நவகிரக சந்நிதி


 

12-6-2014- வைகாசி பௌர்ணமி
டி.ஆர். பரிமளரங்கன்

“சத்தியலோகம், தேவலோகம், பூலோகம் ஆகிய அனைத்து லோகங்களைக்காட்டிலும் மகிமைபெற்று விளங்கும் சூரிய லோகத்தில், சகல தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர், கிம்புருடர் போன்றவர்களும், வானத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளும் சூரியனை தினமும் போற்றித் துதிக்கிறார்கள்’ என்கிறது சூரிய புராணம். மேலும், சூரிய மண்டலத்தில் காவல் புரியும் நான்கு வேதங்களும் சூரியனைப் போற்றுகின்றன. மகரிஷிகளும், முனிவர்களும் மந்திரங்கள் ஜெபித்து வழிபடுகிறார்கள்.

பூலோகத்தில் சூரியனை கண்கண்ட தெய்வமென்று போற்றுகிறார்கள். வேதமறிந்தவர்கள் தினமும் காலை- மாலை வேளையில் சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சாடணம் செய்து வழிபடுகிறார்கள்.

நவகிரகங்களுக்குத் தலைவனாக விளங்கும் சூரியன் இல்லையேல் இந்த உலகம் இல்லை. மேலும், ஒவ்வொரு பருவத்திலும் ஒரு நிறத் துடன் காட்சி தருகிறான் சூரியன். வசந்தகாலத்தில் பொன்னிறத்துடனும், கோடைகாலத்தில் சம்பக மலர் நிறத் திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்துடனும், கார் காலத்தில் கரிய நிறத் துடனும், முன்பனிக்காலத்தில் தாமிர நிறத் துடனும், பின்பனிக்காலத்தில் சிவப்பு நிறத்துடனும் ஒளிர்ந்து உலகத்திற்கு பலவிதங்களில் நன்மைபுரிந்து உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் வாழவைக்கிறான்.

தேவர்களாலும் ரிஷிகளாலும் முனிவர்களாலும் மகான்களாலும் மானிடர்களாலும் பூஜிக்கப்படும் சூரிய பகவானுக்கு, “நான் இல்லையேல் அனைத்து உலகங்களுமில்லை; என் சக்தி அளப்பரியது’ என்ற கர்வம் தலைதூக்கியது. இதனையறிந்த மகாவிஷ்ணு, சூரியனின் கர்வத்தையடக்க ஒரு திருவிளையாடலைப் புரிந்தார்.

தன் கையில் சுழன்றுகொண்டிருந்த சக்கரத்தைப் பார்த்தார். மகாவிஷ்ணுவின் உள்ளப்போக்கைப் புரிந்துகொண்ட “ஆழி’ என்ற அந்த திருச்சக்கரம், அவர் ஆசியுடன் புறப்பட்டது. இந்த மகாசக்கரம் முதலில் பாதாள உலகிலிருந்த அசுரர்களை அழித்து, பூமியைப் பிளந்துகொண்டு காவேரி நதிக்கரையில் யாகம் செய்தபடி நின்ற பிரம்மதேவன் கையில் வந்து அமர்ந்தது. அதை வழிபட்ட பிரம்மதேவன், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். பின்னர் அந்த சக்கரத்தை காவேரிக்கரையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.

சக்கரராஜன் என்றும் சக்கரபாணி என்றும் மண்ணுலகவாசிகள் அதைப் போற்றி வழிபட்டார்கள்.

இந்த சக்கரராஜனான சக்கரபாணி சூரியனைவிட அதிக ஒளிபடைத்தவராக இருக்கவே, சூரியனுக்கு சற்று பொறாமை மேலிட்டது. “தான்’ என்ற கர்வத்துடன் திகழ்ந்த சூரியன் தனது ஒளியை அதிகரித்துப் பிரகாசித்தான். இதனால் மண்ணுலகினர் துன்பப்பட்டார்கள். இதையறிந்த சக்கரபாணி, சூரியனின் ஒளி முழுவதையும் பறித்துத் தன்னிடம் இருத்திக்கொண்டார்.

சூரியன் பலமிழந்து, ஒளியிழந்து வருந்தி, காவேரிக்கரையில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்கரராஜனை சரணடைந்து, தன் குற்றத்தைப் பொறுத்து மன்னிக்கும்படி வேண்டினான்.

