ஐயப்பன்

அய்யப்பன் ‘சின்’ முத்திரையின் தத்துவம்

அய்யப்பன் 'சின்' முத்திரையின் தத்துவம்
சின்முத்திரை என்பது பெருவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்தும், நடுவிரல், மோதிர விரல், சுட்டு விரல் மூன்றையும் சுட்டிக்காட்டுவதாகும். சபரிமலை அய்யப்பன் தனது வலது கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பதை அறிவோம். பெருவிரல் நுனி – இது பிரம்மத்தைக் குறிக்கும்.ஆள் காட்டி விரல் – ஜீவனைக் குறிக்கும். பிரம்மத்திலிருந்து தோன்றுவதே ஜீவன். ஜீவன் தன் பணியை முடித்து, முடிவில் ஒடுங்குமிடம் பிரம்மம் ஆகும். பிரம்மம் இல்லை யேல் ஜீவன் இல்லை. ஜீவன் உற்பத்தி இல்லையேல் பிரம்மத்திற்கு வேலை இல்லை. பிரம்மம் வெறும் பிரம்மமாகவே இயங்கும்.அதனால் சிருஷ்டி ஏற்பட வழி கிடையாது. இவ்விரண்டு காரியங்களைக் குறிக்கவே பெரு விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியையும் சேர்த்து நமக்கு உணர்த்துகின்றன. இந்த காரியம் ஒழுங்காக நடைபெற விலக்கப்பட வேண்டியவை ஆணவம், கர்வம், மாயை ஆகும். ஏனைய மூன்று விரல்களும் இம்மூன்றைக் குறிப்பனவாகும்.
மேலும் தலைப்புச்செய்திகள்

ஐயப்ப விரதத்தின் ரகசியம்

ஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்த
பிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன்  விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில் மணி மாலையை அடை யாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார்.

அவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்ப தால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய ராணி,  புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன்  தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள்.

விமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உ ன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இரு’ என அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்ம தித்தார்.

அவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று  வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48 நாட்களாக) மாறி உள்ளது.
அரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு  ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார்.

ஐயப்ப பக்தர்களின் விரத, பூஜை விதிமுறைகள்

தர்மசாஸ்தா எழுந்தருளி இருக்கும் சபரிமலை, வனப்பகுதி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கே சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு பஞ்சமில்லை. ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தால்தான் பாதுகாப்பாக சென்று வர முடியும். மனம், வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும். ஐயனை தரிசிக்க செல்பவர்கள் முறையாக விரதமிருந்து ருத்திராட்ச மாலை அணிய வேண்டும். மாலையணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.

சனிக்கிழமையும், கார்த்திகை முதல் தேதியும் மாலை அணிய உத்தமம். மாலை அணிந்த பின்பு ஆலயத்தை வலம் வந்து தேங்காய் உடைக்க வேண்டும். விரதம் ஒரு மண்டலம் (நாற்பத்தியொரு நாட்கள்). விரதநாள் நெடுகவும் வண்ண ஆடை அணிந்திருக்க வேண்டும். ஆடை கறுப்பு அல்லது காவி அல்லது நீல வண்ணத்தில் இருக்கலாம். சபரிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் குருசாமியிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை முதல் நாள் அல்லது சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திரம் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. விரதம் தொடங்கும் நாளில் காலையில் உபவாசம் இருந்து, ஆலய வழிபாடு செய்து, ஐயனின் திருமுன்பாக மூன்று முறை சரணம் சொல்லவும்.

குருசாமி மாலையை கழுத்தில் அணிவிப்பார். பின்னர் குருசாமியை வழிபட்டு அவருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் ஆலயத்தை வலம் வந்து, தேங்காய் உடைத்து இறைவனை வணங்கி வீட்டுக்கு செல்ல வேண்டும். விரதகாலம் முழுவதும் காலில் செருப்பு அணியக் கூடாது. கட்டிலில், மெத்தையில் படுத்துறங்கக் கூடாது. புலால், மதுபான வகைகளை உட்கொள்ளக் கூடாது. விரதமிருப்பவர் புலனடக்கத்தோடு இருந்தாக வேண்டும். யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. பொய் சொல்வது, ஆசை வைப்பது கூடாது. நல்லதை நினைத்து, நல்லதை சொல்லி, நல்லதையே செய்து வரவேண்டும்.

மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு செல்லக் கூடாது. துக்கம் விசாரிக்க கூடாது. விரத காலத்தில் ஒருநாள் ஐயப்ப பூஜை நடத்துவது விசேஷம். அருகில் உள்ள ஐயப்ப பக்தர்களை அழைத்து, அனைவரும் பக்திப் பாடல்கள் பாடி பரவசத்துடன் சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும். இயன்ற அளவில் அன்னதானம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு முதல் முறையாக பயணம் செய்யும் பக்தரை கன்னி ஐயப்பன் என்பார்கள். தினமும் ஐயப்பன் தோத்திரப் பாடல்களைப் பாடி, இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். சதா ஐயப்ப நாமஸ்மரணையாய் இருந்து வருவது முக்கியம். நாற்பத்தியொரு நாள் விரதத்தையும் நல்லமுறையில் பூர்த்தி செய்ய இது உதவும். சபரிமலைக்குப் பயணிக்கிறவர் மார்கழி மாத இறுதிக்குள் புறப்பட்டு விட வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஐயப்ப சரணம்! சுவாமியே சரணம்‘ சொல்லி வணங்க வேண்டும். ‘என்னில் இருப்பவனை உன்னிலும் காண்கிறேன்’ என்று ஐயப்பனை எங்கும் எதிலும் காணும் மனப்பக்குவம் இதன் மூலம் வளர்கிறது, வெளிப்படுகிறது

 

 

கடலூர் மாவட்டம், இடைச்செரு வாய் கிராமத்தில் குடிகொண்டுள்ள மைந்தனைக் காத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங் களின் மகிமைகள் மெய்சிலிர்க்க வைப்பவை. மஞ்சபத்திரய்ய னார் என்று இப்பகுதி மக்கள் பக்தியோடு அழைக்கும் இந்த அய்யனாரின் அற்புதங்களை இப்பகுதி மக்களின் வார்த்தையிலேயே காண்போம்.

எண்பத்தைந்து வயதான கிராமத்துப் பெரியவர் அப்பாவு பக்தியோடு, “”இந்தப் பக்கமெல்லாம் முன்ன காடா இருந்த சமயம். ஒத்தையடிப் பாதை மட்டும்தான் உண்டு. காட்டுக்குள்ள புலி, கரடியெல்லாம் இருக்கும். இதுக்கு நடுவுலதான் அய்யனார் கோவில். சாமி கும்பிடவே பயந்து பயந்துதான் போய்வருவாங்க. ஒருநாள் நிறைமாச கர்ப்பிணிப் பொண்ணை அழைச்சுக்கிட்டு, வயசான தாயும் தந்தையும் இந்த வழியா சொந்தக்காரங்களோட வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அய்யனார் கோவில் பக்கம் வரும்போது பிரசவ வலி வந்துடுச்சி. நடுக்காடு. ஆள் அரவமே இல்ல. பொண்ணுக்கு வலி தாங்கலை.

“அய்யனாரே… காப்பாத்து’னு கதறினா. திடீர்னு காட்டுக்குள்ளயிருந்து பத்து பொண்ணுங்க கும்பலா வந்து அவளுக்கு பிரசவம் பார்த்தாங்க. சுகப்பிரசவம். அழகான ஆண்குழந்தை பிறந்துச்சு. அதுக்குப் பிறகு அவங்க காட்டுக்குள்ள போய் மறைஞ்சுட்டாங்க. அய்யனார்தான் நம்மோட அபயக்குரல் கேட்டு தன்னோட பரிவாரப் பெண் தெய்வங்களை அனுப்பி நம்மைக் காப்பாத்தியிருக்கார்னு அவங்களுக்குப் புரிஞ்சது. எல்லாரும் அய்யனாரை வணங்கி வீடு திரும்புனாங்க. இந்த சம்பவத்தாலதான் இவருக்கு மைந்தனைப் பெற்ற அய்யனார்னு பேர் வந்தது” என்றார்.

