2016 ராசி பலன்கள்!மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல்கொண்ட மேஷ ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்புகிரகமான பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக உயர்வான நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுமட்டுமின்றி 08-01-2016 முதல் கேது பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும் என்றாலும் இந்த ஆண்டுமுழுவதிலும் சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களை வாரிவழங்கும் குரு பகவான் வரும் 02-08-2016 முதல் ருண ரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல், டென்ஷன், தொழில், உத்தியோகரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும்.  எனவே 2016-ஆம் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவிலும் நெருக்கடிகள் நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பயணங்க ளாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் வெகுசிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே வாழ்வில் நற்பலனை அடையமுடியும்.

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் தடைப்பட்ட ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறும். சற்றே அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளுவை சற்றுக் குறைத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் அதிக கவனமுடன் நடந்துகொண்டால் வீண் பழிச் சொல்லை தவிர்க்கலாம்.

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு நல்ல லாபத்தினை ஏற்படுத்தும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். கடன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த கடனை வசூலிக்கமுடியாது.

அரசியல்

மக்களின் ஆதரவுகளைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிக்காக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டியிருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களாலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடையும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்கநேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெறமுடியும். நவீன முறைகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்

ஆண்டின் முற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிபெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின்போது கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.

மாதப்பலன்


ஜனவரி
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-01-2016 இரவு 12.56 மணி முதல் 08-01-2016 காலை 09.46 மணி வரை

பிப்ரவரி

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-02-2016 காலை 09.40 மணி முதல் 04-02-2016 இரவு 07.17 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 29-02-2016 மாலை 05.37 மணி முதல் 03-03-2016 காலை 04.19 மணி வரை மற்றும் 27-03-2016 இரவு 12.22 மணி முதல் 30-03-2016 பகல் 11.48 மணி வரை.

ஏப்ரல்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாயும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயத்தில் யாருக்கும் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 24-04-2016 காலை 06.24 மணி முதல் 26-04-2016 மாலை 05.53 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் சூரியனும் 8-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் கடினமான முயற்சிகள் மேற்கொண்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற டென்ஷன்களை ஏற்படுத்துவார்கள். திருமணம்போன்ற சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் நிலவும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 21-05-2016 மதியம் 12.30 மணி முதல் 23-05-2016 இரவு 11.36 மணி வரை.

ஜூன்

குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் போன்ற யாவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 17-06-2016 இரவு 07.18 மணி முதல் 20-06-2016 மாலை 06.04 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல்  சூரியனும், 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-07-2016 அதிகாலை 02.56 மணி முதல் 17-07-2016 மதியம் 01.44 மணி வரை.

ஆகஸ்ட்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த நேரிடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்களும் கைகூடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரித்து வேலைப் பளு கூடும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-08-2016 மதியம் 11.01 மணி முதல் 13-08-2016 இரவு 10.18 மணி வரை.

செப்டம்பர்

லாப ஸ்தானமான 11-ல் கேதுவும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-09-2016 மாலை 06.52 மணி முதல் 10-09-2016 காலை 06.51 மணி வரை.

அக்டோபர்

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகப் பலனை பெறமுடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-10-2016 அதிகாலை 01.57 மணி முதல் 07-10-2016 மதியம் 02.24 மணி வரை

நவம்பர்

அஷ்டமச் சனி நடைபெறுவதும் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-11-2016 காலை 08.15 மணி முதல் 03-11-2016 இரவு 08.45 மணி வரை மற்றும் 28-11-2016 மதியம் 02.19 மணி முதல் 01-12-2016 அதிகாலை 02.36 மணி வரை.

டிசம்பர்

அட்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-12-2016 இரவு 08.52 மணி முதல் 28-12-2016 காலை 09.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

 

எண் : 1, 2, 3, 9.நிறம் : ஆழ்சிவப்பு.

கிழமை : செவ்வாய்.

கல் : பவளம்.

திசை : தெற்கு.

தெய்வம் : முருகன்.

————————————————————————————————————————————————————————————————————————————-.

ரிஷபம்   
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. களத்திர ஸ்தானமான 7-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாமல் போகும். 08-1-2016-ல் ஏற்படும் ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். வரும் 02-08-2016 முதல் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோகரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

ஆண்டின் முற்பாதிவரை உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதிவரை எந்தவொரு காரியத்திலும் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த உறவினர்கள் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு வீடுமனை வாங்கும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சிதரும் சுபச்செய்திகள் வந்துசேரும்.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்

ஆண்டின் முற்பாதிவரை எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் நிலவினாலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்திலும் லாபங்களைப் பெறமுடியும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை அமையும். கூட்டாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் லாபங்கள் தடைப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் காண்ட்ராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும்.

அரசியல்

ஆண்டின் முற்பாதியில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத கௌரவப் பதவிகள் தேடிவரும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். மக்களின் ஆதரவைப் பெற புதுப்புது முயற்சிகளை கையாள்வீர்கள்

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும்.  வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்துசேரும். நடிப்புத் துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரைக் காப்பாற்ற அதிக செலவுகளை செய்யவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப்பெற்று அனைத்தையும் சரி செய்யமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்கள்

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் சேமிக்கமுடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினைப் பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளை தட்டிச்செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்கமுடியும்.

மாதப்பலன்

ஜனவரிஉங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். நெருங்கியவர்கள் ஓரளவுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் ஓரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். எடுக்கும் காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பெறமுடியும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால் நற்பலனை அடைய முடியும்.
சந்திராஷ்டமம்: 08-01-2016 காலை 09.46 மணி முதல் 10-01-2016 மதியம் 03.32 மணி வரை

பிப்ரவரி

ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடிய யோகம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-02-2016 இரவு 07.17 மணி முதல் 07-02-2016 அதிகாலை 01.12 மணி வரை.

மார்ச்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 4-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்ப அமையும். அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவச் செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. சனிக்கு பரிகாரம் செய்வது மிகவும் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-03-2016 காலை 04.19 மணி முதல் 05-03-2016 மதியம் 11.25 மணி வரை. மற்றும் 30-03-2016 பகல் 11.48 மணி முதல் 01-04-2016 இரவு 08.22 மணி வரை.

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகளில் எந்த பிரச்சினையும் இருக்காதென்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 26-04-2016 மாலை 05.53 மணி முதல் 29-04-2016 அதிகாலை 03.16 மணிவரை.

மே

சமசப்தம ஸ்தானமான 7-ல் சனி செவ்வாயும், விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். இம்மாதம் நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, மனசஞ்சலங்கள், உடல் சோர்வு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளைச் சுமக்கநேரிடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது கெடுதிகளைக் குறைக்கும்.

சந்திராஷ்டமம்: 23-05-2016 இரவு 11.36 மணி முதல் 26-05-2016 காலை 08.52 மணி வரை.

ஜூன்

சூரியன் ஜென்ம ராசியிலும், 7-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம்செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வதும் நற்பலனைத் தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் தான் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-06-2016 மாலை 06.04 மணி முதல் 22-06-2016 மதியம் 02.42 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய், சனி சஞ்சரித்தாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை குடும்ப தேவைக்கேற்ப அமையும். புத்திர வழியில் சிறு வீண்செலவுகள், மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-07-2016 மதியம் 01.44 மணி முதல் 19-07-2016 இரவு 09.53 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதம் முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-08-2016 இரவு 10.18 மணி முதல் 16-08-2016 காலை 06.38 மணி வரை.

செப்டம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், ராகு இருந்தாலும் 5-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றத்தை அடையமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு குறையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-09-2016 காலை 06.51 மணி முதல் 12-09-2016 மாலை 04.06 மணி வரை.

அக்டோபர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உத்தியோகரீதியாக உயர்வுகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும். அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்: 07-10-2016 மதியம் 02.24 மணி முதல் 09-10-2016 இரவு 12.53 மணி வரை.

நவம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குருவும், 6-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடிவரும். வாழ்வில் திடீர் உயர்வுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொண்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-11-2016 இரவு 08.45 மணி முதல் 06-11-2016 காலை 08.00 மணி வரை.

டிசம்பர்

சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நற்பலனைத் தரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-12-2016 அதிகாலை 02.36 மணி முதல் 03-12- 2016 மதியம் 01.45 மணி வரை மற்றும் 28-12-2016 காலை 09.00 மணி முதல் 30-12-2016 இரவு 07.37 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

நிறம்: வெண்மை, நீலம்.

கிழமை: வெள்ளி, சனி.

கல்: வைரம்.

திசை: தென்கிழக்கு.

தெய்வம்: விஷ்ணு, லட்சுமி.

——————————————————————————————————————————————————————————————————————-

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

விடாமுயற்சியுடன் செயல்படும் திறனும் உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு அற்புதமான பலன்களை உண்டாக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பாகும். ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு பகவானும் 02-08-2016 வரை தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரரீதியாகவும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். சிலருக்கு அசையா சொத்துகளால் அனுகூலம், வண்டி வாகனச் சேர்க்கை போன்ற யாவும் அமையும். 02-08-2016 முதல் குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமாக இருப்பது, பெரிய முதலீடுகளை செய்து தொடங்கநினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சர்பகிரகங்களான ராகு 2-லும், கேது 8-லும் 08-01-2016 முதல் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைத்துக்கொள்வது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு சுமாராக இருப்பார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் சில எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் அற்புதமாக அமையும். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரையில் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிப்பதால் நேரத்திற்கு உண்ணமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் முன்னேற்றமும் பெருகும். பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி உயர்வடையும் என்றாலும், ஆகஸ்ட் மாதம் முதல் பெரிய முதலீட்டில் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். வேலையாட்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது மூலம் வீண் விரயங்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்களில் நல்ல லாபம் கிட்டும். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே பலனடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படுமென்பதால் பெரிய தொகைகளை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

அரசியல்

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடித்து ஏற்றம் பெறமுடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியுமென்றாலும், கட்சிக்காக செய்யும் செலவுகளில் சற்று நிதானத்தை கடைப்பிடித்தல் நன்று. ஆகஸ்ட் மாதம்முதல் உடனிருப்பவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காமல் சிந்தித்துச் செயல்பட்டால் பதவிகளை சிறந்த முறையில் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலன்கள் அமையும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப்பெறும். உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான லாபம் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளைக் கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் ஆசிரியர்களையும் பெரியவர்களையும் மதித்து நடப்பது நல்லது. கல்வியில் ஓரளவு சாதகப் பலனை பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை அவப்பெயரை உண்டாக்கும். மதிப்பெண் குறையும்.

மாதப்பலன்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும் வலிமையும் கூடக்கூடிய அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்ததாலும் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 12-01-2016 மாலை 07.17 மணி முதல் 14-01-2016 இரவு 10.15 மணி வரை

பிப்ரவரி

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் வீண் அலைச்சல், டென்ஷன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகளால் கடன்கள் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபங்களைப் பெறமுடியும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-02-2016 காலை 04.11 மணி முதல் 11-02-2016 காலை 05.40 மணி வரை.

மார்ச்

குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது வீண் விரயங்களை குறைக்க உதவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-03-2016 மதியம் 02.15 மணி முதல் 09-03-2016 மதியம் 03.40 மணி வரை

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் சமாளித்து ஏற்றமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் அமையும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன்மூலம் அனுகூலங்களை அடையலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-04-2016 அதிகாலை 01.14 மணிமுதல் 06-04-2016அதிகாலை 02.46 மணி வரை.

மே

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். எந்தவொரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களது பிரச்சினை குறையும்.

சந்திராஷ்டமம்: 01-05-2016 காலை 09.41மணி மணி முதல் 03-05-2016 மதியம் 12.49 வரை.மற்றும் 28-05-2016 மாலை 04.00 மணி முதல் 30-05-2016 இரவு 08.34மணி வரை.

ஜூன்

தன ஸ்தானமான 2-ல் குருவும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-06-2016 இரவு 09.24 மணி முதல் 27-06-2016 அதிகாலை 02.22 மணி வரை.

ஜூலை

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம்செய்வது வீண் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். துர்க்கையம்மனை வழிபாடுசெய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-07-2016 அதிகாலை 03.41 மணி முதல் 24-07-2016 காலை 07.52 மணி வரை.

ஆகஸ்ட்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும், புதன் 2-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியம் கைகூடும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். 2-ஆம் தேதி முதல் குரு 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பதும் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-08-2016 பகல் 11.51 மணி முதல் 20-08-2016 மதியம் 02.53 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 9-ஆம் தேதி முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஓரளவுக்கு சாதகப்பலனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பது மூலம் கடன்களைத் தவிர்க்கலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-09-2016 இரவு 09.42 மணி முதல் 16-09-2016 இரவு 12.10 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்செலுத்துவதும் நெருங்கியவர்களிடையே வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 12-10-2016 காலை 07.50 மணி முதல் 14-10-2016 காலை 10.55 மணி வரை.

நவம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியனும் சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். எதிலும் நீங்கள் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் இருக்கும். முயற்சிகளில் தடைதாமதங்கள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி குறைவுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடிய நிலை, புத்திர வழியில் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனநிம்மதி குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 08-11-2016 மாலை 04.32 மணி முதல் 10-11-2016 இரவு 09.16 மணி வரை.

டிசம்பர்

குடும்ப ஸ்தானமான 2-ல் ராகு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு நற்பலனைப் பெறமுடியும்.  குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வீண் பழிகளை சுமக்கக்கூடிய காலமென்பதால் எதிலும் கவனம் தேவை. முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-12-2016 இரவு 11.01 மணி முதல் 08-12-2016 காலை 05.26 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

நிறம்: வெள்ளை, சிவப்பு.

கிழமை: திங்கள், வியாழன்.

கல்: முத்து.

திசை: வடகிழக்கு.

தெய்வம்: வெங்கடாசலபதி.

—————————————————————————————————————————————————————————————————–
சிம்மம்  
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

வாழ்வில் பலமுறை தோல்வியைச் சந்தித்தாலும் துணிந்துநின்று போராடக்கூடிய ஆற்றல்கொண்ட சிம்ம ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் சனி பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இது சற்று அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் தொழில், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். 08-01-2016 முதல் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. 02-08-2016 முதல் குரு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதாரரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியம் உண்டாகக்கூடிய அமைப்பு கொடுக்கும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் முற்பாதியில் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் பிற்பாதியில் முன்னேற்றங்களை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு ஓரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற மனக்கவலைகள் ஏற்பட்டாலும், ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார்- உறவினர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் எதிலும் தடை தாமதங்களையும் வீண் பழிச் சொற்களையும் சந்தித்தாலும், ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உத்தியோகரீதியாக சிலருக்கு அலைச்சல்கள் சற்று அதிகரிக்கக்கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் ஆகஸ்டு மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் மறுமலர்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகமாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

காண்ட்ராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சினைகளை, பணவரவில் தடைகளை சந்தித்தாலும் ஆகஸ்டு மாதம் முதல் தாராள தனவரவுகள், கொடுக்கல் வாங்கலில் சரள நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகள் பைசலாகும்.

அரசியல்

இந்த ஆண்டின் முற்பாதிவரை நீங்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், மேலிடத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. மக்களின் ஆதரவைப்பெற கொஞ்சம் அதிக முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் உத்தமம். ஆகஸ்டு மாதம் முதல் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேவையற்ற பயணங்களால் உடல் நிலை சற்று சோர்வடையும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் முற்பாதியில் புதிய வாய்ப்புகளில் தடை, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி பத்திரிகைமூலம் அவமானங்கள் உண்டாகக்கூடிய நிலை ஏற்பட்டாலும் ஆகஸ்டு மாதம் முதல் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை, நடனத்துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராது ஏற்படக்கூடிய செலவுகளை சமாளிக்க கடன்வாங்க வேண்டிவரும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்குள்ள வம்பு, பிரச்சினைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற அனுகூலமான பலன்களை அடையமுடியும். நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் ஆண்டின் முற்பாதியில் தடைகள் நிலவினாலும் ஆகஸ்டு மாதம் முதல் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். சேமிக்க முடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக ஈடுபாடுடன் செயல்பட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். உடன் பழகும் மாணவர்களிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்கள், உடல் நலத்தில் சோர்வு ஏற்படும். எதிலும் சற்று கவனம் தேவை.

மாதப்பலன்

ஜனவரி ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகளனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 14-01-2016 இரவு 10.15 மணி முதல் 17-01-2016 அதிகாலை 01.12 மணி வரை

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், பஞ்சம ஸ்தானத்தில் புதன், மாத முற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நெருங்கியவர் களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். சிவ வழிபாடு, சூரிய வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-02-2016 காலை 05.40 மணி முதல் 13-02-2016 காலை 07.12  மணி வரை.

மார்ச்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ள முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-03-2016 மதியம் 03.40 மணி முதல் 11-03-2016 மதியம் 03.41  மணி வரை.

ஏப்ரல்

மாதக்கோளான சூரியன் 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது மூலம் உண்டாகக்கூடிய பிரச்சினைகள் குறையும்.

சந்திராஷ்டமம்: 06-04-2016 அதிகாலை 02.46 மணி முதல் 08-04-2016 அதிகாலை 02.21 மணி வரை.

மே

சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். எதிலும் சிந்தித்துச் செயல் பட்டால் நற்பலன் அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-05-2016 மதியம் 12.49 மணி முதல் 05-05-2016 பகல் 01.17 மணி வரை மற்றும் 30-05-2016 இரவு 08.34 மணி முதல் 01-06-2016 இரவு 10.37  மணி வரை

ஜூன்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் தொழில்ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கடன்கள் குறைந்து வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-06-2016 அதிகாலை 02.22 மணி முதல் 29-06-2016 காலை 05.38 மணி வரை.

ஜூலை

இம்மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். பணவரவுகளும் பஞ்சமின்றி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.  முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-07-2016 காலை 07.52 மணி முதல் 26-07-2016 பகல் 11.05 மணி வரை.

ஆகஸ்ட்

சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்படும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-08-2016 மதியம் 02.53 மணி முதல் 22-08-2016 மாலை 04.57 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், குரு 2-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரரீதியாக உயர்வுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-09-2016 இரவு 12.10 மணி முதல் 18-09-2016 இரவு 12.54 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரித்தாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குருவும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-10-2016 காலை 10.55 மணி முதல்16-10-2016 காலை 11.13 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களது பலமும் வளமும் கூடும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 10-11-2016 இரவு 09.16 மணி முதல் 12-11-2016 இரவு 10.29 மணி வரை.

டிசம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரித்தாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். தாராள தனவரவுகளை உண்டாக்கும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெற்று பெயர், புகழ் உயரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-12-2016 காலை 05.26 மணி முதல் 10-12-2016 காலை 08.28  மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

நிறம்: வெள்ளை, சிவப்பு.

கிழமை:     ஞாயிறு, திங்கள்.

கல்:        மாணிக்கம்.

திசை:    கிழக்கு.

தெய்வம்:    சிவன்.

————————————————————————————————————————————————————————————————————

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூகப் பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!  இந்த 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படியிருக்கும் என பார்க்கும்போது, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் ஓரளவுக்கு மிக சிறப்பாகவே இருக்கும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும்  சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் மேன்மைகளைப் பெறுவீர்கள். பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். 02-08-2016 முதல் குரு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று சொல்லமுடியாது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது,  குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன்களை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்துமுடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்துவிட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்து வகையில் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது தாமதப்பட்டாலும் மனநிம்மதி குறையாது. எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். அபிவிருத்தியும் பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்களே உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதைத் தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிரணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்துசேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப்பெற சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பட்டபாட்டிற்கான பலனை தடையின்றிப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப்பெறும். அசையா சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிமேல் வெற்றியினைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்


ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் 3-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பாகும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.  சிவபருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-01-2016 மதியம் 03.32 மணி முதல் 12-01-2016 மாலை 07.17 மணி வரை

பிப்ரவரி

ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், உத்தியோகரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபங்கள் அமையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மாணவர்களும் நற்பலனை அடைவார்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-02-2016 அதிகாலை 01.12 மணி முதல் 09-02-2016 காலை 04.11 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்துக் காத்திருந்த சுபசெய்தி ஒன்று கிடைக்கப்பெற்று மனநிறைவு தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். லாபங்கள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 05-03-2016 மதியம் 11.25 மணி முதல் 07-03-2016 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 6-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார நிலை மேம்படுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு புது வீடு குடிபுகும் யோகம், சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-04.-2016 இரவு 08.22 மணி முதல் 04-04-2016 அதிகாலை 01.14 மணி வரை மற்றும் 29-04-2016 அதிகாலை 03.16 மணி முதல் 01-05-2016 காலை 09.41 மணி வரை.

மே

ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமான நிலையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளைப் பெறமுடியும். விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 26-05-2016 காலை 08.52 மணி முதல் 28-05-2016 மாலை 04.00 மணி வரை.

ஜூன்

சூரியன் 12-ல் சஞ்சரித்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் பலப்படும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுய முயற்சிகளில் வெற்றியுண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-06-2016 மதியம் 02.42 மணி முதல் 24-06-2016 இரவு 09.24 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், உத்தியோகரீதியாக இருந்த பிரச்சினைகளனைத்தும் படிப்படியாகக் குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குரு சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் அமையும். கடன்கள் சற்று குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 19-07-2016 இரவு 09.53 மணி முதல் 22-07-2016 அதிகாலை 03.41 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாக்கும். இம்மாதம் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் குரு 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் சற்றே ஏற்றமான பலன்களைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகளனைத்தும் விலகி குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-08-2016 காலை 06.38 மணி முதல் 18-08-2016 பகல்11.51 மணி வரை.

செப்டம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மகிழ்ச்சி குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-09-2016 மாலை 04.06 மணி முதல் 14-09-2016 இரவு 09.42 மணி வரை.

அக்டோபர்

சுகஸ்தானமான 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு இம்மாதம் தடைவிலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபங்கள் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறு மனக்கவலை ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-10-2016 இரவு 12.53 மணி முதல் 12-10-2016 காலை 07.50 மணி வரை.

நவம்பர்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சனியும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 06-11-2016 காலை 08.00 மணி முதல் 08-11-2016 மாலை 04.32 மணி வரை.

டிசம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் நிம்மதிக் குறைவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார உயர்வுகளை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-12-2016 மதியம் 01.45 மணி முதல் 05-12-2016 இரவு 11.01 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

நிறம்: பச்சை, வெள்ளை.

கிழமை: புதன், வெள்ளி.

கல்: மரகதம்.

திசை: வடக்கு.

தெய்வம்: விஷ்ணு.

————————————————————————————————————————————————————————————————————–
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிய மைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி இந்த 2016-ஆம் ஆண்டில் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களுக்கு முன்னேற்றங்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். 08-01-2016 முதல் கேது பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பாராத உயர்வுகளையும்,  லாபங்களையும் பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 12-ஆம் வீட்டிலும் 02-08-2016 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பலமாக சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரணக் கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் பூரிப்பு, மகிழ்ச்சி உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களைத் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறமுடியும். எதிர்பாராத பயணங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி  செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளும் பைசலாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிவிட முடியும் என்பதால் அவர்களின் அமோக ஆதரவினைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சிப் பணிக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும்.

