பஞ்ச புராணம்/தேவாங்க புராணம்

http://vivekaanandan.blogspot.in/2013/08/blog-post_8124.html

Monday, August 26, 2013

பன்னிரு திருமுறை (முழுமையும்)

திருமுறை தொகுப்பின் பெயர் அருளியவர்
1 திருக்கடைக்காப்பு திருஞான சம்பந்தர்
2
3
4 தேவாரம் திருநாவுக்கரசர்
5
6
7 திருப்பாட்டு சுந்தரர்
8 திருவாசகம் & திருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர்
9 திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்
10 திருமந்திரம் திருமூலர்
11 பிரபந்தம் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி
12 திருத்தொண்டர் புராணம் சேக்கிழார்
Share

No comments:

பஞ்ச புராணம்தேவாரங்கள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது

பாடப்பட்ட தலம் திருவாரூர்

கரையுங் கடலும் மலையும்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

தினம் ஒரு தேவாரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியதுபாடப்பட்ட தலம் திருத்துறையூர்

மத்தம் மதயா னையின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந் தெற்றி யோர்பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே
தினம் ஒரு தேவாரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது

பாடப்பட்ட தலம் திருத்துறையூர்

மத்தம் மதயா னையின்வெண் மருப்புந்தி

முத்தங் கொணர்ந் தெற்றி யோர்பெண்ணை வடபால்

பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்

அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே

(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே

திருவாசகம்

(6)
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே

(7)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே

திருவிசைப்பா

(8)

ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே
அளிவளருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே

(9)
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே

திருப்புராணம்

(10)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

திருப்புகழ்

ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

தினம் ஒரு தேவாரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியதுஎரியாப்புன் சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியாருஞ் சுடலைநகு வெண்டலை கொண்டவனே
கரியார் ஈரிஉரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தேம்
அரியாள்என் அமுதேஎனக்(கு) ஆர்துணை நீயலதே
தினம் ஒரு தேவாரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது

எரியாப்புன் சடைமேல் இளநாகம் அணிந்தவனே

நரியாருஞ் சுடலைநகு வெண்டலை கொண்டவனே

கரியார் ஈரிஉரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தேம்

அரியாள்என் அமுதேஎனக்(கு) ஆர்துணை நீயலதே

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

வாழ்க வளமுடன்

சிவபெருமானிடம் வரம்பெற்று அரண்மனை திரும்பிய புட்பதத்தன் தன் மனைவியிடம் அதைக் கூறி மகிழ்ந்தான். தான் பெற்ற வரத்தின்படி தன் மனைவி தேவதத்தையுடன் நாள்தோறும் பொழுது புலர்வதற்குமுன் கயிலைக்குச் சென்று, அம்மையையும் அப்பனையும் மலர் தூவி வழிபட்டு வந்தான்.

ஒருநாள் மாலை நந்தவனத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த புட்பதத்தன், அங்கு நறுமணம்மிக்க வண்ண மலர்கள் மலர்ந்திருப்பதைக் கண்டான். அவை வாடுவதற்குமுன் இறைவனின் திருவடிகளில் சேர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட, தன் மனைவியைக்கூட அழைக்காமல் தான்மட்டும் திருக் கயிலை சென்றடைந்தான்.

சிவபெருமான் வழக்கமாக பக்தர் களுக்குக் காட்சிதரும் இடத்தில் காணப்படவில்லை. அம்மையும் அப்பனும் ஓரிடத்தில் தனித்து உரையாடிக்கொண்டிருந்தனர். தேவி இறைவனிடம், “”பெருமானே, இதுவரை எவரும் கேட்டிராத கதை ஒன்றைக் கூறி அருளுங்கள்”

என  வேண்டினாள். இறைவனும் தேவி கேட்டவாறே யாரும் கேட்டிராத புதிய கதை ஒன்றைக் கூறிக்கொண்டிருந்தார். இறைவனின் வருகைக்காக மலர்களுடன் காத்திருந்த புட்பதத்தன் அக்கதையைக் கேட்க நேர்ந்தது.

அம்மையப்பனுக்காக நெடுநேரம் காத்திருந்த புட்பதத்தன் தான் கொய்து வந்திருந்த புது மலர்கள் வாடுவதைக் கண்டு மனம்வருந்தி சிவபெருமானை தரிசிக்க முடியாமல் அரண்மனைக்குத் திரும்பினான். வெளியே சென்றிருந்த தன் கணவன் வெகுநேரமாகியும் அரண்மனைக்குத் திரும்பாததால் கலக்கமடைந்திருந்த தேவதத்தை அவன்மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். அவளைச் சமாதானம் செய்வதற்காகப் பல வழிகளிலும் முயற்சித்து தோல்வியுற்ற புட்பதத்தன், தான் கயிலை சென்றிருந்ததையும், அங்கு இறைவனைக் காண காத்திருந்தபோது இறைவன் இதுவரை உலகம் அறிந்திராத புதுக்கதை ஒன்றை இறைவிக்குச் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்ததையும் தேவ தத்தையிடம் கூறினான்.

உடனே அவளது கோபம் தணிந்தது. உலகமே அறிந்திராத அந்தக் கதையைக் கேட்க ஆவல் கொண்டு, “”அதை எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டாள்.

தன் மனைவியை சமாதானப்படுத்த எண்ணிய புட்பதத்தன், தேவரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தெரிந்திருந்தும் பின்னால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவளிடம் சொன்னான். முதலில் மானிடன் ஒருவனுக்கு மட்டுமே தெரிந்திருந்த தேவ ரகசியம் தற்போது மானிடர் இருவருக்குத் தெரிந்த விஷய மாயிற்று.

மறுநாள் வழக்கம்போல் இருவரும் பூஜைப் பொருட்களுடன் கயிலை சென்றனர். புட்பதத்தனும் தேவதத்தையும் தனித்தனியே சிவன்- பார்வதி சந்நிதிகளுக்குச் சென்றனர்.

தேவியை வணங்கிய தேவதத்தை, எவரும் அறிந்திராத புதிய கதை ஒன்றைச் சொல்லப் போவதாகக் கூறி, முதல் நாள் தன் கணவன் கூறிய கதையை தேவியிடம் சொன்னாள்.

தேவதத்தை கூறிய கதையைக் கேட்ட தேவி திடுக்கிட்டாள்.

யாருமறியாத கதை என்று ஈசன் தன்னிடம் கூறிய அதே கதையை தேவதத்தையும் கூறியதால் மிகுந்த கோபம்கொண்ட தேவி சிவபெருமானிடம் சென்று, “”மானிடருக்கும் தெரிந்த ஒரு கதையை எவருமே அறிந்திராத புதுக்கதை என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டீர்களே?” என்று கோபித்துக் கொண்டாள். நடந்ததை அறிந்த சிவபெருமான் புட்பதத்தன் மீது கடுங்கோபம் கொண்டார். தன் தவறை உணர்ந்த புட்பதத்தன், “”பெருமானே, அடியேன் தங்களை வழிபட நேற்று மாலை வந்திருந்தேன். அப்போது தாங்கள் தேவிக்குக் கூறிக்கொண்டிருந்த கதையை வெளியில் காத்து நின்ற நான் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. அக்கதையை தேவதத்தைக்கு நான் கூறும்படி நேர்ந்துவிட்டது. அறியாமல் செய்துவிட்ட இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள்” என்று பணிந்து வேண்டினான்.

புட்பதத்தன்மீது கொண்டிருந்த கோபம் தணியாத சிவபெருமான், “”யாரும் அறியாது பிராட்டிக்கு யாம் சொன்ன மறைபொருளை மறைந்திருந்து கேட்டு பிறர் அறியும்படி கூறிய நீ வேதாளமாக மாறுவாய். தான் கேட்டதை மனஅடக்கமின்றி வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறக்கக்கடவது” எனச் சாபமிட்டார்.

ஈசன் தனக்கிட்ட சாபத்தால் பூவுலகிற்கு சில நன்மைகளும் கிட்டுமென்பதை உணர்ந்திருந்த புட்பதத்தன், தங்கள் இருவரையும் மன்னித்து சாப விமோசனம் அருளும்படி ஈசனை வேண்டினான்.

மனமிரங்கிய சிவபெருமான், “”அன்பனே, நீ பாடலிபுத்திரத்திற்கு அருகிலுள்ள காட்டில், ஒரு பெரிய முருங்கை மரத்தில் வேதாளமாக இருப்பாய். உன் மனைவி அதனருகில் இருக்கும்மற்றொரு காட்டில் பகலில் சுற்றித் திரியும் மானாகவும், இரவில் அழகான பெண்ணாகவும் மாறி யாழிசைத்து என்னைத் துதித்துக் கொண்டிருப்பாள். விக்கிரமாதித்த மன்னன் உங்கள் இருவரையும் சந்திக்கும்படிச்செய்யும் நாளில், நீங்கள் இருவரும் சாபம் நீங்கி உங்கள் சுய உருவம் பெற்று என்னை வந்தடைவீர்கள்” என சாபவிமோசனம் அருளினார்.

இறைவனிட்ட சாபத்தின்படி புட்பதத்தன் வேதாளமாக மாறி, பாடலிபுத்திரத்துப் பெருங்காட்டில் பேய்களுக்குத் தலைவனாய் முருங்கை மரத்தில் வசித்து வந்தான். தேவதத்தை மற்றொருகாட்டில் பகலில் மானாகவும், இரவில் பெண்ணாக மாறி யாழ் வாசித்துக்கொண்டும் இருந்தாள்.

கலியுக சகாப்தம் ஆரம்பமாகி சில ஆண்டுகள் கழிந்திருந்தன. வேதநாராயணபுரம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த விஷ்ணுசர்மன் என்ற அந்தணனுக்கு யக்ஞ நாராயணன், வேத நாராயணன், வீர நாராயணன், சந்திர சர்மன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

நால்வரில் சந்திரசர்மனைத் தவிர மற்ற மூவரும் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாய் பேரும் புகழும் செல்வமும் பெற்று சுகமாக வாழ்ந்து வந்தனர். அதிகம்  படிக்காத சந்திரசர்மன் தன் சகோதரர்களால் அடிமையைப்போல் நடத்தப்பட்டான். தன்னுடைய கல்வி அறிவின்மையையும் இயலாமையையும் குறித்து மிகவும் மனவருத்தமடைந்த சந்திரசர்மன், ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினான்.

நெடுந்தூரம் நடந்து சென்றவன் சூரிய அஸ்தமன நேரத்தில் ஒரு நதிக்கரையை அடைந்தான். அங்கு கை, கால்களைக் கழுவிக் கொண்டு அருகிலிருந்த  அரச மரத்தின் கீழே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டான்.

வெகுகாலமாக அந்த அரச மரத்தில் ஒரு அரக்கரிஷி வாழ்ந்து வந்தார். மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்த சந்திரசர்மனைக் கண்டு கீழிறங்கி வந்த அரக்கரிஷி அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்க, சந்திரசர்மனும் நடந்தவற்றைக் கூறினான்.

சந்திரசர்மனின் கல்வி கற்கும் ஆர்வத்தை அறிந்துகொண்ட அரக்கரிஷி, அவனுக்குக் கல்வி கற்றுத் தர எண்ணம் கொண்டார்.

