விரதங்கள்

புரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்

புரட்டாதி சனி விரதம்

“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்

8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.

இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனீஸ்வர பகவான் இதை முழுவதும் படியுங்கள்

சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.

ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை  வணங்கலாம் .

சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.

சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.

கந்த சஷ்டி கவச  பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.

இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.

சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.

ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின்  அருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.

சனீஸ்வர தீபம்.......

முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.

இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

புஷ்பாஞ்சாலி....

சனி பகவானுக்கு வன்னி மலர் மற்றும் நீலோற்பல மலர் மிகவும் விருப்பமானது. சனி பகவானுக்கு உரிய சனிக்கிழ

பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்.

ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.

சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.

சாயாதேவிக்கு தப்தி (பத்திரை) சாவர்ணிக மனு சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.

சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.

எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது. கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.

சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள்.  கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.

இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சக்திக்கு மீறிய கவசம் எது? ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.

பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன். அதற்கு சாதாரண முகம் உதவாது. யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.

காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.

அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது. அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார்.  சனி என்ற சிருதகர்மா தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.

தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய் இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.

மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான் நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறா ர்

சனீஸ்வர பகவான் இதை முழுவதும் படியுங்கள்
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.

ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை வணங்கலாம் .

சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.

சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.

கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.

இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.

சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.

ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் அருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.

சனீஸ்வர தீபம்…….

முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.

இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் – நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

புஷ்பாஞ்சாலி….

சனி பகவானுக்கு வன்னி மலர் மற்றும் நீலோற்பல மலர் மிகவும் விருப்பமானது. சனி பகவானுக்கு உரிய சனிக்கிழ
பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்.

ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.

சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.

சாயாதேவிக்கு தப்தி (பத்திரை) சாவர்ணிக மனு சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.

சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.

எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது. கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.

சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள். கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.

இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சக்திக்கு மீறிய கவசம் எது? ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.

பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன். அதற்கு சாதாரண முகம் உதவாது. யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.

காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.

அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது. அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். சனி என்ற சிருதகர்மா தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.

தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய் இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.

மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான் நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறா ர்

பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப் பட்ட கற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது. நாகங்களை கௌரவித்து வழிபடுவதற்காக கொண்டாடப்படும் உற்சவமே நாக பஞ்சமி. ஆடி மாத வளர்பிறை பஞ்சமி யன்று இது கொண்டாடப்படுகிறது.

ஹேமாத்ரி என்ற சமஸ்கிருத கிரந்தத்தில், நாக பஞ்சமியன்று நாக பூஜை செய்யும்போது அனுஷ்டிக்கப் படவேண்டிய நியமங்கள் கூறப்பட்டுள்ளன.

பஞ்சமிக்கு முதல் நாளாகிய சதுர்த்தியன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். பஞ்சமியன்று பகலில் உண்ணாமல் இரவு மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளி, மரம், மண், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் நாக உருவத்தைச் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் பாம்புக் கோலமிட்டு அலரி, மல்லிகை,செந்தாமரை போன்ற மலர்களாலும் சந்தனப்பொடி போன்ற வாசனை திரவியங் களாலும் பூஜை செய்யவேண்டும். அஷ்ட நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பிங்களன், சங்கன், பத்மன், மஹாபத்மன் ஆகியவை இன்னமும் பூமியில் வாழ்வதாக மக்கள் நம்புவதால், இவை எட்டும் பூஜிக்கப்படுகின்றன. அன்றைய தினம் அன்னதானம் செய்வது சிறப்பானதென கூறப் பட்டுள்ளது.

நாகபஞ்சமியன்று பெண்கள் விடியற் காலையில் எழுந்து நீராடி தேன், பால் ஆகியவற்றை நாகத்துக்குப் படைத்து வழிபடுவர். இவ்வாறு வழிபடுவதால் மலடு நீங்கி புத்திர பாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் நாகதோஷமுள்ள பெண்கள் விரதமிருந்து பூஜை செய்வார்கள். பாம்புப் புற்றை வணங்கிவிட்டு வரும்போது, சிறிது புற்று மண்ணை எடுத்துவருவார்கள். வீட்டிற்கு வந்ததும் அந்த மண்ணுடன் சிறிதளவு அட்சதையைக் கலந்து மூத்த சகோதரர்களிடம் ஆசிபெறுவர். சகோதரர் கள் இளையவர்களாக இருந்தால், சகோதரி கள் அவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள். சகோதரிகளுக்கு சகோதரர்கள் அன்பளிப்பு கள் வழங்கி மகிழ்வர்.

நாகங்களுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்பப்படுவதால், பாம்புகள் உரிக்கும் தோலுறைகளைப் புனிதமானதாகக் கருதி பாதுகாக்கும் வழக்கமும் உண்டு.

ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய நாட் களில் நாக வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்துவருகிறது.

இந்துக் கடவுளரோடு தொடர்புபடுத்தி நாகங்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

விநாயகர் கையில் மற்ற ஆயுதங்களோடு நாகாபரணம் தரித்து விளங்குவதையும், சிவபெருமான் கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்திருப்பதையும் காண்கிறோம்.

யமுனையை விஷமாக்கிய காளிங்கன் என்ற நாகத்தின் தலைமேல் கிருஷ்ணபகவான் நர்த்தனம் செய்து, யமுனை நதியிலிருந்து அவனை விரட்டி நீரை சுத்தமாக்கியதோடு, சாபத்தினால் நாகமான காளிங்கனுக்கு விமோசனமளித்த நிகழ்வை ஸ்ரீமத் பாகவதத்தின் மூலம் அறிகிறோம். அஸ்தினாபுர மன்னன் ஜனமேஜயன் முதன்முதலில் பாம்பு யக்ஞம் செய்தான் என்ற செய்தியும் மகாபாரதத்தில் கூறப்படுகிறது.

நாக பஞ்சமியன்று நிலத்தை உழக்கூடாது என்பது சம்பிரதாயம். எலிகளைத் தேடி பாம்புகள் நிலத்தில் சுற்றிவரும்போது, கலப்பையின் நுனி அதன் உடலில் பட்டு துன்பம் நேரிட்டுவிடக்கூடாது என்பதற் காகவே அன்றைய தினம் நிலத்தை உழுவ தில்லை. இதைப்பற்றிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.

ஒரு விவசாயி நிலத்தை உழுதுகொண்டி ருந்தான். அப்போது கலப்பையின் நுனியில் சிக்கி சில பாம்புக்குட்டிகள் இறந்தன. பின்னர் அங்குவந்த தாய்ப்பாம்பு தன் குட்டிகள் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. விவசாயிதான் இதற்குக் காரணமென்பதை ஊகித்த பாம்பு, அவனையும் அவன் குடும்பத்தினரையும் கடித்து மரணமடையச் செய்து பழிவாங்கியது.

விவசாயியின் மகள் அந்த ஊரிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் வசித்துவந்தாள். அவளைக் கொல்வதற்காக பாம்பு அங்குசென்றது. அந்நேரம் விவசாயியின் மகள் அவளது வீட்டில் நாகபூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள்.

அதைக்கண்ட பாம்பு சற்று தயங்கியது. பூஜை செய்யுமிடத்தில் நாகம் வந்திருப்பதைக் கண்ட அந்தப் பெண் மகிழ்ந்து அதை வணங்கினாள். அப்போது பாம்பு, “”உன் தந்தை செய்த தவறால்என் பிள்ளைகள் இறந்துபோனார்கள்.

