தந்திர யோகம்!


16சகஸ்ராரச் சக்கரம்


பிரபஞ்சத்தோடும் இறைவனோடும் நம்மை இணைக்கும் சக்கரம் சகஸ்ராரம். இதுவே நமது சக்கரங்களில் மிகமிக சக்திவாய்ந்த சக்கரமாகும். பிற ஆறு சக்கரங்களையும் ஆளுகின்ற தலைமைச் சக்கரம் இது.

பல தந்திரயோக நூல்களில் சகஸ்ராரம் ஒரு சக்கரமல்ல; அது பிரபஞ்ச சக்தியின் அம்சமாக உடலில் உறைந்துள்ள சக்தி என்ற குறிப்பும் காணப்படுகிறது.

தொன்மையான தந்திரயோக நூல்களில், உடலிலுள்ள சக்கரங்களின் எண்ணிக்கை ஆறு என்றே எழுதப்பட்டுள்ளது. சகஸ்ராரம் சக்கரமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பிற ஆறு சக்கரங்களைப்போன்றே, பிரபஞ்ச சக்தியை உடலினுள் கிரகித்துக் கொள்ளுதல், நாளமில்லா சுரப்பியை இயக்குதல் போன்ற பணிகளை சகஸ்ராரச் சக்கரமும் செய்வதால் அதை சக்கரமென்று அழைப்பதில் தவறில்லை. எனவே நாமும் அதை சக்கரமென்றே வகைப்படுத்துவோம்.

இதழ்கள்

சகஸ்ராரச் சக்கரத்தை “ஆயிரம் இதழ் கொண்ட தாமரை’ என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இந்த சக்கரத்திலுள்ள மொத்த இதழ்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து எழுபத்திரண்டு. (972).

வண்ணம்

சகஸ்ராரச் சக்கரத்தின் வண்ணம் வான வில்லின் முதல் வண்ணமான “வயலட்’.

பூதம்

ஆக்ஞை சக்கரத்தைப் போன்றே சகஸ்ராரச் சக்கரமும் தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகச் சக்கரம். இதற் கென ஒரு “பூதம்’ கிடையாது. பூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சக்கரம்.

புலன் (தன்மந்திரம்)- ஆன்மா.

புலனுறுப்பு (ஞானேந்திரியம்)- ஆன்மா.

செயலுறுப்பு (கர்மேந்திரியம்)- ஆன்மா.

சகஸ்ராரச் சக்கரம் பூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சக்கரமாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய புலனோ, புலனுறுப்போ, செயலுறுப்போ கிடையாது. இது முழுக்க முழுக்க ஆன்மாவோடு தொடர்புடைய ஒரு சக்கரம்.

நாளமில்லா சுரப்பி

சகஸ்ராரச் சக்கரம் நமது மூளையின் உள்ளே இருக்கும் “பிட்யூட்டரி’ என்ற நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடைய- அதை ஆளுகின்ற சக்கரமாகும்.

பிட்யூட்டரி சுரப்பியை தலைமைச் சுரப்பி (ஙஹள்ற்ங்ழ் ஏப்ஹய்க்) என்று அழைக்கிறோம். உடலிலுள்ள பிற நாள மில்லா சுரப்பிகள் அனைத்துமே பிட்யூட்டரி சுரப்பியின் ஆளுமையில்தான் உள்ளன.

பிற நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங் கள் அனைத்தையும் கண்காணித்து சீர் படுத்துவது பிட்யூட்டரி சுரப்பியின் பணி. இதுதவிர பிட்யூட்டரி சுரப்பியிலிருந்தும் பலவிதமான இயக்க நீர்கள் சுரக்கின்றன. உடலின் அனைத்து இயக்கங்களிலும் ஏதோவொரு வகையில் பிட்யூட்டரி சுரப்பியின் ஆளுமை உள்ளது.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கங்களை சீர்படுத்துவது சகஸ்ராரச் சக்கரமாகும். ஆக, நமது முழு உடலையும் ஆளும் சக்கரமாக சகஸ்ராரச் சக்கரம் உள்ளது. சகஸ்ராரச் சக்கரத்தின் இயக்கம் சரியாக இருந்தால், உடலின் இயக்கங்களும் நலமாக இருக்கும்.

குணம்- சாத்வீகம்.

வாயு- கிடையாது.

லோகம்- சத்ய லோகம்.

கோசம்- சகஸ்ராரச் சக்கரம் நமது ஐந்தாவது கோசமான (சக்தி உடல்) ஆனந்தமய கோசத்தோடு தொடர்புடையது.

ஆனந்தமய கோசம் வலுவாக இருந்தால் தான் மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்து இயங்கும் முழுமையான யோக நிலை உருவாகும்.

ஆனந்தமய கோசமே நமது உடலை ஒரு கோட்டை மதில்போன்று பாதுகாக்கும் சக்தி உடலாகும். இந்த கோசம் வலுவாக இருந்தால் எந்த நோய்க் கிருமிகளும் நமது உடலினுள் நுழையமுடியாது.

அனைத்துவிதமான எதிர்மறை சக்திகளையும் அதிர்வுகளையும் தடுத்து நிறுத்தி, பருவுடலைப் பாதுகாக்கும் சக்தியும் இந்த கோசத்திற்குண்டு.

ஆனந்தமய கோசம் உறுதியாக இருப்பவர்களை நோய்கள் மட்டுமின்றி, பில்லி, சூனியம், ஏவல், சாபம், வசியம் போன்ற எந்த எதிர் மறை சக்திகளும் அண்டமுடியாது.

உடலுறுப்புகள்

வெளிமூளை (செரிபெரல் கார்ட்டெக்ஸ்), வலது கண் ஆகிய இரண்டும் சகஸ்ராரச் சக்கரத்தின் நேரடி ஆளுமையிலுள்ள உடல் பாகங்களாகும்.

சிந்தனை, படிப்பு, கற்பனை ஆகிய அனைத்துமே நமது வெளிமூளையின் செயல்பாடுகளாகும்.

தெய்வம்: சிவன்

அதிதேவதை: வருணன்.

சகஸ்ராரச் சக்கரத்தின் சிறப்புத் தன்மைகள்

 ஆன்மாவானது கருவினுள் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகவே நுழையும்.

 இறக்கும்போது ஆன்மா இந்த சக்கரத்தின் வழியாகவே வெளியேறும்.

(செய்த கர்மங்களின் அடிப்படையில் வெவ்வேறு வழிகளில் ஆன்மா வெளியே செல்லுமென்ற கருத்தை தந்திர யோகம் ஏற்றுக்கொள்வதில்லை. தந்திர யோகத்தின்படி அனைத்து ஆன்மாக்களும் சகஸ்ராரம் வழியாகவே வெளியேறும்).

 ஒரு குழந்தை பிறக்கும்போது சகஸ்ராரச் சக்கரம் திறந்த நிலையிலேயே பிறக்கும்.

 சகஸ்ராரச் சக்கரத்தில் சக்தித் தடை களோ சக்தித் தேக்கமோ உருவாகாது.

 பிற சக்கரங்களை தந்திர யோகப் பயிற்சிகளின் மூலமாக (குண்டலினி சக்தியால்) நம்மால் திறக்கமுடியும். முழு வீச்சில் செயல்படச் செய்யவும் முடியும். ஆனால் சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி நுழைவது தானாகவே நிகழும். நமது முயற்சிகளாலோ அல்லது பயிற்சிகளாலோ அதை நடத்தமுடியாது.

தந்திர யோகப் பயிற்சிகளால் ஆக்ஞை சக்கரம் வரையிலான ஆறு சக்கரங்களையும் திறக்கமுடியும். அதன்பின்னர் அவரவர் கர்மவினைகளின் அடிப்படையில் திடீரென ஒருநாள் தானாகவே குண்டலினி சக்தி சகஸ்ராரத்தினுள் சென்று அதைத் திறக்கும்.

இந்த நிகழ்வே “முக்தி நிலை’ எனப்படும். இந்த முக்தி நிலையை அடைந்தவர்களுக்கு மீண்டும் பூலோகத்தில் பிறவிகள் கிடையாது.

முக்தியடைந்த அந்த ஆன்மா இந்த பூலோகத்தைவிட்டு வெளியேறி, அடுத்த லோகமான புவர்லோகத்தில் சென்று சக்தி உடலாக வாழும்.

துணைச் சக்கரங்கள்

ஆக்ஞை சக்கரத்திற்கும் சகஸ்ராரச் சக்கரத்திற்குமிடையே முக்கியமான பல துணைச் சக்கரங்கள் உள்ளன.

 மன சக்கரம்

 குரு சக்கரம்

 சோம சக்கரம்

 லலான சக்கரம்

 ஞானச் சக்கரம்

 மகாநாத சக்கரம்

 பிந்து சக்கரம்

ஆகியவை முக்கியமானவை. ஆக்ஞை சக்கரம் குண்டலினியால் தூண்டப்பட்டு திறந்துகொண்ட பின்னர், நமது தந்திர யோகப் பயிற்சிகளால் இந்த துணைச் சக்கரங்களை ஒவ்வொன்றாக நம்மால் திறக்கமுடியும்.

குண்டலினி சக்தி சகஸ்ராரத்தைத் திறக்கும் போது ஏற்படும் உணர்வு நிலைகள்சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது ஏற்படும் உணர்வு நிலை மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். இதையே “சமாதி நிலை’ அல்லது “ஜீவ சமாதி’ என்றும் அழைக்கிறோம்.

இந்த நிலையை அடைந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் (ஐஹப்ர்) உருவாகும்.

சமாதி நிலையை அடைந்தவர்கள் தன்னுள்ளே ஒடுங்கிப்போவார்கள். (தாமச நாடி தூண்டப்படுவதால் இது நிகழுகிறது). அவர்கள் நிறைகுடம்; அதன்பின் தளும்பமாட்டார்கள்.

பேச்சு, பிரசங்கம், ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிப்போகும். எல்லையற்ற ஆனந்த நிலையில் லயித்திருப்பார்கள். இது இறையோடு ஒன்றிய நிலை. மனித உணர்வுகளைக் கடந்த நிலை.

இந்த நிலையை அடைந்தவர்கள் எவரும் அந்த நிலை எப்படிப்பட்டது என்பதை விளக்கியதில்லை. அது விளக்கங்களால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு அனுபவம்.

சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி

நுழைந்தால் எத்தகைய உணர்வு நிலை ஏற்படும் என்ற கேள்விக்கு-

“கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பதையே பதிலாகக் கூறமுடியும்.

தந்திர யோகம் பாகம்-3 முற்றிற்று.

பின்குறிப்பு:

கடந்த மூன்று வருடங்களாக, தந்திர யோகம் குறித்த சில அடிப்படையான செய்திகளை பாகம் 1, 2, 3 என எழுதினேன். வாசகர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.

தந்திர யோகம் என்பது ஒரு மாபெரும் கடல். அது ஒரு வாழ்க்கை விஞ்ஞானம்.

அந்த விஞ்ஞானத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மட்டுமே நூல்களாக எழுதியிருக்கிறேன். பயிற்சி முறைகளை எழுதவில்லையே, ஏன்? என பல வாசகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தந்திர யோகப் பயிற்சிகள் அனைத்துமே மிகமிக எளிமையானவை. அதேநேரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை. இவற்றை புத்தகங்கள் வாயிலாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு குருவிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு குருவின் மேற்பார்வையின்றி எந்த தந்திர யோகப் பயிற்சியிலும் ஈடுபடக்கூடாது. தவறாகச் செய்தால் பல பாதகமான விளைவு கள் ஏற்படும்.

நாங்கள் நடத்தும் நேரடிப் பயிற்சி வகுப்பு களில், அடிப்படை பயற்சிகளில் துவங்கி, படிப்படியாக மேல்நிலைப் பயிற்சிகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

“குரு இல்லாத வித்தை பாழ்’, “தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது’ என்பனபோன்ற பழமொழிகள் தந்திர யோகத்திற்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

தந்திர யோகத்தை ஒரு நல்ல குருவிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்வதே சரியான முறை. ஆர்வமும் கர்ம பலனும் உள்ளவர்கள் எங்களது நேரடிப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

நன்றி!

டாக்டர் ஜாண் பி. நாயகம்
M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.Cடாக்டர் ஜாண் பி. நாயகம் M.S.B.S., M.D., Ph.D., D.Sc., F.C
14

நமது முதன்மைச் சக்கரங்களில் ஆறாவது சக்கரமாக உள்ளது ஆக்ஞை சக்கரம். இது ஒரு உயர்நிலைச் சக்கரமாகும்.

நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.

மூலாதாரம் முதல் விஷுதி வரையிலான ஐந்து சக்கரங்களும் இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆறாவது சக்கரமான ஆக்ஞையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு நாடிகளின் வழியாக ஆக்ஞை சக்கரம் பிற ஐந்து சக்கரங்களையும் ஆளுகிறது. எனவே ஆக்ஞைக்கு ஆளுமைச் சக்கரம் (Commanding Chakara) என்ற பெயரும் உண்டு.

“ஆக்ஞை’ என்ற சொல் லானது “ஆக்கினை’ என்ற சொல்லின் மருவுச் சொல்லாகும். “ஆக்கினை’ என்றால் “கட்டளை’ அல்லது “ஆணை’ என்பது பொருள்.

இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக மட்டுமின்றி பீனியல், பிட்யூட்டரி போன்ற நாளமில்லா சுரப்பிகளின் வழியாகவும் ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.

தூய்மைப்படுத்தும் சக்கரம்

தொண்டைச் சக்கரமான விஷுதி சக்கரம் குண்டலினியால் தூண்டப்படும்போது உடலிலுள்ள நச்சுப்பொருட்களனைத்தும் அழிந்து உடல் தூய்மையடையுமென்று ஏற்கெனவே கண்டோம்.

ஆக்ஞை சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழைந்து, அதை இயக்கும்போதுதான் இந்த தூய்மைப்படுத்தும் பணி முழுமையடையும். அதன் பின்னர் எந்த நச்சுப்பொருளும் உடலில் உருவாகாது.

உடலை மட்டுமின்றி, மனதையும் ஆக்ஞை சக்கரம் தூய்மைப்படுத்திவிடும். மனதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் மறைந்துபோகும்.

சிந்தனைகளும் எண்ணங்களும் சீரடையும். மனம் பண்படும். எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை குணங்களும் அறவே மறைந்துபோகும்.

தத்துவம்

முதல் ஐந்து சக்கரங்களும் ஒவ்வொரு தத்துவத்தால் (பஞ்சபூதங்கள்) ஆளப்படுகின்றன என்பதை ஏற்கெனவே கண்டோம்.

உயர்நிலைச் சக்கரங்களான ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய இரண்டும் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டவை.

முதல் ஐந்து சக்கரங்களை தத்துவச் சக்கரங்கள் எனவும்; கடைசி இரு சக்கரங்களை ஆன்மிக சக்கரங்கள் எனவும் கூறுவதுண்டு.

இதழ்கள்

ஆக்ஞை சக்கரத்தின் இதழ்கள் 96 ஆகும். ஒரு சக்கரத்திலுள்ள இதழ்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் சக்திநிலை அமையும்.

முதல் ஐந்து சக்கரங்களில், மூலாதாரத்தில் நான்கு இதழ்கள் எனத் துவங்கி, படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக விஷுதி சக்கரத்தில் பதினாறு இதழ்கள் உள்ளன.