“”சந்திரசர்மா, ஆறு மாதகாலம் நீரும் உணவுமின்றி இந்த மரத்தடியில் நீ தவம் மேற்கொள்ள வேண்டும். அதை வெற்றிகரமாய் முடித்துவிட்டால் அதன் பின் உனக்கு யானறிந்த கல்வியைக் கற்பிப்பேன்” என்று கூறி, தவமியற்றும் போது ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் அவனுக்கு கற்றுக்கொடுத்தார்.

அதன்படியே சந்திரசர்மன் நீரும் உணவு மின்றி தவத்தில் ஆழ்ந்தான். ஆறு மாதங்கள் கடந்தன. அவன் கல்வி கற்பதற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டான் என்பதை உணர்ந்த அரக்கரிஷி,அரசமரத்தின் மேலிருந்து தான் கற்றவற்றை இலைகளில் எழுதிப்போட ஆரம்பித்தார்.

அவற்றை எடுத்துப் படித்துவந்த சந்திரசர்மன் கல்வியறிவு பெற்றவன் ஆனான்.

தனக்கு அறிவு புகட்டிய அரக்கரிஷிமீது சந்திரசர்மனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவருக்கு நன்றி தெரிவித்த சந்திர சர்மன், “”குருவே, அற்புதமாய் கலைகள், சாஸ்திரங்
கள் ஆகியவற்றைக் கற்பிக்கும் தாங்கள் அரக்க ரிஷியாய் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

“”சந்திரசர்மா, கிருஷ்ணா நதிக்கரையில் சரஸ்வதிபுரம் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தநான் அனைத்துக் கலைகளையும் கற்றுச் சிறந்த மேதையாகத் திகழ்ந்தேன். ஒருநாள் எனக்கு அறிமுகமில்லாத அந்தணன் ஒருவன் என்னிடம் வந்து தனக்கு வேத சாஸ்திரங்களைக் கற்பிக்கும்படி கேட்டான். எனக்கிருந்த கல்விச் செருக்கால் அவனது வேண்டுகோளை நிராகரித்து விட்டேன். ஆனால் வந்தவர் யார் தெரியுமா? சாட்சாத் சிவ பெருமானேதான். தான் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தர மறுப்பது அந்தண குலத்துக்கே அவமானம் என்று உணர்த்திய சிவபெருமான், என்னை அரக்கனாகும்படி சபித்துவிட்டார். நான் இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றபோது, கல்வி கற்க விரும்பும் அந்தணன் ஒருவனுக்கு குறைவறக் கல்வி கற்பித்து அவனது  கல்வி முழுமை அடையும் நாளில் என் சாபம் நீங்கும் என்றும்; அப்போது விண்ணுலகம் செல்ல விமானம் வரும் என்றும் இறைவன் கூறியருளினார். அந்த நாள் உன் கல்வி அறிவு முழுமை பெற்ற இந்த நாள்தான்” என்று அரக்கரிஷி கூறிக் கொண்டிருக்கும்போதே விண்ணுலகிலிருந்து விமானம் இறங்கிவர, சாபம் நீங்கிய அரக்கரிஷி அதில்  ஏறி விண்ணுலகம் சென்றார்.

கல்வியறிவு நிரம்பப் பெற்ற ஒருவன் தான் பெற்ற கல்வியைப் பிறருக்கு அளிக்கமறுப்பதுஅரக்கத்  தன்மைக்கு ஒப்பானது எனும் கருத்தையே இதன்மூலம் இறைவன் உலகுக்கு உணர்த்தியுள்ளார் என்று எண்ணியபடியே சந்திரசர்மன் தன் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டான். சில காத தூரம் நடந்து சென்ற சந்திரசர்மன் மிகவும் களைப்பாக இருப்பதை உணர்ந்தான். ஆறு மாதகாலம் ஊண், உறக்கமின்றி இருந்த சந்திரசர்மன் எங்காவது ஓரிடத்தில் தங்கி, உண்டு உறங்கிச் செல்லலாம்  என எண்ணினான். கன்னியாபுரம் என்ற நகரில் சென்றுகொண்டிருந்தவன் களைப்பு மிகுதியால்  சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கினான்.

அந்த வீடு சௌந்தரவல்லி என்ற தேவதாசிக்குச் சொந்தமானது. தன் வீட்டுத் திண்ணையில் இளைஞன் ஒருவன் படுத்துறங்குவதைக் கண்ட சௌந்தரவல்லி, அவனது அழகில் மயங்கி அவனையே திருமணம் செய்துகொள்ள  வேண்டுமென விரும்பினாள். நீண்ட நேரம் கண் விழிக்காமல் படுத்திருந்த சந்திரசர்மன் அருகில் சென்று பார்த்த சௌந்தர வல்லி, அவன் மயங்கிய நிலையில் உணர்வின்றி இருப்பதைக் கண்டாள்.

உடனே தன் தாயை அழைத்த சௌந்தரவல்லி விஷயத்தைக் கூறினாள். பார்த்த சௌந்தரவல்லியின் தாய் சந்திரசர்மனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதைக் கண்டு, உடனே அவனுக்கு சிகிச்சை செய்யாவிட்டால் அவன் உயிர் பிழைப்பது கடினம் என்பதையும் உணர்ந்துகொண்டாள். அந்நகரத்து மன்னன் சுருதகீர்த்தியிடம் விரைந்து சென்று விவரத்தைக் கூறினாள். அவள் கூறியதைக் கேட்ட மன்னன் உடனே அரண்மனை வைத்தியர்களை அவளுடன் அனுப்பி வைத்தான்.

சௌந்தரவல்லியின் வீட்டுக்கு வந்த வைத்தியர்கள் அவன் உடலைப் பரிசோதித்தபோது அவனுடைய அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டதையும், மூச்சு மட்டும் இருப்பதையும் கண்டனர். “ஒரு படி அரிசி சாதத்தையும், ஒரு படி நெய்யையும் ஒன்றாகக் கலந்து, மூன்று வேளையும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒத்தடம் கொடுத்தால் மயிர்க்கால்கள் வழியாக ஆகாரம் உட்சென்று உணர்வைக் கொடுக்கும்; அவன் உயிர்பிழைப்பான்’ என்று வைத்தியர்கள் கூறினர். அதன்படி சௌந்தரவல்லி சந்திரசர்மன் அருகிலேயே இருந்து வைத்தியர் கூறியபடி அன்னமும் நெய்யும் கலந்து ஒத்தடம் கொடுத்துவந்தாள்.

ஏற்கெனவே சந்திரசர்மனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்துகொள்ள ஆவல்கொண்டிருந்த சௌந்தரவல்லிக்கு, சில நாட்களாக அவனருகில் இருந்து சிகிச்சை செய்துவந்ததால் அவனிடம் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. தனக்குத் திருமணமென்று நடந்தால் அது இவனோடு மட்டும்தான் என்று உறுதிகொண்ட அவள் தன் எண்ணத்தை தாயிடம் தெரிவித்தாள்.

தேவதாசி குலத்தைச் சேர்ந்த பேரழகியான தன் மகளுக்கு செழிப்பான வாழ்க்கையைஅமைத்துத் தர எண்ணியிருந்த சௌந்தரவல்லியின் தாய், தன் மகள் யாரோ ஒரு வழிப்போக்கனை விரும்புவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு உடன்பட மறுத்தாள். ஆனால் சௌந்தரவல் லியோ, “”நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால் நான் மரணமடைவதைத் தவிர வேறு வழி யில்லை” என்றாள். மகளின் விபரீத முடிவைக் கேட்டு அதிர்ந்த அவளது தாய் திருமணத்திற்கு சம்மதித் தாள்.

சௌந்தரவல்லி அளித்துவந்த இடைவிடாத சிகிச்சையால் சந்திரசர்மன் விரைவில் குண மடைந்து கண்விழித்தான். அதுவரை நடந்தது எதுவுமே அறியாதவனாய் தூக்கத்திலிருந்து விழித்தவனைப்போல் எழுந்து எவரிடமும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டான்.

சந்திரசர்மனைத் தடுத்து நிறுத்திய சௌந்தர வல்லி அவன் மயங்கிய நிலையில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்ததையும், அரண்மனை வைத்தியரை அழைத்துவந்து காட்டி அவர் கூறியபடி சிகிச்சை அளித்து அவனைக் காப்பாற்றியதையும் அவனிடம் கூறினாள். தன் உயிரைக் காப்பாற்றிய சௌந்தரவல்லிக்கு  நன்றி கூறிய சந்திரசர்மன் மீண்டும் அங்கிருந்து புறப் படத் தயாரானான்.

சந்திரசர்மன்மீது விருப்பம் கொண்டிருந்த சௌந்தரவல்லி அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டினாள். தேவதாசி குலத்தைச் சேர்ந்த சௌந்தரவல்லியை அவன் திருமணம் செய்துகொள்ள சாஸ்திரங்கள் அனுமதிக்காது என்று கூறி, சந்திரசர்மன் மறுத்துவிட்டான்.

அதைக்கேட்டு மிகுந்த கோபமடைந்த சௌந்தரவல்லி, “”உங்களை என் கணவனாக எப்போதோ தீர்மானித்துவிட்டேன். நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. இந்தப் பிரச்சினைக்கு என்னுடைய மரணம்தான் தீர்வாக இருக்கும் என்றால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றாள்.

இந்த ஒருதலைக்காதல் வெற்றியடைந்ததா? இதற்குத் தடையாக இருந்த சாஸ்திர சம்பிரதாயங்களுக்குப் பரிகாரம்தான் என்ன?6

ஞ்சகனான வித்தையுத்சேனன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி ஆமோத நகர் சென்றான். தேவாங்க மன்னனின் திருமுன் நின்று அவரைப் பணிந்து வணங்கி, “”பேரரசே, தங்களிடம் தோற்றோடிய வச்சிரதந்தன் மீண்டும் பெரும்படையுடன் வந்து அமராவதி நகரை முற்றுகையிட்டுப் போர் புரிகிறான். தேவர்கள் அவனை எதிர்த்து நிற்கமுடியாமல் தோல்வியுற்று ஓடி ஒளிகிறார்கள். விடைக் கொடியினாலன்றி வேறு எதனாலும் அரக்கர்களை வெல்லமுடியாது என்பதால், தங்களி டமிருந்து விடைக்கொடியைப் பெற்றுவர தேவேந்திரன் என்னை அனுப்பியுள்ளார். தாங்கள் அருள்கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவுங்கள்” என வேண்டினான்.

அவன் கூறியதை உண்மையென்று நம்பிய தேவாங்கர் விடைக்கொடியை அவனிடம்கொடுத்து, அதைப் பயன்படுத்தும் முறையையும் கூறி அனுப்பி வைத்தார். தேவாங்கரிடமிருந்து கொடியைப் பெற்றுக் கொண்ட வித்தையுத்சேனன் அதை வச்சிர தந்தனிடம் சேர்ப்பித்தான். அரக்கமன்னன் வச்சிரதந்தன் அக்கொடியுடன், தன் படைகளைத் திரட்டிக்கொண்டு அமராவதி நகர் சென்று தேவர்களுடன் போரிட்டான். அரக்கர்களுடைய படை பலத்தையும், அவர்கள் ஆவேசத்துடன் போர்புரிவதையும் கண்ட தேவேந்திரன்,

அவர்களை வெல்ல வேண்டுமானால் அது தேவாங்க மன்னனிடம் இருக்கும் விடைக்கொடியினால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து, தனக்கு உதவி செய்ய வருமாறு தேவாங்க மன்னனுக்கு தூதனுப்பினான்.