அதற்காக உன் குடும்பத்தினர் எல்லாரையும் பழிவாங்கிவிட்டேன். எஞ்சியிருப்பது நீ மட்டும்தான். உன்னைக் கொல்லவே இங்கு வந்தேன். ஆனால் நீ நாகபூஜை செய்பவள் என்றறிந்து தயங்கி நிற்கிறேன்” என்றது.

அந்தப் பெண் நாகத்தை பலவாறு பூஜித்து, “”என் தந்தை அறியாமல் செய்த பிழையை மன்னித்து அவர்களை உயிர்பெறச் செய்யவேண்டும் தாயே” என்று மனமுருகி வேண்டினாள்.

அவளது கோரிக்கைக்கு மனமிரங்கிய பாம்பு, அவளது குடும்பத்தினரை உயிர்பெற்றெழச் செய்தது. அதன்காரண மாகவே நாகபஞ்சமியன்று பண்டிகை முடிவடையும்வரை நிலத்தை உழக்கூடாதென்ற மரபு உறுதியாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.

இவ்வரலாற்றின் மூலம் நாகவழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

நாகப்பாம்புகளை தெய்வமாகவே மக்கள் கருதுகின்றனர். வீட்டுச் சுவர்களில் நல்ல பாம்பின் உருவம் வரைந்து, அதை மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அலங்கரித்து, உரிய நிவேதனம் படைத்து வழிபடுவார்கள். அதேபோல பாம்புப் புற்றை மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, புற்றுக்குள் பாலூற்றி நாகராஜாவை வழிபடு வார்கள். நாகத்தை முறைப்படி வழிபட்டால் குடும்பத்தில் வளமும் அதிர்ஷ்டமும் பெருகுமென்பது நம்பிக்கை.

புத்திரப்பேறு வேண்டி பிரார்த்திக்கும் பெண்கள் விரதமிருந்து அரச மரத்தை 108 முறை வலம்வருவார்கள். வேண்டுதல் நிறைவேறி அந்தப் பெண் தாயானதும், பாம்பு உருவம் செதுக்கிய நடுகல்லை அந்த அரசமரத்தின்கீழ் வைத்து தன் நேர்த்திக்கடனை நன்றியுடன் நிறைவேற்றுவாள்.

நாக பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படும் மற்றொரு பண்டிகை கருட பஞ்சமி. பட்சிகளின் ராஜாவான கருடன் நாகங்களின் பிறவி எதிரி. கருட பஞ்சமி விரதமிருந்து பாம்புப் புற்றையும் வழிபடுவதன்மூலம் பாம்புகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது நம்பிக்கை.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும், நீர்வளம், நீடித்த ஆயுள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைத் தரும் தெய்வமாக எண்ணி நாகத்தை மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

பஞ்சமியன்று நாகரையும், கருடனையும் வழிபட்டு சகோதர- சகோதரிகளின் அன்பையும் ஆசியையும் பரிமாறிக்கொண்டு வளமான வாழ்வு பெறுவோம்.

நிலம்வாழி நீர்வாழி தர்மம்வாழி ஏழுலகும்
நான்மறையும் இனிது வாழ தேவாங்கர் குலம்வாழ
படைவீட்டில் குடிகொண்ட ஸ்ரீராமலிங்க
சௌடேஸ்வரி அன்னையே போற்றி போற்றி

சூடாமணி தரித்த முடியும் மாணிக்கத் திலகமும்
அருள் சிந்தும் விழியின் அழகும்
அங்கிங் கெனாதபடி எங்கும் ஒளிவீசுகின்ற
மாணிக்க மூக்குத்தியும்
அந்தர தலத்து இரவியஞ்ச ஒளி விஞ்சும்
சிறு காது கொப்பின் அழகும்
இரவி மதியாக ஜொலி ஜொலிக்கும்
வைரமணிக் குண்டலங்கள்
மார்பினில் ஒளிர்ஆரம் திருமகளுக்கீடாக
நவமணிகள் மின்னும் அழகும்
தங்கத் தகட்டினில் புஷ்பராகம் பதித்த
மெல்லிடை நல் ஒட்டியாணமும்
திரிசூலமும் குங்குமமும் அபயகரத்தில் விளங்கும்
மரகத வளையல்களும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட
பத்து விரல் மோதிரங்கள்
நல் முத்துக்களும் ஒளிர்மாணிக்கமும் செறிந்த
பாதச் சிலம்பின் ஒலியும்
மங்கலமாம் மஞ்சள் பட்டாடை உடுத்தி
மங்காத செல்வம் தரும்
அனந்தசயனின் தங்கை சத்திசிவ ரூபத்தை
அடியனேன் சொல்லத் தகுமோ
பார்போற்றும் படைவீட்டில் புகழாக வாழ்ந்திடும்
ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னையே.

பொற்கொடி யோடுமலர்க் கொடி கொய்து
கொடுத்த மலர்த் தாமம்
இந்திரத் தனுவும் வணங்க வணங்கிடும்
இணைப் புருவக் கொடியும்
போர்க் கோலம் அன்றிநின் திருக்கோலம்
கண்டுஎன்

சிந்தை மகிழுதம்மா
அன்னையுன் பார்வையால் அண்டங்கள் யாவுமே
தடம் மாறி இயங்கும் அம்மா
பொற்கொடி இமயமடக்கொடி தேவலர்க்காக
அசுரரை வென்ற கொடி
விடைக்கொடி அவர்க்கு ஒரு கயற்கொடி தன்னை
மகிழ்ந்து கொடுத்த கொடி
எத்திசைச் சென்றாலும் அவ்விடங்களில் எல்லாம்
ஒத்த உதவி செய்து
தேவாங்கர் குலம் காக்கும் ஸ்ரீராமலிங்க
ஸ்ரீசௌடேஸ்வரி அன்னையே போற்றி
போற்றி

-பெ.அ. லட்சுமணன்

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
************************** www.fb.com/thirumarai
[12]
`ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு’ ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*ஆர்த்த – நம்மைப் பிணித்த
*பிறவித்துயர் கெட – பிறவித் துன்பம் ஒழியும்படி
*நாம் ஆர்த்து ஆடும் – நாம் மகிழ்ந்து ஆடுகின்ற
*தீர்த்தன் – தீர்த்தமாய் உள்ளவன்
*நல் – அழகிய
*தில்லைச் சிற்றம்பலத்து – தில்லையின்கண்ணுள்ள ஞான சபையில்
*தீ ஆடும் – அனலேந்தி ஆடுகின்ற
*கூத்தன் – கூத்தப் பெருமான்
*இவ்வானும் குவலயமும் – பருப்பொருளாய் உள்ள விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும்
*எல்லோமும் – நம் எல்லோரையும்
*படைத்தும் – தோற்றுவித்தும்
*காத்தும் – நிலை பெறுத்தியும்
*கரந்தும் – நீக்கியும்
*விளையாடி – விளையாடுபவனாகிய இறைவனது
*வார்த்தையும் பேசி – பொருள் சேர் புகழ்களை உரைத்து
*வளை சிலம்ப – வளையல்கள் ஒலிக்கவும்
*வார்கலைகள் – நீண்ட மேகலை முதலிய அணிகள்
*ஆர்ப்பு அரவம் செய்ய – அசைந்து ஓசை எழுப்பவும்
*அணி குழல்மேல் – அழகிய கூந்தலின்மேல்
*வண்டு – மலர்கள் விளங்குகின்ற பொய்கையில்
*குடைந்து – ஆடி
*உடையான் – நம்மை உடைய இறைவனது
*பொன்பாதம் – பொன் போன்ற திருவடிகளை
*ஏத்தி – துதித்து
*இருஞ்சுனை நீர் – பெரிய மலைச்சுனை நீரில்
*ஆடு – மூழ்குவாயாக.