இந்த “பதினாறு’ என்ற எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆக்ஞையின் தொண்ணூற்றாறு என்பது ஆறு மடங்கு அதிகம்! ஆக, ஆக்ஞை சக்கரம் பிற கீழ்நிலைச் சக்கரங்களைவிட பலமடங்கு சக்திபடைத்த சக்கரமாகும்.

ஆக்ஞை சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.

வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம்’ (ஐஹம்), “ஷாம்’ (ஃள்ட்ஹம்) என்று அழைக்கப்படுகின்றன.

ஆக்ஞை சக்கரத்தின் நாடிகளை இயக்கும் சுரங்களும் இவைதான்.

வண்ணம்

வானவில்லின் ஆறாவது வண்ணமான “இண்டிகோ’ என்ற வண்ணமே ஆக்ஞை சக்கரத்தின் வண்ணமாகும். வயலெட், நீலம் ஆகிய இரு வண்ணங்களுக்கும் இடைப்பட்ட, அந்த இருவண்ணங்களும் கலந்த ஒரு வண்ணமே “இண்டிகோ’ என்றழைக்கப்படுகிறது.

ஆக்ஞை சக்கரம் வலுவிழந்த நிலையிலிருந்தால் இண்டிகோ வண்ண உடைகள் அணிவதன் மூலமும், இண்டிகோ வண்ண உள்அலங்காரங்களை வீட்டிலும் அலுவலகத்திலும் உபயோகிப்ப தன் மூலமும் பலன்பெற முடியும்.

இண்டிகோ வண்ண ராசிக்கல்லான “அமீதிஸ்ட்’ என்ற கல்லை அணிவதன் மூலமாகவும் ஆக்ஞை சக்கரத்தைத் தூண்டிவிட முடியும்.

மிகப் பிரபலமான இசைமேதையான மொசார்ட் தனது வீட்டில் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணையுறைகள் என அனைத்துமே இண்டிகோ வண்ணத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்  மிகவும் கண்டிப்பாக இருந்தாராம்.

உடை விஷயத்திலும் இண்டிகோ வண்ண உடைகளையே அவர் விரும்பி அணிந்தாரெனத் தெரிகிறது. அவரது இசை மேதமைக்கு இந்த வண்ணத்தால் தூண்டப்பட்ட ஆக்ஞை சக்கரமே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது.

பீஜா மந்திரம்

“அம்’ (ஆன்ம்) என்பதே ஆக்ஞை சக்கரத்தின் பீஜா மந்திரமாகும். ஐரோப்பியர்கள் எழுதும் பல தந்திரயோக நூல்களில் ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய இரு சக்கரங்களுக்கும் “ஓம்’ என்பதே பீஜா மந்திரமென குறிப்பிட்டுள்ளனர். இது தவறு.

ஆக்ஞை சக்கரத்தின் பீஜா மந்திரம் “அம்’; சகஸ்ரார சக்கரத்திற்கு “ஓம்’ என்பதே சரி.

“ஓம்’ எனும் பீஜா மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்யும்போது சகரஸ்ராரம் தூண்டப்படும். அதோடு இணைந்து ஆக்ஞையிலும் ஓரளவு தூண்டல் நடைபெறும். ஆனால் இது முழுமையான தூண்டலாக இராது.

ஆக்ஞை சக்கரத்தை இயக்க, “அம்’ எனும் பீஜத்தையே உச்சாடணம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கான வழிமுறைகளை ஒரு குருவிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்டு, அவரது ஆசியுடனே துவங்கவேண்டும்.

குருவின் வழிகாட்டுதலும், துணையுமின்றி இத்தகைய பயிற்சிகளில் இறங்க வேண்டாம். விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

வாகனம்

விஷுதி வரையிலான ஐந்து சக்கரங்களுக்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு. ஆனால் ஆக்ஞை சக்கரத்திற்கு வாகனமாக “நாதம்’ என்பதே உள்ளது.

இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.

தெய்வம்

ஆக்ஞை சக்கரத்தின் தெய்வம் சிவன். ஆனால் இந்த சக்கரத்தில் அவர் சிவவடிவமாக இல்லை. அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார்.

ஆண் (நேர் சக்தி), பெண் (எதிர் சக்தி) இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையே அர்த்தநாரீஸ்வரத் தத்துவம்.

குண்டலினி சக்தி ஆக்ஞை சக்கரத்தினுள் நுழைந்து அதைத் திறக்கும்போது நேர்- எதிர், ஆண்- பெண், உயர்வு- தாழ்வு, நன்மை- தீமை என்ற பாகுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும். எல்லாம் ஒன்றுதான் என்ற பரிபூரண நிலை உருவாகிவிடும்.


தேவதை

ஆக்ஞை சக்கரத்தின் அதிதேவதையாக இருப்பது ஹாக்கினி தேவி. தந்திரயோக உயர்நிலைப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு, இந்த தேவியின் அருள் இருந்தால் மட்டுமே ஆக்ஞை சக்கரத்தை இயக்கும் முயற்சிகள் கைகூடும்.

அருளைப்பெற எளிய தந்திர யோக வழிமுறைகள் உள்ளன. அவற்றை ஒரு தகுந்த குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ளமுடியும்.

(நாங்கள் நடத்தும் தந்திர யோக நேரடிப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு இதுபோன்ற பல வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளமுடியும். அடுத்த அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்ரவரி 14, 15 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. (விளம்பரம் காண்க). விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். எவ்விதமான முன் அனுபவங்களும் தேவையில்லை. “அறிவு தாகம்’ என்ற ஒரு தகுதி மட்டும் இருந்தால் போதுமானது.)

புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்)ஆக்ஞை சக்கரம் பூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சக்கரம். புலன்கள் பூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டவை.

பூதங்களின் ஆளுமை இல்லாத நிலையில் புலன், புலனுறுப்பு, செயலுறுப்பு என்பவையும் இராது.

ஆக்ஞை சக்கரத்தின் புலன், புலனுறுப்பு, செயலுறுப்பு ஆகிய அனைத்துமே “மனம்’ என்பதுதான்.

நமது உடலில் பிராண சக்தி, மனசக்தி என இருவிதமான சக்திகள் உள்ளன. பிராண சக்தி உடலின் அனைத்து பாகங்களையும் உறுப்புகளையும் இயக்கும் சக்தியாகும்.

பிராண சக்தியின்றி உடலின் எந்த பாகமும் இயங்கமுடியாது. ஒவ்வொரு செல்லின் இயக்கத்திற்கும் இந்த பிராணசக்தியும் தேவை. நவீன விஞ்ஞானம் கூறும் பிராண வாயு (ஆக்சிஜன்) இந்த பிராணசக்தியில் உள்ளது.

நமது மூளை செயல்படவும் பிராணன் அவசியம். ஆனால் “மனம்’ செயல்பட பிராண சக்தியோடு மனசக்தியும் தேவை. இந்த மனசக்தியை ஆளும் சக்கரமே ஆக்ஞை சக்கரமாகும்.

நாளமில்லா சுரப்பி

மூளையின் உட்புறமாகவுள்ள “பீனியல்’ என்ற நாளமில்லா சுரப்பியே ஆக்ஞையோடு இணைக்கப்பட்ட- ஆக்ஞையின் ஆளுமைக்கு உட்பட்ட சுரப்பியாகும்.

பீனியல் சுரப்பி, ஆக்ஞை சக்கரம் இரண் டுமே ஒளியால் தூண்டப்படுபவை. அதுகுறித்து பின்னர் விரிவாகக் காணலாம்.

குணம்- சாத்விகம்.

லோகம்- தபலோகம்.

கோசம்- விஞ்ஞானமய கோசம்.

வாயு- இல்லை.

உடல்பாகங்கள்

✷ காதுகள்

✷ மூக்கு

✷ இடது கண்

✷ கீழ் மூளை

ஆகிய உடல்பாகங்களே ஆக்ஞை. சக்கரத்தின் ஆளுமைக்குட்பட்ட பாகங்களாகும். ஆக்ஞை சக்கரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் இந்த பாகங்களில் அது பிரதிபலிக்கும். ஆக்ஞை சக்கர குறைபாட்டை சரிசெய்துவிட்டால் இந்த உடல்பாகங்களில் தோன்றிய குறைபாடுகளும் நோய்களும் மறைந்துபோகும்.

(தொடரும்)


13
பிரபஞ்ச அன்பும் பேரானந்தமும்!
டாக்டர் ஜாண் பி. நாயகம்  M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C

 

நமது ஐந்தாவது சக்கரமான விஷுதி சக்கரம் குறித்த அடிப்படைத் தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அடுத்து விஷுதி சக்கரத்தோடு தொடர்புடைய உணர்வு நிலைகள் குறித்தும், குண்டலினி சக்தி எழும்பி, விஷுதி சக்கரம் தூண்டப்படும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் காணலாம்.

 

மனத்தூய்மையும் மன அமைதியும் 


தத்துவங்களில் மிக உயர்ந்த தத்துவமாகக் கருதப்படுவது ஆகாயத் தத்துவம். விஷுதி சக்கரத்தை ஆளும் தத்துவமும் ஆகாயமே.

குண்டலினி சக்தி விஷுதி சக்கரத்தினுள் நுழைந்து அதைத் தூண்டும்போது ஆகாயத் தத்துவம் வலிமைபெறும். நிர்மலமான வானம் போன்று மனம் தூய்மை யடையும்.

தீய சிந்தனைகள் அனைத்தும் மறைந்துபோகும். எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் அழிந்துபோகும். எல்லையற்ற அமைதியும், உயர் சிந்தனைகளும் எண்ணங்களும் மனதில் நிறையும்.

மனம் இதுவரையில் அறிந்திராத ஒரு அமைதி நிலையை அடையும். பற்றுகள் அறுந்துபோகும்.

பந்த பாசங்களும், உலக இச்சைகளும், ஆசைகளும் மாயையினால் உருவானவை. உலக வாழ்க்கையோடு நம்மை இறுகக் கட்டிப்போடும் சங்கிலிகளாக இவை உள்ளன.

குண்டலினி சக்தி விஷுதி சக்கரத்தினுள் நுழையும்போது, இந்த சங்கிலிகள் ஒவ்வொன்றாக அறுபடும். பந்த பாசங்கள் விலகும்.   உலக ஆசைகள் அழியும்.

இச்சைகள் மறையும். மாயை அகலும்.

இது நிகழும்போதுதான் உண்மையான ஆன்மிகப் பயணம் துவங்கும். மாயை அறுந்த நிலையிலேயே ஞானம் உருவாகும்.

 

சூன்ய நிலை


மாயையின் கட்டுகள் அறுந்த நிலையே சூன்ய நிலை எனப்படும். இந்த நிலையை அடைந்த ஞானிகளின் மனம் வானம் போன்று அனைத்திற்கும் சாட்சியாக இருக்குமே தவிர, எதிலும் பங்குபெறாது;

எதிலும் ஒட்டாது.

 

பஞ்சபூதங்களின்மீது ஆளுமை


பஞ்சபூதங்களில் உயர்ந்த பூதமாகக் கருதப்படுவது ஆகாயமே. ஆகாயம் எனும் பூதத்திலிருந்தே பிற பூதங்கள் உருவாயின.

விஷுதி சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நிறையும்போது, பிற நான்கு பூதங்களும் ஆகாயம் எனும் தத்துவத்தினுள் அடங்கிவிடும். பஞ்ச பூதங்களின்மேல் ஆளுமை உருவாகும்.

பஞ்சபூதங்களோடு தொடர்புடைய சித்திகளும், ரித்திகளும் (அதிசயங்கள் புரியும் ஆற்றல்) சாதகருக்குக் கிடைக்கும். ஆனால், ஏற்கெனவே பற்றில்லாத மனநிலை உருவாகிவிட்டதால் இந்த சித்திகள்மேலும், ரித்திகள்மேலும் மனம் ஆசைகொள்ளாது.

இந்த நிலையை அடைந்த ஞானிகள் தங்களிடமுள்ள சக்திகளை (சித்திகள், ரித்திகள்) வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

 

பயங்கள் அகலும்


ஒன்றின்மீது மனம் பற்றுக்கொள்ளும்போதுதான் அது தன்னிடமிருந்து போய்விடுமோ என்ற பயம் உருவாகும்.

பற்றுகளே பயத்தின் தாய்!

உதாரணமாக, உயிரின் மேலுள்ள பற்றே அது பிரிந்துவிடுமோ என்ற பயத்தை உருவாக்கும்.

ஆசைகளும் பற்றுகளும் அறுந்த நிலையில் பயங்களும் மறைந்துபோகும். எது குறித்தும் அச்சம் இராது. பூரணமாக பயங்கள் விலகிய நிலையை “அபய நிலை’ என்கிறோம். (பயம் என்ற சொல்லின் எதிர்ச் சொல் அபயம்).

விஷுதி சக்கரம் தூண்டப்பட்டவர்களுக்கே அபய நிலையை அடைவது சாத்தியமாகும்.

 

எல்லையற்ற அன்பு


நான்காவது சக்கரமான அனாஹதம் குண்டலினியால் தூண்டப்படும்போதே மனதில் எல்லையற்ற அன்பு பொங்கிவழி யுமென்பதை ஏற்கெனவே கண்டோம்.

அனாஹத அன்புநிலையில், அந்த அன்பின் விளைவாக சில பற்றுகள் உருவாகும் என்பதையும் கண்டோம்.

குண்டலினி சக்தி அனாஹதச் சக்கரத் தைத் தாண்டி விஷுதி சக்கரத்தினுள் நுழையும்போது, அனாஹதத் தூண்டுததால் உருவான “பிரபஞ்ச அன்பு’ பலமடங்கு அதிகமாகும்.

ஆனால் அந்த அன்பினால் உருவான பற்றுகள் முழுவதுமாக அழிந்து போகும். அன்பு அதிகமாகும்; ஆனால் பற்று இராது.

 

ஞான நிலை


மனம் அமைதியடைந்து, பற்றுகள் விலகி, பஞ்சபூதங்களின்மீதும் ஆளுமை உருவான நிலையில்தான் உண்மையான ஞானம் உருவாகும்.

கல்வியாலும் அனுபவத்தாலும் உருவாவது அறிவு. எந்த முயற்சியுமின்றித் தானாகவே உருவாவது ஞானம்.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம் ஆகிய நான்கு சக்கரங்களிலும் குண்டலினி நுழையும்போதே அந்தந்த சக்கரங்களோடு தொடர்புடைய ஞானங்கள் உருவாகத் துவங்கிவிடும்.

ஆனால் பற்றுகளும், மாயையின் கட்டுகளும் மீதமிருப்பதால் அந்த ஞானங்கள் சற்றே குறைபட்ட ஞானங்களாகவே இருக்கும்.

 

விஷுதி சக்கரத்தினுள் குண்டலினி


நுழையும்போதுதான் பற்றுகள் முழுமையாக அகலும். மாயையின் பிடியிலிருந்து மனம் முழுமையாக விடுபடும். இந்த நிலையில்தான் ஞானம் பூரணமடையும். (பூரண ஞானம்).

 

பேச்சுத் திறமை


விஷுதி சக்கரமே “பேச்சு’ எனும் செயலை ஆளும் சக்கரம். விஷுதியின் சக்தியே நமது குரல்நாண்களை இயக்கி பேச்சை உருவாக்குகிறது.