கோவில் பூசாரியான தங்கமணி, அய்யனாரின் பெருமையை விளக்கும் மற்றொரு சம்பவத்தைக் கூறினார். “”அய்யனார் கோவில் பக்கமா ஒரு பொண்ணுக்கு வயக்காட்டு வேலை. அங்கிருந்த மரக்கிளையில் தூளி கட்டி தன்னோட குழந்தைய தூங்க வெச்சுட்டு களையெடுக் கப் போயிட்டா. சுத்திலும் காடுங்கிறதால சிறுத்தை ஒண்ணு மனுஷ வாடையை மோப்பம் பிடிச்சி தூளிகிட்ட வந்துடுச்சு. தற்செயலா தூளிப் பக்கம் திரும்பிப் பார்த்த அம்மாக்காரி பிள்ளை போச்சேனு பதறிப்போய் “அய்யனாரே காப்பாத்து’னு கதறினா. குழந்தைமேல சிறுத்தை பாய, கண்ணிமைக்கிற நேரத்துல அய்யனாரோட சூலம் வந்து சொருகி அந்த சிறுத்தை சுருண்டு விழுந்து செத்துப்போச்சு. அதனால இவருக்கு மைந்த னைக் காத்த அய்யனார்னு பேர்” என்றார்அவர்.

இந்த அய்யனார் இடைச்செருவாய் கிராம மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கு கிறார். அய்யனாரின் அற்புதங்கள் குறித்து ஒவ் வொருவரும் ஒரு கதை வைத்திருக்கின்றனர். ஊர் முக்கியஸ்தரும் பத்திரிகையாளருமான ஜெகந்நாதன், ஏற்றம் இறைக்க வந்த அய்யனா ரின் கதையை விவரித்தார்.

இது கோவிலுக்கு அருகே நிலம் வைத்திருந்த ராமசாமி, ஆறுமுகம், சின்னசாமி, செல்வன், கணபதி ஆகிய ஐந்து விவசாயிகள் பற்றிய கதையும்கூட.

அந்தக் காலத்தில் விவசாயம் செய்வதற்கான நீரை கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்துப் பயன்படுத்துவதுதான் வழக்கம். ஏற்றம் இறைக் கும்போது களைப்பு தெரியாமலிருக்க பாடல் கள் பாடியபடியே வேலை செய்வர். இதற்கு ஏற்றப் பாடல் என்றே பெயர்.

“”ஏத்தம் இறைக்கிறதுக்கு அதிகாலையிலே கௌம்பிடுவாங்க. பகல் வெயில்ல ரொம்ப நேரம் ஏத்தம் இறைக்க முடியாது. ஏத்தம் இறைக்கும்போது அவங்க பாடுற பாட்டை அய்யனாரும் காது குளிரக் கேட்டு ரசிப்பாரு. ஒரு நாள் இடைச்செருவாயிலிருந்து அதிகாலை யிலே ஏத்தம் இறைக்க அஞ்சு பேரும் கௌம்பு னாங்க. கணபதிக்கு மட்டும் கொஞ்சம் வேலை யிருந்ததால், “நீங்க முன்னால போங்க, நான் பின்னால வந்து சேந்துக்கிடுதேன்’னு சொல்லிட்டாரு.