விளக்கம்:

உயிர், இருவினையாகிய கயிற்றால் கட்டப் பட்டுப் பிறவியாகிய கடலுள் செலுத்தப்படலால், பிறவியை ‘ஆர்த்த பிறவி’ என்றும், இறைவன் அருளாகிய நீரைத் தன்னிடத்தே கொண்டுள்ளமையால், ‘தீர்த்தன்’ என்றும், சங்காரக் கடவுளாதலின், ‘தீயாடும் கூத்தன்’ என்றும் கூறினர்.
இறைவனை நோக்க வானுலகமும் பருப்பொருளேயாதலின், ‘இவ்வானும்’ என்ற அண்மைச் சுட்டுக் கொடுக்கப்பட்டது. இறைவன் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிந்த போதிலும் அவற்றால் விகாரப்பட்டான் என்பது, ‘விளையாடி’ என்றதனால் குறிக்கப்பட்டது.பொய்கை, சோலையிலுள்ள நீர்நிலை. சுனை, மலையிலுள்ள நீர்நிலை. பெண்டிர் பொய்கைகளிலும் சுனைகளிலும் நீராடினர் என்க. அனைவரும் நீராடுதலை ஒருவரை ஒருவர் முன்னிலைப் படுத்தி ‘ஆடு’ எனக் கூறினர். கன்னிப்பெண்கள் இறைவன் புகழைப் பாடி நீராடியபடியாம்.இதனால், இறைவனது படைத்தல் முதலிய அருட்டொழில்களின் பயன் கூறப்பட்டது.http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=265
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை

************************** www.fb.com/thirumarai

[12]

`ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்

தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்

கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,

காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,

வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்

ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,

பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்

ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*ஆர்த்த - நம்மைப் பிணித்த

*பிறவித்துயர் கெட - பிறவித் துன்பம் ஒழியும்படி

*நாம் ஆர்த்து ஆடும் - நாம் மகிழ்ந்து ஆடுகின்ற

*தீர்த்தன் - தீர்த்தமாய் உள்ளவன்

*நல் - அழகிய

*தில்லைச் சிற்றம்பலத்து - தில்லையின்கண்ணுள்ள ஞான சபையில்

*தீ ஆடும் - அனலேந்தி ஆடுகின்ற

*கூத்தன் - கூத்தப் பெருமான்

*இவ்வானும் குவலயமும் - பருப்பொருளாய் உள்ள விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும்

*எல்லோமும் - நம் எல்லோரையும்

*படைத்தும் - தோற்றுவித்தும்

*காத்தும் - நிலை பெறுத்தியும்

*கரந்தும் - நீக்கியும்

*விளையாடி - விளையாடுபவனாகிய இறைவனது

*வார்த்தையும் பேசி - பொருள் சேர் புகழ்களை உரைத்து

*வளை சிலம்ப - வளையல்கள் ஒலிக்கவும்

*வார்கலைகள் - நீண்ட மேகலை முதலிய அணிகள்

*ஆர்ப்பு அரவம் செய்ய - அசைந்து ஓசை எழுப்பவும்

*அணி குழல்மேல் - அழகிய கூந்தலின்மேல்

*வண்டு - மலர்கள் விளங்குகின்ற பொய்கையில்

*குடைந்து - ஆடி

*உடையான் - நம்மை உடைய இறைவனது

*பொன்பாதம் - பொன் போன்ற திருவடிகளை

*ஏத்தி - துதித்து

*இருஞ்சுனை நீர் - பெரிய மலைச்சுனை நீரில்

*ஆடு - மூழ்குவாயாக.

விளக்கம்:

உயிர், இருவினையாகிய கயிற்றால் கட்டப் பட்டுப் பிறவியாகிய கடலுள் செலுத்தப்படலால், பிறவியை ‘ஆர்த்த பிறவி’ என்றும், இறைவன் அருளாகிய நீரைத் தன்னிடத்தே கொண்டுள்ளமையால், ‘தீர்த்தன்’ என்றும், சங்காரக் கடவுளாதலின், ‘தீயாடும் கூத்தன்’ என்றும் கூறினர்.

இறைவனை நோக்க வானுலகமும் பருப்பொருளேயாதலின், ‘இவ்வானும்’ என்ற அண்மைச் சுட்டுக் கொடுக்கப்பட்டது. இறைவன் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிந்த போதிலும் அவற்றால் விகாரப்பட்டான் என்பது, ‘விளையாடி’ என்றதனால் குறிக்கப்பட்டது.

பொய்கை, சோலையிலுள்ள நீர்நிலை. சுனை, மலையிலுள்ள நீர்நிலை. பெண்டிர் பொய்கைகளிலும் சுனைகளிலும் நீராடினர் என்க. அனைவரும் நீராடுதலை ஒருவரை ஒருவர் முன்னிலைப் படுத்தி ‘ஆடு’ எனக் கூறினர். கன்னிப்பெண்கள் இறைவன் புகழைப் பாடி நீராடியபடியாம்.

இதனால், இறைவனது படைத்தல் முதலிய அருட்டொழில்களின் பயன் கூறப்பட்டது.

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=265           சிவபெருமானுக்குரியது சிவ ராத்திரி விரதம். அதுபோல் அம்பிகைக்குரிய விரதம் கேதார கௌரி விரதம்.

அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு.

புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரையுள்ள 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். சாஸ்திர நியமங்களின்படி இந்த விரதம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவது எனினும், தற்போது ஐப்பசி மாத அமாவாசையன்று மட்டும் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.

திருக்கயிலையில் சபா மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். தேவலோகத்தினர் இறைவனையும், தேவியையும் வணங்கிச் சென்றவண்ணமிருந்தனர்.

அப்போது பிருங்கி முனிவர், பிற முனிவர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தார். தம் வழக்கப்படி உமாதேவியைத் தவிர்த்துவிட்டு இறைவனை மட்டும் வலம்வந்து வணங்கினார்.

முனிவர் தன்னை வணங்காததால் கோபம்கொண்ட தேவி இறைவனை நோக்கி, “”திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் என்னை வணங்கும்போது பிருங்கி முனிவர் மட்டும் என்னை வணங்கு வதில்லையே” என்றாள்.

இறைவன், “”நாயகியே, உலகத்தில் காமியம், மோட்சம் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. காமியத்தை விரும்புபவர் உன்னையும் என்னையும் பூஜித்து உன்னருளால் போக போக்கியங்கள், அழகு, நிணம், குருதி, தசை முதலியவற்றைப் பெற்று உலக இன்பத்தை அனுபவித்து முடிவில் உனது பதவியையும் பெறுவர். மோட்சத்தை விரும்புபவர்கள் என்னை மட்டும் பூஜிப்பர். அத்தன்மையால் பிருங்கி முனிவர் என்னை மட்டும் வணங்குகிறார்.

நீ கோபம் கொள்ளாதே” என்றார்.

இதனைக்கேட்ட தேவி, “”எனது அம்சங்களை விட்டுவிட்டு அவர் மோட்சம் அடையட் டும்” என்று கூறினாள். தேவி கூறியதைக் கேட்டு முனிவர் தன் தவ வலிமையால் தேவியின்அம்சங்களான தசை, குருதி, நிணம் முதலியவற்றை உதிர்த்து வெறும் எலும்புருவானார். சிவபெருமான் அவரது தவ வலிமைக்கிரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றையும், தேவை யான வலிமையையும் கொடுத்தருளினார்.