சூரியன் தன் நிலை உணர்ந்ததாலும், தன்னை சரணடைந்து வேண்டிக்கொண்ட தாலும் சூரியனுக்கு மீண்டும் ஒளியைத் தந்து ஆசீர்வதித்தார் சக்கரராஜன். அந்த நாள் ஒரு வைகாசி மாதப் பௌர்ணமி நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

எட்டுக் கரங்களுடனும், மூன்று கண்களுடனும் கூடிய ஒளிமயமான திருவுருவத்துடனும், அக்னிமயமான கேசத்துடனும் சூரியன் முன் பிரதட்சணமாகி சக்கரராஜன் ஆசி வழங்கியதால், சூரியனின் கர்வம் நீங்கியது. தன்னைவிட ஒளிமிக்கவர் உள்ளார் என்ற எண்ணம் சூரியனுக்கு ஏற்பட்டது. தனக்கு அருள்புரிந்த சக்கரராஜனுக்கு சூரிய பகவான் ஒரு கோவில் எழுப்பினான்.

அவன் கட்டிய கோவிலே இன்று நாம் வழிபடும் சக்கரராஜன் என்ற சக்கரபாணி கோவிலாகும். அக்கோவில், கோவில் மாநகரம் என்று போற்றப்படும் கும்பகோணத்தில் உள்ளது.

கும்பகோணம் கடைவீதியின் வடக்கே அமைந்துள்ள இக்கோவிலில் சக்கரபாணி சங்கு, சக்கரம், வில், கோடாரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை ஆகியவற்றை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியவாறு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். ஸ்ரீசக்கரபாணி என்று போற்றப்படும் இவரை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவர். இவரை வழிபடுவதால் இழந்த பதவியைப் பெறலாம். மனதில் தைரியம் பிறக்கும். பில்லி, சூன்யம், தீயசக்திகள், நவகிரக தோஷங்கள் விலகும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

புகழ்பெற்ற வைணவக் கோவில்களில் ஸ்ரீசுதர்சனர் சந்நிதி இருக்கும். ஆனால், கும்பகோணத்தில் ஸ்ரீசக்கரபாணிக்கு தனிக்கோவில் உள்ளது தனிச்சிறப்பாகப் பேசப் படுகிறது.

சில திருத்தலங்களில் அருள்புரியும் ஸ்ரீ சக்கரபாணி பதினாறு திருக்கரங்களுடனும் அருள்புரிகிறார். சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி எனும்  எட்டு ஆயுதங்களை வலக்கையிலும்; சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, வஜ்ரம், சூலம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.

திருமாலின் கைகளில் காணப்படும் ஐந்து ஆயுதங்களும் மிகவும் புனிதமானவை மட்டுமல்ல; அளப்பரிய சக்திகொண்டவை. பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கு, கௌமோதகீ எனப்படும் கதாயுதம், நந்தகம் எனப்படும் வாள், சார்ங்கம் எனும் வில், இவற்றுடன் சுதர்சனமாகிய சக்கரம். இந்த அற்புதமான ஐந்து ஆயுதங்களில் சக்கரத்திற்கு தனிப் பெருமையுண்டு. மகாவிஷ்ணு அவதாரம் எடுக்கும்போதெல்லாம் அவரோடு பிறப் பதற்காக அவதரிக்கும் பெருமை பெற்றது சுதர்சனம் எனும் ஸ்ரீசக்கரம்.

மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தின் போது திருமாலின் கோரைப் பற்களாகத் தோன்றி பூமாதேவியை அந்தக் கோரைப் பற்களால் தாங்கினார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை சம்ஹாரம் செய்தபோது, நரசிம்மரின் கைநகங்களாக அவதரித்தார்.

வாமன அவதாரத்தில் தர்ப்ப பவித்திரமாகவும், பரசுராம அவதாரத்தின்போது அவரது கோடாரியாகவும் இருந்தார். ராமாவதாரத்தில் இராவண சம்ஹாரத்தின்போது ஜ்வாலாமூர்த்தியாக ராமபாணத்திலிருந்து புறப்பட்டார். கிருஷ்ணாவதாரத்தில் புல்லாங்குழலாக அவதரித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அருள் புரியும் ஸ்ரீசக்கரபாணிக்கு தனிச்சந்நிதி உண்டு. இங்கு நினைத்தவுடன் புறப்படும் நிலையில் இடது பாதத்தை சற்று முன்னால் வைத்த நிலையில் உள்ளார்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட சனியின் சங்கடத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற பக்தர்களின் நம்பிக்கை பொய்யாவதில்லை. பகைவர்கள் இருந்தால் விலகுவர். கொடும் நோயிலிருந்து விடுபட்டு நலம்பெறலாம். ஞானம், பலம், செல்வம், சக்தி, உத்தியோக உயர்வு, வணிகத்தில் நல்ல மேன்மை எல்லாம் கிடைக்கப்பெறலாம். இவரை சனிக்கிழமைகளில் நெய்விளக்கேற்றி வழிபட் டால் சகல தோஷங்களும் நீங்கி சௌபாக்கியங்களுடன் வாழலாம் என்பர்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் சுதர்சன காயத்ரியை தினமும் பதினோரு முறை ஜெபித்து மானசீகமாக வழிபட்டால் தீவினைகள், அச்சம் என எதுவும் அணுகவே முடியாது என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீசுதர்சன காயத்ரி