அவங்களும் வயக்காட்டுக்கு வந்து ஏத்தம் இறைக்க ஆரம்பிக்கிறப்ப, அரக்கபரக்க வந்து சேந்தாரு கணபதி. அவர் சாலுல தண்ணி நிரப் பறதுக்காக கிணத்துக்குள்ள இறங்கிட்டாரு. பாட்டும் கும்மாளமுமா ஏத்தம் இறைச்சு முடிச்சாங்க. மேலிருந்த நாலு பேரும் அப்பாடானு கிணத்துப் பக்கமா உட்கார, கணபதி ஓட்டமும் நடையுமா வந்து “நான் இல்லாமலே ஏத்தம் இறைச்சிட்டிங்களா… எங்கே என்னைத் திட்டுவீங்களோனு பயந்து பயந்து ஓடி வந்தேன்’னு சொல்ல, எல்லாருக்கும் ஆச்சரியமா போச்சு. “என்னது, நீ இப்பதான் வர்றியா? அப்ப எங்களோடு வந்து ஏத்தம் இறைச்சது யாரு’னு கிணத்துக்குள்ள எட்டிப் பாத்தா அங்க யாரையும் காணோம். ஆளில் லாம சிரமப்படறதைப் பாத்து, அய்யனாரே கணபதி உருவுல வந்தாருங்கறதை அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. இது எங்க தாத்தா காலத் துல நடந்தது” என்றார்.

இடைச்செருவாய் அய்யனார், தன் பரிவார தெய்வங்களான குள்ளக் கருப்பு, முனியப்பர், செல்லியம்மன், மாரியம்மன் புடைசூழ கோவில் கொண்டிருக்கிறார். தேர்த் திருவிழா, தீமிதித் திருவிழா என ஊர் மக்கள் சிறப்பாக விழா எடுத்து அய்யனாரைச் சிறப்பிக்கின்றனர். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் என பல மாவட்ட மக்களும் இவரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவரது பரிவார தெய்வமான குள்ளக் கருப்பு மட்டுமே ஆடு, கோழி போன்றவற்றை பலியாக ஏற்றுக் கொள்கிறார். அருகேயுள்ள கொரக்கை சாந்தப்ப அய்யனார் இவரது நண்பர். இருவரும் பரஸ்பரம் மற்றவரின் ஆலயத்துக்குச் சென்று வருவதுண்டு.

ஊர் முக்கியஸ்தர்களான கலியமூர்த்தி, நேரு, வேல்முருகன், பிரகாஷ், புகழேந்தி, முருகன், வெங்கடேசன், சரவணன், சிற்பி வேல்முருகன் ஆகியோர், திருடர்களைக் காட்டிக்கொடுத்த அய்யனாரின் அற்புதத்தை ஆர்வமாய் விவரித்தார்கள்.

அவர்கள் சொன்ன கதை இதுதான். இவ்வூ ரைச் சேர்ந்த சீனிவாசன் நிறைய நிலபுலன் களுக்குச் சொந்தக்காரர். ஒருசமயம் அவரது நிலத்தில் கடலை அமோகமாக விளைந்திருந் தது. கடலையைப் பிடுங்கிக் குவிப்பதற்கே இரவாகி விட்டது. எனவே காலை யில் பார்த்துக் கொள்ளலா மென்று ஊருக் குக் கிளம்பி விட்டனர். அய்யனாரை மீறி யாரும் திருடிவிட முடியாது என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. இப்படியிருக்க, அன்றிரவு சீனிவாசனை யாரோ தட்டியெழுப்பினார்கள். “”சீனிவாசா, எழுந்திருப்பா. உன் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றி திருடப் பார்க்கிறார்கள். சீக்கிரம் போய்த் தடு” என்று குரல் கேட்டது. எழுந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. உடனே யாரையும் துணைக்கழைக்காமல் களத்துக்கு ஓடினார் சீனிவாசன். அங்கே பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந் தார்கள். சீனிவாசனைப் பார்த்ததும் அந்த திருட்டுக்கூட்டம் போட்டது போட்டபடி தலைதெறிக்க ஓடி மறைந்தது. சீனிவாசனும் விடாமல் விரட்டி ஒருவனை மடக்கிப் பிடித்து விட்டார். “”அய்யா, யாருக்கும் தெரியாமல் திருட வந்தோம். திடீர்னு நீங்க உங்க ஆளுங் களோடு பந்தத்தை எடுத்துட்டு வந்ததும் தப்பிச்சு ஓடப் பார்த்தோம்” என்றான். சீனிவாசனுக்கோ ஆச்சரியம்! நாம் மட்டும் தானே தனி யாக வந்தோம். பின்னால் நமது ஆட் களைப் பார்த்ததாகச் சொல்கிறானே என்று திரும்பிப் பார்த்தார். யாருமில்லை. அய்யனார் தான் தன் பரிவாரங்களோடு தீப்பந்தமும் கையுமாகக் காட்சி தந்திருக்க வேண்டு மென்பதை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார் சீனிவாசன். விஷயம் தெரிந்து அய்யனார் கோவில் முன் திரண்டு விட்டனர் ஊர் மக்கள்.