தன்னைத் துதிக்காத பிருங்கி முனிவரை இறைவன் ஆட்கொண்டதால் தேவியானவள் நாணி, கயிலாயத்தை விட்டிறங்கி பூவுலகிலுள்ள தண்டகாரண்யம் சென்றடைந்தாள். மழையின்மையால் வறண்டிருந்த தண்டகாரண்ய வனம் தேவியின் வருகையால் செழிப்புற்றது. வனத்தில் ஏற்பட்டிருந்த ரம்யமான மாற்றத்தைக் கண்டு, அங்கு தவம்செய்துகொண்டிருந்த கௌதம முனிவர் தேவியின் வருகையை உணர்ந்தார். தேவியை எதிர்கொண்டழைத்து வணங்கினார்.

கயிலையிலிருந்து தான் பூலோகம் வந்ததற்கான காரணத்தைக் கூறி தன் தவறை உணர்ந்தவளாய், “”என் நாயகரை இனி நான் எவ்வாறு அடையலாம்? அதற்கேற்ற விரதம் ஒன்றினைக் கூறுங்கள்” என்று முனிவரிடம் கேட்டாள்.

கௌதம முனிவர் கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறி, அவ்விரதத்தை அனுஷ்டித்தால் இறைவன் திருவருளைப் பெறலாம் என்று கூறினார்.

அதன்படி கௌரிதேவி கேதாரம் என்னும் தலத்தில்  அந்தக் கரணங்களையும் ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்து, “”ஐயனே, தங்கள் அடியார்க்கு யான் பேதமையால் செய்த குற்றத்தைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்” என துதித்தாள். கௌரிதேவியின் பக்தியில் திருப்தியுற்ற இறைவன் தேவியை ஏற்றுத் தன் இடப்பாகத்தில் அமரச் செய்தார்.

முன்னொரு கற்பகாலத்தில் சிவபெருமான் தன் புன்சிரிப்பால் திரிபுரங்களை எரித்தார்.

தங்கள் உதவியால்தான் இறைவன் திரிபுராதிகளை அழிக்கப்போகிறார் என்று கர்வம் கொண்டிருந்த தேவர்கள், இறைவன் புன்சிரிப்பாலேயே அவர்களை அழித்துவிட்டதால் நாணி, தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி இறைவனிடம் வேண்டினர்.

“”நீங்கள் செய்ந்நன்றி மறந்தவர் ஆனீர்கள். ஆதலின், அசுரர்களால் 108 சதுர்யுகம் வரை துன்பம் அடையக் கடவீர்” என இறைவன் சாபமிட்டார். சாபம் பெற்ற தேவர்கள் வருத்தத்துடன் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

பிரம்மபுத்திரரான காசியபருக்கும், மாயைக்கும் பிறந்தவன் சூரபத்மன் என்ற அசுரன். தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தியால் மட்டுமே அழிவு என்ற வரத்தைப் பெற்றவன்.

சூரபத்மன் அக்னி மத்தியில் நின்று சிவபெருமானை நோக்கிக் கடும்தவம் புரிந்தான். இறைவன் அவனது தவத்தில் திருப்தியுற்று, “”108 சதுர்யுகங்கள் வரை அண்டங்கள் அனைத் தையும் ஆட்சி செய்வாய்” என வரமருளினார். இறைவன் அருளியபடி சூரபத்மன் உலகனைத் தும் ஆட்சி செய்ததோடு தேவர்களையும், தேவ மாதர்களையும் அடிமைப்படுத்தி அவர்களைத் துன்புறுத்தி வந்தான்.

தேவர்கள் தங்கள் நிலையை எண்ணி வருத்தத்துடன் சோலையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்குவந்த நாரதர் தேவர்களைப் பார்த்து, “”சுகமா?” என்று கேட்டார். “”சுவாமி, முன்பொரு சமயம் தாங்கள் இறைவனிடம் சாது சங்கமத்தின் பலனைக் கூறும்படி வேண்ட, இறைவன் “ஆலவிருட்சத்திலிருக்கும் அன்னப்பறவையைக் கேள்’ என்றார். தாங்கள் அன்னப் பறவையைப் பிடித்ததும் அது மாண்டது. தாங்கள் இதனை இறைவனிடம் கூறியபோது, மயிலிடம் கேட்கச் சொன்னார்… தாங்கள் அதைப் பிடித்ததும் அதுவும் மாண்டுபோனது.

இறைவன் “காசிராஜன் மனைவிக்குப் பிறக்கும் சிசுவிடம் கேள்’ என்றார்.

அக்குழந்தையைப் பொன் தட்டில் ஏந்திவரச் செய்து, “சாது சங்கமத்தால் வரும் பலனைக் கூறு’ என்றதற்கு, “நான் முற்பிறவிகளில் அன்னமாகவும், மயிலாகவும் இருந்தேன். தங்கள் கிருபையால் அப்பிறவிகள் நீங்கி காசிராஜனுக்கு மகவாய்ப் பிறந்தேன். சாது சங்கமத்தால் கிடைத்தற்கரிய பேறு பெற்றேன்’ என்றது. அத்தகைய பெருமைவாய்ந்த தங்கள் தரிசனம் கிடைத்த பின்னும் நாங்கள் சுகமில்லாதிருப்போமா?” என்றனர் தேவர்கள்.

பின்னர் சூரபத்மனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை நாரதரிடம் எடுத்துரைத்தனர். அதனைக்கேட்ட நாரதர், “”நீங்கள் அனைவரும் கேதார விரதத்தை அனுஷ்டித்தீர்கள் எனில் உங்கள் துன்பம் தீரும்” என்று கூறினார். அவர் கூறியபடியே தேவர்கள் முறைப்படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டனர். இறைவன் தேவிசமேதராய்க் காட்சி அளித்து, “”முருகப்பெருமான் தோன்றி உங்கள் துயர்களைக் களைவான்” என்று கூறி மறைந்தார். சிவதேஜஸிலிருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை வென்று  தேவர்களைக் காத்தார். தேவர்கள் கேதார கௌரி விரதத்தின் பெருமையை உணர்ந்து தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தனர்.

பார்வதிதேவி இவ்விரதத்தை அனுஷ்டித்து இறைவன் அருளால் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதால், கணவன்- மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழவேண்டும் என்பதையே இவ்விரதம் உணர்த்தும் தத்துவமாகக் கொள்ளலாம்.

“கேதார கௌரி விரதத்தை மேற்கொள் பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்’ என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம்

அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர். நாமும் அன்றைய தினம் இறைவனை வழிபட்டு நலம்பெறுவோம்.

கந்தசஷ்டி விரதத் தத்துவம்!

கே. சுவர்ணா        காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.

அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார்.

வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.

முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார்.

அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன.

அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.

கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.

கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்த முசுகுந்தன் இம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் பெற்றான் என்பதை புராண வரலாறுகள் மூலம் அறியலாம்.

முசுகுந்தன் என்ற சோழ சக்கரவர்த்தி, தேவாசுரப் போர் நடந்தபோது இந்திரனுக்குத் துணை நின்றவன். சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகள் செய்தான். போரின்போது தனக்கு உதவிசெய்த முசுகுந்தனுக்கும் இந்திரன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்.

திருமணவிழாவில் கலந்துகொண்ட முசுகுந்தன், வசிஷ்ட முனிவரிடம் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்தான். முறைப்படி சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அவனது வழிபாட்டில் திருப்தி யுற்ற முருகப்பெருமான் முசுகுந்தனுக்குக் காட்சி தந்து, “”வேண்டும் வரம்யாது?” என்று கேட்டார். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்களும் தனக்குத் துணைபுரிய அருளவேண்டுமென முசுகுந்தன் வரம் வேண்டினான்.

முருகப்பெருமான் அவ்வாறே வரமருளினார்.

