சித்தர்“ஆசாபாசம் அந்தம்வரை விடாது’ என்பர். ஆசை என்ற இரண்டெழுத்து ஒவ்வொரு மனிதனையும் ஆட்டுவிக்கிறது. என்னதான் பற்று பாசங்களைத் துறக்கவேண்டுமென்று ஞானிகள் போதித்தா லும், அந்திமக்காலம்வரை நம் ஆசை வளர்ந்துகொண்டேதான் போகிறது.

மனதில் நல்ல கருத்துகளைப் பதித்துக் கொண்டு நியாயமான ஆசைகளை வளர்த்துக்கொள்வதில் தவறில்லை. அத்தகைய நியாயமான ஆசைகளை இறைவன் ஒருபொழுதும் நிறைவேற்றத் தவறியதுமில்லை. அந்த வகையில் திருமகளின் நியாயமான ஆசையை நிறைவேற்றித் தந்ததொரு திருத்தலம்- அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 19-ஆவதாக விளங்குகின்ற தலம்- மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்ட தலம்- இந்திரன், அகத்தியர், பரசுராமன், ஐராவதம், பசு, சோழமன்னர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்- கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏங்கிவாழும் மக்களின் குறைதீர வரமருளும் ஒப்பற்ற திருத்தலம்தான் திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர்.

இறைவி: உலகநாயகி.

தீர்த்தம்: மகாலட்சுமி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்.

தலவிருட்சம்: விளாமரம்.

1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது. திருமகள், திருமாலின் திருமார்பில் நீங்காதிருக்கும் வரம்வேண்டி ஈசனை வழிபட்டுப் பேறுபெற்றதால் திருநின்றியூர் என்றும்;  திருமாலுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஏற்படக் காரணமானதால்- திருமகள் ஈசனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிசெலுத்தும் வகையில் திருநன்றியூர் என்றும் பெயர்பெற்றது.

திருநின்றியூர் என பெயர்வர மற்றொரு காரணமும் உண்டு. சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் சோழமன்னன் ஒருவன். அப்படி ஒருநாள் திரும்பிவரும்போது காவலாளிகள் கொண்டுசென்ற தீப்பந்தங்கள் அணைந்துவிட்டன.

அதனை மீண்டும் எரியவைக்க முயற்சிசெய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தைக் கடந்தபோது தானாகவே தீப்பந்தங்கள் எரியத்தொடங்கின. தொடர்ந்து இது நடக்கலாயிற்று. காரணம் புரியாமல் அனைவரும் திகைத்தனர். ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், “”இங்கே மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா?” எனக் கேட்டான் மன்னன். அதற்கு அவன், “”மன்னரே! இந்தப் பகுதியில் லிங்கம் ஒன்றுள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே சென்று பால்சொரிகின்றன” என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தைக் கண்டான்.

அதனை வேறிடத்தில் வைத்து கோவில் கட்டுவதற்காக அகழ்ந்தபோது ரத்தம் வெளிப்பட்டது. வெளியே எடுக்கும் முயற்சி தோற்றது. இச்சம்பவம் நடை பெற்றது அனுஷ நட்சத்திர தினத்தில். பின் அங்கேயே அனுஷ நட்சத்திர நாளில் கோவில் எழுப்பி வழிபட்டான் மன்னன். பந்தத்தின் திரி அணைந்து, பின் தானே எரிந்து நின்றதால் திரிநின்றியூர் என பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

இத்தலத்திலுள்ள செல்வ கணபதி சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர். செல்வகணபதி சுவாமியை அனுஷ நட்சத்திர நாளில் தொழுதபேர்க்கு செல்வச்செழிப்பு கிட்டுமென்பது உண்மை.

தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்கி, தாய் ரேணுகா தேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரசுராமரும், ஜமதக்னி முனிவரும் திருநின்றியூர் திருத்தலத்தை அடைந்து வணங்கினர். சிவபெருமான் காட்சிதந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு அமாவாசை திதியில் மேன்மையருளினார். இன்றும் அமாவாசை திதியன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர இத்தலத்தில் பூஜை புரிந்தால் பூரண பலனுண்டு என்கின்றனர்.

கார்த்திகை மாதம் முழுவதும் ரேணுகாம்பாளுடன் ஜமதக்னி மகரிஷியும் பரசுராமரும் இத்தலத்தில் பூஜை புரிகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வித்தை பெருக, கீர்த்தி மிகுந்துவர, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய்- தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தியடைய, வெளிநாடு சென்று பெருந்திரவியம் சேர்க்க, நீண்டகாலம் இளமைப்பொலிவுடன் வாழ- இத் தலத்தில் மயில்வாகனத்தில் அமர்ந்தருளும் ஸ்ரீவள்ளி- தேவயானை சமேதரான சுப்ரமணியரை பரிபூரண சரணாகதி செய்திட்டால் போதும்; அனைத்து காரியங்களும் சித்திக்கும் என்கிறது அகத்திய ஜீவநாடி.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுடன் செல்வாக்கோடு வாழ்வார்கள். அந் தஸ்துள்ள பதவிகளில் இருப்பார்கள். அரசாங்க பாராட்டும் பெறுவார்கள். பிறர் குணமறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராக சுற்றும் குணம்கொண்ட இவர்கள் அடிக்கடியோ, அனுஷ நட்சத்திர நாளிலோ, தங்களது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தால் வாழ்வு சிறக்கும்.

அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலக்ஷ்மி நோன்பன்றும் வழிபாடுகள் மேற்கொண்டால் கூடுதல் நன்மைபயக்கும். அனைத்து ராசியினரும் அனுஷ நட்சத்திர நாளில் வழிபாடுகள்  மேற்கொண்டால் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி சகலமேன்மையுடன் வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். அதில் மிகமுக்கியமானது என்னவென்றால்- சிவனுக்கு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது உறுதி. மாதுளை முத்துக்கள் மாணிக்கக் கற்களையொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேகித்து, அர்ச்சித்தால், சம்பத்துகள் குறைவின்றிச் சேரும் என்பது காகபுஜண்டர் வாக்கு.

அவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசிச் சிரிப்பதும், அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுவதும் எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித்தரும்.

“தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பது சான்றோர் வாக்கு. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்னை வினை சிறப்புடையது என்பதே பொருள். முன்சொன்ன தோஷங்கள் நம்மை துயரத்துக்குள்ளாக்கும். தாய்- தந்தையரை பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும். பாவங்களை அறியாது செய்தால் அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை சண்டாளம் என்கிறார் பாம்பாட்டியார். பின்னைப் பிறவியில் இவற்றிலிருந்து விடுபட்டு பிறப் பிலா பேரின்பம் பெறவும், இம்மையில் சுகபோகத்துடன் வாழவும் திருநின்றியூருறை உலகநாயகி அம்மனை தொழவேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்து இறைவனை போற்றிப்பாடிய திருப்பதிகத்துள், நின்றியூர் பரமனை வழிபட்டுப் பேறுபெற்றோர் பலரை தெளிவாகக் கூறியுள்ளார். இத்தலத்து இறைவன், இந்திரன் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வானநாட்டையும், அகத்தியர் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால்சொரிந்து வழிபட்ட பசுவுக்கு திருவடிப்பேற்றையும், ஐராவதத்தின் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினன் என குறித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயினால் வழிபாடுகள் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், வேதமோத முந்நூறு அந்தணர்களுடன் 360 வேலி நிலம் அளித்து பரசுராமன் வழிபட, அவனுக்கு இத்தலத்து இறைவன் திருவருட் பேரளித்த சிறப்பினை “மொய்த்த சீர்’ என தொடங்கும்  இத்தல தேவாரப் பாடலுள் குறிப்பிட்டுள்ளார்.

“மொய்த்த சீர்முந்நூற்  றறுபது வேலி
மூன்று நூறுவேதிய ரொடு நுனக்கு
ஒத்த  பொன்மணிக் கலசங்க ளேந்தி
ஓங்கு நின்றியூ ரென்றுனக் களிப்ப
பக்தி செய்தவப் பரசு ராமர்க்குப்
பாதங்காட்டி நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
செல்வத் தென்திரு நின்றியூ ரானே.’

நாற்புறமும் அழகிய மதிலால் சூழப்பெற்று, கிழக்கே மூன்று நிலை ராஜகோபுர முடையதான தோரணத்திருவாயிலுடன் திகழ்கிறது ஆலயம். கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில், சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. பூமியைத் தோண்டியபோது சுவாமியின் தலையில் ஏற்பட்ட வடு இன்றும் உள்ளது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்திற்குக் கீழிருக்கும் முயலகன் கிழக்கு மேற்காக தலையை வைத்து, இடப்புறமாகத் திரும்பி கையில் நாகத்துடன் இருக்கும் அமைப்பு அபூர்வமானது. கல்வியில் தேற, எண்ணியவாறு தொழில்கிட்ட, கிட்டிய தொழிலில் முன்னேற்றங்காண, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோலும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. அது மட்டுமின்றி சர்ப்பதோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு அரு மருந்தாகத் திகழ்கிறார் இந்த தட்சிணாமூர்த்தி என்கிறார் கொங்கணசித்தர்.

லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. அதனால் முக்தி தலங்களில் ஒன்றாகவும் மும்மூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் காணப்படுகின்றன. ஈசான்ய திக்கில் தீர்த்தக்கிணறு உள்ளது. ஈசான்ய மூலையில் சூரியன், பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகின்றனர். நவகிரகங்களில் உள்ள சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி வேறெங்கும் இல்லாத வித்தியாசமான அமைப்பில் அருள்புரிகின்றனர். அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக இங்கு சிறப்பு பூஜை செய்வது சாலச்சிறந்தது.

இக்கோவிலைச் சுற்றி மாலை யிட்டதுபோல் மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். (மகாலக்ஷ்மி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்). இத்தலத் தீர்த்தத்தை நீலமலர்ப் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார்.

இத்தலத்தில் திரிபுவன சக்கரவர்த்தி இராஜராஜதேவன், கோச்செங்கட்சோழன் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

நின்றியூர் பரமனைப் பற்றினாரை வினைப்பாவம் பற்றா என்றும், வினை ஓயும் என்றும்  திருநாவுக்கரசர் தனது பதிகத்திலும்; கங்கையை முடியிற்சூடிய நின்றியூர் நிமலனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்திலும்; திருமகள் வாழும் செல்வ வளத்தையுடைய திருநின்றியூர் ஈசனை வணங்குவோர் வினை நீங்கி இறைவனின் திருவடிப் பேற்றினை எய்துவர் என்று சுந்தரர் தனது பதிகத்திலும் இத்தல ஈசனைப் போற்றியுள்ளனர்.

காலை 6.30 மணிமுதல் 11.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: கே. சுப்ரமணிய சிவாச்சார்யார், அலைபேசி: 94426 96327 ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில், எஸ்.எஸ். நல்லூர்(வழி), திருநின்றியூர் போஸ்ட், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்- 609 118.

அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் கற்பாதையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநின்றியூர் பஸ் நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிடம் நடைபயணம் மேற்கொண்டால் கோவிலை அடையலாம்.

படங்கள்: போட்டோ கருணா

பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையை, அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெண் சித்தர்களில் ஒருவரென்று குறிப்பிடுவதே பொருந்தும். ஸ்ரீஅரவிந்தரின் சிஷ்யையாக தம் ஆன்மிக வாழ்வை நடத்தி, பின் அவருக்கிணையாக ஆன்மிகத்தில் உயர்ந்து, அவருக்குப்பின்னும் அவர் நெறிகளைப் பரப்பி வாழ்ந்து, இன்று தெய்வமாக வழிபடப்படுபவர் மிர்ரா என்ற இயற்பெயருடைய ஸ்ரீஅன்னை. அழிவேயில்லாத அவருடைய அருள்சக்தி இன்றும் உலகை ஆண்டுகொண்டிருக்கிறது.

சாரதாதேவி, மாயம்மா, ஆனந்தமயி உள்ளிட்ட பெண்துறவிகளுக்கு பாரதத்தில் பஞ்சமே இல்லை. பாரத வேதநெறியானது, ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஆன்மிகத்தில் உயரலாம் என்பதையே போதித்தது. வேத காலத்திலேயே பெண் துறவிகள் இருந்ததை ராமாயண, மகாபாரத இதிகாசங்களும், பின்னர் தோன்றிய காப்பியங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

கவுந்தியடிகள் என்ற பெண் துறவி பற்றியும், அவரே கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச்சென்றார் என்பதுபற்றியும் சிலப்பதிகாரம் பேசுகிறது. குண்டலகேசியில் வரும் கதாநாயகியான பத்தரையும் மணிமேகலையில் வரும் மாதவியின் மகளான மணிமேகலையும் துறவுநெறி சார்ந்து வாழ்ந்தவர்களே.

ஆனால் ஸ்ரீஅன்னைக்கும் நம் இந்தியப் பெண்துறவிகள் அத்தனை பேருக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. ஸ்ரீஅன்னை வெளிதேசத்திலிலிருந்து இங்கு வந்தவர்.

மாக்ஸ்முல்லர் என்ற தத்துவஞானி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எப்படி இந்திய ஆன்மிகத்தால் கொள்ளைகொள்ளப்பட்டாரோ- எப்படி வேதங்களையெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்தாரோ, அப்படி மிர்ராவாக ஃபிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீஅன்னையும் நமது வேத நெறிகளால் பெரிதும் கவரப்பட்டார். தம் ஞான அக்கினியில் வேத நெறியைப் புடம்போட்டு, அதன் உண்மைத் தன்மையைக் கண்டு மனதைப் பறிகொடுத்தார். அந்த நெறியிலேயே வாழத் தலைப்பட்டார்.

ஸ்ரீஅரவிந்தரோடு தியானம் பழகி, எங்குமுள்ள இறைசக்தியைத் தன் உடலிலில் இறக்கிக்கொள்ளும் யோகம் பயின்று, தம் உடலிலில் தெய்வ சக்தி இறங்கியதால் தெய்வமாகவே மாறினார் ஸ்ரீஅன்னை.

அவர் நிகழ்த்திய சித்துக் கலை சார்ந்த அற்புதங்கள் பலப்பல. தம் கண் பார்வையாலேயே ஏராளமான அடியவர்களின் துயரங்களைத் துடைத்தவர் அவர். புதுச்சேரியில் தவமிருந்த அவர், என்று எப்போது பால்கனிக்கு வரப்போகிறார்-  தங்களைக் கண்டு தம் பார்வை சக்தியால் தங்கள் துயரங்களைத் துடைக்கப்போகிறார் என ஏழை எளிய மக்கள் காத்திருந்தார்கள். அவரது கடாட்சத்தால் தங்கள் துயரங்களைப் போக்கிக்கொண்டு அவர்கள் மன அமைதி கண்டது புராணக் கதையல்ல; அண்மைக்கால வரலாறு.

1878 பிப்ரவரி 21 தான் அன்னையின் அவதார தினம். தந்தை துருக்கியைச் சேர்ந்தவர்; தாய் எகிப்து நாட்டவர். அவர்கள் பிரான்ஸில் வாழ்ந்து வந்தார்கள். மிர்ரா என்பது ஸ்ரீஅன்னைக்கு இடப்பட்ட பெயர்.

குழந்தைப் பருவத்திலேயே தனிமையை அதிகம் விரும்பியவராய்க் காணப்பட்டார் மிர்ரா. தன்னில் இறைச்சக்தி செயல்படுவதை அவர் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டார்.

மிர்ராவுக்கு ஏழு வயது நடக்கும்போது தன்னை கிண்டல் செய்த பதினான்கு வயது வாலிலிபனை சடாரெனத் தன் தலைக்குமேலே தூக்கினார். ஏழு வயதுச் சிறுமிக்கு எப்படி இத்தனை உடல் வலிலிமை வந்ததென அவன் திகைத்துப்போனான்.

மேலிலிருந்து ஒரு சுழற்றுச் சுழற்றி அவனைத் தொப்பெனக் கீழே போட்ட மிர்ரா, “”எங்கே இப்போது என்னை கேலிலிசெய் பார்க்கலாம்” என்றார். அவன் வெலவெலத்து ஒரே ஓட்டமாய் ஓடியே போய்விட்டான்!

மிர்ரா, தன்னைத் தாக்கவிருக்கும் தீய சக்திகள் அனைத் தையும் தகர்க்கும் ஆற்றலை இறைவன் தனக்குத் தந்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டார். அவரது தோழிகள் அவர் சாதாரண பிறவியல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள். தெய்வீக சக்தி மனித வடிவெடுக்கும் போது, அந்த வடிவத்திற்கு வேண்டுமானால் வயது உண்டே தவிர, அந்த வடிவத்தின் உள்ளிருந்து செயல்படும் தெய்வ சக்திக்கு வயது ஏது?

ஒருமுறை தன் தோழிகளோடு ஃபான்டென்ப்லோ என்ற இடத்தின் அருகேயுள்ள ஒரு குன்றுக்குப் போனார் மிர்ரா. தோழிகள் விளையாடும்போது அவர் மட்டும் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றார். அங்கே தனிமையில் தியானம் செய்யலாம் என்பது  அவரது எண்ணம்.

ஆனால் தோழிகள் பார்த்துக்கொண்டி ருக்கும்போதே குன்றின் உச்சியிலிலிருந்து கால்தடுமாறி அப்படியே மாபெரும் பள்ளத்தில் சரசரவென வீழ்ந்தார் அவர். மிர்ராவின் பொடிப்பொடியான எலும்புகளைத்தான் பார்க்கப்போகிறோம் என்றெண்ணி தோழிகள் அலறி அழுதவாறே பள்ளத்தாக்கின் கீழே ஓடிவந்தார்கள்.

ஆனால் அதற்குள் அங்கே ஓர் அற்புதம் நடந்தது. இரு தெய்வீகப் பொற்கரங்கள் மிர்ராவை அப்படியே தாங்கி எந்தவித பாதிப்பும் நேராமல் மண்ணில் இறக்கிவைத்துவிட்டு காற்றில் மறைந்துவிட்டன!

மிர்ரா மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு சிரித்தவாறே எழுந்து நின்றார். தோழிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து பேசமறந்து நின்றார்கள்.

அருணகிரிநாதரின் வாழ்விலும், அவர் வல்லாள கோபுரத்தின் உச்சியிலிலிருந்து குதித்தபோது முருகப் பெருமானின் பன்னிரு கரங்கள் அவரைத் தாங்கி, எந்த பாதிப்பும் அவருக்கு நேர்ந்துவிடாமல் அவரை மண்ணில் இறக்கியதாக நாம் படித்திருக்கிறோமே! இறைச்சக்தி தன் அடியவர்களைக் காத்து ரட்சிப்பதற்குதானே ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கிறது?

ஸ்ரீஅன்னை, அஃறிணைப் பொருள் என நாம் கருதுவனவற்றுக்குக்கூட உயிருண்டு என்று கருதியவர். ஒவ்வோர் அணுத் துகளிலும் புரோட்டான், நியூட்ரான் போன்ற நுண்துகள்கள் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டே இருப்பதை இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. அப்படியானால் அசைவே இல்லாத பொருள் என்று உலகில் எதுவும் கிடையாது. அசைவிருக்கிறது என்றால் அதனளவில் உயிர் இருக்கிறது என்பதுதானே பொருள்? எனவே தாவரங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா அஃறிணைப் பொருள்களுக்கும்கூட உயிருண்டு என்பது அன்னையின் சித்தாந்தம்.

அதுமட்டுமல்ல; வாயில்லாதவை என்று நாம் கருதுபவை எல்லாம் அன்னையிடம் வந்து பேசும்! ஆசிரமத்தில் ஒரு வயதான மாமரம்.

அதை வெட்டிவிட வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். ஆனால் அந்த மாமரத்தில் வசிக்கும் குட்டி தேவதை ஒன்று இரவில் தன்னிடம் வந்து அந்த மரத்தை வெட்டவேண்டாமென வேண்டுகோள் வைத்ததாக அன்னை குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வேண்டுகோளை அன்னை ஏற்றுக் கொண்டதால் பின் அந்த மரம் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஸ்ரீஅன்னை என்ற பெண்சித்தரின் அருள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தாவரங்களுக்கும் பிற உயிரினங்களுக்கும்கூட பயன்பட்டிருக்கிறது.

அடுத்தவர் மனதில் ஓடும் எண்ணங்களை அப் பட்டமாக- உள்ளது உள்ளவாறு படித்துவிடும் ஆற்றல் ஸ்ரீஅன்னைக்கு இருந்தது. எனவே அடுத்தவர்களின் பிரச்சினை என்னவென்பதை அவரால் மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. அதற்கான தீர்வையும் அவரால் எளிதாகச் சொல்லமுடிந்தது.

அன்னை கொஞ்சகாலம் ஜப்பானில் வாழ்ந்தார். அங்கு பெரும் புகழ்பெற்றிருந்த இகபானா என்ற மலர் அலங்காரக் கலையைக் கற்றார். அந்தக் கலையின் இலக்கணங்களையும், வேதம் சொல்லும் மலர் வழிபாட்டு நெறிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். ஒரு முக்கியமான முடிவுக்கு வந்துசேர்ந்தார்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மானிட மொழிகள் உதவுகின்றன. அதுபோலவே ஏதேதோ ஒலிலிக்குறிப்புகள் மூலம் விலங்குகளும் தங்கள் உணர்வுகளை அவற்றுக்குள் வெளிப் படுத்திக் கொள்கின்றன. அதுபோல் மனிதன் தெய்வத்துடன் பேசுவதற்குரிய மொழி மலர்களே என்பது அன்னையின் கண்டுபிடிப்பு.

தெய்வத்திடம் இன்னின்ன மலர்கள் சமர்ப்பிக்கும் அன்பருக்கு இன்னின்ன தேவை என அவை உணர்த்துகின்றன என்றார் அன்னை.

எருக்கம்பூவைச் சமர்ப்பித்தால் தைரியம் கிடைக்கும்; செம்பருத்திப் பூவைச் சமர்ப்பித்தால் செல்வம் கிடைக்கும்; மஞ்சள் செவ்வந்தி மலர்கள் ஆரோக்கியத்தைத் தரும் என்பதெல்லாம் ஸ்ரீஅன்னை ஆராய்ந்து தெரிவித்த ஆன்மிக முடிவுகள்.

இளம்வயதிலேயே சித்துகளைப் பயின்று அந்த ஆற்றல்களை அடையவேண்டுமென்ற ஆர்வம் ஸ்ரீஅன்னைக்கு இருந்தது. அவரது அருள்மனம், தான் பெறும் சித்திகளின் மூலம் மக்களை வியக்க வைக்கவோ சொந்த ஆதாயத்திற்காகவோ அவற்றை அடைய முயலவில்லை. சித்திகளை அடைவதன்மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமென்று நம்பி, அதன்பொருட்டே அவற்றில் ஆர்வம்காட்டினார் அவர். சித்துக் கலைகளில் வல்லவர் என்று உலக அளவில் அறியப்பட்ட தியோன் என்பவரிடம் ஸ்ரீஅன்னை சித்துக் கலையைப் பயின்றார்.

தியோன் அல்ஜீரியாவில் தம் மனைவியுடன் வாழ்ந்துவந்தார். தியோன் தம்பதியர் இருவருமே மிகக்சிறந்த சித்துக் கலை நிபுணர்கள் என்று கூறப்பட்டார்கள். அதாவது மறைஞானக் கலை என்று கூறப்படும் அக்கல்டிசத்தில் அவர்கள் பெரும் தேர்ச்சிபெற்றவர்கள்.

நுண்ணறிவுக் கலை என்று சொல்லப்படும் சித்துக் கலை சாமான்யமானதல்ல. அதைக் கற்றுக்கொள்ள அபாரத் துணிச்சல் தேவை. சுயநலமற்ற மனப்போக்கும்கூட தேவை.

சித்துக்களைப் பயில்வதன் பொருட்டு பிரான்சிலிலிருந்து அல்ஜீரியா சென்றார் ஸ்ரீஅன்னை. திருமதி தியோன் வாயால் உண்ணாமலேயே பழங்களின் சக்தியைத் தம் உடலுக்குக் கொண்டுபோகும் திறனுள்ளவர். தியோன் தன்னிடம் வம்புசெய்த சில அரேபியர்களை தம் சித்து விளையாட்டுகளின் மூலம் மிரண்டு ஓடும்படிச் செய்தவர்.

கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இந்த உலகில் என்றென்றும் உண்டு. இந்த உலகைத் தவிரவும் வேறு வேறு உலகங்கள் இருக்கின்றன. அந்த வெவ்வேறு உலகங்களில் பல ஜீவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர் களிடம் உதவி கோரினால் அவர்கள் உதவத் தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்த பூமிக்குப் புதிய ஆன்மிக ஒளியைக் கொண்டு வர முடியும். இத்தகைய சிந்தனைகள் எல்லாம்தான் ஸ்ரீஅன்னை சித்துக் கலைகளில் நாட்டம் காட்டக் காரணம்.

ஒருமுறை அன்னை பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் கடல் நீரில் மூழ்கத் தொடங்கியது. சுற்றிலும் பலத்த புயல்காற்று அடித்ததால், கப்பல் தடுமாறி ஆடி மூழ்கும் நிலைக்கு வந்தது.

ஸ்ரீஅன்னை அந்தக் கப்பலில் பயணம் செய்த அத்தனை பேரையும் காப்பாற்றத் திருவுளம் கொண்டார். ஏதோ ஒரு முடிவோடு கப்பலிலின் மேல்தளத்திற்கு அவர் சென்றபோது சக பயணிகள் பலரும் அவரையே நம்பிக்கையோடு பின்தொடர்ந்தார்கள்.

ஸ்ரீஅன்னை மேல்தளத்தில் கால்நீட்டி கட்டைபோல் படுத்துக் கொண்டார். அடுத்த கணம் தன் உடலிலிலிலிருந்து தன் உயிரைப் பிரித் தெடுத்தார். அவரின் உயிரில்லாத உடலைப் பார்த்து எல்லாப் பயணிகளும் விக்கித்து நின்றிருந்தார்கள். அப்போது….

(தொடரும்)

உலக சித்தர்கள் தினம் 14-4-2015
டி.ஆர். பரிமளரங்கன்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதியை “உலக சித்தர்கள் தின’மாகப் போற்ற வேண்டுமென்று ஐந்து வருடங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது.

இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது.

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், “வாசி’ எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.

இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும்போது, நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள்.

அது இருபத்தோரா யிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள்.

நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360.

அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

இதேபோல் யுகங் களின் கணக்கும் இப்படி கூறப்படுகிறது. 21,600-ஐ எண்பதால் பெருக்கினால் கிருத யுகமாம். அறுபதால் பெருக்க திரேதா யுகமாம். நாற்பதால் பெருக்க துவாபர யுகமாம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நம் சுவாசம் 21,600. ஒரு வருடத்தின் நாழிகை 21,600.

21,600 ஷ் 80 =17,28,000 கிருதயுகம்.

21,600 ஷ் 60 =12,96,000 திரேதாயுகம்.

21,600 ஷ் 40 =8,64,000 துவாபரயுகம்.

21,600 ஷ் 20 =4,32,000 கலியுகம்.

பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம்.

சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

இயற்கையுடன் இயைந்து வாழவேண்டு மென்பதை நினைவூட்டவே உலக சித்தர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்கால நவீன விஞ்ஞான வளர்ச்சியாலும், ரசாயனக் கலவையாலும், நச்சுப்புகையாலும் இயற்கையான  நிலை மாறிவருகிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. வளரும் விஞ்ஞானத்தால் ஆதாயங்கள் பல பெற்றா லும் பாதகங்களும் உடல்நல பாதிப்பும் அதிகமாகவே காணப்படுகின்றன.

சித்தர்கள் ஆராய்ச்சிசெய்து வெளிப் படுத்தியதுதான் சித்தமருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.

கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம், சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்பநூல், மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரேசமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர்பெருமக்களும் உண்டு.

சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ் கின்றன. மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். கோவில்கள் மட்டுமல்ல; சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நவகிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர் அழுகணிச் சித்தர். இவரை வழிபட்டால் நாகதோஷம் அகலும். இவர் சித்தியடைந்த இடம் நாகப்பட்டினம். இவரைப்போலவே குதம்பை சித்தர் கேது தோஷம் நீக்கும் சக்திபெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், “டென்ஷன்’ பேர்வழிகளும் இவரை வழிபட்டு நலம்பெறு கிறார்கள். இவர் சித்தியடைந்த இடம் மயிலாடுதுறை. ராகு பகவானைப் பிரதிபலிக் கும் பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது சிறுகனூர் திருப்பட்டூர் தலம். இங்குள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு வலப்புறம் ஆதிசேஷன் அவதாரமான பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தால் கேதுவினால் ஏற்படும் தோஷம் மட்டுமல்ல; அனைத்து நாகதோஷங்களும் நீங்குமென்பர். இந்தக் கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அதன் புறவாசலின் முன்பகுதியில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாத முனிவரின் பிருந்தாவனம் உள்ளது. அவரை பிரார்த்தனை செய்து வழிபட்டால் ராகுதோஷம் நீங்கும்.

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் “குறுமுனி’ என்று போற்றப்படும் அகத்தியர், கயிலை மலையில் நடந்த சிவ- பார்வதி திருமணக்காட்சியை பொதிகை மலையிலிருந்தவாறு தரிசித்தவர். இவர் ஒருசமயம் திருக்குற்றாலத்திற்குச் சென்றபோது அங்கு அமைந்துள்ள வைணவத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது அவ்வாலயத்திலிருந்தவர்கள், சிவச்சின்னங்களுடன் வந்த அகத்தியரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. திரும்பிச்சென்ற அகத்தியர் வைணவச் சின்னங்களை தரித்துக்கொண்டு, சில மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெருமாள் ஆலயம் வந்தார். வைணவர் என்றெண்ணி அவரை அனுமதித்தனர்.

உள்ளே சென்ற அகத்தியர் மூலிகைச் சாறை பெருமாள் தலையில் பிழிந்து, கைவைத்து அழுத்தி, “குறுகுக குறுகுக’ என்றாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமாள் குறுகி சிவலிங்கமானாராம். அவரே குற்றாலீஸ்வரர்.