விஷுதி சக்கரம் செயல் குறைந்த நிலையில் உள்ளவர்களுக்கு பேச்சு சரளமாக வராது. மனதில் தோன்றும் எண்ணங்களை பிறருக்குப் புரியும்படியாக விளக்கிச் சொல்லமுடியாமல் தவிப்பார்கள்.
சிலருக்கு மேடையில் ஏறினாலே பயம் தொண்டையை அடைத்துக் கொள்ளும்! பேச்சு சரளமாக வராது.

வேறு சிலருக்கு தொண்டைச் சக்கரம் வலுவாக இருக்கும். ஆனால் அது சுற்றவேண்டிய திசைக்கு எதிர்திசையில் சுற்றிக் கொண்டிருக்கும்.

இவ்வாறு சக்கரம் எதிர்திசையில் வலுவாக இயங்கும் நபர்கள் மிகச்சிறந்த பேச்சாளர்களாக இருப் பார்கள்.  எதுகை- மோனை இவர்களது பேச்சில் நிறைந்திருக்கும். மிக அலங்காரமான பேச்சாக இருக்கும்.

இவர்களது பேச்சு நடை கேட்பவரை ஈர்க்கும்- கட்டிப்போடும். ஆனால் பேச்சு முடிந்த பின்னர்இவர் பேசிய கருத்து என்னவென்று அலசிப் பார்த்தால், ஆழமான கருத்துகள் எதுவும் இராது. இதை “வெற்றுப் பேச்சு’ என்பார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதான்.

விஷுதி சக்கரம் எதிர்திசையில் சுழலும்போது பேச்சு வலிமையாக இருக்கும். ஆனால் அந்தப் பேச்சில் ஞானம் இராது. கள்ளம், கபடம் நிறைந்திருக்கும். வாய்கூசாமல் பொய் பேசுவார்கள். பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிடுவார்கள். உண்மைகளை மறைப்பார்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, பல திறமையான வழக்கறிஞர்கள், வியாபாரிகள் ஆகியோரிடமும் இந்த நிலை காணப்படும்.

விஷுதி சக்கரத்தினுள் குண்டலினி நுழைந்து, அது தூண்டப்பட்ட நிலையில் உருவாகும் பேச்சுத் திறன் ஞானம் நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் இருக்கும். இந்தப் பேச்சில் பொய்கள் இராது. ஆணவம் இராது. தன்னலம் இராது.

இத்தகைய ஞானம் நிறைந்த பேச்சு கேட்பவர் மனதையும் பண்படுத்தும். அவர்களையும் ஞானப் பாதையில் அழைத்துச்செல்லும்!


உடலில் புத்துணர்வு


விஷுதி சக்கரம் விஷங்களை முறிக்கும் சக்தியுள்ள சக்கரம். குண்டலினியால் விஷுதி தூண்டப்
படும்போது உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் அழிந்து போகும். உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

உடலின் ஒவ்வொரு செல்லிலும் புத்துருவாக்கம் நடைபெறும். முதுமையடைதல் தள்ளிப்போகும். உடல் இனிமையாகும்; வலுவாகும்.

இதுவே காயகல்பம்! இதுவே என்றும் பதினாறு என்ற மார்க் கண்டேய நிலை!

 

பேரானந்த நிலை


மனம் அமைதியடைந்து, பஞ்ச பூதங்களும் கட்டுக்குள் வந்து, நோய்கள் அகன்று, ஞானம் உருவான நிலையில் எல்லையற்ற ஆனந்தம் மனதில் உருவாகும்.

குண்டலினி சக்தியால் விஷுதி சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் மனதில் பந்த பாசங்களோ, பற்றுகளோ இராது. அபய நிலை உருவாகும்.

இந்த நிலையில் உருவாகும் ஆனந்தமே பேரானந்தம் எனப்படும்.

இந்த பேரானந்த நிலையில் மனம் திளைத்திருக்கும்.

(தொடரும்)

பிரபஞ்ச அன்பு, பரமானந்தம் தரும் அனாஹதம்!
தந்திர யோகம் பாகம்- 3
11
டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C

தந்திர யோகத்தில் அனாஹதச் சக்கரத்திற்கு மிக முக்கியமான ஒரு இடமுண்டு.

✶ இந்த சக்கரத்தை “இதயச் சக்கரம்’ என்றும் அழைப்பதுண்டு. நமது உயிர்வாழ்தலுக்கு அடிப்படை இதயத் துடிப்பே. அதை சீராக்குவதும் இயக்குவதும் அனாஹதச் சக்கரமே.

✶ நமது உடலில் 72,000 நாடிகள் உள்ளன. உடலின் இயக்கங்கள் அனைத்தையும் இந்த நாடிகளே கட்டுப்படுத்துகின்றன.

சில தந்திர யோக நூல்களில் இந்த 72,000 நாடிகளும் நாபியிலிருந்து புறப்படுவதாகக் குறிப்பு உள்ளது.

வேறுசில நூல்களில் நாடிகளின் பிறப்பிடம் அனாஹதச் சக்கரமே என்ற குறிப்பு உள்ளது.

நாடிகள் எங்கிருந்து துவங்கினாலும், அவற்றை இயக்குவது அனாஹதச் சக்கரமே.

✶ மணிப்பூரகச் சக்கரத்தை சூரிய சக்கரமென்று அழைக்கிறோம். சூரியனிலிருந்து வெளிவரும் வெப்ப சக்தியே அந்த சக்கரத்தை இயக்கும் சக்தியாகும்.

சூரியனின் வெப்ப சக்தியை கிரகித்து அதை மணிப்பூரகச் சக்கரத்திற்கு அனுப்புவது அனாஹதச் சக்கரத்தின் பணியாகும்.

பிரணவ மந்திரம்

“அனாஹதம்’ என்ற சொல்லுக்கு “தட்டப்படாத’, “ஒலிக்கப்படாத’ என்ற அர்த்தங்களும் உண்டு.

பிரணவ மந்திரமான “ஓம்’ என்பதே “ஒலிக்கப்படாத ஒலி’ என்று அழைக்கப்படுகிறது. (பட்ங் நர்ன்ய்க்ப்ங்ள்ள் நர்ன்ய்க்). தட்டப்படாத ஒலி என்றாலும் அது பிரணவ மந்திரத்தையே குறிக்கும்.

உடலில் இந்த பிரணவ மந்திரத்தின் ஊற்றாக- பிறப்பிடமாகத் திகழ்வது நமது அனாஹதச் சக்கரமே.

இந்த சக்கரத்திலிருந்து உருவாகும் பிரணவ மந்திரமே உடல் முழுவதும் பரவி, உடலின் அடிப்படை அதிர்வுக்குக் காரணமாகிறது.

அன்பு, காதல் அனாஹதச் சக்கரத்திற்கு “அன்புச் சக்கரம்’, “காதல் சக்கரம்’ என்ற பெயர்களும் உண்டு.

ஒரு மனிதன் மணிப்பூரகச் சக்கரத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, அனாஹதச் சக்கரத்தின் ஆளுமையின்கீழ் வரும்போதுதான் அவனுள் “காதல்’ என்ற உணர்வு அரும்பத் துவங்கும்.

சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களின் ஆளுமையின் கீழிருக்கும்போது எதிர்பாலினர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அது காதல் அல்ல. இனக்கவர்ச்சி மட்டுமே. இதையே ஆங்கிலத்தில் “இன்பாச்சுவேஷன்’ என்கிறார்கள்.

இருபத்தொரு வயது முடிந்து இருபத்திரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும்போதுதான் அனாஹதச் சக்கரத்தின் செயல்பாடுகள் துவங்கும்.

இதன்பின்னர் உருவாவதுதான் உண்மையான காதல் உணர்வு! எனவேதான் இந்த சக்கரத்தை “காதல் சக்கரம்’ என்றும் அழைக்கிறோம்.

அனாஹதச் சக்கரத்தின் உணர்வு நிலைகள் தந்திர யோகப் பயிற்சிகளின் மூலமாக குண்டலினியை எழுப்பும் போது, அது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களைக் கடந்துசெல்லும்.

ஆனால் இந்த சக்கரங்களில் குண்டலினி தங்குவதில்லை. பயிற்சிகளைச் செய்யும்போது மேலே செல்லும். சற்று நேரத்திற்குப்பின் மீண்டும் கீழே இறங்கிவிடும்.

இவ்வாறு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது குண்டலினி மேலும் கீழுமாக சென்றுகொண்டேயிருக்கும். ஆனால் எந்த சக்கரத்திலும் அது தங்காது.

தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் “தட்டப்படாத’ அனாஹதச் சக்கரத்தைத் தட்டித் திறந்தால் மட்டுமே, குண்டலினி சக்தி மணிப்பூரகச் சக்கரத்தைத் தாண்டி, அனாஹதச் சக்கரத்தின் உள்சென்று தங்கிநிற்கும்.

இவ்வாறு அனாஹதச் சக்கரத்தினுள் குண்டலினி சென்று தங்கும்போது அந்த சாதகரின் மனநிலையிலும், உணர்வு நிலைகளிலும் பலவிதமான மாற்றங்கள் உருவாகும். அவற்றுள் முக்கியமானவையென கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்.

1. அன்பு நிலை

“காதல்’ மட்டுமின்றி அன்பை உருவாக்குவதும் அனாஹதச் சக்கரமே. இந்த சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது எல்லையற்ற அன்பு உருவாகும். இதையே “பிரபஞ்ச அன்பு’ என்கிறோம்.

பிற மனிதர்கள்மீது மட்டுமின்றி, உலகிலுள்ள அனைத்து உயிர்களின்மீதும் எல்லையற்ற அன்பு உருவாகும்.

மனிதர்கள், விலங்குகள், புழு, பூச்சிகள் ஆகிய அனைத்திலும் உள்ளுறைவது “இறைவன்’ எனும் பரசக்தியின் அம்சமே என்ற உணர்வு ஏற்படும். அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் மனநிலையும், அனைத்து உயிர்களின்மீதும் எல்லையற்ற அன்பும் உருவாகும்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி’

என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் இதுவே. குண்டலினி சக்தி அனாஹதச் சக்கரத்தினுள் சென்று, அந்த சக்கரம் திறந்த நிலை ஏற்பட்ட ஒருவரால் மட்டுமே காக்கையும் குருவியும் எனது ஜாதி என பாடமுடியும்.

தாவரங்களிலும் உயிராக நிற்பது இறைவனின் அம்சமே என்பதை உணரும்போதுதான்- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாரின் மனநிலை உருவாகும்.

அனாஹதச் சக்கரத்தினுள் குண்டலினி செல்லும்போதுதான் பிறரது அன்பை உணரும் மனநிலையும் உருவாகும்.

பிறரது சந்தோஷங்களும், துக்கங்களும் தனது சந்தோஷங்களாகவும் துக்கங்களாகவும் உணரும் மனநிலையும் உருவாகும்.

2. தன்னுணர்வு

“தான் யார்?’ என்ற தன்னுணர்வைத் தருவது அனாஹதச் சக்கரமே.

குண்டலினி சக்தி அனாஹதச் சக்கரத்தினுள் சென்று, அச்சக்கரத்தைத் தூண்டும்போதுதான் தன்னைப் பற்றிய முழுமையான புரிதல் ஒரு மனிதனிடம் உருவாகும்.

இந்த தன்னுணர்வையே “மனசாட்சி’ என்றும் கூறுகிறோம்.

அனாஹதச் சக்கரம் திறந்த நிலையில், தர்மத்திற்கு எதிரான அல்லது புறம்பான எந்த செயலிலும் மனம் ஈடுபடாது.

தான் யார்? இந்தப் பிறவி எடுத்ததன் நோக்கமென்ன? தன்னுடைய கர்மாவை நிறைவேற்றுவதெப்படி என்பன போன்ற பல கேள்விகளுக்கும் விடைதருவது விழித்தெழுந்த அனாஹதச் சக்கரமே!

3. ஆத்மாவும் உடலும்

ஜீவாத்மாவின் உறைவிடம் அனாஹதச் சக்கரமே. இந்த சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போதுதான் ஜீவாத்மா தனது முழு பரிமாணத்தையும் உணரத் துவங்கும்.

பருவுடலுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக அனாஹதச் சக்கரம் செயல்படும். பருவுடல், ஆத்மாவோடு இணைந்து செயல்படத் துவங்கும்.இந்த நிலை ஏற்படும்போது தேவையற்ற பரபரப்புகள், ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிப்போகும்.

4. அமைதி நிலை

அனாஹதச் சக்கரம் குண்டலினி சக்தியால் தூண்டப்படும்போது மனதில் இதுவரையில் அனுபவித்திராத பேரமைதி உருவாகும்.

படிப்படியாக பேச்சைக் குறைத்துக்கொள்வார்கள். எல்லையற்ற சாந்தம் மனதில் நிறைவதால், பேச்சு உட்பட அனைத்து ஆரவாரங்களும் அடங்கிப்போகும். தேவைக்கு மட்டுமே பேசுகின்ற நிலை உருவாகும்.

5. பேரானந்த நிலை

அனாஹதச் சக்கரத்திற்கு “ஆனந்த கண்டம்’ என்ற பெயரும் உண்டு. “கண்டம்’ என்ற சொல்லுக்கு “வேர்’ என்ற அர்த்தமும் உண்டு.

எல்லையற்ற பரமானந்த நிலையின் ஆணிவேராக இருப்பது அனாஹதச் சக்கரமாகும். இந்த சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது, மனதில் எல்லையற்ற ஆனந்தநிலை உருவாகும். இதையே “பரமானந்த நிலை’ என்கிறோம்.

6. சித்திகள்

குண்டலினி சக்தி அனாஹதச் சக்கரத்தினுன் நுழைந்து, அனாஹதம் திறந்துகொள்ளும்போது, அந்த சாதகருக்கு பலவித சித்திகள் கிடைக்கும். அவற்றுள் முக்கியமானவையென-

✷ வசீகரம்

✷ நோய் தீர்க்கும் சக்தி

✷ கூடுவிட்டுக் கூடுபாய்தல்

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அனாஹதச் சக்கரம் திறந்த நிலையிலுள்ள மனிதரிடம் ஒரு வசீகரம் உருவாகும். அனைத்துயிர்களும் இவரிடம் தானாகவே ஈர்க்கப்படும்.

இவர்களிடம் பிறரது நோய்களை சரிசெய்யும் ஆற்றல் உருவாகும். இவர்களது கைபட்டாலே அனைத்து நோய்களும் பறந்தோடிப் போகும்.

கூடுவிட்டுக் கூடுபாயும் சக்தியும் இவர்களிடம் உருவாகும். பல சித்தர்களிடம் இந்த சித்தி இருந்ததாகப் படித்திருக்கிறோமல்லவா? இந்த சித்திகள் அனைத்துமே அனாஹதச் சக்கரம் திறந்த நிலையில் தானாகவே உருவாகும்.

அடுத்த இதழில் ஐந்தாவது சக்கரமான விஷுதி சக்கரம் குறித்த தகவல்களைக் காணலாம்.

(தொடரும்)


10

நமது முதன்மைச் சக்கரங்களில் நான்காவது சக்கரம் அனாஹதம். இதை அன்புச் சக்கரம் என்றும் சொல்வதுண்டு. இந்த சக்கரம் நமது மார்புப் பகுதியில் அமைந்துள்ளதால் “இதயச் சக்கரம்’ இதய பத்மம்’ என்ற பெயர்களும் இதற்குண்டு.