“ஓம் ஸுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்’.

சனி பகவானின் பிறப்பு!
*********************

தலைமை நீதிபதி சனி பகவான்: மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி…எவனாக இருந்தாலும் சரி…சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.


சனி பகவானின் பிறப்பு: சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார்! சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். திருப்பாற் கடலில் ஸ்ரீமந்நாராயணன் தேவி, பூதேவி சமேதராய் – திருவாழி திருச் சங்குடன், கவுஸ்துப, வனமால கேயூர கிரீடங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரின் நாபிக் கமலத்தில் நின்று சதுர்முக பிரம்மன் அவதரித்தார். பிரம்மதேவன், விஷ்ணுவின் ஆணைப்படி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கும் கர்த்தாவாக சத்தியலோகத்தில் எழுந்தருளினார். சிருஷ்டியின் மகிமையால் பிரம்மதேவன் மரீசி, அத்திரி, ஆங்கிரீஸ், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்னும் ஞானத் தவயோகியர்களைத் தோன்றச் செய்தார். அந்த மாமுனிவர்கள் சப்தரிஷிகள் என்னும் திருநாமத்தைப் பெற்றனர். சப்தரிஷிகளைப் படைத்த பிரம்மதேவன் தக்ஷப் பிரஜாபதி என்ற மகரிஷியையும் உலக ÷க்ஷமத்திற்காக சிருஷ்டித்து அருளினார். சப்தரிஷிகளில் மூத்தவரான மரீசி மகரிஷி. சம்பூதி என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் காசியப முனிவர் குமாரராகப் பிறந்தார். காசியப முனிவர், தக்ஷபிரஜாபதியின் குமாரத்தியான அதிதி என்பவளைத் திருமணம் செய்துக் கொண்டார். அதிதிக்கும், காசியப முனிவருக்கும் அநேக புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்கள் நல்ல தேஜஸைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறு அத்யந்த தேஜஸ் பொருந்திய காசியப புத்திரர்கள் துவாதச ஆதித்தியர்கள் என்ற திருநாமத்தைப் பெற்றனர். ஆதித்ய குமாரர்களில் மூத்தவர்தான் சூரிய பகவான்!
சூரிய பகவான் அழகானவர் – அவனிக்கு ஒளியாகத் திகழ்பவர் – சுவர்ண சொரூபமானவர் – பரமாத்மரூபிணியானவர் – தேஜோ மயமானவர்-ஆரோக்கியம், ஐசுவர்யம், கீர்த்தி, வெற்றி அனைத்தையும் அருளுபவர் – ஆயிரம் கிரணங்களைக் கொண்டவர் – சக்கராதி கிரகங்களுக்குத் தலைவன் – திவ்யமான ஏழு பச்சைக் குதிரைகள் பூட்டப் பெற்ற பொன் வண்ணத் தேரைச் செலுத்துபவர் – குரு குகனுக்கு ப்ரீதியானவர் என்றெல்லாம் போற்றப்படும் நவக்கிரக நாயகனாக விளங்குகிறார் சூரியபகவான்! பொன்மயமான சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, ஜம்பூத் துவீபத்தில் வடக்கு திக்காக எழுந்தருளி எங்கும் பேரொளி பரப்புகிறார். சூரியதேவன் உத்திராயண காலத்தில் இந்த சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்துக்கு எழுந்தருளுகிறார். விஷுக் கனியின் போது இரண்டுக்கும் நடுவேயிருந்து எழுந்தருளுகிறார். சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை நவில்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதியாமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரியதேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொன்னார். சூரிய தேவன் சாயாதேவி மீது கோபம் மிகக் கொண்டார். சாயா தேவியிடம், இதைப் பற்றி விசாரித்தார். சாயா தேவி மவுனம் சாதித்தாள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதால், சூரிய தேவன் கோபத்தில் அவளது சிகையைப் பற்றி இழுக்க அது வரை பொறுமையாக இருந்த சாயாதேவி நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி, தனது பிழையைப் பொறுத்தருளுமாறு பகலவனின் பாதங்களைப் பணிந்து கேட்டாள். இவற்றையெல்லாம் கேட்டு சூரிய தேவன், சாயா தேவியை க்ஷமித்தார்; எமதர்மராஜனும் சாயாதேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் ஞான திருஷ்டியால், சுவர்ச்சலாதேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் அநுக்கிரஹித்தார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.எமதர்மராஜன், காசி அருகேயுள்ள கோகர்ணம் என்னும் திருப்பதியில் சிவபெருமானை ஆராதித்து அற்புதமான தவம் இயற்றினார். எமதர்மராஜனின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் எமனைத் திரு நோக்கம் செய்து, ஆதவன் புதல்வா! உனக்கு சையமணி என்னும் நகரத்தைப் பரிபாலிக்கும் பாக்கியத்தை அருளுவோம். எமது அருளாணைப்படி பிதுர் பரிபாலன தர்மத்தை காலம் தவறாமல் கண்ணியத்துடன் நடத்தும் உனக்கு காலன் என்னும் நாமம் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்தார். எமதர்மராஜனும் சிவனைப் போற்றி தென் திசைக்கு அதிபதியாக விளங்கினான். அதே போல் வைவசுதமனு வைது மன் வந்தர மனு ஆனார். ச்ருதசரஸ், மேரு மலையில் தவம் செய்து சாவர்ணீ என்ற திருநாமம் பெற்றான். அவன் ஏழாவது மன்வந்தரத்து மனுவானார். சாயா தேவியின் புத்தரி யமுனையும் , சுவர்ச்சலா தேவியின் புத்திரி தபதியும் நதிகளாயினர். தபதீ என்பவள் ஸமவரணன் என்ற மன்னனை மணந்தாள். அதன் பின்னர்தான் அவள் விந்திய மலையிலிருந்து பெருகி வரும் தபதி என்ற நதியாக மாறினாள் என்பது புராணம்! அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர். ரைவதனும் பகவானின் பேரளால் மனுவாகி ரைவத மனுவந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரட்சிக்கும் உன்னத மேன்மை அடைந்தான். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பார். இந்த பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். இவ்வாறு சூரிய புத்திரர்கள் பாரெல்லாம் போற்றும் பெருமை பெற்றனர். ச்ருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற புத்தர புத்திரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்ற விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல் கடைசியில் மறைதல் என அவனது வாழ்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக்கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப – துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். சம் சனைச்சராய நம: என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். நம: ஸூர்யாய ஸோமாய மங்களா புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம: எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் – உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை பொங்கும் சனியாகவே நமக்குக் காட்சி தருவார். சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போம்.

சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் செகம் வாழ இன்னருள் தா! தா!

சனீஸ்வர பகவான் சங்கடங்களைத் தீர்ப்பவர்; மங்கலம் பொங்கும் மனையிலே ஒரு மனதாக, அவரைப் போற்றுவோர்க்கு உன்னதமான பதவியைப் பேரானந்தம் பொங்க அருளும் கருணைத் தேவன்! ஊழ்வினைப் பயனால், நம்மை ஆரம்பத்தில் சோதனைக்குள்ளாக்கும் சனிபகவானைத் தினமும் தியானித்து பூஜித்தால், அவர் நமக்கு ஏற்பட இருக்கும் இன்னல்களைக் குறைத்து இறுதியில் ஈடில்லா இன்பத்தைப் பெருக்குவார்! காகம் அமர்ந்து, மேற்கு திசை முகம் நோக்கி, நீலநிற வஸ்திரம் அணிந்து அபயஹஸ்தம் நல்கும் சனீஸ்வர பகவான் தாமச குணம் கொண்டவர்! சனீஸ்வர பகவான் தம்மைச் சரணடைந்தோர்க்கு, சஞ்சலங்களைத் தீர்த்து நல்ல வரங்களைத் தந்து சந்தோஷத்தை நிலை பெறச் செய்வதில் கற்பக விருட்சம் ! காமதேனு! காலச் சக்கரத்தைப் பிளப்பதில் அவர் கதிரவனுக்கு நிகரானவர்.