அகத்தியர், பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை இன்றும் குற்றாலநாதர் சிவலிங்கத்தில் தரிசிக்கலாம். அதுமட்டுமல்ல; அகத்தியர் தன் வலிமையைப் பயன் படுத்தி அழுத்தியதால் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாம். அதனை நீக்குவதற்கு அரிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை இன்றும் அபிஷேகம் செய்கிறார்கள். அகத்தியர் குற்றாலத்திற்கு வந்ததன் அடையாளமாக அவருக்கு ஒரு சந்நிதி, குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. அவரை வழிபட, நினைத்த காரியங்கள் வெற்றி பெறுமென்பது நம்பிக்கை. அகத்தியர், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் சமாதி அடைந்தாரென்றும், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சமாதிகொண்டதாகவும் இருவகையாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் பொதிகை மலைப்பகுதியில் இன்றும் அகத்தியர் வாழ்ந்துவருகிறார் என்று கூறுவர். மக்கள் நடமாட்டமில்லாத பொதிகை மலைப்பகுதியில் அகத்தியருக்கு முழு உருவச் சிலையொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமியன்று இரவில், ஒருசில பகுதிகளில் பூமியிலிருந்து ஒருவகை உப்புவெளிப்படும். இதை “பூமிநாதம்’ என்று சொல்வர். இந்த உப்பு, சித்தமருத்துவத் துறையில் முக்கிய இடத்தைப் பெறும். இது மூலிகையிலுள்ள ஜீவசக்திகள் வீரியத்துடன் விளங்க உதவுகிறது. இந்த உப்பு, சித்ரா பௌர்ணமியன்று வெளிப்படுவதை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே. சித்ரா பௌர்ணமி ஆதியில் சித்தர் பௌர்ணமி எனப்பட்டது. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையையும் சக்தியையும் கண்டு, மனித குலம் நலமுடன் வாழ வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்கள் என்று வரலாறு கூறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல; உலகமெங்கும் சித்தர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் காட்சிதரும் சித்தர்களைப்போல் ஜடாமுடி, தாடியுடன் காட்சிதருவதில்லை. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும், மற்ற நாடுகளிலும் சித்தர்கள் வாழ்கிறார்கள். யோகா, தியானம், வான் ஆராய்ச்சி போன்றவையெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை. அவர்களை அடையாளம் கண்டு அங்கு வாழும் மக்கள் போற்றுகிறார்கள்.

சித்தர்கள் காலத்தின் கணக்கை கணித்ததுபோல, நவகிரகங்களின் திசை களையும் மாற்றி, காலநிலைகளையும் மாற்றியிருப்பதாக வரலாறு கூறுகிறது.  நாட்டில் மழையின்றி மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலகட்டத்தில், இடைக் காடர் என்ற சித்தர் மட்டும் பசியின்றி வாழ்ந்து வந்தார். இதைக்கண்ட நவகிரக நாயகர்கள் “இது எவ்வகையில் சாத்தியம்?’ என்று வியந்து, காரணத்தையறிய சித்தரின் குடில் தேடிவந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு ரொட்டியையும் ஆட்டுப்பாலையும் அளித்தார். அவர்களும் விருப்பமுடன் உண்டனர். ஆட்டுப்பாலில் எருக்கிலைகளின் சத்து மிகுந்திருந்ததால், அப்பாலை அருந்தியதும் நவகிரக நாயகர்கள் மயக்கமுற்று சாய்ந்தனர். உடனே இடைக் காட்டு சித்தர், நவகிரக நாயகர்கள் எந்த அமைப்பிலிருந்தால் மழை குறையின்றிப் பெய்யுமோ, அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்தார். வானத்தில் மேகமூட்டம் திரண்டது. மழைபொழியத் துவங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிந்தன. மயக்க நிலை தெளிந்த நவகிரக நாயகர்கள், தங்களை திசைமாற்றி இடைக்காடர் சாதித்துவிட்டதை அறிந்து வியந்தார்கள். நாடு செழிக்க சித்தர் செய்த அற்புதத்தை நினைத்து அவரைப் போற்றினார்கள்.

அவரை வணங்கி, வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இதேபோல, ஒவ்வொரு சித்தரும் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்று மக்கள் நலமுடன் வாழ அருள்புரிந்திருப்பதாக சித்தர்களின் வரலாறு கூறுகிறது. எனவே சித்தர் பெருமக்கள் சமாதியடைந்த திருத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு நலமுடன் வாழ்வோம்.


சித்தர்தாசன் சுந்தர்ஜி

“மந்திரமாவது நீறு’
வானவர் அணிவது நீறு’

என்று திருநீறு (விபூதி) பற்றி மிகப் பெருமையாகக் கூறியுள்ளனர்.

ஆன்மிக ஈடுபாடுள்ளவர்கள் திருநீறு அணிந்துகொள்கின் றனர். இது சைவர் களின் சின்னம் என்று கோவில்களில் பிரசாதமாகத் தருகிறார்கள். இதுபோன்று இறைவழிபாடு சம்பந்தப்பட்ட செயல்களில் திருநீறு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த திருநீறு சமயச் சின்னம் மட்டும்தானா? உடலில் திருநீறு பூசிக்கொள்வதால் நன்மையுண்டா? நாம் பூசிக்கொள்வது உண்மையான திருநீறுதானா? என ஏராளமான கேள்விகள் உண்டு. திருநீறு பற்றி சித்தர்கள் கூறியுள்ள சில உண்மைகளை சுருக்கமாக அறிவோம்.

திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப் பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டது திருநீறு. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறைதிருநீற்றுப் பச்சிலைகள். (இதனை சில இடங்களில் மக்கள் திணுத்திப் பச்சை இலை என்றும் கூறுவர்), வில்வப்பழ ஓடுகள், பசுமாட்டுச் சாணம்.

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.

நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும். நமது நெற்றியில் இந்த சாம்பலை முதலில் பூசியவுடன், வெண்மையான சாம்பல் தலையிலுள்ள நீரை உறிஞ்சி கறுப்பாக மாறும். பின் அதைத் துடைத்துவிட்டு மறுபடியும் பூசிக்கொண்டால் வெண்மை நிறமாகவே இருக்கும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள். பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.

மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப்பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை “புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்’, “மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு’ என்று குரு அகத்தியர் கூறுகிறார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்திவந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“விந்துநிலை யறிந்து விந்தை கண்டால்
விதமான நாதமது குருவாய்போகும்
அந்தமுள்ள நாதமது குருவாயானால்
ஆதி அந்த மானகுரு நீயே யாவாய்’

என்ற குரு அகத்தியர் வாக்கினை ஏற்று, சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த உண்மைகளைக் கடைப்
பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வை நல்வாழ்வாக அமைத்துக்கொள்ள முடியும்!

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

“தான் மதுரையைச் சேர்ந்தவரென்றும், மதுரைக்குத் திரும்பிச் செல்லவேண்டுமென்றும் சொன்ன வல்லப சித்தரை வழியனுப்பிவிட்டு பொன்னனையாள், பரபரப்போடு தன் வீட்டு சமையலறைக்குச் சென்றாள்.

சித்தர் சொன்னபடி, தன் இல்லத்திலிலிருந்த சில பித்தளைப் பாத்திரங்களை அவள் எரியும் அடுப்பினுள்ளே போட்டு அடுப்பை மூடி வைத்திருந்தாள் அல்லவா? அடுப்பின் மூடியை நீக்கிவிட்டு உள்ளே உற்றுப்பார்த்தாள்.

அதுவரை கணகணவென எரிந்துகொண்டி ருந்த நெருப்பு அப்போது முழுவதுமாக எரிந்து முடிந்து அணைந்திருந்தது. அவள் நெருப்பில் போட்ட பாத்திரங்களின்மேல் வெள்ளை நிறத்தில் சாம்பல் படர்ந்திருந்தது.

சூடான பாத்திரங்களை இடுக்கியால் பிடித்தெடுத்து நீர்விட்டுக் கழுவினாள். அடுத்த கணம் ஆச்சரியத்தில் திகைத்துநின்றாள். பாத்திரம் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கமாக மாறி பளபளவென ஒளிவீசிக் கொண்டிருந்தது!

“ஆகா! என் இல்லத்திற்கு வந்த அடியவர் சாமான்யமானவர் அல்லர். அவர் மாபெரும் சித்தராகத்தான் இருக்கவேண்டும். மந்திரிக்கப்பட்ட நீரை இந்தப் பாத்திரங்களின்மேல் தெளித்து கொஞ்சம் திருநீறை இவற்றின் மேல் தூவினாரே? இதோ, தன் அபார ஆற்றல்மூலம் என்வீட்டுப் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் தங்கமாக்கிவிட் டாரே? இனியென்ன? என் நெடுநாள் கனவு பலிலிக்கப்போகிறது. இந்தப் பாத்திரங்களை உருக்கிக் கிடைக்கும் தங்கத்தில் நான், ஆடும் நடராஜரின் பொற்சிலையை வடிக்கச் செய்வேன்.’

அவள் ஆனந்தத்தில் தங்கப் பாத்திரங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்.

அவற்றைத் தன் இதழ்களால் முத்தமிட்டாள். பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு யாருமில்லாத தன் இல்லத்தில் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி ஆடினாள். தனக்குத்தானே கலகலவென நகைத்துக் கொண்டாள். திடீரென அந்தப் பாத்திரங்களையெல்லாம் தன் இல்லப் பூஜையறையில் கொண்டு வைத்து, அவற்றைக் கீழே விழுந்து வணங்கினாள். மகிழ்ச்சியில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் இதயத்தில் குடிகொண்ட நடராஜர் அவளது செயல்களைப் பார்த்து நகைத்துக்கொண்டார்.

தங்கத்தில் சிலைசெய்யும் சிற்பியை சந்தித்த அவள் தன் பாத்திரங்களைக் கொடுத்து, அவற்றை உருக்கிக் கிடைக்கும் பொன்னால் நடராஜரின் ஆடும் திருக்கோலச் சிலையை வார்த்துத் தருமாறு வேண்டினாள்.

அந்தத் தங்கத்தைப் பரிசோதித்த சிற்பி வியப்பிலாழ்ந்தான். இத்தகைய உயர்ந்த தங்கம் எங்கே கிடைத்ததென்று வினவினான். பொன்னனையாள் சொன்ன செய்திகளைக் கேட்டு அவன் உள்ளம் பிரம்மித்தது. அவள் சொன்ன அனைத்தையும் அவன் நம்பினான். காரணம், அத்தகைய அபூர்வமான பத்தரை மாற்றுத் தங்கத்தை அவன் வாழ்நாளில் அது வரை பார்த்ததில்லை.

பாத்திரங்களை உருக்கிக் கிடைத்த தங்கத்தில் பக்திப் பரவசத்தோடு அவன் நடராஜர் சிலையை வடித்துத் தந்தான். சொக்கத் தங்கத்தால் செய்த அந்த சொக்கநாதர் சிலை அபூர்வமான எழிலோடு ஒளிவீசியது. சிலையைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட அவன், கூலிலிவாங்க மறுத்துவிட்டான். சிலையைத் தான் வடிக்கவில்லையென்றும், நடராஜரே தன்மூலம் வடித்துக்கொண்டாரென்றும், எனவே தான் கூலிலிபெறுவது நியாயமில்லை என்றும் அவன் பக்திப் பெருக்குடன் கூறினான். சிலைக்காக தங்கத்தை உருக்கிய சிற்பியின் உள்ளத்தையே அந்தச் சிலை உருக்கிவிட்டது என்பதைப் பொன்னனையாள் புரிந்துகொண்டாள்.

இனி அந்தப் பொற்சிலையை கோவிலிலில் நிறுவவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால் இந்தச் சிலை தோன்றக் காரணமாக இருந்த சித்தரிடம் சிலையைக் காண்பித்து தான் ஆசிபெறவேண்டாமா? பொன்னனையாள் தான் பெற்ற குழந்தைபோல் சிலையை ஒரு துணியால் சுற்றி மார்போடு அணைத்துக்கொண்டு, மதுரையம்பதி நோக்கிப் புறப்பட்டாள்.

அவள் உள்ளம் சித்தரைப் பற்றிய புனித நினைவுகளில் தோய்ந்திருந்தது….

கூடல் மாநகரில் அவரைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லிலி எதிர்ப்பட்டவரிடமெல்லாம் விசாரித்தாள் அவள். எல்லாருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் இப்போது இருக்குமிடம்தான் யாருக்கும் தெரியவில்லை.

“சிறிதுகாலம் முன்னால் எங்கள் தெருவில்
தான் ஓர் ஆணைப் பெண்ணாக்கினார் அவர்’

என்றார்கள் சிலர். “அந்தச் சித்த புருஷர் நடுவீதியில் ஓர் ஊசிமுனையில் நின்று நடனமாடியதை நாங்கள் பார்த்தோம்’ என்றார்கள் வேறுசிலர். “நான் உண்மையில் முதியவன் அம்மா! அவர்தான் என்னை இளைஞனாக்கினார்!’ என்று அவரை எண்ணிக் கைகூப்பித் தொழுதான் ஓர் இளைஞன். “இறந்தார் என்று மருத்துவர்கள் சொன்ன என் கணவரை உயிர்ப்பித்து எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்தவர் அவர்தான் அம்மா!’ என்று தன் மாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளம்நெகிழ்ந்தாள் ஒருத்தி.

அப்போது மதுரையை ஆண்டுகொண்டி ருந்த மன்னன் அபிஷேக பாண்டியன், அந்தச் சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டானாம்.

அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லியனுப்பினானாம். “தேவையிருந்தால் மன்னன் வந்து தன்னைச் சந்திக்கட்டும், எனக்கு அவரால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை’ என்று பதில்சொல்லிலி அனுப்பினாராம் சித்தர்.

அவர் கோவில் பிராகாரத்தில் இருப்பதாக அறிந்து மன்னன் தானே சென்று அவரை வணங்கி “அவர் யார்’ என்று வினவினானாம். தான் தாய்- தந்தை இல்லாத அநாதை என்ற அவர், தன்னை ஒருவன் கல்லால் அடித்ததாகவும், இன்னொருவன் வில்லால் அடித்ததாகவும், அவர்களிடம் தப்பித்து, தான் இந்தக் கோவிலுக்கு வந்து குடியிருப்பதாகவும் சொல்லிலி மர்மமாக நகைத்தாராம். “தங்களுக்கு நான் ஏதேனும் செய்ய விரும்புகிறேன், என்ன செய்யட்டும்’ என்று மன்னன் பிரியமாகக் கேட்டானாம்.

“எனக்கு ஒன்றும் நீ செய்ய வேண்டாம். இதோ. கோவில் வாசலிலில் சிலையாக நிற்கும் இந்தக் கல் யானைக்கு பசிக்கிறது. ஒரு கரும்பு வாங்கிக் கொடு!’ என்றாராம் சித்தர்.

மன்னன் திகைத்துப் போய் ஒரு கரும்பைக் கொண்டுவரச் சொல்லிலி சித்தரிடம் கொடுக்க, சித்தர் கரும்பை யானைக்குக் கொடுத்தாராம். என்ன ஆச்சரியம். அந்தக் கல் யானை சித்தர் கொடுத்த கரும்பை கரகரவென்று கடித்துச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அசைவே இல்லாமல் நின்றதாம்! மன்னன் சித்தரின் காலிலில் விழுந்து வணங்கி, கோவிலை வலம்வந்து மீண்டும் சித்தரைத் தேடியபோது அவரை எங்கும் காணவில்லையாம். எங்கு வேண்டுமானாலும் இருப்பவரை- ஏன் எங்கும் இருப்பவரை எங்கேயென்று தேடுவது!

இப்படி அந்த விந்தையான சித்தரைப் பற்றி ஏராளமான தகவல்களை மக்கள் பலர் பொன்னனையாளிடம் சொல்லிலிச் சொல்லிலி வியந்தார்கள். ஆனால் கல் யானைக்குக் கரும்புகொடுத்தபின் மறைந்த அவர் பின்னர் எங்கும் தென்படவே இல்லை என்றார்கள்.

பொன்னனையாள் அவர் கடைசியாகத் தென்பட்டது மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிராகாரத்தில்தான் என்பதை அறிந்து சொக்கநாதர் கோவிலுக்குச் சென்றாள். ஒரு கூடை நிறைய பூக்களை வாங்கிக் கொண்டாள். எண்ணற்ற மலர்களால் சித்தரை அர்ச்சித்து வழிபட வேண்டுமென்று எண்ணமிட்டாள். தங்கச் சிலையோடும் புஷ்பக் கூடையோடும் கோவிலுக்குள் நுழைந் தாள்.

இறைவன் சுந்தரேஸ்வரரை பக்தியோடு வழிபட்டாள்.

மீனாட்சி அம்மையை இருகரம் கூப்பிக் கும்பிட்டாள். பின் எல்லா பிராகாரங்க ளிலும் ஒரு மூலை விடாமல் சித்தரைத் தேடித்தேடி அலைந்தாள். ஆனால் அவரைக் காணவில்லை. சிலையை அவரிடம் காண்பித்து ஆசிபெற விரும்பிய தன் எண்ணம் ஈடேறாதோ என்ற சிந்தனையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நடந்து நடந்து களைத்த அவள் துர்க்கை சந்நிதி அருகே காலார சற்று நின்றாள். நின்றவள் திகைத்தாள். இதென்ன, இங்கே அமர்ந்திருப்பவர் யார்? கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தாள். தான் காண்பது கனவா இல்லை நனவா? இத்தனை நேரம் இங்கெல்லாம்தானே தேடினோம்? அப்போது இங்கில்லாத சித்தர் இப்போது மட்டும் எப்படி திடீரென்று தோன்றினார்?

அவள் யாரைத் தேடிவந்தாளோ அந்த சித்த புருஷர் துர்க்கை சந்நிதி அருகில் சம்மணமிட்டு அமர்ந்து நிஷ்டையில் தோய்ந்திருந்தார். அவர் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்த அவள், நிஷ்டை கலைந்து அவர் எழும்வரை காத்திருக்கத் தீர்மானித்து அவர் எதிரே பவ்யமாக அமர்ந்தாள்.

சிறிதுநேரம் கழித்து அவர் கண்மலர்ந்தார். என்ன அழகிய கண்கள்! உலகம் முழுவதையும் தன் அருள்கடாட்சத்தால் காத்து ரட்சிக்கும் கண்களல்லவா அவை! அந்தக் கண்பார்வையிலிருந்த குளுமையை தரிசித்து மிகுந்த பாதுகாப்புணர்வைப் பெற்றாள் பொன்னனையாள். “”சுவாமி! என்னைத் தெரிகிறதா?” என்று பணிவோடு கேட்டாள்.

அவர் கடகடவென்று சிரித்தார். அந்த தெய்வீகச் சிரிப்பு மதுரைக் கோவில் பிராகாரங்களில் எதிரொலிலித்தது. “”உன்னையும் அறிவேன். உன் கையிலுள்ள தங்கச் சிலைபற்றியும் அறிவேன்!” என்று நகைத்தார் அவர். சிலையை மூடியிருந்த துணியை அகற்றி சிலையை அவர்முன் வைத்து அவர் பாதங்களில் மீண்டும் பணிந்தாள் அவள். சிலையைக் கையிலெடுத்து உற்றுப்பார்த்தார் அவர். அவள் கரத்தில் சிலையைக் கொடுத்தார்.

அவர் தந்த சிலையைத் தானும் உற்றுப் பார்த்து மீண்டும் அவரைப் பார்த்தாள் பொன்னனையாள். அவள் உள்ளம் வியந்தது. சிலையின் முகஜாடை அவர் ஜாடைபோலவே தோன்றியது. யார் இவர்? தேவலோகத்திலிலிருந்து மண்ணுலகம் வந்தவரா?

“”சுவாமி! தாங்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி மக்கள் கதைகதையாய்ச் சொல்கிறார்கள். பித்தளைப் பாத்திரங்களைத் தாங்கள் தங்கமாக்கிய அற்புதத்தை நானே கண்டிருக்கி றேன். தங்கள் வரலாறு என்ன சுவாமி?” அவர் மறுபடியும் அந்த தெய்வீகச் சிரிப்பை உதிர்த்தார்.

“”பெண்ணே! என்னைச் சுந்தரானந்தர் என்பார்கள். சிவசித்தர் என்பவர்களும் உண்டு. இந்தக் கோவிலிலில் உள்ளவர்கள் என்னை சுந்தரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். எனக்கு ஏராளமான நாமங்கள். மதுரையில் சித்தராக மானிடப் பிறவி எடுத்த நான் என்னை வல்லப சித்தன் என அழைத்துக் கொள்கிறேன். இந்த தங்க நடராஜர் சிலையை உன் ஊர்க் கோவிலிலில் நிறுவி வழிபட்டு வா. ஆடல் வல்ல நீ, உன் ஆடல் மூலமே அந்த ஆடல்வல்லானின் திருவடிகளை அடைவாய். இந்தத் தங்க நடராஜர் உன் ஊரில் நிரந்தரமாய்த் தங்கி அருள்பாலிலிப்பார்!”

பொன்னனையாள் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. பித்தளையைக்கூட பொன்னாக்க வல்லவரை, வல்லப சித்தர் என்பது பொருத்தம்தானே?

“”சுவாமி! உங்களைப் பார்த்தால் கடவுளைப் பார்த்ததுபோல் இருக்கிறது எனக்கு. இந்த ஏழைக்கு அருள்செய்த தங்களை மலர்களால் ஆராதிக்க விரும்புகிறேன்!”

அவள் இப்படிச் சொன்னதைக் கேட்டு நகைத்தவாறே அவர் மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அவள் கிடுகிடுவென்று மலர்களைத் தொடுத்தாள். அவரைச் சுற்றி ஒரு பூப்பந்தல் அமைத்தாள். பூப்பந்தலுக்குள் காட்சிதந்த அவரை மறுபடி வணங்கினாள். நிமிர்ந்து அவரைப் பார்த்த அவள் திடுக்கிட்டாள். கண்ணீர் விட்டுக் கதறலானாள். அவளோடு இப்போதுதான் பேசிய அவர் அப்படியே உறைந்து கற்சிலையாக மாறியிருந்தார்.

அவளது கதறலுக்கு அசரீரி பதில்தந்தது.

“”பெண்ணே! மானிடர்களுக்கு இறைசக்தியின் பெருமையை உணர்த்த நாமே வல்லப சித்தராகத் தோன்றினோம். எம்மை எத்தனையோ சித்தர்கள் வழிபட்டார்கள். எமக்கே சித்தராகும் ஆவல் தோன்றியதால் இப்படி நானும் சித்தர் வடிவம் பூண்டேன். உன் தூய மனமென்னும் தங்கப் பாத்திரத்தில் என்மேல் பக்தியென்னும் பாலன்னத்தை வைத்து நீ எனக்கு நிவேதனம் செய்திருக்கிறாய். உன் புகழ் எங்கும் பரவும். நீ விரும்பியவாறே உன் ஊர்க் கோவிலிலில் என் தங்கச் சிலைமுன் பல்லாண்டுகள் ஆடி மக்களை மகிழ்விப்பாயாக. பின் என் திருவடிகளை வந்துசேர்வாய்! உன்னைப்போல் இந்த வல்லப சித்தர் சிலைக்கு பூப்பந்தல் அமைத்து வழிபடுவோர்க்கெல்லாம் நாம் அருள்புரிவோம்! நடக்காது என்று அவர்கள் கவலைகொண்ட செயல்களையெல்லாம் நாம் அவர்களுக்கு நடத்திவைப்போம்! பித்தளை தங்கமானதுபோல் அவர்களின் சராசரி வாழ்க்கை என்னருள் பெற்றபின் பொன்னொளி பெற்றுப் பிரகாசிக்கும்!”

அசரீரி வாசகத்தைக் கேட்ட பொன்னனையாள் இறைவனே தன் இல்லம் வந்த சித்தர் என்றுணர்ந்து பெருமிதம் கொண்டாள். சிலையோடு திருப்புவனம் சென்ற அவள் அவ்வூர்க் கோவிலிலில் தங்க நடராஜர் சிலையை நிறுவி வழிபடலானாள்.

மதுரை ஆலயம் செல்லும் பக்தர்கள் இப்போதும் துர்க்கை சந்நிதி அருகே வல்லப சித்தர் சிலையை தரிசனம் செய்யலாம். இப்போதும் அன்பர்கள் வல்லப சித்தருக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு நிகழ்த்துகிறார் கள். அந்தத் தருணங்களில் வல்லப சித்தரின் புகழ் அங்கே மணம்பரப்புகிறது.

(தொடரும்)

அந்த தேவதாசிக்கு பொன்னனையாள் என்று பெயர். அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்துவது போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் அந்த அளவு பொருந்தாது. காரணம் அவள் மேனிநிறம்! பளபளவென்று பொன்னைப்போல் மினுமினுத்துக் கொண்டிருந்தது அவள் உடல்!

அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளது நிறத்தைப் பற்றி வியந்து பேசாமல் இருந்ததில்லை. கோவிலில் அவள் நடனமாடுவதைப் பார்த்தால் தங்கச்சிலை ஒன்று உயிர்பெற்று, கைகால் வீசி ஆடுவதுபோல்தான் தோன்றும்.

ஆனால் எல்லாராலும் வியந்து பேசப்படும் தங்க நிறத்தைக் கொண்ட பொன்னனையாளுக்குத் தன் மேனிநிறம் பற்றிப் பெரிய பெருமை எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் தங்கநிறம் குறித்து அவளுக்கு மனதில் கசலிப்புதான் இருந்தது.

அந்த கசலிப்புக்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. அவள் பெரிய சிவ பக்தை.

மதுரை அருகே திருப்புவனத்தில் வாழ்ந்துவந்தாள். அந்த ஊர்ச் சிவாலயத்தில் நாட்டியமாடி பொருளீட்டிவந்தாள். அந்த சிவாலய தெய்வமான திருப்புவனநாதர்மேல் அவள் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை.

ஆனால், அவளுக்கு மனக்குறை ஒன்றிருந்தது. “இந்தக் கோவிலில் சிவலிங்கம் மட்டும்தானே இருக்கிறது? உற்சவ மூர்த்தியாக தங்கத்தில் ஒரு நடராஜர் சிலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நான் நடனமணி. சிவலிங்கத்தின்முன் நாட்டியமாடுகிறேன். ஆனால் நடனக் கோலத்தில் நடராஜரின் தங்க விக்ரகமிருந்து அதன்முன் ஆடினால்தானே அது பொருத்தம்? ஆடல்வல்லான் என் ஆடலைப் பார்க்கிறானென்று அப்போதுதானே என் மனதில் ஆனந்தம் தோன்றும்?

என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியப்போகும் என் உடலின் தங்கநிறத்தால் என்ன லாபம்? என்றும் அழியாமல் நிலைத்திருப்பவனான பொன்னார் மேனியனுக்கல்லவோ பொற்சிலை அமைக்கவேண்டும்?’

அவள் மனதில் கசந்த நகைப்பு ஒன்று பிறந்தது. நடனக்கலை மூலம் பெரிய அளவில் ஒன்றும் அவளால் பொருளீட்ட முடியவில்லை. அவள் இல்லத்தில் சில பித்தளைப் பாத்திரங்களே இருந்தன. அதைத் தவிர அவளுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் சொத்தென்று பிரமாதமாக எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் கோவிலில் தங்க நடராஜர் சிலை வைக்கவேண்டுமென்று கனவு!

நடக்கக்கூடியதா இது?

இந்நினைவு வந்தபோதெல்லாம் அவள் பெருமூச்சு விடுவாள். யாரேனும் வள்ளல் வந்து பணம் கொடுத்தால் அவள் கனவு நிறைவேறலாம். ஆனால் தங்கச்சிலை செய்ய பொருளுதவி தரும் வகையிலான அவ்வளவு பெரிய வள்ளல் இங்கே யார்? சிறுகச்சிறுக குருவிசேர்ப்பதுபோல், தானே
தன் சம்பாத்தியத்தில் சேமித்துத் தங்கச்சிலை செய்துவைக்கலாமென்றால், என்றைக்குப் பணம்சேர்ந்து என்றைக்கு சிலைசெய்வது?

தனக்கும் நாளாக நாளாக வயதாகிக் கொண்டிருக்கிறது. பல்லெல்லாம் ஆட்டம் கண்டபிறகு நடனமாடினால், அந்த மூதாட்டியின் ஆட்டத்தைப் பார்க்க யார் வருவார்கள்? நடனக் கலைஞர்களின் சம்பாத்தியமென்பதே அவர்கள் இளமையாக இருக்கும்போது மட்டும்தானே?

பெரும் சிவபக்தையான அவள் அந்த ஆலயத்திலுள்ள சிவபெருமானை வழிபட வரும் அன்பர்களுக்கெல்லாம் உணவிட்டு விருந்தளித்து வந்தாள்.

அடியவர்களுக்கு அன்னதானம் செய்ததில் அவளது சம்பாத்தியத்தின் பெரும்பகுதி கரைந்துகொண்டிருந்தது. அன்னதானத்தை நிறுத்தவும் அவளுக்கு மனமில்லை.

நாள்தோறும் திருப்புவன சிவலிங்கத்தைப் பார்த்துக் கண்ணீர் விடுவாள் அவள். “நான் எனக்கென்று எதையாவது உன்னிடம் கேட்டேனா? உனக்குத்தான் ஒரு தங்க நடராஜர் சிலை கேட்கிறேன். நீ சித்தர்களுக்கெல்லாம் பெரிய சித்தனாயிற்றே? ஏதாவது ரசவாதம் செய்து எனக்குக் கொஞ்சம் தங்கம் கொடுத்தால் என்ன? அதில் நான் உனக்கு சிலை செய்துவைத்து மகிழ்வேனே? உலகம் முழுவதையும் ரட்சிக்கும் உனக்கு என்னை மகிழ்ச்சியடையச் செய்வதில் அப்படியென்ன கஷ்டம்?’

இந்த நினைப்பில் அவள் விழிகளில் கண்ணீர் வழியும். தங்க நடராஜர் சிலை தொடர்பான தன் எண்ணம் ஈடேறவில்லையே என்ற கவலையில் அவள் முகத்தில் எப்போதும் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கும்….

அன்று திருப்புவனம் என்ற அந்த சிற்றூருக்கு, தலயாத்திரை செல்லும் ஒரு சிவனடியார் குழு வந்துசேர்ந்தது. பொன்னனையாள் அனைவரையும் அன்போடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் வரவேற்றாள். எல்லாருக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்தாள்.

அவளது சிவ பக்தி அந்தப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மக்கள் அதன்பொருட்டு அவளைப் புகழாத நாளில்லை. எனவே அந்த சிவபக்தை தரும் உணவை ஏற்க சிவனடியார்கள் அனைவரும் அவள் இல்லத்துக்கு விஜயம் செய்தார்கள். கைகால் கழுவிக்கொண்டு பந்தியில் அமர்ந்தார்கள். தலைவாழை இலையிட்டு உணவு பரிமாறும் பணி தொடங்கியது.