“அனாஹதம்’ என்ற சொல்லுக்கு, “தட்டப்படாத’, “அழிக்கமுடியாத’ என்ற அர்த்தங்கள் உண்டு. “முடிவில்லாதது’ என்ற பொருளும் உண்டு.

பைபிளில் வருகின்ற, “தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற வாசகம் இந்த அனாஹதச் சக்கரத்தைக் குறிப்பதாகும்.

இதுவரையில் நாம்கண்ட முதல் மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை பூமி சார்ந்த சக்கரங்கள்.

அனாஹதத்திற்கு மேலேயுள்ள விஷுதி, ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய மூன்று சக்கரங்களும் ஆன்மிகச் சக்கரங்கள் அல்லது மேல்நிலைச் சக்கரங்கள்.

பூமி சார்ந்த மூன்று கீழ்நிலைச் சக்கரங்களுக்கும், ஆன்மிகம் சார்ந்த மூன்று மேல்நிலைச் சக்கரங்களுக்கும் இடையிலிருந்து, ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படுவது அனாஹதமாகும்.

குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து முழுமையாக எழும்பும்போது அது மேலே சென்று முதலில் தங்கும் சக்கரம் அனாஹதம். எனவே தந்திர யோகப் பயிற்சிகளில் அனாஹதச் சக்கரப் பயிற்சிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

எங்கே அமைந்துள்ளது?

நமது மார்பின் மையப் பகுதியில், முதுகுத் தண்டிற்கு சற்று முன்பாக இந்த சக்கரம் உள்ளது.

இதை இதயச் சக்கரம் என்று கூறினாலும் இது மார்பின் இடது பகுதியில் இல்லை. மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

தத்துவம்

“காற்று’ (AIR) எனும் தத்துவமே அனாஹதச் சக்கரத்தை ஆளும் தத்துவமாகும்.

குண்டலினி சக்தி அனாஹதச் சக்கரத்தை அடையும்போது, மூலாதார சக்கரத்தின் தத்துவமான நிலம், சுவாதிஷ்டானத்தின் தத்துவமான நீர், மணிப்பூரகத்தின் தத்துவமான நெருப்பு ஆகிய மூன்று தத்துவங்களும் இணைந்து, அனாஹதத்தின் வாயு தத்துவத்துடன் கலந்து விடும்.

“வாயு’ எனும் பூதம் உடலில் சமநிலையில் இருந்தால்தான் அனாஹதத்தின் ஆளுமையின்கீழ் வருகின்ற இதயம், நுரையீரல்கள் ஆகிய இரு முக்கியமான உறுப்புகளும் நலமாக இயங்கும்.

வாயு எனும் தத்துவத்தின் சமநிலையில் ஏற்படும் குறைபாடுகள் அனாஹதச் சக்கரத்தின் இயக்கங்களை பாதிக்கும். அந்த சக்கரத்தால் ஆளப்படும் உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு நோய்களாக மாறும்.

✷ இதய நோய்கள்

✷ மனக் கலக்கங்கள்

✷ மன நோய்கள்

✷ ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்

✷ மூச்சுத் திணறல்

போன்ற பல நோய் களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைவது வாயு எனும் பூதத்தில் ஏற்படும் மாற்றங்களும், அனாஹதச் சக்கரத்தின் இயக்கத்தில் தோன்றும் சிக்கல்களுமே ஆகும்.

இதழ்கள்

அனாஹதச் சக்கரம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட தாமரையாக தந்திர யோக நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு நாடியைக் குறிக்கும்.

அனாஹதச் சக்கரத்தில் உருவாகும் சக்தி இந்த பன்னிரண்டு நாடிகள் வழியாகவே உடல் முழுவதும் சுமந்துசெல்லப்படுகிறது. இந்த நாடிகளில் சக்தித் தடைகள் ஏற்பட்டால், அனாஹதச் சக்கரத்தின் ஆளுமையின்கீழ் வருகின்ற உள்ளுறுப்புகளும், நாளமில்லா சுரப்பிகளும் பாதிக்கப்படும்; நோய்கள் உருவா கும்.

இந்த இதழ்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்வரங்கள் உண்டு. அவற்றை முறையாக உச்சரிப்பதன் மூலம் இந்த நாடிகளின் இயக்கங்களை சரிசெய்ய முடியும். அந்த வித்தையை ஒரு தந்திர யோக குருவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ளமுடியும்.


பீஜா மந்திரம்

மணிப்பூரகச் சக்கரத்தின் பீஜா மந்திரம் “யம்’ என்பதாகும். இந்த பீஜா மந்திரத்தை சரியான முறையில் உச்சாடனம் செய்துவந்தால் அனாஹதச் சக்கரம் தூண்டப்படும்; வலுவாகும்.

இந்த பீஜா மந்திர உச்சாடனத்தில் ஈடுபடும் முன்னர் பல முன் பயிற்சிகளைச் செய்து, உடலைத் தயார்படுத்திக்கொள்வது மிகமிக அவசியம்.

முன்பயிற்சிகள், பீஜா மந்திர உபதேசம் ஆகியவற்றையும் ஒரு நல்ல தந்திர யோக குருவிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளவேண்டும்.

குருவின் அனுமதியோடு, அவரது மேற்பார்வையில் மட்டுமே இத்தகைய உயர்நிலை பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். புத்தகங்களின் வாயிலாக அறிந்து கொண்டு, குருவின் துணையின்றி இத்தகைய உயர் நிலைப் பயிற்சிகளில் இறங்கினால் பலவிதமான சிக்கல்கள் உருவாகும்.

சுரங்கள்

அனாஹதச் சக்கரத்தின் பன்னிரண்டு இதழ்களுக்கும் (நாடிகளுக்கும்) தனித்தனி சுரங்கள் உள்ளன என ஏற்கெனவே கண்டோம். அவை-

✷ ஹம்

✷ ஹாம்

✷ கம்

✷ காம்

✷ டம்

✷ சம்

✷ சாம்

✷ ஜம்

✷ ஜாம்

✷ நியாம்

✷ தம்

✷ தாம்

இந்த ஒவ்வொரு சுரத்தையும் முறையாக உச்சாடனம் செய்யும்போது அவற்றோடு தொடர்புடைய இதழ்கள் (நாடிகள்) தூண்டப்படும். உச்சரிப்பு தவறாக இருந்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. குருவின் துணையின்றி இவற்றில் ஈடுபடக்கூடாது.

நிறம்

வானவில்லின் நான்காவது வண்ணமான பச்சையே அனாஹதச் சக்கரத்தின் வண்ணமாகும். அனாஹதச் சக்கரம் வலு
விழந்த நிலையிலிருந்தால்,

✷ பச்சை வண்ண ஒளி

✷ பச்சை வண்ண உடைகள்

✷ பச்சை வண்ண உணவுகள்

✷ பச்சை வண்ணக் கற்கள்
(உதாரணமாக- மரகதம்)

ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் சரிசெய்யமுடியும்.

வாகனம்

✷ கலைமான்.

இது வாயு பகவானின் வாகனம்.

தெய்வங்கள்

அனாஹதச் சக்கரத்தின் காவல் தெய்வமாக இருப்பவர் வாயு பகவான். அனாஹதத்தை ஆளும் பூதம் “வாயு’ என்பதை ஏற்கெனவே கண்டோம். அந்த பூதத்தின் உருவகமே வாயு பகவான்.

இந்த சக்கரத்தின் முதன்மை தெய்வமாகக் கூறப்படுபவர் “ஈசன்’. பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் காரண மாக அமைபவர் ஈசனே.

பக்தர்களுக்கு அபயமளிக்கும் சிவபெருமானின் அபய வடிவமே ஈசன். தந்திர யோகப் பயிற்சியின் மேல்நிலைகளுக்குள் செல்லும்போது “ஈசனின்’ அருள் கிடைத்தால் மட்டுமே பயங்கள் அகலும். “அபய’ நிலை (பயமற்ற நிலை) உருவாகும்.

அதிதேவதை

அனாஹதச் சக்கரத்தின் அதிதேவதையாக விளங்குபவள்- காக்கினி தேவி.

இந்த தேவியே ஈசனின் துணையாக புராணங்களில் கூறப்படுகிறாள்.

காக்கினி தேவியின் துணையும் அருளும் இருந்தால் மட்டுமே அனாஹதச் சக்கரத்தைத் திறக்கமுடியும்.

புலன் (தன்மந்த்ரம்)

அனாஹதச் சக்கரத்தால் ஆளப்படும் புலன் “தொடு உணர்வு’. (பர்ன்ஸ்ரீட்).

புலனுறுப்பு (ஞானேந்திரியம்)

அனாஹதத்தின் ஞானேந்திரியம், மெய் அல்லது தோல் (நந்ண்ய்). இதன் வழியாகவே தொடு உணர்ச்சியென்ற தன்மந்த் ரத்தை உணருகிறோம்.

செயலுறுப்பு (கர்மேந்திரியம்)

நமது கைகளே அனாஹதச் சக்கரத்தால் ஆளப்படும் செயலுறுப்பாகும். நாம் ஒன்றைத் தொட்டுணர, நமது கைகள் என்ற கர்மேந்திரியத்தையே உபயோகப்படுத்துகிறோம்.

நாளமில்லா சுரப்பி “தைமஸ்’ என்ற நாளமில்லா சுரப்பி அனாஹதத்தின் ஆளுமையின்கீழ் உள்ளது.

இந்த சுரப்பியே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆளும் நாளமில்லா சுரப்பியாகும். தைமஸ் நல்ல நிலையில் இயங்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தி உறுதியாக இருக்கவும் அனாஹதச் சக்கரம் வலுவாக இருக்க வேண்டும்.

குணம்

✷ ரஜோ குணம்.

லோகம்

✷ மகா லோகம்.

கோசம்

✷ மனோமய கோசம்.

உள்ளுறுப்புகள்

✷ இதயம்

✷ நுரையீரல்கள்

✷ இனப்பெருக்க உறுப்பு

✷ ரத்த ஓட்டம்
ஆகிய அனைத்துமே நமது அனாஹதச் சக்கரத்தின் ஆளுமையின் கீழ் வருபவை. அனாஹதச்சக்கரத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றில் பிரதிபலிக்கும்.

(தொடரும்)மது சக்கரங்களின் இயக்கங்களே நமது உணர்வு நிலைகளையும் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொருவிதமான உணர்வு நிலையுடன் தொடர்புள்ளதாக உள்ளன.

மூலாதாரச் சக்கரத்தோடு தொடர்புடைய உணர்வு நிலைகள் குறித்து தற்போது காணலாம்.

மூலாதார ஆளுமை

ஒரு குழந்தை பிறக்கும்போது முதல் சக்கரமான மூலாதாரமும், கடைசி சக்கரமான சகஸ்ராரமும் திறந்த நிலையில் இருக்கும். தமது முழுத் திறனோடு இயங்கும்.

பிற ஐந்து சக்கரங்களும் மந்தநிலையில், முழுமையாகச் செயல்படாத நிலையில் இருக்கும்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஏழு வயது வரையில் (0-7) அது முழுக்க முழுக்க மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையின்கீழ் இருக்கும்.

இந்த ஏழு வருடங்களில் அந்தக் குழந்தை யின் உணர்வு நிலைகளும் மூலாதார உணர்வு நிலையாகவே இருக்கும்.

ஏழு வயது முடிந்து எட்டு வயது துவங்கும் போது, மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, அடுத்த சக்கரமான சுவாதிஷ் டான சக்கரத்தின் ஆளுமைக்குள் அந்தக் குழந்தை செல்லும்.

மூலாதார உணர்வு நிலைகள்

மூலாதாரத்தை “பூமிச் சக்கரம்’ என்று அழைக்கிறோம். நம்மை பூமியோடு, உலகம் சார்ந்த விஷயங்களோடு இணைக்கும் சக்கரமே மூலாதாரம். மூலாதாரத்தால் உருவாகும் உணர்வு நிலைகள் அனைத்துமே பூமி சார்ந்தவையாக இருக்கும்.

✷ உயிர்வாழும் உந்துதல்

✷ தான், தனது என்ற எண்ணம்

✷ சுயநலம்

✷ பொருட்களின்மேல் அதிகப்படியான பற்று

✷ பலவிதமான ஆசைகள்

ஆகிய அனைத்துமே  மூலாதாரச் சக்கரத் தின் ஆளுமையினால் உருவாகும் உணர்வு நிலைகளாகும்.

1. உயிர்வாழும் உந்துதல்

“உயிர்வாழும் உந்துதல்’ இயல்பாகவே அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. பரிணாம வளர்ச்சியின் கீழ்த்தட்டில் இருக்கும் ஒரு செல் உயிரினங்களிலிருந்து (அமீபா, பாக்டீரியா போன்றவை) பரிணாம வளர்ச்சி யின் மேல்தட்டிலிருக்கும் மனிதர்கள் வரை யிலும் இந்த உந்துதல் காணப்படுகிறது.

பிறந்த குழந்தைக்குக்கூட பசித்தால் அழவேண்டும் என்ற “உந்துதல்’ இருக்கிறது.

பால் ஊட்டும்போது சப்பிச் சாப்பிடவேண்டும் என்று பிறந்த குழந்தைக்கு கற்பித்தது யார்? அது இயல்பாகவே, இயற்கை யாகவே அமைந்துள்ள ஒரு உந்துதல்.  (Instincts).

தனக்குப் பாதகமான ஒரு சூழல் ஏற்படும்போது, அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதும் இந்த உந்துதல் இருப்பதால்தான்!

எனவேதான் இந்த உந்துதலை ஆங்கில மொழியில் Basic Survival Instincts’  என்று அழைக்கிறார்கள். இவை உயிர்வாழத் தேவை யான அடிப்படை உந்துதல்கள்.

விலங்குகளில் இந்த உயிர்வாழும் உந்து தலைத் தருவது அவற்றின் முதல் சக்கரமான “பாதாளச் சக்கர’மாகும்.

மனிதர்களுக்கு முதல் சக்கரம் மூலாதாரம். அதுவே இந்த உயிர்வாழும் உந்துதலைத் தரும் சக்கரம்!


2. தான், தனது என்ற எண்ணம்

பிறந்தது முதல் ஏழு வயதுவரை ஒரு குழந்தையின் உலகம் “தான்’, “தனது’ என்பதைச் சுற்றியே இருக்கிறது. பிறரைப் பற்றிய அக்கறை இருப்பதில்லை.

தான் நினைத்தது நடக்கவேண்டும்- தான் செய்வதே சரி என்பதுபோன்ற அடமும் ஒட்டாரமும் இந்தப் பருவத்தில் அதிகமிருக்கும். அழுது அடம்பிடித்து, தான் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் முனைப்பு காணப்படும். இது மூலாதாரத்தின் ஆளுமையால் உருவாகும் உணர்வு நிலை.

✷ எனது பொம்மை

✷ எனது அப்பா

✷ எனது அம்மா

✷ எனது நாற்காலி

என்று அனைத்தையும் “தனது’ என சொந்தம் கொண்டாடும். எதையும் பிறரோடு பகிர்ந்துகொள்ளாது.

இந்தப் பருவத்தில் அடுத்ததாக ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்தால் அந்தக் குழந்தையோடு போட்டியும் பொறாமையும் உருவாகிவிடும்.

அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கிடையே சதா போட்டி இருந்துகொண்டேயிருக்கும். இதையே சகோதரச் சண்டை- ஆங்கிலத் தில்  “நண்க்ஷப்ண்ய்ஞ் தண்ஸ்ஹப்ஹழ்ஹ்’ என்று கூறுகிறோம். இதுவும் மூலாதாரச் சக்கர ஆளுமையால் உருவாவதே.

இந்த உணர்வு மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு மனநல மருத்துவரின் அறிவுரையும் சிகிச்சையும் தேவைப்படுகிறது.

3. சுயநலம்

அனைத்திலும் தான், தனது என்றே செயல்படும் குழந்தை முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட ஒரு குழந்தையாகவே இருக்கும்.

இதில் குழந்தையின் தவறு எதுவும் கிடையாது. ஏழு வயதுவரை அக்குழந்தை மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையில்தான் இருக்கும். எனவே அந்த உணர்வு நிலைதான் உருவாகும்.

இதைக் குறைக்க அல்லது சரி செய்ய சிறு வயது முதலே பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மனப்பாங்கை சிறிது சிறிதாக அக் குழந்தையிடம் உருவாக்கவேண்டும். தொடர்ந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்.

4. பொருட்களின்மீது அதிகப்படியான பற்று

மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையின்கீழ் இருக்கும்போது உலகம் சார்ந்த பொருட்களின்மீது அதிகப்படியான பற்று இயல்பாகவே உருவாகிவிடும்.

சிறுவயதில் வைத்து விளையாடிய பொம்மைகளையும், பிற விளையாட்டுப் பொருட்களையும் வளர்ந்த பிறகும்கூட சிலர் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அவை ஏழு வயதிற்குள் அவர்கள் விளையாடப் பயன்படுத்தியவையாக இருக்கும்.

ஏழு வயதுவரை மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையின் கீழ் இருப்பதால் இந்தப் “பற்று’ மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது. வளர்ந்தபின்னும் அது மறையாமல் இருப்பதால், அந்தப் பொருட்களை பிரிய மனமின்றி பாதுகாத்து வைத்திருப்பார்கள்!

5. பலவிதமான ஆசைகள்

ஒரு குழந்தைக்கு ஏழு வயது முடிந்து எட்டு வயதாகும் போது அது மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, இரண்டாவது சக்கரமான சுவாதிஷ்டானத்தின் ஆளுமைக்குள் வருகிறது.

இந்த நிலையில் மூலாதாரத்தின் ஆளுமையும், உணர்வு நிலைகளும் முற்றிலுமாக மறைந்து போகவேண்டும். (உயிர் வாழும் உந்துதல் மட்டும் இருக்கும்.)

✷ தான், தனது என்ற எண்ணம் மறையவேண்டும்.

✷ சுயநலம் அகலவேண்டும்.

✷ பொருட்களின்மீதுள்ள அதிகப்படியான பற்றும் பாசமும் விலக வேண்டும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் இது நடைபெறுவதில்லை! உலகிலுள்ள பெரும்பாலான மக்களும் சாகும் வரையிலும் கீழ்நிலைச் சக்கரங்களின் ஆளுமையிலேயே வாழுகிறார்கள்.

மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையின்கீழ் தொடர்ந்து வாழும்போதுதான்,

✷ மண்ணாசை

✷ பெண்ணாசை

✷ பொன்னாசை

போன்ற பெரும் ஆசைகள் அந்த மனிதனை அலைக்கழிக்கின்றன. இந்த ஆசைகளின் வழியே அவனது வாழ்க் கைப் பயணம் தொடருகிறது.

புத்தர் கூறியபடி, இந்த ஆசைகளே அவனது அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகின்றன.

சமுதாயத்தில் நடைபெறும் பலவிதமான மோசடிகள், நம்பிக்கைத் துரோகங்கள், வன்முறைகள், கொள்ளை, கொலை போன்ற அனைத்து குற்றங்களுக்கும் இந்த மூன்று ஆசைகளே மூல காரணமாக அமைகின்றன.

ஏழு வயதில் மூலாதாரத்தின் ஆளுமை குறைந்து விட்டால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இராது.

“அது அது நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கவேண்டும்’ என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது சக்கரங் களின் ஆளுமைக்கு நூறு சதவிகி தம் பொருந்தும்.

சக்கரத்தின் இயக்கமும் உணர்வு நிலையும்

ஏழு வயது முடியும்போது மூலாதாரச் சக்கரத்தின் ஆளுமையிலிருந்து வெளிவந்துவிட் டாலும்கூட, அத்துடன் மூலாதாரத்தின் இயக்கம் நின்று போய்விடாது. அனைத்து சக்கரங்களும் வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். எந்த சக்கரத்தின் ஆளுமை அதிகமாக உள்ளதோ அதனோடு தொடர்புடைய உணர்வு நிலைகளே அந்த மனிதனிடம் அதிக மாகக் காணப்படும்.

ஏழு வயதிற்குமேல் மூலாதாரச் சக்கரத்தின் இயக்கம்-

✷ சமநிலையில் (இயல்பு நிலையில்) இருக்கலாம்.

✷ அதிகப்படியாக (ஆளுமை) இருக்கலாம்.

✷ குறைவாக (குறை நிலை) இருக்கலாம்.

சமநிலையில் இருக்கும்போது பிரச்சினைகள் இராது. அந்த மனிதருடைய வயதிற்கேற்ப எந்த சக்கரம் ஆளுமையில் இருக்கவேண்டுமோ, அது ஆளுமையில் இருக்கும். மூலாதாரம் தனது இயல்பு நிலையில் இயங்கும். இந்த நிலையில்-

✷ உயிர் வாழும் உந்துதல் இருக்கும்.

✷ சுயநலம் குறைந்து, பொதுநலம் மனதில் குடிகொள்ளும்.

✷ தான், தனது என்ற பிடிவாதங்கள் மறைந்து பிறரைக் குறித்த சிந்தனைகள் உருவாகும்.

✷ உலகப் பற்றுகள் மறையாது. ஆனால் அளவோடு இருக்கும். மூலாதாரத்தின் இயக்கம் அதிகப்படியாக இருந்தால்-

✷ சுயநலம் மேலோங்கும்.

✷ தான், தனது என்ற ஆணவம் உருவாகும்.

✷ தான் வாழ பிறரை அழித்தாலும் தவறில்லை என்ற எண்ணம் உருவாகும்.

✷ பலவிதமான ஆசைகள் உருவாகும். அதை நிறைவேற்ற, பூர்த்தி செய்ய எத்தகைய கொடுஞ்செயல்களைச் செய்யவும் மனம் துணியும்.

மூலாதாரத்தின் இயக்கம் குறை நிலையில் இருந்தால்-

✷ வாழ்க்கையில் எந்தப் பற்றும் இராது.

✷ மந்தத் தன்மை ஏற்படும்.

✷ வெற்றிபெற வேண்டுமென்ற உந்துதலே இராது.

✷ வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மை இராது.

✷ மனதிலும் உறுதி இராது.

✷ இவர்களது வாழ்க்கை தனக்கும் பயனின்றி, பிறருக்கும் பயனின்றி வீணாகக் கழிந்துபோகும்.

அடுத்த இதழில் நமது இரண்டாவது சக்கர மான சுவாதிஷ்டானம் குறித்த செய்திகளைக் காணலாம்.

(தொடரும்)தந்திர யோகம்- பாகம்- 3
1
டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C

ந்திர யோகம் என்பது ஒரு மிகப் பெரிய கடல்! அதை முழுமையாகக் கற்றுக்கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. தந்திர யோகத்தின் அடிப்படையான சில உண்மைகளை மட்டுமே இந்தத் தொடரில் எழுதிவருகிறேன்.

முதல் பாகத்தில் தந்திர யோகம் என்றால் என்ன? அதன் பிரிவுகள், வழிமுறைகள், தொன்மையான தந்திர யோக  நூல்கள் ஆகியன குறித்த விவரங்களைக் கண்டோம்.

இரண்டாம் பாகத்தில் நமது பருவுடலைச் சுற்றி நிற்கும் சக்தி உடல்கள் குறித்த செய்திகளைக் கண்டோம். சக்தி உடல்களை வலுப்படுத்தும் சில எளிய முத்திரைகள், பயிற்சிகள் ஆகியவற்றைக் குறித்தும் எழுதினேன்.

அடுத்ததாக, இந்த மூன்றாம் பாகத்தில் நமது உடலிலுள்ள “சக்கரங்கள்’ குறித்து தந்திர யோகம் கூறியுள்ள சில கருத்துகளைக் காணவிருக்கிறோம்.

“சக்கரங்கள்’ என்றால் என்ன?

நமது உடல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம், இயக்க நீர்களின் சுரப்பு, புதிய திசுக்கள் உருவாகுதல், கழிவுப் பொருட்களைப் பிரித்து வெளியேற்றுதல் போன்ற பல செயல்பாடுகள் நாம் தூங்கும்போதுகூட தொடர்ந்து நடைபெறுகின்றன நமது உடலினுள் ஒரு நிமிடத்தில் 1,62,000 வேதியியல் மாற்றங்கள் நடைபெறுவதாக நவீன விஞ்ஞானம் கணக்கிட்டுள்ளது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், வேதியியல் மாற்றமாக இருந்தாலும், அது நடைபெற சக்தி அவசியம். உடலின் உள்ளேயிருந்து அதை இயக்கும் சக்தியையே “உயிர் சக்தி’ என்கிறோம்.

இந்த உயிர் சக்தியை தந்திர யோகம் “பிராணா’ என்று அழைக்கிறது. பிராணன் உடலில் இருக்கும்வரைதான் இயக்கங்கள் நடைபெறும். பிராணன் உடலைவிட்டுப் பிரிந்துபோனால் மரணம் நிகழுகிறது.

பிராணனை (உயிர் சக்தியை) உருவாக்கும் சக்தி மையங்களே நமது சக்கரங்களாகும். மின்சாரம் எனும் சக்தி மின் நிலையங்களில் உருவாக்கப்படுவது போன்று, நமது உடலுக்குத் தேவையான, உடலை இயக்கும் உயிர்சக்தியானது

நமது சக்கரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

சக்கரங்களும் பிராணனும்

சக்கரங்கள் இருவழிகளில் பிராணனை உருவாக்குகின்றன.

1. உணவு, காற்று ஆகியவற்றிலிருந்து…

நாம் உண்ணும் உணவு உடலில் செரிமானமாகி, பல வேதியியல் மாற்றங் களுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக குளுகோசாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.

குளுகோஸ் உருவாகவும், பின்னர் அது செல்களின் உள்ளே சக்தியாக மாற்றப்படவும் ஆக்சிஜன் என்ற பிராணவாயு தேவைப்படுகிறது. இதை நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.

ஆக, நாம் உண்ணும் உணவிலிருந்தும், சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவிலிருந்தும் உடலுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது. இந்த உண்மையை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்தது.

ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தந்திர யோகிகளுக்கு இது தெரிந்திருந்தது. இந்த வகையில் நடைபெறும் உயிர்சக்தி உருவாக்கம் சரிவர நடைபெற, நாம் உண்ணும் உணவு சத்தானதாக இருக்கவேண்டும். சுவாசம் சீராக நடைபெற வேண்டும்.

இவற்றை சரிசெய்யவே நமது தந்திர யோகிகள் பல உணவு முறைகளை, கட்டுப்பாடுகளை வகுத்தனர். எந்த வேளையில் எதை உண்பது என்பதை வரையறுத்து வைத்துள்ளனர்.

சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிராண வாயுவின் அளவை அதிகரிக்கவே பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த முதல்வகை சக்தி உருவாக்கத்தில் நுரையீரல்கள், வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. இதுவரையில் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.

ஆனால், இந்த சக்தியை ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான உயிர்சக்தியாக மாற்றும் பணி சக்கரங்களில் நடைபெறுகிறது.

இது, இதுவரையில் நவீன மருத்துவத்தால் கண்டறியப்படாத ஒன்றாகும். எனவேதான் நவீன மருத்துவத்தால் நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து முழுமையான குணத்தைத் தரமுடிவதில்லை!

2. பிரபஞ்ச சக்தியிலிருந்து…

இந்த பிரபஞ்சம் முழுவதுமே சக்தியால் நிரம்பியுள்ளது. “எங்கெங்கு காணினும் சக்தியின் வடிவம்’ என்பது பாரதியின் வரி. இந்த எல்லையற்ற சக்தியை விஞ்ஞானிகள் காஸ்மிக் எனர்ஜி (Cosmic Energy)  என்கிறார்கள்.

நாம் சுவாசிக்கும்போது சக்கரங்களும் சுவாசிக்கின்றன. ஒவ்வொரு உள்மூச்சின் போதும் சக்கரங்கள் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுத்துக்கொள்கின்றன.

இந்த சக்தியை நமது உடல் உறுப்புகளால் அப்படியே உபயோகிக்க முடியாது.

அதை உருமாற்றம் செய்து (அதன் அதிர்வு நிலையை மாற்றி) உறுப்புகளுக்குத் தேவையான சக்திகளாக மாற்றும் பணி சக்கரங்களில் நடைபெறுகிறது. இதை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்.

ஒரு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அப்படியே நமது வீட்டில் உபயோகிக்க முடியாது. மின்னழுத்தம் (யர்ப்ற்ஹஞ்ங்) மிகமிக அதிகமாக இருக்கும்.

✶ கனரக இயந்திரங்களை இயக்க மிகு மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் தேவை.

✶ சிறு மின்சாதனங்கள் இயங்க குறை மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் அவசியம்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான மிகு மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை வீட்டில் உபயோகித்தால் நமது டிவி, ஃபிரிட்ஜ், மின்விசிறி போன்றவை எரிந்து போகும்.

வீட்டுக்குத் தேவையான அழுத்தத்தில் மின்சாரத்தை  உருமாற்றவே “டிரான்ஸ்ஃபார்மர்கள்’ உபயோகப்படுத்தப்படுகின்றன. மிகு அழுத்தம் கொண்ட மின்சாரத்தை இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் (உருமாற்றிகள்) குறை அழுத்த மின்சாரமாக மாற்றுகின்றன.

நமது சக்கரங்களும் இந்த டிரான்ஸ்ஃபார் மர்களைப் போன்று செயல்பட்டு, பிரபஞ்ச சக்தியை உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்திகளாக மாற்றுகின்றன.

சக்கரங்களின் அடிப்படை இயல்புகள்

வாகனங்களில் பொருத்தப்பட்டிருப்பனவற்றையும் சக்கரங்கள் என்கிறோம். மகாவிஷ்ணுவின் கையில் இருப்பதும் சக்கரம்தான். (சுதர்சன சக்கரம்).

எந்த ஒரு சக்கரமாக இருந்தாலும் அதன் அடிப்படை இயல்புகளாக இரண்டைக் கூறலாம்.

✶ வட்ட வடிவம்

✶ சுழற்சி

ஒரு சக்கரம் என்பது வட்டவடிவமாக மட்டுமே இருக்கமுடியும். சதுர வடிவமாகவோ, முக்கோண வடிவமாகவோ ஒரு சக்கரம் இருக்கமுடியாது. ஆக, ஒரு பொருளை சக்கரம் என்று அழைக்க வேண்டுமானால் அது வட்டவடிவமாக இருக்க வேண்டும். நமது உடலிலுள்ள அனைத்து சக்கரங்களுமே வட்ட வடிவமானவை.