கலைஞர்கள்

சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்லநேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்கநேரிடும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய, நிறைய உழைக்க வேண்டியி ருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டுக்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் சிறப்பாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். பள்ளி, கல்லூரி வாயிலாக இன்பச் சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். புதிய நண்பர்களின்  நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும்.

மாதப்பலன்

 

ஜனவரி முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் கேது 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய தைரியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். நெருங்கியவர் களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். 4-ல் சூரியன் இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். விஷ்ணுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-01-2016 அதிகாலை 01.12 மணி முதல் 19-01-2016 காலை 04.31 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. 2-ல் செவ்வாய் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-02-2016 காலை 07.12 மணி முதல் 15-02-2016 காலை 09.53 மணி வரை.

மார்ச்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-03-2016 பகல் 03.41 மணி முதல் 13-03-2016 மாலை 04.39 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும்.  குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-04-2016 அதிகாலை 02.21 மணி முதல் 10-04-2016 அதிகாலை 01.55 மணி வரை.

மே

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சுக்கிரனும், 12-ல் குரு, ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண்பழிகளைச் சுமக்கநேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிவ வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-05-2016 பகல் 01.17 மணி முதல் 07-05-2016 மதியம் 12.41 மணி வரை.

ஜூன்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம், செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-06-2016 இரவு 10.37 மணி முதல் 03-06-2016 இரவு 11.02 மணி வரை மற்றும் 29-06-2016 காலை 05.38 மணி முதல் 01-07-2016 காலை 07.29 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பிரிந்த உறவினர்களும் வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளிலும் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள னைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக செயல் படுவார்கள். சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 26-07-2016 பகல் 11.05 மணி முதல் 28-07-2016 மதியம் 01.47 மணி வரை.

ஆகஸ்ட்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரி யங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுதல் நல்லது. சிவபெருமானை வழிபடுதல் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-08-2016 மாலை 04.57 மணி முதல் 24-08-2016 இரவு 07.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் பல வழிகளில் தேடிவருவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-09-2016 இரவு 12.54 மணி முதல் 21-09-2016 அதிகாலை 01.38 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் சூரியன், குருவும், 4-ல் செவ்வாயும் சஞ்சரித்தாலும், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேவை யற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். உற்றார்- உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-10-2016 காலை 11.13 மணி முதல் 18-10-2016 காலை 10.35 மணி வரை.

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும். அரசுவழியில் அனுகூலங்கள் உண்டாகும். சனிக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-11-2016 இரவு 10.29 மணி முதல் 14-11-2016 இரவு 09.39 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல், சனி, சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறுசிறு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் அடையவேண்டிய முன்னேற்றங்களை அடைந்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-12-2016 காலை 08.28 மணி முதல் 12-12-2016 காலை 08.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         4, 5, 6, 7, 8.

நிறம்:     பச்சை, நீலம்.

கிழமை:     புதன், சனி.

கல்:         மரகதப் பச்சை.

திசை:    வடக்கு.

தெய்வம்:     ஸ்ரீவிஷ்ணு.

——————————————————————————————————————————————————————————————-
துலாம்  
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்புகொண்ட துலா ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-8-2016 வரை பொன்னவனான குரு  லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்யவிருப்பது மூலம் எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணதிபதியாகி யோககாரகன் என்பதால் பெரிய அளவில் கெடுதிகளைச் செய்யமாட்டார். குரு பகவான் ஆண்டின் பிற்பாதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், கடன்கள் உண்டாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, அதிக மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 08-01-2016 முதல் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். புத்திர வழியில் எதிர்பாராத செலவும் வீண் விரயமும் அதனால் மன அமைதிக் குறைவும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் சாதகப் பலனைப் பெறுவீர்கள் 

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைப் பளுவும் குறையும் என்றாலும் ஏழரைச் சனி தொடருவதால் உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அவப்பெயர்களும் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களும் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் முற்பாதியில் தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களாலும் ஓரளவுக்கு நற்பலனைப் பெறமுடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடிவந்து லாபம் தரும். ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடனிருக்கும் தொழிலாளர்களையும் அனு சரித்து நடந்துகொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். பெரிய அளவில் லாபத்தைப் பெறமுடியாவிட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆகஸ்டு மாதம் முதல் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாது. மற்றவர்களிடம் அவப்பெயர் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பிறரின் ஏச்சுப்பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல், தங்கள் காரியங்களில் கருத்துடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்டு மாதம் முதல் நீங்கள் அவசியம் மேடைப் பேச்சுகளிலும் மற்றவர்களிடம் பேசும்போதும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகளால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும்.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால், சற்று அலைச்சல், உடல்சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. நெருங்கியவர்களாலும் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். ஞாபக மறதி, கவனக்குறைவு போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மனநிம்மதி அளிப்பதாக அமையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையானது உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். நல்ல  நண்பர்களாக தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது.

மாதப்பலன்

 

ஜனவரி மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்களிலும் எளிதில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-01-2015 காலை 04.31 மணி முதல் 21-01-2016 காலை 08.33 மணி வரை.

பிப்ரவரி

ஜென்ம ராசியில் செவ்வாயும், 2-ல் சனியும் 4-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-02-2016 காலை 09.53 மணி முதல் 17-02-2016 மதியம் 02.19 மணி வரை.

மார்ச்

லாப ஸ்தானமான 11-ல்  குரு, ராகு சஞ்சாரம்செய்வதும் மாத பிற் பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். நெருங்கி யவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவரும். கூட்டுத் தொழில் செய்பவர்களும் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ராகு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-03-2016 மாலை 04.39 மணி முதல் 15-03-2016 இரவு 07.58 மணி வரை.

ஏப்ரல்

ருண ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் லாப ஸ்தானமான 7-ல் புதன், 11-ல் குரு ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எதிர்பாராத பணவரவுகளால் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர் களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். பண விஷயங்களில் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியளிக்கும். சனிக்குப் பரிகாரங்கள் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 10-04-2016 அதிகாலை 01.55மணி முதல் 12-04-2016 காலை 03.28 மணி வரை.

மே

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 7-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்கமுடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் தேவை. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தி யாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளி களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 07-05-2016 மதியம் 12.41 மணி முதல் 09-05-2016 மதியம் 01.04 மணி வரை.

ஜூன்

லாப ஸ்தானமான 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.  தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-06-2016 இரவு 11.02 மணி முதல் 05-06-2016 இரவு 11.28 மணி வரை.

ஜூலை 

மாதக்கோளான சூரியன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-07-2016 காலை 07.29 மணி முதல் 03-07-2016 காலை 08.59 மணி வரை மற்றும் 28-07-2016 மதியம் 01.47 மணி முதல் 30-07-2016 மாலை 6.33 மணி வரை.

ஆகஸ்ட்

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களையும் பொருளாதாரரீதியாக உயர்வுகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். அரசுவழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். பணவரவுகள் தாராளமாக இருக்குமென்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-08-2016 இரவு 07.10 மணி முதல் 26-08-2016 இரவு 10.21 மணி வரை.

செப்டம்பர்

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-09-2016 அதிகாலை 01.38 மணி முதல் 23-09-2016 அதிகாலை 03.53 மணி வரை.

அக்டோபர்

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், குரு சஞ்சாரம்செய்வது வீண் செலவுகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும். சிவவழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-10-2016 காலை 10.35 மணி முதல் 20-10-2016 காலை 11.07 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் கஷ்டப்படவேண்டியிருக்கும். வரவுக்குமீறிய செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடனிருப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 14-11-2016 இரவு 09.39 மணி முதல் 16-11-2016 இரவு 08.56 மணி வரை.

டிசம்பர்

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் உண்டாகும். ஒற்றுமைக் குறைவு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகளிலும் தடைகள் ஏற்படுவதால் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோ கத்திலிருப்பவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நற்பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-12-2016 காலை 08.50 மணி முதல் 14-12-.2016 காலை 08.14 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         4, 5, 6, 7, 8.

நிறம்:     வெள்ளை, பச்சை.

கிழமை:     வெள்ளி, புதன்.

திசை:     தென்கிழக்கு.

கல்:         வைரம்.

தெய்வம்:     லட்சுமி.

———————————————————————————————————————————————————————————————————————-
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

பார்ப்பதற்கு வெகுளிபோல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்துமுடிக்கும் ஆற்றல்கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உங்களுக்கு ஆரோக்கியரீதியாக பிரச்சினைகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகக் கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 08-1-2016 முதல் ஜென்ம ராசிக்கு 4-ல் கேது 10-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையும்- அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் படிப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். ஆண்டின் முற்பாதியில் 10-ஆம் வீட்டில் சஞ்சரித்து பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் குரு பகவான் 02-08-2016 முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அனுகூலமான அமைப்பாகும். இதனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பணவரவுகள் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியால் ஓரளவுக்கு சாதகமான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் இருக்கக்கூடிய மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிரச்சினைகள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் ஆகஸ்ட் மாதம்முதல் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் சுமாரான நிலை இருக்கும். சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளு குறையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவுக்குமீறிய செலவுகளும் வேலையாட்களால் பிரச்சினைகளும் ஏற்படும். போட்டிகளை சமாளிக்கவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதம்முதல் எதிலும் ஓரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் சாதகப்பலன்கள் அமையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர்கொண்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

அரசியல்

உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாதென்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓரளவுக்கு சாதகப்பலனை பெறமுடியும். சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும்.

கலைஞர்கள்

தேவையற்ற அலைச்சல்கள், பிரச்சினைகள், பெயர், புகழ் மங்கக்கூடிய சூழ்நிலைகள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறமுடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும். பயணங்களால் அலைச்சல்கள், உடல் நலக்குறைவுகள் உண்டாகி மருத்துவச் செலவு ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபடவேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினைப் பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். கடும் முயற்சியுடன் பாடுபட்டால் தான் நற்பலனை அடையமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும்.

மாதப்பலன்

ஜனவரி குரு அதிசாரமாக 11-ல் இருப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன் அமையும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-01-2016 காலை 08.33 மணி முதல் 23-01-2016 மதியம் 02.03 மணி வரை.

பிப்ரவரி

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் சூரியன், 10-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-02-2016 மதியம் 02.19 மணி முதல் 19-02-2016 இரவு 08.47 மணி வரை.

மார்ச்

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் வீண் அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன்வாங்க நேரிடும். சுகவாழ்வு பாதிப்படையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பண விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-03-2016 இரவு 07.58 மணி முதல் 18-03-2016 அதிகாலை 02.20 மணி வரை.

ஏப்ரல்

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் சுக்கிரன் சாதகமாக உள்ளதாலும், 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-04-2016 காலை 03.28 மணி முதல் 14-04-2016 காலை 08.28 மணி வரை.

மே

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம்பெறக்கூடிய ஆற்றலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-05-2016 மதியம் 01.04 மணி முதல் 11-05-2016 மதியம் 04.25 மணி வரை.

ஜூன்

ஏழரைச் சனி நடைபெறுவதும், சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-06-2016 இரவு 11.28 மணி முதல் 08-06-2016 அதிகாலை 01.57 மணி வரை.

ஜூலை

ஏழரைச் சனி நடைபெறுவதும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். வீண்செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது உத்தமம். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 03-07-2016 காலை 08.59 மணி முதல் 05-07-2016 பகல் 11.42 மணி வரை மற்றும் 30-07-2016 மாலை 16.33 மணி முதல் 01-08-2016 இரவு 08.17 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். 2-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்கவுள்ளதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-08-2016 இரவு 10.21 மணி முதல் 29-08-2016 காலை 03.04 மணி வரை.

செப்டம்பர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-09-2016 அதிகாலை 03.53 மணி முதல் 25-09-2016 காலை 08.36 மணி வரை.

அக்டோபர்

லாப ஸ்தானமான 11-ல் குரு, புதன், சூரியன் சஞ்சாரிப்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சி களில் வெற்றிகிட்டும். பொன், பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 20-10-2016 காலை 11.07 மணி முதல் 22-10-2016 மதியம் 14.31 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில்ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-11-2016 இரவு 08.56 மணி முதல் 18-11-2016 இரவு 10.33 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-12-2016 காலை 08.14 மணி முதல் 16-12-2016 காலை 08.51 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:  1, 2, 3, 9.

நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள்.

கிழமை: செவ்வாய், வியாழன்.

திசை: தெற்கு.

கல்: பவளம்.

தெய்வம்: முருகன்.

—————————————————————————————————————————————————————-
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அறியும் திறமைகொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 02-08-2016 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் பலமாகச் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அசையும்- அசையா சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். 08-01-2016 முதல் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், இந்த ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடருவதாலும், எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள், எடுக்கும் முயற்சிகளில் தடைபோன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள், பணவரவுகள் தடை உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்துச் செயல்படுத்துவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வீண் பிரச்சினைகளையும் பழிச்சொற்களையும் சந்திக்கநேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையும். ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் வரை திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிற்பாதியில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கநேரிடும். குடும்பத்தில் அமைதி குறையும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

உத்தியோகம்

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிவரும். பணியில் நிம்மதிக் குறைவு உண்டாகும். தேவையற்ற பழிச்சொற்களுக்கும் ஆளாக நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு தாமதப்படும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்த வொரு புதிய முயற்சிகளிலும் வீண் இழப்புகளை சந்திக்கநேரிடும். ஆண்டின் முற்பாதி வரை லாபங்களைத் தந்த தொழில்கள்கூட பிற் பாதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்டு மாதம் வரை சரளமான நிலை இருந்தாலும் பின்பு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது, நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

அரசியல்

வரும் ஆகஸட் மாதம் வரை செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். பின்பு எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலப் பலனைத் தந்தாலும், பிற்பாதியில் சிக்கல்கள் அதிகரிக்கும். வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். மற்ற கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறி நிலையே இருக்கும். நடிப்புத் துறை மட்டுமின்றி பாடல், இசை துறைகளில் உள்ளவர்களுக்கும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியைத் தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய கால மாகும். புத்திர வழியில் மனசஞ்சலங்களும் வீண் விரயங்களும் ஏற்படும். ஆண்டின் தொடக்கம் சாதகமாக இருந்தாலும் பிற்பாதியில் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள், கொடுக் கல்- வாங்கல்களிலும் பிரச்சினைகள் ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக்கொண்டால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றப் பலனை அடையமுடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் நீங்கள் அவப்பெயரை சந்திக்கநேரிடும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்

 

ஜனவரி லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதும் 8-ஆம் தேதி முதல் 3-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிறுசிறு மருத்துவச் செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-01-2016 மதியம் 02.03 மணி முதல் 25-01-2016 இரவு 09.54 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொட்டதெல்லாம் துலங்கும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உறவினர் வருகை மகிழ்ச்சிதரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பெயர், புகழ் உயரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 19-02-2016 இரவு 08.47 மணி முதல் 22-02-2016 காலை 05.27 மணி வரை.

மார்ச்

முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும் சூரியனும் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 12-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வதால் அனுகூலப் பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-03-2016 அதிகாலை 02.20 முதல் 20-03-2016 பகல் 11.35 மணி மணி வரை.

ஏப்ரல்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும் விரய ஸ்தானமான, 12-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். குரு 9-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்வது, சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-04-2016 காலை 08.28 மணி முதல் 16-04-2016 மாலை 05.17 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் முழு வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-05-2016 மதியம் 04.25 மணி முதல் 13-05-2016 இரவு 11.57 மணி வரை.

ஜூன்

9-ல் குரு சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களையும் தவிர்த்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 08-06-2016 அதிகாலை 01.57 முதல் 10-06-2016 காலை 08.06 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், புதனும், 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தி லிருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பணவரவுகள் சரளமாக நடைபெறும். தடைப் பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர் களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-07-2016 பகல் 11.42 மணி முதல் 07-07-2016 மாலை 05.12 மணி வரை.

ஆகஸ்ட்

ஏழரைச் சனி நடைபெறுவதும் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இம்மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பண விவகாரங்களில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி, குருவுக்கு பரிகாரம் செய்வது மூலம் நற்பலன்களை அடையமுடியும்.

சந்திராஷ்டமம்: 01-08-2016 இரவு 08.17 மணி முதல் 04-08-2016 அதிகாலை 02.07 மணி வரை மற்றும் 29-08-2016 காலை 03.04 மணி முதல் 31-08-2016 காலை 09.49 மணி வரை.

செப்டம்பர்

ஏழரைச் சனி நடைபெறுவதும், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும்  தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணவரவுகளிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றே தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடு, சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-09-2016 காலை 08.36 மணி முதல் 27-09-2016 மாலை 16.00 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் சுக்கிரனும் மாத பிற்பாதியில் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் லாபங்கள் பெருகும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும், ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலையில் பளு சற்று கூடுதலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளிக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-10-2016 மதியம் 02.31 மணி முதல் 24-10-2016 இரவு 09.32 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி நடைபெற்றாலும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். புதிய பொருள் சேர்க்கைகளும் ஆடை ஆபரணங்களும் சேரும். வெளியூர் பயணங்களால் சாதகப் பலன்களை அடையமுடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 18-11-2016 இரவு 10.33 மணி முதல் 21-11-2016 காலை 04.02 மணி வரை.

டிசம்பர்

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-12-2016 காலை 08.51 மணி முதல் 18-12-2016 மதியம் 12.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         1, 2, 3, 9.

கிழமை:     வியாழன், திங்கள்.

திசை:     வடகிழக்கு.

நிறம்:     மஞ்சள், சிகப்பு.

கல்:         புஷ்பராகம்.

தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

————————————————————————————————————————————————————————————————————-
மகரம்  
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல்கொண்ட, மகர ராசி நேயர்களே. இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடையமுடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்வுகளை பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 08-01-2016 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இதுமட்டுமின்றி 02-08-2016 வரை பொன்னவனான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் ஆண்டின் தொடக்கத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம். 02-08-2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களும் தடைகள்விலகி கைகூடும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.  நெருங்கியவர்களின் ஆதரவுகளால் மனமகிழ்ச்சியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணைக்கும் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களிடம் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி லாப ஸ்தானத்திலிருப்பதாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. தடைப்பட்ட சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி களைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும்  இடமாற்றங்களையும் பெறமுடியும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுப்புடன் பதிலளிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரிங்களில் சிந்தித்துச் செயல் பட்டால் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களை சற்று அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஆகஸ்ட் மாதம் முதல் நல்ல லாபமான நிலையினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமையும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெறமுடியும். வரவேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசைபோன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடையமுடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பாக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும்.  சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடையமுடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாதப்பலன்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சுக்கிரனும் சனியும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடவும்.சந்திராஷ்டமம்: 25-01-2016 இரவு 09.54 மணி முதல் 28-01-2016 காலை 08.37 மணி வரை.

பிப்ரவரி

ஜீவன ஸ்தானத்தில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும்.  கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்திகரமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இட மாற்றங்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 22-02-2016 காலை 05.27 மணி முதல் 24-02-2016 மதியம் 04.20  மணி வரை.

மார்ச்

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைவரின் ஆதரவையும் பெறமுடியும். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். வியாபாரத்தில் லாபகரமான நிலை நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-03-2016 பகல் 11.35 மணி முதல் 22-03-2016 இரவு 10.59 மணி மணி வரை.

ஏப்ரல்

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் நிம்மதி ஏற்படும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-04-2016 மாலை 05.17 மணி முதல் 19-04-2016 அதிகாலை 04.56 மணி வரை.

மே

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது வீண் அலைச்சலை ஏற்படுத்துமென்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களாலும் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். லஷ்மி தேவியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 13-05-2016 இரவு 11.57 மணி முதல் 16-05-2016 பகல் 11.06 மணி வரை.

ஜூன்

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதனால் கடந்த காலங் களிலிருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்ற மான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-06-2016 காலை 08.06 மணி முதல் 12-06-2016 மாலை 06.13 மணி வரை.

ஜூலை

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதார உயர்வுகளும் அரசுவழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்  வெற்றிகிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-07-2016 மாலை 05.12 மணி முதல் 10-07-2016 அதிகாலை 02.23 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 2-ஆம் தேதி முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-08-2016 அதிகாலை 02.07 மணி முதல் 06-08-2016 காலை 10.54 மணி வரை.

செப்டம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும்.  எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 31-08-2016 காலை 09.49 மணி முதல் 02-09-2016 மாலை 06.53  மணி வரை. மற்றும் 27-09-2016 மாலை 16.00 மணி முதல் 30-09-2016 அதிகாலை 01.46 மணி வரை.

அக்டோபர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும், குருவும், 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கையம்மன், விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-10-2016 இரவு 09.32 மணி முதல் 27-10-2016 காலை 07.38  மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-11-2016 காலை 04.02 மணி முதல் 23-11-2016 மதியம் 01.31  மணி வரை.

டிசம்பர்

குரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகள் நிலவினாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-12-2016 மதியம் 12.41 மணி முதல் 20-12-2016 இரவு 08.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7.

கிழமை: சனி, புதன்.

திசை: மேற்கு.

நிறம்: நீலம், பச்சை.

கல்: நீலக்கல்,

தெய்வம்: ஐயப்பன்.

———————————————————————————————————————————————————————–
கும்பம்  
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்புகொண்ட கும்ப ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-08-2016 வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியான முன்னேற்றங்கள், எதிலும் லாபங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். 08-01-2016 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமெடுத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அனுகூலமான பலனைப் பெறலாம். சற்று சிந்தித்து கவனமுடன் நடந்துகொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. சனி ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழி லாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும்.  சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறுசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், முன்னேற்றத் திற்கு இடையூறுகளும் ஏற்படும்.

 உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலை சற்றே சோர்வடையும். எடுக்கும் காரியங்களில் தடையும் தாமத நிலையும் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும் என்றாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றமடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதி வரை குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதும் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

உத்தியோகம்

நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவேண்டிய காலமாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். உயரதிகாரி களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். நீங்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாமல் சமாளிக்கமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களையும் புதிய முயற்சிகளையும் சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவி லான முன்னேற்றங்கள் தடைகளுக்குப்பின் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்

ஆண்டின் முற்பாதிவரை எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகிகளாக மாறுவார்கள். பணவிரயங்கள் ஏற்படும். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிவிட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றிக் கிடைக்கும் என்றாலும்  கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையக்கூடும். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர்விளைச்சல்  சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத  ஆதரவுகள் கிடைக்கப்பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும்.

பெண்கள்

குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். அசையா சொத்துக்கள் வகையில் சில செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நினைத்ததை சாதிக்க முடியுமென்றாலும் மனது அலைபாயக்கூடிய காலமென்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறமுடியும்.