இப்படி பல வகையிலும் மக்களை இக்கட்டு களிலிருந்து காத்து, அவர்களது கஷ்டநஷ்டங் களில் பங்கேற்று, திருட்டு நடக்காமல் துணை புரியும் இந்த அய்யனார் கோவிலை தற்போது ஊர்க்காரர்கள் புதுப்பித்து வருகின்றனர். வனமாக இருந்த இடம் திருத்தப்பட்டு ஊராக மாறியுள்ள போதும், சுமார் 15 ஏக்கர் நிலத்தை இப்போதும் வனமாகவே வைத்துள்ளார்கள். இந்த வனப்பகுதியில் வாழும் மயில், மான்களை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக, மிகுந்த சப்தமெழுப்பும் வெடிகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதில்லை.

இத்தனை சிறப்புமிக்க அய்யனார் கோவில் கடலூர் மாவட்டம், ராமநத்தம்- திட்டக் குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்ல பஸ், ஆட்டோ, கார் என அனைத்து வசதி களும் உண்டு.

அற்புதங்கள் பல புரியும் அய்யனாரை ஒருமுறை போய் தரிசித்து வரலாமே!


-எஸ்.சந்திரமௌலி

        கார்த்திகை மாதம் துவங்கியதும், கேரளாவில் மட்டுமின்றி, பாரத தேசமே ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகிறது. மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார் கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக் கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது கண்கூடு.

மாலை போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர் கள் கார்த்திகை முதல் தேதி முதலே விரதமிருக்க வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்பே குளிர்ந்த நீரில் நீராடி, சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப் புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

சபரிமலைப் பயணத்தின்போது, இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் போது, பந்தளத்தில் உள்ள கோவிலில் காணிக்கை செலுத்தி வணங்கிவிட்டு, பயணத்தைத் தொடர வேண்டும் என்பது ஐதீகம்.
அடுத்து முக்கிய மான இடம் எரிமேலி. மத ஒற்றுமைதான் எரிமேலியின் மகத்து வம்! இங்கு ஐயப்ப பக்தர்கள் நடத்தும் “பேட்டை துள்ளல்’ வெகு பிரசித்தம். பம்பை முதலிய வாத்தியங்கள் முழங்க, முகத்திலும் உடம்பிலும் வண்ணங் களைப் பூசிக்கொண்டு, கைகளில் இலைக் கொத்துகளை ஏந்தியபடி, “சுவாமி திந்தகத் தோம்… ஐயப்ப திந்தகத்தோம்’ என்று சொல்லிக் கொண்டு, ஆட்டம் போட்டபடி வாவரின் சந்நிதியினை நோக்கி வருவார்கள். வாவர் ஒரு இஸ்லாமிய கடற்கொள்ளைக்காரன் என்றும்; அவனைப் போரிட்டு வீழ்த்திய ஐயப்பன் அவனை ஆசீர்வதித்து தன் தளபதியாக்கிக் கொண்டதாகவும் கூறுவார்கள்.

இங்கே தனிவழிபாடு ஏதுமில்லையென்றா லும், தேங்காய் உடைத்து, காணிக்கை செலுத்தி வழிபடலாம். இங்கே மிளகு, கற்கண்டு போன்றவற்றை காணிக்கையாகப் போடுவதும் பக்தர் களின் பழக்கம்.