சக்கரங்களின் அடுத்த அடிப்படை இயல்பு- சுழற்சி. சக்கரங்களின் இயக்கமே அதன் சுழற்சிதான். நமது உடலிலுள்ள சக்கரங்களும் இடைவிடாமல் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

பணத்தைக்கூட “சக்கரம்’ என்று தமிழில் அழைப்பதுண்டு. பணம் ஓரிடத்தில் தங்காமல் கைமாறி கைமாறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான் பணத்தை “சக்கரம்’ என்று அழைத்தார்கள்!

நமது சக்கரங்கள் சுழலும் திசை இட வலமாக அல்லது வல இடமாக இருக்கும். இது சக்கரத்திற்கு சக்கரம் மாறுபடும்.

இட வலமாகச் சுற்றவேண்டிய ஒரு சக்கரம் வல இடமாக மாறிச் சுற்றினால் அது உடலிலும், உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கும்.

வல இடமாகச் சுற்ற வேண்டிய சக்கரம் இட வலமாகச் சுற்றினாலும் இதே பிரச்சினைதான். இவ்வாறு சக்கரங்கள் தங்கள் இயல்புக்கு மாறான திசையில் சுற்றுவது பல நோய்கள் உருவாகவும் அடிப்படைக் காரணமாகிவிடுகிறது.

எந்த சக்கரம் எந்த திசையில் சுழலவேண்டும்-. இயல்புக்கு மாறான திசையில் சுற்றினால் என்ன நிகழும்   என்பன குறித்து பின்னர் விரிவாகக் காணலாம்.

சக்கரங்கள் எங்கே அமைந்துள்ளன?

சக்கரங்கள் நமது பருவுடலில் இல்லை! உடலைச் சுற்றியுள்ள சக்தி உடல்களில்தான் சக்கரங்கள் அமைந்துள்ளன.

ஒவவொரு சக்கரமும் சக்தி உடலிலிருந்து ஒரு சிறு தண்டு போன்ற பகுதி மூலமாக பருவுடலிலுள்ள தண்டுவடத்தினோடு இணைக்கப்பட்டுள்ளன.

சக்தி உடலில் உள்ள சக்கரங்களை பருவுடலில் உள்ள நரம்புக் குவியல்கள் (Nerve Plexuses) பிரதிபலிக்கின்றன. இது குறித்தும் பின்னர் விரிவாகக் காணலாம்.

(தொடரும்)

15
டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C
பரமானந்தத்தில் திளைக்கச் செய்யும் ஆனந்தமய கோசம்

துவரையில் நமது பருவுடலைச் சுற்றி நிற்கும் சக்தி உடல்களில், முதல் நான்கு சக்தி உடல்களைக் குறித்து விரிவாகக் கண்டோம். இறுதியாக, ஐந்தாவது சக்தி உடலான “ஆனந்தமய கோசம்’ குறித்த சில விளக்கங்களைக் காணலாம்.

ஆனந்தமய கோசம் பிற நான்கு கோசங்களை விடவும் மிகமிக நுண்ணிய அணுத்துகள்களால் ஆனது. சக்தி நிலையில் பிற கோசங்களை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள கோசம் இது.

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் ஆகிய நான்கு கோசங்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள கோசம் இது.

மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகள் இந்த கடைசி கோசத்தை ஒரு தங்க முட்டைக்கு (ஏர்ப்க்ங்ய் ஊஞ்ஞ்) ஒப்பிடுகின்றனர். பிற கோசங் களைவிட பிரகாசமானது.

இந்த கடைசி கோசம் நமது பருவுடலையும், பிற நான்கு சக்தி உடல்களையும் பாதுகாக்கும் ஒரு உறுதியான அரணாக உள்ளது. இந்த கோசம் வலுவாக இருக்கும் வரையில் நோய் உருவாக்கும் கிருமிகளோ, தீயசக்திகளோ நம்மைத் தாக்க முடியாது!

ஏதேனும் காரணங்களால் ஆனந்தமய கோசம் வலுவிழக்கும்போதுதான் நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீய அதிர்வுகளும் நம்மைத் தாக்கும். ஆக, இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ஆனந்தமய கோசம் உறுதியாக இருப்பது அவசியம்.

ஆனந்தமய கோசம் உயர்நிலைச் சக்கரங்களான ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய இரு சக்கரங்களோடு தொடர்புடைய கோசமாகும். இந்த சக்கரங்களை தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம் வலுவாக்கும் போது ஆனந்தமய கோசமும் வலுவடையும்.

இந்த ஐந்தாவது கோசம் மந்திர அதிர்வு களால் தூண்டப்படும் ஒரு கோசமாகும். தந்திர யோகத்தின் உயர்நிலைப் பயிற்சியான மந்திர யோகத்தின் மூலமாகவே இந்த கோசத்தை வலுப்படுத்த முடியும். எனவே இந்த கோசத்திற்கு “மந்திர கோசம்’ என்ற பெயரும் சில பழமையான தந்திர யோக நூல்களில் காணப்படுகின்றன.

சில குறிப்பிட்ட மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் தொடர்ந்து உச்சாடனம் செய்துவந்தால் படிப்படியாக ஆனந்தமய கோசம் விரிவடையும்; வலுவாகும்.

உணர்வு நிலையும் ஆனந்தமய கோசமும்

விழிப்பு நிலை, கனவுத் தூக்க நிலை, ஆழ்தூக்க நிலை ஆகிய மூன்றும், முதல் நான்கு கோசங்களுடன் தொடர்புடையவை.

✷ நான்காவது உணர்வு நிலையான துரிய நிலையில் விஞ்ஞானமய கோசமும், ஆனந்த மய கோசமும் செயல்படுகின்றன.

✷ இறுதி உணர்வு நிலையான துரியாதீத நிலையில் (பரமானந்த நிலை) ஆனந்தமய கோசம் செயல்படும்.

✷ இந்த உணர்வு நிலையில் ஆன்மா எல்லையற்ற ஆனந்த நிலையில் ஊறித் திளைக்கும். மாயையின் கட்டுகளும், ஐம்புலன் களின் ஆளுமையும் அறுந்த  நிலை இது.

✷ இந்த பரமானந்த நிலையை ஆன்மா வுக்குத் தருவது ஐந்தாவது கோசமே. எனவேதான் இந்த கோசத்தை ஆனந்தமய கோசம் என்று அழைக்கின்றனர்.

கோசங்களும் அவற்றை வலுப்படுத்தும் தந்திர யோக வழிமுறைகளும்

ஒவ்வொரு கோசத்தையும் வலுப்படுத்தும் வழிமுறைகளை தந்திர யோகம் மிகத் தொன்மையான காலத்திலேயே கண்டு பிடித்துவிட்டது. இந்த வழிமுறைகள் எவை என்பது குறித்து ஏற்கெனவே விரிவாகக் கண்டோம்.  மீண்டும் ஒருமுறை அவற்றை சுருக்கமாகக் காணலாம்.

1. அன்னமய கோசம்

✷ உணவால் ஆளப்படும் கோசம்.

✷ சரியான உணவு முறை, உணவு உண்ணும்போது செய்யவேண்டிய சில தந்திர யோக முத்திரைகள் மூலமாக இந்த கோசத்தை வலுப்படுத்த முடியும். (இந்த முத்திரைகள் குறித்து நான் எழுதிய “அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான முத்திரைகள்’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். “நக்கீரன்’ வெளியீடு).

2. பிராணமய கோசம்

✷ பிராண சக்தியால் (மூச்சு) ஆளப்படும் கோசமாகும்.

✷ சில எளிய தந்திர யோக சுவாசப் பயிற்சிகள் மூலம் இந்த கோசத்தை வலுப்படுத்த முடியும்.

✷ வயிறு சுவாசம், முழு உடல் சுவாசம் ஆகிய பயிற்சிகள் குறித்து ஏற்கெனவே கண்டோம். அவற்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

✷ தந்திர யோக நேரடிப் பயிற்சிகளின் உயர்நிலைகளில் மேலும் சில எளிய பிராணாயாமப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம்.

✷ இந்த சுவாசப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது பிராணமய கோசம் வலுவாகும்.

✷ இவை தவிர, பிராண முத்திரை, சக்தி முத்திரை போன்ற முத்திரைகளின் மூலமாகவும் இந்த கோசத்தை வலுப்படுத்த முடியும்.

3. மனோமய கோசம்

✷ மனதால் ஆளப்படும் கோசம் இது.

✷ எண்ணங்கள் சீரானால் இந்த கோசமும் சீராகும்.

✷ பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டுமே இந்த கோசத்தை வலுப்படுத்தும்.

✷ இந்த கோசத்தில் தேங்கிவிடும் எதிர்மறை எண்ணப்பதிவுகளே பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.

✷ எதிர்மறை எண்ணப் பதிவுகளை அகற்றும் காலச்சக்கர முத்திரை, தூய்மைப்படுத்தும் முத்திரை, காளீஸ்வரி முத்திரை ஆகிய மூன்று தந்திர யோக முத்திரைகள் குறித்து ஏற்கெனவே கண்டோம்.

4. விஞ்ஞானமய கோசம்

✷ சித்தத்துடன் தொடர்புடையது விஞ்ஞானமய கோசம்.

✷ சித்தம் தெளியும்போதுதான் விஞ்ஞானமய கோசம் வலுவாகும். இதற்கான தந்திர யோகப் பயிற்சிகளை நீங்கள் நேரடிப் பயிற்சி முகாம்களின் வழியாகவே கற்றுக்கொள்ள முடியும்.

✷ யந்திரங்களால் இந்த கோசம் தூண்டப்படும்; வலுவடையும். தந்திர யோக யந்திரா தியானத்தின் மூலமாக இந்த கோசத்தை விரிவடையச் செய்யலாம்.

5. ஆனந்தமய கோசம்

✷ நோய் வராமல் தடுக்கும் கோசம்.

✷ மந்திர ஒலிகளால் தூண்டப்படும் கோசம்.

✷ தந்திர யோக மந்திர உச்சாடனங்களால் மட்டுமே இந்த கோசத்தைத் தட்டியெழுப்ப முடியும்.

✷ இந்த மந்திர யோகத்தை ஒரு குருவிடமிருந்து மட்டுமே உபதேசமாகக் கற்றுக்கொள்வதே சிறப்பு.

விஞ்ஞான ஆதாரங்கள்

சக்தி உடல்கள் இருப்பது உண்மையா என்ற சந்தேகம் எழுவது இயல்புதான். இந்த சக்தி உடல்கள் (ஆரா) இருப்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க முடியும். கிரில்லியன் போட்டோகிராபி  (Kirlian Photography) என்ற முறை இதற்கு உதவியாக உள்ளது.

சீமோன் கிரில்லியன் (நங்ஹ்ம்ர்ய் ந்ண்ழ்ப்ண்ஹய்) என்ற சோவியத் நாட்டு விஞ்ஞானி இந்த முறையைக் கண்டுபிடித்ததால் அதற்கு கிரில்லியன் போட்டோகிராபி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் ஒரு மனிதரை புகைப்படம் எடுக்கும்போது, அவரது உடலைச் சுற்றி பல வண்ணங்களில் இந்த சக்தி உடல்கள் பரந்து நிற்பதை துல்லியமாகக் காணமுடியும். மனிதர் களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங் களுக்கும் இந்த ஆரா உள்ளது என்பதையும் இந்த புகைப்படங்கள் நிரூபிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட ஆரா (சக்தி உடல்) உள்ளது.

இந்த புகைப்படங்களைக் காண கூகுள் இமேஜஸ்- ஆரா அல்லது கிரில்லியன் போட்டோகிராபிஸ்  (Google Images Aura, Google Images- Kirlian Photographs)  என்று இணையத்தில் தேடவும். பல்லாயிரம் புகைப்படங்கள் உள்ளன.

மெய்ஞ்ஞானம் கூறியவற்றை நவீன விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்க முடியும் என்பதற்கு இந்த கிரில்லியன் புகைப்படங்கள் சான்றாக உள்ளன.

இறுதியாக…

தந்திர யோகம் பாகம் 1-ல் தந்திர யோகம் என்றால் என்ன? அதன் பிரிவுகள், வழிமுறைகள், தொன்மையான தந்திர யோக நூல்கள் ஆகியவை குறித்து விரிவாகக் கண்டோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் சக்தி உடல்கள் குறித்தும், அவற்றை வலுவாக்கும் தந்திர யோக வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் கண்டோம்.

நமது உடலில் தோன்றும் அனைத்து நோய்களுமே (விபத்துகளால் அடிபடுவது போன்றவை தவிர)

முதலில் சக்தி உடல்களில்தான் உருவாகின்றன. சக்தி உடல்களில் ஏற்படும் மாற்றங்களும் பாதிப்புகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் செல்லும்போதுதான் அவை நோய்களாக பருவுடலில் பிரதிபலிக்கின்றன.

எனவே நாள்பட்ட நோய்களை முற்றிலுமாக சரிசெய்ய, சக்தி உடல்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இந்நூலில் கண்டோம். அவற்றை முறையாகப் பின்பற்றினால் நோயின்றி வாழமுடியும். உங்கள் நலம் உங்கள் கைகளில்!

வாழ்க நலத்துடன்!

(முற்றும்)

9

           லயத்தில் இறைவனுக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்தவுடன் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றில் நாம்-

தூபத்தில்- அக்னி தேவனையும்;

மகாதீபத்தில்- சிவனையும்;

நாக தீபத்தில்- கேதுவையும்;

விருஷப தீபத்தில்- தர்ம தேவதையையும்;

புருஷாமிருக தீபத்தில்- விஷ்ணுவையும்;

பூரணகும்பத்தில்- ருத்ரனையும்;

பஞ்சதட்டுகளில்- பஞ்சபிரும்ம தேவதை களையும்;

நட்சத்திர தீபத்தில்- 27 நட்சத்திரங்களையும்;

மேரு தீபத்தில்- 12 சூரியர்களையும்;

விபூதியில்- பரமேஸ்வரனையும்;

கண்ணாடியில்- சூரியனையும்;

குடையில்- சந்திரனையும்;

சாமரத்தில்- மகாலக்ஷ்மியையும்;

விசிறியில்- வாயு தேவதைகளையும்;

ஆலவட்டத்தில்- பிரம்மாவையும்:

கற்பூரத்தில்- அக்னியையும்

அதிதேவதைகளாக பாவித்து வணங்க வேண்டும். பொருளுணர்ந்து பூஜையை ரசிக்கும் போது தன்னால் இறையுணர்வு வரும்.

பூரண கும்பம்

உலகில் உள்ள தாவர சங்கமங்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன; பிரளய காலத்தில் நீரிலேயே “லயம்’ ஆகிவிடுகின் றன. ஆதலால் இறைவனை நீரின்மூலம் உருவ வழிபாட்டிற்கு கொண்டுவருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.

கும்பம் (குடம்)- உடல்.

குடத்தில் உள்ள நீர்- ரத்தம்.

உள்ளே போடப்படும் ரத்தினங்கள்- சுக்கிலம்.

கூர்ச்சம்- நாடி.

குடத்தின் மேலே சுற்றப்பட்ட நூல்- நரம்புகள்.

குடத்தின் மேலே போடப்பட்ட துணி (வஸ்திரம்)- தோல்.

மந்திரங்கள்- உயிர்.