மாதப்பலன்

 

ஜனவரி ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடக்கும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நனவாகும். தொழில், உத்தியோகம் செய்பவர் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் லாபங்களைப் பெறமுடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2016 அதிகாலை 00.13 மணி முதல் 03-01-2016 மதியம் 01.06 மணி வரை மற்றும் 28-01-2016 காலை 08.37 மணி முதல் 30-01-2016 இரவு 09.18 மணி  வரை.

பிப்ரவரி

ஜீவன ஸ்தானமான 10-ல் சனியும் விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது தொழில், வியாபாரரீதியாக வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-02-2016 மதியம் 04.20 மணி முதல் 27-02-2016 அதிகாலை 04.54 மணி வரை.

மார்ச் 

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும், 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப்பாகும்.  பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-03-2016 இரவு 10.59 மணி மணி முதல் 25-03-2016 பகல் 11.37 மணி வரை.

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். எந்த எதிர்ப்பு களையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். குரு 7-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்து கெடுபிடிகள் விலகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 19-04-2016 அதிகாலை 04.56 மணி முதல் 21-04-2016 மாலை 05.46 மணி வரை.

மே

மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 7-ல் குரு 18-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தி அடைவதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-05-2016 பகல் 11.06 மணி முதல் 18-05-2016 இரவு 11.58 மணி வரை.

ஜூன்

சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரனும் சமசப்தம ஸ்தானமான 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெறமுடியும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-06-2016 மாலை 06.13 மணி முதல் 15-06-2016 காலை 06.47 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்களும் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-07-2016 அதிகாலை 02.23 மணி முதல் 12-07-2016 மதியம் 02.23 மணி வரை.

ஆகஸ்ட்

மாத முற்பாதியில் 6-ல் சூரியனும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையானது ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடக்க பழகிக்கொண்டால் நற்பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 06-08-2016 காலை 10.54 மணி முதல் 08-08-2016 இரவு 10.25 மணி வரை.

செப்டம்பர்

மாதக்கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் தடை, தாமதங்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-09-2016 மாலை 06.53 மணி முதல் 05-09-2016 காலை 06.14 மணி வரை.

அக்டோபர்

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவடையும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது மூலம் வீண்விரயங்களை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும். செவ்வாய் 11-ல் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 30-09-2016 அதிகாலை 01.46 மணி முதல் 02-10-2016 மதியம் 01.19 மணி வரை மற்றும் 27-10-2016 காலை 07.38 மணி முதல் 29-10-2016 இரவு 07.35 மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் 9-ல் சஞ்சரிப்பதும், விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பணவரவுகளிலும் பற்றாக்குறை ஏற்படும். எந்த காரியத்தை செய்வதென்றாலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-11-2016 மதியம் 01.31 மணி முதல் 26-11-2016 அதிகாலை 01.33 மணி வரை.

டிசம்பர்

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், மாதக்கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளில் தடையிருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-12-2016 இரவு 08.41 மணி முதல் 23-12-2016 காலை 08.06 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         5, 6, 8.

கிழமை:     வெள்ளி, சனி.

திசை:     மேற்கு.

நிறம்:     வெள்ளை, நீலம்.

கல்:         நீலக்கல்.

தெய்வம்:     ஐயப்பன்.

————————————————————————————————————————————————————————————————————–
மீனம்  
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கம்பீரமான தோற்றமும் பிறரை வசீகரிக்கக்கூடிய அழகும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வதும் 08-01-2016 முதல் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகப்பலனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கிருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். 02-08-2016 வரை  உங்கள் ராசியாதிபதி குரு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைப் பளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றலுண்டாகும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றி னாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் பிரச்சினை, பொருளாதாரத் தடைகள் என ஆண்டின் தொடக்கத்தில் அவதிப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நினைத்தது நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சி யளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தொடரும். சேமிப்பு பெருகும்.

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைப்பளு போன்றவைகளால் ஆண்டின் தொடக்கத்தில் பல சங்கடங்களை சந்தித்தாலும், ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறா மைகள், தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் போன்ற யாவும் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியினை உண்டாக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கிப்போட்டு தொழிலை விரிவுசெய்வீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றால் லாபம் குவியும்.

கொடுக்கல்- வாங்கல்

உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சரளமான நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகள் பைசலாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி யளிக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினை இருக்காது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு விரயங்கள் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும் பொருளாதார உயர்வுகளையும் அடைவீர்கள். மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கட்சிப் பணிக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். மாண்புமிகு பதவிகள் தேடிவரக்கூடிய யோகம் உண்டாகும்.

கலைஞர்கள்

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆண்டின் தொடக்கத்தில் தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உங்கள் திறமைகளுக்கு தீனிபோடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் உயர்வுகளும் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும்.

மாணவ- மாணவியர்

ஆண்டின் தொடக்கத்தில் கல்வி பயிலுபவர்கள் அனுகூலமற்ற பலன் களை சந்தித்தாலும் கல்வியில் சாதனை பல செய்வார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடமுடியும். நண்பர்களால் நற்பலன்கள் அமையும்.

மாதப்பலன்

 

ஜனவரி

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், அதிசாரமாக 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் எல்லாவகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகளும் தாராளமாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். செய்யும் தொழில், உத்தியோக நிலையில் முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். நெருங்கியவர் களின் ஆதரவுகள் சிலநேரங்களில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-01-2016 மதியம் 01.06 மணி முதல் 05-01-2016 இரவு 12.56  மணி  வரை மற்றும் 30-01-2016 இரவு 09.18 மணி முதல் 02-02-2016 காலை 09.40 மணி வரை.

பிப்ரவரி

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பயணங்களால் சாதகமான பலன்களை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்களனைத்தும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-02-2016 அதிகாலை 04.54 மணி முதல் 29-02-2016 மாலை 05.37 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். 6-ல் ராகு இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம்: 25-03-2016 பகல் 11.37 மணி முதல் 27-03-2016 இரவு 12.22 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசியில் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந் தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-04-2016 மாலை 05.46 மணி முதல் 24-04-2016 காலை 06.24 மணி வரை.

மே

ருண ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்பதால் ஓரளவுக்கு எதையும் சமாளித்துவிட முடியும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-05-2016 இரவு 11.58 மணி முதல் 21-05-2016 மதியம் 12.30 மணி வரை.

ஜூன்

பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு முன்னேற் றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவி ருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 15-06-2016 காலை 06.47 மணி முதல் 17-06-2016 இரவு 07.18 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றிமறையும். கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்கு காப்பாற்றிவிட முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்செலவுகள் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-07-2016 மதியம் 02.23 மணி முதல் 15-7-2016 அதிகாலை 02.56 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 2-ஆம் தேதி முதல் 7-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங் களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று திருப்தியான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித் தாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-08-2016 இரவு 10.25 மணி முதல் 11-08-2016 மதியம் 11.01 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பது உத்தமம். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-09-2016 காலை 06.14 மணி முதல் 07-09-2016 மாலை 06.52 மணி வரை.

அக்டோபர்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 02-10-2016 மதியம் 01.19 மணி முதல் 05-10-2016 அதிகாலை 01.57 மணி வரை மற்றும் 29-10-2016 இரவு 07.35 மணி முதல் 01-11-2016 காலை 08.15 மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் 8-ல் சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவை யற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைவ தால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 26-11-2016 அதிகாலை 01.33 மணி முதல் 28-11-2016 மதியம் 02.19 மணி வரை.

டிசம்பர்

மாதக்கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம்செய்வதும் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.  மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட் டாரத் தொடர்புகள் விரிவடையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-12-2016 காலை 08.06 மணி முதல் 25-12-2016 இரவு 08.52 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         1, 2, 3, 9.

கிழமை:     வியாழன், ஞாயிறு.

திசை:     வடகிழக்கு.

நிறம்:     மஞ்சள், சிவப்பு.

கல்:         புஷ்பராகம்.

தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

—————————————————————————————————————————————————————————————————————————
குருப்பெயர்ச்சி விவரம்

நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ஆம் தேதி (5-7-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

அவர் 01-08-2016 வரை ஏழு விதமான நிலைகளில் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

குரு பகவான் சிம்மத்தில் வரும்போது உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் வருவார் என்பதைக் காண்போம்.

1. மேஷ ராசிக்கு-        5-ஆம் இடம்

2. ரிஷப ராசிக்கு-        4-ஆம் இடம்

3. மிதுன ராசிக்கு-        3-ஆம் இடம்

4. கடக ராசிக்கு-        2-ஆம் இடம்

5. சிம்ம ராசிக்கு-        1-ஆம் இடம்

6. கன்னி ராசிக்கு-        12-ஆம் இடம்

7. துலா ராசிக்கு-        11-ஆம் இடம்

8. விருச்சிக ராசிக்கு-        10-ஆம் இடம்

9. தனுசு ராசிக்கு-        9-ஆம் இடம்

10. மகர ராசிக்கு-        8-ஆம் இடம்

11. கும்ப ராசிக்கு-        7-ஆம் இடம்

12. மீன ராசிக்கு-        6-ஆம் இடம்

குரு பகவான் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் இருந்தால் நன்மைகளைத் தருவார்.

குரு பகவான் 3, 6, 8, 12-ஆம் இடங்களில் இருக்கும்போது அதிக நன்மைகள் ஏற்படாது. எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

குரு பகவான் 1, 4, 10-ஆம் இடங்களில் இருக்கும்போது நிதானித்துச் சென்றால் நன்மையான பலன்களை அடையலாம்.

 

மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ‘ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குருபகவான் 5-ல் வருகின்றார். இதனால் உங்களுக்கு வரவுள்ள நன்மைகள் அதிகம். அதேசமயம் சனிபகவான் 16-12-2014 முதல் அஷ்டமத்தில் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் வந்துசேரும். அதுவும் தீய நண்பர்களின் செயலால்தான் வந்துசேரும். எனவே நண்பர்கள் சகவாசத்தை அறிவுடன் ஒதுக்கிவைத்தால் இன்னல்கள் வராமல் இருக்கும். குடும்பத்தில் தொல்லைகள் வராது. கஷ்டங்கள் தீர்ந்து ஓரளவு நல்ல பலன்கள் கிட்டும். மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வதால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். வரவுக்கேற்ற செலவு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நீங்கள் உயரமுடியும்.

மேஷ‘ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் தங்கள் நண்பர்கள் சகவாசத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களை நட்டாற்றில் விட்டுவிடுவார்கள். அவர்களது கலக வார்த்தைகளை நம்பாமல் விட்டால்தான் வாழ்வில் உயரமுடியும். ஆர்ப்பாட்டமான செயல்களால் உங்கள் வாழ்வில் நீங்கள் பெறவுள்ள நன்மைகள் பறிபோகும். எனவே அமைதியாகச் செயல்பட்டு நன்மை காணுங்கள். உடல்நலன் சீராக இருக்கும். மனதில் தெளிவுபிறக்கும். பெற்றோர்களால் நன்மையை அடைவார்கள். உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் மற்றும் வெளிவட்டாரத் தொடர்புகளால் தேவையில்லாத செலவுகள் வரலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் வந்துநீங்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தொழிலதிபர்கள்- தொழிலாளி ஒற்றுமை ஏற்படும். குருப்பெயர்ச்சியால் அதிகமான பாதகங்கள் எதுவுமில்லை.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். கஷ்ட ஜீவனத்தை ஆண்டவன் முடித்துவைத்து, நல்ல ஜீவனத்தை உங்களுக்குத் தந்துள்ளார். திடீர் பணவரவுகள் வந்துசேரும். நீண்டகாலமாக வராமலிருந்த பழைய கடன்கள் வசூலாகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கல்விக்கடன் கிட்டும். ஒருசிலர் தொழிலை விரிவுசெய்வதற்காக எடுத்த முயற்சிகள் பலிதமாகும். வங்கியிலிருந்து தேவையான அளவு கடன்வசதி கிட்டும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலைக் காண்பார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடிவரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையில் இருந்தவர்கள், இப்போது மீண்டும் பணி அமர்வு பெறுவார்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாக அமையும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று அமைதிகாத்து காரியங்களை செய்யவேண்டும். கறுப்பு நிறமுள்ளவர்கள் உங்களிடம் நல்லவரைப்போல் நடித்து ஏமாற்றுவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் பொருளாதாரத்தை முடக்கக்கூடாது. மனதிலும் குழப்பமான சூழ்நிலை இருந்துவரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழி பேசுகிறவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு சென்று தொழில் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் ஈடேறும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்கள் மத்தியில் வீண் மனஸ்தாபம் வரும். சகோதரர்களை விட சகோதரிகளே கெடுதல் செய்பவர்களாக இருப்பார்கள். செலவுகள் கூடுதலாகும். அதேசமயம் மறைமுக வருமானம் கூடுதலாகும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர் இப்போது ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். உயர் கல்வியில் உள்ள மாணவர்கள் கல்விக்காலம் முடிந்த பிறகு நல்ல வேலையில் அமர்வார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இப்போது கடந்தகாலத்தில் தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் வந்துசேரும். சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். முன்னர் ஏற்பட்ட கடன்களை இப்போது அடைத்து முடிப்பீர்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளிவட்டாரப் பழக்கத்தில் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கணவன்- மனைவி உறவில் இருந்துவந்த இருண்ட சூழ்நிலை மறையும். சுமுக உறவுகள் தொடரும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும். காணாமல்போன மகன் வந்துசேர்வார். பிள்ளைகளுக்காக எடுத்த சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும். மாமியார்-மருமகள் சண்டை தீரும். இருவரும் நேசமாக வாழ்வார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

குருபகவான் வக்ரம்பெறும் இந்த நேரத்தில் எல்லா வகையிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் நலனில் மிகவும் அக்கறை கொள்ளவேண்டும். வயதான பெற்றோர்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். காதலர்கள் எண்ணம் கைகூடாது. வாகனத்தில் பயணம் செய்யும்போது மிகவும் கவனத்துடன் செல்வது நல்லது. காண்டிராக்ட் போன்ற தொழில் செய்கின்றவர்களுக்கு அரசு அலுவலகத்திலிருந்து எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதமாகலாம். அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணியில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் உங்களுடன் பணிபுரியும் சிலர், உங்களுக்கு எதிரான கருத்துகளை மேலதிகாரிகளிடம் சொல்வார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையாகப் பணிபுரிய வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. அப்படிப் போட்டால் அதற்கான கடன்தொகையை நீங்களே கட்டவேண்டியது வரும். எனவே எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாகச்  செயல்பட வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகளை இரண்டு மாதகாலம் தள்ளி வைக்கவேண்டும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல பலன் கிட்டும். அவர்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாடு சென்று ஒருசிலர் வேலைசெய்ய போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன், தொழில் தனத்துடன் வாழ்வீர்கள். நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மகன் இப்போது தாய், தந்தையரைக் காண வந்துசெல்வார். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். எவ்வளவு எதிர்ப்பு அலை வந்தாலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். தூரதேசப் பயணம் நல்ல பணத்தையும், வெற்றியையும் தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை பூர்த்தியாகும். வங்கியின் சேமிப்பு நிலை உயரும். இதற்குமுன்னர் உங்களைத் தூற்றியவர்கள் பின்னாளில் வந்துசேர்வார்கள். அதற்கான அச்சாரத்தை இப்போதே போட்டுவிடுவார்கள். பொருளாதார வளர்ச்சியில் குறைவில்லை. கஷ்டமும் குறைந்துவிடும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலாமற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. இந்த காலகட்டத்தில் மற்றவர்கள் சொல்வது உங்களுக்குத் தீமையாகத் தெரியும். எனவே நியாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு தேடியவர்கள் தற்போது நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு மத்திய அரசுப் பதவி வந்துசேரும். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். இப்போது நீங்கள் பொறுமையுடன் செல்லவேண்டும். சுயமாகத் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் தங்கள் பணியில் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பார்கள். எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஊதிய வரவுகளில் குறைவிராது. வேண்டாத இடத்திற்கு சில அரசு ஊழியர்கள் மாறுதலை அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தைத் தள்ளிவைக்கவேண்டும். பங்குதாரர் களை அனுசரித்துச் செல்லவேண்டும். குறிப்பாக பங்குதாரர்களில் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

10-07-2016 முதல் 01-08-2016  வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலாஇப்போது நீங்கள் செய்யும் தொழில்களில் கூடுதல் லாபமுண்டு. எந்த காரியத்தைத் தொட்டாலும் வெற்றியாக முடியும். கடந்த இரண்டு மாத காலமாக இருந்துவந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்துசேரும். இந்த மாதம் முழுவதும் அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பலன்களை பெறுவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். தொழில்துறையில் மட்டற்ற உயர்வு உண்டு. வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கும். முதலாளி- தொழிலாளி ஒற்றுமையால் தொழிற்சாலை சிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும். நீங்கள் விரும்பியபடி உங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். ஒருசிலரின் பிள்ளைகள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புக்கு போகும் அளவில் மெரிட்டில் மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்பத்திலுள்ள அனைவரும் அனுசரித்துச் செல்வார்கள். சண்டை, சச்சரவுகள் நீங்கும். வெளிநாடுகளில் தொழில்செய்யும் பிள்ளைகள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். பெற்றோர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். உங்கள் உடன்பிறந்த சகோதரியினால் தொந்தரவுகள் அதிகம் வரலாம். அவர்களிடம் யோசித்துப் பேசவேண்டும்.

அரசு ஊழியர்கள்

இதுவரை நீங்கள் பட்ட சிரமத்திற்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு பொற்காலம். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணிமாற்றம் அனைத்தும் வந்துசேரும். ஒருசில அரசு ஊழியர்கள் வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். தொல்லை கொடுத்துவந்த சக ஊழியர்கள் விலகிச் செல்வார்கள். கையூட்டு பெறுவதை நிறுத்திக்கொள்ளும் சில அரசு ஊழியர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. உங்களைவிட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.

வியாபாரிகள்

வியாபாரிகள் கூட்டுத் தொழில் செய்வது சிறப்பில்லை. கூட்டாளிகளுக்குள் சண்டைவரும். தனியாக தொழில்செய்வது உத்தமம். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். புதிதாக கிளைகளைத் துவங்குவீர்கள். விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கொள்முதல் பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். அரசாங்க கெடுபிடிகளை சந்திக்கவேண்டி வரும். எனவே கணக்குகளை சரியாக வைத்துக்கொள்வது உத்தமம். போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். கிடைக்கும் லாபத்திற்கு ஆபரணங்கள் வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வெளிநாட்டு ஆர்டர்கள் வந்து சேரும். அதற்கேற்றபடி பொருட்களை சப்ளை செய்வதற்கு தொழிலாளிகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். தொழிற்சங்கத்தினரும் இப்போது தொழிலதிபர்களுடன் அனுசரித்துப் போவார்கள். தொழிலாளிகள் அடையவேண்டிய போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் வந்துசேரும். மான்யமும் கிடைக்கும். வெளிமாநிலத்தில் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். ஏற்கெனவே ஸ்டாக் இருந்த உற்பத்திப் பொருட்கள் முழுவதும் கூடுதல் விலைக்கு விற்கும். பங்குதாரர்கள் அதிகம் பேர் வந்துசேர்வார்கள்.

பெண்கள்

பெண்கள் மனதில் இதுவரை இருந்துவந்த பயம் அகலும். தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். உடல்நிலையில் இருந்த பின்னடைவுகள் நீங்கி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டிற்கும், பிள்ளைகளுக்கும் தேவை யான பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். உறவினர்கள் வந்து செல்வார்கள். பிரிந்துவாழ்ந்த மகன் இப்போது உங்களைத் தேடிவருவார். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். ஒருசிலருக்கு தாய்வீட்டிலிருந்து வரவேண்டிய சொத்துக்கள் கிட்டும். உடன்பிறந்தவர்கள் இப்போது உங்களுக்கு அனுசரணையாகவே இருப்பார்கள். வெறுத்து ஒதுக்கியவர்களும் வலிய வந்துசேர்வார்கள். நீண்ட காலத்துக்குப்பிறகு இப்போது நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.

மாணவர்கள்

படிப்பில் முன்பு இருந்துவந்த மந்தநிலை மாறும். உங்களுக்கு ஞாபகசக்தி கூடும். ஒருசில உயர்கல்வி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள். அவர்களது கண்டுபிடிப்பு மக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ஒருசிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெற்று உடனடி வேலைவாய்ப்பையும் அடைவார்கள். ஆசிரியர்- மாணவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் வராது. ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பார்கள். 

கலைஞர்கள்

கலைஞர்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் வாய்ப்புகள் கூடுதலாகும். நீங்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட உகந்த நேரம். தாய்மொழியைவிட வேற்றுமொழிப் படங்களில் உங்களுக்கு படவாய்ப்புகள் கூடும். முன்பு இருந்துவந்த பணமுடை நீங்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம் ஆகாத கலைஞர்களுக்கு திருமணம் கைகூடும். முன்பு மறுத்துப் பேசியவர்களே உங்களுக்கு பெண் கொடுக்க முன்வருவார்கள். ஒருசில கலைஞர்கள் வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார்கள். வருமானம் இருமடங்காகும். நல்ல வழிகளில் சேமிப்பீர்கள்.

விவசாயிகள்

இந்த ஆண்டு விவசாயிகள் கூடுதல் மகசூலைப் பெறுவார்கள். விளைநிலங்களில் மா, தென்னை போன்ற மரங்களை வளர்க்கும் திட்டம் நிறைவேறும். விவசாயப் பணியில் கூடுதல் லாபத்தையும் பெறுவீர்கள். நவீன விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துவீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த மான்ய உதவிகள் வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பொதுவாக இந்த ஆண்டு விவசாயிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.

அரசியல் பிரமுகர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் நீங்கள் எதிர்பார்த்தபடி பலன்களை அடையமுடியவில்லை. தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் வருவதால், உங்கள் குலதெய்வ அருளோடு தொட்டகாரியம் அனைத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். கெடுதல் செய்துவந்த கட்சிக்காரர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நல்லவர்களின் ஆலோசனை உங்களுக்கு கிட்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் குலதெய்வத்தின் அருள்பெற வேண்டும். குலதெய்வ ஆசியுடன் வெற்றியைப் பெறுவார்கள். 