வந்த சிவனடியார்களில் ஒரே ஒருவர் மட்டும் மிக வசீகரமான தோற்றத்தோடிருந்தார். இளைஞர்தான். உடலெங்கும் பூசிய திருநீறு. பளபளக்கும் கருவிழிகள். அகன்ற நெற்றி. அடர்ந்த தலைமுடி. கழுத்தில் ஏராளமான ருத்திராட்ச மாலைகள் பாம்பைப்போல் வளைந்து வளைந்து கிடந்தன. அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவர்போல் தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

அவர் பொன்னனையாளை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்வையின் கூர்மை அவள் முகத்தை ஆராய்ந்தது. பொன்னனையாளும் அவரைப் பார்த்தாள். சிவனடியாரின்  முகத்தைச் சுற்றி ஒரு புனித ஒளி பரவியிருந்ததுபோல் தோன்றியது. பக்தியோடு அவர் இலையில் உணவு பரிமாறினாள் அவள்.

எல்லா அடியவர்களும் சாப்பிட்டு முடித்து எழுந்துசென்றுவிட்டார்கள். ஆனால் அந்த இளைஞரோ உணவிட்ட இலைமுன் அமைதியாக உட்கார்ந்திருந்தாரேயல்லாது உணவில் கைவைக்கவே இல்லை. அது ஏனென்று பொன்னனையாளுக்கு விளங்கவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார்? நாம் ஏதும் தவறு செய்துவிட்டோமா?

அவள் அவரருகே அமர்ந்து விசிறியால் விசிறிக் கொண்டே, “”சுவாமி! நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? ஏன் உணவுண்ணாமல் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று கனிவுடன் விசாரித்தாள்.

அந்த இளைய அடியவர் மீண்டும் பொன்னனையாள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். அவரின் மிகவும் தீட்சண்யமான பார்வை அவளது ஆன்மாவையே ஊடுருவுவதுபோல் இருந்தது. பின் பதில் சொன்னார் அவர்:

“”பெண்ணே! உன் முகத்தில் ஏதோ தீராத ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கத்தை உன்னால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. அடியவர்களுக்கு உணவிடும்போது மகிழ்ச்சியோடும் மலர்ச்சியோடும் உணவிடவேண்டும். வருத்தத்தோடு உணவிடலாகாது. அப்படி உணவிட்டால் அத்தகைய உணவை ஏற்கும் வழக்கம் எமக்கில்லை. உன் ஏக்கம் என்னவென்று சொல். அதைத் தீர்த்துவிட்டு உணவருந்துவேன்.”

பொன்னனையாள் விசிறியால் அவருக்கு விசிறியவாறே கலகலவென்று நகைத்தாள்.

“”சுவாமி! எனக்கு ஓர் ஏக்கமுண்டு என்பது உண்மைதான். ஆனால் என் ஏக்கம் உங்களால் தீர்க்கக்கூடியதல்ல. அது என் வாழ்நாளில் தீராத ஏக்கம். அது கிடக்கட்டும். நீங்கள் உணவுண்ணுங்கள்!”

இப்போது அந்த இளம் அடியவர் நகைத்தார்.

“”பெண்ணே! உன் மனதில் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த எனக்கு, அந்த ஏக்கம் என்னவென்றும் கண்டுபிடிக்க முடியாதா என்ன? சிவன்கோவிலில் தங்கத்தினாலான நடராஜரின் உற்சவ விக்ரகம் இல்லையே என்பதுதானே உன் ஏக்கம்?”

சிவனடியாரின் பேச்சைக்கேட்ட பொன்னனையாள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள். தன் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஏக்கத்தை எப்படி இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டார் இவர்? இவர் சாதாரண ஆளல்ல. மிகப்பெரிய ஆற்றல்களுடைய சித்தராகத்தான் இருக்கவேண்டும்.

அவள் ஒரு விம்மலோடு பேசலானாள்:

“”சரியாகச் சொல்லிவிட்டீர்கள் சுவாமி!

ஆனால் அப்படி வெறுமே சொல்வதால் என்ன பயன்? என் ஏக்கம் தீரவும் தாங்கள் ஏதாவது வழி சொல்லலாகாதா?”

“”உனக்கு தங்கச்சிலை செய்ய கொஞ்சம் பொன் தேவை. அவ்வளவு தானே? நீ என் அன்புக்குப் பாத்திரமாகிவிட்டாய். உடனே உன் வீட்டிலிருக்கும் பாத்திரங்களைக் கொண்டுவா.”

பொன்னனையாள் வெட்கத்தோடு பதில் சொன்னாள்:

“”சுவாமி! நான் அதிக செல்வ வளம் உடையவளல்ல. நான்கைந்து பித்தளைப் பாத்திரங்களைத்தவிர என் வீட்டில் தங்கப் பாத்திரம் எதுவுமில்லையே? என்ன செய்வேன்?”

“”நான் தங்கப் பாத்திரங்களைக் கேட்கவில்லையே பெண்ணே? உன் உடல் நிறமும் உன் மனமும் தங்கமாக இருக்கின்றன. நீ உன் வீட்டிலுள்ள பித்தளைப் பாத்திரங்களையே என்முன் கொண்டு வை. அதுபோதும்.”

சமையலறைக்குச் சென்ற பொன்னனையாள், பித்தளையாலான சில சமையல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டுவந்து அவர்முன் கூச்சத்தோடு வைத்தாள்.

இளைய அடியவர் தன் கமண்டலத்திலிருந்து தண்ணீரெடுத்து மந்திரித்து அந்தப் பாத்திரங்கள்மேல் தெளித்தார். பின் தன் திருநீற்றுப் பையிலிருந்து கொஞ்சம் திருநீறை எடுத்து அவற்றின்மேல் தூவினார்.

“”பெண்ணே! இந்தப் பாத்திரங்களை உன் இல்லச் சமையலறையில் எரிகிற அடுப்பில் போட்டு அடுப்பை மூடிவிட்டு வா! மூடிய அடுப்பு எரிந்துகொண்டே இருக்கட்டும்!” என்றார்.

பொன்னனையாள் அப்படியே செய்தாள். பின் அவரருகே அமர்ந்து மறுபடியும் விசிறத் தொடங்கினாள். இளைய அடியவர் வயிறாரச் சாப்பிட்டுக் கைகழுவினார்.

பொன்னனையாள் அவர் கை துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொணர்ந்து கொடுத்தவாறே அவரிடம் பிரியமாக விசாரிக்கலானாள்:

“”சுவாமி! தாங்கள் யார்? தாங்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர்போல் தோன்றுகிறீர்கள். தங்கள் முகம் மிகமிகப் பரிச்சயமான முகம் போல் தென்படுகிறது. ஆனால் தாங்கள் யாரென்று என்னால் நினைவுபடுத்திப் பார்த்து அறியக்கூடவில்லை. எங்கே உங்களைப் பார்த்தேன் என்று எனக்கு நினைவு வரவில்லை. தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் சுவாமி? தங்கள் திருநாமம் என்னவோ?”

இளைய அடியவர் கடகடவென்று நகைத் தார். என்ன தெய்வீகச் சிரிப்பு இது என வியந்தாள் பொன்னனையாள். அவர் தேனைப்போன்ற இனிய குரலில் பதில் சொல்லலானார்:

“”பெண்ணே! நான் தென்மாடக்கூடல் என்றழைக்கப்படும் மதுரை நகரைச் சேர்ந்தவன். வல்லப சித்தன் என்பது என் பெயர். நீ மதுரை வந்த காலங்களில் அங்கே என்னைப் பார்த்திருக்கக்கூடும். திருப்புவனத்திலும் நான் இருக்கிறேன். நல்லது. நான் சென்றபிறகு எரியும் அடுப்பில் போட்ட பாத்திரங்களை ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள். அந்தப் பாத்திரங்கள் உன் ஏக்கத்தைத் தீர்க்கும்! மேலும் ஏதேனும் தேவையானால் தயங்காதே. மதுரைக்கு வந்து என்னை சந்தித்து வேண்டியவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்!”

சொன்ன இளைய அடியவர் விடைபெற்று கம்பீரமாக நடந்துசென்றார். அந்த நடை உலகையெல்லாம் கட்டியாளும் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் நடைபோல் இருந்தது. அவர் நடந்துசென்ற அழகையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பொன்னனையாள் திடீரென நினைவுவந்தவளாய்ப் பரபரப்போடு சமையலறை நோக்கி நடந்தாள். அங்கே சுடச்சுட ஓர் அற்புதம் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அப்போது அவள் அறிய வில்லை!

தெய்வீக சக்திவாய்ந்த 1,200 சாளக்கிராமக்கற்கள் பல பெரிய தாம்பாளங்களில் சேகரிக்கப்பட்டு ஒழுங்குற வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகிலேயே பஸவப்பா சோகமயமாய் நின்றிருந்தார். அவரின் கண்களில் அப்பண்ணாவின் வருகையை எதிர்நோக்கும் ஆவல் அதிகமிருந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஸ்வாமிகளின் பிருந்தாவன வாயில் தெற்கு திசையில் அமைக்கப்பட்டிருந்தது. அப்பாதை முழுவதும் மெழுகிக் கோலமிடப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருந்தன. பிருந்தாவனத்திற்கு இனி நித்ய பூஜையும் கைங்கர்யமும் செய்யப்போகின்ற 60 பிராம்மணர்களும் பாதையின் இருமங்கிலும், பிருந்தாவனத்தைச் சுற்றியிருந்தும், ஸ்ரீ ராகவேந்திரர் கூறியபடி பிருந்தாவனத்துள் போட வேண்டிய அனைத்துப் பொருட்களையும் போட்டு, தூப, தீபம் காட்டி, வேத பாராயணத்தை சேர்ந்தாற் போன்று உச்சரிக்க ஆரம்பித்தனர். கூடியிருந்தோர் ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் பிர வேசிக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை அனுமானித் தனர்.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மூலராமர் விக்ரகத்தையும், ஸ்ரீ மடத்தில் நித்ய பூஜையில் பங்கேற்கும் ஸ்ரீ பலராமர், ஸ்ரீ ஆஞ்சனேயர், ஸ்ரீ கோபாலகிருஷ்ணர் விக்ரகங்களையும், தினசரி பூஜையில் இடம்பெறுகின்ற சாளக்கிராமங்களையும் அடுக்கி பூஜையினைத் தொடங்கலானார்.

ஸ்ரீ ஸ்வாமிகள் செய்யும் கடைசிப் பூஜை என்ற நினைவில்- நிறைவில் அனைவரின் கவனமும் அங்கே சிதையாமல் குவிந்தது. ஸ்வாமிகள் மணியோசை எழுப்பியபடி தீபாராதனை காட்டத் தொடங்கினார்.

தொலைவிலிருந்தவர்கள் கரங்குவித்து வணங்கி கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஸ்வாமிகள் எழுந்திருந்து மக்களை புன்னகையுடன் பார்வையிட்டு பிருந்தாவனமருகே சென்றார். மக்கள் அனைவரும் ஹோ என்ற சோக ஓலம் எழுப்பினர். “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ! ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ’ என்று வேண்டிக்கொண்டனர்.

ஸ்வாமிகள் பிருந்தாவனத்தின் அருகிலிருந்த திம்மண்ணாவிடம், “”பிருந்தாவனத்துள் நான் சென்று கண்மூடி அமர்ந்தவுடன், எனது கையில் உருளும் துளசிமாலை கீழே நழுவியதும் பிருந்தாவனத்தை மூடி பந்தம் செய்ய வேண்டும்” என்று சொல்லி, மீண்டும் பூஜை விக்ரகங்களின் அருகில் சென்றமர்ந்து, முதலில் யோகீந்திரர், பின் வெங்கண்ணரையும் அழைத்து தீர்த்தமும் மந்த்ராட்சதையும் அளித்தார். முகத்தில் புன்னகை மிளிர்ந்துகொண்டேயிருந்தது. சிறிதளவும் சோர்வென்பதே அவரிடம் தென்படவில்லை. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் தனது திருக்கரங்களாலேயே தீர்த்தமும், மந்த்ராட்சதையும் அளித்து முடித்தார்.

ஸ்ரீராகவேந்திரர் மீண்டும் கண்மூடிப் பிரார்த்தித்து, பின் தன்னருகிலிருந்த சீடனையழைத்து தனது வீணையைக் கொண்டுவரச் சொன்னார். வீணையை மடியிலிருத்தி தந்தியினை மீட்டி, மென்மையாக சுருதிகூட்டி தானே இயற்றிய பாடலைப் பாடலானார். “ஹிந்து எனகே கோவிந்தா…’ என்று பூபாள ராகத்தில் அவர் பாடியதுகண்டு கிளிகளும் குயில்களுமே சப்தமெழுப்ப மறந்தன.

“ஹே முகுந்தா! இன்று உனது பாதார விந்தங்களை எனக்கு காண்பித்தருள்வாய்’ என்ற பாடலின் அர்த்தத்திற்கேற்ப மனக்கண்களில் ஸ்ரீஹரியின் பாதங்களை தரிசித்துக்கொண்டி ருந்தாரோ என்னவோ.

அந்த தெய்வீகக் குரலிலிருந்த குழைவும் தெளிவும் ஏற்ற இறக்கமும், சரணாகதியும் ஆக்ரமிப்பும் துதியும் வேண்டுதலும் ஆஹா… ஆஹா… அந்த பிரதேசத்திலிருந்த அத்தனை ஜீவ மற்றும் ஜட வஸ்துகளும் தெய்வீக ஏகாந்தத்தில் தங்களை மறந்தன. அனைவரும் “ராகவேந்திரா… ராகவேந்திரா…’ என்று அரற்றத் தொடங்கினர். அப்போது ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது. ஸ்ரீ மூலராமர் பூஜையில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண விக்ரகம் நர்த்தனமாடத் தொடங்கியது. ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் வீணை மீட்டிப் பாடிய பாடலில் அந்த ஸ்ரீமன் நாராயணனே மெய்ம்மறந்து நர்த்தனம் செய்தாரென்றால் எத்தனை ஜீவனுடனும் உயிர்ப்புடனும் அப்பாடல் அமைந்திருக்கும்.

மக்கள் ஸ்ரீராகவேந்திரரால் நிகழ்ந்த அந்த அற்புதம் கண்டு ஆரவாரமிட்டனர். ஆஹா நம் ஸ்வாமிகளின் தவ பலத்தினாலும், ஆன்ம சக்தியினாலும், முற்பிறவிகளில் அவர்பெற்ற புண்ணியங்களின் பலத்தாலும் இன்று இறைவனே இறங்கிவந்து நர்த்தனம் புரிந்தார். சாமான்யமான நமக்கும் அதனைப் பார்க்கும் பேற்றினை அருளிய ஸ்ரீராகவேந்திரரின் கருணையை என்னவென்று சொல்வது! ஸ்வாமிகள் மெல்ல தன்னிலைவந்து கண்மலர்ந்தார்.

ஸ்வாமிகள் ஆசனத்தைவிட்டு எழுந்தார். சரியான காலம் வந்ததை ஸ்வாமிகள் உணர்ந்தார். உரிய நேரம் வரை மக்களுக்கு தைரியமூட்டும் வண்ணம் திரும்பவும் பல அறிவுரைகளைக் கூறினார். பின் திவானை அழைத்து சில வார்த்தைகளைக் கூறினார். “”இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் ஸ்வாமி!” என அழுதார் திவான். அவர் உதடுகள் ஸ்ரீ ஹரியை ஜெபித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீஸ்வாமிகள் யோகீந்திரரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பிருந்தாவனம் நோக்கி நடக்கலானார். மிகமிக நெருக்கத்தில் இருந்ததனால், “ஓம் நமோ நாராயணாய’ என்று ஸ்வாமிகள் ஜெபித்துக் கொண்டிருந்தது, யோகீந்திரரின் செவிகளில் மிகத்துல்லியமாக விழுந்தது. வேதமுழக்கம் விண்ணை முட்டியது. நாதஸ்வர மேளதாள முரசு ஓசையும் உச்சத்தில் ஒலித்தது. ஸ்வாமிகள் பரிபூரண சுயஉணர்வுடன் வலது திருக்கரத்தில் துளசி மாலையேந்தி, இடது திருக்கரத்தில் தண்டமேந்தி, பின் கமண்டலத்துடன் பிருந்தாவனம் வாயிலருகினில் நின்றார். அனைவருக்கும் அதே புன்னகை முகத்துடன் தரிசனம் தந்தார். பின் ஸ்ரீ யோகீந்திரரை பிருந்தாவன வாசலில் நிறுத்திவிட்டு, தெற்குமுகமாக பிருந்தாவனத்தில் பிரவேசித்தார். பக்தர்கள் பூமாரி பொழிந்தனர்.

ஸ்வாமிகள் மெல்ல மெல்ல பிருந்தாவனத்து கட்டடத்தினுள் முழுவதும் இறங்கி, கிழக்குநோக்கி பத்மாசனத்தில் அமர்ந்தார். நிஷ்டையிலாழ்ந்து விட்டார். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்குமிடையில் துளசி மாலையினை மணிமணியாக நகர்த்திக்கொண்டிருந்தார். சுழலும் துளசி மாலை நின்று கீழே விழுந்தவுடன்  பிருந்தாவனத்தை பந்தம் செய்ய வெங்கண்ணருக்குச் சொல்லியிருந்தார். சுற்றியிருந்தவர்கள் பலவீனமாக உணர்ந்தனர். ஏதோ வயிற்றினுள் பந்தாய்த் திரண்டு மேலேறி வலியுடன் தொண்டையில் துக்கமாய் அடைத்துநின்றது. உதடுகள் துடிக்க லட்சுமி நாராயணன் உணர்ச்சிவயத்தில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார். வெங்கண்ணர் தனது அங்கவஸ்திரத்தில் வாய்பொத்தி அழுதுகொண்டிருந்தார். ஸ்ரீயோகீந்திரர் சந்நியாசம் ஏற்றிருந்தாலும், அந்தச் சூழ்நிலையில் அவரும் சாமான்யர் போன்றே விழிகளில் நீர்பெருக பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் வந்தது. ஸ்வாமி களின் விரல்களில் சுழன்ற துளசி மாலை நின்றது; பின் விழுந்தது.

ஸ்ரீராகவேந்திரரின் கட்டளைப்படியே முதன்முதலில் வெங்கண்ணர் சுற்றியிருந்த பிராம்மணர்கள் மற்றும் சீடர்கள் உதவியுடன் கற்பலகை கொண்டு மூடத்தொடங்கினார். உடனுக்குடன் தங்குதடையில்லாமல் மளமளவென்று கற்பலகைகள் கொண்டு பிருந்தாவனம் பூரணமாக மூடி பந்தனம் செய்யப்பட்டது. அதன்மேலே 1,200 சாலக்கிராமங்கள் பரப்பி அடுக்கப்பட்டு மேலும் கற்பலகை பொருத்தப்பட்டது. உடனே யோகீந்திரர் ஸ்ரீ மூலராமர், ஸ்ரீயோக நரசிம்மர் உள்ளிட்ட விக்கிரங்கள் அனைத்தையும் அதற்கும்மேலே வைத்து தூப தீபம் காட்டி பூஜையை நிறைவுசெய்தார். தொலைவில் துங்கா நதியின் சலசலப்பு கேட்குமளவில் அங்கு நிசப்தம் நிலவியது. மௌனம்கூட அந்தப் பூஜையில் கலந்துகொண்டதோ என்னவோ. சட்டென்று அந்த அமைதியை கிழித்தாற் போன்று “”ஸ்வாமீ…” என்ற பெருங்குரல் கேட்டுத் துணுக்குற்று, குரல்வந்த திசைநோக்கினர் அனைவரும். அங்கு அப்பண்ணா நின்றிருந்தார். அதிர்ச்சியில் நின்றிருந்தார். அவர் விழிகள் அப்போதும் ஸ்ரீராகவேந்திரரை எங்கெங்கும் தேடியது. பின்னர் பிருந்தாவனமருகே நிலைகொண்டது. அதுவரை ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரத்தை உச்சரித்த அவரது உதடுகள் சட்டென்று உச்சரிப்பதை நிறுத்திவிட்டன.

“கீர்த்திர் திக்விகிதா விபூதிரதுலா…’ என்ற வரியை அவர் நிறைவுசெய்யாமல் நிறுத்திவிட்டு அழத்
தொடங்கினார். உடனே பிருந்தாவனத்துக்குள்ளிருந்து கணீரென்று ஸ்ரீராகவேந்திரரின் குரல், “ஸாஷீ ஹயாஸ் யோத்ரஹி’ என்று நிறைவுசெய்தது. பாக்கியம் பெற்றார் அப்பண்ணாச்சாரியார்! எப்பேற்பட்ட பாக்கியம்! இவ்வளவு நீண்ட அந்த ஸ்தோத்திரத்தை- கல்லிலும் முள்ளிலும் கற்பாறையில் கிழிந்தும் அடிபட்டும் கலங்காது, நிற்காது, தன்னிலை மறந்து, சுயம்மறந்து ஸ்ரீராயரே சரணகதியென்று அவர் இயற்றிய ஸ்தோத்திரத்தை ஸ்ரீஸ்வாமிகள் ஆசீர்வதித்து, “ஸ்ரீ ஹரியின் வித்யா ரூபமான ஸ்ரீ ஹயக்ரீவரே சாட்சி’ என்று ஸ்தோத்திரத்தை மேன்மைப்படுத்தி நிறைவுசெய்தார். ஸ்ரீ ஸ்வாமிகள் பிருந்தாவனப் பிரவேசமானவுடன் முதன்முதலில் தனது அற்புதத்தை அப்பண்ணாவிலிருந்து ஆரம்பித்து வைத்தார். அவருக்குப் பெருமை சேர்ப்பித்தார், அன்றே!அப்பண்ணா கண்மூடி பிருந்தாவனமருகே அமர்ந்துவிட்டார். அவர் மிகமிக உன்னத நிலைக்குச் சென்றுவிட்டார். மறுபடியும் மனதுள் ஸ்ரீராகவேந்திரரை தரிசித்து அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார். மனது ஆரம்பகாலத்தில் பயணித்து, தான் ஸ்ரீராகவேந்திரரை முதன்முதலாக தரிசித்து பின் அவரின் அடியொற்றிய சீடனாகத் தொண்டாற்றிய நிலைக்குச் செல்லத்தொடங்கினார். அவர் மானசீகமாக தனது குருவுடன் சம்பாஷிக்கத் தொடங்கிவிட்டார். இமைகள் மூடித்தானிருந்தது. அவரின் திருவாயால்…

“பூஜ்யாய ராகவேந்திராய
ஸத்ய தர்ம ரதா யஸா
பஜதாம் கல்ப விருட்ஷாய
நமதாம் காமதேனவே’

என்று சப்தமாக நமஸ்கரித்தார். அப்பண்ணாச்சாரியார் தன்னையே மலராக்கி, ஸ்ரீராகவேந்தி ரரின் பாதத்தில் தன்னையே அர்ச்சனையாக்கிக் கொண்டார். அந்த உத்தமப் பூ சரணாகதி என்ற வாசனையுடன் கண்மூடி  தன்னை அர்ப்பணித்து அமர்ந்து விட்டது.

(முற்றும்)

கருவூரார் வடித்த நடராஜர் சிலையைப் பார்த்து ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தான் மன்னன் இரணியவர்மன். போகர் ஆலோசனைப்படிதான் கருவூரார் சிலையைச் செய்தார் என்பதோ, தங்கத்தோடு சிறிது தாமிரத்தையும் கலந்து சிலைசெய்யுமாறு போகரே கருவூராருக்கு அறிவுறுத்தினார் என்பதோ மன்னனுக்குத் தெரியாது. சித்தர் போகரை மன்னன் நேரில் பார்த்ததில்லையென்றாலும் போகர்மேல் அவனுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

தங்கத்தில் தாமிரத்தைக் கலந்ததற்காக போகரின் சீடரான கருவூராரைச் சிறையிலடைத்தான் மன்னன். எனினும் தான் சிதம்பரம் திருக்குளத்து நீருக்குள் கண்ட சிலைபோலவே கருவூரார் செய்த சிலை அமைந்திருப்பது மன்னனை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிலையை அவன் மனமுருகிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவன்மேல் நிழல் படிந்தது. தன் பின்னால் யாரோ வந்துநிற்பதையுணர்ந்து திரும்பிப் பார்த்தான்….

அங்கே கனல்பறக்கும் விழிகளோடு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார் போகர். தன் சீடரான கருவூரார் சிறையில் அடைபட்டிருப்பதை ஞானதிருஷ்டியால் அறிந்த அவர் மன்னனைக் கண்டிப்பதன் பொருட்டு அவன் முன் தோன்றினார்.

“”தாங்கள் யார்” என பவ்யமாகக் கேட்ட மன்னனிடம் தாமே போகர் என அறிவித்த அவர், “”மூடனே! வெறும் தங்கத்தால் எப்படிச் சிலை செய்ய இயலும்? கொஞ்சமேனும் தாமிரக் கலப்பு இருந்தால் தானே சிலை வடிவம்பெறும்? இந்தச் சிறு உண்மையைக்கூட அறியாமல் என் சீடனை சிறையிலிட்டது என்ன நியாயம்?” என்று கடும்கோபத்துடன் வினவினார்.

மன்னன் விதிர்விதிர்த்துவிட்டான். போகரை தரிசனம் செய்யக் கிடைத்த பாக்கியம் கடைசியில் இப்படியா அமையவேண்டும்? அவரிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினான். உடனடியாக அவரையும் அழைத்துக்கொண்டு சிறைச்சாலை சென்றான். கருவூராரை சிறையிலிலிருந்து விடுவிக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.

அந்த உத்தரவுக்கு எந்தப் பலனும் விளைய வில்லை. ஏனென்றால் கருவூராரைச் சிறையில் காணவில்லை! ஆனால் சிறை பூட்டியது பூட்டியவாறே இருந்தது!

போகரின் பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் கரைந்தான் மன்னன். தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். போகர் மனம் இளகியது.

“”மன்னனே! உன்னை மன்னித்தேன். இனி உயர்நிலை ஆன்மிகவாதிகளிடம் விளையாடாதே. கருவூரார் தன் யோக ஆற்றலால் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் இதோ இந்தச் சிறையிலேயேதான் இருக்கிறார் அவர். பூட்டிய சிறையிலிலிருந்து வெளிப்படும் ஆற்றலும் அவருக்கு உண்டு. இப்போது பார்!” என்ற போகர், “”என் அன்பிற்குரிய சீடனே! சிறையைவிட்டு வெளியே வா!” என அழைத்தார்.

மன்னன் திகைப்போடு சிறைச்சாலையை உற்றுநோக்கிய வாறிருந்தான். சிறையின் கதவு பூட்டியபடியேதான் இருந்தது. சிறைக்குள் திடீரென மீண்டும் தோன்றியது கருவூராரின் உருவம்.

மன்னனைப் பார்த்து நகைத்த கருவூரார், திடீரெனத் தன் உடலை சிறைக்கம்பிகளின் இடையே புகுந்து வெளிப்படுமளவு மெலிலிதாக்கிக் கொண்டார். சிறைக்கு வெளியே வந்துநின்ற அவர் மீண்டும் பழைய வடிவை எடுத்துக்கொண்டார்! மன்னனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது!

“”சித்தர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. என் சீடன் கருவூரான் இப்போது நிகழ்த்தியது அணிமா என்னும் சித்து. மன்னா! சித்து விளையாடல்களை நிகழ்த்துபவர்களிடம் நீ விளையாடாதே!”

இப்படிச் சொன்ன போகர் காற்றில் கலந்து மறைந்துபோனார். அவர் சென்ற திக்கை வணங்கிய மன்னன், தன்முன் தோற்றமளித்த கருவூராரையும் வணங்கிப் பணிந்தான். அவனையும் தன்மேல் புகார் சொன்ன அவனது மந்திரிகளையும் மனமார மன்னித்து, பின் தன்வழியே நடக்கலானார் கருவூரார். அடுத்தடுத்து பல்வேறு ஆலயங்களைச் சென்று தரிசித்தார்.

ஒருநாள் ஒரு விந்தையான நிகழ்ச்சி நடந்தது. ஒரு காகம் ஓர் ஓலைச் சுவடியைத் தன் அலகில் கவ்வியவாறு அவர்முன் பறந்து வந்து அமர்ந்தது. ஓலையை  அவர்முன் போட்டுவிட்டு அவரையே உற்றுப்பார்த்தவாறிருந்தது காகம். கருவூரார் ஓலைச்சுவடியை எடுத்துக் கொண்டதும் காகம் பறந்துவிட்டது.

“என்ன ஓலை இது? யார் அனுப்பியது?’ கருவூரார் வியப்போடு ஓலையில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை வாசிக்கலானார். அடடா!

அவரது குருநாதர் போகர் அவருக்கு அனுப்பிய மடலல்லவா அது! குருநாதரிடமிருந்து வந்தது என்பதால் ஓலையைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட கருவூரார், அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை பக்தியுடன் வாசித்தார்.

“உடனே தஞ்சாவூர் செல். பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிலிங்கத்தை ஸ்தாபிதம் செய்வதில் சிக்கல். சிவலிலிங்கம் பீடத்தில் பொருந்தாததால் சிற்பிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். உன்னால் முடியும். போ.’

குருவின் வாசகங்களைக் கட்டளையாக ஏற்ற கருவூரார் உடனே தஞ்சை சென்றார். விறுவிறுவென ஆலயத்திற்குள் சென்று நேரே கருவறையை அடைந்தார். கருவறையில் சிவலிலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய இயலாமல் பலரும் தடுமாறிக் கொண்டிருந்தனர். அவர்கள் கருவூராரை பக்தியோடு வரவேற்றார்கள்.

சுற்றுமுற்றும் உற்றுப்பார்த்தார் கருவூரார். அங்கே ஓர் அரக்கி நின்றுகொண்டிருப்பது அவருக்கு மட்டும் தெரிந்தது. கடகடவென கருவூராரைப் பார்த்து நகைத்தாள் அவள். “”பக்தி மார்க்கத்தை விரும்பாதவள் நான். இந்தச் சிவலிலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்ய நான் விடமாட்டேன்!” என உறுமினாள்.

“”நீ இருந்தால் அல்லவா தடையாக இருப்பாய்? இன்றோடு ஒழிந்துபோ!” என ஆணையிட்டார் கருவூரார். அடுத்த கணம் அவள் தீப்பற்றி எரிந்துபோனாள். அவள் நின்ற இடத்தின்கீழே ஒருபிடி சாம்பலாய் உருமாறிக் கிடந்தாள்.