குடத்தின் மேலுள்ள தேங்காய்- சிரசு, முகம்.

லம்பகூர்ச்சம்- சிகை (முடி).

மாவிலைகள்- ஜடாபாரங்கள்.

“இப்படி மந்திரங்களின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்ட குடத்தில், சிவனை  எழுந்தருளச் செய்கிறோம்’ என்று சிவ ஆகமத்தில் சொல்லப் படுகிறது. எனவே பூரண கும்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் இறைவனாக பாவித்து வணங்க வேண்டும். பொருளறிந்து செய்யப்படும் பூசை கள் மூலம் நாள் முழுவதும் இறை உணர்வில் இருக்கமுடியும்.


கோலங்கள் காட்டும் தெய்வீகம்

கோலங்களின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கோடுகள் சம அளவில், பொருத்தமாக அமைந்திருப்பதுதான் கோலத்தின் அழகுக்கும், மங்கள தோற்றத்திற்கும் காரணம். தர்மவழியில் சமத்துவ மனப்பான்மையுடன் (“சமத்துவ மனப்பான்மையே கிருஷ்ணனுக்குச் செய்யும் ஆராதனை’ என்று விஷ்ணு புராணம் கூறுவதுபோல) நடக்கும் மனிதர்கள் தெய்வீகம் அடைவார்கள் என்பதையே கோலங்கள் காட்டுகின்றன.

ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்று கிறோம். இதன் உள்ளார்ந்த தத்துவம் என்ன?

விளக்கில் உள்ள எண்ணெய்- எண்ணப் பதிவுகள்.  (Impression).

திரி- ஆணவம்.

ஏற்றும் ஒளி- ஞானம்.

ஆசைகளால் வருவது எண்ணப்பதிவுகள். எண்ணப் பதிவுகளால் வருவது துன்பமும் பிறப் பும். திரியைத்தூண்டி விளக்கை ஏற்றுவது போல, ஞானத்தால் வாசனைகளையும் ஆணவத்தையும் அழிக்கவேண்டும். சென்ற பிறப்பின் நல்ல மற்றும் தீய எண்ணங்களால் வாசனைகள் அல்லது பதிவுகள் ஏற்படுகின்றன. அவற்றால் துன்பம் நேர்வது உண்மை. ஞானத்தால் மட்டுமே வாசனைகளை அழிக்க முடியுமென்று காட்டுவதே விளக்கேற்றுவதில் உள்ள தத்துவம்.

உள்ளே தேடிக் கண்டுகொள்ளலாமே…

இறை உள்ளிருக்கிறான் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்துவிட்டால் இறையுணர்வு உண்டாகும்.

உலகை வென்ற அலெக்ஸாண்டர் போரினால் கிடைத்த வெற்றிகளில் அமைதி பெறமுடியாமல் ஒரு சந்நியாசியிடம் சென்று, “”நான் அமைதி பெற என்ன வழி?” என்று கேட்டார்.

“”கடவுளால்தான் உனக்கு அமைதியைத் தரமுடியும்” என்றார் அவர். “”கடவுள்தான் எனக்குஅமைதியைத் தரமுடியும் என்கிறீர்களே! கடவுள் இருப்பதை நான் எப்படி நம்பமுடியும்?” என்றார் 
அலெக்ஸாண்டர்.

“”காற்றால் இழுக்கப்பட்டு பட்டம் உயரே உயரே பறக்கும்போது- நம் கையிலுள்ள நூலில் ஏற்படும் விசையைக்கொண்டு காற்றின் சக்தியை உணர முடியுமே தவிர மற்றவர்களுக்குக் காண்பிக்க முடியுமா? அதுபோலத்தான் கடவுளும்” என்றார்.

ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால், உள்ளே இருக்கும் இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும்.

கிம்பர்லி வைரச் சுரங்கம் பற்றிய உண்மை நிகழ்ச்சிஹெர்மன் கான்வல் (ஐங்ழ்ம்ஹய் ஈர்ய்ஸ்ங்ப்) என்பவர் அமெரிக்காவில் உள்ள பிலெடெல்பியா என்ற மாகாணத்தில் கோவில் கட்டியவர். இவர் கூறிய உண்மை நிகழ்ச்சி:

ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி வைரக்கற்களைப் பெற விரும்பி ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றினார். 

தனக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையும் விற்று வைரத்தைத் தேடித் தோற்று நொடிந்துபோன நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவசாயியின் நிலத்தை வாங்கியவர் ஒருநாள் நிலத்தைத் தோண்டும்போது பளபளப்பாக மின்னும் ஒரு பெரிய கல்லைக் கண்டார். இன்னும் சில இடங்களில் தோண்டியபோது, பளிச்சிடும் கற்கள் பல கிடைத்தன. அந்த இடம்தான் இன்றைய வைரச்சுரங்கம் உள்ள கிம்பர்லி என்ற இடம். என்ன ஆச்சரியம் பாருங்கள். தன் நிலத்தில் புதைந்து கிடைக்கும் வைரக்கற்கள் பற்றி அறிய இயலாமல் வாழ்க்கையைத் தொலைத்
திருக்கிறார் அந்த விவசாயி! இதேபோல்தான் நாமும் உள்ளிருக்கும் இறையை கண்டுகொள்ள முயலாமல், புறத்தில் தேடித்தேடி ஓடிக்கொண்டி ருக்கிறோம்.

அட்டாங்க யோகம்

இறைவன் உள்ளிருக்கிறான் என்ற உண்மையை கல்வி கேள்விகளால் தெளிவுபடுத்திக்கொள்கிறோம். (தெளிவுறுதல்).

பின் அதைப்பற்றி நமக்கு நாமே ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம். (உறுதிகொள்ளல்).

இந்த உறுதியானது நமது ஒவ்வொரு உணர்விலும் நிலைபெற்று விடுகிறது. (உணர்வில் நிலைபெறுதல்).

இந்த ஒளியைக் காணவேண்டும் என்ற தீவிர விருப்பம் ஏற்படுகிறது.

இந்த நிலையை அடைந்தபின் அட்டாங்க யோகம் மூலம் இறைவனை அடையமுடியும். இதற்கு எட்டுவிதமான படிகள் உள்ளன. எனவே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.

1. இயமம்:

மனமாசு இல்லாமை, கொல்லாமை, களவு குணம் இல்லாமை- ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லவை செய்யும் நெறி ஏற்பட்டுவிடும்.

2. நியமம்:

தூய எண்ணங்களை வளர்த்தல்; கருணை, பொறுமை ஆகியவற்றால் மனதைச் செம்மைப் படுத்துதல்.

3. ஆசனம்:

பத்மாசனம், சுகாசனம்போல ஏழு ஆசனங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நமக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. பிராணாயாமம்:

மூச்சை நிதானமாக இழுத்து, அடக்கி, வெளிவிட்டுச் செய்கின்ற செயலில், உடலுக்கும் மனதுக்கும் வலிமையும் ஆக்கமும் கிடைக்கும். இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொண்டால் நல்லது. மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்ணங்களை ஒடுக்க முடியும்.

5. பிரத்தியாகாரம்:

மூச்சுப் பயிற்சியால் மனதில் எண்ணங்கள் அடங்கி மனம் ஒரு நிலைக்கு வந்தபின், மனதைவெளிச் செய்திகளில் போகவிடாமல் உள்நோக்கித் திருப்புதல்.

6. தாரணை:

வெளியே செல்ல விடாமல் தடுத்த எண்ணங் களை, மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களில் நிறுத்தி ஒரே கவனத்துடன் இருத்தல்.

7. தியானம்:

தாரணை சித்திக்கப் பெற்றவுடன், தியானம் செய்வது சுலபம். முதலில் 15 நிமிடங்கள், பிறகு 30 நிமிடங்கள்- என்று நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் உட்கார்ந்தாலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரைதான் மனது தியானத் தில் வசப்படும். 30 நிமிடங்கள் அமர்ந்தால்தான் 5 நிமிட தியான அனுபவமாவது கிடைக்கும்.

“எப்பொழுதும் குளத்தை தோண்டிக் கொண்டே இருக்கும் ஒருவன், எப்பொழுது அந்தக் குளத்திலிருந்து நீர் குடிப்பான்? தனது உடலின் சேற்றைக் கழுவுவான்?’ என்கிறார் துளசிதாசர். நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பதால் பேருண்மையை அனுபவிக்க முடியாது. மனதார நினைத்து தியானியுங்கள் என்பதுதான் இதன் பொருள்.

8. சமாதி:

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தியானம் செய்து பழகும்போது அதற்குண்டானஅமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். அருளாளர்களுக்கும் சித்தர்களுக்குமே நிலைத்த சமாதிநிலை கிடைக்கும். 

“எல்லாம் தானாகி இருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே’

என்பது பாரதியின் கூற்று.

சரணாகதி தத்துவம்

யோகம், தியானம் சிலருக்கு சாத்தியமில்லை என்றால், சரணாகதி தத்துவம் மூலம் இறைவனை அடைவதென்பது எளிமையான வழி. பக்தி, வைராக்கியம், மன உறுதி இருந்தால் இந்த முறை சுலபம். இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வு உறுதியாக நெஞ்சில் பதிந்தால்- இறையுணர்வு எப்போதும் இருக்கும்.

மகாபாரதத்தில் திரௌபதியின் அனுபவம் இந்த உண்மையை எடுத்துக்கூறும். பலரும் நிறைந்த சபையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது- அவளது செல்வாக்கோ படைபலமோ உதவவில்லை. பலமும்  வீரமும் புத்திக் கூர்மையும் மிக்க ஐந்து கணவர்களும் உதவ இயலவில்லை.

செயலற்ற நிலையில் கண்களை மூடி, “கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று உள்ளமும் உணர்வுகளும் நெகிழ தியானித்து, முழுமையாக கண்ணனிடம் சரணடைந்தபோது திரௌபதிக்கு கண்ணன் உதவினான் என்று பாரதத்தில் படிக்கிறோம். முழுமையாக சரணடையும் உணர்வுஏற்பட்டுவிட்டால், நாள் முழுவதும் அருள் ஓட்டம் இருக்கும்.

தொட்டில் குழந்தைக்கு பாடும் தாலாட்டு- “ஆராரோ- ஆரிரரோ’. 
“யார் யாரோ- யார் இவரோ?’ என்ற வார்த்தை
கள், சற்று மாறிய நிலைதான் “ஆராரோ- ஆரிரரோ.’

“நீ யாரோ நான் யாரோ’ என்று ஆராய வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து.

நான், எனது என்ற வார்த்தைகளை ஆராய்ச்சி செய்தால் நிஜமான நான் என்பது எது என்ற உன்னத தத்துவம் புரியும். இதைத்தான் ரமணர், “நான் யார் என்று ஆராய்ச்சி செய்தால் தெளிவு வரும். நான் என்பது சிவனைத் தவிர வேறில்லை’ என்கிறார். மிகவும் சிரமமான பயிற்சிதான் இது. இதை, ஆராரோ என்ற எளிமையான வார்த்தைகளில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

நிலையாமை பற்றிய உணர்வு பிணத்துக்குமுன் ஆடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பலசமயம் பிணத்திற்குமுன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஆடி வருவதைப் பார்க்கும்போது சற்று அருவருப்பாகக்கூட உள்ளது. துக்கமான சமயத்தில் ஏன் இப்படி ஒரு ஆட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.

“ஆடிய ஆட்டம் என்ன பேசிய பேச்சு என்னகூடுவிட்டு ஆவி போனால்கூடவே வருவதென்ன’

என்னும் தத்துவத்தை நமக்குப் புரியவைப்பதற்காகவே பிணத்துக்குமுன் ஆடும் கலாச்சாரம் உள்ளது. ஆடி அடங்கும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காகவே இப்படி ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர். சுலபமாகச் சொன்னால் “உனக்கும் இந்த நிலைதான் ஒருநாள்’ என்று 

தம் ஆட்டத்தின் மூலம் உணர்த்துகிறார்கள். இவற்றை எல்லாம் உள்ளவாறு உணர்ந்தால்- எப்போதும் நிலையாக உள்ள சத்திய வடிவத்தைப் பற்றிக்கொள்ளும் மனது.

தர்மரிடம், “உலகத்தில் மிகவும் அதிசயமான செய்தி எது?’ என்று கேட்டபோது, “தினம் தினம் மனிதர்கள் இறப்பதைப் பார்க்கும்போதும், இறப்பைப் பற்றிய ஒரு தெளிவை உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான் உலகில் அதிசயமான செய்தி’ என்கிறார் தர்மர்.

தொட்டில் முதல் சுடுகாடு வரை வாழ்வின் தத்துவத்தை நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் முன்னோர். அவற்றை உணர்ந்துகொள்வதில்தான் நம் ஆன்ம முன்னேற்றம் இருக்கிறது.

(தொடரும்)


         பாளையங்கோட்டை பகுதியை ஆண்டு வந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் மற்ற சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. 

அவர் திருச்செந்தூர் முருகன்மேல் வைத்திருந்த பக்தி சிலர் மட்டுமே அறிந்தது. அரண்மனையில் இருக்கும் நாட்களில், திருச்செந்தூர் ஆலயத்தில் பூஜை நடப்பதற்கு அறிகுறியான ஆலயமணி ஓசையைக் கேட்ட பிறகே உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார் கட்டபொம்மன். மணியோசையைக் கேட்க அவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையே ஆறு இடங்களில் ஆட்களை நியமித்து, பூஜை நடக்கும் சமயத்தில் மணி அடித்தவுடன் பறை ஒலி எழுப்பக் கூறியிருந்தார். ஆலய மணியோசையைக் கேட்டவுடன் கோவிலுக்கு அருகே நியமிக்கப்பட்ட முதல் ஆள் பறையொலி எழுப்பி இரண்டாவது மைல் கல்லில் உள்ள ஆளுக்கு உணர்த்துவார். அந்த ஓசையைக் கேட்டு இரண்டாவது ஆள் பறையொலி எழுப்புவார். இப்படி அடுத்தடுத்து பறையொலி எழும்ப, அரண்மனைக்கு அருகே உள்ள ஆள் கடைசியாக பறையொலி எழுப்புவார். அதைக் கேட்டு மன்னர், முருகனுக்கு தீபாராதனை செய்வதை கற்பனை செய்து, மனதில் மணியொலியைக் கேட்டு, பரவசத்துடன் இறைவனை வணங்கி பின்தான் உணவு உண்ணுவார். அவர் அரண்மனையில் இருக்கும் நாட்களில் இந்த விதமாக அவர் மணியோசையைக் கேட்க முடிந்தது.

அரசியல் காரணங்களுக்காக மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதும், குறிப்பிட்ட நேரங்களில் முருகனின் அருளால் அந்த மணியோசையை அவர் இதயத்திலேயே உணர்வார். அந்த ஒரு நிமிடம் தரும் அளவற்ற சுகத்தில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப, கரம் கூப்பி வணங்குவார் என்று அவரருகே இருந்தவர்கள் கூறியுள்ளனர். கட்டபொம்மனின் பேருக்கும் புகழுக்கும் அவன் முருகன்மேல் கொண்டிருந்த பக்தி முக்கிய காரணம்.