தூதுவர் மூலம் செய்தியறிந்த தேவாங்கர், நேற்று நாம் அனுப்பிய விடைக்கொடியிருக்க இன்று நம்மை ஏன் உதவிக்கு அழைக்கிறான் என்று ஐயுற்று, ஏதோ சூது நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். எந்தவித ஏற்பாடுமின்றி அமராவதி நகர் சென்ற தேவாங்கருக்கு அரக்கர்களின் கபட நாடகம் தெரியவந்தது. தான் அரக்கர்களால் ஏமாற்றப் பட்டதை அறிந்து வருந்தினார். கொடியைப் பயன்படுத்தி வச்சிரதந்தன் தேவர்களை வீழ்த்தினான். தேவாங்கரை சிறைப்பிடித்து மிகவும் துன்புறுத்தி வீரமகேந்திரபுரிக்கு அழைத்துச் சென்றான்.

இதுவரை போர்களில் வீழ்ச்சியே கண்டிராத தேவாங்கர் அரக்கர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதை எண்ணி வருந்தினாலும், “நீ ஒருநாள் பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புறுவாய்’ என்று முன்னொரு நாள் அரம்பை தனக்கிட்ட சாபம் தற்பொழுது நிறைவேறிவிட்டதை உணர்ந்து அமைதி கொண்டார்.

தேவாங்கரை கைதியாக அழைத்துவந்த வச்சிரதந்தன் அவரது தெய்வீக தோற்றத்தைக் கண்டு மெல்ல மெல்ல மனம் மாறினான். அவர்மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தேவாங்கரை சிறைப்பிடித்து அழைத்து வந்தது தவறென்பதை உணர்ந்துகொண்ட வச்சிரதந்தன் அவரை விடுவித்து, தான் அவருக்கிழைத்த துன்பங்களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டான். தன் தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தன் மணிமகுடத்தையே அவருக்குச் சூட்டி, அவரை வீரமகேந்திரபுரி மன்னனாக்கினான். நடப்பவை அனைத்தும் ஈசன் செயலன்றி வேறெதுவுமில்லை என்றெண்ணிய தேவாங்கர், வச்சிரதந்தனுடைய நட்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

வீரமகேந்திரபுரியில் நல்லாட்சி செய்து கொண்டிருந்த தேவாங்கருக்கு தன் மகள் பத்மினியைத் திருமணம் செய்துகொடுக்க விரும்பிய வச்சிரதந்தன், தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். அரக்கர் தலைவரின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதே ஒரு மன்னனின் கடமை என்பதை தேவாங்கர் அறிந்திருந்தாலும், அரக்கர்குலப் பெண்ணைத் தான் மணப்பதை உலகம் ஏற்றுக்கொள்ளுமா எனத் தயங்கினார். தேவாங்கரது தயக்கத்தை உணர்ந்ததுபோல அக்னி தேவன் அவர்முன் தோன்றி, “”மன்னனே, பத்மினி என் மகள். அக்னிதத்தை என்பது அவள் பெயர். என்னுடைய நண்பனான வச்சிரதந்தனுக்குப் பெண் குழந்தை இல்லாததால், அவனுக்கு அக்னி தத்தையை வளர்ப்பு மகளாகக் கொடுத்தேன்.  அவன் அவளுக்கு பத்மினி என்று பெயரிட்டுத் தன் மகளாக வளர்த்து வருகிறான். தாங்கள் தயக்கமின்றி அவளை மணந்துகொள்ளலாம்” என்று கூறினான்.  பிறகென்ன? தேவர்கள் வாழ்த்த தேவாங்கர்- அக்னிதத்தை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அவர்கள் இல்லறத்தின் பயனாக அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை கள் பிறந்தன.

தன் புதல்வர்களான சாலன், அலன், பெலன் ஆகிய மூவருக்கும் தேவாங்கர் தனதுகுலத்தொழிலான நெசவுக்கலையைக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் மூவரும் அழகிய ஆடைகள் செய்து அரக்கர் குல மக்கள் அனைவருக்கும் வழங்கினர். அரக்கர்கள் தேவாங்கரையும், அவரது புதல்வர்களையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

வீர மகேந்திரபுரியை விட்டு ஆமோத நகர் செல்ல விரும்பிய தேவாங்கர் தன் விருப்பத்தை வச்சிரதந்தனிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட வச்சிரதந்தன், அவரிடமிருந்து தான் வஞ்சகமாக அபகரித்து வந்த விடைக்கொடியுடன் பரிசுப் பொருட்கள் பலவற்றையும் அளித்து விடை கொடுத்தனுப்பினான். தனக்கும் அரக்கர் குல மன்னனின் வளர்ப்பு மகள் பத்மினிக்கும் திருமணம் நடப்பதன் மூலம், அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் இருந்துவந்த பகைமை மறைந்து, அவர்களுக்குள் நல்லுறவு ஏற்படுத்த தன்னைக் கருவியாக்கிக் கொண்ட இறைவனை வணங்கிய தேவாங்கர், இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்தப் பிறவியில் தன் கடமைகளை நிறைவாகச் செய்து முடித்த மகிழ்ச்சியிலிருந்த தேவாங்கருக்கு அடுத்த பிறவி காத்திருந்தது.

வித்யாதர உலகில் வாழும் விஞ்சையர்கள் அனைவரும் அறுபத்து நான்கு கலைகளையும் எந்தக் குறையுமின்றி கற்றுக்கொள்ள விருப்பம் கொண்டனர். அதற்காக திருக்கயிலை சென்று சிவபெருமான் திருமுன் நின்று வணங்கி, “”பெருமானே, தங்கள் அருளால் நாங்கள் ஆயகலைகள் அறுபத்து நான்கில் பலவற்றைக் கற்றிருக்கிறோம். மீதமுள்ள கலைகளையும் குறைவறக் கற்க விரும்புகிறோம். எங்களுக்கு அக்கலைகளைக் கற்பிக்க நல்லாசிரியர் ஒருவரைத் தந்தருள வேண்டும்” என வேண்டிக்கொண்டனர்.

வித்யாதரர்களின் குறை தீர்க்க திருவுளம் கொண்ட சிவபெருமான், “”உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச் சாரலில் எம்மை நோக்கித் தவம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு யாம் ஒரு மகனை அருள்வோம். நீங்கள்  விரும்பியபடி அவன் உங்களுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக” என்று கூறி அருளினார்.

சிவபெருமான் தேவாங்கரை மனதில் எண்ணினார். ஈசனின் அழைப்பை உணர்ந்த தேவாங்கர் கயிலை சென்று சிவபெருமான் திருமுன் வணங்கி நின்றார். ஈசன் தேவாங்கரை நோக்கி, “”தேவலனே, நீ மேருமலைச் சாரலில் தவம்செய்து கொண்டிருக்கும் ஏமவருணன்முன் குழந்தையாகத் தோன்றி, வளர்ந்து, வித்யாதரர்களுக்கு அவர்கள் விரும்பியபடி அறுபத்து நான்கு கலைகளையும் கற்பிப்பாயாக” என்று பணித்தார்.

ஈசனின் அருட்கட்டளையை ஏற்று ஆமோத நகர் திரும்பிய தேவாங்கர் தன் புதல்வர்களிடம் ஈசன் தனக்கிட்டுள்ள பணியினையும், அதை நிறைவேற்றுவதற்காகப் பிரிந்து செல்லவேண்டியிருப்பதையும், நாட்டு மக்கள் நலன் கருதி அவர்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றியும் அறிவுரைகள் வழங்கி, தன் மனைவி யருக்கும் சமாதானம் கூறி, தனது தூல உடலை சிவலிங்க வடிவில் ஆமோத நகரில் விட்டுவிட்டு இறைவன் கட்டளையை நிறைவேற்ற விண்ணுலகம் சென்றார்.

தேவாங்கரின் மூத்த குமாரன் திவ்யாங்கன் தந்தையின் லிங்க வடிவம் இருந்த இடத்தில் கோவில் ஒன்றை எழுப்பி தினசரி தவறாமல் பூஜைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தான். தன் சகோதரர்கள் துணையுடன் ஆமோத நகரை நீதி வழுவாமல் நல்லாட்சி செய்துவந்தான்.

வித்யாதர உலகம் சென்ற தேவாங்கர் தவம்செய்துகொண்டிருந்த ஏமவருணன் முன்பு குழந்தையாகத் தோன்றினார். தவம் கலைந்து எழுந்த ஏமவருணன் தன் முன்னே அழகிய ஆண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான். சிவபெருமான் அருளால்தான் அக்குழந்தை தனக்குக் கிடைத்தது என்றெண்ணி குழந்தையைத் தன் மனைவியிடம் எடுத்துச் சென்றான். குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்த ஏமவருணனின் மனைவி சந்திரமுகி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். குழந்தைக்கு கமலாட்சன் என்று பெயரிட்டு அதை அன்புடனும் பண்புடனும் வளர்த்தனர்.

வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷத்துகள், கலைகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றுசகலகலா வல்லவனாக விளங்கிய கமலாட்சன், இயல்பாகவே தெளிந்த அறிவும், சொல்வண்மையும் பெற்றிருந்தான். இறைவனின் ஆணைப்படி வித்யாதரர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் நிறைவாகக் கலைகளைக் கற்பித்தான்.

ஈசன் தனக்கிட்ட பணியைச் சரிவரச் செய்துமுடித்து, தான் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட திருப்தியுடன் கமலாட்சன் என்ற தேவாங்கர் மீண்டும் திருக்கயிலை சென்றார்.

ஈசனைப் போற்றி வாழ்த்திப் பாடுதலையும், யாழிசை மீட்டுதலையும் தன் பணியாகக் கொண்டிருந்தார்.

சிவபெருமானும் பார்வதிதேவியும் கமலாட்சனின் இனிய இசையை விரும்பிக் கேட்டுரசித்தனர். கமலாட்சனின் தெய்வீக இசை கேட்டு கயிலையில் இருந்த அனைத்து உயிரினங்களும் மயங்கிச் செயல் மறந்து நின்றன. இசைப் பணியைத் தொடர்ந்தபடி, அவர் பல புதிய பாடல்களையும், நல்ல நூல்களையும் இயற்றி, அவற்றை சிவபெருமான் முன்பாக அரங்கேற்றம் செய்தார். இறைவனைப் பாடித் துதித்துவந்த கமலாட்சனுக்கு அடுத்த பணி காத்திருந்தது.

காந்தார நாட்டு கனகமாபுரத்தை சுருதகீர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அந்நகருக்கு அருகிலுள்ள சோலை ஒன்றில் வசித்துவந்த கோரன் என்ற அரக்கன் நகருக்குள் புகுந்து மன்னனையும் மக்களையும் மற்ற உயிரினங்களையும் துன்புறுத்தி வந்தான். அவனைஎதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாத மன்னன், அமைதியான சோலை ஒன்றில் அமர்ந்துசிவபெருமானை எண்ணித் தவத்தில் ஈடுபட்டான். அவனது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவன்முன் காட்சியளித்து “”வேண்டும் வரம் யாது?” என்று வினவினார்.

“”பெருமானே, என் நாட்டிற்குள் நுழைந்து என்னையும், என் நாட்டு மக்களையும் துன்புறுத்திவரும் அரக்கனிடமிருந்து எங்களைக் காப்பாற்றி அருளுங்கள்” என ஈசனிடம் வேண்டிக்கொண்டான் மன்னன்.