“”இப்போது சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள்!” என்று உத்தரவிட்டார் கருவூரார். என்ன ஆச்சரியம்! அவர் உத்தரவிட்டபின் சிலை பீடத்தில் அழகாகப் பொருந்திநின்றது. அந்நேரத்தில் மற்றோர் ஆச்சரியகரமான சம்பவமும் நடந்தது. சிலையிலிலிருந்து பொன்னிறத்தில் ஓர் ஒளி புறப்பட்டுவந்து கருவூர்த்தேவர் நெஞ்சில் கலந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் கருவூர்த் தேவரை வணங்கிப் போற்றினார்கள்.

கருவூரார் ஒருமுறை ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில் சென்றார். அங்கிருந்த அன்பர்கள் கனவிலெல் லாம் அதற்கு முந்தின நாள் இரவு பெருமாள் தோன்றி, சித்தர் கருவூரார் அவ்வூர் வரவிருப்பதையும் அவரை மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டுமென்பதையும் அறிவித்து மறைந்த காரணத்தால், ஊரே அவரை வரவேற்கத் திரண்டிருந்தது. கடவுள் தம்மேல் காட்டிய கருணையை எண்ணியெண்ணி உருகினார் கருவூர்ச் சித்தர்.

பின்னர் திருச்சி அருகே உள்ள திருவானைக் காவல் ஆலயத்திற்குச் சென்று பரமேஸ்வரனை தரிசித்தார். அதன்பின் திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளையும் தரிசித்து ஆனந்தம் அடைந்தார். அவர் வாழ்வில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட திருவுளம் கொண்டான் ரங்கநாதன்.

அவ்வூரில் அபரஞ்சி என்றொரு தாசி வாழ்ந்து வந்தாள். அவள் செய்யும் தொழில் இழிவானதாக இருந்தாலும் கடவுளின் பரமபக்தை அவள்.

மிகுந்த ஆன்மிக நாட்டம் உள்ளவள். கருவூராரைத் தன் இல்லத்திற்கு வருமாறு அன்போடு அழைத்தாள் அந்த தாசி. அவள் முகத்தில் தென்பட்ட ஒளியையும் அவளது அழைப்பில் தென்பட்ட பக்தியையும் கண்ட கருவூரார் அன்றிரவு தாசி வீட்டில் தங்க முடிவுசெய்தார்.

அவர் இரவு நேரம் தன் இல்லம் வந்தபோது அபரஞ்சி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவருக்கு அன்போடு உணவளித்து அவரிடம் தன் ஆன்மிக சந்தேகங்களையெல்லாம் கேட்டாள். அவர் ஒரு குரு தன் சீடனுக்கு போதிப்பதுபோல் அவளது சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கமாக பதில் சொன்னார். அபரஞ்சியின் மனம் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தது. கருவூரார் காற்றில் கையை நீட்டினார். அவர் கரத்தில் தானே ஒரு நவரத்தின மாலை தோன்றியது. அதை அபரஞ்சிக்குப் பரிசாக அளித்த அவர் விடைபெற்று வெளியே நடந்தார்.

மறுநாள் திருவரங்க ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர்கள், பெருமாளின் நவரத்தின மாலையை விக்ரகத்தின் கழுத்தில் காணாமல் திகைத்தார்கள். அப்போது தன் கழுத்தில் ஒளிவீசும் நவரத்தின மாலையை அணிந்தவாறு வழிபாடு செய்ய வழக்கம்போல் அங்கு வந்தாள் அபரஞ்சி. அர்ச்சகர்கள் திகைத்தார்கள்.

அவர்களில் தலைமைப் பொறுப்பிலிலிருந்த அர்ச்சகர், நேற்றிரவு தன்கீழ் பணிபுரிபவர்களில் யாரோ அபரஞ்சி வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும்; பணத்திற்கு பதிலாக ரங்கநாதரின் நவரத்தின மாலையை அவளுக்குப் பரிசாகத் தந்திருக்கவேண்டும் என்றும் கருதினார்.

அங்கு கூடிய பொதுமக்களும் அவ்விதமே கருதினார்கள்.

அபரஞ்சி விழிகளில் கண்ணீர் வழிந்தது. முந்தினநாள் இரவு தனக்கு கருவூர்த்தேவர் தந்த பரிசு அது என்றும், தானும் அவரும் விடியவிடிய ஆன்மிக விஷயங்களைப் பேசி மகிழ்ந்ததாகவும் அவள் தெரிவித்தாள். ஒரு தாசி இரவு முழுவதும் ஆன்மிகம் பேசினாளாமே!

மக்கள் சிரித்தார்கள்.

கருவூரார் அங்கு வரவழைக்கப்பட்டார். தாசி சொல்வது உண்மையா என்று அவரை வினவினார்கள். கருவூரார் நகைத்தார். அது முற்றிலும் உண்மையே என்ற அவர், அபரஞ்சி அபூர்வமான ரங்கநாத பக்தை என்றும் அறிவித்தார். ரங்கநாதப் பெருமாளே தன் கரத்தில் நவரத்தின மாலையைத் தந்து அபரஞ்சிக்கு வழங்குமாறு ஆணையிட்டார் என்று விளக்கினார். ஆனால் அர்ச்சகர்களோ மக்களோ இதை நம்பத் தயாராயில்லை.

கருவூரார் ரங்கநாத விக்ரகத்தைப் பார்த்து, “”ரங்கநாதா, இதுதான் நடந்தது என்பதற்குச் சாட்சிசொல்” எனக்  கூவினார். மக்களைத் திகைப்பில் ஆழ்த்திய ஒரு விஷயம் அப்போது நடைபெற்றது. நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்ரிக்காக குருவாயூரப்பன் பேசியதுபோன்ற இன்னோர் அதிசயம் அங்கே நிகழ்ந்தது.

ரங்கநாத விக்ரகத்திலிலிருந்து, “”ஆமாம்.

அபரஞ்சியும் கருவூராரும் சொல்வதெல்லாம் உண்மையே. அபரஞ்சி என் பக்தை. நவரத்தின மாலையை நானே அவளுக்குத் தந்தேன்!” என அசரீரி எழுந்தது. மக்கள் மெய்சிலிலிர்த்தார் கள். கருவூரார் கால்களிலும் அபரஞ்சியின் காலில் களிலும் விழுந்துபணிந்தார்கள்.

பல ஊர்களைத் தேடிச்சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசித்து ஆனந்தமடைந்த கருவூரார் தன் ஊரான கரூருக்கே வந்துசேர்ந்தார். ஆனால் உள்ளூர் மக்கள் அவரை மதிக்கவில்லை. தாமரையின் அருகே இருக்கும் தவளை அந்தத் தாமரையிலுள்ள தேனை உணர்வதில்லை. எங்கிருந்தோ பறந்துவரும் வண்டுதானே தேனை அருந்திமகிழ்கிறது! கருவூரார் என்கிற அரிய தாமரையின் பெருமைகளை உள்ளுர்த் தவளைகள் அறியாததில் என்ன வியப்பு! என்றா லும் தன்னை உள்ளூர் மக்கள் மதிக்காதது குறித்து கருவூராருக்குச் சுணக்கமிருந்தது.

அவரது உள்மன வருத்தத்தை உணர்ந்த போகர் அவர்முன் தோன்றினார். “”பிறர் மதிப்பது மதியாதது ஆகிய இரண்டைப் பற்றியும் மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளத் தேவையில்லை” என விளக்கினார். “”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற அவர், தொடர்ந்து மக்களுக்கு நல்ல விஷயங்களைப் போதித்துவருமாறும், அவர்கள் ஒருநாள் இல்லாவிட்டால் இன்னொருநாள் கருவூராரின் பெருமைகளை அறிவார்கள் என்றும் அருளி மறைந்தார்.

தம் குருநாதர் கட்டளையை சிரமேற்கொண்ட கருவூரார் செல்வத்தின் நிலையாமை குறித்து மக்களிடம் அறிவுறுத்தலானார். கடவுள் பக்தியே மக்களுக்கு நிம்மதி தருமென வலிலியுறுத்தினார். மக்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காக கடும் கோடைக்காலத்தில் ஒருநாள் மழை பொழியச்செய்தார். ஒருநாள் பூட்டியிருந்த ஆலயக் கதவைத் தாமே திறக்கச் செய்தார். இப்படி பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியும் மக்களில் பலர் அவரை நம்பவில்லை. ஒருசிலர் மட்டுமே அவரிடம் பக்திபூண்டு வாழ்ந்தார்கள்.

அவருக்கு விரோதமாகவும் சிலர் இயங்கத் தலைப்பட்டார்கள். அவர் உண்மைத் துறவியல்ல என்றும்; அவர் மது அருந்துவதாகவும் மாமிசம் உண்பதாகவும் வதந்தியைப் பரப்பினார்கள். மன்னனிடமும் சென்று முறையிட்டார்கள்.

மன்னன் அவரது குடிலைச் சோதனை செய்ய உத்தரவிட்டான். அங்கே துளசி, வில்வம், மலர்கள் போன்றவற்றைத் தவிர எதுவும் இருக்கவில்லை. மன்னனே நேரில் அவரது குடிலுக்கு வந்து கருவூராரிடம் மன்னிப்பு வேண்டினான். மக்களை அழைத்துக் கண்டித்தான்.

மன்னன் சொல்லிலியும் மக்களில் சிலர் திருந்தவில்லை. அவர்கள் கருவூரார் எவ்விதமோ மன்னனை மயக்கிவிட்டார் எனச் சொல்லி அவருக்குத் தாங்களே தண்டனை அளிப்பதாகக் கூறி அவரைத் தேடிவந்தார்கள்.

கருவூரார் இத்தகையவர்களின் போக்கால் அலுப்படைந்தார். போதும் தம் வாழ்வு என முடிவுசெய்தார். ஆயுதங்களோடு வந்த மக்களைப் பார்த்து அஞ்சி ஓடுவதுபோல் பாவனை செய்து கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்குள் ஓடினார். மக்கள் அவரை விடாமல் துரத்தினார்கள்.

திடீரென கருவறைக்குள் சென்று சிவலிலிங் கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் அவர்.

அடுத்த கணம் சிவலிங்கத்திற்குள்ளேயே கலந்து மறைந்தார். அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் ஆயுதங்களைக் கீழேபோட்டு விட்டு தாங்கள் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டிக் கதறினார்கள்.

சிவனோடு சிவனாய்க் கலந்த கருவூரார் ஸித்தி அடைந்துவிட்டாலும், புகழுடம்போடு வாழ்ந்து தம்மை நாடிவரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலித்து வருகிறார். கருவூரார் சிவஞான போதம், கருவூரார் பூரண ஞானம், கருவூரார் யோக ஞானம் உள்ளிட்ட அவர் எழுதிய பதினோரு நூல்கள் இன்றும் ஆன்மிகத்தையும் தமிழின் பெருமையையும் உணர்த்திவருகின்றன. இன்று சித்தர் கருவூராரின் புகழ் உலகெல்லாம் பரந்துள்ளது.
           ஷீர்டி பாபா பற்றிய ஒரு முக்கியமான செய்தி- அவர் தாம் ஸித்தி அடையும்வரை தமக்கு வேண்டிய உணவை  யாசித்துப்பெற்றே உண்டு வாழ்ந்து வந்தார் என்பது. தமது அடியவர்கள் தரும் உணவு எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை அவர் அமிர்தம்போலவே கருதினார். அந்த உணவை மட்டுமே அவர் சாப்பிட்டார். 

அவர் வாழ்வில் இன்னொரு முக்கியமான விஷயம்- அவர் தமக்கென்று எந்த சொத்தையும் எப்போதும் சேர்க்கவில்லை என்பது.  அவர் ஸித்தி அடைந்தபோது அவரிடமிருந்த மொத்த சொத்து என்பது வெறும் பதினாறு ரூபாய் மட்டும்தான் என்பதை அறிந்து அன்பர்கள் ஆச்சரியம் கொண்டார்கள். அதில் இன்னும் ஓர் ஆச்சரியம் அவரது இறுதிக் கடன்களை நிறைவேற்ற அந்தப் பணம் போதுமானதாய் இருந்தது என்பதுதான்.

பணத்தாசையே ஒருசிறிதும் இல்லாதிருந்த பாபா ஒருசிலரிடம் தாமே விரும்பி காணிக்கைத் தொகை தருமாறு கேட்டதும் உண்டு. இரண்டு விஷயங்களுக்காக அவர் காணிக்கைத் தொகை பெற்றுக்கொள்வார். ஒன்று, அவர் குடிலிலில் எரித்துவந்த அணையா விளக்கிற்கு எண்ணெய் வாங்க. இருபத்துநான்கு மணிநேரமும் எரிந்த அந்த விளக்கிற்கு எண்ணெய் வாங்கவேண்டும் எனக் கேட்டபோது, பலரும் பிரியமாகப் பணம் கொடுத்து உதவினார்கள்.

இன்னொன்று, துனி என்ற புனித நெருப்பை அவர் வளர்த்து வந்தார் அல்லவா? அந்த நெருப்பு தொடர்ந்து எரிய விறகு வாங்க. துனி நெருப்புக்கு விறகு வாங்குவதற்குப் பணம் கொடுப்பதை நடுத்தர மக்கள் பலர் ஒரு புண்ணியச் செயலாகக் கருதினார்கள். அந்த நெருப்பு தொடர்ந்து எரிவதால்தான் எந்தத் துன்பமும் தங்களைத் தாக்காமல் இருப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். அவர்கள் பாபாவை வணங்கும்போது துனி நெருப்பையும் சேர்த்து வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

சிற்சிலரிடம் உரிமையோடு அதட்டிக் காசு கேட்பார் பாபா. அப்படிக் கேட்கப்பட்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். உடனே காசு கொடுத்து விடுவார்கள்.

பாபா தங்களிடம் உரிமை எடுத்துக்கொள்கிறார் என்ற மகிழ்ச்சி மட்டுமல்ல அவர்கள் காசு கொடுக்கக் காரணம். பாபா கேட்டு அவருக்குக் காணிக்கை கொடுத்தால், காணிக்கை கொடுத்தவருக்கு விரைவில் ஏதேனும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும்கூட ஒரு காரணம். பாபா கேட்டபடி காணிக்கை கொடுத்தவர்கள், தங்கள் வாழ்வில் அடுத்து என்ன மங்கல நிகழ்ச்சி நடக்கப் போகிறதென்று ஆவலாய்க் காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பு ஒருபோதும் வீணானதில்லை. 

துமால் என்ற பெயருடைய பாபாவின் அன்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருநாள் “”எனக்குக் காணிக்கை கொடு, உடனடியாகக் கொடு” என்று வற்புறுத்தினார் பாபா. ஆனால் துமாலிலிடம் அப்போது பணம் எதுவுமில்லை. அவர் மிகுந்த பொருளாதார சிரமத்தோடு வாழ்ந்துவந்த காலம் அது.

துமால் அளவற்ற வருத்தத்தோடு, “”நீங்கள் காணிக்கை கேட்கிற இன்று பார்த்து என்னிடம் பணம் ஒன்றும் இல்லையே பாபா, நான் என்ன செய்வேன்? என்னிடம் பணம் இருக்கிற நாளில் நீங்கள் காணிக்கை கேட்கக்கூடாதா?” என்று பெரிதும் மனம் வருந்தினார்.

“”உன்னிடம் இல்லாவிட்டால் என்ன? போ. ஹரி விநாயக் சேத்திட மிருந்து நான் கேட்டதாகப் பணம் வாங்கிவந்து எனக் குக் கொடு! ம். சீக்கிரம்!” என்று உத்தரவிட்டார் பாபா. பாபாவின் கட்டளையை யார்தான் மறுக்கமுடியும்? அந்தக் கட்டளைக்குப் பின்னால் உள்ள சூட்சுமங்கள் பற்றி பாபாவுக்குத்தானே தெரியும்? துமால் உடனடியாகச் சென்று அப்படியே பணம் வாங்கிவந்து பாபாவிடம் மிகுந்த பணிவோடு அதை அர்ப்பணித்தார்.

அன்று துமாலிலின் வீட்டுக்கு ஏதோ அரசாங்க உத்தரவு தபாலில் வந்திருப்பதாக யாரோ வந்து சொன்னார்கள். துமால் பாபாவைப் பணிந்து விடைபெற்று வீடுநோக்கி ஓடினார். வியப்போடு தபாலைப் பிரித்துப் பார்த்தார். அவர் இதுவரை பெற்றுவந்த உபகாரச் சம்பளத்தை மேலும் ஐம்பது ரூபாய் அதிகரித்துள்ளதாக அரசாங்கக் கடிதம் சொல்லிலிற்று. துமால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் ஓடோடி வந்து பாபாவின் பாதங்களைப் பற்றி கண்ணீரால் நீராட்டினார். தன் பொருளாதார சிரமங்களை உணர்ந்து பாபா செய்திருக்கும் அருட்செயல்தான் இது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல; இப்படி காணிக்கை கொடுத்தவர்கள் வாழ்வில் ஏராளமான இனிய சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததாக பாபாவின் சரித்திரம் சொல்கிறது. 

பாபாவுக்கோ பணத்தாசை அறவே இல்லை. அப்படி யிருக்க அவர் தட்சிணை கேட்டது எதற்காக? தான தர்மம் செய்யவேண்டும் என்ற உணர்வை அடியவர்களிடம் தோற்றுவிப்பதற்காகத்தான். பணம், காசு இவற்றின்மீது தம் பக்தர்கள் கொண்டுள்ள பற்றை மெல்ல மெல்ல நீக்கி, அவர்களைப் பூரண இறைநாட்டம் உள்ளவர்களாகச் செய்யவேண்டும் என விரும்பினார் பாபா. அதன்பொருட்டா
கவே பணத்தை ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பவர் களாக தம் பக்தர்களை அவர் மாற்றினார். அப்படி மாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.  

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பாபா துயில் எழும்போது அவர் ஓர் ஏழைப் பக்கிரிதான். அவரிடம் பைசா காசுகூட இருக்காது. ஆனால் அன்று மாலை சூரியாஸ்தமனம் ஆவதற்குள் அவர் பணக்காரராக மாறிவிடுவார். அன்பர்கள் அவருக்கு காணிக்கையாகக் கொண்டுவந்து குவிக்கும் தொகை அந்த அளவு இருக்கும். (வருமானவரி அதிகாரிகள் வரி போடலாம் என நினைக்கும் அளவு!)

ஆனால் அப்போதே தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கு அந்தப் பணத்தை வாரி வழங்கிவிடுவார் பாபா. எல்லாப் பணத்தையும் சேமித்துவைத்துக் கொள்ளாமல் அன்றன்றே வழங்கிவிடுவதால் மறுநாள் காலை மீண்டும் ஏழைப் பக்கிரியாகத்தான் அவர் கண்விழிப்பார்.

யாரேனும் தட்சிணை தரவில்லை என்றால் அதையும் பாபா ஒரு பொருட்டாகக் கருதியது கிடையாது. அவரது அருள்- தட்சிணை கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் இரு தரப்பினரிடமும் சமமாகத்தான் செயல்பட்டது. அதிக தட்சிணை தந்தவர்களுக்கு அவர் விசேஷ தரிசனம் கொடுத்தார் என்றோ, அதிக சலுகை காட்டினார் என்றோ அவர் சரிதத்தில் எங்குமே செய்தி பதிவாகவில்லை. பொருளாதார ரீதியான உயர்வு தாழ்வுகளை அவர் என்றும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

தன் பக்தர்களுக்கு எந்தவிதத் துன்பமும் நேர்வதை பாபா ஒருபோதும் அனுமதித்ததே இல்லை. அவருடைய கருணை அளவிடற்கரியது. கருணைக் கடல் என்று அவரைக் குறிப்பிடுவதுதான் மிகப் பொருத்தமானது. தன் அடியவர்களை தன் குழந்தைகள் என்றே பாபா பிரியத்தோடு குறிப்பிடுவார். “”என் குழந்தைகளை நான் ரட்சிக்காவிட்டால் வேறு யார்தான் ரட்சிப்பார்கள்? அவர்களை ரட்சிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் என்னுடையது இல்லையா?” என்று பாபா சொல்வதைக் கேட்டு அடியவர்கள் உள்ளம் உருகுவார்கள். தாங்கள் பாபா மேல் செலுத்தும் பக்தியைவிடக் கூடுதலானது பாபா தங்கள்மேல் செலுத்தும் கருணை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

 ஒருமுறை ஒரு திருடன், தான் வைத்திருந்த திருட்டு நகை பாபாவுடையது என்று கூசாமல் பொய் சொன்னான்.

அப்படிச் சொல்வதன் மூலம் பாபாவை மாட்டி வைத்து விட்டுத் தான் தப்பித்துவிடலாம் என அவன் மனப்பால் குடித்தான்.

நீதிபதி திகைத்தார். அவருக்கு பாபாமேல் மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் இந்தத் திருடனானால் இப்படிச் சொல்கிறானே?

அவர் குற்றவாளியையும் அழைத்துக்கொண்டு ஷீர்டியில் பாபா தங்கியிருந்த இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் பாபா சொன்ன பதில்கள் விசித்திரமானவை; சுவாரஸ்யமானவை; நினைக்க நினைக்க பாபா அன்பர்களின் மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்துபவை.

“”உங்கள் உண்மையான பெயர் என்னவோ? அதை நான் தெரிந்துகொள்ளலாமா?”

“”என்னை என் அன்பர்கள் சாயிபாபா என்று கூப்பிடு கிறார்கள். எனவே அதுதான் என் பெயராக இருக்கும் என்று நான் நம்புகிறேன்! என் பெயரைப் பற்றி அவ்வளவு தான் எனக்குத் தெரியும்!”

“”உங்கள் தந்தையின் பெயர் என்னவென்று சொல்ல முடியுமா?”

“”முடியுமே. என் தந்தை பெயரும் சாயிபாபாதான். நான் சாயிபாபாவுக்குப் பிறந்த சாயிபாபா!”

“”உங்கள் குருநாதர் யார்?”

“”வெங்குசாதான் என் குரு!” (வெங்குசா என்று பாபா குறிப்பிட்டது திருப்பதி வெங்கடாசலபதியைத்தான் என்று சிலர் கூறுகிறார்கள்.)

“”தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியுமா? இந்துவா முஸ்லிமா?”

“”நான் கபீர் வம்சத்தைச் சார்ந்தவன்!”

(கபீர்தாசர் அந்தணராய்ப் பிறந்து முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. ராம், ரஹீம் இருவரும் ஒருவரே என்று கருதியவர் கபீர்.)

“”உங்கள் தொழில் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“”படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இந்த மூன்றும் என் தொழில்கள்!”

“”உங்கள் வயது என்னவோ?”

“”பல லட்சம் வருடங்கள். சரியாகக் கணக்கிட இயலவில்லை.”

“”பாபா! இப்போது தாங்கள் என்னிடம் சொல்வதெல்லாம் உண்மைதானே? தாங்கள் ஏதும் விளையாடவில்லையே?”

“”உண்மை. உண்மை. உண்மை. நான் இப்போது சொன்னதனைத்தும் முக்காலும் உண்மை! அதில் உங்களுக்கு எள்ளளவு சந்தேகமும் தேவையில்லை!”

“”இந்த வைர நகையை நீங்கள் இவனுக்குத்தான் கொடுத்தீர்களா?”

“”அவன் அப்படிச் சொன்னால் அது சரிதான். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாவற்றையும் நான்தானே கொடுக்கி றேன்?”

“”இந்தத் திருடன் உங்களுடையவனா?”

“”இந்தத் திருடன் மட்டுமல்ல; மனிதர்கள் எல்லாருமே என்னுடையவர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால் இந்தத் திருடனும் என்னுடையவன் என்பதில் சந்தேகமில்லை.”

குற்றவாளி நகையைத் திருடியதற்காக பிறகு தண்டனை பெற்றான். ஆனால் அந்த விசாரணையில் பாபா கூறிய பதில்கள் மக்கள் அனைவராலும் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்டன. பாபாமேல் மக்கள் கொண்டிருந்த அன்பு அதன்பின்னர் அபரிமிதமாகப் பெருகியது.

 ஷீர்டியை அடுத்து ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியர் பணியாற்றி வந்தார். மிகவும் ஏழை. மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே என்பது அவர் பெயர். மிக நல்ல மனிதர். பாபா தெய்வத்தின் அவதாரம் என்பதை உணர்ந்து கொண்டவர் அவர். பாபாவை மனதால் சரண்புகுந்து வாழ்ந்து வந்தார். பாபாவே கண்கண்ட தெய்வம் என்பது அவரது தீர்ந்த முடிவு.

என்ன பிரச்சினையானாலும் தான் நம்புகிற பாபா அதைத் தீர்த்து வைப்பார் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது வாழ்விலும் சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரத்தான் வந்தன. பிரச்சினையே இல்லாத வாழ்க்கை என்பது ஏது? ஆனால் அந்த எல்லாப் பிரச்சினைகளும் பாபாவின் அருளால் சுமுகமாக முடிந்தன.

 ஒருநாள் அவர் வாழ்வில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தது. சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென்று எங்கிருந்தோ சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்த கருநாகம் ஒன்று அவரைத் தீண்டிவிட்டு விறுவிறுவெனச் சென்றுவிட்டது. நாகப்பாம்பின் கொடிய விஷம் அவரது உடலெங்கும் பரவத் தொடங்கியது. ஒரு கணத்தில் அவர் வாயில் நுரை தள்ளியது. சாலையில் நடந்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். பார்த்தவர்கள் அத்தனைபேரும் பதறித் துடித்தார்கள். அந்தக் கொடிய விஷத்தால் அவர் சில கணங்களில் இறந்துவிடுவார் என்று எல்லாருக்கும் தெரிந்தது. அதிர்ச்சியில் செய்வதறியாது தத்தளித்தார்கள் அவர்கள்.

ஆனால் மாதவராவுக்கு பாபாமேல் தீவிர நம்பிக்கை உண்டே? இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் பாபாதானே? எனவே பாபாவிடம் சரணடைந்தால் தப்பித்துவிடலாம் என அவர் முடிவெடுத்தார். உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு ஓடிவந்தார் அவர். அவருடன் மற்றவர்களும் கவலையோடு ஓடிவந்தார்கள்.

“”என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் வேகமாக ஏறத் தொடங்கினார்.

படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரை கூர்மையாகப் பார்த்தார் பாபா. அவரது கண்பார்வையின் கூர்மை திகைக்க வைத்தது. அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, “”ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு!” என்று பாபா கூச்சலிலிட்டார். அவரது உரத்த கூச்சல் திடுக்கிடுமளவு அச்சம் தருவதாக இருந்தது.

தான் எந்தத் தவறும் செய்யவில்லையே, பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம். இப்போது பாபா இப்படிச் சொல்கிறாரே… என்ன செய்வதென பாபாவின் தீவிர அடியவரான மாதவராவ் திகைத்து, செய்வதறியாது நின்றார். அவரது கண்களிலிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொழிந்துகொண்டிருந்தது. கூட்டத்தினரும்கூட “அருளே வடிவான பாபா, இப்படிச் சொல்ல என்ன காரணம்’ என்றறியாமல் விக்கித்து நின்றனர். ஆனால்.‘கற்பத்தை யுண்டால் காயம் அழியாது
கற்பத்தினாலே காணலாம்
    கைலையை”

என்ற சிவவாக்கியர் பாடல் வரிகளுக்கேற்ப உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், அதே நேரம் உடலை வலிமையாக்கவும் கற்ப மூலிகைகள் உதவுகின்றன.

காயகற்ப மூலிகைகளில் ஒன்றான கருந்துளசி பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதனுடைய எண்ணற்ற மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்திருப்போமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கருந்துளசியை நம் வீடுகளில் துளசி மாடம் வைத்து வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. நாம் குடியிருக்கும் பகுதிகளில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் பழக்கமாக இருந்திருக்கிறது. முன்னோர்கள் துளசியை தெய்வமாக போற்றியும் வந்திருக்கின்றனர். அதனுடைய அறிவியல் பூர்வமான விளக்கத்தைப் பார்ப்போம்.

கருந்துளசி சுற்றுப்புற காற்றை தூய்மை செய்யும் குணம் கொண்டது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். துளசியில் இருந்து வெளியாகும் காற்றில் ஓசோன் காணப்படுவது கண்டறிப்பட்டுள்ளது. காலையில் துளசி மாடத்தை சுற்றி வரும்போது இந்த ஓசோன் நமக்கு கிடைப்பதால் உடல் புத்துணர்வு பெறுகிறது. மேலும், காலையில் துளசி இலையை தண்ணீரில் போட்டு அருந்துவதால் வயிற்று உபாதைகள் நீங்குவதாகவும் கண்டறிந்தள்ளனர்.

கருந்துளசி காரச்சுவை கொண்டது. இது உடலில் வெப்பத்த தன்மையை உண்டாக்கி கோழையை அகற்றும் பண்பு கொண்டது. வியர்வை பெருக்கியாக இது செயல்படுகிறது. அஜீரணத்தை குணமாக்கும் தன்மை கருந்துளசிக்கு உண்டு.

கருந்துளசியில் உள்ள செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் :

கருந்துளசி இலையிலிருந்து எடுக்கப்படும் வாலட்டைல் எண்ணெயில் (Volate Oil), ய+சினால் (Eugenol), மித்தைல் ய+சினால் (Methyl Eugenol), கான்வக்ரால் (Canvacrol), செசுகொட்டர்பைன் (Sesquiterpine), அர்சோலிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. கருந்துளசியின் இலையில் ஜிங்க் (Zinc), மாங்கனீசு (Manganese) மற்றும்; சோடியம் போன்ற கனிமங்கள் காணப்படுகிறது. இதன் விதையிலுள்ள கொழுப்பு எண்ணெயில்(Fatty Oil),  பால்மிடிக் அமிலம்(Palmitic Acid) ஸ்டார்க் அமிலம் (Stark Acid) லினோலியிக் அமிலம் ((Linoleic Acid) ஒலியிக் அமிலம் (Oleic Acid) போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

கருந்துளசி பற்றிய ஆய்வறிக்கைகள் :

கருந்துளசி கிராம் பாசிடிவ் (Gram Positive) மற்றும் கிராம் நெகட்டிவ் (Gram Negative)  பாக்டீரியாக்களுக்கு எதிராக வேலை செய்கிறது என்று ஆய்வறிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.

கருந்துளசி இலைகள் மற்றும் விதைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வறிக்கைகள் நிரூபித்துள்ளன.

கருந்துளசி இலைகள் இரைப்பு நோய், மூட்டுவலி போன்றவற்றை குறைக்கச் செய்வதாகவும், புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்யும் தன்மையுள்ளதாகவும் கூறுகின்றனர்.

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள் :-

*    ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

*    ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant)  தன்மை

*    வலி, வீக்கம்(Anti-inflammatory)  போக்கும் தன்மை

*    காய்ச்சலை போக்கும் தன்மை

*    கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

*    மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

*    நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

*    கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை

மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:-

*    ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன்  சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

*    துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

*    ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.        ழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைகட்டு, சுரம் என்று பற்பல விதங்களில் கப நோய்கள் பாதிக்கின்றன.

இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. பக்க விளைவுகள் இல்லாமலும், அதே நேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.

‘காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசு சுரஞ் சன்னி விளைதோடம்
    -ஆசுறுங்கால்

இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.”

இப் பாடல் அகத்தியர் குணவாகடம் நூலில் உள்ளது. இப்பாடலின் பொதுவான கருத்து கண்டங்கத்திரி மருத்துவ குணம் மிக்க மூலிகை. கண்டங்கத்திரி காசம், சுவாசம், ~யம், அக்கினி மந்தம், தீச்சுரம், சன்னி வாதம், எழு வகை தோஷங்கள், வாத நோய் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது, என்பதே‚

கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. எல்லா இடங்களிலும் விளையக் கூடியது. இதற்கு கபத்தை அகற்றும் தன்மை (Expectorant Action) உண்டு.

இந்த தாவரம் முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது. முட்கள் மஞ்சளாக, பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூக்கள் நீல நிறமானவை. சிறு கத்தரிக்காய் வடிவான காய்களையும், மஞ்சள் நிறமான பழங்களையும் கொண்டது. கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

சுகாதார சீர்கேட்டால் இன்றைய சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு உள்ளது. நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று மாசுபட்ட நிலையில் உள்ளது. இதனால் சிலருக்கு நுரையீரல் பாதிப்படைகிறது. மேலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பிராண வாயு உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், மூச்சுக்குழல் தொண்டைப் பகுதிகள் பாதிப்படைகின்றன. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு கண்டங்கத்திரி நிரந்தர தீர்வை கொடுக்கிறது.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அக்தியர் கூறும் கருத்து :-

‘மாறியதோர் மண்டைச்சூலை கூறியதோர் தொண்டைப்புண் தீராத நாசிபீடம்.”

தலையில் நீர் கோர்த்தல், தொண்டையில் நீர்க்கட்டுதல், தொண்டை அடைப்பு ஏற்படுதல், பேச முடியாமல் தொண்டை அடைத்தல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுத் திணறல், இருமல் போன்ற அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைச் செடிகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. அந்த வகையில் கண்டங்கத்திரியை ஒத்த குணமுடைய மூலிகைகளான  இண்டு, இசங்கு, தூதுவளை ஆகிய அனைத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

இந்த பொதுப்பண்பினைக் கொண்டே கண்டங்கத்திரி அவலகம், சுதர்சண சூரணம், கனகாசவம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆஸ்துமா குணமாக :


இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 10 கிராம் எடுத்து 2 கப் நீரில் கொதிக்க வைத்து ½ கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஒரு வேளை அருந்த வேண்டும்.

இவ்வாறு காலை, மாலை இரு வேளை ஒரு வார காலம் அருந்தலாம். இது ஆஸ்துமாவில் மூச்சு விடத் திணறுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை உடனடியாக அளிக்கும். நாளடைவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

தொண்டைச் சளி குணமாக :


கண்டங்கத்திரியின் முழுத்தாவரத்தையும் சேகரித்து பின் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உள்ளுக்குச் சாப்பிட தொண்டை சளி குணமாகும்.

கண்டங்கத்திரி வேர் குடிநீர் :
‘கரிய கண்டங் கத்திரிவேர் கார முள்ள
    சிறுதேக்கு
முரிய முத்தக் காசுடனே யொத்த சுக்குச்
    சிறுமூலம்
தெரிய விருபடி நீர்விட்டுச் சிறுகக்
    காய்ச்சிக் குடிப்பீரேல்
தரியா தோடும் வாதசுர மென்றே
    தரணிக் குரைசெவ்வாய்.”

- தேரன்-குடிநீர்

கண்டங்கத்திரி வேர், கண்டுபரங்கி, மூத்தக்காசு, சுக்கு, சிறுவலுதலைவேர் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாய் வற்றக் காய்ச்சி அருந்தினால் வாதசுரம் குறையும்.

கண்டங்கத்திரி எனும் அற்புத மருத்துவ மூலிகையின் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி பயன் பெறுவோமாக.           றைவன் தரிசிப்பதற்கு எளியனாய் தெருமுனைக் கோவிலிலும் அருள்பாலிப்பதுண்டு. சிரமங்கள் பல கடந்துவந்து தரிசனம் செய்யும்படி உயர்ந்த மலைகளில் கோவில்கொண்டு அருள்வதுமுண்டு. அவ்வகையில், எங்கும் நிறைந்துள்ள ஈசன் லிங்க வடிவினனாய் பெருங்கருணை புரியுமிடம் சதுரகிரி.

சுயம்புவாய் வெளிப்பட்ட சுந்தரர்

முன்பொரு காலத்தில் நிகழ்ந்தது இந்த சம்பவம். ஆநிரை மேய்ப்பவர்கள் சதுரகிரி மலைக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவது வழக்கம். அங்கு செழுமையாக வளர்ந்திருக்கும் புற்களை வயிறார உண்ணும் பசுக்கள் படிப்படியாய் பால் கறக்கும். இவ்வாறு மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பிய காராம் பசுக்களில் ஒன்று சற்றும் பால் கறக்கவில்லை. இப்படியே சில தினங்கள் தொடர, பசுவின் சொந்தக்காரருக்கு சந்தேகம் வந்தது. மாடு மேய்ப்பவனை அழைத்து கடிந்துகொண்டார். மேய்ப்பனுக்கும் வருத்தம்.  தன் பக்கம் தவறில்லாதபோது பேச்சுக் கேட்கும்படியாயிற்றே என்ற கோபம். மறுநாள் காலை முதல் அந்தப் பசுவைக் கண்காணித்தபடியே இருந்தான். நண்பகல் வேளையில் மற்ற பசுக்களிடமிருந்து பிரிந்த அந்தக் காராம்பசு தனியே சென்றது. ஓரிடத்திலிருந்த கல்லின்மீது பாலைப் பொழியத் தொடங்கியது.

இதைக் கண்டு கோபம் கொண்ட பசு மேய்ப்பவன், ஓடிவந்து அதனை அடிக்க கம்பை ஓங்கினான். எதிர்பாராமல் மேய்ப்பவனைக் கண்ட பசு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. பசு விலகியதால் அவனது பிரம்பு, பால் பொழியப்பட்ட கல்லை நோக்கி வந்தது. திடீரென அந்தக் கல் ஒரு பக்கம் சாய்ந்து விலகியது. அப்போதுதான் மேய்ப்பவன் அது வெறும் கல்லல்ல என்பதையும்; சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் என்பதையும் அறிந்து திகைத்து நின்றான். சுந்தரமகாலிங்கர் தன்னை அடிக்கவந்த அந்த மேய்ப்பனுக்கு காட்சிதந்து மறைந்தார். இந்த சம்பவம் மூலம் அந்த மூர்த்தியின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. அன்று சாய்ந்த அதே கோலத்திலேயே இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் சதுரகிரி சுந்தரமகாலிங்கர்.

சதுரகிரியை சித்தர்கள் மலையென்றே கூறலாம். இங்குள்ள மூலிகைகளும், தீர்த்தங்களும் சித்தர்கள் பிரார்த்தனையின் பலனாக வந்தவை என்றொரு ஐதீகம் நிலவுகிறது.

ராம- இராவண யுத்தத்தின்போது, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணன் மூர்ச்சையுற்று சாய, அதைத் தெளிவிக்க அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வான்வழியே பறந்து வந்தான். சதுரகிரி பகுதியை அவன் கடக்கும்போது, இம்மலையிலிருந்த சித்தர்கள் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கு விழவேண்டும் என்று பிரார்த்தித்தனர். அவ்வாறே சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. அதன்காரணமாக இங்குள்ள மூலிகைகளும் தீர்த்தங்களும் கடும்நோயையும் தீர்க்கும் அற்புத சக்தி கொண்டு திகழ்வதாகக் கூறுகின்றனர்.

சதுரகிரியைச் சூழ்ந்து, அதன் துணை மலைகள் என்று சொல்லப்படும் பிரம்மகிரி, சித்தகிரி, ஏமகிரி, உதயகிரி, கயிலாயகிரி, சந்திரகிரி, விஷ்ணுகிரி, கும்பகிரி, மகேந்திரகிரி, சஞ்சீவிகிரி, இந்திரகிரி, சூரியகிரி, குபேரகிரி, சிவகிரி, சத்தகிரி பழனி, மேருகிரி ஆகிய பதினாறு மலைகள் உள்ளன. இவற்றுக்கு நடுவில் அமர்ந்து சுந்தரமகாலிங்கர் அருள் பாலிக்கிறார்.

சதுரகிரி மலைக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. முதல் பாதை உசிலம் பட்டி, பேரையூர், சாப்டூர் வழியாக வாழைத் தோப்பு வரை செல்கிறது. இங்கிருந்து மலைப் பாதையில் ஐந்து கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இரண்டாவது பாதை ஆண்டிப்பட்டி, தேனி, வருசநாடு, கருப்பசாமி கோவில் வழியாக சதுரகிரி மலையடிவாரத்தைச் சென்றடையும். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் நடந்துசென்று சுந்தரமகாலிங்கரை தரிசிக்கலாம்.

மூன்றாவது பாதை டி. கல்லுப்பட்டி, ராஜபாளையம், கிருஷ்ணன்கோவில் வழியாக தாணிப்பாறையை அடைந்து, அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் நடந்துசென்று மகாலிங்கர் சந்நிதியை அடையலாம்.

சுந்தர மகாலிங்கரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே பல்வேறு ஆலயங்களும், சித்தர் வனங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் தாணிப்பாறை விநாயகர் கோவில், சுந்தர மூர்த்தி சுவாமி கோவில், சந்தன மகாலிங்க சுவாமி கோவில், அகத்தியர் வனம்,

இடைக்காடர் வனம், பெரிய மகாலிங்க சுவாமி கோவில், பெரிய கணபதி சுவாமி கோவில், ஊஞ்சல் கருப்பன் சுவாமி கோவில், சப்த கன்னிமார் கோவில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவ்வாலயத்தை பரம்பரையாக பராமரித்து வருபவர்கள் பரதேசி என்னும் அடைமொழியைக் கொண்ட குடும்பத்தினர்.

இவர்கள் சித்தர்களுடனான அறிமுகம் மூலம், சித்த மருத்துவத்தைக் கற்று மலையடிவாரத்திலுள்ள மக்களின் பிணிகளைத் தீர்ப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தினரின் வன பராமரிப்பைப் பாராட்டும் விதமாகவும், அருள்மிகு சுந்தர மகாலிங்கரின் திருப்பணி, பாதுகாப்பு கைங்கர்யங்களுக்காகவும் செப்புப் பட்டா ஓலையாக 63 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இன்றும் அந்தக் குடும்பத்தினரின் சேவை தொடர்கிறது.


பக்தர்கள் கவனத்துக்கு

காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 2.00 மணிக்குள்ளாக மலையேறத் தொடங்குவது நல்லது. ஆரோக்கியமானவர்கள் மூன்று மணி நேரத்திலும், வயதானவர்கள் நான்கு மணி நேரத்திலும் ஆலயம் சென்றடையலாம். நடைபயணத்தின்போது தேவையான உணவை கையோடு எடுத்துச்செல்வது நல்லது. வழியில் ஆங்காங்கே புனித தீர்த்தங்கள் கிடைக்கும்.

சதுரகிரி மலைக்குள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் அங்கு வசிக்கும் உயிரினங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.  மேலும் ஊற்று, சுனை போன்றவற்றை பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொள்ள நேரிடலாம். ஒருவேளை அதுபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல நேரிட்டாலும், அவற்றையும் இதர காகிதப் பொருட்கள், அட்டைகள் போன்றவற்றையும் மலையடி வாரத்தில் கொண்டு வந்து குப்பைத் தொட்டி யில் போடவேண்டும்.

சதுரகிரி மலையிலுள்ள தீர்த்தங்கள் மற்றும் சுனை நீரை பக்தர்கள் மூலிகைத் தீர்த்தமாக வும், இறைவனது பிரசாதமாகவும் பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு, சிகைக்காய், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

அவசர அவசரமாக வந்து திரும்புவதைத் தவிர்த்து, அமைதியும் பக்தியும் நிறைந்த மனதுடன் செல்லவேண்டும். சுந்தர மகாலிங்கரை தரிசித்து, ஓர் இரவு மலைப்பகுதியிலுள்ள மடங்களில் தங்கி இறைவனை தியானித்துச் செல்ல வேண்டும். தன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் பக்தர்களின் பிறவித்தளைகளை அறுக்கவல்லவர் மகாலிங்கர் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்த மலையில் சித்தர்களும் ரிஷிகளும் சூட்சுமமாக உலவுகின்றனர். இங்கு நிறைய நாய்களுண்டு. அந்த நாய்களின் வடிவில்கூட அவர்கள் நமக்குத் துணையாக வருவார்கள். வழிதவறியவர்கள் பலர் நாய்களின் வழிகாட்ட லால் சரியான இடத்தையடைந்த சம்பவங்கள் பலவுள்ளன.

இங்கே அன்னதானக் குழுவினரால் பல இடங்களில் மூன்று வேளை அன்னதானம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

ஆடி அமாவாசைத் திருவிழா, புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை முளைப்பாரி, அம்பு எய்தல் திருவிழா, தை அமாவாசைத் திருவிழா, ஆவணி அமாவாசைத் திருவிழா, மார்கழி முதல் தின புஷ்ப அலங்கார விழா, மாசி  மகாசிவராத்திரி விழா, சித்திரை அமாவாசை பதினெண் சித்தர்கள் அலங்கார பூஜை, மாத அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடை பெறும். கடந்த ஆடி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்குவந்து வழிபட்டனர்.

சித்தர்களின் ஆசிர்வாதத்தையும் சிவனின் அருளையும் வேண்டுவோர் வாழ்வில் ஒருமுறையாவது சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

             காஷிராம் துணிக்கடை நடத்திவந்த ஒரு வியாபாரி. ஷீர்டி பாபாவின் தீவிர பக்தர் அவர்.  ஒருநாள் மாலை அவர் வழக்கம்போல் தம்முடைய துணிக்கடையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டார். கொஞ்சம் துணிகளையும், வீட்டுக்குப் போகும் வழியில் பாபாவை தரிசனம் செய்துவிட்டுப் போகலாமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு நிவேதனமாக ஒரு சிறிய பையில் கொஞ்சம் சர்க்கரையையும் கையில் எடுத்துக்கொண்டார். அவர் புறப்படும்போதே சூரியாஸ்தமனம் ஆகிவிட்டது.

போகும் வழியில் மெல்ல இருள் சூழத் தொடங்கியது. திடீரென சில திருடர்கள் எங்கிருந்தோ பாய்ந்துவந்து அவரை வழிமறித்துத் தாக்கத் தொடங்கினார்கள். திருடர்கள் எண்ணிக்கையில் பலர். அவர்கள் நல்ல பலசாலிகளும்கூட. அவர்களிடம் தனியொருவனாகப் போராடித் தப்பிப்பது என்பது நிச்சயம் இயலாது.

எனவே தன்னிடமிருந்த எல்லாத் துணிகளையும் திருடர்களிடம் கொடுத்துவிட்டார் காஷிராம்.

ஆனால் ஒரே ஒரு சின்னப் பையை மட்டும் அவர்களிடம் தர மறுத்தார். அதில்தான் பாபாவுக்கு அவர் கொண்டுசெல்லவிருந்த சர்க்கரை இருந்தது. தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை போயும் போயும் திருடர்களிடம் தாரை வார்ப்பதாவது? அப்படியானால் அந்தப் பொருளின் புனிதம் என்னாவது? அவர் அந்தச் சிறிய சர்க்கரைப் பையை பாபாவின் பாதாரவிந்தங்களைப் பற்றுவதுபோல மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.

அவரின் ஜாக்கிரதையைப் பார்த்த திருடர்கள் அந்தப் பையில் தங்க நகை போன்ற ஏதோ விலைமதிப்புள்ள ஒரு பொருள் இருப்பதாக எண்ணிக் கொண்டார்கள். நியாயம்தானே? இவ்வளவு துணியையும் அதிகம் போராடாமல் அள்ளிக் கொடுத்துவிட்ட இந்த ஆள், பின் ஏன் இந்தச் சிறிய பையை மட்டும் நாம் எவ்வளவு வலுக்கட்டாயமாகப் பறிக்க முயன்றும் கொடுக்க மறுக்கிறான்? அவர்கள் அவரை நையப் புடைத்து அவரிடமிருந்து அந்தச் சிறிய பையைப் பிடுங்க முயன்றார்கள்.
மறுகணம் நேர்ந்த சம்பவம் மிகவும் ஆச்சரியகரமானது. பாபாவின் நிவேதனப் பொருளைப் பறிக்கிறார்கள் என்ற எண்ணம் காஷிராமிடம் அளவற்ற ஆக்ரோஷத்தைத் தோற்றுவித்தது. அவர் உடலிலில் எங்கிருந்தோ ஓர் ஆவேசம் புகுந்துகொண்டது. அவர் சடாரெனப் பாய்ந்தெழுந்து அத்தனை திருடர்களையும் சடசடவென தாக்கத் தொடங்கினார். அவர் உடலிலில் அத்தகைய பலம் திடீரென எப்படி வந்தது என்று அவருக்கே தெரியவில்லை.

திருடர்கள் அரண்டு போனார்கள். இந்த நோஞ்சானின் உடலிலில் இத்தனை வலுவா? இத்தனை நேரம் இந்த வலிலிமையையெல்லாம் எங்கே ஒளித்து வைத்திருந்தான் இந்த ஆள்?

அவர் அநாயாசமாகச் சுழன்று சுழன்று தங்கள் ஒவ்வொருவரையும் பாய்ந்து பாய்ந்து தாக்குவதைக் கண்டு அவர்கள் வெலவெலத்துப் போனார்கள். திருடர்கள் சிலரை காஷிராம் கீழே பிடித்துத் தள்ளியதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. வேறு சிலருக்கு காஷிராம் ஓங்கிக் குத்திய முரட்டுக் குத்துகளால் உடலிலில் கடும் வலிலி தோன்றியது. அவர்கள் அத்தனை பேரும் காஷிராமிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அத்தனை துணிகளையும் அப்படியே கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள்.

காஷிராம் “”ஜெய் ஷீர்டி பாபா!” என்று உரத்த குரலிலில் அந்தப் பிரதேசமே அதிரும்படி கர்ஜித்தார். அந்த முழக்கத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலிலிருந்த பலர் ஓடி வந்தார்கள். அதில் காவல்துறையினரும் இருந்தார்கள். அவர்கள் ஓடோடிச்சென்று, தப்பி ஓடிக்கொண்டிருந்த திருடர்கள் அத்தனை பேரையும் மடக்கிப் பிடித்துவிட்டார்கள். 

இந்தச் செய்தி எங்கும் பரவியது. அந்தத் திருடர்கள் பல்லாண்டுகளாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள். அவர்களைப் பிடிக்க காஷிராம் உதவியதால் அவர் பெருமை ஓங்கியது. காஷிராம் நிகழ்த்திய வீரச் செயலுக்காக அவருக்கு அரசு விருது வழங்கப்பட்டது. அந்த விருதின் அடையாளமாக அவருக்கு அழகிய வாள் ஒன்று பரிசாகக் கொடுக்கப்பட்டது.காஷிராமுக்கு மட்டும் அவர் மனதில் எழுந்த ஆச்சரியம் அகலவே இல்லை. ஏனென்றால் அந்தச் செயலைச் செய்தது அவரல்ல; பாபாதான் என்பதை அவர் அறிவார். சம்பவம் நடந்த நேரத்தில் பாபா எங்கிருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை காஷிராம் மற்ற பாபா பக்தர்களிடம் விசாரித்தார்.

அந்த நேரத்தில் தங்களுக்கெல்லாம் அறிவுரை சொல்லிலிக்கொண்டிருந்த பாபா, திடீரென அறிவுரையை நிறுத்திவிட்டு மௌனமானதாகவும், சற்று நேரம் யாரிடமோ சண்டை செய்வதுபோல் காற்றில் கை- கால்களை அசைத்ததாகவும், பின்னர் சிரித்தவாறே அமைதியாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். காஷிராம், சண்டை செய்தது தானல்ல; பாபாதான் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டார். தன்னைக் காப்பாற்றிய  பாபாவின் பெருங்கருணையை எண்ணி அவர் விழிகளில் பக்திக் கண்ணீர் வழிந்தது. அவர் பாபாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து வணங்கியபோது, சிரித்துக் கொண்டே அவர் முதுகைத் தட்டிக் கொடுத்தார் பாபா. வேறேதும் சொல்லவில்லை. 

இப்படி, தான் இருந்த இடத்திலிலிருந்தே தன் அடியவர்களுக்கு பாபா அருள்புரிந்த சந்தர்ப்பங்கள் இன்னும் பற்பல உண்டு. அவரது பக்தர்களின் துயரங்களைப் போக்கி பாபா அவர் களைக் காக்கும்விதம் தனித்தன்மை கொண்டது.

ஒருநாள் “துனி’ என்ற எப்போதும் எரியும் புனித நெருப்பின் அருகே பாபா அமைதியாக அமர்ந்திருந்தார். திடீரென எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது நெருப்பில் கைவிட்டு எதையோ எடுப்பதுபோல் பாவனை செய்தார் பாபா. அருகில் அதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் பதறிப் போனார்கள்.

பாபா நெருப்பிலிலிருந்து கையை எடுத்தபின் பார்த்தபோது கை வெந்திருந்தது. தீக்காயத்தைக் கண்ட பக்தர்கள் கண்ணீர் உகுத்தார்கள். “”ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று விம்மியவாறே கேட்டார்கள்.

“”இதையெல்லாம் பார்த்தால் முடியுமா? அங்கே என் பக்தை நெருப்புக்குத் துருத்தி போட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய குழந்தை எதிர்பாராமல் நெருப்பில் விழுந்துவிட்டது. அதைக் காப்பாற்றுவதல்லவா இப்போது முக்கியம்? என் பக்தையின் குழந்தையை நான் காப்பாற்
றாமல் வேறு யார் காப்பாற்றுவார்கள்?” என்று நகைத்தவாறே சொன்னார் பாபா.

பக்தர்கள் வியப்போடு பின்னர் விசாரித்தார்கள். பாபாவின் பக்தைகளில் ஒருத்தியின் குழந்தை நெருப்பில் விழுந்தது உண்மைதான் என்றும், அது எப்படிக் காப்பாற்றப்பட்டது என்றறியாமலே ஆச்சரியகரமாக நெருப்பிலிலிருந்து மேலே வந்து தரையில் படுத்துக் கொண்டது என்றும் பக்தையின் உறவினர்கள் சொன்னார்கள்.

அந்த பக்தை கண்களில் கண்ணீர் மல்க ஓடோடி வந்து பாபாவின் திருவடிகளை வணங்கினாள். அவர் தம் கையை எவ்விதமேனும் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.

“”நீ என்மேல் கொண்டிருக்கும் தூய பக்தி என் கையை குணப்படுத்திவிடும் மகளே! வருந்தாதே!” என்று புன்முறுவலுடன் சொன்னார் பாபா. பின்னர் சில நாட்களில் பாபா தன் கையைத் தாமே குணப்படுத்திக் கொண்டுவிட்டார்.

தன் சிரமம் அவருக்குப் பெரிதல்ல. அடியவரின் சிரமங்களைத் தீர்ப்பதற்கே வாழ்பவர் அவர்.

“கடவுள்தான் நம் மருத்துவர்’ என்று பாபா அடிக்கடி கூறுவதுண்டு. எனவே அவர் பக்தர் களின் மருத்துவராகத் திகழ்ந்தார்.

ராம பக்தரான ஓர் அந்தணர் மிகக் கடுமையாக ஆசாரங்களை அனுசரிப்பவர். அவருக்கு பாபாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது. பாபா, பாபா என்று ஊரெல்லாம் அவரைப் புகழ்கிறதே? அப்படி பாபாவிடம் பாராட்டும்படியாக என்ன இருக்கிறது?

ஆனாலும் பாபா மசூதியில் தங்கியிருந்ததால் அங்கே போக அவருக்குத் தயக்கமாகவும் இருந்தது. எனினும் பாபா யார் எனத் தெரிந்துகொள்ளும் உத்தேசத் துடன், ஒருநாள் தயங்கித் தயங்கி பாபா வாழும் இடத்தின் அருகே போய் நின்றார் அவர். பாபாவைத் தன் இரு கண்களால் தரிசித்து மகிழ்ந்தார்.

அடுத்த கணம் பாபா இருந்த இடத்தில் பாபா மறைந்துபோய், அவர் ராமராக அமர்ந்திருப் பதைப் பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம். கையில் வில்லும் அம்பும் தாங்கி சாட்சாத் ராமனே அல்லவா அங்கே உட்கார்ந்துகொண்டு முறுவல் பூக்கிறான்? இது உண்மையாக இருக் குமா? அவருக்குத் தம் கண்களைத் தாமே நம்ப முடியவில்லை.

மீண்டும் கண்ணைத் தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தார். இப்போது அவர் பார்த்த ராமபிரான் மறுபடி பாபாவாக தரிசனம் தந்தார்!

மெய்சிலிலிர்த்த அவர் பாபாவை அப்படியே நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து கும்பிட்டார். அவர் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் அளவே இல்லை. ராமரும் பாபாவும் ஒன்றே என்று அவர் மனம் குதூகலிலித்தது. 

பாபாவின் தர்பார் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் திறந்தே இருந்தது. அவரது அருள் செல்வத்தை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அள்ளிச் செல்லலாம். ஜாதி, மத, இன வேறுபாடுகள் எதுவும் அவருக்குக் கிடையாது. ஆனால் பக்தியுடன்- சரணாகதி உணர்வுடன் வரவேண்டும். அதுதான் முக்கியம்.

அப்படி தன்னைத் தேடி வருபவர்களில் ஏழை என்றும் பணக்காரர் என்றும் எந்த வித்தியாசத்தையும் அவர் ஒருபோதும் பார்ப்பதில்லை. பெரும் பதவியில் இருப்பவர்களானாலும் பாபா அவர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டியதில்லை. அவர்களும் எல்லா பக்தர்களையும் போலத்தான் நடத்தப்பட்டார்கள். அதனால் அவர்களும் மற்றவர்களைப்போலவே காத்திருந்துதான் பாபாவை தரிசனம் செய்யவேண்டும்.

பணத்தை பாபா ஒருபோதும் ஒரு பொருட் டாக மதித்ததில்லை. ஒருமுறை அவரைத் தேடி வந்தாள் ஒரு செல்வந்தப் பெண்மணி. அவள் இரண்டு தட்டுகள் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். தட்டுகளை அவர்முன் சமர்ப்பணமாக வைத்தாள். பணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள்.

“”பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு இந்தச் செல்வம் தேவையில்லை. வறுமையே நமது செல்வம்” என்று சிரித்தவாறே கண்டிப்பாய்க் கூறிவிட்டார் பாபா. வந்த பணக்காரி என்ன செய்வதென யோசித்து பின் அவரை வணங்கி அந்தத் தட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டாள். பாபா சராசரி சாமியார் போன்றவர் அல்லர் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

பாபா காணிக்கைகளைப் பெறவே மாட்டார் என்பதல்ல. ஏழைகளும் நடுத்தரக் குடும்பத்தினரும் அன்போடு கொடுக்கும் எத்தனையோ காணிக்கைகளை அவர் ஏற்றதுண்டு. ஆனால் அகங்காரத்தோடு தரப்படும் எத்தனை பெரிய செல்வத்தையும் அவர் ஏற்றதே இல்லை.

 தாம் ஏற்ற எந்தக் காணிக்கையையும் அவர் தம்மிடம் வைத்துக் கொண்டதும் இல்லை. உடனடியாக பணம் தேவைப்படும் யாரேனும் ஓர் ஏழைக்கு அதை வழங்கிவிடுவார். அவர் ஏராளமான தான- தர்மம் செய்துவந்தார்.

அவரால் பயன்பெற்ற ஏழைகள் எண்ணற்றோர்.

 தாம் தங்கியிருந்த மசூதி, தோட்டம் போன்ற இடங்களில் சில விளக்குகளை எப்போதும் எரியுமாறு பார்த்துக்கொண்டிருந்தார் ஷீர்டி பாபா. அந்த விளக்குகளின் வெளிச்சம் அந்த இடங்களில் மட்டும் ஒளியைப் பரப்பவில்லை. அது பக்தர்களின் வாழ்விலும் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பாபா புனித நூலான குரானிலிலிருந்து அவ்வப்போது சிற்சில வாசகங்களைப் படிப்பதுண்டு. பாபா எந்த வாசகத்தைப் படித்தாலும் அவரது அடியவரான அப்துல் அதை அப்படியே ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்வார். குரானிலிலிருந்து எடுக்கப்பட்ட வைர மணிகள் அவை. அதைப் பரிசுத்த குரான் என்று அப்துல் குறிப்பிடுவதுண்டு.

அணையா விளக்கொன்று பாபா இருப்பிடத்தின் முன்னே பள்ளத்தில் தாழ்வாக வைக்கப் பட்டிருக்கும். அந்த விளக்கு எப்போதும் அணையாமல் இருக்க எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். விளக்கின் நான்கு புறங்களிலும் இருபது துணித்துண்டுகளாலான ஒரு துணிக் கூடாரம் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பந்தல் போன்ற ஓர் அமைப்பின்மீது துத்தநாகத் தகடு வைத்து மூடப்பட்டிருக்கும். விளக்கு ஒருபோதும் அணையாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

பாபா எப்போதும் இந்த அணையா விளக்கிற் குப் பின்னால்தான் உட்கார்ந்து கொள்வார். அப் துலை இரு மண்குடங்களில் தண்ணீர் நிரப்பி தம் இரு பக்கங்களிலும் வைக்கச் சொல்வார். ஒவ்வொரு நாளும் இந்தக் குடங்களிலிருந்து தண்ணீரைப் பல்வேறு திசைகளில் ஊற்றுவார். அவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

தண்ணீரை வாரி இறைக்கும்போது அவர் ஏதோ மந்திரங்களை முணுமுணுப்பார். அந்த மந்திரங்களை ஏன் அப்போது அவர் உச்சாடனம் செய்கிறார் என்பதும் யாரும் அறியாதது. தண்ணீரைத் தெளிக்கும்போது எல்லாத் திசை களையும் உற்றுப் பார்ப்பார் அவர். தன் பக்தர்களுக்கு நாலா திசைகளிலிலிருந்தும் வரும் ஆபத்துகளைக் கண்காணித்து தன் கருணையால் அவர் விலக்கினாரோ என்னவோ? யார் அறிவார்?