சாப்பாடு போடுபவர்

ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. எனவே அவரை ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் பர்பெக்ட்ஆக இருக்க வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பார். இது சற்று தவறினாலும், அவரது கோபக்கனலுக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சாப்பாடு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார்.

நினைத்ததை நடத்துபவர்

ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

— mit கனக ராசு, கிரிதரன் மகாதேவன், Ramji Venkatraman, Rajkumaran Kannappar, Jaguu Jaguu Jagadeesh, Sk Gopi, Sukirtha Suki, Yoga Lingam, Ram Manohar, Mano Mahalingam, Mahaveer Mithun, Vizhuthugal Saravana, Saravanan NP, Saravana Kumar, Gnana Sidhar Kunangudiar Masthan, Logan Nathan, Siva Ras, Sivayanama Chennai, ருத்ர குமார், ஆன்மீக தகவல், சுயம்பு சித்தன், வீரபத்திரர் ஆலயம் வேலர் சின்னக்குளம், அன்னை அபிராமி சைவ மன்றம், இளைய சித்தன், சுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் தேவஸ்தானம், சிவா சிவபக்தன், ஹிந்து சிவமயம், புலிப்பாணி சித்தர் அடிமை, ஸௌராஷ்ட்ரா ஸமூக செய்திகள், சிவவாக்கியர் சிவவாக்கியம் விளைந்ததே சிவாயமே, சற்குருவின் திருவடிகளே சரணம், சப்தரிஷி வளாகம், சர்வம் சிவமயம் und சிவு சிவு.

குருவுக்கு தனிக்கோவில்

 

 

குருவுக்கு தனிக்கோவில்

திருத்தென்குடித்திட்டை எனப்படும் பாடல் பெற்ற திருத்தலம் இன்று திட்டை என வழங்கப்பெறுகிறது. கும்பகோணம் தஞ்சாவூர் இருப்புப் பாதையில் திட்டை ரெயில்வே நிலையத்துக்கு மேற்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் பஸ்சிலும் செல்லாம்.அழகிய பெரிய திருக்குளமும் உயர்ந்து விளங்கும் ராஜகோபுரமும் கொண்டு விளங்கும் அழகிய கருங்கல் திருப்பணியுடன் சிறந்து விளங்கும் இத்திருத்தலத்து திருக்கோவிலில் சிற்ப வேலைகள் சிறந்து காணப்படுகின்றன.குருபகவானுக்குரிய திருத்தலமாக உள்ள இத்திருக்கோவிலில் குருபகவானுக்குரிய தனிக் கோவில் எழுப்பப் பெற்று,குருப் பெயர்ச்சிக் காலங்களிலும் வியாழக்கிழமைகளிலும் பல்வேறிடங்களிலிருந்து மக்கள் பெருந் திரளாக வந்து வணங்கிப் பேறு பெறும் சிறப்பும் இத்திருத்தலத்துக்கு உண்டு.திருஞான சம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று மட்டுமே இதற்கு உண்டு. இப்பதிகம் எப்போது பாடப் பெற்றது என்ற குறிப்பைப் பெரிய புராணத்தில் காண முடியவில்லை. திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தின் இறைவன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் சிவபெரு மானின் வரலாற்று விளக்கப் பெயர்களாகவே அருளியுள்ளார்.பொதுவாக இறைவன் திருப்பெயர் பசுபதிநாதர் என்றும், இறைவியின் திருப்பெயர் உலகநாயகி என்றும் சொல்லப்படுகிறது. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவிலை அடிப்படையாகக் கொண்ட சப்தஸ்தானத் திருத்தலங்களுள் திட்டைத் திருத்தலமும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.இவ்வூர்க் கோவிலில் பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி குலசேகர தேவர் காலத்திலும், சாளுவ பரம்பரையில் நரசிம்மராயன் காலத்திலும் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. கருவறை எதிரிலுள்ள மண்டபம் எதிரிலா வீரர், சத்துரு காலர் எனப் பாராட்டப் பெற்றவரும் பெருங்கோளூர் குலோத்துங்க சோழீச்சுரமுடைய நாயனார் கோவிலின் பணியாளருமாகிய ஒருவரால் கட்டப் பெற்றதாகும்.