அவனது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், “”அரக்கனை வெல்லும் ஆற்றல் கொண்ட மகன் ஒருவனை உனக்கு யாம் அருளுவோம். அவன் உன்னையும், உன் நாட்டு மக்களையும் காப்பாற்றுவான்” என்று வரமருளி மறைந்தார்.

கமலாட்சனை குறிப்பால் உணர்த்தி அழைத்த சிவபெருமான், “”நீ கனகமாபுரத்து மன்னன்சுருதகீர்த்திக்கு மகனாகப் பிறந்து, அந்நாட்டு மக்களைத் துன்புறுத்தி வரும் கோரன் என்னும் அரக்கனைக் கொன்று அவர்களைக் காப்பாற்றுவாயாக” எனப் பணித்தார்.

சிவபெருமானின் ஆணைப்படி கமலாட்சன் சுருதகீர்த்தியின் மகனாக அவதரித்தான். அவனுக்குப் புட்பதத்தன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். உரிய வயதில் கல்வி கற்பதற்காக அவனை ஒரு குருபீடத்திடம் ஒப்படைத்தனர். முற்பிறவிகளின் தேவாங்கரின் அம்சமும், வித்யாதர அம்சமும் கொண்டிருந்த புட்பதத்தன், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்துவிளங்கினான். கல்வி ஞானம் பெற்று அரண்மனை திரும்பிய புட்பதத்தனுக்குத் திருமணம் செய்து வைக்க மன்னன் சுருதகீர்த்தி முடிவு செய்தான்.

சிந்து தேச மன்னன் விருபாட்சன். அவன் மனைவி கீர்த்தசாலி. ஈசனின் திருவுளப்படி முற்பிறவியில் தேவாங்க மன்னனின் மனைவியாக இருந்த தேவதத்தையே இவர்களுக்குப் பெண் மகவாய்ப் பிறந்திருந்தாள். குழந்தைக்கு என்ன பெயரிடலாம் என மன்னனும் மற்றவர்களும் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது “தேவதத்தை எனப் பெயரிடுங்கள்’ என்று வானிலிருந்து அசரீரி ஒலித்தது. இறைவனின் ஆணையாக அதை ஏற்று குழந்தைக்கு தேவதத்தை எனப் பெயரிட்டு வளர்த்தனர். புட்பதத்தனுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்த சுருதகீர்த்தி தன் மகனுக்கு ஏற்ற அறிவும் அழகும் கொண்ட மணமகளைத் தேடினான். சிந்து தேச மன்னனின் மகளான தேவதத்தை தன் மகனுக்கு ஏற்றவள் என்பதை அறிந்தான். அனைவரும் சம்மதிக்க, அவர்கள் இருவருக்கும் நல்லதொரு நாளில் முறைப்படி திருமணம் செய்துவைத்தான். முன்னொரு பிறவியில் தேவாங்கர்- தேவதத்தையாய் இணைந்திருந்த இருவரும் இப்பிறவியில் புட்பதத்தனும், தேவதத்தையுமாய் அவதரித்து இல்லறத்தை இனிதாய் நடத்தி வந்தனர்.

புட்பதத்தன் அவதார நோக்கத்தின் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த மன்னன் சுருதகீர்த்தி, தன் மகனை அழைத்து கோரன் என்ற அரக்கனைப் பற்றியும் அவன் தொடர்ந்து நாட்டு மக்களைத் துன்புறுத்தி வருவதையும் அவனுடைய தொல்லைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கூறினான். தந்தையின் சொல்படி பெரும்படையுடன் சென்ற புட்பதத்தன் அரக்கர்களுடன் போரிட்டான். இருவருக்குமிடையே கடும் போர் நடந்தது. முடிவில் புட்பதத்தன் தனது பாணங்களால் அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். வெற்றிபெற்று நாடு திரும்பிய புட்பதத்தனை மன்னனும் மக்களும் ஆரவாரத்துடன் வரவேற்று வாழ்த்திப் பாராட்டினர். அதன்பின் நாட்டு மக்கள் எந்தக் குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

தவ வாழ்க்கையில் ஈடுபட எண்ணம் கொண்ட மன்னன் சுருதகீர்த்தி, புட்பதத்தனுக்கு முடிசூட்டி அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வனம் சென்று தவம் மேற்கொண்டான்.

மக்களுக்கு நிறைவான நல்லாட்சி வழங்கிய புட்பதத்தன் நாடு முழுவதும் சிவாலயங்கள் எழுப்பி, நந்தவனங்கள் அமைத்து சிவவழிபாடு சிறந்தோங்கச் செய்தான். சிவவிரதங்களுள் முதன்மையான சிவராத்திரி விரதத்தை ஆகம முறைப்படி கடைப்பிடித்து வந்த புட்பதத்தன், நாட்டு மக்களையும் அவ்விரதத்தை மேற் கொள்ளச் செய்தான்.

ஒரு சிவராத்திரி நாளன்று புட்பதத்தன் செய்த பூசனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்து அவனுக்கு விரும்பும் வரம் தருவதாகக் கூறினர். புட்பதத்தன், “”ஐயனே, நானும் எனது மனைவியும் தினந்தோறும் தவறாமல் திருக்கயிலை வந்து தங்களையும், அம்மை பார்வதிதேவியையும் கண்டு தரிசித்து வழிபாடு செய்யவேண்டும். அதற்குத் தாங்கள் அருள்புரிய வேண்டும்” என வேண்டிக் கொண்டான்.

சிவபெருமானும் அவ்வாறே அருளினார்.

தான் விரும்பிய வரம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த புட்பதத்தனுக்கு அந்த மகிழ்ச்சி நிலைத்ததா? புட்பதத்தன் பெற்றது வரமா? சாபமா?

(தொடரும்)

தேவலர் சகர நாட்டின் தலைநகரான ஆமோத நகரை நல்லாட்சி செய்து வந்தார். சிவபெருமான் தான் முடிவு செய்திருந்தபடி தேவலர்- தேவதத்தை திருமணத்தை நடத்த திருவுளம் கொண்டு சப்தரிஷிகளை மனதில் எண்ணினார். ஈசனின் உளக்குறிப்பை உணர்ந்த முனிவர்கள் சிவபெருமான் முன்பு சென்று அவர் திருவடிகளை வணங்கி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை நோக்கி, “”முனிவர்களே, தேவாங்கனுக்கு சூரியதேவனின் தங்கை தேவதத்தையை மணம் முடிக்க எண்ணியுள்ளோம். நீங்கள் சூரிய லோகம் சென்று, சூரிய தேவனிடம் திருமணத்திற்கு ஒப்புதல் பெற்று முகூர்த்த நாளையும் குறித்து வாருங்கள்” என்று கூறினார்.

முனிவர்கள் சிவபெருமானை வணங்கி விடை பெற்று சூரிய லோகம் சென்றனர். தங்களை சிறப்பாக வரவேற்று உபசரித்த சூரியனிடம், தாங்கள் வந்த விவரத்தை முனிவர்கள் கூறினர். “இத்திருமணம் நடைபெறுவது எனது பாக்கியமே’ என்று கூறி தனது

ஒப்புதலைத் தெரிவித்த சூரிய தேவன், முகூர்த்த நாள் குறிக்க முனிவர்களை பிரம்ம தேவனிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் பிரம்மதேவனை வணங்கி விவரத்தைக் கூற, அவர்கள் வேண்டுதலை மகிழ்வுடன் ஏற்று, வைகாசி மாதம், பூர்வ பட்சம், சப்தமி திதி, புதன்கிழமை ஆறு நாழிகைக்குமேல் முகூர்த்த நாள் என்று குறித்துக் கொடுத்தார் பிரம்மா.

அதன்பின் முனிவர்கள் கயிலை சென்று, சூரியதேவன் ஒப்புதல் அளித்ததையும், தாங்கள் முகூர்த்த நாள் குறித்து வந்திருப்பதையும் சிவபெருமானிடம் கூறி, தாங்கள் கொண்டு வந்திருந்த முகூர்த்த ஓலையை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

சூரிய தேவன் தனது அமைச்சர் வீரமார்த்தாண் டனை அழைத்து, திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறித்திருக்கும் செய்தியை ஆமோத நகர மன்னனும் மணமகனுமான தேவலரிடம் தெரிவித்து, மண விழாவிற்குத் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சூரிய லோகம் வருமாறு அழைப்பு விடுத்து வரும்படி அனுப்பினார். அதன்படியே அமைச்சர் ஆமோத நகர் சென்று தேவல மன்னனிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு சூரிய லோகம் திரும்பினார்.

சூரிய லோகத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன. சூரிய தேவன் தூதுவர்கள் மூலம் சிவபெருமான், திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பினார். திருமணம் குறித்து தேவலர் மூவுலகத்தார்க்கும் திருமுகம் அனுப்பி அழைப்பு விடுத்தார்.

தேவலருடன் திருமணத்திற்குச் செல்ல பலநாட்டு மன்னர்களும் ஆமோத நகர் வந்தடைந்தனர். மன்னர்கள் புடைசூழ, மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவலர் தேரில் அமர்ந்து சூரிய லோகம் சென்றார்.

மும்மூர்த்திகள் முதல் தேவர்கள், ரிஷிகள், மன்னர்கள் என பலரும் திருமணத்திற்குத் திரண்டு வந்திருந்தனர்.

சூரிய தேவன் மணமகனைத் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தார். தேவ மாதர்கள் புடைசூழ தேவதத்தையும் அழைத்து வரப்பட்டாள். மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் ஈடுகொடுப்பதுபோல் அழகிய தோற்றத்தினராய் காட்சி அளித்தனர்.

மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத கீதங்கள் இசைக்க, குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் தேவதத்தைக்கு தேவலர் மங்கலநாண் பூட்டினார்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை மலர் தூவி வாழ்த்தினர்.

திருமணம் முடிந்தபின் சூரிய தேவன் அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்து விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையும், ரத்தினப் பேழையில் தாம்பூலமும் கொடுத்து விடை கொடுத்தனுப்பினார்.

தேவாங்க மன்னர் தான் கொண்டு வந்திருந்த ஆடைகளை மும்மூர்த்திகள், அவர்களின் தேவியர், தேவர்கள், மன்னர்கள் என வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் மனம் மகிழ வழங்கினார். கால பைரவருக்கும் ஒரு அழகிய ஆடையை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து, “”எல்லாருக்கும் நல்ல அழகிய ஆடைகளைக் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் மீதமிருந்த கிழிசல் ஆடையைக் கொடுத் திருக்கிறாயே” என்று கூறி அதைக் கிழித்தெறிந்துவிட்டு, “”எனக்கு வேறு ஒரு நல்ல ஆடை கொடு” என்று கேட்டார்.

அன்புடன் தான் அளித்த ஆடையை காலபைரவர் கிழித்தெறிந்ததால் வருத்தமடைந்த தேவலர் பைரவருக்கு வேறு ஆடை தர மறுத்துவிட்டார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தேவலர் தனக்கு நல்ல ஆடை கொடுக்க மறுக்கும் விவரத்தைக் கூறினார்.

சிவபெருமான் தேவலரை அழைத்து நடந்தவற்றைக் கேட்டறிந்து, கால பைரவர்மீது கோபம்கொண்டு, “”உனக்குக் கொடுத்த ஆடையை மதிக்காமல் அதை நீ கிழித்தெறிந்துவிட்டாய். எனவே இனிமேல் நீ கிழிந்த ஆடைகூட இல்லாமல் நிர்வாணமாய் இருக்கக்கடவது” எனச் சபித்தார். சாபம் பெற்ற பைரவர் மனம் வருந்தி திருமண மண்டபத்தை விட்டுத் தன் இருப்பிடம் சென்றார்.