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள மேஷ‘ ராசி அன்பர்கள், இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை அடைவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். மனைவி- மக்கள் ஒற்றுமையுண்டு. இதுவரை குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். உறவினர்கள் வருகையால் நன்மையுண்டு. விலகியிருந்த சொந்தங்கள் விரும்பிவந்து சேரும். இதுவரை உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் குறையும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை மீட்பீர்கள். கடன் தொல்லைகள் இல்லாமல் போகும். செய்யும் தொழிலில் வருமானம் கூடுதலாகும். பிள்ளைகள் வழியில் செய்யவேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளை நல்லபடியாக நடத்திமுடிப்பீர்கள். தாய், தந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். 80 சதவிகித நன்மையுண்டு.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:

கடந்த இரண்டு வருடங்களில் எதிர்பார்த்த இனங்கள் கைகூடாமல் போனது. இனி எதிர்பார்த்தவை கைகூடும். புதிய நண்பர்கள் சேர்வார்கள். அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பின்னடைவு ஏற்பட்டு சிரமத்தைக் கொடுத்த அனைத்து காரியங்களிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களை மேலும் சிறப்பாக வாழவைக்கும். தட்சிணாமூர்த்தி உங்களுக்கு ஆதரவாக உள்ளார். ஒருசிலர் அமைச்சர் பொறுப்பை ஏற்பார்கள். பதவிகள் தேடி வரும்.  90 சதவிகித நன்மையுண்டு.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

சிலர் தந்தைவழி உறவுகளால் சிரமத்தை அடையநேரும். மாணவ- மாணவிகள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். ஒருசிலர் குடும்பத்தில் வீடுகட்டும் யோகம் ஏற்படும். வியாபாரம் செய்கின்றவர்கள் உபரி வருமானத்தோடு, அதிக லாபத்தையும் பெறுவார்கள். நல்ல வரன் அமையும். திருமணமாகி செல்கின்ற இடத்திலும் சிறப்பாக வாழ்வார்கள்.

பரிகாரம்:

குரு 5-ல் உள்ள இந்த நேரத்தில் தங்கள் குலதெய்வக் கோவிலுக்கு சென்றுவந்தால் நன்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் வராது. திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபக வானையும் வணங்கி வர நன்மையுண்டு.  27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பூஜையறையில்வைத்து வணங்கி வர நன்மையுண்டு.

…………………………………………………………………………………………………………………………..

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் சிம்மத்தில் 5-7-2015 முதல் 1-8-2016 வரை உலாவருகின்றார். பொதுவாக குருபகவான் 4-ல் வரும்போது விழிப்புடன் செயல்பட வேண்டும். நஷ்டங்களைத் தவிர்க்கலாம். எதையும் அலட்சியமாக செய்யவைப்பார். அப்படி அலட்சியமாக செய்ய ஆரம்பிக்கும்போது சோம்பலும் மறதியும் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒன்றை எப்போதும் நீங்கள் நினைவுகொள்ள வேண்டும். தெய்வம் நமக்கு சாதகமாக இல்லை என்றாலும், “மெய்வருத்தக் கூலி தரும்’ என்று முன்னோர்கள் அருளிச்சென்ற சொல்லை மனதில் நிறுத்தி, உடல் உழைப்பைச் செய்ய வேண்டும். காரியங்களை திட்டமிட்டு நடத்தவேண்டும். எல்லா விஷயத்திலும் முன்புபோல ஆர்வமுடன் செயல்படத் தவறினால், உங்களை நம்பியுள்ள குடும்பம் கஷ்டத்தை அடையும் என்பதை நினைக்கவேண்டும்.

குருபகவான் 4-ல் வந்துவிட்டாலும், உங்கள் சுயஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருப்பாரேயானால் சிரமங்கள் எதுவும் வராது. குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடம் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.  உங்களது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிலசமயம் சம்பவங்கள் நடைபெற்றாலும், நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஒருசிலரது குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகள் தடை, தாமதத்துடன் நடக்கும். இப்போது நீங்கள் பழைய காரியங்களை மட்டும் செயல்படுத்தவேண்டும். புதிய காரியங்களை செயல்படுத்தக்கூடாது. குரு 4-ல் வந்தவுடன் நம்மை பாடாய்ப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்றும் நல்லவர்களாக  வாழ்கிறவர்கள் குருபகவானால் பாதுகாக்கப்படுவார்கள். தீய வழிகளில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமே குரு 4-ல் வரும்போது பாதகங்களை அனுபவிப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக உபத்திரவம் எதுவுமிருக்காது. தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கொடுக்கல்- வாங்கல் சீராகவே இருக்கும். கணவன்- மனைவி உறவில் விரிசல்வராது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்துவரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்துவாழ்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் திடமான முடிவுடன் வாழ்வீர்கள். கவலைகள் மறையும். கஷ்டங்கள் குறையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். இப்போது உங்களை மற்றவர்கள் மதித்து நடப்பார்கள். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். கிரகநிலை சாதகமாக இருந்தாலும் குரலில் மாற்றம் செய்து பேசவேண்டும். எல்லாரையும் விரட்டக்கூடாது. கண்டபடி நீங்கள் விரட்டினால் உங்கள் மனைவிகூட உங்களை மதிக்க மாட்டார் என்பதை உணரவேண்டும். கடிதத் தொடர்புகள் நல்ல தகவலைக் கொண்டுவரும். ஒருசிலர் இன்டர்வியூவில் கலந்துகொண்டு, பதவி நியமன உத்தரவையும் பெறுவார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் கறுப்பாகவுள்ள உங்கள் நண்பர்களால் சிரமங்களை அடைவீர்கள். எனவே அவர்களின் உறவைத் துண்டித்துக் கொள்வது நல்லது. இப்போது மனம் தெளிவாக இருக்காது. புதிதாக பிரச்சினைகள் உருவாகும். பணத்தேவை அதிகமாகும். மாற்று வழிகளைக் கையாள்வீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள். கடன் வாங்காமலும், கடன் கொடுக்காமலும் இருப்பது நல்லது. தொழில் துறையில் உள்ளவர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு தங்கள் தொழிலை மேன்மையாக்குவார்கள். வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீங்கள் கடன்பட்டால், அந்தக் கடனை நீங்கள்தான் கட்ட வேண்டியது வரும். சகுனிபோன்ற நண்பர்கள் உங்களைவிட்டு அவர்களாகவே பிரிந்துசெல்வார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இப்போது நீங்கள் உங்களைப்பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்துவந்த நீங்கள் நல்லவராக மாறுவீர்கள். தீய நண்பர்களைவிட்டு விலகி வந்துவிடுவீர்கள். உடல்நலன் சீராக இருக்கும். மனதில் இறுக்கமான சூழ்நிலை இருந்துவரும். நீங்கள் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்ய கடுமையாக உழைப்பீர்கள். பொருளாதார வசதி எவ்வளவுதான் இருந்தாலும், சில நேரங்களில் பணநெருக்கடி ஏற்படும். உறவினர்கள் வகையில் திடீர் பயணம் வந்துசேரும். உங்களை ஏமாற்றிச் சாப்பிட்டவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்கிறவர்கள், அதிகாரிகளிடம் பாராட்டு பெறவேண்டும் என்பதைவிட, சரியாகச் செய்யவேண்டுமென்ற நினைவோடு உங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். ஆனால் சுமுகமான முடிவுக்கு வரும். பெற்றோர்களால் உதவி உண்டு. தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் இப்போது மீண்டும் பணி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் உங்கள் செயலில் தடுமாற்றங்களைக் காண்பீர்கள். யாரையும் மதிக்காத சூழ்நிலை சனியால் ஏற்படும். தடித்த வார்த்தைகள் காரணமாக காவல்துறைவரை சிலர் செல்வீர்கள். ஒருசிலர் வழக்கையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலை வரும். பெற்றோர்களை மதிக்காமல் நடப்பீர்கள். சகோதரிகளிடம் கோபமாக நடக்கும் சூழ்நிலை வரும். காவல்துறை நடவடிக்கைக்கு சிலர் ஆளாவீர்கள். எனவே கவனமுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பவர்களுக்கு தொல்லைகள் எதுவும் வராது. கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பழைய நிலையிலேயே மேற்கொள்ள வேண்டும். அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க கடன் வருவதில் தாமதமாகும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தையும் தள்ளிப் போட வேண்டும். நண்பர்களின் செயலை நம்பி நீங்கள் எந்த காரியத்தில் இறங்கினாலும் நஷ்டமே வரும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

கடந்த காலங்களில் கணவன்- மனைவி உறவில் இருந்துவந்த வேதனை தீரும். தொடர்ந்துவந்த இடையூறுகள் நீங்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேக ஆரோக்கியம் மிகவும் தெளிவாக இருக்கும். கணக்காக வாழ நினைத்த உங்கள் எண்ணப்படி வாழ்வீர்கள். எதிலும் தைரியமாக வேலை செய்வீர்கள். வெளித் தொடர்புகள் லாபகரமானதாக அமையும். கூட்டுத் தொழில் புரிந்தவர்கள் கூடுதல் லாபத்தைக் காண்பார்கள். கூட்டாளிகள் மனசாட்சிப்படி செயல்படுவார்கள். புதிதாக தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். வீட்டில் நிம்மதி பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. பிரிந்துவாழ்ந்த தம்பதியர் இப்போது ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் தடையின்றிக் கிட்டும். ஒருசிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கக்கூடும். அந்தக் குழந்தைகள் நல்ல நிலையில் வாழ்வார்கள். பெற்றோர்கள் மனதில் பட்ட விஷயங்களைச் சொன்னால் போதும்; செய்துமுடிப்பீர்கள்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இப்போது அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஏற்கெனவே வெளிநாட்டில் வேலைசெய்கிறவர்கள் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள். உடன்பிறந்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். அரசு ஊழியர்கள், தொழிலாளிகள் வேலைப்பளுவை சந்திப்பார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். எனவே நிதானித்துச் செல்லவேண்டும். வேலை தேடும் இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு சற்று தள்ளிப்போகலாம். கையூட்டுபெறும் அரசு ஊழியர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த குருப்பெயர்ச்சியில் பிறப்பு ஜாதகப்படி சிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். குடும்பத்தினர் சிரமத்தை அடைவார்கள். எனவே எதிலும் யோசித்துச் செயல்படுங்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைத்த திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கவேண்டும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள், அனைவரையும் மிகவும் அனுசரித்துச் செல்லவேண்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் தாமதம் ஏற்படும். பெற்றோர்களால் மருத்துவச் செலவுகள் கூடும். அவர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கமாட்டார்கள். உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். எனவே நீங்கள் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேண்டிய அளவுக்கு வருவாய் வராது. சிக்கனமாக இருந்தால் நன்மைகளை அடையலாம். அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நெருக்கடிகளை சந்திக்க நேரும். செய்யாத தவறுக்காக சிலர் தண்டனையை அடைவார்கள். சக பணியாளர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலர் இப்போது வெளிநாடு செல் வார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. ஒருசிலர் குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவருவார்கள். பிரச்சினைகள் அதிகமிருந்தாலும் கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராது.

அரசு ஊழியர்கள்

குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் இடமாறுதல் வந்தால் மறுக்காமல் சென்றுவிடுங்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருக்கமாட்டார்கள். உடன்பணிபுரிபவர்கள் உங்கள்மீது இல்லாத பழியைச் சொல்லிவருவதுதான் காரணம். எனவே பணியில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்புரிய வேண்டும். வேலைப்பளு கூடும். கையூட்டு பெறும் காரணத்தால் ஒருசிலர் வேலையிழக்கும் நிலை வரும். எனவே உங்கள் குடும்பத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். புதிதாக தொழில் துவங்க உரிய நேரம் இதுவல்ல. புதிதாக கடன் வாங்கி எதையும் செய்யக்கூடாது.

வியாபாரிகள்

வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இது உகந்த வருடம். உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும். குறிப்பாக எலக்ட்ரானிக் சார்ந்த தொழில் செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள். தவணை முறையில் சேலை, கட்டில், பீரோ விற்பனை செய்கின்றவர்கள் கிராமப் பகுதியில் விற்பனையை செய்யவேண்டும். லாபங்கள் கூடுதலாகும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலாளிகளைப் பொறுத்தமட்டில், தொழிற்சங்கம் (யூனியன்) தற்போது பலன்தராது. அனைத்து வகையிலும் இடையூறு வரலாம். எனவே நீங்கள் தொழிலதிபர்களுடன் ஒத்துப்போக வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் அதிகமாக இருந்தாலும், நியாயமான தேவைகளை மட்டும் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்படும். எனவே குறைந்த லாபம் கிடைத்தாலும் போதுமென்று உள்ளூர் ஆர்டர்களை சேகரித்தால், தொழிற்சாலை லே-ஆப் வராமல் நடக்கும். தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகள் அனைத்தையும் கொடுப்பீர்கள். எனவே அவர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்கள்

பெண்களைப் பொறுத்தவரையில் இப்போது பொறுமையுடன் செயல்படவேண்டும். அக்கம்பக்கம் உள்ளவர்களின் இடையூறுகளை சமாளிக்க வேண்டும். இதற்கு முன்னர் கணவருக்கு ஏற்பட்ட நோய் தீரும். உடல்நிலை சீராகி மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். உங்கள் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். கணவன்- மனைவி உறவு எப்போதும்போல் இருக்கும்; சண்டை வராது. பிள்ளைகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாகும். நல்ல வரன்களாக வந்துசேரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தாய்மை நிலையை அடைவார்கள். முந்தைய வருடங்களில் அடைந்த சிரமம் குறையும்.

மாணவர்கள்

குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கலாம். உள்ளூரில் தீய நண்பர்கள் உங்கள் படிப்பைப் பாழாக்கு வார்கள். மேலும் உங்களுக்கு இதுவரை தெரியாத தீய பழக்கங்களை பழக்கிவிடுவார்கள். எவ்வளவுதான் பெற்றோர்கள் கண்டிப்போடு நடந்தாலும், நீங்கள் அவர்களுக்கு டிமிக்கி கொடுப்பீர்கள். ஒருசிலர் மட்டும் நன்றாகப் படிப்பார்கள். மற்றவர்கள் தேர்ச்சிபெற்றாலே போது மென்று இருப்பார்கள். 10-ஆவது, +2 படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் நல்லபடியாக கவனிக்க வேண்டும்.

கலைஞர்கள்

ஓரளவு வாய்ப்புகள் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். உங்கள் திறமையைக் கண்டு மற்றவர்கள் வியந்துபோவார்கள். நீங்கள் நடித்த படம் வெற்றிப்படமாக ஓடும். கையில் பணப்புழக்கம் சரளமாக உண்டு. காதல் திருமணம் செய்துகொண்ட சில நடிகர்கள் மனைவியால் நிறைய பொருள் இழப்புகளை சந்திப்பார்கள். அவர்களால் வழக்கையும் சந்திக்கவேண்டி வரும். நிம்மதி குறைந்துபோகும். இப்போது உங்களுக்கு தேவையானது நிதானம். அதற்காக தியானம் செய்து பழகுங்கள். அனைத்தும் நன்மையாகும்.

விவசாயிகள்

இந்த ஆண்டு அதிகமழை பெய்யுமென்பதால் குறுகியகால வித்துக்கள் பலன் தரும். புகையிலை பயிரிடுபவர்கள் கூடுதலான பலன்களைப் பெறுவார்கள். அரசாங்கத்தில் கடன் பெறாமலிருப்பது நல்லது. நவீன கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பழுதுகள் வரலாம். இயந்திரங்களை நன்கு இயக்கத்தெரிந்தவர்களிடம் கொடுக்கவேண்டும். அரைகுறை பழக்கம் உள்ளவர்களிடம் கொடுக்கக் கூடாது.

அரசியல் பிரமுகர்கள்

குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் அரசியல் பிரமுகர்கள் இருக்கின்ற பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நண்பர்களிடம் எதையும் மனம் திறந்து சொல்லிவிடாதீர்கள். தலைமையை அவர்களே விமர்சித்துவிட்டு, நீங்கள் விமர்சனம் செய்ததாகக் கூறிவிடுவார்கள். பொதுமக்கள் மத்தியில் உங்கள் அணுகுமுறையை அன்புடன் கொண்டு செல்ல வேண்டும். மௌனமாக காரியங்களைச்  செய்யவேண்டும்

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பொருளாதாரத் தட்டுப்பாடுகள் வராது. ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நல்ல வரன் அமையும். தாய், தந்தையர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். சகோதரர்கள் வழியில் இருந்த பகை நீங்கும். 70 சதவிகித நன்மையுண்டு.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் தடையின்றி நடக்கும். உங்கள் கடன்கள் முழுவதையும் அடைத்துவிடுவீர்கள். பொருளாதார வரவு அதிகமுண்டு. சுயதொழில் புரிகின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். 75 சதவிகித நன்மைகள் உண்டு.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களது செயல்பாடுகளை நீங்கள் மாற்றியமைத்தால் நல்ல பலன்கள் கிட்டும். தீய நண்பர்கள் உங்களை வழிநடத்தப் பார்ப்பார்கள். ஆனால் உங்கள் குலதெய்வம் அவர்களை விரட்டிவிடும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டு. ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். 65 சதவிகித நன்மையுண்டு.

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வர கூடுதல் நன்மை கிட்டும். ஆலயம் செல்ல முடியாதவர்கள் 27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக்கொள்ள வேண்டும். குருபகவான் அருள் கிட்டும்.

…………………………………………………………………………………………………………………………………..

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை,
புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் வருகின்றார். எனவே எதிலும் எச்சரிக்கையாக வாழவேண்டும். குரு 3-ல் வந்தபோது துரியோதனன் படை மாண்டது என்பார்கள். ஆகவே குருபகவான் 3-ல் உள்ள இந்த காலகட்டத்தில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் உடன்பிறந்தவர் உங்களுக்கு எதிராக மாறலாம். உங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைப்பார். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மைத்துனர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வரப்பார்க்கும். எனவே மைத்துனர்களை உங்கள் வீட்டுப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் ஆலோசனைகளும் உங்களுக்கு கெடுதலைத் தரும். உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இல்லை. அதேசமயம் குரு பகவான் பெரிய அளவில் பாதகம் செய்யமாட்டார். சங்கடங்கள் குறையும்.

குரு பகவான் 3-ல் சஞ்சரித்தாலும், உங்கள் சுயஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருப்பாரேயானால் தற்போது சிரமங்கள் வராது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மிகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உங்களது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றாலும், நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஒருசிலரது குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடை, தாமதத்துடன் நடக்கும். இப்போது நீங்கள் பழைய காரியங்களை மட்டும் செயல்படுத்த வேண்டும். புதிய காரியங்களை செயல்படுத்தக்கூடாது. என்றும் நல்லவர்களாக வாழ்கின்றவர்கள் குருபகவானால் பாதுகாக்கப்படுவார்கள். தீய வழிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே குரு 3ல் வரும்போது பாதகங்களை அனுபவிப்பார்கள்.

குடும்பத்தில் மட்டுமே தொந்தரவுகளை சந்திப்பீர்கள். தொழி லதிபர்களின் அயராத உழைப்பில் தொழில் துறை உயரும். இதுவரை தொழிலில் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கி உற்பத்தியும் பெருகும். அரசாங்கத்தில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய பணப் பயன்கள் வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வுடன் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். இப்போது நீங்கள் உங்களைவிட அனுபவசாலிகள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்வீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிட்டும்.

காதல் திருமணம் செய்ய நினைத்தவர்கள் மிகவும் கஷ்டத்தை அடைவார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறாது. அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நல்ல அரசு ஊழியர்கள் பதவி உயர்வுடன் நினைத்த இடத்துக்கு மாறுதலையும் வாங்கிச்செல்வார்கள். கையூட்டு பெறுகின்றவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். 16 ஆண்டுகள் சிரமத்தை அடைவார்கள். எனவே அரசு ஊழியர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக உபத்திரவம் எதுவும் இருக்காது. தாய், தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கொடுக்கல்- வாங்கல் சீராகவே இருக்கும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்துவரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். சுபிட்சத்தை அடைவீர்கள். தொட்ட காரியம் துளிர்விடும். உற்றார்- உறவினர்களால் பலனுண்டு. அவர்கள் இப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சகோதர- சகோதரிகள், வேறுபாடுகள் மறந்து உதவி கரமாக இருப்பார்கள். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் களால் மருத்துவச் செலவு கூடும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். மனைவிவழி உறவுகளால் நல்ல செய்திகளும் லாபங்களும் வந்துசேரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

சுக்கிரன் சாரத்தில் குரு பகவான் உலாவரும் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். உங்களது அலட்சியப் போக்கால், கறுப்பாக உள்ளவர்கள் உங்கள் பொருளாதாரச் சரிவுக்கு காரண மாவார்கள். எனவே புதிய நண்பர்கள் சகவாசம் கூடாது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்தவேண்டும். சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துவாங்கி சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருவதைத் தவிர்க்கலாம். பணப் பற்றாக்குறை வராது. ஏதாவது ஒருவகையில் பணம் வந்துசேரும். தொழில் துறை லாபத்தைக் கொண்டுவரும். அரசாங்க உதவியும், அரசாங்க சலுகையும் கிடைக்கும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வந்து சேரும். வேறு மாநிலங்களில் பணிக்குச் செல்வார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் உங்களது குடும்பத்தில் எடுத்த காரியமனைத்திலும் ஜெயத்தைக் காணலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பொன், பொருள் சேர்க்கைக்கு குறைவு வராது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து செயல்படுவார்கள். இதுவரை உடல் அசதியையும், அசௌகரியத்தையும் அடைந்த நீங்கள் மிகவும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நண்பர்களாலும் வெளிவட்டாரப் பழக்கத்தாலும் பொருளாதார உயர்வுகள் ஏற்படும். அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் இப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகள் பிரிவினை சுமுகமாக முடியும். அதனை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே சொத்து விற்பனையைத் தள்ளிப்போடுவது நல்லது. இப்போது நீங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து மாறுதல் கோரக்கூடாது. தள்ளிப்போட வேண்டும். அரசாங்க நன்மைகள் வர தாமதமாகும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராதது அனைத்தும் நடக்கும். தடையாகும் என்று நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றியாகும். தற்காலிகப் பணிநீக்கம் பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். தொழிலாளர் ஒற்றுமை கூடி உற்பத்தி பெருகும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். அவர்களது தொழில்களில் இடையூறு எதுவும் வராது. தொழிலாளர்கள் கிடைக்கவேண்டிய சலுகைகள் அனைத்தையும் பெறுவார்கள். பெற்றோர்கள் உடல்நிலை சீராகும். மிதுன ராசி அன்பர்கள் நினைக்காததும்கூட நன்மையாக முடிந்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் லாபங்கள் வந்துசேரும். அயல்நாடு சென்றுள்ள அன்பர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எடுக்கும் முயற்சி கைகூடும். ஒருசிலர் தலைமையால் தேர்வு செய்யப்படுவார்கள். மக்கள் மத்தியிலும் செல்வாக்கைப் பெறுவார்கள். உடல்நிலை சீராகும். மனதில் ஏற்பட்ட இறுக்கம் குறையும். சேமிப்பு நிலையில் உயர்வுகள் உண்டு. இப்போது உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை உங்களுக்கு எல்லா வகையிலும் தொந்தரவு கொடுத்துவந்தவர்கள் விலகிச்செல்வார்கள். நீண்டகாலமாக விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். புதிய வரன்கள் வந்துசேரும். நல்ல வரன்தானா என்று ஜாதகம் வாயிலாக ஆராய்ச்சி செய்து முயற்சிகளைச் செய்யவேண்டும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

வேலை தேடும் இளைஞர்கள், தகுதிக்கேற்ப வேறு மாநிலங்களில் வேலை செய்ய வாய்ப்புகள் கூடும். ஒருசில இளைஞர்கள் மத்திய அரசில் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். அயல்நாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல தொழில், வருமானத்தோடு வேலைவாய்ப்பினை பெறுவார்கள். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். சொந்தத்தொழில் செய்துவருகிறவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த தொந்தரவுகள் மறையும். நீண்டகாலமாக திருமணம் நடைபெறாத பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். லட்சுமி உங்கள் வீட்டில் அமர்ந்து குறைகளைப் பூர்த்தி செய்வார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். மாணவர்கள் உயர்கல்வி படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.