ஆனால் வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் “மானிடர்க்கு உதவி செய்வதில்லை’ என்று கூறி மறுத்தனர். அதனை ஏற்காத முருகப்பெருமான் அவர்களை மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டுமுசுகுந்தனுக்கு துணைசெய்ய ஆணையிட்டார். மானிடர்களாகப் பிறந்த நவ வீரர்கள் துணையுடன் முசுகுந்தன் விண்ணுலகும் மண்ணுலகும் புகழ அரசாண்டு, கயிலையில் கணநாதர் நிலையை அடைந்தான்.

அகங்காரத்தின் வடிவமான சூரபன்மன், குரோதத்தின் வடிவமான சிங்கமுகன், மோகத்தின் வடிவமான தாருகாசுரன் ஆகிய மூவரையும் முருகப்பெருமான் அழித்தது மனிதனின் அகங்காரம், குரோதம், மோகம் ஆகிய தீய இயல்புகளை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறிப்பதே. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட, சூரபன்மன் மட்டும் கடைசிவரை போராடி முருகப் பெருமானால் ஞானம் அருளப் பெற்று அவரால் ஆட்கொள்ளப் பட்டான்.

குரோதம், மோகம் போன்றவற்றை ஒழித்துவிட்டாலும் ஆணவத்தை அடியோடு அழிக்க முடியாது என்பதையே சூரசம்ஹார நிகழ்வு உணர்த்துகிறது.

முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது- ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்)  பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.  வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து – நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்

திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்

பழனி – மணிபூரகம்

சுவாமிமலை – அனாஹதம்

திருத்தணிகை – விசுத்தி

பழமுதிர்சோலை – ஆக்ஞை.

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோக

- See more at: http://yarlosai.com/?p=59672#sthash.fjbOs7x1.dpuf

கேதார கௌரி விரத காப்பு

திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமையம்மையாளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது. பிருங்கி முனிவர் அம்பாளை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கினார். எல்லாம்வல்ல ஆதிபராசக்தி நானே, என்னை ஏன் அவர் வணங்கவில்லை என அம்பிகை சிவனிடம் கேட்க அவர் மஹா முனிவர், மோட்சம் அவருக்குக் கிடைக்கும். எனவே “ஓம் நமசிவாய” எனக் கூறி என்னை வழிபட்டார் என சிவன் கூறி னார்.

இதனால் கோபமுற்ற தேவி பூவுலகிற்கு வந்தார். இங்கே கெளதம முனிவரின் ஆலோசனைப்படி சிவலிங்கஞ் செய்து தினமும் சிவபூஜையை வில்வம் இலையால் செய்து சிவதியானத்தில் 21 நாட்கள் இருந்தார். அம்பிகையின் சிவபக்தியைக் கண்டு மகிழ்வுற்ற சிவபெருமான் 21ஆம் நாள் பூவுலகிற்கு வந்து இறைவியைத் தமது இடதுபாகத்தில் இருத்திக் கொண்டார்.

- இது கேதார கெளரிக் காப்புக் கதை.

இங்கே நாம் பார்த்தது மனக் கசப்பால் ஏற்பட்ட ஒரு விபரீத நிலையை ஆகும். என்றாலும் அஃது ஆன்மீக வழியில் இருந்தமையால் சிவனே அம்பாளை ஏற்றுக் கொண்ட நிலைப்பாட்டைக் காண்கின்றோம்.

புருஷன் மனைவியரிடையே மனஸ்தாபம் வந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற உயர்ந்த தத்துவத்தை இக்கதை எமக்கு உணர்த்துகின்றது.

சிவபூஜைச் சிறப்பைக் கூறுகின்றது. சிவ தியானம், சிவபக்தியை எடுத்தியம்புகின்றது. சிவ விரதத்தின் உயர்நிலையை எமக்குக் காட்டுகின்றது.

ஆதி பராசக்தியான உமை அம்மை தமது இதயபூர்வமான பக்தியால் சிவபூஜை செய்தார். மீண்டும் சிவனருள் பெற்று சிவபெருமானாலேயே ஆட்கொள்ளப்பட்டு அருள் நங்கையாக சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்று மங்கள வாழ்வு இதுவே என சிவனடியார்களாகிய எமக்கு நல்வழிகாட்டுகின்றார்.

கேதார கெளரி விரதம் சர்வ மங்களங் களையும் தரும் விரதம் ஆகும். கல்வி, உத்தியோகம், வியாபாரம், திருமணம் முதலானவற்றை எமக்குத் தருவதோடு நோய் நொடி அற்ற வாழ்வையும் தரவல்லது.

கேதார கெளரி விரதம் புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ தசமி முதல் ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் விரதம் ஆகும். இவ்விரதத்தை ஆரம்ப தினத்தன்று சங்கற்பித்து ஆரம்பிப்பது வழக்கம். தினமும் வீட்டில் பூஜை வழிபாடு செய்து மாலையில் விசேஷமாக தேவாலய தர்சனஞ் செய்வது வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர ஜபம், திருமுறைப்பாராயணஞ் செய்தல் வேண்டும். கேதார கெளரிக்கதையை படிக்கலாம். அல்லது கோவிலில் மாலைப் பூஜையின் பின்னர் கதை படிக்கும்போது கேட்டு வணங்கலாம்.

நோயாளிகள் மதிய போசனஞ் செய்து இரவு தேவ தர்சனத்தின் பின் பால்பழம் அருந்தலாம். ஏனையோர் மாலைப் பூஜையின் பின் தானியம், பழம் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். முடிவற்று உபவாசம் இருந்து பாறனை செய்து தானதர்மங்களையும் செய்து கேதார கெளரி விரதத்தை மங்களமாக நிறைவு செய்து கொள்ளலாம்.

இலங்கையில் இவ்விரதத்தைப் பக்தியுடன் சிவனடியார்கள் மேற்கொள்வதால் ஆலயங்களில் மாலையில் விசேஷ கேதார கெளரிப்பூஜை நிகழ்கின்றது.

கேதார கெளரிக் காப்பும் காப்புப் பூஜையும் பண்டு தொட்டு இடம்பெற்று வருவது திருகோணமலை பத்திரகாளி ஆலயத்தில் ஆகும். அங்கு எழுந்தருளியுள்ள கேதார கெளரி அம்பிகா சமேத கேதாரநாத சுவாமிக்குத் தினமும் காலை, நண்பகல், மாலை வேளைகள் விசேஷ பூஜைகள் நடைபெற்று இறுதிநாள் விசேஷ பூஜை, காப்புநூல் வழங்கிக் காப்புக்கட்டுதல் மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு பாறனை பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும்.

கேதார கெளரி அம்பிகா சமேத கேதார நாத சுவாமிமலை விரதம் இருந்து வழிபட்டு மங்களமாக வாழ்வோம்.

இந்து வித்யாநிதி பிரம்மஸ்ரீ

சோ.குஹானந்த சர்மா

ஆடி அமாவாசை பித்ரு விரத கதைஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அது என்ன கதை தெரியுமா? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான்.
மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர்.அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள். தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும்.அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது. கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள்.இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
ஆடி அமாவாசை பித்ரு விரத கதை

ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அது என்ன கதை தெரியுமா? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.

பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான்.

மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர்.

அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள். தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும்.

அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது. கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள்.

இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

ஆண் வாரிசு கிடைக்க விரதம்

ஆண் வாரிசு கிடைக்க விரதம்ஆண் வாரிசு கிடைக்க விரதம்

நவக்கிரகங்களின் சேர்க்கை தான் கரு உருவாக காரணமாக அமைகிறது. சுக்ரன், சுக்கில சுரோனிதங்களை இணைக்கிறார். இணைந்த சுக்கில சுரோனிதங்களை கருவாக மாற்றுகிறது செவ்வாய், உடல் உறுப்புகள் உருவாக குரு துணைபுரிகிறார். பூந்தசை தோல் போன்றவற்றை சந்திரன் உருவாக்குகிறார்.

நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர்.

அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது.

ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரமன்று திருக்கோவில்கள் அனைத்திலும் உற்சவங்கள் நடைபெறும்.

ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப் பாள் அம்பிகை.

விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்

விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்
எல்லா விரதங்களுக்கும் போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் இருக்கு. மற்ற  பண்டிகைகளைப் போல கிடையாது சிவராத்திரி. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற பண்டிகைகள் எல்லாமே விரதத்துலயும் வழிபாட்டுலயும் ஆரம்பிச்சு விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி இல்லை.மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக் காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறை யுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.`சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப் பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.விரதம்  இருப்பவர்கள்  சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.அதனைக் கேட்ட நந்தி  அதை அனைத்துத் தேவர்களுக்கும்  கூறினார். அந் தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷி களுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.
மேலும் தலைப்புச்செய்திகள்

யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்

யோகங்கள் சேரும் சிவராத்திரி விரதம்
உலகம் சிவமயமாக இருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவேதான், நாம் எழுதத்தொடங்கும் பொழுது, பிள்ளையார் சுழி, சிவமயம் என்று போடுவது வழக்கம். அம்பிகைக்கு உகந்த விழா நவராத்திரி விழா. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவதாகும். அணி திகழும் சிவனுக்குக் கொண்டாடும் விழா சிவ(ன்) ராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.மாசி மாதம் மகத்தான காரியங்கள் நடத்துவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் நம் நினைவுக்கு வரும். அது போல, இந்த சிவராத்திரி திருநாளும் நம் நினைவிற்கு வரும். மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியன்று, அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகின்றது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்து இருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ‘உபாயமே’ நமக்கும் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்த திருநாள் 10-3-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. அந்த புனிதமான நாளில் விரதமிருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.முற்காலத்தில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிக நேரம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தினந்தோறும் செய்து   வருவார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண் தெய்வ வழிபாடாக வைத்து, முத்தாய்ப்பாக அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை ‘விஜயதசமி’ யாகக் கொண்டாடினர்.ஆண்கள் பொருள் தேடும் பொருட்டு, தொழில் துறைகளில் ஈடுபடுவதால், தெய்வ வழிபாட்டிற்கு என்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில் ஒருநாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு, சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால், ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் ஆண்டுகளுக்கு சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் 12 மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக இருந்து அருள் வழங்கும் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வரும்.முதலில் விநாயகப் பெருமானையும், சிவன், உமையவளையும் வழிபட்டு வருவது நல்லது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி ஆகிய ஊர்களில் இது போன்ற அமைப்புள்ள தெய்வங்கள் வீற்றிருந்து அருள் வழங்குகின்றன. சிவராத்திரியன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனின் நான்கு கால பூஜைகளையும் சிறப்பாக வழிப்பட்டால் எதிர்ப்புகள் அகலும்.இன்னல்கள் தீரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான வாழ்வு அமையும். உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய திருக்கரங்களால் மூடியதால், உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த, தேவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்கச் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படுகிறது.எனவே, இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11-30 மணிமுதல் 1 மணிவரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கும் கிடைக்கும்.வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்ச ரத்தை பல நூறுமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்.

12 வகை விரதங்கள்

12 வகை விரதங்கள்
12 வகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை முறையே…..* யாசிதம் இரு பகல் உணவு கொள்பவர்கள் இவ்விரதத்தை இருப்பர்.* இந்த வகை பாதக்கிரிச்சனம். இவ்விரதம் இருப்போர் நல்லுணர்வு கொண்டிருப்பவர்.* இவ்வகை விரதம் பன்னகிரிச்சனம் எனப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வில்வ மரம், அரச மரம், அத்திமரம் ஆகியவற்றின் தளிர் இலைகளை மட்டுமே தண்ணீரில் நனைத்து உண்பர்.* ஹெளமிய கிரிச்சனம் என்று அழைப்பர். இவ்விரதத்தை இருப்பவர்கள் பகலில் மட்டும் உண்பார்கள். பால், மோர், நீர், பொரி மாவு இவற்றில் ஒன்றை உண்பர்.* இதற்கு அதிகிரிச்சனம் எனப் பெயருண்டு. இவ்வகையான விரதத்தை இருப்பவர்கள் 3 நாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டோ, உண்ணாமலோ இருப்பது.* கிரிச்சனாதி கிரிச்சனம் என்ற பெயர் ஆகும். 21 நாள் பால் மட்டுமே அருந்தி, கிரிச்சனாதி கிரிச்சனம் விரதம் இருப்பர்.* கிரசா பத்தியகிரிச்சனம். 3 நாள் காலை 3 நாள் இரவு, 3 நாள் நடுப்பகல், 3 நாள் முழுமையும் உணவின்றி இருப்பது.* பார்ககிரிச்சனம் என அழைப்பர். 12 நாட்கள் உணவின்றி இவ்விரதத்தை இருப்பார்கள்.* சாந்தபன கிரிச்சனம் எனப்படும். ஒரு நாள் போசனம். ஒரு நாள் கோமியம், ஒரு நாள் பால், ஒரு நாள் தருப்பை நீர் மட்டுமே அருந்தி, ஒரு நாள் ஊண், உணவு எதுவும் இல்லாமல் இருப்பது.* மகசாந்தாவன கிரிச்சனம் என்பர். 9-வது விரதத்தில் கூறியவற்றில் ஒன்றை மட்டும் உண்டு இருப்பது.* சாந்திராயன விரதம் எனக்கூறப்படும். வலது கையில் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கொண்டே வந்து தேய்பிறை முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டிக் கொண்டே செல்லுதல். 3 வேளையும் குளிக்க வேண்டும்.* வாலசாந்திராயணம். சாந்திராயணத்தின் அன்று இரவில் 4 பிடி அன்னம் மட்டும் உண்பது.