அம்மண்டபத்தின் சுவர் சேதிராயரின் திருப்பணியையுடையது. அம்மன் கோவில் கல்வெட்டு நாச்சியார் கோவிலை முதலியப்ப முதலியார் பழுது பார்த்ததைக் குறிப்பிடுகின்றது. அவனிராமன் என்பான் தென்குடித்திட்டை இறைவர்க் குத் தன் நட்சத்திரமாகிய ஆனி உத்தரட்டாதியில் `அவனி ராமன் சந்தி’ ஒன்றை நடத்துவதற்குக் கண்டியூர் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் ஐந்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான்.

பெருங்கோளூர் ஊரவர் தங்கள் பாடி காவல்வரியை இக்கோவிலைப் பழுது பார்ப்பதற்குக் கொடுத்துள்ளனர். இவ்வூர்க் கல்வெட்டில் `கண்டியூர் நாடு’ என்று ஒரு நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தஞ்சையிலிருந்து திருவையாற்றுக்குப் போகும் பெருவழியில் உள்ள திருக்கண்டியூர் ஆகும். எனவே திட்டையானது கண்டியூர் நாட்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.

தலம் பற்றிய சான்றுகள்:

திருத்தென் குடித்திட்டை எனப்படும் திட்டைத்தலம் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்குத் துணையாயிருப்பன இரண்டு. 1. திருஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம். 2. அருள்மிகு ஸ்ரீலோகநாயகி சமேத (ஜோதிர் மகாலிங்க) ஸ்வயம் பூதேஸ்வரர் புராணம்.

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் பொழிப்புரை விளக்கவுரையுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அடுத்து வயம் பூதேஸ்வரர் புராணத்தின் (கிரந்தத்தில் உள்ளது) தமிழ் மொழி பெயர்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம் செய்து உதவியவர் சிவநேயகச் செல்வர் வி.பத்மநாபன். புராணத்தைத் தமிழாக்கம் செய்ததுடன், அத்தியாயக் கருத்தச் சுலோகங்களைத் தேவநாகரியில் எழுதி, அவைகளைத் தமிழ் எழுத்தில் தந்து, அவைகளுக்கு அரிய விளக்கமும் எழுதியுள்ளார்கள். அவர்தம் தொண்டு பாராட்டுதற்குரியது.மும்பை ராமகிருஷ்ணன்           முழுநிலவு நாளான பௌர்ணமி தினங்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்த வையே. பெரும்பாலும் இது அம்மன் வழிபாட்டுக்கு ஏற்ற நாளாக பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர். தேவி பக்தர்கள் நவாவரண பூஜை செய்து, லலிதா சகஸ்ரநாமம், திரிசதி, அஸ்டோத்திரம், தேவி மகாத்மியம் போன்றவற்றைப் படித்து வழிபடுவர். சங்கீதம் கற்றோர், முத்துசுவாமி தீட்சிதரின் கமலாம்பா நவாவரணப் பாடல்கள், சியாமா சாஸ்திரிகளின் அம்பாள் பாடல்களைப் பாடுவர். ஆந்திர, கேரள, மகாராஷ்டிரர்கள் சத்தியநாராயண பூஜை செய்து மகிழ்வர்.

இதுபோல, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கூடுதலான சிறப்புகளும் உண்டு.

சித்திரைப் பௌர்ணமி- சித்திரகுப்த வழிபாடு.

வைகாசிப் பௌர்ணமி- கந்தபிரான் அவதார தினம்.

ஆனிப் பௌர்ணமி- அருணகிரியார் ஜெயந்தி.

ஆடிப் பௌர்ணமி- வியாச 

ஜெயந்தி- குரு பூர்ணிமா.

ஆவணிப் பௌர்ணமி- அமர்நாத், கேதார்நாத், கைலாச தரிசனம்.

புரட்டாசிப் பௌர்ணமி- நவராத்தி ரிக்கு அடுத்த பௌர்ணமி.

ஐப்பசிப் பௌர்ணமி- சிவனுக்கு அன்னாபிஷேகம்.

கார்த்திகைப் பௌர்ணமி- அருணாசல ஜோதி தரிசனம்.

தைப் பௌர்ணமி- முருகனுக்கு காவடி வழிபாடு.

மாசிப் பௌர்ணமி- கும்பகோணம் மகாமகக் குள நீராடல்.

பங்குனிப் பௌர்ணமி- சிவன்- பார்வதி, ராமர்- சீதை, ஆண்டாள்- ரங்கநாதர், கந்தன்- வள்ளி, தேவசேனா போன்ற தெய்வத் திருமணங்கள்.