சபரிமலைப் பயணத்தில் ஐயப்பனின் சந்நிதானத்துக்கு அடுத்தபடியான முக்கியத் துவம் கொண்ட ஸ்தலம் என்றால் அது பம்பா தான். ஐயப்ப பக்தர்கள் பம்பையில் நீராடிய பின்னரே பயணத்தைத் தொடருவார்கள்.

பம்பையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் ஒரு முக்கிய சடங்கு. ஆற்றங் கரையோரத்தில் வரிசையாக புரோகி தர்கள் தர்ப்பணம் செய்விக்க அமர்ந் திருப்பதைக் காண லாம். பெரிய குழுக்க ளாக வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் உணவு சமைத்து சாப்பிட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மலையேறிச் செல் வார்கள். இந்த உணவுக்கு பம்பை சத்யா (பம்பை விருந்து) என்று பெயர். படியேறும் தொடக்கத்தில் அழகுற அமர்ந்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு பம்பை கணபதி என்று நாமம். அவருக்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்கி விட்டு பயணத்தைத் தொடர்வது மரபு. அடுத்து பார்வதி, ராமர், அனுமன் சந்நிதிகளைக் காண லாம். அங்கே பிரதட்சிணம் செய்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு நகர்ந்தால் அடுத்து நாம் காண்பது பந்தள மகாராஜா. அவரை வணங்கி, ஆசிபெற்று மலையேற்றத்தைத் தொடரலாம்.

சிறிது தூரத்தில் மலையேற்றப் பாதை செங்குத்தாக இருக்குமாதலால், பயணம் சற்றே சிரமமாக இருக்கும். தாகம் எடுக்கும். தண்ணீரை அளவுடன் அருந்தி, பயணத்தைத் தொடர்ந்தால் வருவது அப்பாச்சிமேடு. இங்கே துர்தேவதைகள் இருப்பதாக நம்பிக்கை. அவ்விடம் விற்கப்படும் அரிசி உருண்டைகளை வாங்கி எறிந்துவிட்டு பயணத்தைத் தொடரவேண்டும்.

அடுத்து வருவது சபரிபீடம். இவ்விடத்தில் தான் சபரிக்கு மோட்சம் கிடைத்ததாக ஐதீகம். இங்கேயும் தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யலாம்.

தொடர்ந்து நடந்தால் சரங்குத்தியை அடையலாம். இவ்விடத்தில் கன்னி ஐயப்பன் மார்கள் எடுத்து வரும் சரக்குச்சிகளைப் போட வேண்டும்.

வேறு எங்கும் இல்லாத புதுமையான வழிபாடு ஒன்றை இங்கு காணலாம். அதுவே வெடி வழிபாடு. ஆம்! பக்தர்கள் இன்னார் பெயரில் இத்தனை என்று காணிக்கை செலுத்தி, அதிர்வேட்டுகளை வெடிக்கச் செய்யலாம். பழங்காலத்தில் கொடிய வன விலங்குகளை யாத்திரைப் பாதையிலிருந்து விரட்டி, பத்திரமாய் பயணம் தொடர செய்யப்பட்ட வெடி உபாயம் இன்று ஒரு வழிபாடாக பரிமாணம் பெற்றுள்ளது.

அடுத்து அடைவது சந்நிதானத்தைத்தான். அங்கே அலையெனத் திரண்டு பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் வானை அதிர வைக்கும்; மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திவிடும். விரதமிருந்து, இருமுடி ஏந்திவரும் பக்தர்கள் மாத்திரமே சந்நிதானத்தில் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சமீபகாலமாக, இருமுடி கட்டிக் கொள்ளாமல் வரும் பக்தர்களும் உண்டு. 

அவர்கள் பின்புறப் படிக்கட்டுகள் வழியே ஏறிவந்து ஐயப்பனைத் தரிசிக்கலாம்.