10-07-2016 முதல் 1-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

குருபகவான் கடந்த காலங்களில் ஏற்ற இறக்கங்களைத் தந்த நிலை மாறுபடும். வங்கியில் கேட்ட கடன் வந்துசேரும். விவசாயத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் ஈடேறும். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டைவிட்டுச் சென்றுவிட்ட உங்கள் மகன் இப்போது வந்துசேருவார். இருக்கும் இடமும் தெரியும். அரசுப் பணி தேடுகின்றவர்கள் நல்ல வேலையை அடைவார்கள். இப்போது நீங்கள் எழுதியிருந்த தேர்வில் வெற்றிச் செய்தி வந்துசேரும். தொடர்ந்து அரசுப் பணியும் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள், தொழிலாளர் ஒற்றுமையால் அதிக உற்பத்தி பெறுவார்கள். கூடுதல் லாபத்தையும் அடைவார்கள். புதிதாக தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கான நிதி உதவியும் வந்துசேரும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். வழக்குகள் சாதகமாகும். கூட்டுத் தொழில் புரிகிறவர்கள் மத்தியில் இருந்துவந்த கோபம் மாறும். நேசக்கரம் நீட்டுவார்கள். புதிதாக பங்குதாரர்கள் வந்து சேர்வார்கள். 15 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதியருக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள், பெற்றோர்கள் சொல்கேட்டு நடப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கிச்சேர்ப் பீர்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். ஒருசிலர் வீடு வாங்க சந்தர்ப்பம் கூடிவரும். நிலுவையாக இருந்துவந்த தொகை வந்துசேரும். ஒருசிலர் திடீர் அதிர்ஷ்ட பாக்கியங்களை அடைவார்கள். அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் தலைமையால் பாராட்டப்பட்டு, அமைச்சர் பதவியையும் அடைவார்கள்.

அரசு ஊழியர்கள்

குரு 3-ல் அமர்ந்து வேலைப்பளுவைக் கூட்டுவார். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. வரவேண்டிய இனங்கள் அனைத்தும் வந்துசேரும். நல்ல முறையில் செயல்படும் அரசு ஊழியர்கள் குரு பகவான் அருளால் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் நிதான மாகச் செயல்பட வேண்டும். தவறு செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஒருசிலர் காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள்.

வியாபாரிகள்

போட்டி வியாபாரிகளின் தொல்லை குறையும். புதிதாக கிளை துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். கனிவான பேச்சால் வாடிக்கையாளர் களைக் கவரலாம். வாடிக்கையாளர்கள் உங்களை விட்டுச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொள்முதல் சரக்குகளில் வியாபாரிகள் உபரி லாபத்தைப் பெறுவார்கள்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்கள் உறவுகளில் விரிசல் வராது. முடிந்தவரை தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. தொழிலதிபர்கள் தொழிலாளருக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை, போனஸ் போன்றவற்றை அவர்களே முன்வந்து கொடுப்பார்கள். தொழிலதிபர்கள் புதிதாக தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த நிதியுதவி கிட்டும். எப்போதும் வம்பு வழக்கோடு உள்ள தொழிலதிபர்கள் தொழிற் சாலைகளில் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். ஆகவே தொழிலாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள்

பெண்களைப் பொறுத்தவரையிலும் எதிலும் நிதானமாகச் செல்ல வேண்டும். புதிய பொருட்கள் வாங்க போட்ட திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். ஒருசிலருக்கு வைத்தியச் செலவுகள் வந்துசேரும். மனம் எப்போதும் சஞ்சலமாக இருந்துவரும். தியானம், கோவிலுக்குச் செல்வது கைகொடுக்கும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராமலிருக்க விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பிள்ளைகளால் வரும் பிரச்சினை களை பெரிதுசெய்யாதீர்கள்.

மாணவர்கள்

கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். எளிதில் வெற்றிபெறலாமென்று நினைத்து ஏமாந்துவிடக்கூடாது. பாடங்களை திரும்பத்திரும்ப படிப்பதன் மூலமே ஞாபகசக்தி கூடும். உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறமையைக் காட்ட வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சக மாணவர்களுடன் சுமுக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் சிலரது கல்வியில் நிரந்தரத் தடை வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே கல்வியை மட்டும் நேசித்துச் செயல்பட வேண்டும்.

கலைஞர்கள்

ஏற்கெனவே படவாய்ப்புகள் குறைந்து வீட்டில் முடங்கிக்கிடந்த உங்களுக்கு இப்போது படவாய்ப்புகள் கூடும். ஒருசிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வருவார்கள். 19-09-2015 முதல் 29-03-2016-க்குள் ஒருசில கலைஞர்கள் பெரிய பட்ஜெட் படங்களை தாங்களே தயாரிப்பார்கள். அதில் மாபெரும் வெற்றியும் காண்பார்கள். படப்பிடிப்பில் தொழிலாளர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல காலம்.

விவசாயிகள்

இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். விவசாயிகள் விவசாயத்தில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். பணப்பயிர் நடவு செய்தவர்கள் மிகுந்த லாபத்தைப் பெறுவார்கள். கதிரறுக்கும் இயந்திரம் வைத்துத் தொழில் செய்பவர்கள் நல்ல தொழிலாளியிடம் ஒப்படைக்க வேண்டும். நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. வெங்காயம், புகையிலை உற்பத்தி செய்கின்றவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.

அரசியல் பிரமுகர்கள்

நீங்கள் செய்துவந்த நல்ல பணிகளை மக்கள் பாராட்டுவார்கள். ஒருசில அரசியல் பிரமுகர்கள், தலைமையால் பாராட்டப்பட்டு புதிய பதவிகளை அடைவார்கள். உங்கள் பொதுச் சேவையை உணர்ந்து வாரியப் பதவிகளைக் கொடுக்க தலைமை முன்வரும். உங்கள் சுய ஜாதகத்தை முழுமையாகப் பரிசீலித்து, அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டு அரசியல் களத்திற்குச் செல்லுங்கள். வெற்றி உங்கள் பக்கம் தேடிவரும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்துள்ள உங்கள் உடல்நிலையில் சிரமங்கள் எதுவும் ஏற்படாது. கூடுதலான பணவசதிகளைப் பெறுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். பேச்சு வார்த்தை மூலம் நல்ல தீர்வுகள் ஏற்படும். நீங்கள் செய்துவரும் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். 75 சதவிகித நன்மைகளை அடைவீர்கள்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்களை அடைவார்கள். உடல்நிலையில் அசௌகரியங்கள் ஏற்படாது. நிலுவைத் தொகைகள் வசூலாகும். ஒருசிலர் புதிய வீடுகட்டி குடிபுகுவார்கள். இருக்கும் இடத்தை மாற்றியமைப் பார்கள். சிலர் திட்டமிட்டபடி அயல்நாடு சென்று பொருளீட்டுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். 90 சதவிகித நன்மைகள் உண்டு

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

உடல்நிலையில் சீரான நிலை ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். நீங்கள் நேசித்த ஒருவரை இப்போது பிரிய நேரிடும். பிடிவாத குணம், உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. உற்றார்- உறவினர்களோடு சுமுகமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசுப் பணியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 65 சதவிகித ஆதாயம் பெறுவீர்கள்.

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று குரு பகவானையும், முருகக் கடவுளையும் வணங்கி வரவேண்டும். (ஒருமுறை சென்றுவந்தால் போதும்) ஆலயம் செல்லமுடியாதவர்கள் வியாழன்தோறும் மஞ்சள் ஆடை அணிந்து, தட்சிணாமூர்த்தியை இருந்த இடத்திலிருந்து வணங்கலாம். 27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

…………………………………………………………………………………………………………………………………..

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே!

கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து உலா வந்தார். அப்போது அதிகமான சிரமத்தை அடைந்திருப்பீர்கள். மேலும் 16-12-2014 வரை அர்த்தாஷ்டமச் சனியும் நடந்தது. அதனால் ஏற்பட்ட விரயம் இனி சாதகமாகும். 05-07-2015 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் வருவது மிகச்சிறப்பு.

இப்போது தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி ஒரு வருடத்திற்கு மிகவும் யோகமான ஆண்டு. கடந்த காலத்தில் போட்டி, பகைகளை சந்தித்திருப்பீர்கள். கடன் தொல்லை, வேலை பாதிப்பு, தொழில் மந்தம் போன்ற நிலைகளை அடைந்திருப்பீர்கள். ஒருசிலர் வீண் விரயத்தையும், கண்டத்தையும் அடைந்திருப்பீர்கள். உற்றார்- உறவினர்கள் பகை ஏற்பட்டிருக்கக்கூடும். அந்த நிலைகள் மாறி நடப்பு குருப்பெயர்ச்சி நல்ல பலன்களாக அமையும். நின்றுபோன திருமணம் மீண்டும் கைகூடும். அடுத்தடுத்து பணவரவுகளைப் பெறுவீர்கள். இப்போது தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றிகிட்டுவதால், சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நல்ல அந்தஸ்தோடு வாழ்வீர்கள். லேவாதேவி, கொடுக்கல்- வாங்கல் செய்வோர் தொழில் உயரும். பழைய கடன் பாக்கிகளை நீங்கள் கேட்காமலேயே கொடுப்பார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் கூடும். தாய்- தந்தையர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். வெளித்தொடர்பில் நண்பர்கள் உங்களுக்கு மிகவும் நேசமாக இருப்பார்கள். நீங்கள் நடத்த வேண்டிய மற்ற காரியங்கள் அனைத்தும் இனிதே நடக்கும்.

இதுவரை குலதெய்வத்தை தரிசிக்கமுடியாமல் இருந்தவர்கள், குலதெய்வ ஆலயத்துக்கு குடும்பத்தோடு சென்றுவருவீர்கள். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டில் உறவினர்கள் வருகை கூடும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்ப நிலைகள் நீங்கும். சகோதரர்கள் வழியில் நிலவிவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். அரசு ஊழியர்கள் வேண்டிய இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். தடைப்பட்டு நின்ற பதவி உயர்வு கிட்டும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கூடுதல் மகசூலைப் பெறுவார்கள். போட்ட திட்டப்படி பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். நல்ல சம்பளத்தையும் அடைவார்கள். புதிய வீடுகட்டும் எண்ணம் கைகூடும். வீட்டின் கதவை மகாலட்சுமி வந்து தட்டுவார்.

தொழில் செய்பவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். விலகிச் சென்ற பிள்ளைகள் மீண்டும் பெற்றோரிடம் வந்துசேர்வார்கள். எப்போதும் தீமையே செய்துவந்த சக பணியாளர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். பணவசதி சரளமாகக் கிடைக்கும். இப்போது நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். அரசியலிலுள்ள வர்கள் நினைத்தபடி புதிய பதவிகளை அடையலாம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழ்பவர்கள் லாட்டரிச் சீட்டில் முதல் பரிசை வெல்லக்கூடிய நிலை உள்ளது. ஆலய தரிசனம் அதிகமாக இருக்கும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். முன்பு இருந்துவந்த பணமுடைகள் நீங்கும். ஒருசிலருக்கு பணம் மூட்டையாகக் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுடன் நேசமாக வாழ்வார்கள். நீண்ட காலமாக பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அதேபோல குழந்தையில்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பணவசதியும், பொருளாதாரமும் உயரும். நண்பர்கள், அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் கூடுதல் வசதியும் கிட்டும். உடல்நலக் குறைவுகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள். இதுவரை அரசு பதவி கிடைக்காதவர் களுக்கு, திறமைக்கேற்ப அரசுப் பதவி வரும். வெளிநாடு செல்வதில் இருந்துவந்த முட்டுக்கட்டை நீங்கும். குலதெய்வ ஆலயத்துக்கு சென்றுவர வழிபிறக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வருவதுடன், பணவரவும் கிட்டும். அரசாங்கத்தில் இருந்து வர வேண்டிய சலுகைகள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். காதல் திருமணம் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். எந்திரம், கருவிகள், பூச்சி மருந்து வியாபாரம் செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வருவாய் கூடும் இந்தநேரத்தில் சேமிப்பும் உயரும். பிள்ளைகளின் உயர்கல்விக்கு தாரளமாக செலவு செய்வீர்கள். அவர்களும் நல்ல முறையில் படிப்பார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நண்பர்களால் வெளிவட்டாரத் தொடர்புகள் அனுகூலமாகும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல் வந்துசேரும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த நோய்த் தாக்கம் குறையும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் அதிக லாபங்கள் வந்துசேரும். நீங்கள் முயற்சித்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். போட்டி பந்தயங்களில் நல்ல வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடன் பிறந்த சகோதரர்கள் தங்களது முந்தைய செயலுக்கு வருத்தப்பட்டு, உங்களிடம் நேசத்தோடு பழகுவார்கள். உடன்பிறந்த சகோதரிகள் கொடுத்துவந்த தொல்லைகளை நிறுத்திக்கொள்வார்கள். எதிர்பாராத வரவுகள் வந்துசேரும். இளைஞர்கள் வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று கூடுதல் லாபத்தை அடைவார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். மேலும் சிலர் புதியவீட்டை விலைக்கு வாங்குவார்கள். உங்கள் வீட்டருகில் குடியிருந்து தொல்லை கொடுத்துவந்தவர்கள் வீடு மாற்றம் செய்து செல்வார்கள். மாடு, கன்று பால் பாக்கிய விருத்தி உண்டு. விவசாயிகள் பணப்பயிர்களைப் பயிரிட்டு அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். பிள்ளைகள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். காலம் காலமாய் இருந்துவந்த கோவில் சண்டை முடிவுக்கு வரும். ஒருசிலர் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை மீண்டும் பெறுவார்கள். பாதியில் நின்றுவிட்ட திருமணம் இனிதே கைகூடும். கடந்தகாலத்தில் காணாமல்போன பிள்ளைகள் வந்துசேர்வார்கள். தாய்- தந்தை வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

அரசுப் பணியாளர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு பொற்காலம். எதிர்பார்த்த இடத்துக்கு மாறுதல் வந்துசேரும். அதேபோல எதிர்பார்த்த பதவி உயர்வும் கிட்டும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். பெற்றோர்களால் நல்ல பலன்கள் வந்துசேரும். மணமான பெண்கள் கணவனுடன் இணக்கமாக வாழ்வார்கள். பழைய சண்டை சச்சரவுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். ஆண் வாரிசு வேண்டித் தவம்செய்தவர்களுக்கு, இப்போது ஆண் வாரிசு உருவாகும். ஏட்டிக்குப் போட்டியாக இருந்துவந்த பிள்ளைகள் தொல்லை தராமல் நல்லவர்களாக வாழ்வார்கள். வாகனம் வைத்துத் தொழில்செய்கின்றவர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள், தொழிலாளிகள் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தியும் பெருகும். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அண்டை, அயலார் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். உடல் ஊனமுற்றவர்கள் தேடிய அரசுப் பதவி வந்துசேரும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த நீண்டகாலப் பிணக்குகள் மாறும். ஒற்றுமையுடன் வாழ்வார்கள். பகைவர்கள் விலகிச்செல்வார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் களிடையே, விவாகரத்து வழக்கு இருந்தாலும் ஒன்றுசேர்வார்கள். ஒரு சிலரது தாயும், தந்தையும் ஒரே நேரத்தில் விபத்தை சந்திக்க நேரும். எனவே பிள்ளைகள் அவர்களை வசைபாடாது இருப்பது நலம். மாமியார் கொடுமையால் பிரிந்துவந்த பெண்கள் மீண்டும் கணவரோடு சேர்வார்கள்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெறுவார்கள். சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இரு சக்கர வாகனம், கார் வாங்க போட்ட எண்ணம் ஈடேறும். அன்றாட வரவுகள் கூடும். செய்யும் தொழிலில் ஏற்றம் காணலாம். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட வருடங்களாக பார்க்காத உறவுகளை இப்போது பார்ப்பீர்கள். அவர்களின் வற்புறுத்தலால் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். அரசுப் பணிக்கு முயற்சித்தவர்களின் எண்ணம் ஈடேறும். தொல்லைதந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் சுமுகமான நிலை ஏற்பட்டு வரவுகளும் கூடும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு சூரியன் சாரத்தில் உலா

இப்போது உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியுண்டு. எங்கு பார்த்தாலும் உறவுகளின் ஆதரவுண்டு. உங்கள் பெண்ணே வேண்டாமென்று சொன்ன உறவுகள் தேடிவந்து உறவுகொள்வார்கள். தங்கள் பிள்ளைக்கு திருமணமும் செய்வார்கள். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். அதிகாரிகளின் ஆதரவில், அரசு ஊழியர்கள் கெடுபிடி இல்லாமல் வாழ்வார்கள். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடு செல்ல போட்ட திட்டப்படி இளைஞர்கள் பயணிப்பார்கள். அப்படிச் செல்கின்றவர்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றுச் செல்லவேண்டும். திருமணமாகாமல் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றிபெறுவார்கள்.

அரசு ஊழியர்கள்

பொதுவாக இது அரசு ஊழியர்களுக்கு உகந்த குருப்பெயர்ச்சியாகும். இதுவரை தடைப்பட்டுவந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும் வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பணிச்சுமை குறையும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிட்டும். தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள்.

வியாபாரிகள்

வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர்வார்கள். ஒருசிலர் தற்போதுள்ள கடையை விரிவுபடுத்திட போட்ட திட்டம் நிறைவேறும். சந்தை வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். கொள்முதல் செய்த பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். வேண்டிய வங்கிக் கடன் கிடைத்து தொழிலை விரிவுசெய்வீர்கள்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் வெளிநாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலாளிகள் ஒற்றுமையால் உற்பத்தி இருமடங்காகும். யூனியன் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் சுமுகமாகும். இதுவரை இருந்துவந்த கூடுதல் வேலைப்பளு குறையும். முதலாளி- தொழிலாளர் ஒற்றுமை கூடும். வரவேண்டிய போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கேட்காமலேயே வந்துசேரும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள்.

பெண்கள்

பெண்களுக்கு, இதுவரை பட்ட துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். நாளைய பொழுதுக்கு என்ன செய்வோம் என்று இருந்திருப்பீர்கள். இப்போது வருவாய் அதிகரித்து தேவைகள் பூர்த்தியாகி, சேமிப்பும் உயரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். வீட்டுக்கு அடங்காமல் இருந்துவந்த உங்கள் பிள்ளை இப்போது நல்ல வராக வாழ்வார். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆடை, ஆபரணப் பெருமையோடு வாழ்வீர்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர் வார்கள். பாதியில் நின்றுவிட்ட வீடுகட்டும் பணி தொடரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொற்காலம்.

மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் எதிர்பாராத முன்னேற்றத்தை அடைவார்கள். தொழில்துறை சம்பந்தப்பட்ட உயர்கல்வியில் உள்ளவர்கள் புதிய கண்டு பிடிப்புகளைச் செய்வார்கள். மாணவர்கள் உயர் படிப்புக்கு கல்விக்கடன் தடையின்றி கிடைக்கும். உயர்கல்வியில் உள்ள ஒருசிலர் காம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். ஒருசிலர் கல்வி முடிந்தவுடன் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் பணிக்குச் செல்வார்கள். ஆசிரியர்- மாணவர்கள் நல்லுறவு நீடிக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு இது ஒரு பொன்னான குருப்பெயர்ச்சியாகும். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். அயல்நாட்டுப் படப்பிடிப்புகள் தொடரும். உங்கள் படம் மக்கள் மத்தியில் வெற்றியடையும். கூடுதல் வசூல் கிடைக்கும். சிறிய பட்ஜெட் படங்கள்கூட கூடுதல் வசூலை அள்ளித்தரும். தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் காதல் சம்பந்தப்பட்ட வழக்குகளைச் சந்திப்பார்கள். நடிகைகள் எதிர்பார்த்தபடி புதிய படங்கள் ஒப்பந்தமாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் பணப்பயிர்களில் கூடுதல் லாபம் அடைவார்கள். விவசாயமும் செழிப்பாக நடைபெறும். இப்போது நீங்கள் பிறர் சொத்தை வாங்கக்கூடிய நிலை உள்ளது. நல்ல விலையோடு வரும் சொத்துக்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். கிணற்றில் நீர் இல்லையே என்கிற கவலை மாறும். விவசாயிகளுக்கு இது ஒரு பொற்காலம். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

அரசியல் பிரமுகர்கள்

உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பொதுமக்கள் மத்தியில் உங்கள் பொதுப்பணி அங்கீகாரத்தைத் தரும். ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக உள்ள ஒருசிலர் திடீர் அதிர்ஷடத்தைப் பெறுவார்கள். அமைச்சர் போன்ற பொறுப்புகளையும் அடைவார்கள். எதிர்கொள்ளும் அரசியல் களத்தில் வெற்றியைப் பெறுவார்கள்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்த நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அனைத்தையும் செய்துமுடிக்க உகந்த நேரம். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகள் வழியில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் பேச்சுவார்த்தை எதுவுமின்றி ஒன்றுசேர்வார்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. 80 சதவிகித லாபம் கிடைக்கும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் சோதனைகள் எத்தனை வந்தாலும் கடந்துவிடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். இதுவரை நீங்கள் பட்ட வேதனை யாவும், சாதனையாக மாறும். விட்டுச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். எதிர்பார்த்த அரசுப் பதவி கிடைக்கும். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். தொழிலில் இருந்துவந்த போட்டி விலகும். செய்யும் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் மாறி, உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். செவ்வாய் நட்பு, உச்சம், ஆட்சியில் இருந்தால் சகல சம்பந்தத்தோடு உள்ள மனைவியை அல்லது கணவரை அடைவீர்கள். ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பிருந்தால் உங்களைவிட வசதிக் குறைவான இடத்தில் வரன் தேடவேண்டும். 95 சதவிகிதம் வரை நன்மைகள் உண்டு.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:

எந்த தோஷம் இருந்தாலும் அத்தனை தோஷமும் உங்கள் நட்சத்திரத்தை பாதிக்காது. நீங்கள் திட்டமிட்டபடி உங்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த பெண்ணைத் திருமணம் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்பாராத வகையில் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். காலம்காலமாய் தொல்லை கொடுத்துவந்த பூர்வீக சொத்துகள் பிரிவினை சுமுகமாக நடக்கும். வழக்குகள் சாதகமாகும். அரசு ஊழியர்கள் வேலை செய்யும் இடத்திலுள்ள பெண் ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் உங்களுக்கு தொல்லைகள் வரலாம். உடல்நிலை சீராகும். கடன் தொல்லைகள் மறையும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு கூடுதலாகும். 90 சதவிகித ஆதாயம் உண்டு.