   (தொடரும்)

SubashRaja Raja hat Gnanayohi Yohis Foto geteilt.
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்<br /><br /><br /><br /><br /> 1. திருமூலர் - சிதம்பரம்.<br /><br /><br /><br /><br /> 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.<br /><br /><br /><br /><br /> 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.<br /><br /><br /><br /><br /> 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.<br /><br /><br /><br /><br /> 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை<br /><br /><br /><br /><br /> 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்<br /><br /><br /><br /><br /> 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.<br /><br /><br /><br /><br /> 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.<br /><br /><br /><br /><br /> 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.<br /><br /><br /><br /><br /> 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)<br /><br /><br /><br /><br /> 11. கோரக்கர் – பேரூர்.<br /><br /><br /><br /><br /> 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.<br /><br /><br /><br /><br /> 13. சிவவாக்கியர் - கும்பகோணம்.<br /><br /><br /><br /><br /> 14. உரோமரிசி - திருக்கயிலை<br /><br /><br /><br /><br /> 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.<br /><br /><br /><br /><br /> 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை<br /><br /><br /><br /><br /> 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை<br /><br /><br /><br /><br /> 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.<br /><br /><br /><br /><br /> 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.<br /><br /><br /><br /><br /> 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.<br /><br /><br /><br /><br /> 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.<br /><br /><br /><br /><br /> 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.<br /><br /><br /><br /><br /> 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை<br /><br /><br /><br /><br /> 24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.<br /><br /><br /><br /><br /> 25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.<br /><br /><br /><br /><br /> 26. காசிபர் - ருத்ரகிரி<br /><br /><br /><br /><br /> 27. வரதர் - தென்மலை<br /><br /><br /><br /><br /> 28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.<br /><br /><br /><br /><br /> 29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்<br /><br /><br /><br /><br /> 30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.<br /><br /><br /><br /><br /> 31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.<br /><br /><br /><br /><br /> 32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.<br /><br /><br /><br /><br /> 33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.<br /><br /><br /><br /><br /> 34. கமல முனி - ஆரூர்<br /><br /><br /><br /><br /> 35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.<br /><br /><br /><br /><br /> 36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.<br /><br /><br /><br /><br /> 37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.<br /><br /><br /><br /><br /> 38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.<br /><br /><br /><br /><br /> 39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.<br /><br /><br /><br /><br /> 40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.<br /><br /><br /><br /><br /> 41. வள்ளலார் - வடலூர்.<br /><br /><br /><br /><br /> 42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.<br /><br /><br /><br /><br /> 43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.<br /><br /><br /><br /><br /> 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்<br /><br /><br /><br /><br /> 45. ராகவேந்திரர் - மந்திராலயம்.<br /><br /><br /><br /><br /> 46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.<br /><br /><br /><br /><br /> 47. குமரகுருபரர் - காசி.<br /><br /><br /><br /><br /> 48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.<br /><br /><br /><br /><br /> 49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.<br /><br /><br /><br /><br /> 50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.<br /><br /><br /><br /><br /> 51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.<br /><br /><br /><br /><br /> 52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.<br /><br /><br /><br /><br /> 53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.<br /><br /><br /><br /><br /> 54. யுக்தேஸ்வரர் - பூரி.<br /><br /><br /><br /><br /> 55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை<br /><br /><br /><br /><br /> 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.<br /><br /><br /><br /><br /> 57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.<br /><br /><br /><br /><br /> 58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.<br /><br /><br /><br /><br /> 59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.<br /><br /><br /><br /><br /> 60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.<br /><br /><br /><br /><br /> 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.<br /><br /><br /><br /><br /> 62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.<br /><br /><br /><br /><br /> 63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.<br /><br /><br /><br /><br /> 64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.<br /><br /><br /><br /><br /> 65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.<br /><br /><br /><br /><br /> 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.<br /><br /><br /><br /><br /> 67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.<br /><br /><br /><br /><br /> 69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.<br /><br /><br /><br /><br /> 71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.<br /><br /><br /><br /><br /> 72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.<br /><br /><br /><br /><br /> 73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.<br /><br /><br /><br /><br /> 74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.<br /><br /><br /><br /><br /> 75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.<br /><br /><br /><br /><br /> 76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.<br /><br /><br /><br /><br /> 78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.<br /><br /><br /><br /><br /> 79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.<br /><br /><br /><br /><br /> 80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.<br /><br /><br /><br /><br /> 81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.<br /><br /><br /><br /><br /> 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.<br /><br /><br /><br /><br /> 83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.<br /><br /><br /><br /><br /> 84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.<br /><br /><br /><br /><br /> 85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.<br /><br /><br /><br /><br /> 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.<br /><br /><br /><br /><br /> 88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.<br /><br /><br /><br /><br /> 89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.<br /><br /><br /><br /><br /> 91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.<br /><br /><br /><br /><br /> 92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.<br /><br /><br /><br /><br /> 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.<br /><br /><br /><br /><br /> 94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.<br /><br /><br /><br /><br /> 95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.<br /><br /><br /><br /><br /> 96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.<br /><br /><br /><br /><br /> 97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.<br /><br /><br /><br /><br /> 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.<br /><br /><br /><br /><br /> 99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.<br /><br /><br /><br /><br /> 100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.<br /><br /><br /><br /><br /> 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.<br /><br /><br /><br /><br /> 102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.<br /><br /><br /><br /><br /> 103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.<br /><br /><br /><br /><br /> 104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.<br /><br /><br /><br /><br /> 105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.<br /><br /><br /><br /><br /> 106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)<br /><br /><br /><br /><br /> 107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.<br /><br /><br /><br /><br /> 108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் – சிதம்பரம்.
2. போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் – திருப்பதி, திருமலை
6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் – கும்பகோணம்.
14. உரோமரிசி – திருக்கயிலை
15. காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.
22. நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் – அழகர் மலை
24. மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.
26. காசிபர் – ருத்ரகிரி
27. வரதர் – தென்மலை
28. கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி – ஆரூர்
35. சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.
36. சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் – திருவொற்றியூர்.
41. வள்ளலார் – வடலூர்.
42. சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்
45. ராகவேந்திரர் – மந்திராலயம்.
46. ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் – காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா – ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் – பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.
64. இராமதேவர் – நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் – நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் – எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.

       ன்றும் வாழும் சித்தர்களில் இன்றும் வாழ்ந்து ஏராளமான அடியவர்களுக்கு அருள்புரிந்துவரும் மாபெரும் சித்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாயிபாபா. அவரது ஆலயங்கள் பாரத தேசமெங்கும் பல்வேறிடங் களில் உள்ளன. இந்தியர்கள் வாழும் உலக நாடுகள் பலவற்றிலும்கூட ஷீர்டி சாயிபாபா ஆலயங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. 

அந்த ஆலயங்களில் சென்று அவரது திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்கள் மன அமைதி அடைகிறார்கள். தாங்கள் நினைத்த செயல் கைகூடுவதையும் காண்கிறார்கள். மனித வாழ்வின் இறுதி நிலையான முக்தியை மட்டுமல்ல; உலகியல் நலங்களையும்கூட ஷீர்டி பாபா நிறைவேற்றித் தருவதாக அன்பர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். 

உலகியல் பயனுக்காக மகான்களையும் தெய்வங்களையும் வழிபடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அருள் வேண்டும் இடத்தில் பொருள் வேண்டுவது சரிதானா என்று சந்தேகப்படுகிறவர்களும் உண்டு. 

உலகியல் வெற்றிகளுக்காக ஏன் இறைவனை வேண்டக்கூடாது? இறைவனும் மகான்களும் நம் தாய்போன்றவர்கள் இல்லையா? நம் எல்லா விருப்பங்களையும் தாயிடம் கேட்டுப்பெற்று நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை குழந்தைகளான நமக்கு உண்டே? 

“ஒரு சாக்லெட் வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு குழந்தை மனப்பூர்வமாக இறைவனை வேண்டினால், அன்று சூரிய அஸ்தமனம் ஆவதற்குள் அந்தக் குழந்தைக்கு யார் மூலமாவது இறைவன் கட்டாயம் சாக்லெட்டை அனுப்பி வைப்பான்!’ என்றல்லவா ஸ்ரீஅரவிந்த அன்னை உறுதி யுடன் தெரிவிக்கிறார்? 

உலகியல் பயன்களுக்காக தெய்வங்களையும் மகான்களையும் வழிபடுவது ஒன்றும் குற்றமல்ல. அது இயல்பானதுதான். முக்தியையே அருளும் ஆற்றல் பெற்ற தெய்வங்களுக்கும் மகான்களுக்கும், உலகியல் நலங்களை அருளுவதில் எந்தத் தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி அருள்வதன் மூலம் இவ்வுலக வாழ்வின் பிரச்சினைகளிலிலிருந்து விடுபட்டு முக்தியை நாடி ஜீவாத்மாக்கள் வரவேண்டும் என்பதே ஆன்மிக நெறி. 

 பக்தர்கள் வேண்டிய அனைத்தையும் அருளும் ஷீர்டி பாபாவின் ஷீர்டி நகரம், பாபா அன்பர்கள் யாத்திரை செல்லும் புனிதத் திருத்தலமாகத் தொடர்ந்து பெருமையுடன் விளங்கிவருகிறது. காசு பற்றிய எந்தக் கருத்துமில்லாமல் தூய துறவியாய் வாழ்ந்த அந்த மகானின் சமாதியில் இன்று கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கையாகச் செலுத்தப்பட்டு வருகிறது. 

அப்படி காணிக்கை செலுத்துபவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல. பாபா தங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களுக்கு வேறு எந்த வகையில் நன்றி சொல்வது என்று தெரியாமல் கொட்டப்படும் காணிக்கைகள் அவை. அந்தக் காணிக்கைப் பணத்தின் மூலம் ஏராளமான தர்ம காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல தர்மச் செயல்களை மக்கள் கொடுக்கும் கொடை மூலம் நிகழ்த்தி, கொடை கொடுத்தவர்களுக்கு புண்ணியத்தை அருள்கிறார் பாபா. மனித குலத்திற்கு நன்மை செய்வதன் பொருட்டே ராஜாதிராஜரும்- அண்ட பகிரண்டங்கள் அனைத்திற்கும் உடைமை யாளரும்- மக்களை ரட்சிக்கவே மனித உடல்தரித்து வந்தவருமான ஷீர்டி பாபா மக்கள் அளிக்கும் காணிக்கைகளைப் பரிவுடன் ஏற்றுக்கொள்கிறார்.  

ஷீர்டி பாபா வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்களை நேரில் பார்த்த பலர் தங்கள் எழுத்துகளில் அவற்றைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படிக்கப் படிக்கப் பிரமிப்பூட்டுகின்றன. 

அவரைச் சந்திக்கவரும் ஏழைகள், உணவகங்களில் போண்டா வாங்கி அன்போடு அவருக்கு காணிக்கை யாகத் தருவார்களாம். போண்டா பொட்டலத்தில் சுற்றியிருக்கும் நூலை ஆள்காட்டி விரலிலில் சுற்றி எடுத்து வைத்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு போண்டாவைச் சாப்பிட்டு அவர்களுக்கு மனநிறைவளிப்பாராம் பாபா. 

பிறகு இரவு நேரங்களில் அந்த போண்டா சுற்றிவந்த நூலை இரண்டு தென்னை மரங்களுக்கிடையே கட்டி விட்டு, அந்த நூலிலில் நிம்மதியாகப் படுத்துக்கொண்டு உறங்குவாராம் பாபா! 

அணிமா, மகிமா என்று சொல்லப்படும் அஷ்டமா ஸித்திகளில் லகிமா என்றொரு ஸித்தி உண்டு. உடலை மிகமிக லேசாகச் செய்துகொள்ளும் ஆற்றல் அது. அந்த லகிமா ஸித்தி யின் மூலம் பாபா அத்தகைய அற்புதச் செயலை நிகழ்த்தியிருக்க வேண்டும். 

பாபா நிகழ்த்திய அற்புதங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ பதிவாகியுள்ளன. அதுமட்டுமல்ல; இப்போதும் தன்னை நம்பும் அடியவர்கள் வாழ்வில் எவ்வளவோ வகையானஅற்புதங்களை பாபா நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கிறார். அவரது சமாதிக் கோவிலில் கோடிக்கணக்கில் தொடர்ந்து காணிக்கைகள் வந்து குவிவதன் சூட்சுமம் இதுதான். 

தாம் நிகழ்த்திய அற்புதங்களுக்கு என்ன காரணம் என்பதையும் பாபாவே தெரிவிக்கிறார். 

“என் அன்பர்கள் என்னிடம் ஏதேதோ கேட்கிறார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் நான் கொடுக்கிறேன். அப்படிக் கொடுப்பதன் மூலம் நான் எது கொடுத்தாலும் அதை விரும்பும் மனப்பக்குவம் உடையவர்களாக என் அன்பர்களை நான் மாற்றுகிறேன்!’ என்கிறார் பாபா!

“உங்களுடைய சுமையை என்னிடம் இறக்கி வையுங்கள். அதை நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள்? நான் சுமக்கிறேன்!’ என்று கம்பீரமாக அறைகூவினார் பாபா. அவர் சுமை என்று சொல்வது கர்மவினையைத்தான். தம் பேரருளால் கர்மவினையை அகற்றக்கூடிய ஆற்றல் அவருக் கிருந்தது. 

ஷீர்டி பாபா இந்துவா அல்லது முஸ்லிமா? 

இந்துக்கள் அவரை இந்துவாகவும் முஸ்லிம்கள் அவரை முஸ்லிமாகவும் உணர்ந்தார்கள் என்பதே நிஜம். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் அவரைத் தேடி வந்தார்கள். 

யார் இந்த ஷீர்டி பாபா? எண்ண எண்ணத் தித்திக்கும் பல அற்புதமான தகவல்கள் அடங்கிய தூய திருச்சரிதம் அவருடையது…. 

அந்தக் காலத்தில் ஷீர்டி ஒரு மிகச்சிறிய கிராமமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு வேப்பமரத்தடியில் திடீரென்று ஒருநாள் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். பதினாறு அல்லது பதினேழு வயதிருக்கும் என்று தோன்றியது அவனைப் பார்த்தால். கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தான். 

அந்த இளைஞன் முகத்தில் தென்பட்ட சாந்தமும் பொலிலிவும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவையாய் இருந்தன. பார்க்கும் அனைவரையும் கட்டி இழுக்கும் இனந்தெரியாத ஓர் ஆன்மிக வசீகரம் அவன் முகத்தில் குடி கொண்டிருந்தது. திடீரெனத் தென்பட்ட அவனைப் பார்க்கவென்றே அங்கே கூட்டம் கூடியது. இளம் வயதிலேயே ஞானிபோல் தோற்றமளிக்கும் இவன் யார்?

கணபதிராவ் கோட்டி படேல் என்பவரை யும் அந்த இளைஞனின் வருகை பற்றிய செய்திஎட்டியது. அவர் தன் மனைவி பாய்ஜாபாயோடு அவனைக் காண வந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்ததும் தாய்மைக் கனிவு நிறைந்த பாய்ஜாபாயின் உள்ளம் உருகியது. என்ன பிள்ளை இவன்! தியானம், தவம் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறானே? எப்போது சாப்பிட்டானோ என்னவோ? பாவம் பசிக்காதோ? வயிறு வாடும்படி விடலாமோ? உடம்பு என்னத்திற்காகும்?

“இதோ வருகிறேன்’ என்று கணவரிடம் சொல்லிலிவிட்டு அவள் விறுவிறுவென்று வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைச் செய்து, தொட்டுக்கொள்ள சட்டினியும் செய்து எடுத்துக் கொண்டாள். அவற்றோடு இளைஞன் இருந்த வேப்ப மரத்தடிக்கு ஓடினாள். அவன் கண்திறக்கும்வரை காத்திருந்தாள். 

“”மகனே! பசிக்காதா உனக்கு? எத்தனை நேரம் இப்படியே சிலைமாதிரி உட்கார்ந்திருப்பாய்? முதலிலில் இதைச் சாப்பிடு!” என்று சப்பாத்தி யையும் சட்டினியையும் இலையில் வைத்துஅவனிடம் கொடுத்தாள். 

இளைஞன் அவளையே பரிவோடு பார்த்தான். “”என்ன பாய்ஜாபாயி! சௌக்கியமாக இருக்கிறாயா?” என்று ஆதரவோடு விசாரித்தான்! கூட்டம் திக்பிரமித்தது. அவள் பெயர்அவனுக்கு எப்படித் தெரியும்? 

“”முதலிலில் என் அண்ணா சாப்பிடட்டும். பிறகு நான் சாப்பிடுகிறேன்!” என்ற அவன், “”அண்ணா, வா” என உரத்துக் குரல் கொடுத்தான். அடுத்த கணம் எங்கிருந்தோ ஒரு பன்றி ஓடிவந்தது. மக்கள் கூடியிருப்பதைப் பார்த்து அது மிரண்டதாகத் தெரியவில்லை. அமைதியாக இரண்டு சப்பாத்திகளைத் தின்றுவிட்டு ஏதோ முக்கியமான வேலை முடிந்ததுபோல் மீண்டும் ஓடிப்போய் மறைந்துவிட்டது. 

இளைஞன் நகைத்தவாறே மீதிச் சப்பாத்தி களையும் சட்டினியையும் சாப்பிட்டான். பிறகு, “”பாய்ஜா பாயி! நீ மிக நன்றாகச் சமையல் செய்கிறாய். உன் கணவர் கணபதிராவ் கொடுத்து வைத்தவர்தான்!” என்றான்!

அதற்குப் பிறகு பற்பல நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடந்தன. திடீரென அந்த ஊர் கிராமக் கோவில் பூசாரிமேல் அருளாவேசம் வந்தது. அவர் “”இந்த இளைஞன் யார் என நான் அறிவேன். உடனடியாக இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்ப மரத்தடியைத் தோண்டுங்கள்!” என்றார். எல்லாரும் திகைத்தார்கள். 

இளைஞன் நடப்பதை வேடிக்கை பார்க்க வசதியாகத் தள்ளி அமர்ந்தான். வேப்பமரத்தடி தோண்டப்பட்டது.

அதற்குள், அருகேயிருந்த ஒரு புற்றிலிலிருந்து ராஜநாகம் ஒன்று சடாரென வெளிப்பட்டது. எல்லாரும் பதறிப்போய் தள்ளி நின்றார்கள். இளைஞன் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரவேஇல்லை. “”நாகம்மா, வா வா” என அன்போடு அவன் அழைத்தான். அவனை ஒரு சுற்றுச் சுற்றி வலம்வந்த அது பின்னர் அவனை நமஸ்கரிப்பதுபோல் தரையில் தலையைத் தட்டி வணங்கி மறுபடியும் புற்றுக்குள்போய் பதுங்கிக் கொண்டது. 

மக்கள் தைரியம்பெற்று மீண்டும் வேப்ப மரத்தடியைத் தோண்டலானார்கள். என்ன ஆச்சரியம்! வேப்பமரத்தடியின்கீழ் ஒரு குகை தென்பட்டது. நிலத்தின் அடியே இருந்த அந்தக் குகைக்குள் நான்கு அகல் விளக்குகள் தனித்தனி மாடங்களில் அப்போதுதான் ஏற்றிவைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்துகொண் டிருந்தன. புத்தம்புதிதாய்ப் பூத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தின்மேலே, ஒரு ஜெபமாலை வைக்கப்பட்டிருந்தது. மனோகரமான ஊதுபத்தி நறுமணம் அந்தக் குகை முழுவதிலும் கமகமவெனக் கமழ்ந்து கொண்டிருந்தது. 

மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந் தார்கள். இதெல்லாம் என்னவென்று அவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கான விளக்கங்களெல்லாம் கட்டாயம் அந்த இளைஞனுக்குத் தெரிந்துதான் இருக்கும். இளைஞனிடமே விளக்கம் கேட்டார்கள். 

அவன் சிரித்தவாறே சொல்லலானான்:

“”இது என் குருவின் சமாதி. முற்பிறவியில் இவர் என் குருநாதராய் இருந்தார். இந்தக் குகையை நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். அது இருந்தபடியே இருக்கட்டும். மண்போட்டு முன்போலவே மூடிவிடுங்கள். ஆனால் இந்த வேப்ப மரத்தின் வெளியில் விளக்கேற்றி வையுங் கள். வியாழக்கிழமைதோறும் ஊதுவத்தி ஏற்றி வழிபடுங்கள். இந்தச் செயல்கள் காரணமாக இந்த கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். நீங்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். நான் சொன்னபடிச் செய்வீர்களா?”

இளைஞனைப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இருகை கூப்பி வணங்கினார்கள். அவன் என்ன சொன்னா லும் உடனே செய்யவேண்டும் என்றல்லவா மனதில் தோன்றுகிறது? எல்லாரும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்கள். 

“”சரி; அவரவர் அவரவர் இல்லம் செல்லுங் கள். நான் இங்கேயே இன்னும் சற்று நேரம் தியானம் செய்யவேண்டும்!”

இளைஞன் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தான். அவனைவிட்டுப் பிரிய மனமில் லாமல் பொதுமக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இல்லம் நோக்கி நடந்தார்கள். பாய்ஜாபாயி, “இரவில் தன்னந் தனியே இந்தக் குழந்தை இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறதே? இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொண்டாள். இறைவனைக் காப்பாற்ற வேண்டுமென்று இறைவனிடமே வேண்டிக்கொள்ளும் அவள் பேதமையை என்னென்பது!

 மறுநாள் அதிகாலை இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலிலில், எழுந்தவுடன் ஓடோடி வந்தாள் அவள். வேப்ப மரத்தடியை ஆவலோடு பார்த்தாள். இளைஞன் வந்து சென்ற சுவடோ, குகையைத் தோண்டிப் பார்த்து மறுபடி மூடிய சுவடோ எதுவுமே அங்கே இல்லை. வேப்ப மரம் தனக்கடியில் எதுவுமே நடக்காத மாதிரி இலைகளைச் சலசலத்தது. புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த ராஜநாகம் மட்டும் தலையைத் திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்து, பின்னர் சடாரென புற்றுக்குள்ளே ஒடுங்கியது. 

என்ன மாயம் இது! நடந்ததெல்லாம் கனவா நனவா? வந்துசென்ற அந்தப் புனித வசீகரம் நிறைந்த இளைஞன் யார்?

 (தொடரும்)

 

           டிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு பூண்டி சுவாமிகளிடம் விசேஷ பக்தி. திரையுலகப் பிரமுகர்கள் பலரிடமும் சுவாமிகளின் மகிமைகள் குறித்துச் சொல்லலானார். அதனால் பூண்டி மகானின் புகழ் கலையுலக வட்டாரங்களில் பரவியது.  ஒருநாள் ஒரு நடிகை அவரை தரிசிக்க வந்தார். சுவாமிகளைத் தேடி நிறைய ஏழைகள் வருவதுண்டு என கேள்விப்பட்ட அந்த நடிகை அன்னதானம் செய்யும் ஆவலுடன், ஒரு வாகனத்தில் தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை அண்டாக்களில் எடுத்துக்கொண்டு வந்தார்.  ஆனால் என்ன செய்ய? அன்று சுவாமிகளைத் தேடி அதிகக் கூட்டம் வரவில்லை. “”சுவாமி! இங்கே ஐந்நூறு பேருக்கு அன்னதானம் செய்யும் ஆவலோடு வந்தேன். ஆனால் ஐந்தாறு பேர்கூட இல்லையே?” என்று வருந்தினார் நடிகை. நடிகையின் வருத்தம் சுவாமிகளின் மனதை நெகிழச் செய்தது. “”பழனியிலிருந்து பருப்பு சாதத்திற்கு, திருத்தணியிலிலிருந்து தயிர் சாதத்திற்கு என்று இன்னும் சிறிது நேரத்தில் நிறைய பேர் இங்கு வரப்போகிறார்கள். காத்திரு” என்றார் அவர். நடிகை எதுவும் புரியாமல் சற்றுநேரம் தியானத்தில் ஆழ்ந்து காத்திருந்தார்.கொஞ்ச நேரம் சென்றது. பற்பல பேருந்துகள் அங்கு வந்து நிற்கும் சப்தம் கேட்டு கண்திறந்து பார்த்தார் நடிகை. என்ன ஆச்சரியம்! பழனி, திருத்தணி, சபரிமலை ஆகிய இடங்களுக்குப் போகும் பயணிகளைத் தாங்கிய பேருந்துகள் அங்கே விறுவிறுவென வந்து நின்றன.  ஒரே நாளில் சுவாமிகளை தரிசிக்க இத்தனை அன்பர்கள் முன்னெப்போதும் வந்ததில்லை. சுமார் ஐந்நூறுபேர் பேருந்துகளிலிலிருந்து கடகடவென இறங்கினார்கள். சுவாமிகளை பக்திப் பரவசத்தோடு பார்க்க வந்திருந்த அன்பர்கள் அவர்கள். எல்லாருக்கும் கடும் பசி வேறு. “”தாயே! என் அன்பர்களுக்கு நீயே உன் கையால் அன்னமிடு!” என்று பணித்தார் சுவாமிகள். நடிகை விழிகளில் கண்ணீர் வழிந்தது. தன் கண்களைத் துடைத்துக் கொண்ட நடிகை பக்திப் பரவசத்தோடு அத்தனை அடியவர்களுக்கும் தாமே அன்னமிட்டு மகிழ்ந்தார். இப்படி சுமார் ஐந்நூறு பேர் வந்துசேர்வார்கள் என்பது எப்படி சுவாமிகளுக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைத்து நினைத்து வியப்படைந்தார் அந்த நடிகை. அதன்பின் சுவாமிகளையே சரணாகக் கொண்டு நிரந்தர பக்தியோடு வாழலானார் அவர். பின்னர் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் சுவாமிகளுக்கு உண்டு என்பது அவரது வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அவரது அடியவர்கள் தங்கள் வாழ்வில் நடைபெறப் போகும் சம்பவங்களை முன்கூட்டியே சுவாமிகள் சொல்வதைக் கேட்டு வியந்திருக்கிறார்கள். சுவாமிகள் ஒருநாளைக்கு சுமார் ஐந்நூறு கோப்பை தேநீர் அருந்தி வந்தார் என்பது ஆச்சரியம்தான். உண்மையிலேயே அப்படித்தான் நடந்து வந்தது. காரணம், சுவாமிகளின் அன்பர்கள் பலரும் ஏழை எளியவர்கள். அவர்களால் சுவாமிகளுக்குத் தேநீர்தான் வாங்கித் தர முடியும். வேறு விலைமதிப்புள்ள எதையும் வாங்கித் தர அவர்களுக்குப் பொருளாதாரரீதியாக சக்தி கிடையாது.  தன்னை சரணடைந்திருக்கும் ஏழைகள் அன்போடு கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாமல் எப்படி மறுக்க முடியும்? அந்தத் தேநீரில் பாலும் சர்க்கரையும் மட்டுமா கலந்திருந்தது? பக்தியும் சரணாகதியும் அல்லவா இணைந் திருந்தது! அன்பர்களின் நெஞ்சம் புண்படக் கூடாதே என்று நினைத்த வர்போல, அன்பர்கள் தரும் தேநீரை வாங்கி வாங்கிக் குடித்து வந்தார் அவர். ஆனால் அதிகத் தேநீர் குடித்ததால் அவர் உடல் எந்த உபாதையையும் அடைய வில்லை என்பது வியப்புதான். திருக்கோவில்களில் கல்லிலில் உறையும் கடவுள்களுக்கு நிவேதனம் செய்தால், அந்த நிவேதனத்தை தெய்வம் ஏற்பதை நேரில் பார்க்க முடிவதில்லை. நடமாடும் கடவுளான பூண்டி மகானுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தால், இந்த தெய்வம் தேநீர் அருந்துவதை நேரில் பார்க்கவும் முடிகிறதே? அவர் தாங்கள் அன்போடு கொடுக்கும் தேநீரை அருந்துவ தைப் பார்த்து ஏழைகள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

ஒரு பால்காரன் பூண்டியைத் தாண்டி நாள்தோறும் கலசப் பாக்கம் வரை போய்வந்தான். போகும்போதெல்லாம் ஒருநாள் தவறாமல் சுவாமிகளிடம் பால் ஏதாவது தேவையா என்று கேட்டுவிட்டுத்தான் போவான்.

வழக்கப்படி ஒருநாள் அந்தப் பால்காரன் “”பால் வேண்டுமா சாமீ” என்று கேட்டபோது, “”ஆமாம். பால்வேண்டும். கொண்டுவா!” என்று உத்தரவிட்டார் சுவாமிகள்! கணீரென்ற குரலில் சுவாமிகள் ஆணையிட்டதைக் கேட்டு திகைத்துப் போன அவன் இருபத்தைந்து லிலிட்டர் பால் தாங்கிய பாத்திரத்தை பவ்வியமாக அவர்முன் கொண்டுவந்து வைத்தான்.

 பால் பாத்திரத்தை அப்படியே இருகரத்தா லும் அள்ளி எடுத்தார் சுவாமிகள். ஒரு சொட்டுப் பால்கூட கீழே சிந்தாமல் அத்தனை பாலையும் கடகடவென குடித்துவிட்டார்! பால்காரன் உடல் கிடுகிடுவென நடுங்கத் தொடங் கியது! ஏன் இப்படி நடந்துகொள்கிறார் சுவாமிகள் என அவனுக்குப் புரியவில்லை.

சுவாமிகள் அதோடு நிற்கவில்லை. “”சைக்கிள் கைப்பிடியில் இன்னொரு பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாயே? உடனே அதையும் கொண்டுவா!’ என்றார் அவனிடம்! பால்காரன் வெலவெலத்துப் போய்விட்டான். ஓடிப்போய் அந்தப் பாத்திரத்தையும் கொண்டு வந்து வைத்தான். ஆறு லிலிட்டர் பால் இருந்தது அதில். மறுகணம் அந்தப் பாலும் காலிலி!

சுவாமிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் சுவாமிகளின் செயலைப் பார்த்துக்கொண்டி ருந்த அந்தப் பால்காரனுக்குத்தான் வியப்பில் கிறுகிறுவென தலைசுற்றியது! சுவாமிகளின் பால் வடியும் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படும் அன்பர்கள் அன்று சுவாமிகள் செய்த அந்த லீலையையும் பார்த்து மகிழ்ந் தார்கள். முப்பத்தோரு லிலிட்டர் பாலை முழு மூச்சாகக் குடித்துவிட்டு, வாதாபியை ஜீரணம் செய்த அகத்திய முனிவர்போல வயிற்றைத் தடவிக் கொண்டு ஆனந்தமாக அமர்ந்திருந்தார் சுவாமிகள்.