திருமணத்திற்குப்பின் சில நாட்கள் தேவலரும் தேவதத்தையும் சூரியலோகத்தில் விருந்தினராய் இன்புற்றிருந்தனர். அதன்பின் தேவலர் தன்னுடன் வந்திருந்த மன்னர்களும், படைகளும் புடைசூழ தேவதத்தையை அழைத்துக்கொண்டு ஆமோத நகரம் சென்றார். மணமக்களுக்கு நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்து மகிழ்ந்தனர். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஈடுபட்டார் தேவலர். மக்கள் தத்தம் நெறியில் நின்றொழுகினர். முப்பத்திரண்டு அறங்களும் செழித்தன. சிற்றரசர்கள் செலுத்திய திரை நாட்டை வளம் கொழிக்கச் செய்தது.

தேவதத்தைக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் என பெயர் சூட்டி, உரிய வயதில் அனைத்துக் கலைகளையும் கற்பித்தனர். அவர்கள் வாலிப வயதை எட்டியதும், சூரிய தேவனின் புதல்விகள் மூவரையும் மணம் முடித்தனர். திவ்யாங்கன் பிரபையையும், விமலாங்கன் பத்மாட்சியையும், தவளாங்கன் கமலாட்சியையும் மணந்தனர். தேவாங்க மன்னர் தன் மூத்த புதல்வன் திவ்யாங்கனுக்கு முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்.

தேவாங்கரின் நாகலோக மனைவி சந்திரரேகைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தனர். சுதர்மன் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று வல்லவனாகத் திகழ்ந்தான். அச்சமயத் தில் சூசைத்தீவை ஆண்ட மன்னன் சூரசேனன் ஆமோத நகர்மீது படையெடுத்து வந்தான். தேவாங்கர் பெரும்படையுடன் சென்று சூரசேனனைக் கொன்று சூசைத்தீவைக்  கைப்பற்றி அந்நாட்டிற்கு தன் மகன் சுதர்மனையே மன்னனாக்கினார். சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னன் மகள் புட்கலையைத் திருமணம் செய்து வைத்தார். புதல்வர்களின் ஆட்சியின்கீழ் நாடு செழிப்புற, தேவாங்கர் மனம் நிறைந்தார்.

தேவாங்கர் அன்புடன் அளித்த அற்புதமான ஆடைகளை அணிந்த தேவர்கள், ஆடையின்றி இருந்த அரக்கர்களை நிர்வாணிகள் என்று கேலி செய்தனர். இதனால் கோபம் கொண்ட அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தனிடம்  சென்று, “”அரசே, தேவர்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து எங்கள் முன்வந்து நிர்வாணிகள் என்று கேலி செய்து இகழ்கிறார்கள்” என்று கூறினர். இதனைக் கேட்ட வச்சிர தந்தனுக்கு தனது இனத்தாரை இகழ்ந்து பேசியவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற ஆவேசம் ஏற்பட்டது.

வச்சிரதந்தன் தன் சகோதரர்கள் புலிமுகனையும், சர்ப்பநாவனையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்தான். தேவர்களுக்கு மட்டும் ஆடைகள் வழங்கப் பணித்த சிவபெருமான் மனதைக் கலங்கச் செய்வதற்கேற்ற வகையில் என்ன செய்யலாமென யோசித்தனர்.

“”தேவலோகம் சென்று முதலில் தேவேந்தி ரனை அழித்துவிட்டு, அவனுக்குத் துணை நிற்கும் பிரம்மா, விஷ்ணு ஆகியோரை வெல்லவேண்டும். இதனைக் கண்டு ஈசன் கலக்க மடைவார்” என வச்சிரதந்தன் கூறினான். தம்பிகள் இந்த யோசனையை ஏற்கவில்லை.

“”அண்ணலே, தேவேந்திரனை வெல்வது எளிது. ஆனால் தேவர்களுக்கு உதவி செய்யும் திருமாலை வெல்வது எளிதல்ல. எனவே, அதற்கு முன்பாக சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரங்கள் பெற்று, அதற்குப் பிறகு போருக்குச் சென்றால் வெற்றி அடையலாம்” என்று கூறினர். அவர்களது ஆலோசனையை வச்சிரதந்தன் ஏற்றான். அரக்கர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கி கடுந்தவத்தில் ஈடுபட்டனர்.

கேட்போருக்குக் கேட்கும் வரம் அருளும் சிவபெருமான், அரக்கர்களின் தவத்தை மெச்சி அவர்கள்முன் தோன்றி “”வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார். அரக்கர்கள், “”காலம் முழுவதும் சூரியன் தோன்றாமல் உலகம் எப்போது இருளில் இருக்கவேண்டும்” என வேண்டினர். அரக்கர்களின் வஞ்சக மனதை உணர்ந்திருந்த சிவபெருமான், “”சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும், மண்ணுளோரும் வாழமுடியாது. உயிர்கள் இயங்காமல் போய்விடும். இதனை விடுத்து வேறு வரம் கேளுங்கள்” என்றார்.

“”பெருமானே, ஓராண்டு காலமாவது உலகம் இருளில் இருக்குமாறு அருள்புரிய வேண்டும்” என அரக்கர்கள் வேண்டினர். சிவபெருமான் அவ்வாறே வரமருளி மறைந்தார்.

அப்போதே உலகம் இருண்டது.

கேட்ட வரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்த அரக்கர்கள் தங்கள் நகரான வீரமகேந்திரபுரி சென்றனர். வச்சிரதந்தன் தூதுவர்களை அனுப்பி எட்டுத் திக்கிலும் வாழும் தமது குலத்தாரை அழைத்துவரச் செய்தான். அனைவரும் வீரமகேந்திரபுரியில் கூடினர். வச்சிரதந்தன் தன் தம்பியர், புதல்வர்கள் மற்றும் நால்வகைப் படையினருடன் தேவலோகம் சென்று அமராவதி நகரை முற்றுகையிட்டான்.

அரக்கர்களின் போர்ப்பறை கேட்ட தேவேந்திரன், பெரும்படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டான். தேவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரக்கர்கள் சிதறி ஓடினர். வச்சிரதந்தன் அவர்களைக் கட்டுப்படுத்தி தானே தலைமை ஏற்றுப் போர் செய்யத் தொடங்கினான். இந்திரனுக்கு நிகரான ஆயுதங்களைப் பயன்படுத்தினான். அரக்கர் கூட்டம் ஆவேசமாகப் போரிட்டு தேவர்களைத் தோற்றோடச் செய்தது.

அரக்கர்கள் வெற்றிக்களிப்புடன் தங்கள் நகரம் சென்றனர். தோல்வியுற்ற தேவேந்திரன் அரக்கர்களை வெல்வதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற மற்ற தேவர்களுடன் கயிலை சென்று ஈசனைப் பணிந்தனர்.

சிவபெருமான் தேவாங்க மன்னனை மனதில் எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்கர் ஈசன்முன் தோன்றி பணிந்து வணங்கினார். ஈசன், “”தேவர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களைப் போரிட்டு அழித்து வா” என்று தேவாங்கரைப் பணித்தார்.

தேவாங்கர் தேவேந்திரனை நோக்கி, “”தேவராஜனே, இனி நீ அஞ்ச வேண்டாம். நீ உன் படைகளுடன் அமராவதி நகர் செல். நான் ஆமோத நகர் சென்று நால்வகைப் படைகளுடன் வருகிறேன்” என்று கூறித் தன் நாடு சென்றார்.

பின்னர் தேவாங்கர் படையும், தேவர்கள் படையும் ஒன்றுசேர்ந்து வச்சிரதந்தன் இருப்பிடம் சென்றனர். இருவரிடையே போர் மூண்டது. வச்சிரதந்தன் படை தோல்வியுற்றது.

தேவாங்க மன்னரால் தோற்கடிக்கப்பட்ட வச்சிரதந்தன் அவமானத்துடன் வீரமகேந்திர புரம் அடைந்தான். அரக்கர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன், “”மானிடனான தேவாங்கனிடம் தோற்றது நம் குலத்துக்கே அவமானம். நானே போர் முகம் சென்று தேவாங்கனுடன் போர் செய்து, அவனை அழித்து அசுர குலத்திற்கே பெருமை தேடித் தருவேன்” என்று சூளுரைத்தான்.

வியாக்ரமுகனுக்கு ஆசி கூறிய வச்சிரதந்தன் அவனைப் பெரும் படையுடன் போருக்கு அனுப்பி வைத்தான். பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு தேவாங்கரை கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வியாக்ரமுகன், முடிவில் தேவாங்கரின் அம்புகளால் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தான். வியாக்ரமுகன் வீழ்ந்த செய்தியைக் கேட்ட வச்சிரதந்தன் மிகவும் துயருற்று, தன் தம்பியைக் கொன்ற தேவாங்கரைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சீறியெழுந்து, மீண்டும் அரக்கர் படைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் சென்றான்.

நீண்ட நேரம் நடைபெற்ற போரில் இருவர் படைகளுமே சேதமடைந்தன. போரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய தேவாங்கர் சிவபெருமானை தியானித்து, அவர் அளித்த விடைக்கொடிக்கு மந்திர பலம் ஊட்டி அதைப் பகைவர்கள்மீது ஏவினார். அக்கொடியிலிருந்து தோன்றிய புலி, கரடி, யானை, சிங்கம், பன்றி, யாளி, சரபம், பூதகணங்கள் ஆகியவை அரக்கர்களை வீழ்த்தின.

விடைக்கொடியின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாத அரக்கர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

போரில் தன்னுடைய சகோதரர்கள், புதல்வர் கள், மருமகன்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் ஆகியோர் மடிந்ததை எண்ணி வச்சிரதந்தன் மிகவும் மனம் வருந்தினான்.

மந்திர சக்திகள் படைத்த மாயாவியான தன் நண்பன் வித்தையுத்சேனன் என்பவனிடம் தேவாங்க மன்னனின் வீரதீரத்தையும், அவனிடமுள்ள விடைக்கொடியின் ஆற்றலையும், அது போரில் ஏற்படுத்தும் சேதத்தையும் எடுத்து ரைத்து, “”அந்த விடைக்கொடி தேவாங்கனிடம் இருக்கும்வரை நாம் தேவாங்கனையும், அவன் துணை பெற்றிருக்கும் தேவர்களையும் வெல்ல முடியாது. மாயாவியான நீ தகுந்த வேடம் கொண்டு தேவாங்கனிடமிருந்து அக்கொடியைக் கவர்ந்து வரவேண்டும். கொடியைப் பயன்படுத்தி நாம் அவர்களை வென்றுவிடலாம்” என்று வச்சிரதந்தன் கூறினான்.

விடைக்கொடியைக் கவர்ந்து வருவதாக உறுதி கூறிய வித்தையுத்சேனன் வச்சிரதந்தனிடம் விடைபெற்றுச் சென்றான். விடைக்கொடியைக் கவர்ந்து வருவதற்கு மாயாவி செய்த மாயம் என்ன?