பரிகாரம்:

27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் பர்சில் அல்லது பையில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள். முடிந்தவரை தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவேண்டும். சிறப்பு பரிகாரம் எதுவும் அவசியமில்லை

…………………………………………………………………………………………………………………………..

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசி அன்பர்களே!   

கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து விரயமாக உலாவந்தார். தற்போது குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து அதிகமான பலன்களைத் தருவார். அந்த பலன்கள் சற்று மந்தமாகவே இருக்கும். நீங்கள் அதிகம் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே நல்ல பலன்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். “ராசியில் குரு வந்தால் சிறைப்பட வேண்டும்’ என்பது ஜோதிடச் சொல். அதுபோல உங்கள் வாழ்வில் எதுவும் நடக்காது. நல்ல பலன்களாகவே நடந்து வரும். பொருளாதார வரவுகளில் தடை எதுவும் ஏற்படாது. குடும்பச் செலவுகளுக்கு தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகைக்குப் பஞ்சமில்லை. தொல்லைகொடுக்கும் உறவினர்கள் வருவார்கள். உடன்பிறந்தவர்கள் மத்தியில் சுமுக உறவு உண்டு என்றாலும், இளைய சகோதரர்கள் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். அண்டை, அயலாரிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் வந்துசேரும். உயரதிகாரிகள் கருணையுடன் நடந்துகொள்வார்கள். கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கையூட்டு பெறுவதால் ஒருசிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளையும் அடைவார்கள். தொழிலாளிகள் வேலைப்பளுவை சந்திப்பார்கள். தொழிலதிபர்கள் அதிகமான உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். பொதுவாக எச்சரிக்கையாகச் செயல்படுபவர்கள் கெடுதல் எதுவுமின்றி வாழ்வார்கள்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் தொழில்துறையில் போதுமான வருமானம் ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலுக்காக அரசாங்கக் கடன்களை தடையின்றிப் பெறுவார்கள். இப்போது நீங்கள் நிதானமாகச் செயல்பட்டு காரியங்களனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். ஒருசிலருக்கு தசாபுக்திப்படி திருமணம் கைகூடும். பெண்கள், கெட்டதையே அறியாத நல்ல கணவரை அடைவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலாவார்கள். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்களின் தொழில் உயர்வு அடையும். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இக்காலகட்டத்தில் லாகிரி வஸ்துக்கள் வியாபாரம் செய்கின்றவர் நிலையில் மாற்றம் உண்டு. பொருளாதார உயர்வும் ஏற்படும். உறவினர் களால் திடீர் வரவு- செலவுகள் ஏற்படும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத திருப்பமாக வழக்குகளில் வெற்றியை அடையலாம்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

குடும்ப உறுப்பினர்கள் தேவை முழுவதும் சீராகும். திடீரென புதிய பணவரவுகள் வந்துசேரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லை மாறும். இப்போது குடும்பத்திலுள்ள அனைவரும் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்வார்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் மாறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். இதுவரை தடைப்பட்டுவந்த காரியங்கள் கைகூடும். ராசியில் குரு வந்த பலனாக திருமணமாகி, திருமண பந்தம் என்ற சிறைக்குள் போவீர்கள். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் மாறும். உங்கள் வீட்டில் தெய்வ அருள் கிட்டும். விலகிப் போன சொந்தங்கள் வந்துசேரும். காதல் திருமணம் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் கைகூடாது. கணவன்- மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் எதுவும் வராது. தூரதேசத்தில் இருந்து கடிதத் தொடர்புகள் லாபத்தோடு வரும். நன்மையான செய்திகள் வந்துசேரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இப்போது நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரியும் இடம், வெளிவட்டாரத் தொடர்புகள், குடும்ப உறுப்பினர்கள் ஆகிய எல்லாரிடமும் நிதானமாகப் பேசவேண்டும். பெற்றோர்கள் வழியில் கூடுதலாக மருத்துவச் செலவுகள் வந்துசேரும். தொழில் துறையில் தொழிலதிபர்கள், கூடுதல் உற்பத்திமூலம் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையும் கைகூடும். உங்கள் உடன்பிறந்தவர்கள் இப்போது விட்டுக்கொடுத்துப் போவார்கள். சொத்துப் பிரச்சினை, எந்வொரு வழக்குமின்றி முடிவுக்கு வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் அதிகாரிகளின் அனுசரணையான பேச்சு தெம்பாக வேலைசெய்ய வைக்கும். கடைநிலை ஊழியர்களால் சிலர் தொல்லைகளை அனுபவிப்பார்கள். அவர்கள் கையூட்டுப்பெறும் பழி உங்கள்மீது வராமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ள வேண்டும். வெகுநாட்களாக நீங்கள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

வெளிவட்டாரப் பழக்கம் உங்கள் மரியாதையைக் கூடுதலாக்கும். அண்டை, அயலார் உங்கள் வாக்குக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். கடந்த காலங்களில் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் யாவும் நல்ல தீர்வுக்கு வரும். காணாமல்போன பொருட்கள் கிட்டும். மனதில் ஏற்பட்ட இருண்ட சூழ்நிலை மாறும். சுபகாரியப் பேச்சுகள் தொடங்கும். ஒருசிலருக்கு காலம்காலமாய் நடந்துவந்த வழக்குகள் சாதகமாகி விடுதலையும் கிட்டும். கை, கால்கள் முதல் உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டதாக நினைப்பீர்கள். ஆனால் உங்களுக்கு எந்த நோயும் இருக்காது. வீட்டிலுள்ளவர்கள் கேட்டதை வாங்கிக்கொடுப்பீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மனக்குறைகள் நீங்கும். புதிதாக வியாபாரத்தைப் பெருக்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட செயல்களில் கூடுதலான லாபத்தை அடைவீர்கள். தொழில் துறை சிறப்படையும். பெண்கள் சிலர் தாய்வழி சொத்துக்களை அடைவார்கள். அந்நிய மொழியினரால் நல்ல லாபம் உண்டு. அவர்களரி சிலர் அதிக உதவிகளைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த மாறுதல் உத்தரவு வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வையும் அடைவார்கள். மீன் பண்ணை வைத்து நடத்துபவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். வெளி நாட்டுப் பயணம் செய்வார்கள். ஜூன் 2016 முதல் சொந்தத் தொழில் செய்யலாம்.

10-07-2016 முதல் 1-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

நீங்கள் முந்தைய காலங்களில் அடைந்த சிரமங்கள் குறையும். பிரிந்துசென்ற பிள்ளைகள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் முறையான விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். நீண்டகாலமாக உறவுப்பெண்ணை மணப்பதில் இருந்துவந்த தடை நீங்கும். உறவினர்கள் விருப்பத்தோடு உங்கள் திருமணம் முடியும். கடல்சார்ந்த தொழில் செய்கிறவர்கள் இப்போது அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சிறுசிறு சச்சரவும் விலகி நல்ல ஒற்றுமை ஏற்படும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மனைவிக்கு ஏற்பட்டிருந்த உடல் நலக்குறைவுகள் சீராகும். ஒருசிலர் புதிய வீடுகட்டி குடிபோவார்கள். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் பிள்ளைப்பேறு அடைவார்கள். காதலர்கள் எண்ணம் கைகூடாது. மாடு, கன்று, பால் பாக்கிய விருத்தி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து பெற்றோருக்கு பெருமைசேர்ப்பார்கள்.

அரசு ஊழியர்கள்

நிரந்தரமாகாத பணியாளர்கள் நிரந்தரப் பணியை அடைவார்கள். ஒருசிலர் எதிர்பார்த்தபடி மாறுதல் பெறுவார்கள். இப்போது உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகை, பதவி உயர்வுகள் வந்துசேரும். தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறிச்செல்வார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன்கள் வந்துசேரும். குரு உங்கள் ராசியில் உலாவருவதால் கையூட்டு பெறுகின்ற ஒருசில ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறினால் காவல்துறை நடவடிக்கைகள் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

வியாபாரிகள்

இப்போது நீங்கள் மிகவும் கனிவுடன் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பல வருடங்களாக வசூலாகாத நிலுவைத் தொகையினை பாக்கிதாரர்கள் வலியவந்து செலுத்துவார்கள். நீங்கள் உங்கள் வியாபாரத்தை திட்டப்படி விரிவுசெய்வீர்கள். சக போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். கொள்முதல் செய்த பொருட்கள் யாவும் நல்ல விலைக்கு விற்கும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும். இப்போது நீங்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திக்க நேரும். தொழிற்சங்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சுமுகமாக முடியாது. எனவே தொழிலாளிகள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். தொழிலதிபர்கள்- தொழிலாளி ஒற்றுமை விரிசலடையும். எனவே யோசித்து முடிவுகளை எடுக்கவேண்டும். புதிய பங்குதாரர்களை சேர்க்கும் போது யோசித்துச் செய்யவேண்டும். அதுவே உங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தொழிலதிபர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இருந்துவரும் பிணி பீடைகள் கூடுதலாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு எந்த நோயும் இருக்காது. ஆனால் பிணி, பீடைகள் இருப்பதுபோல தோன்றும். அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனபாரம் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். பொதுவாக முரட்டு குணமுள்ள பெண்கள் மென்மையான குணத்தோடு நடந்தால் மட்டுமே வாழ்க்கையை வளமாக்க முடியும். நிதானமாகச் செயல்பட வேண்டும்.

மாணவர்கள்

இப்போது நீங்கள் பாடத்தை ஒன்றுக்கு மூன்றுமுறை படிக்கவேண்டும். கடுமையான முயற்சியால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஒருசில மாணவர்களுக்கு தண்ணீர் கண்டம் உள்ளது. எனவே உல்லாசப் பயணம் செல்லும் நேரத்தில் நீர்நிலைகளில் விளையாடாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும். மொத்தத்தில் நீங்கள் படிப்பில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தையர் சொல்வதையும் கேட்டு நடக்கவேண்டும்.

கலைஞர்கள்

கலைஞர்களைப் பொறுத்த அளவில் போட்டி அதிகமிருக்கும். எனவே புதிய படவாய்ப்புகள் பெறுவதற்கு முயற்சிப்பதைவிட, உள்ள நிலையை மட்டும் சீராக வைத்துக்கொள்வது நல்லது. வரவைவிட செலவுகளே அதிகம் உள்ளது. உங்களைப் பற்றி மற்றவர்கள் விமர்சனம் செய்தாலும் வருத்தப்படாமல் இருக்கவேண்டும். அடுத்த ஆண்டு உங்க ளுக்கு யோக ஆண்டு. காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும்.

விவசாயிகள்

விவசாயம் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நல்ல மகசூல் பெற வேண்டுமென்றால், உங்களின் நேரடி கவனம் வேண்டும். பணப் பயிர்கள் பயிரிடுவோர் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் பிறர் சொத்தை வாங்குவார்கள். விவசாயத்தில் ஏற்றமான காலம் இது. மாடு, கன்று, பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் பால் பண்ணை வைத்து நடத்தும் வாய்ப்பு கூடிவரும். எப்போதும் கூலிவேலை செய்து வந்தவர்கள்கூட இப்போது சுயதொழில் செய்வார்கள். எப்போதும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்தவர்களும் ஏற்றம்பெறும் காலம்.

அரசியல் பிரமுகர்கள்

பொதுச்சேவையில் உள்ளவர்கள் மிகவும் கனிவானவர்களாக மாறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் நினைத்தபடி தலைமையிலிருந்து நல்ல பதவி வந்துசேரும். பொதுமக்கள் மத்தியில் உங்கள் சேவைக்கு நல்ல பாராட்டு உண்டு. அரசியலில் நீங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியைக் காண்பீர்கள். எதிர்ப்பாளர்கள் விலகிச்செல்வார்கள். நீங்கள் நினைத்தபடி காரிய வெற்றிகள் உண்டாகும்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய முயற்சியில் மேற்கொள்ளும் எல்லா காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த ஆண்டு குரு பகவான் ராசியில் அமர்ந்துள்ளதால், நீங்களே உங்கள் காரியத்தில் முன்னின்று செயல்பட்டால் கூடுதல் லாபம் உண்டு. மற்றவர்களை நம்பக் கூடாது. கணவன்- மனைவி ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். செலவுகள் கூடுதலாகின்றது. வருமானம் குறைகின்றது. எனவே நிதானித்துச் செயல்பட வேண்டும். அடுத்த ஆண்டு சிறப்பு. இவ்வாண்டு 60 சதவிகித ஆதாயம் கிடைக்கும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:

மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். வாழ்க்கையில் பொருளாதாரப் பிரச்சினை இருக்காது. முன்னேற்றமாகவே உள்ளது. உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள்கூட இப்போது உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். மக்கள் சேவையில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. 75 சதவிகித நன்மையுண்டு.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

கணவன்-மனைவி உறவில் விரிசல் வராது. விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்பம் கெட்டால் குழந்தைகள் நலனும் கெடும் என் பதை உணரவேண்டும். தந்தை, மகன் உறவு சிறப்பாக இருக்காது. எனவே பிள்ளைகளால் தொல்லை வராத அளவில் பெற்றோர் இருக்கவேண்டும். தனிக்குடித்தனம் செல்ல ஆர்வம் காட்டும் பிள்ளைகளை அனுப்பி வைப்பது நல்லது. ஒருசிலர் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் செலவு செய்வார்கள். பயணத்தில் பொருட்களை மிகவும் விழிப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்குகள் சாதகமாகும். பணியாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். 80 சதவிகித லாபம் கிடைக்கும்.

பரிகாரம்

வசதியுள்ளவர்கள் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், அங்கே வீற்றிருக்கும் குரு பகவானையும் வணங்கி வர நன்மையுண்டு. இவ்வாண்டு சிறப்பாக இருந்திட 27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து,  அதனை தங்கள்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்பு அதனை கண்மாயில், ஏரியில், ஆற்றில் போடவேண்டும். (கடலில், கிணற்றில் போடக்கூடாது).

………………………………………………………………………………………………………………………

 

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே!
குரு பகவான் 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 12-ல் வருகிறார். அதனால் விரயத்தை ஏற்படுத்துவார் என நீங்கள் பயம்கொள்ளக்கூடாது. குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்து 5-ஆம் பார்வையாக தனுசு வீட்டைப் பார்க்கிறார். எந்த கிரகம் தன் சொந்தவீட்டைப் பார்க்கிறதோ அதனால் நன்மையுண்டு. தீமைகள் ஏற்படாது என்றாலும், கன்னி ராசி அன்பர்கள் பொருளாதாரத்தில் மிகவும் சிக்கனத்தைக் கையாளவேண்டும். உடல்நலத்தைக் காப்பாற்ற நல்ல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரத்துக்கென்று மெடிக்கல் ‘ஷாப்பில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இறையருள் உள்ளவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை. மற்றவர்களுக்கு கெடுதல் செய்துவருகிறவர்கள் மட்டுமே விரய ஸ்தானத்தில் உள்ள குருவால் விரயத்தைச் சந்திப்பார்கள். பொருளாதாரச் சிக்கல் வராமலிருக்க சிக்கனம் ஒன்றே வழி. யாரிடமும் காரியங்களை நடத்த உதவுகிறேன் என்று வாக்கு கொடுக்காதீர்கள். பணவரவில் மந்தம் இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்கள் உங்களுடன் நேசமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். சொத்துப் பிரிவினையில் உள்ள பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். அரசு ஊழியர்கள் இடமாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. விரும்பி இடமாற்றம் வேண்டினால் வம்புகள் வந்துசேரும். தூரதேசப் பயணம் சென்றவர்கள் கூடுதலான லாபத்தையடைந்து குடும்ப சீர்திருத்தங்களைச் செய்வார்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவிகளை அடைவார்கள். பிரிந்து வாழ்ந்துவரும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வாகன வசதிக்குக் குறைவில்லை. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிரிந்துசென்ற உங்கள் மகன் தாய், தந்தையரைக் காண வந்துசேர்வார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவங்கள் உங்களைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும். அயல்நாடு சென்றுள்ளவர்களில் ஒருசிலர் திட்டமிட்டபடி வேறு நாடுகள் செல்வார்கள். தாய்- தந்தையர், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா12-ல் அமர்ந்துள்ள குருபகவான், கேது சாரம் பெற்றுவரும் இந்த நேரத்தில் வீடு, மனை, பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். எப்போதும் நீங்கள் ஒரேபோக்கில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. புதிய நபர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்கக்கூடாது. தெய்வ தரிசனத்திற்காக கூடுதல் தொகையை செலவுசெய்வீர்கள். விரய குரு வந்துவிட்டதே என்று கவலை வேண்டாம். உங்களை விரயம் செய்ய வருகிறவர்கள் அவர்களே விரயத்தையடைந்து உங்களைவிட்டு ஓடிவிடுவார்கள். முந்தைய கால சேமிப்பு இப்போது உங்களுக்குக் கைகொடுக்கும்.24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலாஅந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு லாபம் ஏற்படும். தொட்ட காரியம் அனைத்தும் துளிர்விடும். கடந்தகாலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் உங்களுக்கு லாபகரமாக அமையும். உடல்நிலையும் சீராகும். பொருளாதார வகையில் இருந்துவந்த தட்டுப்பாடுகள் நீங்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில சிரமங்களை நீங்கள் அடையநேரும். உடன்பிறந்தவர்கள் சொல்லும் கருத்துகளை நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்து வதற்காக சில கருத்துகளை அவர்கள் சொல்வார்கள். தொழிலதிபர்கள்- தொழிலாளி உறவில் விரிசல் எதுவும் வராது.28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலாஇப்போது நீங்கள் எதிர்பாராத வகையில் பொருளாதார உயர்வு ஏற்படும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் சீராக இருக்கும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலை அடைவார்கள். ஒருசிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வை அடைவார்கள். தொழிலாளிகள் பேச்சுவார்த்தை மூலம் நிலுவை சம்பளத்தை பெறுவார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கூடுதல் வருமானம் உண்டு. தொட்ட காரியம் அனைத்திலும் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்தக் காலகட்டத்தில் அரசுத் தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப் பவர்கள் வெற்றி என்ற செய்தியைக் கேட்பார்கள். மேலும் விரும்பிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தாய்- தந்தையர் உடல்நலன் கருதி மேற்கொண்ட சிகிச்சை சிறப்பாக அமையும். அவர்கள் உடல்நலம் சீராக அமையும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். அரசாங்க வேலையிலுள்ளவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வை அடைவார்கள். கூடுதல் வருவாயையும் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் எந்த நிபந்தனையுமின்றி ஒன்றுசேர்வார்கள். கூட்டுத் தொழில் செய்யும் ஒருசிலர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலை சீராகும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

இப்போது நீங்கள் மிகவும் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கா தீர்கள். புதிய தொழில் விருத்தி ஏற்படும். தேவைக்கு அதிகமான பணவசதியைப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் ஜாமீன் போடும்படி உங்களை வற்புறுத்துவார்கள். ஜாமீன் போடாதீர்கள். போட்டால் நீங்கள் தான் அந்தத் தொகையைக் கட்டவேண்டிய சூழல் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். அவர்கள் தொழில் செய்யும் இடத்திலும் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். கணவன்-மனைவி உறவில் விரிசல் வராது. மனைவியின் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரையிலும் குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் புத்துணர்வோடு செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் தேவை பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த குளறுபடிகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் சொத்துப் பிரச்சினைக்காக ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். தாய்- தந்தையருக்கு செய்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். காதலர்கள் எண்ணம் கைகூடும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவு செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். விரய குரு இப்போது உங்களுக்கு லாபத்தைத் தரும் குருவாக இருப்பார்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

இப்போது பிள்ளைகள் வழியில் செலவுகள் கூடுதலாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கமாட்டார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படாது. தன விரயங்கள் ஏற்படும். எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். வெளிநாடு செல்ல நினைத்த வர்கள் திட்டமிட்டபடி செல்வதில் பிரச்சினை ஏற்படும். எனவே தாமதித்து பயணத்தைத் தொடங்கவேண்டும். ஆண்களில் இரண்டாம் தாரம் கட்டுபவர்கள் பாடு திண்டாட்டம். நல்ல மனைவி அமைவது கஷ்டம். வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். விவசாயிகள் விளை நிலங்களில் நல்ல மகசூலைப் பெறுவார்கள். ஒருசிலரின் தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் கூடுதலாகும். தொழிலதிபர்கள் அரசாங் கத்தில் எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். நல்ல வரனாகத் தேர்வு செய்யவேண்டும்.

அரசு ஊழியர்கள்

அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளிடம் ஒத்துப் போகின்ற மனப்பக்குவம் வரவேண்டும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் வருவதில் தாமதமாகும். இப்போது, நீங்கள் கடைப்பிடிக்கும் பொறுமை யால் உங்களுக்கு ஆண்டு முடிவில் நன்மைகள் வந்துசேரும். கையூட்டுப் பெறுகின்ற அரசு ஊழியர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். காவல்துறை நடவடிக்கை வரலாம்.

வியாபாரிகள்

கொள்முதல் செய்வதைக் குறைத்துச் செய்யவேண்டும். வியாபாரம் மந்தமான நிலையில் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிதாக கிளை துவங்க போட்ட திட்டம் இழுபறி யாகும். வாகனங்களில் பழுது வந்துநீங்கும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கிட எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். அரசாங்க சலுகைகளும் கிடைக்கும். தொழிலாளர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். கதவடைப்பு போன்ற நிலைகள் உருவாகலாம். நீங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகளைக் கொடுத்துவிடவேண்டும். அதனால் உற்பத்தி பெருகும். தொழிலாளர் களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்சினை, வேலைபார்க்கும் இடத்திலும் பிரச்சினை என்ற நிலை ஏற்படலாம். எனவே தொழிலாளர்கள் வேலைசெய்வதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.

பெண்கள்

பெண்களைப் பொறுத்தவரையில் இந்த குருப்பெயர்ச்சியில் கூடுதல் வேலைப்பளுவை சந்திப்பார்கள். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளாமல் மாமியார், மருமகள் சண்டை வரலாம். எனவே எதையும் யோசித்துப் பேச வேண்டும். மாமியார் விட்டுக்கொடுப்பது சுலபம். மருமகள் விட்டுக் கொடுப்பது கஷ்டம். புதிய பொன், பொருள், ஆபரணம், இடச்சேர்க்கை உண்டு. உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருக்க  மாட்டார்கள். எனவே அவர்களுடன் நெருக்கமான உறவைத் தவிர்க்கவேண்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் ஆவணிக்குமேல் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி நேசம் குறையாது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.

மாணவர்கள்

தொழிற்கல்வி பயில்பவர்கள் புதிய ஆராய்ச்சிகளைச் செய்து வெற்றிபெறுவார்கள். அவர்களது கண்டுபிடிப்புக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவர்கள் கணக்குப் பாடத்தை மிகவும் கவனமாகப் படிக்கவேண்டும். கணக்குப் பாடம் ஒன்றுதான் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். மற்ற பாடங்களில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேற்படிப்புக்காக எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு பொற்காலம். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். சினிமாவில் ஒதுக்கி வைக்கப்பட்டவர் களுக்கு மீண்டும் வாய்ப்புகள் கைகூடி வரும். இப்போது நீங்கள் கால்ஷீட்படி பணியைச் செய்தால் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள். பொதுமக்களால் பாராட்டப்படுவீர்கள். குறைந்த செலவு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். நடிக்க வாய்ப்புத் தேடி அலையும் நபர்கள், புதிய வாய்ப்புகளைப் பெறு வீர்கள். முதல் படமே வெற்றிப் படமாக அமையும். போட்டி பொறா மைகள் உண்டு. ஆனால் குலதெய்வ அருளால் அவை விலகிச்செல்லும்.