அவர் மேலும் ஏதோ ஒரு செயலைச் செய்யப் போகிறார் என்பது அவரைப் பார்த்தாலே புரிந்தது. அன்பர்கள் ஆவலோடு அதையும் காணக் காத்திருந்தார்கள். சுவாமிகள் முகத்தில் அளவில்லாத சாந்தம் குடியிருந்தது. ஆனால் அவர் செய்யப் போகும் செயல் என்ன என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

பால்காரன் இனி தன் வாடிக்கையாளர்கள் எல்லாருக்கும் எப்படி பால் ஊற்றுவது என்று தெரியாமல் தயங்கித் தயங்கி அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

அதன்பிறகுதான் நடந்தது அந்த வியக்கத் தக்க சம்பவம். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மறுநாள் பால் ஊற்றும்படியாக நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் சுவாமிகள் அத்தனை பாலையும் குடித்திருக்கிறார் என்பது விரைவில் புரியவந்தது.

சுவாமிகள் மெல்ல வாயைத் திறந்தார். பரமசிவனின் சடைமுடியிலிலிருந்து கங்கை பெருகியதைப்போல் அவரின் திறந்த உதடு களிலிருந்து அவர் சாப்பிட்ட  அத்தனை பாலும் கடகடவென குழாயிலிலிருந்து தண்ணீர் வெளி யேறுவதுபோல் வெளியேறிற்று. உண்மை யிலேயே வீதியில் பாலாறு ஓடியது.

“”அந்தப் பாலிலில் இரண்டு தேளும் ஒரு பல்லிலியும் செத்துக் கிடப்பதைப் பாருங்கள்!” என்றார் சுவாமிகள். திகைத்துப் போனார்கள் பார்த்தவர்கள். அந்தப் பாலைக் குடித்திருந்தால் குடித்த அத்தனை வாடிக்கையாளர்களும் அல்லவா செத்திருப்பார்கள்? ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிவிட்டார் சுவாமிகள்! அதுமட்டுமா? அந்தப் பால்காரனின் தொழிலையும் சேர்த்தல்லவா காப்பாற்றி விட்டார்!

ஒருவர் சுவாமிகளைப் பிரார்த்தனை செய்து ஒரு வேண்டுதலைச் செய்துகொண்டார். அந்த வேண்டுதல் பலிலித்தால் சுவாமிகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாகவும் மனதில் உறுதியோடு நினைத்துக் கொண்டார். தாம் நினைத்தபடி அந்த வேண்டுதல் பலிலிக்கவே, அவர் ஒரு தங்க மோதிரத்தைக் கொண்டுவந்து சுவாமிகளின் விரலிலில் அன்போடு அணிவித்தார்.

 சுவாமிகளுக்கு தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் கிடையாதே? ஓடும் செம்பொன்னும் ஒன்றென்றே கருதும் துறவியர் திருக்கூட்டத்தில் வாழையடி வாழையென வரும் பரம்பரையைச் சேர்ந்தவர் அல்லவா அவர்? தம் விரலிலில் இருந்த தங்க மோதிரத்தைப் பார்த்து நகைத்துக் கொண்டார் அவர்.

வேறெதுவும் சொல்லவில்லை. 

ஆனால் சில நாட்களிலேயே அந்த விரலிலில் ஒரு வீக்கம் ஏற்பட்டது. ஒருவேளை மோதிரம் அளவில் சற்றுச் சிறியதாக இருந்ததுதான் காரணமோ என்னவோ? இந்த சந்தர்ப்பத்தில் திருவலம் சிவானந்தா மவுன குரு சுவாமிகள், பூண்டி மகானை தரிசிக்க வந்தார். அவர் அவ்வப்போது சுவாமிகளை வந்து சந்தித்து அளவளாவி மகிழ்வதுண்டு. சுவாமிகளின் விரலில் வீக்கத்தைப் பார்த்து திகைத்தார். பச்சிலைச் சாறு தயார் செய்து அதை சுவாமிகளின் மோதிர விரலிலில் விடுவதற்கு எத்தனித்தார்.

ஆனால் பூண்டி சுவாமிகள் அவரைக் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டார். “”தங்கத்திற்கு ஆசைப்பட்ட விரலுக்குத் தண்டனை வேண்டும்” என்றார் பூண்டி சுவாமிகள்!

“”விரல் எங்கே ஆசைப்பட்டது, யாரோ தங்க மோதிரத்தைத் தாமே வந்து வலிலிய அணிவித்தால் விரல் என்ன செய்யும் பாவம்?” என்றார் மவுன குரு.

“”விரல் வீக்கத்தைச் சரிசெய்ய வேறொருவன் ஆகாய மார்க்கமாகப் பறந்து வருவான். நீ கவலைப்படாதே!” என்றார் பூண்டி சுவாமிகள்.

கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களுக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. ஆனால் விரைவில் அவர் சொன்ன வாக்கியத்தின் சூட்சுமப் பொருள் புரியத் தொடங்கியது.

மறுநாளிலிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் ஒரு கிளி பறந்து வந்து சுவாமிகளின் கையில் ஏதோ பழகிய கிளிபோல் தானே உட்கார்ந்து கொண்டது. அந்த வீக்கத்தைத் தன் அலகால் கொத்திக் கொத்திச் சரிசெய்தது. ஒவ்வொரு நாளும் அந்தக் கிளி வருவதையும் அது அளிக்கும் சிகிச்சையையும் பார்த்து அன்பர்கள் அதிசயித்தார்கள். அந்தக் கிளி மண்ணுலகக் கிளிதானா? இல்லை விண்ணுலகக் கிளியா? அப்படியானால் அதை அனுப்பியது யார்? ஆண்டாளா, மீனாட்சியா? யாரறிவார்?

மனித உடல் எடுத்த மகான்கள் துறவியராக வாழ்ந்து எல்லாவற்றையும் துறப்பதுபோல், ஒருநாள் தங்கள் உடலையும் துறக்க வேண்டி வரும் அல்லவா? 1978 நவம்பர் 3-ஆம் தேதி பூண்டி சுவாமிகள் தம் உடலைத் துறந்தார். ஸித்தி அடைவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே அவர் ஸித்தி பெறப் போகிறார் என்பதற்கான அறிகுறி களை அன்பர்களிடம் காட்டத் தொடங்கிவிட்டார். திருநீறு கேட்ட அன்பர்களிடம், “”கடையை மூடப் போகிற நேரத்தில் கேட்கிறாயே” என்றவாறு மெல்ல மெல்ல திருநீறு கொடுப்பதைத் தவிர்க்கலானார். அன்று அதிகாலையில் சுவாமிகள் மகாசமாதி அடைந்தபோது மழை கொட்டுக் கொட்டென்று கொட்டித் தீர்த்தது. ஆகாயம் பொத்துக் கொண்டுவிட்டதுபோல் தோன்றியது. வானம் துயரில் அழுததா இல்லை வானத்தை நோக்கி வரும் சுவாமிகளின் ஆன்மாவை நீர்மலர் தூவி வரவேற்றதா? செய்தித் தாள்களில் வெளிவந்த செய்தி யைப் பார்த்து நாடெங்குமிருந்து எண்ணற்ற அடியவர்கள் பூண்டியில் குழுமினார்கள். பூண்டி மக்களால் நிறைந்து குலுங்கியது. நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி சுவாமிகளின் பொன்மேனி உரிய முறைப்படி சமாதி செய்விக்கப்பட்டது. கண்ணீர் வழிய வழிய இறுதி அஞ்சலிலி செலுத்திய அன்பர்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.  
அவர் ஸித்தி அடைந்தது நவம்பர் 3-ஆம் தேதி காலை 9. 40 மணிக்கு. ஆனால் அதே நாள் காலை பத்து மணிக்கு திருச்செந்தூர் கடலோரத்தில் அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்தார்கள் சில அடியவர்கள். “”பூண்டியிலிருந்து எங்கே இங்கே வந்திருக்கிறீர்கள்? எங்களோடு விடுதியில் தங்கலாமே?” என்று அவர்கள் அழைத்தபோது, “”நான் இமாலயம் போகலாம் என்றிருக்கிறேன்” என பதில் சொல்லிலியிருக்கிறார் பூண்டி சுவாமிகள். அவர் ஸித்தி அடைந்த விவரத்தை செய்தித்தாளில் பார்த்தபின், அப்படியானால் இவர் திருச் செந்தூருக்கு எப்படி வந்தார் என திருச்செந்தூர் முழுவதும் சல்லடை போட்டு சலிலிக்காத குறையாகத் தேடியிருக்கிறார்கள் அதே அடியவர்கள். அவரைக் காணவில்லை. பூண்டியில் அவர் ஸித்தி அடைந்த நேரத்திற்குப் பிறகு திருச் செந்தூரில் அவர் காட்சி தந்தார் என்பதுதான் விந்தையிலும் விந்தை. ஆனால் அதில் விந்தை என்ன? இப்போதும் தம் அடியவர்களுக்கு காட்சி தருகிறார் அவர். தம் அடியவர்களின் ஆன்மிக முன்னேற்றத்தை மட்டு மல்லாமல் உலகியல் முன்னேற்றங் களைக்கூட அவரே கவனித்துக் கொள்கிறார். அவரது அருளாட்சிக் காலத்திற்கு முடிவே இல்லை. அது இன்றும் என்றும் தொடர்கிறது.
         னித சக்தி ஒப்பற்றது. உலகிலேயே மனிதனிடம்தான் அளவற்ற ஆற்றலும் அறிவும் ஆக்கமும் தோன்றியிருக்கின்றன. அவனின் சிந்தனைகள் அண!ட சராசரங்களின் தொலைவை விடவும் மிக பரந்துபட்டது. அப்படிப்பட்ட அப+ர்வ மனித உடல் 96 தத்துவங்களால் ஆனது. இப்படிப்பட்ட ஒவ்வொரு உடலும் அவரவர் குணநலத்திற்கும் மன அமைப்பிற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது. இதைத்தான் உடல்வாகு என்று சொல்வார்கள்.சித்தர்கள் இந்த உடல்வாகு என்ற மனித உடலின் அமைப்பை பற்றியும் குணங்கள் பற்றியும் அறிய அங்கலட்சணங்களை தெளிவாக ஆராய்ந்து தோற்றுவித்தார்கள்.உடலிலுள்ள அங்கங்களின் அமைப்புக்கேற்ப ஒருவரின் குணாம்சங்கள் இருப்பதை தெளிவு படுத்தினார்கள். உடல்வாகிற்கும் குணத்திற்கும் இதன் மூலம் நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வரும்.உலகிலேயே மனித மூளையின் ஈடு இணையற்ற மாபெரும் சக்தியை வார்த்தைகளில் எடுத்துரைக்க முடியாது. ஆகையால்தான் அது பிரபஞ்சத்திலுள்ள பேரண!டத்தையே உணரும்.ஆக பெரும் வல்லமை கொண!ட உறுப்பென மூளையைச் சொல்கிறோம். இப்பேர்ப்பட்ட வல்லமையால்தான் பிரபஞ்ச சக்தி, ஞானநிலை, யோகநிலை போன்றவற்றை அறிந்து கொள்கின்றோமென்றால் அது மிகையாகாது.இவ்வாறான அளப்பரிய காரியத்தினால்தான் சித்தர்கள் இதை பிரபஞ்ச நிலை என்கின்றனர். இது போன்றதொரு உயரிய உன்னத நிலையை ஓர் ஆன்மா அடைந்துவிட்டால் அவர்கள் ஞானிகளாகவும் மகான்களாகவும் மாறிவிடுகின்றனர். இப்படி மாறிவிட்ட மகான்களும் ஞானிகளும் தங்களுக்கென்று ஒரு அரிய கொள்கையை வகுத்துக்கொண!டு அதன் மூலம் நாட்டு மக்களுக்கு உதவுவார்கள். இவர்கள்தான் மக்களுக்கு நல்லது செய்யும் மகான்கள். இவர்கள்தான் மக்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவர்கள்.இத்தகைய நல்ல உள்ளம் கொண!ட உத்தமர்கள்தான் அனைத்து ஜீவன்களுடனும் அவ்வளவு அன்பும் நேசமும் மரியாதையும் கொண!டவர்களாகத் திகழ்ந்தார்கள். விருப்பும் வெறுப்புமற்ற மனநிலையில் உலகை நிலைக்கச் செய்தார்கள். மக்களை தீயவற்றிலிருந்து அகற்றி நல்வழியில் மட்டுமே  தம் அரிய போதனைகளால் நல்வழிப்படுத்தினார்கள். எந்த மதத்தில் தோன்றிய மகானும் இதுபோன்ற நல்வழியைப் போதித்தவர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண!டியதாகும்.இந்த மகான்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாட்டில் நிலவிய பசி, பட்டினி, துயர், கண!ணீர், பிணி, வேதனை, வலி, மனக்கிலேசம், துக்கம், இன்னல்கள் போன்றவற்றை மக்களிடமிருந்து அறவே போக்கினர். வாழ்க்கையின் ஒழுக்க நெறிமுறை உண!மைகளை உபதேசிக்க மக்களும் அதன்படி வாழ்ந்து வந்தனர்.இந்த மகான்கள் இது போன்றதொரு உன்னத நிலையை அடைய குகைகளில், மலைகளில் தனியாக இருந்து சரசுவாசம் மூலம் தவநிலைகளை மேற்கொண!டனர்.
ஹெல்த்
பாட்டி வைத்தியம்
………………………………..
மஞ்சள்
………………………………..
பார்த்தேன்… கேட்டேன்…
………………………………..
காய்கறியின் மகத்துவம்
………………………………..
கற்ப மூலிகை-வேலிப்பருத்தி
………………………………..
உடலெனும் பிரபஞ்சம்
………………………………..
மஞ்சள் காமாலை
………………………………..
சரும பாதிப்பு
………………………………..
தாதுக்கள்
………………………………..
திண்ணை கிளினிக் -ஆசிரியர்
………………………………..
யோகாசனம்
………………………………..
நில்… கவனி…
………………………………..
சித்தர் பாடல்
………………………………..
நுங்கு
………………………………..
வர்மத்நின் மர்மங்கள்
………………………………..

         னித சக்தி ஒப்பற்றது. உலகிலேயே மனிதனிடம்தான் அளவற்ற ஆற்றலும் அறிவும் ஆக்கமும் தோன்றியிருக்கின்றன. அவனின் சிந்தனைகள் அண!ட சராசரங்களின் தொலைவை விடவும் மிக பரந்துபட்டது. அப்படிப்பட்ட அப+ர்வ மனித உடல் 96 தத்துவங்களால் ஆனது. இப்படிப்பட்ட ஒவ்வொரு உடலும் அவரவர் குணநலத்திற்கும் மன அமைப்பிற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது. இதைத்தான் உடல்வாகு என்று சொல்வார்கள்.

சித்தர்கள் இந்த உடல்வாகு என்ற மனித உடலின் அமைப்பை பற்றியும் குணங்கள் பற்றியும் அறிய அங்கலட்சணங்களை தெளிவாக ஆராய்ந்து தோற்றுவித்தார்கள்.

உடலிலுள்ள அங்கங்களின் அமைப்புக்கேற்ப ஒருவரின் குணாம்சங்கள் இருப்பதை தெளிவு படுத்தினார்கள். உடல்வாகிற்கும் குணத்திற்கும் இதன் மூலம் நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வரும்.

உலகிலேயே மனித மூளையின் ஈடு இணையற்ற மாபெரும் சக்தியை வார்த்தைகளில் எடுத்துரைக்க முடியாது. ஆகையால்தான் அது பிரபஞ்சத்திலுள்ள பேரண!டத்தையே உணரும்.

ஆக பெரும் வல்லமை கொண!ட உறுப்பென மூளையைச் சொல்கிறோம். இப்பேர்ப்பட்ட வல்லமையால்தான் பிரபஞ்ச சக்தி, ஞானநிலை, யோகநிலை போன்றவற்றை அறிந்து கொள்கின்றோமென்றால் அது மிகையாகாது.

இவ்வாறான அளப்பரிய காரியத்தினால்தான் சித்தர்கள் இதை பிரபஞ்ச நிலை என்கின்றனர். இது போன்றதொரு உயரிய உன்னத நிலையை ஓர் ஆன்மா அடைந்துவிட்டால் அவர்கள் ஞானிகளாகவும் மகான்களாகவும் மாறிவிடுகின்றனர். இப்படி மாறிவிட்ட மகான்களும் ஞானிகளும் தங்களுக்கென்று ஒரு அரிய கொள்கையை வகுத்துக்கொண!டு அதன் மூலம் நாட்டு மக்களுக்கு உதவுவார்கள். இவர்கள்தான் மக்களுக்கு நல்லது செய்யும் மகான்கள். இவர்கள்தான் மக்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவர்கள்.

இத்தகைய நல்ல உள்ளம் கொண!ட உத்தமர்கள்தான் அனைத்து ஜீவன்களுடனும் அவ்வளவு அன்பும் நேசமும் மரியாதையும் கொண!டவர்களாகத் திகழ்ந்தார்கள். விருப்பும் வெறுப்புமற்ற மனநிலையில் உலகை நிலைக்கச் செய்தார்கள். மக்களை தீயவற்றிலிருந்து அகற்றி நல்வழியில் மட்டுமே  தம் அரிய போதனைகளால் நல்வழிப்படுத்தினார்கள். எந்த மதத்தில் தோன்றிய மகானும் இதுபோன்ற நல்வழியைப் போதித்தவர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண!டியதாகும்.

இந்த மகான்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாட்டில் நிலவிய பசி, பட்டினி, துயர், கண!ணீர், பிணி, வேதனை, வலி, மனக்கிலேசம், துக்கம், இன்னல்கள் போன்றவற்றை மக்களிடமிருந்து அறவே போக்கினர். வாழ்க்கையின் ஒழுக்க நெறிமுறை உண!மைகளை உபதேசிக்க மக்களும் அதன்படி வாழ்ந்து வந்தனர்.

இந்த மகான்கள் இது போன்றதொரு உன்னத நிலையை அடைய குகைகளில், மலைகளில் தனியாக இருந்து சரசுவாசம் மூலம் தவநிலைகளை மேற்கொண!டனர்.

தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற மூன்று தாரக மந்திரத்தையே பொதுவாக சித்தர்கள் முதல் பெரிய மகான்கள் வரை கடைபிடித்து வந்தனர். மக்களுக்கும் இதையே போதித்து வந்தனர்.

‘மாங்காய்ப் பாலுண!டு
    மலைபேலிருப்போர்க்குத்
தேங்காய்ப்பாலேதுக்கடி – குதம்பாய்
தேங்காய்ப்பாலேதுக்கடி”

என்று குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்களின் உச்சந்தலையில் தனஞ்செயன் என்னும் „வர்மத்தில் தோன்றும் அமிர்தகலை நீரையே மாங்காய்ப்பால்… என்று சொல்கிறார் சித்தர். மூலாதாரத்திலிருந்து மூலாதார வாயு மேலெழும்பி ஆதாரங்களைத் தொட்டு தனஞ்செயனில் தோன்றி எழும் நீர்தான் அமிர்தகலை நீர் எனப்படும்.

மிகச் சாதராண மனிதர்களுக்கு கிலேச நீர் உருவாகும். இது வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு ஏற்றவாறு சுரக்கும். ஆனால் சரசுவாசத்தினால் கிலேச நீரை அமிர்தகலை நீராக மாற்றினால் அது உடலை நோய்மையிலிருந்து காத்து காயசித்தி அடையச் செய்யும். ஞானம் கிட்டும். ஞானமென்பது பிரபஞ்ச சக்தியை அடைவதுதான். இதுவே சித்தர்களின் கூற்று.

மனிதனை மிக உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் ஆற்றல் இந்த அமிர்தகலை நீருக்கு உண!டென்றால் மிகையில்லை. 108 மர்ம இடங்களில் மனித உடலில் வர்ம முடிச்சுகளாக உள்ள உயிர்நிலை ஒடுக்கம் வியாபித்துள்ளது. இந்த அப+ர்வமான வர்ம முடிச்சை இயக்கி உடலையும் உள்ளத்தையும் ஒழுங்காக செயல்படச் செய்வதே அமிர்தகலை நீரின் ஒப்பற்ற செயலாகும். இவ்வளவு அரிய சக்தியைப் பெற்றுக்கொடுக்கும் தனஞ்செயன் வர்மம் என்ற உச்சந்தலை வர்மத்தைப் பற்றி அகத்திய முனிவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மனிதனை மிக உயர்ந்தநிலைக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் ஆற்றல் இந்த அமிர்தகலை நீருக்கு உண!டு என்பது மிகப் பெரிய உண!மை.

தனஞ்செயன் வர்மம்தான் சாகா கலை என்று கூறப்படும் மரணமாற்று முறைகளை தெரிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கின்றது.

மனித உடலில் உள்ள 80  வகை  வாயுக்களை இயக்கி நன்றாக செயல்பட வைக்கும் தன்மை அமிர்தகலை நீரை உற்பத்தி செய்யும் தனஞ்செயனுக்கு உண!டு. இந்த தனஞ்செயனுக்கு கிடைக்கும் சக்தி மூலாதாரத்திலிருந்து கிடைக்கும் சக்தியாகும்.

மனிதனையும் அவனது உயிரையும் மிக நேர்த்தியாக மிக இயல்பாக செயல்பட வைப்பதோடல்லாமல் அவனை உயர்ந்த நிலைக்கு கொண!டு செல்லும் ஆற்றலைத் தூண!டுவது தனஞ்செயன் வர்மம் என்பது காலம் கண!டறிந்த உண!மை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண!டுமெனில் கிலேசநீரின் அதி மேம்பட்ட நிலைப்பாடுதான் அமிர்தகலை நீராகும்.

வர்மம் என்பது உயிர் நிலை ஓட்டம் ஒடுங்கும் இடம்தான். அந்த உயிர் நிலை என்பது அமிர்த கலை நீரே. இதுவே 108 இடங்களில் உடலில் உயிர் நிலையாக வியாபித்துள்ளது.

ஆழ்நிலை தியானத்தால்தான் அறிவும் ஆற்றலும் வருவது. இந்தத் தியானமென்பது மனதை ஒருநிலைப்படுத்துவதோடு அல்லாமல் மூலாதாரத்திலிருந்து வரும் குண!டலினி சக்தியை தனஞ்செயனில் நிறுத்தி அமிர்தகலை நீரை உற்பத்தி செய்கிறது. இந்த நீர் அளப்பரிய ஆற்றல்கொண!டது. இதைப்பற்றி அகத்தியர் வர்மபரிகார முறையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மனிதனுக்கு ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் சக்தியையும் உயரிய வாழ்க்கையையும் உண!டாக்கித் தருவது இந்தத் தனஞ்செயன் வர்மம். இதில் ஊற்றெடுத்து உற்பத்தியாகும் அரிய அமிர்தகலை நீரை ஆட்கொள்ள சரசுவாசமே மிகச் சிறந்த வழியாகும். இந்த அற்புத வழியின் மூலம்தான் வாழ்வின் அதிஉன்னத நிலையை எய்துவார்கள் என்பது அகத்திய மாமுனிவரின் கூற்றாகும். 

:

———————————————————————————————————————————————————-

         ரக்கோணத்தில் வாழ்ந்துவந்தார் பூண்டி சுவாமிகளின் அடியவர் ஒருவர். அளவற்ற பொருளாதாரக் கஷ்டத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார். திடீரென ஒரு விபரீதமான முடிவுக்கு வந்துசேர்ந்தார். இரவு பத்துமணி இருக்கும். அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலிலில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணித் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். பூண்டி சுவாமிகளையே தியானம் செய்தவாறு அமைதி காத்தார். ஒரு ரயில் மிக வேகமாக அவர் தலைவைத்துப் படுத்திருந்த இடம் நோக்கி ஓடிவந்தது…

அடுத்த கணம் அவர் அருகில் தோன்றியது பூண்டி மகானின் ஒளிவீசும் பொன்னுருவம். அவரை அப்படியே இரு கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டு அருகே உள்ள மணல் திட்டில்  கிடத்தினார் சுவாமிகள். கூவென்று கூவிய ரயில், பூண்டி சுவாமிகளின் மகிமையைத் தான் தன் மொழியில் கூவியதோ என்னவோ? ரயில், தண்டவாளத்தில் விரைந்து சென்று மறைந்தது. 

அன்பருக்குத் தன் கண்களையே நம்பமுடிய வில்லை. ஒரு கணத்தில் என்ன நடந்தது இங்கே? 

பூண்டி சுவாமிகள் அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பின் மெல்லச் சொல்லலானார்:

“”அன்பனே! கஷ்ட நஷ்டங்கள் மாறிமாறி வருவதுதானே வாழ்க்கை? வெகுவிரைவில் உனக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இப்போது உன் உயிரை நீ போக்கிக்கொண்டால் அந்த நல்ல காலத்தை நீ எப்படி அனுபவிக்க இயலும்? இறைவன் தந்த உயிரை எடுக்க இறைவனுக்கு மட்டுமே உரிமையுண்டு. உனக்கு அந்த உரிமை கிடையாது மகனே! வீடு நோக்கிப் போ. நல்ல சேதி காத்திருக்கிறது!”பரிவோடும் கருணையோடும் அறிவுறுத்திய பூண்டி மகானின் உருவம் மெல்ல மெல்ல காற்றில் கலந்து மறைந்தது. 

அன்பர் திகைப்போடும் பரவசத்தோடும் நடந்து வீடு வந்துசேர்ந்தார். வாசலிலிலேயே யாரோ ஒருவன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அன்பர் அவனிடம் யார் அவன் என விசாரித்தார். 

சென்னையிலிலிருந்து வந்திருந்தான் அவன். 

அன்பருக்கு அறிமுகமான ஓர் ஆங்கிலோ இந்தியர்தான் அவனை அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் நல்ல சம்பளத்தில் ஒரு புதுவேலை அவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதைச் சொல்லிலிற்று அவன் கொண்டுவந்திருந்த கடிதம்!

மறுநாளே பூண்டிக்குப் போய் சுவாமிகளை தரிசித்தார் அன்பர். பக்தியில் நெகிழ்ந்த அவரைப் பார்த்துப் பூண்டி சுவாமிகள் குறும்பாகச் சிரித்தார். 

“”உன் வாழ்க்கை ரயில் இன்னும் ஓட வேண்டியிருக்கிறதே அப்பா! 

அதற்குள் என்ன அவசரம்? பட்டினப் பிரவேசம் நிகழ்ந்தபிறகு எல்லாம் சரியாகும்!” சுற்றியிருந்தவர்களுக்கு சுவாமிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவதாகத் தோன்றியது. ஆனால் குறிப்பிட்ட அன்பர் கண்களில் மட்டும்              அவர் அருளை உணர்ந்து அருவிபோல் கண்ணீர் வழிந்தது…

அஷ்டமா சித்திகளைப் பெற்ற சித்தர்கள் 

ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் ஆற்றல் பெற்றவர்கள். (நெரூர் சுவாமிகளான சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றி இரண்டு இடங்களில் சித்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.) 

பூண்டி சுவாமிகள் தாம் இத்தகைய சித்துகளைச் செய்ததாக நேரடியாக ஒப்புக் கொண்டதில்லை. அன்பர்கள் விசாரித்தாலும் மர்மமான பதில்கள்தான் வரும். 

“”நேற்று நீங்கள் இங்கு எங்களுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் குளித்தலையிலும் இருந்தீர்களாமே?” என ஒருமுறை ஆவலோடு விசாரித்தார் ஓர் அன்பர். அதற்கு சுவாமிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “”இருக்கும் இருக்கும். என்னை இங்கே ஆட்டுவிப்பவன் அங்கேயும் என்னை ஆட்டுவிக்க மாட்டானா என்ன!” என்பதே அவர் விளக்கம்!

ஒருமுறை பூண்டிக்கு வந்து அவரைப் பார்த்து அவருக்கு ஆப்பிள் பழங்களை சமர்ப்பித்தார் ஓர் அன்பர். அவர் எதிரிலேயே ஆப்பிளைச் சாப்பிட்டார் சுவாமிகள். அவர் தன் ஊருக்குப் போனபோது, ஒரு மரத்தடியில் பூண்டி சுவாமிகள் அங்கும் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயித்தார். அவர் அதே மரத்தடியில் பல நாட்களாக அமர்ந்திருப்பதாக மக்கள் சொன்னது வேறு அவருக்கு மயக்கம் தந்தது!

மீண்டும் வாழைப் பழங்களை வாங்கி சுவாமிகளுக்கு சமர்ப்பித்தார். “”இப்போதுதான் நீ கொடுத்த ஆப்பிளைச் சாப்பிட்டேனே அப்பா? மறுபடியும் வாழைப்பழம் வேறு எதற்கு?” என்று கேட்ட சுவாமிகள் பிறகு மவுனமாகிவிட்டார். அன்பர் இன்னதென்றறியாது திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பல சுவாமிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன…

முக்காலமும் உணர்ந்த சுவாமிகளின் பூர்வாசிரமம் என்ன? அவரது தாய்-தந்தை யார்? இதுபோன்ற விவரங்களெல்லாம் எதுவும் அறிய இயலவில்லை. ஆனாலும் சுவாமிகளே சிலசமயம் தம் பழைய வாழ்க்கை பற்றிச் சொல்லிலியிருக்கிறார். அத்தகைய தகவல்கள் மிகக் குறைவே. ஆனாலும் சுவாரஸ்யமானவை.  

தாம் ஒரு ரயில்பாதை வழியாக நடந்து வந்ததாக சுவாமிகள் சொன்னதுண்டு. அது என்ன ரயில் பாதை என்று கேட்டதற்கு- அங்கே சின்ன ரயில்பாதை, பெரிய ரயில் பாதை இரண்டும் இருந்ததாக அவர் குறிப்பிட்டாராம்.  அப்படியானால் அது மீட்டர்கேஜ், பிராட்கேஜ் என்பவற்றைக் குறித்ததாகலாம். “மாதா கோவில் வழியாகவும் மாரியம்மன் கோவில் வழியாகவும் நடந்து வந்தேன்’ என்ற அவருடைய வார்த்தைகளுக்கு என்ன விளக்கமென்று அறியக் கூடவில்லை. 

ஒருமுறை சுவாமிகளைப் பார்க்க வந்தார் ஒரு சாது. வந்த சாது பெரிதும் வியந்தார். “”சுவாமி! சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் விருத்தாசலம் மணிமுத்தா நதிக் கரையில், பிள்ளையார் கோவிலிலின் அருகே நீங்கள் மவுனமாக அமர்ந்திருந்தீர்களே? உங்களுக்கு நான் பால் வாங்கித் தந்தபோது, என் வயிற்றில் பால் வார்த்தாயப்பா என்று சொன்னீர்களே?” என்று கேட்டார். 