பவுர்ணமி விரதம்

பவுர்ணமி விரதம்
வாழ்க்கை தேவைகளைப்பூர்த்தி செய்வது வழிபாடுகளும், விரதங்களும் தான், அவ்வாறு மேற்கொள்ளும் விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும்,  நிலவு மறைந்த நாள்களிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடியாக நற்பலன்களை வழங்கும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகிறது,ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மட்டும் சித்ரா பவுர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அன்றைய தினம் எமதர்மராஜனிடம் ஆன்மாக்கள் செய்யும் ஆற- மற செயல்களை கணக்கெழுதி காண்பிக்கும் சித்ரகுப்தனை வழிபடுகிறார்கள், பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்கவேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாக கடைப்பிடிப்போர் இரவு நிலவு பார்த்தபின் உணவு அருந்த வேண்டும்.
மகாலட்சுமி விரத மகிமை
மகாலட்சுமி விரத மகிமை
வரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், ஆண்களும் கூட கொண்டாடலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. திருமணமான பெண்கள் தலைநோன்பு நோற்பது மிகவும் விசேஷமாகும். இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.
சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள். ஒருநாள் சிவனும் பார்வதியும் நவரத்தின மணி பீடத்தில் தேவாதி தேவர்கள், நாரதாதி மகரிஷிகள், குபேரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள், பூதகணங்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தனர். வரலட்சுமி விரத மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி, பார்வதி பரமேசுவரனிடம், “சுவாமி! வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாள் மலர்ந்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
சர்வேசுவரனான சிவபெருமான், வரலட்சுமி விரத மகிமையை அனைவருக்கும் விளக்கமாக கூறினார். இங்ஙனம் சிவனருளால் சங்கரியும் மற்ற தேவர்களும் கேட்டு மகிழ்ந்த வரலட்சுமி விரத வைபவத்தை எல்லோரும்  கடைபிடித்து நற்பலன் அடைந்தனர். விரதங்களுள் உத்தமமான வரலட்சுமி விரதம் சகல சௌபாக்கியங்களையும் தருவது. புத்ர பௌத்ராதி அபிவிருத்திகளை ஏற்படுத்தும்படியான மகா சிரேஷ்டமான விரதம்.
இந்த விரதத்தை கடைபிடித்து சாபம் நிவர்த்தி பெற்ற சித்ரநேமியைப் போல் சாருமதி என்ற மற்றொரு பெண்ணும் வரலட்சுமி விரத மகிமையால் சகல சௌபாக்கியங்களையும் பெற்றாள். முன்னாளில் குண்டினி புரம் என்ற ஊரில் சாருமதி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள். இவள் கற்புகடம் பூண்டு ஒழுகி வந்தாள். கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தாள்.
கடவுள் பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்ட சாருமதி, எல்லோராலும் பாராட்டப்பட்டாள். இப்பேர்ப்பட்ட நற்குண நங்கையான சாருமதிக்கு சர்வேசுவரனின் கிருபாகடாட்சம் கிடைத்தது. ஒருநாள் இரவு  சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.. “சாருமதி! சர்வ மங்களம் உண்டாகட்டும். ஆடி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளியில் என்னை பூஜிப்பாயாக! நாள் உனக்கு சகல வரங்களையும் தந்தது அருளுவேன்” திருமகள், சாருமதிக்கு விரதம் கடை பிடிக்கும் முறையையும் அருளினார்கள்.
சாருமதி கனவு கலைந்து எழுந்தாள். திருமகளின் திருவாய் அமுதத்தை எண்ணி சுகானுபவம் கொண்டாள். சாருமதி தேவி திருமகளைச் சிந்தையிலே கொண்டு தோத்திரம் செய்தாள்.
“நமஸ்தே சர்வலோகா நாம் ஜகந்யை புண்யமுர்தயே
சரண்யே த்ரிஜகத் வந்த்யே விஷ்ணு வட்சதலாலய
“ஓம் ஸ்ரீ வரலட்சுமிதேவியே!
தாங்கள் சகல உலகங்களுக்கும் தாயாக எழுந்தருளிரட்சித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சர்வ ஜனங்களாலும் ஆராதிக்கப்படுகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணனுடைய வாஸ்து தலத்தில்  வாசம் செய்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ லட்சுமி தேவியே! தங்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.” சாருமதி தேவியின் அருள்வாக்கின்படி ஆடியில் தவமிருந்தாள். தோத்திரங்களால் திருமகளின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்தாள்.  ஆயிரத்து எட்டு நாமாக்களால் அலங்காரம் செய்தாள்.
வரலட்சுமி பிரத்யலட்மாகி சாருமதிக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கினார். சாருமதி வரலட்சுமி விரத மகிமையை மற்றவர்களுக்கும் சொன்னாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, கலசம் வைத்து கலசத்துள் ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கினார்.
சாருமதியும் தோழியர்களும் ஸ்ரீலட்சுமி தேவியை பூஜித்தார்கள். வரலட்சுமி தேவியின் பேர் அருளால் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். வரலட்சுமி விரதத்தை ஆரம்பித்து வைத்த சாருமதியை புகழ்ந்து போற்றினர். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார். விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றனர்.
ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் “நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்” என்பது சான்றோர் வாக்கு! செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குவார்.
வரலட்சுமி விரதத்தை அப்பண்டிகை தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட வேண்டும். விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும்.
கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.
பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான்.
நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்ட லட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.
இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.
கிரக தோஷம் நீங்க
கிரக தோஷம் நீங்க
கந்தரந்தாதி (48-வது திருப்பாடல்)
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.
இந்த இரு பாடல்களும் கிரக தோஷம் நீக்கி,
கோளாறு பதிகம் போன்று பயன் அளிக்க வல்லது.
சனி தோஷம் நீங்க
சனி தோஷம் நீங்க
சாம்பல் நிற ஆடைகளை பயன்படுத்தினால் சனி பாதிப்புகள் நீங்கி சனியின் அருள் பெறலாம். உணவு வகைகளில் இரும்பு சத்துள்ள பழ வகைகள் சாப்பிடலாம். பேரிச்சம் பழம், பலாப்பழம், நாவல் பழம், காய்கறி வகைகளில் சுண்டைக்காய், பீட்ரூட், வெள்ளை பூசணி, (அதிக எணர்ஜி) கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு, அனைத்து கீரை வகைகள் குறிப்பாக முருங்கைக் கீரை சாப்பிடலாம்.
சனிபகவானுக்கு விசேஷமான ரத்தினமாக நீலம் கருதப்படுகிறது. இதில் இந்திர நீலம் மிகவும் உயர்ந்தது. இந்த கல்லை அணிபவர்களுக்கு ஆயுள் செல்வம் அதிக அளவு சேரும். மேலும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தசை தோல் எலும்பு போன்ற உறுப்புகளில் உள்ள கோளாறை நீக்கி நலத்தைக் கொடுக்கக் கூடியது.
இவற்றுக்கு மேலாக கண்பார்வையற்றவர், ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல், ஜீவ ராசிகளுக்கு விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும், உணவு இடுதல் போன்றவற்றை செய்து வந்தால் சனியின் பரிபூரண கருணையை பெறலாம்.  சனி கிரகத்தை நட்பு உணர்வோடு கலந்து இடைவிடாமல் தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நலன்கள் உண்டாகும்.

விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி
விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகர் துதி
மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

வீரமூட்டுகிறார் விவேகானந்தர்
* தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் ஒரு நாட்டின் நிலையும் உயரும். உயர்வதற்கான எல்லா ஆற்றலும், உதவியும் நமக்குள்ளே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தால் உயரலாம்.
* நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புங்கள். உள்ளத்தில் உறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றுப் போகும்.
* நம்மால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவை செய்ய மட்டுமே முடியும்.
* எண்ணத்தில் பலமும், உள்ளத்தில் தைரியமும் பெற்றிருப்பவர்கள், உலக நன்மைக்காக தங்களைத் தியாகம் செய்து கொள்வார்கள்.
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் நோக்கம்.
* மனத்தூய்மை முழுமையாக இருக்குமானால், உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமான வலிமையை நாம் பெற முடியும்.

குடும்பத்தை வளமாக்கும் விரதம் வழிபாடு
குடும்பத்தை வளமாக்கும் விரதம் வழிபாடு
தன் குழந்தைகள் நன்றாக இருக்க தாய் ஒருத்தி நோன்பு இருந்து வேண்டிக் கொள்ளும் விரதம்தான் நாகசதுர்த்தி. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
நாகசதுர்த்தி தொடர்பாக வழங்கப்படும் கதை:
முன்னொரு காலத்தில் ஏழை ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர் முதல் பெண்ணை நல்ல திடகாத்திரமான ஒருவருக்கும், இரண்டாவது பெண்ணை, கை கால்கள் செயல் இழந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
அப்படி ஒரு மாற்றுத்திறனாளியை மணந்த பெண், `தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும், குழந்தை செல்வங்கள் வேண்டும்’ என்று இறைவனை வேண்டினாள். பார்வதியும் பரமேஸ்வரனும் அவள் முன்பு தோன்றி, நாகரை வழிபடுமாறு கூறிச் சென்றனர். அவர்கள் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள்.
அந்தப் பெண் செய்த நாகபூஜையால் அவளது கணவர் நலம் பெற்றார். சில மாதங்களில் அவளும் கருத்தரித்து குழந்தைகள் பெற்றாள். அவர்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஒரு பெண் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மேற்கொள்ளும் இந்த விரதம், அவளது குடும்பத்தை செழிப்படையச் செய்யும்.
ஆவணி ஞாயிறு விரதம்
ஆவணி ஞாயிறு விரதம்
ஆவணி மாதம் ஜோதிட சாஸ்திரப்படி சிங்கமாதமாகும் சூரியம் சிங்க ராசியில் பிரவேசிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் வரும் ஞாயிறன்று சூரியனுக்குப் பொங்கல் இட்டு வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விரதமிருந்து சூரியனுக்குப் பொங்கலிட வேண்டும். அது முடியாதவர்கள், முதல் ஞாயிறன்றும் கடைசி ஞாயிறன்றும் பொங்கலிடுவது சிறப்பைத்தரும்.
ஐஸ்வரியம் தரும் சஷ்டி விரதம்
ஐஸ்வரியம் தரும் சஷ்டி விரதம்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.