(தொடரும்)பிரணவி

தேவலரின் தெய்வீகப் பயணம் தொடர்ந்தது. பல நாட்கள் பயணித்து தேவலர் மயனின் இருப்பிடமான மேருமலையை அடைந்தார். மயன் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

சிவபெருமான் தனக்கிட்டுள்ள பணியை மயனிடம் விவரித்த தேவலர், நெசவு செய்யத் தேவையான தறிப்பொருள்களைப் பெற்றுச்செல்ல வந்திருப்பதாகக் கூறினார். “”மூவுலகத்தார்க்கும் மானம் காக்க ஆடைகள் வழங்கும் தங்கள் பணி மிகவும் போற்றுதற்குரியது” என தேவலரைப் பாராட்டினார் மயன்.

கைதேர்ந்த தச்சுக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு அழகானதும், திடமானதுமான நெசவுக் கருவிகளை விரைவாகச் செய்துமுடித்தார் மயன். வைடூரியம் இழைத்த மரப்பலகைகள், தோற் கேடயங்கள், பலம் மிக்க பண்ணைகள், படமரங்கள், மரகத நாடா, பவளத்திரிகைகள், திருவட்டம், விடு வாய், உடை வாய் ஆகிய கருவிகளை தேவலரிடம் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் விளக்கிக் கூறினார் மயன். தேவலரின் பாதுகாப்புக்காக கைவாள் ஒன்றையும், மூவுலகத்தாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் எதிர்த்தாலும் அவர்களை வெல்லக்கூடிய சக்திவாய்ந்த எட்டுவித பாணங்களையும் அவரிடம் அளித்தார்.

மயனுக்கு நன்றி கூறி மேருமலையிலிருந்து புறப்பட்ட தேவலர், ஆமோத நகர் சென்றடைந்தார். நல்லதொரு நாளில் நெசவுத் தொழிலைத் தொடங்க எண்ணிய தேவலர், மயன் அளித்த கருவிகளோடு மேலும் சில கருவிகளைத் தானே வடிவமைத்து தயார் செய்தார்.

தேவையான உபகரணங்கள் தயாரானதும் தேவலர் ஆடைகள் நெய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். மங்கள நன்னாள் ஒன்றில் நெசவுத் தொழிலைத் தொடங்குவதற்குமுன் தன் குலதெய்வமான சௌடேஸ்வரியை மனமுருக தியானித்தார். தேவியும் தேவலர்முன் தோன்றி, “”தேவலனே, என்னை நீ நினைத்த காரணம் யாது?” என்று கேட்டாள்.

“”அம்மையே, சிவபெருமான் இட்ட கட்டளைப்படி ஆடைகள் நெய்யும் பணியைத் தொடங்க எண்ணியுள்ளேன். மூவுலகத்தார்க்கும் ஆடைகள் வழங்க வேண்டியிருப்பதால், நான் நெய்யும் ஆடைகள் ஒன்று பலவாகப் பெருகி தேவையான அளவு ஆடைகள் கிடைக்கச் செய்வதற்கும், ஆடைகள் பல வண்ணங்களில் அழகுற அமைவதற்கும் தாங்கள் அருள்புரிய வேண்டும்” என தேவியை வேண்டி நின்றார்.

தேவலரின் வேண்டுதலை ஏற்ற தேவி அவரது வலது கரத்தில் கங்கணம் ஒன்றை அணிவித்தாள்.

“”அன்பனே, இந்த கங்கணத்தை அணிந்துகொண்டு நெசவு செய்தால் நீ நினைத்தபடி வண்ணத்திலும் வடிவத்திலும் அழகிய ஆடைகள் தேவையான அளவு கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ஒன்று பலவாகவும் பெருகும்” என வாழ்த்தி மறைந்தாள்.

சுபமுகூர்த்த நன்னாள் ஒன்றில் தேவலர் நெசவுக் கருவிகளைத் தறியில் பூட்டி, தேவி அளித்த கங்கணத்தை அணிந்தபடி, திருமாலின் நாபிக்கமல நூலைக் கொண்டு ஆடைகள் நெய்யத் தொடங்கினார். கலைநயம் மிக்க அழகிய ஆடைகள் தயாராகிக் குவிந்தன. நேத்திர பந்தர், அமிர்த சந்திர பந்தர், அன்ன பந்தர், தாராவளிகள், மேகாவளிகள் என விதவிதமான ஆடை வகைகளைத் தயாரித்தார். தன்முன் குவிந்திருக்கும் ஆடைகளைக் கண்டு மனம் மகிழ்ந்த தேவலர், சிவபெருமான் தனக்கு  அளித்திருக்கும் பணியின் சிறப்பை உணர்ந்து இறைவனையும், அம்மையையும் மனதில் தியானித்து நன்றி தெரிவித்தார்.

தேவலோகம் சென்று தேவர்களுக்கான ஆடைகளைக் கொடுத்துவர முடிவு செய்தார் தேவலர். தனக்கு நூல்கொடுத்து உதவிய திருமாலுக்கு முதலில் ஆடைகளை அளித்து அவரது ஆசிகளைப் பெற்றுவர எண்ணி வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிகொண்டிருந்த பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கும் அற்புதமான, அழகிய ஆடைகளை அளித்து அவர்கள் ஆசிகளைப் பெற்றார்.

வைகுந்தத்திலிருந்து விடைபெற்று சத்திய லோகம் சென்றார். பிரம்ம தேவனுக்கும், அவரதுதேவிக்கும் ஆடைகள் அளித்து பிரம்ம லோகத்திலுள்ள கின்னரர், கிம்புருடர், சித்தர், மகரிஷிகள் ஆகியோர்க்கும் ஆடைகள் வழங்கி ஆசிபெற்றார்.

பின்னர் பிரம்ம தேவனை அணுகி, “”ஐயனே, திருமால் எனக்களித்த நாபிக்கமல நூலைக் கொண்டு நான் ஆடைகள் தயாரித்து அனைவருக்கும் வழங்குகிறேன். எனக்குப் பிறகு உலகத்தார்க்கு ஆடைகள் நெய்து அளிப்பதற்கு என் சந்ததியினருக்கு நூல் எங்கிருந்துகிடைக்கும்? அவர்கள் எவ்வாறு நெசவுத் தொழிலைச் செய்வர்? எல்லாருக்கும் குறைவின்றிஆடைகள் நெய்தளித்து அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ வழிகூறி அருளுங்கள்” என வேண்டினார்.

“”தேவலனே, கவலற்க. திருமாலின் நாபிக்கமலத்தில் இருக்கும் மானி, அபிமானி என்ற இரண்டு பெண்கள் பூவுலகத்தில் பருத்திச் செடிகளாக முளைப்பார்கள். அச்செடிகளிலிருந்து கிடைக்கும் பஞ்சை நூலாக்கி உன் சந்ததியினர் ஆடைகள் நெய்து அனைவருக்கும் வழங்குவார்கள்.  உன் வம்சம் நெசவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்து புகழோடு வாழும்”  என்று வரமருளினார்.

பிரம்ம தேவனிடம் விடைபெற்றுப் புறப்பட்ட தேவலர், இந்திரலோகம் சென்று தேவேந்திரன் மற்றும் அங்குள்ளோர் அனைவருக்கும் ஆடைகள் அளித்து மேரு பர்வதம், மகேந்திர பர்வதம், மலைய பர்வதம், இமய பர்வதம், பாரிஜாத பர்வதம் போன்ற இடங்களுக்கும் சென்று, அங்குள்ளவர்கள் அனைவருக்கும் ஆடைகள் அளித்து அவர்களது ஆசிகளையும், அவர்கள் அளித்த பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டு ஆமோத நகரம் திரும்பினார்.

தேவல முனிவர் அளித்த ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரித்ததால் தேவாங்கர் என்றும், அனைவருக்கும் வஸ்திரங்கள் வழங்கியதால் வஸ்திரகர்த்தர் என்றும் துதிக்கப்பட்டார்.

பூலோகவாசிகளுக்கு ஆடைகள் அளிக்க எண்ணிய தேவலர் முதலில் நாவலந்தீவு சென்று அந்நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் ஆடைகள் அளித்தார். நாவலந் தீவுக்கு அருகிலிருக்கும் இரவித்தீவு, சாகத்தீவு, கிரௌஞ்சத் தீவு, புட்கரத்தீவு முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குள்ள அனைவருக்கும் ஆடைகள் வழங்கினார்.

பின்னர் தேவலர் பாதாள லோகம் சென்று தக்கன், வாசுகி, கார்க்கோடகன், சங்கன் முதலிய நாகர்களுக்கும், அங்குள்ள நாக கன்னியர்க்கும் ஆடைகளை வழங்கினார். அனைவருக்கும் ஆடைகள் வழங்கிய தேவலர்மீது அன்பு கொண்ட நாகலோக மன்னன் அனந்தன், சில நாட்கள் தங்கள் விருந்தினராகத் தங்கிச் செல்லும்படி தேவலரை வேண்டினான்.

அதனை ஏற்ற தேவலர் அவனது அரண்மனையில் சில நாட்கள் தங்கினார்.

சிவமைந்தன் அம்சமாக விளங்கும் தேவலர்மீது நாகராஜனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தன் மகள் சந்திர ரேகையை தேவலருக்குத் திருமணம் செய்துகொடுக்க விருப்பம் கொண்டு, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். நாகராஜனின் நட்பைப் பாராட்டி அவனது வேண்டுகோளுக்கு இசைவு தெரிவித்தார் தேவலர்.

தேவலருக்கும் சந்திரரேகைக்கும் திருமணம் செய்துவைத்த நாகமன்னன், அவர்களுக்குப் பல அரிய பொருட்களை சீதனமாகக் கொடுத்தான். ஆதிசேடன் மகளுடன் திருமண உறவு ஏற்பட்டதால் தேவலரின் சந்ததியினர் சேடர் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படுவார்கள் என ஆதிசேடன் கூறினான்.

தேவலர் நாக மன்னனிடம் விடைபெற்று தன் மனைவி சந்திரரேகையுடன் நாடு திரும்பினார்.

ஆமோத நகர் சென்ற மணமக்களுக்கு நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மக்கள் நலன் கருதி நகரில் சில நாட்கள் தங்கியிருந்து ஆட்சியை கவனித்து வந்த தேவலர் சிவபெருமானுக்கு ஆடைகளை அளித்துவர விரும்பினார். ஈசனுக்கும் உமையவளுக்கும் அளிக்க நெய்து வைத்திருந்த அற்புதமான ஆடைகளை எடுத்துக்கொண்டு கயிலை சென்றார்.

சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒளிவீசும் ரத்தின சிங்காதனத்தில் அமர்ந்திருக்க, தேவரும், முனிவரும் இறைவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். தேவலர் தான் கொண்டு வந்திருந்த ஆடைகளை ஈசன் திருமுன்னர் வைத்து, “”பெருமானே, தங்கள் திருவருள் துணையால் இந்த அற்புதமான ஆடைகளை நெய்துள்ளேன். இவற்றைத் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் இவற்றை ஏற்று அணிந்தருள வேண்டும்” என வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற சிவபெருமானும், பார்வதி தேவியும் அவ்வழகிய ஆடைகளை அணிந்து அருட்காட்சி தந்தனர்.

முருகன், வீரபத்திரர், நந்தியெம்பெருமான், ரிஷிகள், சிவகணங்கள் ஆகியோருக்கும் ஆடைகள்வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும், ஆசியையும் பெற்றார் தேவலர்.