இவ்வாறு சிறப்புகள் பல பெற்ற பௌர்ணமியில் ஆடிப் பௌர்ணமி குரு பௌர்ணமியாக (குரு பூர்ணிமா) கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அம்சமான வியாசர் வேதத்தை நான்காக வகுத்தார். அதை அனைவராலும் ஓதமுடியாது என்பதால், அதன் சாரத்தை உள்ளடக்கி 18 புராணங்களைப் படைத்தார். பிரம்மசூத்திரமும் செய்தார். எனவே சனாதன தர்மத்தை விவரித்த வகையில் இவரே பலருக்கும் முதல் குருவாகத் திகழ்கிறார். எனவே அவரது அவதார தினமான ஆடிப் பௌர்ணமியை வியாச ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் எல்லா மடங்களைச் சேர்ந்த ஆச்சாரியார்களும், வியாசரில் தொடங்கி, தங்களுக்கு முன்னுள்ள ஆச்சாரியார்களுக்கு விசேஷ பூஜைகள் செய்வர். சீடர்கள் தங்கள் குருவை அணுகி குருவருளும் திருவருளும் பெறுவர்.

பொதுவாக குரு பௌர்ணமியை குரு வழிபாட்டுக்குரிய நாளாகக் கடைப்பிடிக்கலாம்.


தட்சிணாமூர்த்தி


சிவ வடிவத்தில்- நாம் தட்சிணாமூர்த்தியை குருவாக எண்ணி வழிபடுவோம். அவர் உபதேசமோ மௌன உபதேசம். சிவாலய கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியை நாம் தரிசிக்கலாம். வியாழக்கிழமைகளில் அவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சளாடை உடுத்தி, மல்லிகை, முல்லை, வில்வம் போன்றவற்றால்அர்ச்சித்தால் குருவருள் சித்திக்கும்.

தட்சிணாமூர்த்தியின் வலக்கரம் சின்முத்திரை காட்டியபடி இருக்கும். அதாவது சுட்டுவிரலானது பெருவிரல் நுனியைத் தொட்டபடி இருக்கும். மற்ற மூன்று விரல்கள் நீண்டிருக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களை நீக்கிவிட்டால் ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடையும் என்பது கருத்து. பிறவிப் பிணியிலிருந்து கடைத்தேறி வீடுபேறு அடைவதைக் குறிக்கிறது.

“குரவே ஸர்வலோகாணாம்
பிஷஜே பவரோஹிணாம்
நிதயே சர்வவித்யானாம்
தக்ஷிணாமூர்த்தயே நம’


என்பது தட்சிணாமூர்த்தி துதி. “அனைத்து உலகங்களுக்கும் குருவாக இருப்பவர்; பிறப்பு- இறப்பு என்னும் கடலைக் கடந்திட மருந்தானவர்; ஞானம் அளிப்பவர்- அத்தகைய குருவுக்கு வணக்கம்’ என்பது இதன் பொருள்.

“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
யாறங்க முதல் கற்ற கேள்வி
வல்லோர்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமா யாவதும் 
இருந்தபடி இருந்துகாட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்’ 

என்னும் பாடலைப்பாடி வணங்கி னால் சிவகுருவின் அருள் சித்திக்கும்.

கும்பகோணத்துக்கு அருகே, சுக்கிர தலமான கஞ்சனூர் சிவாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியை ஒரு குழந்தை துதித்துப் போற்றியது. தட்சிணாமூர்த்தி குழந்தையின் கன்னத்தை வருடினாராம். வைணவ சம்பிரதாயத்தில் பிறந்த அந்தக் குழந்தை இவ்வாறு சிவபக்தியில் திளைப்பதைக் கண்ட சில வைணவர்கள், “உன் சிவபக்தி உண்மையென்றால்இங்குள்ள கல்நந்திக்கு புல்லைக் கொடு. அது புல்லைத் தின்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என்றனர்.

ஹரதத்தன் என்னுமந்த சிறுவன் அன்போடு புல்லைக் கொண்டுபோய் கல்நந்திமுன் வைக்க, அதை உண்டு முடித்தது. அதுகண்டு அனைவரும் அதிசயித்தனர்.

அப்படியும் மனம் சமாதானமடையாதவர்கள் ஒரு இரும்புத்தட்டைப் பழுக்கக் காய்ச்சி, அதன்மேல் உட்கார்ந்து “சிவனே பரம்பொருள்’ என்று சிறுவனைக் கூறச் சொன்னார்கள். அவனும் சிவ பஞ்சாட்சரம் சொல்லி அமர்ந்தான். அது அவனுக்கு குளிர்ந்த தட்டாக விளங்கியது. இந்த நிகழ்ச்சி அங்கே சிலைவடிவாக செதுக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் அருளுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு.

