இறப்பு  பிறப்பு

பிறப்பு இறப்பு

இறைவன் உடல் தந்ததன் நோக்கம் நிறைவேறாமல் ஆகிவிடும்போது மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது. இதைத்தான்,

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி- அதை
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி’

என்னும் சித்தர் பாடல் விளக்குகிறது.

கடவுள் அருளால் பத்து மாதம் கருவிலிருந்து உயிரானது உடலைப் பெறுகிறது. இறைவன் உடல் கொடுப்பதன் நோக்கமே, இறைவனை உணர்ந்து அவனை அடையவேண்டும் என்பதுதான். ஆனால் மக்கள் மாயையில் சிக்கி, கண்டபடி வாழ்ந்து, உடலை வீணாக்கி, நாட்கள் சென்றபின் இறந்துவிடுகின்றனர்.

இதைத்தான் “கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி’ என்று சித்தர் கூறுகிறார்.

இந்த கருத்தைதான் திருநாவுக்கரசர், “பிறந்தவாறு ஏதோ எண்ணிற் பெருநோய்கள் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே’ என்று ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் நமக்காக வருத்தப்பட்டுக் கூறுகிறார்.

பிறப்புக்கு காரணம் விஷய வாசனை. விஷய வாசனை என்றால் என்ன?

உலகம் சம்பந்தப்பட்டவை விஷயங்கள் எனப்படும். இதையே “விஷய வாசனை’ என்கிறோம். நமது துன்பத்துக்கெல்லாம் காரணம் இந்திரியங்களுக்கு உட்பட்ட விஷயங்களில் மாட்டிக்கொள்வதுதான். நின்று நிலைக்கும் சுகம்- துக்க கலப்பே இல்லாத சுகம்- இவை எதுவும் நமக்குத் தெரியாமலே ஆகிவிடுகிறது. இந்த விஷய வாசனைகள் குறைந்தால்தான் உள்ளதை உள்ளவாறு உணரமுடியும். ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்ள வேண்டுமென்று ஆசை வருகிறதே- அந்த உணவை நேரடியாகக் கண்ணால் பார்க்காதபோதும்! அது எப்படி வருகிறதென்றால், முன்பு அதே உணவை ருசித்த அனுபவம்தான் எண்ணப் பதிவாகிவிடுகிறது. இதுபோன்று பல வாசனைகள்தான் நம்மை செயலாற்றச் செய்து கர்மபலன் ஏற்பட்டு விடுகிறது. இதுவே பிறப்புக்குக் காரணம்.