நலந்தரும் நவராத்திரிஉலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி ஆலயங்களில் மட்டுமன்றி பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என்று இன்னோரன்ன பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே, உலகை ஆட்டிப் படைக்கின்றனர். நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் மனித வாழ்க்கையிலே நல்ல தைரிய வீரமும் செல்வமும் கல்வியும் கைவரப் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழலாம். ஆகவே இன்று தொடங்குகின்ற நவராத்திரி மஹோற்சவம் எமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இந்த ஒன்பது நாளும் ஒரு நேர உணவு உபவாசமிருந்து ஆதிபராசக்தியான உமையவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற ஓரொழுங்கில் சக்தி மூர்த்தமாக வழிபட்டு வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வதே உத்தம மார்க்கமாகும்.சில வீடுகளில் கொலு வைத்து வழிபடும் மரபுமிருந்து வருகின்றது. அழகழகான பொம்மைகளையெல்லாம் மிக்க அழகாக அடுக்கி வைத்து பூஜை வழிபாடுகளியற்றி தோத்திரங்கள் நாமாவளிகளைப் பாராயணஞ் செய்து கும்பிடுவது உத்தமம்.

சில இடங்களில் கன்னிப் பெண்களை அம்பிகை போன்று அலங்காரஞ் செய்தும் மாலைகள் சூட்டி வழிபாடி இயற்றுவதும் சிறந்த நிகழ்வாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவில் குமாரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, சரஸ்வதி என்ற வடிவில் மூர்த்தமென நினைந்து வணங்கி மகிழ்வர். இந்தப் புனிதம் மிக்க புண்ணிய நவராத்திரி நாட்களில் அம்பிகையை போற்றித் துதிக்கின்ற சகல கலாவள்ளி மாலை, அபிராமியந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ் முதலானவற்றை ஓதி மகிழ்வர்.

இந்த நவராத்திரிக்கு மகிஷாசுரமர்த்தனி எனப்படுகின்ற தேவி வழிபாடும் உண்டு. கொடுமைகள் இயற்றிய மகிஷாசுரனைச் சங்கரித்தமையில் அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்தது. புரட்டாதி மாத வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்த நாள் வெற்றித் திருநாள் எனப்படும்.

குழந்தைகளுக்கு ஏடு துவக்குகின்ற வித்தியாரம்பமும் இன்று விஜயதசமி நாளிலேதான் செய்யப்படுகின்றது. இதைத் “தசரா’ என்றும் மானம் பூ எனவும் அழைப்பர். மகாநோன்பு என்பதே மானம் பூ என்று மருவியதாகவும் கருதப்படுகிறது. இந்த விஜயதசமி நன்னாளிலே தொழில் செய்கின்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளிலேதான் வாழைவெட்டு நிகழ்வும் இடம்பெறுகின்றது.

ஆகவே நவராத்திரி விரதம் அனுட்டித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. இன்று தொடங்குகின்ற இவ்விரதத்தினை முறையாக அனுட்டித்து புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்றுய்வோமாக.

நவராத்திரி விரதம்

நலந்தரும் நவராத்திரிஉலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.

சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.

பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி ஆலயங்களில் மட்டுமன்றி பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள், உற்பத்தி நிறுவனங்கள் என்று இன்னோரன்ன பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மூன்று சக்திகளுமே, உலகை ஆட்டிப் படைக்கின்றனர். நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் மனித வாழ்க்கையிலே நல்ல தைரிய வீரமும் செல்வமும் கல்வியும் கைவரப் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழலாம். ஆகவே இன்று தொடங்குகின்ற நவராத்திரி மஹோற்சவம் எமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இந்த ஒன்பது நாளும் ஒரு நேர உணவு உபவாசமிருந்து ஆதிபராசக்தியான உமையவளை துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற ஓரொழுங்கில் சக்தி மூர்த்தமாக வழிபட்டு வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வதே உத்தம மார்க்கமாகும்.

சில வீடுகளில் கொலு வைத்து வழிபடும் மரபுமிருந்து வருகின்றது. அழகழகான பொம்மைகளையெல்லாம் மிக்க அழகாக அடுக்கி வைத்து பூஜை வழிபாடுகளியற்றி தோத்திரங்கள் நாமாவளிகளைப் பாராயணஞ் செய்து கும்பிடுவது உத்தமம்.

சில இடங்களில் கன்னிப் பெண்களை அம்பிகை போன்று அலங்காரஞ் செய்தும் மாலைகள் சூட்டி வழிபாடி இயற்றுவதும் சிறந்த நிகழ்வாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவில் குமாரி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, சரஸ்வதி என்ற வடிவில் மூர்த்தமென நினைந்து வணங்கி மகிழ்வர். இந்தப் புனிதம் மிக்க புண்ணிய நவராத்திரி நாட்களில் அம்பிகையை போற்றித் துதிக்கின்ற சகல கலாவள்ளி மாலை, அபிராமியந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ் முதலானவற்றை ஓதி மகிழ்வர்.

இந்த நவராத்திரிக்கு மகிஷாசுரமர்த்தனி எனப்படுகின்ற தேவி வழிபாடும் உண்டு. கொடுமைகள் இயற்றிய மகிஷாசுரனைச் சங்கரித்தமையில் அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்தது. புரட்டாதி மாத வளர் பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாக ஒன்பது நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்த நாள் வெற்றித் திருநாள் எனப்படும்.

குழந்தைகளுக்கு ஏடு துவக்குகின்ற வித்தியாரம்பமும் இன்று விஜயதசமி நாளிலேதான் செய்யப்படுகின்றது. இதைத் “தசரா’ என்றும் மானம் பூ எனவும் அழைப்பர். மகாநோன்பு என்பதே மானம் பூ என்று மருவியதாகவும் கருதப்படுகிறது. இந்த விஜயதசமி நன்னாளிலே தொழில் செய்கின்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளிலேதான் வாழைவெட்டு நிகழ்வும் இடம்பெறுகின்றது.

ஆகவே நவராத்திரி விரதம் அனுட்டித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. இன்று தொடங்குகின்ற இவ்விரதத்தினை முறையாக அனுட்டித்து புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்றுய்வோமாக.

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் என்றாலே `ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!’ என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது மற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.
அக்கனவில் வெங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்’ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.
தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
துளசியின் பெருமை:
துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கட்பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும். துளசி 400 விதமான நோய்களைப் போக்கும் சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை நல்குவது என ஆயுர்வேத நூற்கள் கூறுகின்றன. துளசிச்செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.
துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் தான் விரும்பிய மணாளனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும். வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
எப்படி வழிபட வேண்டும்?
புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும்  பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி  நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச் சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும்  அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது. பூஜைக்குரிய பொருட்களை முன்னதாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூஜை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

Leave a Reply