விவசாயிகள்

இந்த ஆண்டில் விவசாயத்தில் நல்ல மகசூலைப் பெறுவார்கள். விவசாயத் துறையினர் சொல்லும் புதிய வழிமுறைகள் விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கடன் தொல்லைகள் குறையும். கானல் நீராய் இருந்த நிலுவைத் தொகைகள் நீங்கள் கேட்காமலே வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடி வரும். அயல்நாடுகளில் உள்ள பிள்ளைகள் உங்களுக்கு பணத்தை அனுப்பி, சொத்துக்களை மேலும் வாங்குவார்கள். நிலம், மாடு, கன்று, பால் பாக்கிய விருத்திக்கு குறைவில்லை.

அரசியல் பிரமுகர்கள்

உங்கள் செயல்கள் பொதுமக்களால் பேசப்படும். புகழ் கூடும். தலைமை இவர்களை கவனித்து புதிய பதவிகளைத் தருவார்கள். அரசியலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

குரு பகவான் விரயத்தில் வருவதால் தொல்லைகள் அதிகமில்லை. குரு இருப்பது உங்கள் ராசிக்கு நட்பு வீடு. எதிலும் நிதானித்துச் செல்ல வேண்டும். கணவன்-மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பொருளாதார உயர்வுண்டு. செய்யும் தொழிலில் வருமானக் குறைவு வராது. எல்லா வசதிகளும் தேவைகளும் பூர்த்தியாகும். 80 சதவிகித நன்மையுண்டு.

ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:

இப்போது உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் பிற்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு வேலையும் ஒருசிலருக்கு கிட்டும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். கொடுமைக்கார மாமியார்கள் இறைவனின் தண்டனையை அடைவார்கள். எப்போதும் நிதானமாகச் செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையவேண்டும். 75 சதவிகித நன்மையுண்டு.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

அரசு வேலை தேடுபவர்களுக்கு, அரசுப் பணி கிடைக்கும் நேரமிது. உடல்நிலையில் பாதிப்பு எதுவுமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருபகவான் அருளால் நல்ல ஆண் வாரிசுகளை அடைவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. தொழில் சிறப்பாக நடக்கும். கூடுதல் வருவாயும் கிட்டும். தூரதேசப்பயணம் கைகொடுக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். 70 சதவிகித நன்மையுண்டு.

பரிகாரம்

குருபகவான் 12-ல் அமர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் விரயங்கள் எதுவும் வராமலிருக்க வாரந்தோறும் அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவது நல்லது.  27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ள வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து வர நன்மைகள் உண்டு.

………………………………………………………………………………………………………………………..
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் வருகின்றார். எனவே இந்த வருட குருப்பெயர்ச்சிக் காலம் முழுவதும் நன்மையான பலன்களை அடையலாம். இதுவரை தொல்லை கொடுத்துவந்த உறவுகள் விலகிச் செல்வார்கள். மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட அன்பர்கள் மேலும் சிகிச்சை தொடருமோ என்று பயந்த நிலை மாறும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடந்த காலத்தில் கைகூடாத உங்கள் எண்ணங்கள் அனைத்தும் இப்போது காரிய வெற்றியாக மாறும். ஒவ்வொரு நிலையிலும் உயர்வான நிலைப்பாட்டை நீங்கள் அடைவீர்கள்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். இப்போது உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். தாய்- தந்தையர் உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் குறையும். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும். சகோதரர்கள் மட்டும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படமாட்டார்கள். சகோதாரர்கள் உங்களைச் சுரண்டிச்செல்ல திட்டமிடுவார்கள். எனவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அண்டை, அயலாரிடம் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் நன்மையைச் செய்யும். பாக்கிகள் யாவும் வந்து சேரும். இதுவரை குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியம் யாவும் கைகூடும். நல்ல வரன்கள் அமையும். வாகன வசதிகள் கூடும். ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடிபோவார்கள். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த நன்மைகளும், கடனும் வந்துசேரும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொற்காலம்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நல்ல பலன்களாக நடக்கும். உடல்நிலை சீராகவே இருக்கும். முன்புபோல மருத்துவச் செலவுகள் வராது. நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். அண்டை, அயலார் உறவில் விரிசல் வராது. விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வீட்டு வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். தொழிலதிபர்கள், புதிய பங்குதாரர்கள் வரவால் அதிக லாபம் பெறுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்டகாலமாக குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் உடன்பிறந்த சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இப்போது வெளிநாட்டுத் தொடர்புகள் கூடும். அந்நிய நாடு செல்ல நினைத்தவர்கள் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். உடல்நிலை சீராகவே இருக்கும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவுகள் இருக்கும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவர போட்ட திட்டம் நிறைவேறும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். பணவசதிக்கு குறைவில்லை. ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு விலகிச்செல்வீர்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் செய்யும் காரியமனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உடல்நிலை எப்போதும் போல் சீராகவே இருக்கும். அதேசமயம் வரவைவிட செலவு கூடுதலாக இருக்கும். எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வருவாய் கூடுதலாகும். வரவேண்டிய பதவி உயர்வு வந்துசேரும். ஊதிய உயர்வும் கிட்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஒரு சிலர் இரட்டைக் குழந்தை பெறுவார்கள். குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த மனைவி தன் நிலையறிந்து, எல்லாருக்கும் நல்லவராகச் செயல்படுவார். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து சேரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியம் தடை யின்றி முடியும். பொதுமக்கள் சேவையில் உள்ளவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டிய பாகத்தை பிரித்துக் கொடுப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொல்லை கொடுத்துவந்த சகோதர- சகோதரிகள் இப்போது உங்களுடன் நேசமாக இருப்பார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வும், பணி இடமாற்றமும் வந்துசேரும். தற்காலிகப் பணிநீக்க தண்டனையை அடைந்தவர்கள், மீண்டும் பணியில் சேர்ந்திட வாய்ப்புகள் கூடிவரும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அதேபோல வியாபாரிகளும் கூடுதல் லாபத்தை அடைவார்கள். உங்களின் இளைய பிள்ளைகளை கண்காணித்து வரவேண்டும். இல்லையெனில் கெட்ட பெயர் வந்துசேரும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

நண்பர்கள் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். உடல்நிலையில் எந்த பாதிப்பும் வராது. காரிய பலிதம் உண்டு. கான்ட்ராக்ட் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரத்தில் வண்டியில் பயணம்செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக பிரிந்துவாழ்ந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கடன் தொல்லைகள் குறையும். ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு கைகூடும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். குரு வக்ரம் பெற்றுள்ள இந்த நேரத்தில் திருமணப் பேச்சுகள் கூடாது. நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

செய்யும் தொழில்கள் அனைத்தும் கைகூடி வரும். கூடுதல் லாபத்தையும் அளிக்கும். அரசாங்க ஊழியர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் இப்போது உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசுப் பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்தித்த நிலை இப்போது மாறும். உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் நீண்டகாலமாக விற்பனையாகாத உற்பத்திப் பொருட்களை விற்று கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். எதிர்பார்த்தபடி காரிய அனுகூலம் கிட்டும். ஒருசிலர் படிப்பிற்காக வெளிநாடு சென்றுவருவார்கள். பந்தயக் காளைகள் வளர்ப்போர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சிலர் கடும் மருத்துவச் செலவுகளை சந்திக்க நேரும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் துவங்குவார்கள். ஒரு சில மாணவர்கள் அயல்நாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

இப்போது உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பெற்றோர் வழியில் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். அவர்களது உடல்நலனும் சீராகும். நீண்டகாலமாக குழந்தையின்றி இருந்தவர்கள் தாய்மை அடைவார்கள். கணவன்- மனைவி உறவில் ஒற்றுமை கூடும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். ஒருசிலர் பதவி உயர்வுடன் மாறுதலை அடைவார்கள். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் உயர் கல்விக்கு கேட்ட கல்விக்கடன் வந்துசேரும். படித்த இளைஞர்கள் வெளிநாடு சென்று பொருளீட்ட போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் நீண்டகாலமாக முடிவுக்கு வராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொல்லை கொடுத்துவந்த சகோதரிகள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மலைப்பிரதேசம் சென்றுவர வாய்ப்புகள் அதிகம். நீண்டகாலமாக முடிவுக்கு வராத சொத்துப் பிரச்சினையில் சிலர், சுமுக முடிவுக்கு வந்துவிடுவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக மாறும். விவசாயிகள் தன, தான்ய விருத்தி, மாடு, கன்றுகள், பால் பாக்கிய விருத்தியுடன் வாழ்வார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் கூடுதல் லாபம் உண்டு. அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில், உடன் பணிபுரிகின்றவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஒருசிலர் வீடுவாங்க போட்ட எண்ணம் ஈடேறும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தீர்த்த யாத்திரை சென்று வரும் வாய்ப்பு ஒருசிலருக்கு கைகூடும். கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். பிரிந்துசென்ற பிள்ளைகளும் பெற்றோரைத் தேடி வருவார்கள்.

அரசு ஊழியர்கள்

உங்கள் மேலதிகாரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தள்ளிப்போன பதவி உயர்வு வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் முயற்சிப்படி அரசாங்க வேலை வந்துசேரும். புதிதாக வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கு வேண்டிய கடனும் வந்துசேரும். வேலைபார்க்கும் இடத்திலுள்ள பெண்களிடம் நீங்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். பெண்களின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இல்லை. உபரி வருமானங்கள் வந்துசேரும். திருமணமாகாத ஆண்- பெண் ஊழியர்களுக்கு திருமணம் தாமதமின்றி நடக்கும்.

வியாபாரிகள்

நீங்கள் கொள்முதல் செய்த சரக்குகள் அனைத்தும் விற்பனையாகும். உங்களுக்கு போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாகும். வெளியூர்களில் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்களை நீங்கள் அடைவீர்கள். வீட்டில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சேமிப்பு உயரும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலாளர், தொழிலதிபர்கள் ஒற்றுமை கூடும். தொழிலதிபர்கள் புதிதாக தொழிற்சாலைகள் அமைப்பார்கள். கூட்டாளிகள் நல்லவர்களாக சேர்வார்கள். கதவடைப்பு போன்ற நிலை எதுவுமில்லாமல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பி.எஃப் நிலுவைத் தொகை வந்துசேரும். கூடுதலான போனசும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்

பெண்களின் மனக்குறைகள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். மாமியார், மருமகள் ஒற்றுமை உண்டு. கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பொன், பொருள் சேர்க்கை விருப்பப்படி நடக்கும். பொருளாதாரக் கஷ்டம் இருக்காது. எந்த குழந்தை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதன்படி குருபகவான் அருளால் கிடைக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஒருசிலருக்கு தாய்வழி சொத்துக்கள் வந்துசேரும். வீடு கட்டிமுடிக்காமல் இருந்த நிலைமாறி, இப்போது கட்டிமுடிப்பீர்கள். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொற்காலம்.

மாணவர்கள்

பொறியியல் படிப்பிலுள்ள மாணவர்கள் புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பார்கள். அந்தக் கருவிகள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களின் மதிப்பும் பொருளாதாரமும் உயரும். நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் உங்களை பாராட்டும். கேம்பஸ் செலக்ஷனில் செலக்ட் ஆவீர்கள். சிலர் படிப்பு முடிந்தவுடன் வெளிநாடு செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து மெரிட்டில் தேர்ச்சிபெறுவார்கள். நினைத்த பட்டப் பிரிவுகள் கிடைக்கும்.

கலைஞர்கள்

இப்போது வாய்ப்புகளைத் தேடி நீங்கள் செல்லவேண்டியதில்லை. வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்தவர்கள் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வார்கள். மற்றபடி தாங்களே விரும்பிய பெண்ணை மணம் செய்தவர்கள் அவர்களால் தொல்லைகளை அனுபவிப்பார்கள். ஒருசிலர் நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கும். போட்டியாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.

விவசாயிகள்

இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். விளைச்சலும் கூடுதலாகும். மாடு, கன்று, பால் பாக்கிய விருத்திகள் உண்டு. சொத்துகளை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். பணப்பயிர்கள் பயிரிடுவோர் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புகையிலை விவசாயம் செய்கின்றவர்கள் இந்த ஆண்டு அமோக விளைச்சலை அடைவார்கள். எதிர்பாராத லாபம் கிடைக்கும். இப்போது உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். பிள்ளைகளின் வழியில் எதிர்பார்த்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல் பிரமுகர்கள்

குரு பகவான் 11-ல் வரும் இந்த காலகட்டத்தில் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு உயரும். மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெறுவார்கள். நீங்கள் செய்கின்ற பொதுச் சேவைக்கு மக்கள் நல்ல அங்கீகாரத்தைத் தருவார்கள். எதிர்வரும் தேர்தல்கள் உங்களுக்கு சாதகமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. எனவே அரசியல் பிரமுகர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்களால் உங்கள் பதவிக்கு சிரமம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குருபகவான் உங்கள் அருகில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியைப் பெறுவீர்கள். அரசியலில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். உடல்நலன் சற்று ஏற இறங்க இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று, சேவை செய்வதில் காலம் முழுவதும் ஓடுமென்றாலும் உடல்நிலையில் சற்று கவனத்தைக் கொள்ள வேண்டும். 90 சதவிகித நன்மையுண்டு.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் சொத்துக்களை வாங்கிச் சேர்க்கும் காலம். பொன்னும் சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திட்டப்படி வெளிநாடு செல்வீர்கள். சம்பளம் கூடுதலாகவே கிடைக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெற்றோர்கள் சம்பந்தமாக மருத்துவச் செலவுகள் கூடுதலாகும். அவசியத்தை அறிந்து மருத்துவம் செய்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். 90 சதவிகித ஆதாயம் கிடைக்கும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

இப்போது உங்களுக்கு இருந்து வந்த பிணி, பீடைகள் நீங்கும். எல்லா காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். கான்ட்ராக்ட் தொழில் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறு விபத்துகளை சந்திக்க நேரிடலாம். எனவே வாகனங்களில் மெதுவாகச் செல்லவேண்டும். கூட்டுத் தொழில் சிறப்பான லாபத்தைத் தரும். 80 சதவிகித லாபமுண்டு.

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வர கூடுதல் லாபம் பெறலாம். ஆலங்குடி குரு பகவானையும் தரிசித்து வர லாபங்கள் பெருகும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

……………………………………………………………………………………………………………………………..

 

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி அன்பர்களே!

கோட்சாரப்படி, குரு 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 10-ல் உலா வருகிறார். குரு 10-ல் வந்தால் சிவபெருமான் பட்ட சிரமத்தை அடைவார்கள் என்று ஜோதிட நூல்களில் உள்ளது. அதாவது சிவபெருமானுக்கு 10-ல் குரு வந்தபோது அவர் திருவோடுகூட இல்லாமல், மண்டையோட்டில் இரந்துண்டு வாழ்ந்ததாகக் கூறுவார்கள். பூவுலகில் மக்களுக்கு அந்த அளவுக்கு கஷ்டத்தை இறைவன் தரமாட்டார். சிவபெருமானைப் பொறுத்த அளவில் கஷ்டத்தை அனுபவிப்பாரே தவிர, தான்பட்ட கஷ்டங்களை மற்றவர்களுக்குத் தரமாட்டார். இப்போது நீங்கள் எந்த காரியத்திலும் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்கள் தொந்தரவு கூடுதலாகும். எனவே நீங்கள் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். அவர்களின் மறைமுக செயல்பாடுகளை கவனித்து நீங்கள் செயல்பட வேண்டும். நண்பர்கள் சகவாசத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை மோசடி செய்வதில் ஆர்வமாக இருப் பார்கள். அவர்களின் முகஸ்துதி பேச்சுக்கு மயங்கிவிடக்கூடாது. சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை தீர்வுக்கு வரும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். உங்களின் செயல்பாடுகளை அவர்களிடம் சொல்லாதீர்கள். உங்கள் சொந்த பந்தங்களாலும் பிரச்சினைகளை அனுபவிக்க உள்ள நேரம். அசதியும், ஆயாசமும் குறுக்கிடும். கட்டடம், வீடு வகையில் கூடுதல் செலவுகள் வரும். நிதானமான போக்கைக் கடைப்பிடித்தால் சிரமத்தை வெல்லலாம். உங்களின் காரியங்கள் அனைத்திலும் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

தொழிலதிபர்கள், சொந்த வியாபாரம் செய்பவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். சொந்தத் தொழில்புரிபவர்களும், கூட்டாக தொழில் செய்கின்றவர்களும், வெளிநாடு சென்று தொழில் செய்து லாபம் சேர்க்கின்றவர்களும் இந்த குருப்பெயர்ச்சியில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேரும். வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். நினைத்த காரியங்கள் கைகூடும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் முடிவில் உங்களுக்கு வெற்றியாகும். எனவே அச்சமின்றி வேலை களைச் செய்யவேண்டும். இந்த குருப்பெயர்ச்சி காலத்தை கஷ்டமானதாக நினைக்கக் கூடாது. மற்றவர்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வைப்பார் குருபகவான். உறவுகளில் எத்தனை பொல்லாத மனிதர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் உங்களது அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். ஆதாயமும் கிட்டும். கவலைகள் மறந்து சிரிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் நன்மைகள் நடக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் வெளிநாடு செல்லலாம். நீங்கள் உறவுகளிடம் சிரித்து வாழ்வதை விட சிந்தித்து வாழவேண்டும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக தொல்லை கொடுத்துவந்த கடனை படிப்படியாக அடைப் பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக் குறைவு இருக்காது. பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். தாய்- தந்தையர் உதவியாக இருப்பார்கள். ஒருசிலர் வேலைசெய்யும் இடத்தில் பாராட்டு பெறத்தக்க காரியங்களைச் செய்து சாதனை செய்வார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

குடும்பத்திலுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்துவந்த இறுக்கமான மனநிலை மாறும். உதவியாகச் செயல்படுவார்கள். திருமணமாகாத பிள்ளைகளுக்கு, உறவுகளிலேயே வரன் வந்துசேரும். அப்படி செய்யும்போது அவர்கள் பழைய பகைமையைத் தீர்க்க பெண் எடுக்கிறார்களா என்று யோசித்துச் செய்யவேண்டும். வாக்கு ஸ்தானம் வலுவாகி உள்ளது. ஜோதிடம், குறி சொல்பவர்கள் வாக்கு பலிதத்தால் புகழ்பெறுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. மனைவியின் உடல்நிலையில் மட்டும் ஏற்ற இறக்கம் காணப்படும். அவருக்கு நல்ல வைத்தியம் செய்யவேண்டும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை அடைவார்கள். உடன்பிறந்தவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுவீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பணிபுரிய வேண்டும்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

செய்யும் தொழிலில் நல்ல விருத்தி ஏற்படும். உடலில் பிணி, பீடைகள் அகலும். புதிய திட்டங்கள் தீட்டி அதன்படி தொழில்செய்வீர்கள். தொழிலாளர்கள் ஒற்றுமை ஏற்படும். அவர்களால் உற்பத்தி பெருகும். லாபமும் கூடும். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தையில்லாத ஒருசில தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் கல்விச் செலவு கூடும். இப்போது நீங்கள் மிகவும் வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல உதவிகள் கிட்டும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக அடைபடாத கடனை இப்போது அடைத்துமுடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை முடிவுக்கு வரும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சியால் மட்டுமே காரியங்கள் கைகூடும். குரு 10-ல் உள்ள நிலையில் காரியங்கள் தாமதமாக வெற்றியைத் தரும். பிள்ளைகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகலாம். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு பிணக்குகள் வந்துசெல்லும். வாகனம் செலுத்துபவர்கள் வேகத்தை குறைத்து நிதானமாகச் செல்லவேண்டும். சிறு விபத்துகள் ஏற்படலாம். உயிர்ச் சேதம் எதுவும் வராது. பேச்சில் கடுமையைக் குறைத்து, கனிவாகப் பேசி காரியங்களை சாதிக்கவேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக முயற்சிகளுக்குப் பின்பு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் அவர்களின் போக்கை கண்காணிக்கவேண்டும். வெளிநாடு போக போட்ட திட்டம் தாமதமாகும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

உங்களுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அளவோடு பழகவேண்டும். குறிப்பாக கறுப்புநிறம் உள்ளவர்கள் உங்களுக்கு எதிராக செயல் படுவார்கள். அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் ஒருசிலர் நல்ல பதவிகளை அடைவார்கள். சிக்கனமாக வாழ்ந்து குடும்பச் செலவுகளைப் பூர்த்திசெய்யலாம். வழக்குகள் சாதகமாக உள்ளன. வக்கீல் தொழில் புரிபவர்கள் புதிய வழக்குகளை எடுத்து நடத்துவார்கள். கூடுதல் லாபமும் வந்துசேரும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு கூடும். தொழிலாளர்- முதலாளி ஒற்றுமை சுமுகமாகும். ஒருசில இளைஞர்கள் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பை பெறுவார்கள். திருமணப் பேச்சு கைகூடி வரும். விவசாயிகள் புதிய பயிர்களை விதைத்து கோடை காலத்தில் பலன்களை அடைவார்கள். புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். எதிர்பார்த்த அரசாங்க கடன் வந்துசேரும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில், இதற்கு முன்னர் இருந்துவந்த பணமுடைகள் நீங்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உதவிகள் உண்டு. சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். வழக்கை கைவிட்டு, பேச்சு வார்த்தைமூலம் சொத்துப் பிரிவினையை சுமுகமாக செய்து கொள்வார்கள். தொழில் துறைகளில் இதுவரை தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் சற்று தாமதமாகும். ஒரு சிலர் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளை அடைவார்கள். அதற்கான மருத்துவமும் செய்வார்கள். கூடுதல் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையைப் பேணவேண்டும். அருகில் உள்ளவர்களிடமும் உங்கள் மனக்குறைகளைக் கூறக்கூடாது. ரகசியம் காக்கவேண்டும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

இப்போது தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்களாக அமையும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாக வரும். எப்போதும் வேலைப் பளுவை சந்தித்த உங்களுக்கு இப்போது அது குறையும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலையும், பதவி உயர்வையும் அடையலாம். பணிபுரியும் இடத்தில் அனைவரும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்பார்கள். வீடுகட்ட முன்பணம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுண்டு. வியாபாரிகள் எதிர்பார்த்தபடி கொள்முதல் சரக்குகளில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். மனைவியின் நேசம் கூடுதலாகும். மனைவியின் யோசனைகள் பயனுள்ளதாக அமையும். ஆண் வாரிசு இல்லாத தம்பதி யர்கள் ஆண் வாரிசை அடைவார்கள். பிரிந்த மகன் இப்போது பெற்றோரைத் தேடிவருவார்.