சௌடேஸ்வரி தேவிக்கு ஆடைகள் வழங்க எண்ணி தேவலர் அவளைத் துதித்தார். தேவி அவர்முன் தோன்றி அவர் அளித்த ஆடைகளைப் பெற்றுக்கொண்டு ஆசி கூறி மறைந்தாள். பின்னர் தேவலர் சிவபெருமான் திருமுன்னர் சென்றார். ஈசன் அவரைத் தனக்கு நிகரான ஆசனத்தில் அமரச் செய்தார்.

அப்போது தேவலோக மாதுக்களான அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அதனைக் காண கயிலைவாசிகள் சபையில் கூடியிருந்த னர். ஈசனுடன் அமர்ந்து தேவலரும் நடன நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் ஈசன் குறிப்பால் உணர்த்தியபடி தேவலர் நடன மாதுக்களுக்கு தான் கொண்டுவந்திருந்த ஆடைகளை வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.

சிவபெருமான் தேவலரை அழைத்து அவரிடம் சக்திவாய்ந்த தெய்வீக வாள் ஒன்றையும் இடபக் கொடியையும் கொடுத்து, “”இந்த வாளும் கொடியும் இருக்கும் வரை உனக்குப் போரில் தோல்வி ஏற்படாது. எந்நாளும் சீரும் சிறப்புமாய் வாழ்வாய்” என வாழ்த்தினார்.

தேவலர் சிவபெருமான் திருமுன் சென்று வணங்கி, “”பெருமானே, தங்கள் திருவுளப்படி திருமாலிடம் நூல் பெற்று ஆடைகள் நெய்து மூவுலகத்தோர்க்கும் கொடுத்து அவர்கள் மானத்தைக் காக்கும் பேறு பெற்றேன். ஆடைகள் நெசவு செய்தது போக மீதி இருக்கும் நூலை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“”மைந்தா, மீதமுள்ள நூலைக் கொண்டு யக்ஞோபவீத சூத்திரம், மாங்கல்ய சூத்திரம், கங்கண சூத்திரம், கடிசூத்திரம், சஞ்ஜாத சூத்திரம் ஆகியவற்றை உருவாக்கு. யக்ஞோபவீத சூத்திரத்தை தேவர்கள், அந்தணர்கள் ஆகியோருக்கும்; மாங்கல்ய சூத்திரத்தை கற்புடைய பெண்மணிகளுக்கும்; சஞ்ஜாத சூத்திரத்தை பிரசவ காலத்தில் இருக்கும் பெண்களுக்கும்; மற்றவற்றை பூணூல் அணியும் தகுதி உள்ளவர்களுக்கும் உரிய காலத்தில் மந்திரோபதேசத்துடன் கொடு” என பணித்தார். (இறைவன் அருளியபடி தேவலர் சூத்திரங்களைத் தயார் செய்து உரியவர்களுக்கு வழங்கினார். சூத்திரங்கள் வழங்கியதால் சூத்திர கர்த்தர் என்ற பெயரையும் பெற்றார்.)

தேவலர் ஆமோத நகர் செல்லும் வழியில் ஒரு அழகிய பூஞ்சோலையையும் அதன் நடுவே பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றையும் கண்டார். பயணக் களைப்பு தீர தடாகத்தில் நீராடி தியானம் செய்து முடித்து தடாகக் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது நடனமாது அரம்பையின் வடிவில் தேவலருக்கு சோதனை வந்தது.கயிலையில் நாட்டியமாடிய அரம்பை, சபையில் வீற்றிருந்த தேவலரின் பேரழகில் மயங்கி அவரை தனிமையில் சந்தித்து மகிழவேண்டும் என விருப்பம் கொண்டாள். பூஞ்சோலையில் தேவலர் தனித்திருப்பதை அறிந்து அவரைச் சந்திக்க அங்கு வந்தாள். தனக்கு அவர்மீது ஏற்பட்டிருக்கும் காதலை வெளிப்படுத்தினாள்.

அரம்பையின் காதல் தேவலருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருந்தது. பெண்மைக்குரிய வெட்கத்தைவிட்டு அவள் கெஞ்சியது அவள்மீது பரிதாப உணர்வையே ஏற்படுத்தியது. எனவே, “”எனக்குப் பெண்கள்மீது ஈடுபாடு கிடையாது. தேவலோகத்தில் உன்னை விரும்புபவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களிடம் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்…” என்று அறிவுரை கூறினார்.

தன் வேண்டுகோளை தேவலர் மறுத்ததால் கோபம் கொண்ட அரம்பை, “”நீ என்றாவது ஒருநாள் போரில் பகைவரிடம் தோல்வியுற்று வருந்துவாயாக” என சபித்துவிட்டுச் சென்றாள். சிவபெருமான் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என எண்ணிய தேவலர், பின்னொரு நாளில் இது நன்மையே தரும் என்ற சிந்தனையோடு மனம் கலங்காது ஆமோத நகர் சென்றடைந்தார். அரம்பையின் சாபம் பலித்ததா?

நம் இந்துமத இலக்கியங்களுள் புராணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழைய வரலாறுகளே புராணங்கள் எனப்படுகின்றன. “எது தொன்று தொட்டு இன்று வரை பரவியிருக்கிறதோ அதுவே புராணம்’ என வாயு புராணம் கூறுகிறது.

ஆதியில் சிவபெருமானால் அருளப் பட்டவை புராணங்கள். சிவபெருமான் கூறியதை நந்தி கேட்டு, அதை சனத்குமாரருக்குக் கூற, அவர் வியாசருக்குக் கூறினார். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் சூத முனிவரால் உலகினருக்கு  எடுத்துக் கூறப்பட்டன.

சிவபுராணங்கள் 10, விஷ்ணு புராணங்கள் 4, பிரம்ம புராணங்கள் 2, அக்னி புராணம், சூரிய புராணம் என புராணங்கள் 18.

“எப்பொழுதும் உண்மையைப் பேசு; தர்மத்தைச் செய்’ என்பதை, “ஸத்யம் வத தர்மம் சர’ என வேதம் கூறுகிறது. இத்தகைய வேதக் கட்டளைகளை- வேதம் கற்றோரும் மற்றோரும் நன்கு அறிந்து, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து உய்வதற்கு ஏற்றவகையில் புராணங்கள் சுவையான நீதிக்கதைகளால் விளக்குகின்றன.

“இறைவன் ஒருவனே, அவனே முதல்வன்’ என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் தலையாயது. சைவர்கள் முதல்வனை சிவனாகவும், அவன் ஆற்றலை அம்மையாகவும் வழிபடுகின்றனர்.

சைவ நெறியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டது தேவாங்க புராணம். தேவர்களின் துயர் துடைக்க அவதரித்த தேவலரின் புகழ்பாடும் தேவாங்க புராணம், சிவ புராணங்களுள் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்றுள்ளது. தேவாங்க குல மக்களின் குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மனின் புகழையும் பாடுகின்றது. சிவனிலிருந்து சக்தி வடிவெடுக்கும் அம்பிகையின்  அவதாரங்களில் ஒன்று சௌடேஸ்வரி அம்மன்அவதாரம். சக்தி வழிபாட்டின் சிறப்பும் சைவ நெறிகளுமே இப்புராணத்தில் உணர்த்தப்படுகின்றன.

மற்ற குலத்தாரின் மான சம்ரட்சணம், ஆன்மிக உயர்வு ஆகியவற்றுக்காக தெய்வீக சேவை புரிந்த குலம் தேவாங்க குலம். இக்குலத்தின் மூலகர்த்தர் தேவாங்கர் என்றழைக்கப்படும் தேவல முனிவர். துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் புரிவதற்காக பரம்பொருள் எடுத்த அவதாரமே தேவலர் அவதாரம்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கும் திருக்கயிலையில், நவமணிகளால் இழைக்கப்பட்ட அரியாசனத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், கின்னரர், முனிவர், நாகர், இயக்ககர், சித்தர் ஆகியோர் சூழ்ந்திருந்து அம்மையையும், அப்பனையும் போற்றிப் பாடும் மங்கல இசை எங்கும் பரவி ஒலித்துக்கொண்டிருந்தது. முற்றுந்துறந்த முனிவர்கள் ஆங்காங்கே அமர்ந்து தவம்செய்து கொண்டிருந்தனர். புண்ணிய தீர்த்தங்களும் மலர் வாவிகளும் புனித மலைக்கு அழகு சேர்ப்பதுபோல் அமைந்திருந்தன.

நைமிசாரண்ய முனிவர்கள், தீர்த்தங்களுள் பெருமை மிக்கதான புஷ்கர தீர்த்தத்தில் நீராடி தங்கள் நித்திய கருமங்களை முடித்துவிட்டு தீர்த்தக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்குவந்த சூத முனிவரை வணங்கி வரவேற்று தங்கள் வேண்டுகோள் ஒன்றை அவர்முன் வைத்தனர்.

நைமிசாரண்ய முனிவர்கள் பதினெண் புராணங்களையும் சூத முனிவர் சொல்லக்கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ள தேவாங்க முனிவரது சரிதத்தை முன்பொரு சமயம் சுருக்கமாகக் கேட்டறிந்திருந்த முனிவர்கள் அதனை விளக்கமாகக் கேட்க விருப்பம் கொண்டு, தங்கள் விருப்பத்தை சூத முனிவரிடம் பயபக்தியுடன் தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளை மகிழ்வுடன் ஏற்ற சூத முனிவர், “”கேட்பவர்கள் பாவத்தைப் போக்கி வீடுபேறளிக்கும் புண்ணிய சரிதத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்” என்று கூறி, தேவலர் வரலாற்றை பக்தி நிறைந்த வார்த்தைகளால் சொல்லத் தொடங்கினார்.

எல்லாவற்றிற்கும் தலைவனான ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் திருக்கயிலையில் ஒளி வீசும் அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் கொண்டு, மூன்றுவித நற்குணங்களுடன் தன் அருகில் அமர்ந்திருந்த அம்மையை ஈசன் அருள் பார்வை கொண்டு நோக்கினார். அம்மையின் ரஜோ குணத்தில் பிரம்மதேவனும், சத்துவ குணத்தில் திருமாலும், தமோ குணத்தில் உருத்திரனும் தோன்றினர்.

பிரம்மனைப் படைத்தல் தொழிலையும், திருமாலைக் காத்தல் தொழிலையும், உருத்திரனை அழித்தல் தொழிலையும் செய்யும்படி சிவபெருமான் பணித்தார். மும்மூர்த்திகளும் ஈசனின் ஆணையை ஏற்று, தங்கள் பணிகளை சிறப்புற நிறைவேற்றுவதாக உறுதி கூறி ஈசனிடம் விடைபெற்றுச் சென்றனர்.

சிவபெருமான் அருளியபடிபிரம்மன் படைத்தல் தொழிலைத் தொடங்கினார்.

திருவருளின் துணைகொண்டு பல உலகங்களையும், பூமியையும்; தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், கடல் ஆகியவற்றையும் படைத்தார்.

பின்னர் மனுவைப் படைத்து தேவர், மானிடர், நாகர் ஆகியோர்க்கு மானத்தைக் காக்கும் ஆடைகளை நெய்து கொடுக்கும் தொழிலைச் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார். பிரம்மன் தனக்கிட்ட பணியை மகிழ்வுடன் ஏற்ற மனு, காம்பிலி நகர் சென்று தன் கற்பனையில் தோன்றிய வண்ணம் அழகிய ஆடைகளை அவரவர் விருப்பத்திற்கேற்றபடி நெய்து கொடுத்தார்.