முன்பெல்லாம் இறைவனுடைய பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவர். ஒவ்வொரு முறையும் அந்தப் பெயர்களைச் சொல்லும்போது அதற்குண்டான புண்ணியம் உண்டாகும். இறைவனது பெயர்களில் ஒரு அருள் அலை உண்டு. உதாரணம்: சரவணன்- சரவணப் பொய்கையில் தோன்றிய முருகன். “ச’ என்றால் மங்களம்; “ர’ என்றால் ஒளி; “வ’ என்றால் சாத்வீகம்; “ண’ என்றால் போர். சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம். பவ என்றால் உற்பத்தி ஆனவன் என்று பொருள். மங்களம், ஒளி, சாத்வீகம், தீயதை அழிக்கக்கூடிய திறன் ஆகியவற்றுடன் உற்பத்தியானவன் முருகன் என்று பொருள். இப்படி இறைப் பெயர்களை நூறுமுறை கூறி அழைக்கும்போது, பத்து முறையாவது அந்த இறைவனை நினைக்க முடியும். அதுவே பேறு. நாராயணன்- நர+ அயனம்= உயிர்களின் இருப்பிடம். செந்து+ இல்= செந்தில்- உயிர்களின் இருப்பிடம். இப்படி ஒரு மனிதனைப் பார்க்கும்போது அந்த இறைவனின் பெயரையும் அதற்குண்டான பொருளையும் சேர்த்து நினைத்துப் பழகினால், நாள் முழுவதும் இறை நினைவில் இருக்க முடியும் அல்லவா? அநிருத்- சாஸ்வதி போன்ற சமஸ்கிருதப் பெயர்களை வைத்தாலும், அந்தப் பெயருக்குள்ள பொருளுடன் நினைத்து சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கும்போது பக்தி உணர்வுகளை சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும். ஆனால் தாய்மொழியில் இறைவன் பெயர்களை வைக்கும்போதுதான் அனுபவித்துஅழைக்க முடியும். இறைவன் பெயர்களை வைப்பதில் உள்ள சிறப்பை வெளிப்படுத்துவதற்காக புராணத்தில் கூறப்பட்ட ஒரு கதை யைப் பார்க்கலாம்.

ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கு நாராயணன், ஹரி என்று பெயர் வைத்திருந்தார். இதைத் தவிர அவர் வேறு ஜெபமோ, தியானமோ, வழிபாடோ செய்ததில்லை. இறுதிக் காலத்தில் தன் உயிர் விடும் நேரத்தில் தன் இரண்டு பிள்ளைகளின் பெயர்களையும் சொல்லி அழைத்தாராம்.  உரிய நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. எமன், “”இந்த உயிர் சொர்க்கத்திற்குப் போகவேண்டியது” என்று கூறியபோது, எமனின் உதவியாளர், “”எப்படி ப்ரபு? 

இவன் எந்த புண்ணிய காரியங்களையும் செய்யவில்லையே?” என்று கேட்டான். அதற்கு எமன், “”புண்ணிய காரியம் செய்யாவிட்டாலும் இவன் நல்லவனாகவே வாழ்ந்து இறந்திருக்கி றான். ஹரி, நாராயணா என்று பலமுறை இவன் அழைத்ததற்கே புண்ணியம் உண்டு” என்று கூறினான். பொருள் அறியாமல் பெயர் சொன்னதற்கே இவ்வளவு சிறந்த பதவி என்றால், ஆயிரம் நாமங்களையும் அல்லது 108 நாமங்களையும் பொருளறிந்து கூறினால் எவ்வளவு சிறந்த நன்மை கிடைக்கும்! இறை நாமங்கள் நம்மை சுலபமாக இறைவனிடம் அழைத்துச் செல்கின்றன.

நமது பாரத நாட்டில் பல புண்ணிய நதிகள் உண்டு. நவகோடி முனிவர்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் போன்றோர் அவதரித்த புனித பூமி. தேவர்கள் மண்ணிற்கு வந்து பூஜை செய்யும் திவ்ய தேசங்கள், சப்தகிரி, இமயமலை போன்றவை இந்தியாவில்தான் உள்ளன. அதுவும் தெற்குப் பகுதியை “புண்ணிய பூமி’ என்றே கூறுவார்கள். இப்படிப்பட்ட மண்ணில் நாம் பிறந்ததற்காக- வாழ்வதற்காக இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். அந்த நன்றி பக்தி உணர்ச்சியாக மாறும். 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இறை அவதாரங்கள் நம் புண்ணிய பூமியில்தான் தோன்றின. கடுமையான பயிற்சிகள் மூலம் உயரிய நிலையை அடைந்த சித்தர்களும் ஞானியரும் வாழ்ந்த பூமியைப் பற்றிய விவரங்களை நாம் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் அல்லவா?

“ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் கூறுவதாக வரும் வார்த்தைகளை நினைவுகூர்வோம். “சித்தர்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவு, நோய் தீர்க்கும் மூலிகைகள், உயிரைக் காப்பாற்றும் பல உயரிய வழிகள் போன்ற அரிய விஷயங்களை பின்பற்றாமல் இழந்துவிட்டோம். அதனால்தான் பல விஷயங்களுக்கு மேல்நாட்டினரை எதிர்பார்க்கிறோம்’ என்பதுதான் அந்த வார்த்தைகள். எனவே சித்தர்கள், அருளாளர்களைப் பற்றி சற்றேனும் சிந்திப்போம்.

திருமூலர், அகத்தியர் போன்ற சித்தர்கள், வியாசர், பதஞ்சலி, வியாக்ர பாதர் போன்ற முனிவர்கள் யோகம், தவம், யாகம், தியானம்,சுயநலமற்ற பக்தி இவற்றின் மூலம் உடலின் உள்ளிருக்கும் ஒளியைக் கண்டவர்கள். புறக்கண்ணாலும் இறைவடிவைக் கண்டவர்கள். மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றை செய்முறையாகச் செய்து காண்பித்துள்ளனர். இன்றுவரை அதன் நற்பயனை மக்கள் அனுபவிக்கிறார்கள். எனவே அத்தகையவர்களை நெஞ்சில் நிறுத்துவது நல்லது. 

63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள் பல அதிசயங்களை நடத்தியதற்கு, தென்னிந்தியாவில் உள்ள பல ஊர்களும் ஆங்காங்கே பாடப்பட்ட பாடல்களும் சாட்சி. இவர்கள் வாழ்ந்த மண்ணாக இருப்பதாலும், இவர்கள் பாடல்களின் அருள் ஒலிகளாலும் இன்றும் பாரத தேசத்தில் பக்தி அலைகள் வீசிக்கொண்டுள்ளன.

இராமகிருஷ்ணர், தாயுமானவர், வள்ளலார், ரமணர் என்று நீண்ட வரிசையில் பட்டியலிட முடியாத அளவு பல அருளாளர்களைக் கண்ட தேசம். இவர்களது உயரிய வாழ்க்கை நெறிகள், அருள் வார்த்தைகள் ஆகியவை இந்த மண்ணைப் புனிதப்படுத்தியுள்ளது. சமீபகாலத்தில் நம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்த காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரியார் மூலம் மேலும் ஆன்மிக வளர்ச்சி நடைபெற்றுள்ளது. 

இன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும் அழியும் பொருட்களுக்காக ஓயாத போராட்டம் நடக்கிறது. ஓடி ஓடி பொன்னையும் பொருளையும் சேர்த்தபின் அல்லது சேர்க்கும் முயற்சியில் களைத்தபின் அனைவரும் தேடுவது நிம்மதியைத்தான். எந்த மொழி பேசினாலும்- கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் வாழ்வின் ஒருகட்டத்தில் நிம்மதியைத் தேடி அலைவது இயற்கைதானே! இப்படி நிம்மதிக்காக- இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக, நம் மண்ணில் உள்ள அருள் அலைகளை உணர்ந்து அயல்நாட்டினரும் இங்கே வருகிறார்கள் என்றால், இங்கு பிறந்ததை நினைக்கும்போதே பக்தி உணர்வு வருமல்லவா!

தற்காலத்தில் சிருங்கேரி ஜெகத்குரு ஆச்சாரியார், அன்னை அமிர்தானந்தமயி, “வாழும் கலை’ரவிசங்கர் போன்றோர் பல அருட்பணிகளைச் செய்துவருகின்றனர். “சத்சங்கமே நம்மை நல்வழிப்படுத்தி முக்திக்கும் வழிகாட்டும்’ என்று ஆதிசங்கரரின் “பஜ கோவிந்தம்’ கூறுகிறது. எனவே அதுபற்றி சற்று சிந்திப்போம்.

“வாழும் கலை’ ரவிசங்கர்
“வாழும் கலை’ வகுப்புகளில், மூச்சுப் பயிற்சி மூலம் மனதை அமைதிப்படுத்தி இறைவனை உணரும் எளிமையான பயிற்சிகளைக் கற்றுத்தருகிறார் ரவிசங்கர். எண்ணங்களை அடக்குதல் சிரமம் என்பதால், மூச்சுப் பயிற்சி மூலம் எண்ணங்களற்ற நிலையில் தியானித்திருக்க முடியும் என்ற அற்புத ரகசியத்தைக் கற்றுத்தருகிறார். இவரது வகுப்புகள் இந்தியா முழுவதும் இவரது மாணவர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த முறை மிகவும் பலன் அளிக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டவர்கள்- என்னைப்போல் பல லட்சம் பேர் உள்ளனர். 

தமது வாழும் கலை வகுப்புகள் மூலம் கலவரமும் சண்டையும் மிகுந்த பல இடங்களில் ரவிசங்கர் அமைதி ஏற்படுத்தியுள்ளார். 

அஸ்ஸாமில் கலவரம் செய்யும் ஒரு அமைப்பைச் சார்ந்த பலரை மனம் திருத்தி அமைதிப் பாதைக்கு வழிகாட்டியுள்ளார். திருந்தியவர்கள் கூறுவது என்னவென்றால், “நாங்கள் முன்பே ரவிசங்கர் அவர்களைச் சந்தித்திருந்தால் பல அழிவுகளைச் செய்திருக்க மாட்டோம்’ என்பதுதான். 

அன்னை அமிர்தானந்தமயி

அன்பு, கருணை இவற்றின் மூலம் பலருக்கும் தனிப்பட்ட முறையில் ஆறுதல் தருவதுடன், இயற்கைச் சீரழிவுகள் ஏற்படும்போது அந்த இடங்களுக்குச் சென்று பல உதவிகள் செய்துள்ளார். இவரது அமைப்பிலும் பலர் உள்ளனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதிலும் மிகுந்த அக்கறை எடுத்து பல பணிகளைச் செய்துவருகிறார்.

ராமகிருஷ்ண தபோவனம் அமைப்பிலிருந்து பலரும், சின்மயானந்தா அமைப்பிலிருந்து தயானந்தா, சித்பவானந்தா முதலிய பலரும் அரும்பணிகளைச் செய்துவருகின்றனர்.

தேனி ஓம்காரானந்தா, தாம்பரம் பகவதி சுவாமிகள் என்று தற்காலத்திலும் அருளாளர் களுக்கு பஞ்சமில்லை. 

அருளாளர்களின் தொடர்பு நமக்கு வழி காட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

திருப்புகழே தமது மூச்சாகக்கொண்டு, நம்மிடையே வாழும் குருஜி ராகவன் அவர் களின் சேவை பற்றிச் சொல்லியாகவேண்டும். 

அருணகிரிநாத சுவாமிகளின் அருளோடு இன்று சென்னை, மும்பை, டெல்லி என்று முக்கிய நகரங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் பல ஆயிரம் பேர் திருப்புகழைப் பாடி வருகிறார்கள் என்றால்- அதற்கு குருஜிதான் காரணம். 110 கர்நாடக ராகங்களின் அமைப்பில் திருப்புகழுக்கு இசையமைத்து, அதை சுமார் முப்பதாயிரம் பேருக்கு ஒருவர் சொல்லித் தந்திருக்கிறார் என்றால்- இறைவன் அருளை வியக்காமல் இருக்கமுடியுமா? 

அவர்கள் தலைமையில் நடக்கும் பஜனைக்குச் சென்றவர்கள், ஒரே விதமான ஈடுபாட்டுடன் 200 பேர், 300 பேர் என ஒன்று சேர்ந்து சீராகப் பாடுவதைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறார்கள். 18-11-2012 அன்று சிருங்கேரி மடத்தில் நடந்த பஜனை இதற்கு சாட்சி.

“உருகிப் பாடுங்கள்; உணர்ந்து பாடுங்கள். எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து எல்லாரை யும் பாட வையுங்கள்’ என்பதுதான் இவர் கூறும் அருள் வார்த்தைகள். குருஜி கூறிய வார்த்தை களின்படி நடந்து முருகன் அருளைப் பெற்றவர் பலர். 

குரு வேண்டுமா?

தமது ஆன்மிக வளர்ச்சிக்கு குரு வேண்டும் என்று நினைத்து பலர் போலியான துறவிகளிடம் மாட்டிக்கொள்கின்றனர். சிவபெருமானே குருவாக உள்ள வடிவம்தான் தட்சிணாமூர்த்தி ரூபம். “குரு சாட்சாத் பரப்பிரம்மா’ என்று தட்சிணாமூர்த்தி ஸ்லோகம் சிவனை அடையாளம் காட்டுகிறது அல்லவா? இவரையே குருவாகக்கொண்டு தியானம் பழகுவது நல்லது.

சித்தர்கள், அருளாளர்கள் உதவியை நாடுவதும் நன்மை பயக்கும். இவர்கள் நம் அருகிலும் மனதிலும் இருப்பதாக பாவித்து (கற்பனை செய்து) தியானித்து வந்தால், இந்த அருளாளர்களே நமக்கு ஆன்மிகப் பாதைக்கு வழிகாட்டுவர். இப்படி முயற்சி செய்து சித்தர்களின் அருள் அலைகளை உணர்ந்தவர் பலர். சுவாமிஜி நிமிஷானந்தா, 

“”ஞானிகள், சித்தர்களின் வரலாற்றை உங்கள் மனதில் அடிக்கடி உருவகப்படுத்திக் கொள்ளுங் கள். இதனால் உங்களுக்கு உண்மையான பக்தியும் இறை உணர்ச்சியும் தோன்றும். இரண்டாயிரம் வருடத்திற்குப் பிறகும் சித்தர்களின் பெருமை பேசப்படுகிறது; என்றும் பேசப்படும். சித்தர்களது அருளைத் தேடும் நல்லவர்களுக்கு அவர்களது அருள் கிடைத்து வருவது உண்மை” என்கிறார். 

சிவனை ஒளி வடிவமாக வணங்கும் அமைப்புதான் பிரம்ம குமாரிகள் சங்கம். அனைத்துநாடுகளின் பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவர் (International President) இராஜயோகினி ஜெயந்தி,Connect our intellectual to divine link. It is possible to God through divine actions) ” “எப்பொழுதும் சிந்தையை இறை நினைவில் வைத்திருந்து தெய்வீக முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தெய்வமாகவே ஆகமுடியும்’ என்கிறார்.

பதினெட்டுச் சித்தர்களை நினைந்து வணங்கும் முறையில் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை மனப்பாடம் செய்துகொண்டு அடிக்கடி பாடி வந்தால் சித்தர்கள் அருள் கிடைக்கும்.

ஆதி காலத்திலே தில்லையில் திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்தசயன கும்பமுனி 
திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி 
கருவை கரூவூரர்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டுக்குடியில் வான்மீகரோடு 
நற்றாள் காசி நந்திதேவர்
பாதி அரி சங்கரன்கோவி