“”இருக்கும் இருக்கும். அப்படியும் இருக்கும். அதுசரி. அப்படித்தானே இருக்கும்?” என்று சிரித்தார் பூண்டி சுவாமிகள். இந்த பதிலை எப்படிப் புரிந்துகொள்வது? 

 ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, “”எங்க தாத்தா இரண்டு தம்பிடிக்கு ஒரு புத்தகமும் பென்சிலும் வாங்கித் தந்தார்!” என்றார் சுவாமிகள். அது எந்தத் தாத்தா? இந்தப் பிறவித் தாத்தாவா இல்லை முற்பிறவித் தாத்தாவா? ஒருவேளை புத்தகம் என்பது உடல், பென்சில் என்பது உயிர் என்று பூடகமாகச் சொல்கிறாரா? அப்படியானால் அவர் சொல்லும் தாத்தா என்பது கடவுளைக் குறித்த சொல்லா? 

இதையெல்லாம் யாரும் சரிவர ஊகிக்க இயலாது. ஊகிப்பதற்குள் வேறு பேச்சுக்குத் தாவிவிடுவார் சுவாமிகள். 

“”கார்த்திகேயன் சர்வீசில் பலகை புஸ்தகத்துடன் பிரயாணம் போனேன். கஸ்தம்பாடி கணம்பூர் பள்ளத்தில் இறக்கிவிட்டான் அந்தக் கண்டக்டர். என்ன செய்வது நான். சரியென்று நடந்து நடந்தே மாம்பட்டு மலையடிவாரம் வந்தேன். அங்கே பார்த்தால் ரத்தினவேலு சீட்டாடிக் கொண்டிருந்தான். என்னை சவுக்கியமா என்று வேறு கேட்கிறான். நான் பதிலுக்கு மரியாதை பண்ண வேண்டும் இல்லையா? சரி, நீ சவுக்கியமா என்று கேட்டேன் நான். வரப்பு மேலே ஒரே சேறு. பாத்து பக்குவமா நடந்துக்கணும். தெரிஞ்சுதா?”    

இப்படி ஏதாவது சொல்வார். வரப்பு என்பது என்ன? மனிதப் பிறவியைக் குறித்து அப்படிச் சொல்கிறாரா? வரப்பின்மேல் சேறு என்பதுதான் என்ன? காமம், குரோதம் முதலிலிய அழுக்குகளா? சுவாமிகளின் பேச்சுக்கெல்லாம் நேரடிப் பொருள் கொள்வதா, இல்லை பூடகப் பொருள் இருக்குமென்று ஆராய்வதா? இதில் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. 

ஆனால் அவர் பேச்செல்லாமே பரிபாஷை தான் என்றும், நமக்குப் புரியாதவற்றிற்கும் வேறு ஏதோ தத்துவார்த்தமான பொருள் இருக்கும் என்றும் பல அடியவர்கள் கருதினார்கள். அதில் உண்மையும் இருந்தது. ஏனெனில் அவர் பேசும்போது புரியாததுபோல் தோன்றும் பல வார்த்தைகள் அவர் பேசி முடித்து கொஞ்ச காலத்திற்குப் பிறகு சில நிகழ்ச்சிகள் நடக்கும்போது விசேஷமான அர்த்தம் கொண்டு விளங்கின. (திருவண்ணா மலை சேஷாத்ரி பரப்பிரும்மமும் இதுபோல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுவார் என்றும், ஆனால் பிற்காலத்தில் யோசித்துப் பார்க்கும்போது எல்லாமே மிகுந்த பொருள் உடையவை என்பது விளங்கும் என்றும் சொல்வதுண்டு.)

சுவாமிகள் சமாதியில் இருக்கும் சந்தர்ப்பங்களில் நாட்கணக்கில் சமாதியிலேயே ஆழ்ந்துவிடுவார். பேச்சு மூச்சு இராது. சிலைபோல் அமர்ந்திருப்பார். சில நேரங்களில் முழு உடம்பும் அசையாமல் இருக்கும். வேறு சில நேரங்களில் ஒரு கையோ ஒருகாலோ மட்டும் கடகடவென்று ஓயாமல் ஆடிக்கொண்டே இருக்கும். மற்றபடி உடலிலின் வேறு பாகத்தில் எந்த அசைவும் தென்படாது. 

நாள்கணக்கில் இரவு பகல் எல்லா நேரமும் கை மட்டும் ஆடுவதைப் பார்த்து அவரது அடியவர்கள் மிரண்டு விடுவார்கள். அவருக்குக் கை வலிலிக்காதா என்று உள்ளம் உருகுவார்கள். அவரது கை அசைவு நிற்க வேண்டுமே என்று அவரையே பிரார்த்திப்பார்கள். 

 பல நாட்கள் கழித்து சமாதி நிலையிலிலிருந்து அவர் குழந்தைபோல் சிரித்துக் கொண்டே விழித்துக் கொள்வார். அடுத்த கணமே கை அசைதல் நின்றுவிடும். அவர் சகஜமாக முன்போல இயங்குவார். 

ஒருசிலருக்கு ஓர் ஆசை. அவர்களும் கையை அசைத்துக்கொண்டே இருந்தால் சுவாமிகளைப்போல சமாதி நிலை கைகூடாதா என்று! அவர்கள் சுவாமிகள் முன் அமர்ந்துஓயாமல் கையை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். கைவலிலி கண்டதுதான் மிச்சம். அவர்கள் வெட்கத்தோடு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார்கள்!

நடிகர் எஸ்.வி. சுப்பையாவுக்கு பூண்டி சுவாமிகளிடம் விசேஷ பக்தி. குணச்சித்திர நடிகர். பாரதி வேடம் தரித்து அதன்மூலம் பெரும்புகழ் பெற்றவர். யாரையும் லட்சியம் செய்யாமல் வாழும் பூண்டி மகானின் போக்கு எஸ்.வி. சுப்பையாவை பெரிதும் கவர்ந்துவிட்டது. அடிக்கடி பூண்டி சுவாமிகளை  தரிசனம் செய்ய வருவார் அவர். 

சுவாமிகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து அவர் கடவுளே என சுப்பையா முடிவு செய்தார். தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும்- முக்கியமாக திரையுலகப் பிரமுகர்கள் பலரிடமும் சுவாமிகளின் மகிமைகள் குறித்துச் சொல்லலானார். அதனால் பூண்டி மகானின் புகழ் கலையுலக வட்டாரங்களில் விறுவிறுவெனப் பரவத் தொடங்கியது. 

அதைப் பற்றி சுவாமிகளுக்கு என்ன அக்கறை? அவர் புகழாசையையும் துறந்த மகானல்லவா? தன்னைத் தேடிவரும் திரை நட்சத்திரங்களை சிரித்தவாறே வேடிக்கை பார்த்தார் அவர்!

ஒருநாள் ஒரு நடிகை அவரை தரிசிக்க வந்தார். சுவாமிகளைத் தேடி நிறைய ஏழைகள் வருவதுண்டு எனக் கேள்விப்பட்ட அந்த நடிகை, அன்னதானம் செய்யும் ஆவலுடன் ஒரு வாகனத்தில் தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை அண்டாக்களில் எடுத்துக் கொண்டு வந்தார்.  

ஆனால் என்ன செய்ய? அன்று சுவாமிகளைத் தேடி அதிகக் கூட்டம் வரவில்லை. “”சுவாமி! இங்கே ஐந்நூறு பேருக்கு அன்னதானம் செய்யும் ஆவலோடு வந்தேன். ஆனால் மொத்தம் ஐந்தாறு பேர்கூட இல்லையே?” என்று வருந்தினார் அந்த நடிகை. சுவாமிகள் அவரையே பரிவோடு பார்த்தார். அன்னதானம் செய்யும் உயர்ந்த நோக்கம் இந்த நடிகைக்கு இருக்கிறதே? அதைக் கட்டாயம் கௌரவிக்க வேண்டும் என்று எண்ணமிட்டது சுவாமிகளின் மனம். “காத்திரு!’ என்று சொல்லிலிவிட்டு மவுனமானார். நடிகை கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நடிகையை திகைக்கச் செய்தன!

 (தொடரும்)


26
திருப்பூர் கிருஷ்ணன்

எப்போதும் கையில் ஓர் அழுக்குத் துணி மூட்டை. உடலையே சட்டை பண்ணாத அவர் அணிந்திருந்ததோ சட்டைக்குமேல் பற்பல சட்டைகள். இப்படி ஒரு மகான் வாழ்ந்தார்; அருளுரு வில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

அவர்தான் பூண்டி மகான் என்றும், ஆற்று சுவாமிகள் என்றும் அடியவர் களால் பக்தியோடு அழைக்கப்படும் சித்த புருஷர். இன்றும் அவரை வழிபடுபவர் களுக்கு வற்றாத அருள்புரிந்து காத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாபெரும் மெய்ஞ்ஞானி.

அந்த மகாஞானி ஸித்தி அடைந்து விட்டாரா இல்லையா? ஸித்தி அடைந்துவிட்டதாகத்தான் சொல்கிறார் கள். ஆனால் தன் அடியவர்கள் சிலருக்கு இன்றும் நேரில் அவர் காட்சி தருவதாக வும் சொல்கிறார்கள். என்றும் வாழும் சித்தர்கள் எப்படி ஸித்தி அடைய முடியும்?

அவரின் வாழ்க்கைச் சரித்திரம் அவர் நிகழ்த்திய அற்புதங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் நம்பக் கஷ்டமானவை. ஆனால் அடியவர் கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அந்த அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டவை. நம்பக் கஷ்டமானவற்றைக் கூட நிகழ்த் திக் காட்டுவதுதானே சித்தர்களின் தவ ஆற்றலிலின் மகிமை?

பூண்டி மகான் எந்த ஊரைச் சார்ந்தவர்? அவர் எவ்விதம் துறவியானார்? இதுபோன்ற வினாக் களுக்கு இன்றுவரை விடையில்லை.

அவர் எங்கிருந்தோ ஒருநாள் பூண்டிக்கு வந்தார். அது பூண்டி செய்த பாக்கியம்; பூண்டி மக்கள் செய்த பாக்கியம். பின்னர் அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதனா லேயே அவர் பூண்டி மகான் என்று அடியவர்களால் அன்போடு அழைக்கப் படலானார்.

அவருக்கு மக்கள் இன்னொரு திருநாமத்தையும் சூட்டினார்கள்- ஆற்று சுவாமிகள் என்று! பூண்டி கலசப்பாக்கம் ஆற்றங்கரையில் எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரை ஆற்று சுவாமி கள் என்றழைக்கும் வழக்கம் தோன்றியது.

ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் பெயருக்கு நாம் இன்னொரு பொருளையும் காணமுடியும். தன் ஆன்மிகத் தவ ஆற்றலால் மக்களை நன்னெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் அவர். ஆற்றுப்படுத்துபவரை ஆற்று சுவாமிகள் என்றழைப்பது பொருத்தம் தானே?

அவரை முதலிலில் பார்த்தவர்கள் ஏதோ பைத்தியக்காரர் போலிலிருக்கிறது என்றுதான் நினைத் தார்கள். அவருக்கு நிரந்தர மாக ஒரு பைத்தியம் பிடித்திருந்தது என்பதும் உண்மைதான். அதுதான் கடவுள் பித்து.

ராமகிருஷ்ண பரம ஹம்சரைப் பற்றி சாரதா தேவியிடமும், ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அவரது மனைவி மிருணா ளினியிடமும், “ஒரு பைத்தியத் திற்கல்லவா உங்களைக் கட்டி வைத்து விட்டார்கள்?’ என்றுதானே உறவினர்கள் சொன்னார்கள்? இறைநிலையில் தோய்ந்த மகான்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் உலகியல் மரபிலிலிருந்து பூண்டி மகான் மட்டும் எப்படித் தப்பிக்க முடியும்?

அவரைத் தொடக்கத்தில் பைத்தியம் என்று நினைத்தவர்கள் மெல்ல மெல்ல அவர் பைத்தியமல்ல; மாபெரும் மகான் என்று உணரத் தலைப்பட்டார்கள். தங்கள் வாழ்வில் நேரும் துயரங்களுக்கெல்லாம் அவரையே சரண் புகுந்தார்கள். ஆற்றங்கரை யில் தவம் செய்த அவரது அருள் சக்தி மக்களை நோக்கி ஆற்று வெள்ளமாகப் பாய்ந்தது. முன்வினை காரணமாக மனிதர் களுக்கு நேர்ந்த எல்லா உலகியல் துன்பங் களையும் தம் அருளாற்றலால் நீக்கி மக்களுக்கு நல்வாழ்வை அருளினார் அவர்.

பின்னாளில் அவரது மகிமை உணர்ந்தவர் கள் கூட்டம் கூட்டமாக அவரைப் போய் வணங்குவதும் வழக்கமாயிற்று. ஆனால் இயன்றவரை எப்போதும் கூட்டத்திலிலிருந்து தனிமைப்பட்டே அவர் வாழ்ந்தார்.

அந்த சித்த புருஷரை பூண்டியில் முதலிலில் பார்த்தவர்கள் சில விவசாயிகள்தான். ரமணரை சேஷாத்ரி பரப்பிரும்மம் இனங் கண்டு உலகிற்கு அறிவிக்கவில்லையா? அது போலான பெரும் பெருமை அந்த விவசாயி களுக்குக் கிட்டியது. ஆன்மிக உலகம் ஊர் பெயர் தெரியாத அந்த விவசாயிகளை என்றும் நன்றியோடு நினைக்க வேண்டியது அவசியம்.

கையில் ஏரும் கலப்பையுமாக வந்து கொண்டிருந்த அவர்கள், நாகதாளி முட்புதரில் உள்ளே சிக்கியவாறு அமர்ந்து மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த அவரை தரிசித்தார்கள். யார் இவர்? முட்புதரின் அடர்த்திக்குள் இவர் எப்படிப் போய் உட்கார்ந்தார்? இவர் உட்கார்ந்த பின்னர் முட்புதர் வளர்ந்து இவரை மூடியதா? அல்லது முட்புதருக்குள் ஒரு செடிபோல இந்த விந்தையான மனிதச் செடி தானாகவே முளைத்ததா?

அவர்கள் மிகுந்த கவனத்தோடு முட்புதரை வெட்டி சுவாமியை எடுத்து வெளியே வைத்தார்கள். மூச்சு வந்துகொண்டிருந்ததால் அது மனித உருவம்தான் என்று புரிந்தது. இல்லாவிட்டால் ஒரு சிலை என்றுதான் கருதியிருப்பார்கள். அசைவே இல்லை. முகத் தைப் பார்த்தால் குழந்தைபோல் இருந்தது. அவரைப் பார்க்கப் பார்க்க அவர்மேல் அளவற்ற பிரியம் எழுந்தது. கோவிலிலில் இருக்கும் சிலைக்கும் இந்த மனித உருவத்திற் கும் அதிக வித்தியாசத்தை அவர்களால் காண இயலவில்லை.

அவர்கள் பக்தியோடு அவரையே பார்த்த வாறு அமர்ந்திருந்தார்கள். திடீரென எழுந்தார் பூண்டி மகான். சரசரவென்று கம்பீரமாக நடக்கத் தொடங்கினார்! அது நடையல்ல; ஓட்டம். விவசாயிகள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்!

“கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள், கொஞ்சம் கூழ் சாப்பிடுங்கள்!’ என்று வேண்டினார்கள். அவர் அந்த எளிய உழவர்களின் அன்பான உபசாரம் எதையும் மறுக்கவில்லை. கொடுத் ததை வாங்கிக் குடித்தார். எதுவும் வேண்டு மென்றும் அவர் கேட்கவில்லை.

ஆற்று மணலிலின் இன்னொரு இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். அவ்வளவு தான். மறுபடி அசைவே இல்லாத சிலையாகி விட்டார்!

பசி என்றோ தாகம் என்றோ அவர் என்றும் எதுவும் சொன்னதில்லை. எங்கோ சூனியத்தை வெறித்த ஒரு நிலைகுத்திய பார்வை. சுற்றுப்புறச் சூழலை முற்றிலும் மறந்த ஒரு மோன நிலை.

ஆற்றங்கரையை விட்டால், காக்கங்கரை விநாயகர் கோவில் வாயில் படியில்தான் அவர் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். எங்கோ வெறித்த பார்வை. சிலர் அவருக்கு டீ வாங்கிக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடுவார்.

யாரும் எதுவும் கொடுக்கவில்லையா? வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டார். நேரே ஆற்றங்கரைக்குப் போவார். கைப்பிடிய ளவு மணலை எடுப்பார். அதைச் சாப்பிட்டு ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிப்பார்!

அவர் சாப்பிட்ட மணல் அவரளவில் எந்தக் கெடுதலும் செய்யாமல் ஜீரணம் ஆயிற்று என்பதுதான் விசேஷம்! மண்ணுக்குள் உடல் போகப்போகிறது. இப்போது உடலுக்குள் மண் போகட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!

அவர் மணலைச் சாப்பிடும் வைபவத்தை ஒருநாள் ஓர் அன்பர் பார்த்து விட்டார். பார்த்தவர் திகைப்பில் ஆழ்ந்தார். ஆனால் ஆற்று சுவாமிகளோ மேலும் ஒரு கைப்பிடி மணலை எடுத்து, “நீயும் சாப்பிடுகிறாயா’ என்று சைகையால் வினவியபோது அன்பருக்கு அடிவயிறு கலங்கியது! ஆற்று சுவாமிகள் ஏதோ பலகாரம் சாப்பிடுவதுபோல் மணலை சாப்பிடுகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் திகைப்படைந்தார்கள்.

ஜாதி மத வேறுபாடுகளை ஒருநாளும் அவர் பார்த்ததில்லை. நிறைய முஸ்லிம்கள் வெகு பிரியமாக அவருக்குக் கூழ் கொடுப்பார் கள். அவர் ஆனந்தமாக அந்தக் கூழை அருந்தி மகிழ்வார்.

கலசப்பாக்கம் பாலகிருஷ்ண முதலிலியாருக்கு அவர்மேல் பிரியம்  அதிகம். அவர் ஒரு சோடாக்கடை வைத்திருந்தார். அந்த சோடாக் கடைப்பக்கமாக வந்து சுவாமிகள் அவ்வப்போது அமர்வதுண்டு. சுவாமிகளுக்கு சோடாவோ கலரோ கொடுப்பார் அவர். சுவாமிகள் அதை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்விடுவார்.

சில நேரங்களில் அவர் செய்யும் சித்துகள் வியப்பைத் தரும். நல்ல உச்சி வெய்யிலிலில், நடந்தால் கால் பொரியும் ஆற்றங்கரை மணலிலில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சுகமாகப் படுத்துக் கொண்டிருப்பார். அப்படியே நிஷ்டையிலும் ஆழ்ந்து விடுவார்.

அந்தப் பக்கமாக வரும் பள்ளி மாணவர்கள் அவர் உடலை அசைத்துப் பார்ப்பார்கள். தேக்குக் கட்டைபோல் உறுதியான உடல் அவருக்கு. அதில் எந்த அசைவும் இருக்காது. எறும்பும் பூச்சிகள் சிலவும் அவர் உடலிலில் ஊர்ந்துகொண்டிருக்கும். மாணவர்கள் அந்த எறும்பையும் பூச்சிகளையும் ஊதி அகற்றி விட்டு, அவரது பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். சுவாமிகளுக்கு எறும்பு ஊர்ந்ததும் தெரியாது; சிறுவர்கள் தன் பாதங் களைத் தொட்டுக் கும்பிட்டதும் தெரியாது.

அப்படியே படுத்திருப்பவர் இரவெல்லாம் அங்கேயேதான் கிடப்பார். வெய்யில் மாறி மழை கொட்டு கொட்டென்று கொட்டும். அந்த மழைநீரில் அவர் உடல் கட்டைபோல் அப்படியேதான் கிடக்கும். இப்படி அந்த வைபவம் பல நாட்கள் நீடிக்கும். பின்னர் பழையபடி எழுந்து கடைகளுக்கு வரத் தொடங்குவார். பூண்டி மக்களெல்லாம் அவரை தெய்வமென்றே கருதினார்கள்.

சிறுவர்களுக்குத் தேர்வு வந்துவிட்டால் போதும். பூண்டி சுவாமிகளை மாணவர்கள் ஏராளமான பேர் சூழ்ந்து கொள்வார்கள். “சாமி! நான் பரீட்சையில் தேறுவேனா?’ என்று ஆர்வத்தோடு கேட்பார்கள். சிலர் கேள்விக்குத் தலையாட்டுவார் சுவாமிகள். வேறு சிலர் கேள்விக்குப் பேசாமல் இருந்து விடுவார்.

சில சிறுவர்கள் வரும்போது அவர்களை அவர் அழைக்கும் விதமே அலாதி. ஒரு சிறுவனை, “அடேய் ஜட்ஜ்! இங்கே வாடா!’ என்று அழைப்பார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் உண்மையிலேயே ஜட்ஜ் ஆனான் என்பதுதான் விசேஷம். இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தை முன்னரே அவர் கணித்துச் சொன்ன சம்பவங் கள் அவர் வாழ்வில் அதிகம்.

ஒருநாள் மசூதிப் பக்கம் சென்றார் பூண்டி மகான். அங்கிருந்த ஒரு கல்லிலில் உட்கார்ந்து கொண்டார். அவர்தான் எங்கும் செல்வார்- எந்த இடத்திலும் அமர்வார் என்பது பிரசித்த மாயிற்றே?

அந்த வழியாக வந்தார் ஒரு முஸ்லிம். சுவாமியைப் பார்த்த அவர் சுவாமியிடம் வந்தார். அவர் கையில் ஆரஞ்சு இருந்தது. அதன் சுளை களைத் தாமே சுவாமிகளுக்கு ஊட்டிவிட லானார். ஒரு முஸ்லிம் ஊட்டிவிட விவேகானந் தர் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டதாக வரலாறு உண்டே?

சுவாமிகளுக்கு முஸ்லிம் ஒருவர் ஆரஞ்சுச் சுளைகளை ஊட்டிவிடுவதைப் பார்க்க அங்கே மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கேயும் தம் சித்து விளையாட்டை ஆரம்பித்தார் சுவாமிகள்.

சுவாமிகள் வாயில் முஸ்லிம் ஒரு சுளையை ஊட்டினால் அவர் வாயிலிலிருந்து உடனே இரண்டு ஆரஞ்சுச் சுளைகள் கீழே விழுந்தன. ஒவ்வொரு முறை ஒரு சுளை ஊட்டும்போதும் இப்படி அவை இரண்டிரண்டாகப் பெருகிக் கீழே விழுந்து கொண்டே இருந்தன! கூட்டம் திகைத்தது.

கூட்டத்தில் ஒருவர், “என்ன இது, ஏன் இப்படி நடக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு சுவாமிகள் ஒரு பதில் சொன்னார். அந்த பதிலைக் கேட்டவுடன் ஆரஞ்சுச் சுளையை ஊட்டி விட்டவர் பதறி அழுதுகொண்டே சுவாமிகளின் பாதங்களில் விழுந்தார்.

தன் மனத்தில் ஓடிய எண்ணம் சுவாமி களுக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது பெரும் வியப்பு. அவர் அவ்விதம் வியப்படைகிற மாதிரி பூண்டி சுவாமிகள் சொன்ன பதில்தான் என்ன?

“சித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே’
என்றொரு பாடல் உண்டு. நம்மிடையே தோன்றி,

வாழும்பொழுது ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, முக்தி அடைந்த பின்னும், பக்தர்களுக்கு திருவருள் புரிந்துகொண்டிருக்கும் சித்தர்களை வணங்குவது அந்த சிவபெருமானையே வணங்கு
வதற்கு சமமாகும்.

சித்தர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் என்பது கிடையாது. அவர்களது யோகத்திற்கும், தவத்திற்கும் இடையூறு இல்லாதிருப்பது ஒன்றே அவர்கள் நாடுவது. அவர்களுக்கு நோய் வந்தால்கூட அந்நோயின் வலியும் வேதனையும் அவர்களைத் தாக்காது.

மக்களின் கஷ்டங்களையும் மனவேதனையையும் சித்தர்கள் உள்வாங்கிக் கொள்வதால் அந்தத் தாக்கம் அவர்களுக்கு நோயைத் தருகிறது. ஆனால் அதன் வேதனையும் வலியும் அவர்களுக்கு இருக்காது.
ரமண மகரிஷி, ராம்சுரத்குமார் போன்ற மாபெரும் மகான்களை நோய் பற்றினாலும் அவர்கள் அதை உணர்ந்தது இல்லை. நமது பாவங்களையும் சங்கடங்களையும் ஏற்றுக்கொண்டு நமக்கு நன்மை அளிக்கும் மகான்களும் சித்தர்களும் இன்றளவும் நம் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து வருகின்றனர்.

தெருவில் தனக்குள் பேசிக்கொண்டு, சீராக உடுத்திக்கொள்ளாமல் பைத்தியக்காரன்போல திரியும் சிலரில் சித்தர்களும் இருப்பார்கள். நமக்குத் தெரியாது.

தெரியப்படுத்த வேண்டும் எனும் சித்தம் இருந்தால் அது நிகழ்ந்தே தீரும். பொதுவாக, சித்தர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். மக்களாகப் பார்த்து அவரது சக்தியைப் புரிந்து கொண்டு, சித்தர் என்று அறிந்து,அதைப் பற்றி பரவலாக மற்றவர்களிடம் கூறும்பொழுது மட்டுமே சித்தர்கள் அறியப்படுகிறார்கள். அதன்பின்னர், அவர்களின் மகத்துவம் பற்றி புரிந்துகொள்கிறார்கள்.

சில சித்தர்களின் ஆயுட்காலம் இயற்கையாக முடிந்தபின் அவர்களுக்கு சமாதி எழுப்பப்படுகிறது. இச்சமாதி அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகின்றது. சில சித்தர் பெருமான்கள் உயிரோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளிறங்கி அப்படியே சமாதி ஆகின்றார்கள். இதற்கு ஜீவசமாதி என்று பெயர். இவர்களுக்கு தாங்கள் எந்த நாளில், நேரத்தில், எந்த இடத்தில் ஜீவசமாதி ஆகப் போகிறோம் என்பது முன்பே தெரியும்.

அனைத்து சித்தர்களுக்குமே அவர்களது முடிவுக்காலம் முன்கூட்டியே தெரிந்திருக்கும். பின்னர் நிகழ இருப்பதை முன்னரேஅறிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவர்தான் வண்ணாரப் பரதேசி.

இவர் வள்ளலார் ராமலிலிங்க அடிகளின் சமகாலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில் ஒரு அடர்ந்த காடு போன்ற இடத்தில் வாழ்ந்தவர். அதுவும் சாதாரண காடு அல்ல. ஏகப்பட்ட வில்வ மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த வில்வக்காடு! வில்வத்திற்கும் ஈஸ்வரனுக்கும் தொடர்பு உண்டல்லவா! இவர் அந்தக் காட்டின் நடுவே தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரது கை, கால்,  மற்றும் அனைத்து உறுப்புகளும் தனித்தனியே கிடப்பதைக் கண்ட மாடு மேய்க்கும் சிறுவர்கள் பயந்துபோய், ஊர் மக்களை அழைத்து வந்தனர்.

அவர்கள் வருவதற்குள் வண்ணாரப் பரதேசி சித்தர், தன் யோக நிலையில் இருந்து மாறி பழையபடி அவரது உருவத்தில் காணப்பட்டார். வியந்துபோன மக்களுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது- அவர் சித்தர் என்று.அந்த வில்வக்காடுதான் பின்னர் வில்லிலியநல்லூர் என மாறி, நாளடைவில் வில்லிலியனூர் என மருவியுள்ளது.

அவரது சக்தியையும், ஆற்றல் பற்றியும் புரிந்துகொண்ட மக்கள் அவரைத் தேடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அங்கே மீன் விற்பனை செய்பவர்கள் இவரை வணங்கிய பிறகுதான் மீன் விற்பனைக்குச் செல்வார்களாம்.

சித்தரது கையால், பூமியில் இருந்து மண்ணை எடுத்துக்கொடுத்து அனுப்பினால் மீன்கள் அனைத்தும் வெகுவிரைவில் விற்பனையாகிவிடுமாம்!

அதுபோல், நோயுற்றவர்களுக்கு மகான் வண்ணாரப் பரதேசி, மண் எடுத்து உடம்பில் பூசி குணப்படுத்தியிருக்கிறார்.

பக்தர்கள் கேட்டதை வழங்கும் சக்தி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகள் மக்களுக்கு அருள் வழங்கிய இந்த சித்தரின் ஆயுட்காலம் முடிந்ததும், அன்றைய பக்தர்கள் அவருக்கு சமாதி கட்டினார்கள். சிறிய ஓலைக் குடிலுக்குள் இருந்த இந்த மகானின் சமாதிக்கு, பின்னாளில் கல் கட்டடம் கட்டி சிறப்பு செய்தனர். இவரது சமாதிக்குமேல் சிறிய அழகிய சிவலிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவலிலிங்கத்திற்கு எதிர்பக்கமாக மிக அழகிய, சிறிய நந்தியும் காணப்படுகிறது. சித்தர் பெருமானின் வலது, இடது பக்கங்களில் விநாயகரும், முருகரும் காட்சியளிக்கின்றனர்.

இச்சித்தர் சமாதியாகியுள்ள பகுதி, புதுச்சேரி அருகேயுள்ள வில்லிலியனூரை அடுத்துள்ளஒதியம்பட்டு ஆகும். இங்குள்ள மக்களின் அரிய முயற்சியால் சித்தரது சமாதிக் கோவில் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.  பக்கத்தில் உள்ள மில்களில் பணிபுரியும் பெண்கள், வேலைக்குப் போகும் முன்பு இச்சமாதிக்கு வந்து தீபம் ஏற்றிவிட்டுச் செல்கிறார்கள்.  தாங்கள் கேட்பதெல்லாம் கிடைப்பதாகவும், நினைப்பதெல்லாமே நிறைவேறுவதாகவும் கூறுகின்றனர் இந்த பக்தைகள். மகான் வண்ணாரப் பரதேசிச் சித்தரின் மகிமை பற்றி விளக்கமாக எடுத்துரைக்க முன்வந்தனர் கங்காலட்சுமி- மதிவாணன் தம்பதியர்.

“”எங்களுக்குத் திருமணமாகி பதின்மூன்று வருடங்கள் குழந்தைப் பேறு இல்லாமல், ஏங்கிப்போய் இருந்தோம். சென்னையிலுள்ள குழந்தையின்மை சிகிச்சை மையத்திற்குச் சென்றோம். அங்கே என் மனைவியை ஒரு வருடம் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று கூ