தன்னைப் படைத்த பிரம்மாவைப் பலவாறு போற்றி வணங்கிய மனு, பிரம்மாவைப் படைத்த சிவபெருமானிடம் மிகுந்த பக்திகொண்டு அவர் திருவடிகளுக்குத் தொண்டு செய்து வந்தார். நற்பண்புகளுடன் திகழ்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்த மனுவுக்கு சிவபெருமான் வீடுபேறு அருளினார்.

மனு வீடுபேறு எய்தியபின், மானங்காக்க ஆடைகளின்றி மூவுலகத்தாரும் கவலையுற்றனர். இலை, தழைகள், மரவுரி போன்றவற்றை அணிந்து ஆடைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதற்கான மாற்றுவழிதேடி தேவர்கள் பிரம்மனை நாடிச் சென்றனர். சிவபெருமானே இதற்குத் தீர்வு காணக்கூடியவர் என்று கூறி, தேவர்கள் பின் தொடர திருக்கயிலை சென்றார் பிரம்மா.

தேவர்கள் சிவபெருமானைப் பணிந்து நின்றனர். “”எம் பெருமானே, மானங்காக்க ஆடைகளின்றித் துன்புறுகிறோம். வைதீக காரியங்களுக்கு உரிமை அளிக்கும் பூணூல் இல்லாமல் தெய்வீகம் இழந்து நிற்கிறோம். ஆடையும், பிரம்ம சூத்திரமும் வழங்க ஒரு மகாபுருஷனைத் தந்தருள வேண்டுகிறோம்” எனத் தங்கள் குறையை இறைவன்முன் வைத்தனர்.

தேவர்களின் குறைகளைக் கேட்ட சிவபெருமான் ஒரு கணம் மௌனமாக இருந்து தியானித்தார். சிவபெருமானின் இதயக் கமலத்திலிருந்து பேரொளிப் பிழம்பொன்று வெளிப்பட்டு நின்றது. அந்தப் பேரொளி மான்தோல், தண்டு, கமண்டலம், ஜடாமுடி, பவித்ரம், திருநீறு, உருத்திராக்கம், கங்கணம், முப்புரிநூல் ஆகியவற்றைத் தரித்த ஆணழகனாய் நின்றது. தேவர்கள் துயர்துடைக்க நற்பண்புகளின் தோற்றமாய் நின்ற அம் மகாபுருஷனை, ஈசன் தேவலர் என்ற பெயரிட்டு அழைத்தார்.

பணிவுடன் வணங்கி நின்ற தேவலரை நோக்கி, “”தேவலனே, இவ்வுலகுக்கு நீ ஆற்றவேண்டிய பணி ஒன்றுள்ளது. அதற்காகவே உன்னை அழைத்தோம். நீ திருமாலிடம் சென்று, அவர் உந்திக் கமல நூலைப் பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் கொடுப்பாயாக. நீ அளிக்கும் ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரிப்பதால் தேவாங்கன் என்ற பெயரையும் நீ பெறுவாய்” என்றருளி, மேருமலைக்குத் தென் பாகத்திலுள்ள ஆமோத நகர் சென்று நல்லாட்சி செய்து வரும்படி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

(சிருஷ்டி தொடங்குவதற்குமுன் அண்ட சராசரங்கள் எல்லாம் தேவல சொரூபமாய் இருந்தது. சிவ சகஸ்ராரத்தில் வியாபித்திருக்கும் ஜோதி தேவலப் பிரம்மமே. உலகத்தின் தோற்றம், காப்பு, ஒடுக்கம் ஆகியவற்றுக்கெல்லாம் தேவலரே காரணகர்த்தா. தேவலப் பரம்பொருள் அவ்வப்போது, சிவபெருமானின் சகஸ்ராரத்திலிருந்து வெளிப்பட்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆடைகள் தந்து உடனே மறைந்து விடும். இது கல்பங்கள்தோறும் நடந்துவரும் சம்பவம். இதுபோன்றே ஒரு கல்பத்தில் நிகழ்ந்ததாக தேவாங்க புராணம் தொடங்கு கிறது.)ஒரு கல்ப காலத்தின் துவக்கத்தில் தேவர்களும் முனிவர்களும் ஆடை, பூணூல் ஆகியவற்றுக்காக சிவபெருமானைப் பிரார்த்தித்தனர். சிவபெருமான் தேவலப் பரம்பொருளை தியானித்தார். பரம்பொருள் தேவல முனிவர் வடிவம் தாங்கி சிவ சகஸ்ரார கமலத்திலிருந்து வெளிப்பட்டு அங்கிருந்தோர் அனைவருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கியது.

தேவர்களுக்கு உபகாரமாய் இருந்த தேவல முனிவர், மானிடராகப் பிறந்து மானிடர்கள் அனைவருக்கும் நிரந்தரமாக உபகாரம் செய்ய விரும்பினார். அதனைச் செயல்படுத்த காண்ட ரிஷி மூலமாக ஒரு லீலையை நிகழ்த்தினார்.

அனைவருக்கும் ஆடையும், பூணூலும் வழங்கிய தேவலர் காண்ட ரிஷிக்கு மட்டும் எதையும் கொடுக்கவில்லை. காண்ட ரிஷி கேட்டதற்கு, “”உமக்கு இன்று இல்லை; நாளை தருகிறேன்” என்று தேவலர் கூறினார். அதனால் கோபம் கொண்ட ரிஷி, “”எல்லாருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கிய நீ எனக்கு மட்டும் இல்லையென்று கூறியதால் பூலோகத்தில் மானிடனாகப் பிறப்பாய்” எனச் சாபமிட்டார்.

தேவல முனிவர், “”எல்லா உயிர்களும் என் சொரூபமே. எனக்கும் மானிடர்க்கும் எந்த பேதமும் இல்லை. ஆகவே மானிடராகப் பிறப்பது மானிடர்க்கு உபகாரமாக அமையும் என்பதால், நீர் இட்ட சாபத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறி, காண்ட ரிஷியின் கோபத்தை மேன்மேலும் தூண்டி, ஏழு அவதாரங்கள் எடுக்க சாபம் பெற்றார். அதில் முதல் அவதாரமே தேவல முனிவர் அவதாரம். (ஏற்கெனவே, திருமாலின் உந்திக் கமல நூலில் ஆடைகள் நெய்து அனைவர்க்கும் வழங்க சிவபெருமான் பணித்தபோது, தேவலர் ஆறு பிறவிகள் எடுத்து ஏழாவது பிறவியில் சொர்க்கம் செல்வார் என ஆசி வழங்கியிருந்தார்.)

சிவபெருமான் ஆணையை ஏற்று அவரது ஆசிகளுடன் புறப்பட்ட தேவலர், சௌடேஸ்வரி அம்மையை வணங்கி அவளருள் வேண்டி நின்றார். “”நீ மேற்கொண்டுள்ள நற்பணிக்கு எனது ஆசிகள். உனக்கு இடர் வரும்போது என்னை தியானம் செய். நான் தோன்றி உன் இடர்களைக் களைந்து உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறி ஆசீர்வதித்தாள்.

தேவலர் திருப்பாற்கடல் நோக்கிப் புறப்பட்டார். திருப்பாற்கடலுக்குச் சற்று முன்னதாக பழ மரங்களும், நறுமணங் கமழும் பூஞ்செடிகளும் சூழ்ந்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டார். அதன் இயற்கைச் சூழல் தேவலரின் மனதை ஈர்த்தது. தனது குறிக்கோள் நிறைவேறத் திருமாலை நோக்கித் தவமியற்ற அதுவே தகுந்த இடம் எனத் தேர்ந்து, அங்கமர்ந்து பல நாட்கள் கடுந்தவம் செய்தார்.

தேவலரின் தவத்தில் திருப்தி கொண்ட திருமால் தேவலர்முன் காட்சி அளித்தார். “”தேவலனே, உன் பக்திக்கு மெச்சினோம். வேண்டும் வரம் கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

“”ஜகத்ரட்சகனே, சிவபெருமானின் ஆணைப்படி தங்கள் நாபிக்கமல நூலைப் பெற்றுச் செல்ல வந்துள்ளேன். அந்த நூலைக் கொண்டு திரிலோகவாசிகளின் மானங்காக்க ஆடைகள் நெய்து தரப் பணிக்கப்பட்டுள்ளேன். தாங்கள் அருள்கூர்ந்து நாபிக்கமல நூலைத் தந்தருள வேண்டும்” என தேவலர் திருமாலைப் பணிந்து வணங்கி தன் வேண்டுதலை முன்வைத்தார்.

“”தேவாங்கனே, பூவுலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பயன்பாடின்றி இருந்துவரும் இந்த நூலை இதுவரை காப்பாற்றி வந்துள்ளேன். இனிமேலாவது இந்த நூல் நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும். நூலைப் பெற்றுச் சென்று உன் பணியைத் தொடர்வாயாக” என ஆசி கூறி நாபிக் கமல நூலைத் தேவலரிடம் அளித்தார்.

தேவலர் திருமாலிடம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, “”தேவலனே, நீ பெற்றுச் செல்லும் இந்நூலைக் கவர முனிவர் வேடம் பூண்ட அரக்கர்கள் முயற்சிப்பர். அவர்களை வெற்றிகொள்ள உதவியாக சக்கரப் படை ஒன்றினையும் உனக்கு அளிக்கிறேன். இதனையும் பெற்றுச் செல்” என்று கூறி, தன் சக்கரப்படை ஒன்றினை தேவலரிடம் வழங்கினார்.

திருமாலிடமிருந்து விடைபெற்று தன் பயணத்தைத் துவங்கிய தேவலர் சமுத்திரக் கரையோரமிருந்த நாவலந்தீவை வந்தடைந்தார். கனி மரங்களும் மலர்ச் செடிகளும் சூழ்ந்த ஒரு பர்ணசாலையைக்கண்டு, அங்குள்ள முனிவர்களின் ஆசியைப் பெற விரும்பி அங்கு சென்றார்.

குடிலருகில் கையில் ஜெப மாலையுடன் முனிவர் ஒருவர் சீடர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய தேவலர், தான் மேற்கொண்டுள்ள பணி செவ்வனே நடைபெற ஆசிகள் பெற வந்துள்ளதாகக் கூறினார்.

திருமாலிடமிருந்து நாபிக்கமல நூலைப் பெற்று வந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு ஆடைகள் நெய்யும் பணியை மேற்கொள்ளப் போவதாகவும் தேவலர் கூறியதைக் கேட்ட தவமுனிவர், “”உன்னிடமுள்ள நூல் மிகவும் புனிதமானது. கிடைத்தற்கரிய இந்த நூலை யாரேனும் அபகரித்துச் செல்ல முயற்சிக்கலாம். இன்றிரவு நீ இங்கு தங்கிச் செல். அதுவே உனக்குப் பாதுகாப்பானது” என்று கூறினார்.

திருமால் கூறியபடியே முனிவரும் நூலை பத்திரமாகக் கொண்டு செல்லவேண்டும் என்று கூறியதால், நூலின் பாதுகாப்பு கருதி அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கினார். சீடர்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருந்த தேவலர் திடீரெனக் கண்விழித்தார். ஆசிரமத்திற்குள் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. தேவலரைச் சுற்றிலும் ஆயுதங்களோடு அரக்கர்கள் நின்றிருந்தனர்.

முனிவர்கள் ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை. அரக்கர்கள் என்ன மாயம் செய்தனரோ என தேவலர் கவலையுற்றார்.

(தொடரும்)

Leave a Reply