பதினெட்டு படிகளையும், பாவங்கள் உடைபடும் புனிதப் படிகளாகப் பக்தர்கள் மதிக்கிறார்கள். பதினெட்டு படிகளையும் பயபக்தியோடு சரண கோஷம் சொல்லி தொட்டு வணங்கிய படி ஏறுவது மரபு.

பழங்காலத்தில், பக்தர்கள் இருமுடி யினுள்ளே வைத்துக் கொண்டு வரும் தேங்காயை பதினெட்டாம் படியில் உடைத்து படியேறுவது மரபு. ஆனால், பதினெட்டாம் படிக்கு பஞ்சலோகத் தகடு வேயப்பட்டபிறகு படிகளில் தேங்காய் உடைப்பதற்குத் தடை வந்துவிட்டது. படிகளுடன் இணைத்து அமைக்கப்பட்ட கல்லில் தேங்காயை உடைத்து, வலதுகாலை எடுத்து வைத்து பதினெட்டாம் படி ஏற்றத்தைத் துவக்குவதுதான் தற்போது வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு படிக்கும் பிரத்தியேகமான சரண முழக்கம் இருக்கிறது. அதனை உதடுகள் உச்சரிக்க, மனம் முழுவதும் ஐயப்பனிடம் சரணடைந்த நிலையில் பதினெட்டு படிகளை ஏறிட வேண்டும்.

இப்போது, படிக்கட்டுகளில் காவல்துறை யினர் நின்றுகொண்டு, படியேறும் பக்தர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள். பதினெட்டு படிகளும் மிகவும் பவித்திரமானவை. 

பதினெட்டு படிகளைக் கடந்து ஐயப்பனைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், கண்ணார ஐயனைத் தரிசித்தபின் கன்னிமூலை கணபதி, நாகராஜாவை வணங்கியபின், மாளிகைபுரத்து அம்மன் சந்நிதி நோக்கி நகரலாம்.

ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் என்பதால், அவரைத் தரிசிக்க இருமுடியேந்தி வரும் பக்தர்கள்கூட, ஒரு மண்டலம் கடுமை யான பிரம்மச்சரிய விரதம் அனுசரிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சபரிமலையில் மாளிகைபுரத்து அம்மன் என்கிற பெண் தெய்வத்துக்கும் ஒரு கோவில் இருப்பது சற்றே விசித்திரமாக சிலருக்குத் தோன்றும்.

ஐயப்பன்மீது அளவற்ற காதல் கொண்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியவள் மாளிகைபுரத்தாள். அவளது காதலை ஏற்றுக் கொண்டாலும், திருமணத்துக்கு ஐயப்பன் ஒரு நிபந்தனை விதித்தார். தன்னை தரிசிக்க கன்னி ஐயப்பன்மார்கள் வராமல் இருக்கும் காலத்தில் மாளிகை புரத்தாளை மணப்பேன் என்பதே ஐயப்பன் அளித்த வாக்குறுதி.

ஒவ்வொரு வருடமும் மகரஜோதி தருணத் தில் மாளிகைபுரத்து அம்மனை பதினெட்டாம் படிக்கும் அங்கிருந்து சரங்குத்திக்கும் எழுந் தருளச் செய்வார்கள். இப்போதாவது ஐயப்பன் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்ற கோரிக்கை யுடன் சரங்குத்திக்கு வரும் மாளிகைபுரத்து அம்மன், அங்கே கன்னி ஐயப்பன்மார்கள் குத்திவிட்டுச் சென்ற சரக்குச்சிகளைப் பார்த்த வுடன், மனவேதனை அடைந்து தன் வசிப்பிடம் திரும்பி விடுவது வழக்கம்.

தரிசனம் முடித்தவுடன் மலை இறங்கத் துவங்குவது மரபு. பம்பையை வந்தடைந்தவுடன் மறுபடி கணபதி, ஸ்ரீராமன், அனுமனை சூடம் ஏற்றி வழிபட்டு மனநிறைவு கொள்ளலாம்.                                                                                            Nakkheeran.in 

 

 

 

 

Leave a Reply