ஹயக்ரீவர்


சைவர்களுக்கு ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றால், வைணவர்களுக்கு ஆதிகுரு- குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர். குதிரை முகம் கொண்ட அசுரன் வேதங்களை அபகரித்துச் செல்ல, அவனை வதைத்து வேதங்களை மீட்க திருமால் எடுத்த அவதாரமே ஹயக்ரீவ அவதாரம். வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகருக்கு கலை, ஞானம் அனைத்தையும் அருளியவர் ஹயக்ரீவரே.

“ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே’
என்பது ஹயக்ரீவர் துதி.


“ஸ்படிகம் போன்று நிர்மலமானவரும், ஞான சொரூபியானவரும், எல்லா கலை களுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள்.

ஸ்ரீவித்யா உபாசகர்களும் ஹயக்ரீவரை குருவாக வணங்குவர். ஏனெனில் ஹயக்ரீவர்- அகத்தியர் சம்வாதத்தில்தானே லலிதா சகஸ்ரநாமம் கிடைத்தது!

மத்வ சம்பிரதாயத்தவரான வாதிராஜர் ஹயக்ரீவ உபாசகர். அவர் ஹயக்ரீவ விக்ரகத் துக்கு கொள்ளு தானியத்தை நிவேதனம் செய்து வழிபட்டு, பின்னர் அந்தத் தட்டை எடுத்து தலைமேல் வைத்தபடி அமர்ந்து கொள்வார். அப்போது ஒரு குதிரை அங்கு தோன்றி அவர் தோள்களின்மேல் கால்களை வைத்துக் கொண்டு அந்த கொள்ளு தானியத்தை உண்டுவிட்டு மறைந்துவிடும். இவ்வாறிருக்கும்போது, வாதிராஜர்மேல் பொறாமைகொண்ட சிலர் கொள்ளில் விஷத்தைக் கலந்துவிட்டனர். இதையறியாத வாதிராஜர் வழக்கம்போல் ஹயக்ரீவ விக்ரகத்துக்கு நிவேதனம் செய்துவிட்டு, பின்னர் தட்டை தலைமேல் வைத்துக்கொண் டார். குதிரையும் தோன்றி கொள்ளைத் தின்று விட்டு மறைந்தது. சற்று நேரத்தில் பார்த்தால், பஞ்சலோகத்திலிருந்த ஹயக்ரீவ விக்ரகம் நீலநிறமாகிவிட்டதாம். விஷம் வைத்தவர்கள் உண்மையை உணர்ந்து அவரைப் பணிந்திட, மீண்டும் பழைய நிலையை அடைந்ததாம். அந்த ஹயக்ரீவ விக்ரகத்தை இன்றும் அவர்கள் மடத்தில் காணலாம்.

தத்தாத்ரேயர்


அத்திரி மகரிஷி- அனுசுயாதேவி தம்பதிக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்கள், இரு கால்கள் கொண்டவர். சங்கு, சக்கரம், உடுக்கை, திரிசூலம், தண்டம், கமண்டலம் போன்றவற்றை ஏந்தியவர். நந்தியை வாகனமாகக் கொண்டவர். அத்தி மரத்தின் கீழிருக்கும் இவரை பிரம்மா- விஷ்ணு- சிவரூப குரு என்று வடமாநிலங்களில் வழிபடுகின்றனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் தத்தாத்ரேய வழிபாடு பிரசித்தி பெற்றது.

சிவகுருநாதன்


தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் தன் தந்தையான சிவனுக்கே- ஆதிகுருவானவருக்கே பிரணவ உபதேசம் செய்தார். எனவே தகப்பன்சாமி, சுவாமிநாதன், குருகுகன், குமரகுருபரன் என்றெல்லாம் பெயர் பெற்றார். 

முருகப்பெருமான் பிரணவ உபதேசத்தை மூவருக்கு செய்தார் என்பர். பரமசிவன், அகத்தியர், அருணகிரிநாதர். முருகனடி யாரான அருணகிரிநாதர் சமரச தெய்வ வழிபாடு செய்பவர். ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயக் கடவுள்களையுமே- ஆறுமுகனை மையமாக வைத்து இணைத்துப் பாடினார்.