அரசு ஊழியர்கள்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் உள்ளார். எனவே வேலைப்பளு கூடுதலாகும். வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் மனக் குறைகளை யாரிடமும் சொல்லாதீர்கள். அவர்கள் உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் கோள்சொல்வார்கள். அதிகாரிகள் கெடுபிடியாகவே இருப்பார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகையும், பதவி உயர்வும் தாமதமாக வந்துசேரும். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்களில் ஒருசிலர் சிபாரிசு இல்லாமலேயே மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் வீட்டில் தடையின்றி நடக்கும்.

வியாபாரிகள்

வியாபாரிகள் இப்போது கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர்வார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். வியாபாரிகள் திட்டமிட்டபடி புதிய கிளைகளைத் துவக்குவார்கள். நல்ல வேலையாட்களும் அமைவார்கள். ஸ்டாக் உள்ள சரக்குகள் அனைத்தும் வியாபாரமாகிவிடும். சொசைட்டி மூலம் வியாபாரம் செய்யும் அன்பர்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுவது நல்லது.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை அடைவார்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். தொழிலாளர்கள் – தொழிலதிபர்கள் ஒற்றுமை சீராக இருக்கும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் தடையின்றி வந்துசேரும். பேச்சுவார்த்தைக்கு வேலையில்லை. தொழிலாளிகளின் வேலைப்பளு கூடுதலாகும். உடன் பணிபுரியும் பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாகவே செயல்படுவார்கள். உங்கள் வீட்டில் நீங்கள் திட்ட மிட்டபடி சுபகாரியப் பேச்சுகள் கைகூடி வரும். முதலாளிகள் நூதனமான பொருட்களைத் தயாரிப்பதற்கு முனைந்து வெற்றியும் பெறுவார்கள்.

பெண்கள்

பெண்கள் இப்போது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தொட்ட காரியம் அனைத்தும் சீராகும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மாமியார் – மருமகள் புரிந்து நடப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். ஆடம்பரப் பொருட்கள், பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. விலகி வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும். குழந்தைகள் பிறந்து குடும்பத்தில் யோகத்தை அள்ளித் தரும். வாழ்க்கையில் எண்ணியபடி புதியவீடு கட்டுவார்கள். ஒருசிலருக்கு அரசாங்க பதவி தேடிவரும். கணவன்- மனைவியிடையே உள்ள பிரச்சினைகள் தீரும்.

மாணவர்கள்

மாணவர்கள் மந்தகதி மாறி கல்வியில் உயர்வார்கள். சக நண்பர்களும் கூட்டாளிகளும் உங்கள் படிப்புக்கு உறுதுணையாக இருப்பார்கள். திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். வேண்டிய கல்விக் கடனும் உடனடியாகக் கிடைக்கும். தொழிற்கல்வியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். கல்வி முடிந்த பின்பு ஒருசிலர் அயல்நாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறை வேறும். காதலில் ஈடுபடும் மாணவர்கள் கஷ்டத்தை அடைவார்கள். தேவையற்ற சண்டை, சச்சரவு, மருத்துவச் செலவுகள் வரும். எனவே காதலை விலக்கி, கல்வியில் உயரவேண்டும்.

கலைஞர்கள்

வீட்டில் முடங்கிக் கிடந்த உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதார நிலையும் உயரும். பிரபலமான நடிகர்களில் ஒருசிலர் ஹோட்டல் தொழில் நடத்த முன்வருவார்கள். அதில் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். கலைமாமணி விருது எதிர்நோக்குபவர்களுக்கு வந்து சேரும். அரசாங்க சலுகை உண்டு. பட அதிபர்கள் வங்கிக் கடன் பெற்று படத்தைத் தயாரிப்பார்கள். அது வெற்றிப்படமாக அமையும்.

விவசாயிகள்

இந்த வருடம் முழுவதும் விவசாயத்தில் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். பணப் பயிர்களைப் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். புகையிலை பயிரிடுபவர்கள் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, கூடுதல் உற்பத்தியைப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். விவசாய நிலம் சம்பந்தமாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாகும். இப்போது நீங்கள் கிணறு, போர் போட்டு எல்லா பலன்களையும் அடைவீர்கள். நல்ல ஊற்று கிடைக்கும். மற்றவர்கள் சொத்துகளை வாங்க போட்ட எண்ணம் நிறைவேறும்.

அரசியல் பிரமுகர்கள்

அரசியல் பிரமுகர்கள் மிகவும் தன்னடக்கத்துடன் செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையலாம். தலைமையால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக, எதிலும் வேகமாக செயல்படக் கூடாது. அரசியல் எதிரிகள் அதிகம் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு எதிராக உள்வேலைகளைச் செய்வார்கள். எதிலும் தீர யோசித்து முடிவுசெய்ய வேண்டும். அதிகமான முயற்சிக்குப் பிறகே சிறிய பதவிகளையாவது பெறமுடியும். அரசியல் பிரமுகர்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:

தொழில் துறைகளில் உள்ளவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் காலதாமதமாக பலிதமாகும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கூட்டுத் தொழில் புரிவோர் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், பணிமாறுதலும் கிட்டும். உடல்நிலையில் எப்போதும் மருத்துவச் செலவுகள் உண்டு. வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். விபத்துகளைத் தவிர்க்கலாம். பெற்றோர் வழியில் உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் கூடும். சிலரது பெற்றோர்கள் தேவையற்ற குழப்பங்களை குடும்பத்தில் செய்து வருவார்கள். எனவே நிதானித்துச் செல்லவேண்டும். தொழில் சிறப்பு உண்டு. வருவாயும் உண்டு. 70 சதவிகித லாபம் கிடைக்கும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஷ்டத்தையே அதிகம் கொண்டவர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் கன்னி வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதா என்று பாருங்கள். அப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்கள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி ஈரஉடையுடன் முருகனை தரிசித்து, கொடிமரத்தினருகே, “கன்னிச் செவ்வாய் தீமை மாறவேண்டும்’ என்று வேண்டி வர, அனைத்தும் சிறப்பாகும். தொழில் நடத்தி வருபவர்கள் ஓரளவு லாபத்தோடு வியாபாரத்தைச் செய்வீர்கள். தெய்வ அருளும் உண்டு. யாருக்கும் எதையும் வாக்கு கொடுக்கக்கூடாது. ஜாமீன் போடக் கூடாது. மற்றபடி தொல்லைகள் எதுவுமில்லை. 75 சதவிகித நன்மையுண்டு.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்தையும் சுய சிந்தனையுடன் செய்வார்கள். இவர்களில் ஒருசிலர் மட்டும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். மற்றவர்கள் பொருளாதார உயர்வோடு வாழ்வார்கள். கணவன்- மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்திலுள்ளவர்கள் தேவையினைப் பூர்த்திசெய்வீர்கள். ஒருசிலர் புது வீடுகட்டி குடிபோவார்கள். பூமியால் நன்மையுண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். குதர்க்கமான பேச்சுகளைப் பேசிவந்த உங்கள் பிள்ளைகள் இப்போது நல்லவர்களாக வளர்வார்கள். கல்வியில் உயர்வார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஒருசிலர் மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலுக்குச் செல்வார்கள். மாணவ, மாணவியர் டி-பார்ம், பி-பார்ம், நர்சிங் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் படிப்பு அவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்யநினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம். 70 சதவிகித லாபமுண்டு.

பரிகாரம்

ஒருமுறையாவது திருச்செந்தூர் சென்று குருபகவானையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வர கெடுதல் நீங்கி, நன்மைகள் கூடும். ஆலயம் செல்ல முடியாதவர்கள் 27 கொண்டைக்கடலை எடுத்து அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் அல்லது தொழில்கூடத்தில் வைத்துக் கொண்டால் லாபங்கள் குறையாது.

……………………………………………………………………………………………………………………………

 

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசி அன்பர்களே!

குருபகவான் 05-07-2015 முதல் 01-08-2016 வரை உங்கள் ராசிக்கு 9-ல் உலா வருகிறார். 9-ல் குரு வருவது சிறப்பு. இதுவரை தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் இனி விலகிவிடும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கூண்டுக்கிளியாக வீட்டிலேயே அடைந்துகிடந்த நீங்கள் வெகுவேகமாக காரியங்களைச் செய்வீர்கள். வெற்றிகளைக் காண்பீர்கள். நாளைய செய்திகள் இன்றே உங்களுக்குத் தெரியும். ஆழ்ந்த சிந்தனையில் அனைத்தையும் உணர்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் சிறப்பாகும். பெற்றோர்களின் மருத்துவச்செலவுகள் குறையும். கணவன்-மனைவி இடையே ஏற்பட்டு வந்த சின்னச் சின்ன சண்டைகளும் விலகிச்சென்றுவிடும். மிகவும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

வெளியூர் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் வெளிநாடு சென்று நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள். சகோதரர்கள் மத்தியில் நிலவிவந்த பிணக்குகள் தீரும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் வந்துசேரும். பலராலும் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு திட்டமிட்டபடி செல்வார்கள். வங்கியில் கேட்டபடி கல்விக்கடன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் லாபத்தை அடைவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். ஒருசிலர் குடும்பத்தில் முதலில் பார்த்த வரனுக்கு தங்கள் பிள்ளைகளைக் கொடுப்பார்கள். குடிவெறியோடு சுற்றிவந்த கணவர் இந்த குருப் பெயர்ச்சி முதல் ஒழுக்கமானவராக மாறுவார். மணம் முடிக்காத பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். மாமியார் கொடுமையால் துன்பப்பட்ட பெண்கள் இப்போது அவர்களின் தொல்லையிலிருந்து விடுபடுவார்கள். வெளிநாடு சென்று நீண்டகாலமாக வராமலிருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். குலதெய்வக் கோவிலுக்கு இந்த முறை கண்டிப்பாக சென்று வருவீர்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தங்கள் கம்பெனியை மேலும் விரிவுபடுத்துவார்கள். கூட்டுத்தொழில் செய்துவருகிறவர்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதலும் பெறுவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிட்டும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொற்காலம்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையில் அதிகமான உற்பத்தியைப் பெறுவார்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்களைப் பெறுவார்கள். உடல்நலன் சீராகும். சின்னப்பிள்ளைபோல இப்போது துள்ளிக் குதித்து வேலைசெய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். நினைத்த காரியம் நடந்தது என்று பூரிப்பில் திளைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் திட்டமிட்டபடி நடைபெறும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். பெற்றோர்கள் வகையில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். தாயின் உடல்நிலை சீராகும். விரும்பாத சொந்தங்களை விலக்கிவிடுவீர்கள். எப்போதும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்கும். பிரச்சினைகள் எதுவுமின்றி காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிற்சாலைகளில் நவீனமான தொழிற்நுட்பங்களைக் கொண்டுவருவீர்கள். உடல்நலன் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவுவராது. பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்வோரும் லாபம்பெறுவர். நீண்டகாலமாக வீடுகட்ட போட்ட திட்டம் இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் நேசத்துடன் இருப்பார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில நினைத்தவர்கள் எண்ணம் நிறைவேறும். ஒருசிலர் அயல்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். காதலர்கள் எண்ணம் கைகூடும். வயதுவந்த பிள்ளைகளை, பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்கவேண்டும். ஒருசில பிள்ளைகள் குரு 9-ல் உள்ள இந்த நேரத்தில் தானே தன் திருமணத்தை முடிவுசெய்யலாம். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் உடல்நலக் குறைவுகள் நீங்கி மிகவும் தெம்போடு இருப்பீர்கள். நீங்கள் செய்கின்ற காரியமனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். கையிருப்பும், சேமிப்பும் கூடும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணவசதிக்கு குறைவில்லை. மாணவர்கள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். வழக்குகள் சாதகமாகும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி உயர்வுடன் மாறுதல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த ஆண்டு முடிவுக்குள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுக முடிவுக்கு வரும். பெண்கள் தாய்வீட்டிலிருந்து எதிர்பார்த்த சொத்து கிடைக்கும். நீண்டகாலமாக அடைக்கமுடியாத கடன்பாக்கிகளை செலுத்திமுடிப்பீர்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் புதிய இடம், மனை விருத்திகள் ஏற்படும். நீண்டகாலமாக வெளிநாட்டிலிருந்து வராத உங்கள் மகன் வந்துசேர்வார். பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் வரலாம். உங்கள் பிறந்த ஜாதகத்தில் குரு 8-ல் இருக்க, 40 வயதைக் கடந்த சிலருக்கு வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் உண்டு. எனவே உங்கள் உடம்பை முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அரசு ஊழியர்களின் வேலைப்பளு கூடும். வெளிநாடு சென்று வேலைசெய்ய நினைத்தவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையில் சற்று விரிசல் வரலாம். எனவே தேவையான காரணங்களுக்கு மட்டும் செலவு செய்யலாம். கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மாமியார், மருமகள் சண்டை இனி வராது. ஒற்றுமை ஏற்படும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் லாபங்கள் கூடும். லாகிரி வஸ்துகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலை சீராகும். எதையும் தைரியமாக ஏற்றுச்செய்வீர்கள். கறுப்புநிறம் உள்ளவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நரம்புத் தளர்வு உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களாக அமையும். பிள்ளைகளின் சுய ஜாதகத்தில் ராகுபகவான் 8-ல் இருந்தால் அதற்கான பரிகாரத்தை செய்து திருமண முடிவுகளைச் செய்யவேண்டும். இப்போது உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாகவே செயல்படுவார்கள். பிள்ளைகள் வழியில் இதுவரை இருந்துவந்த தொல்லைகள் மாறும். அவர்கள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். பெற்றோர்களின் மருத்துவச் செலவு கூடும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இப்போது உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அள்ளிவீசும். செல்கின்ற இடமெல்லாம் செல்வாக்குண்டு. மந்தமாக இருந்துவந்த தொழில்கள் படுவேகத்துடன் செல்லும். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். இளைஞர்கள் ராணுவம், காவல்துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். தகுதியுள்ளவர்கள் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடு சென்று வேலைசெய்ய விரும்பியவர்கள் நினைத்தபடி பயணத்தைத் தொடங்கு வார்கள். வெளிநாட்டில் இருந்துகொண்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல  வாய்ப்பும் வந்துசேரும். சிலருக்கு அந்த நாட்டிலேயே காதல் திருமணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையில் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் எண்ணம்போல் மாறுதலை அடைவார்கள். தற்காலிகப் பணிநீக்கம்போன்ற தண்டனையில் உள்ளவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த உயரதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் பேச்சில் உள்ள நாணயம், உங்களது செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கும். தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். பிள்ளை களுக்கும் குருபகவான் 9-ல் வந்திருந்தால், அவர்களை பக்குவமாகப் பேசி நடத்திச் செல்லவேண்டும். இல்லையெனில் அவர்கள் விரும்பும் இடத்துக்கு வெளியேறி விடுவார்கள். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமையில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர், வழக்கை வாபஸ் பெற்று ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கூட்டுத்தொழில் செய்கின்றவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலாளர்கள்- தொழிலதிபர்கள் ஒற்றுமையில் குறைவில்லை. வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் தங்கள் தொழிலை வெளிநாடுகளில் ஆரம்பிக்க இருப்பார்கள். அவர்கள் நிறைய தடை, தாமதங்களை சந்திக்க நேரும். எனவே யோசித்துச் செயல்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள்

எதிர்பார்த்த இடத்துக்கு மாறுதல் கிட்டும். ஒருசிலருக்கு பதவி உயர்வும் வந்துசேரும். அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். எனவே உங்கள் பணியில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். கையூட்டு பெறுகின்ற ஊழியர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருசிலர் பிடிபட வாய்ப்பு உள்ளது. பின்னாளில் உள்ள சிரமங்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகமாக இருந்தாலும், சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றிக் கிடைக்கும்.

வியாபாரிகள்

வியாபாரிகள் யோகம் உள்ளவர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் உள்ளது. வியாபாரத்துக்கு சரக்கு கிடைக்கவில்லையே என்று தேடி அலைவீர்கள். அந்த அளவுக்கு வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அதிக லாபமும் கிடைக்கும். புதிய வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சேமிப்பு உயரும். ஒருசிலரின் புதிதாக கிளை துவங்கும் எண்ணம் நிறைவேறும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். எவ்வளவுதான் பணம் வந்தாலும், நேரத்துக்கு உணவுண்ண வேண்டும். இந்த காலகாலத்தில் ஒருசிலர் வயிற்று வலி, அல்சர் தொந்தரவுகளை அனுபவிப்பார்கள்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் சுமுக உறவு கொள்வார்கள். தொழிலாளிகளும் கூடுதல் நேரம் பணிசெய்து உற்பத்தியைப் பெருக்கித்தருவார்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொழிலதிபர்களும் ஏற்பார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது, அவர்கள் நல்லவர்களா என்று ஆராய்ந்து சேர்க்கவேண்டும். வெளியிடங்களில் புதிதாக கிளைகள் ஆரம்பிக்க போட்ட திட்டப்படி, தொழிற்சாலைகளை அமைப்பீர்கள். ஒப்பந்த அடிப்படையில் உள்ள பணியாளர்களின் பணி நிரந்தரமாகும்.

பெண்கள்

பெண்கள் இப்போது புத்துணர்வோடு செயல்படுவார்கள். பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டு நன்மைகளைப்பற்றி மட்டும் சிந்திப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்களால் அதிக உதவிகள் கிடைக்காது. உபத்திரவங்கள்தான் அதிகம். எனவே உங்கள் சகோதரர்களைப் பற்றி கணவரிடம் பேசாதீர்கள். வீண் சண்டைகள் வராமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல வரன்களாக அமையும். குழந்தை பாக்கியமும் கிட்டும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விட்டுச்சென்ற மகன் இப்போது உங்களைக் காணவருவார். இந்த ஆண்டு அதிக மருத்துவச் செலவுகள் வராது.

மாணவர்கள்

காலமறிந்து படிப்பவர்கள் நீங்கள். இந்த ஆண்டு கல்வியில் உயர்நிலையை அடைவீர்கள். ஆசிரியராலும், கல்வி நிறுவனத்தாராலும் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வி பயில்கின்றவர்கள், அரியர்ஸ் இல்லாமல் பாஸ் செய்வார்கள். வெளிவட்டார நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். காதல் செய்யும் எண்ணமுள்ளவர்கள் அந்த எண்ணத்தைக் கைவிடவேண்டும். காதல்தான் உங்கள் படிப்புக்கு எதிரியாக விளங்கும். படிப்பும் பாழாகி எதிர்காலமும் பாழாகிப்போய்விடும். எனவே கல்வியில் மட்டும் கருத்தைச் செலுத்தவேண்டும். இந்த ஆண்டு கல்விக்கு ஒரு பொற்காலம். அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைஞர்கள்

உங்கள் நடிப்புக்காக கிடைக்காமல் இருந்த விருதுகள் அரசாங்கத்திலிருந்து வந்துசேரும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும். காதல் திருமணம் செய்த நடிகர்கள் தங்கள் மனைவியைவிட்டுப் பிரிய நேரும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். ஒப்பந்தப்படி படம் நல்ல முறையில் முடியும். மக்கள் பார்த்து வெகுவாகப் பாராட்டுவார்கள். அதனால் படம் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு இது பொற்காலம்.

விவசாயிகள்

எந்த பயிரைப் பயிரிட்டாலும் விளைச்சல் அதிகமாகவே இருக்கும். பணப்பயிர்கள் உங்களுக்கு இரண்டு வருட லாபத்தை ஒரே வருடத்தில் அள்ளித்தரும். பிள்ளைகள் வேண்டியதை வாங்கிக்கொடுப்பீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உங்கள் வேளாண்மை முன்னேற்றத்திற்காக அரசாங்கம் விருதுகளை வழங்கும். நல்ல வரன் அமைந்து பிள்ளைகள் சுகமான வாழ்வு வாழ்வார்கள். மாடு, கன்று, பால், பாக்கிய விருத்திகள் மேலோங்கும். ஒருசிலர் விவசாயப் பண்ணைகள் அமைத்து பலனை அடைவார்கள். புதிய விவசாயக் கருவிகளை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

அரசியல் பிரமுகர்கள்

உங்களின் நல்ல செயல்களை மக்கள் அங்கீகரிப்பார்கள். அது தலைமைவரை செல்லும். புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். பேரும் புகழும் சேர்ந்துவரும். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அரசியல் பிரமுகர்கள் விலகிச்செல்வார்கள். குரு 8-ல் இருந்த கடந்த ஆண்டு முழுவதும் இருந்துவந்த மந்தமான சூழ்நிலை மாறும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெறும் நீங்கள், குடும்பத்தை மறந்துவிடாதீர்கள்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு வசந்தகாலம் வந்துவிட்டது. வறுமை என்பது இனி வாழ்க்கையில் வராத அளவுக்கு பொருள்வளம் பெருகும். புதிதாக பொன், பொருள் வாங்க போட்ட எண்ணம் ஈடேறும். வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். வேலை செய்யுமிடத்தில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். எப்போதும் மிக மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியம் சுமுகமாக முடியும். 90 சதவிகித நன்மையுண்டு.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் எப்போதும் நிதானத்துடன் செயல்படக்கூடியவர். குரு 9-ல் வந்துவிட்டாரே என்ற மகிழ்ச்சியில் கூடுதல் வேகத்தை யார்மீதும் காட்டக்கூடாது. கனிவாகப் பேசி காரிய வெற்றிகளைக் காணலாம். மற்றவர்கள் குணமறிந்து பேசுவது, நடப்பது நல்லது. வருமானத்திற்குக் குறைவில்லை. அரசு ஊழியர்கள் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் முழுவதையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்களால் தொல்லைகள் வராமல் நடந்துகொள்வது நல்லது. அவர்களால் உங்களுக்கு மாறுதல் வரும். கடல் அல்லது மலை சார்ந்த பகுதிகளில் தொலைதூரத்துக்கு மாற்றம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எதிலும் நிதானித்துச் செயல்படுங்கள். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். ஆண்களுக்கும் திருமணம் கைகூடி வரும். 80 சதவிகித நன்மையுண்டு.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

பொதுவாகவே உத்திராட நட்சத்திர அன்பர்கள் கைராசிக்காரர்கள். உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த பெண் புகுந்த வீடும், உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர் பெண் எடுத்த வீடும் எப்போதும் வளர்ச்சியுடன் இருக்கும். இந்த ஆண்டு குரு 9-ல் அமர, அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. விட்டுச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். உங்கள் செயல்கள் அனைத்திலும் நல்ல லாபத்தையும் பொருளாதார உயர்வையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் உயர்வும் உண்டு. பிள்ளைகளால் நன்மைகள் உண்டு. “இந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் யார்’ என்று மக்கள் வியக்கும் அளவில் உங்கள் பிள்ளைகள் படிப்பில் உயர்வார்கள். பணவசதிகளுக்குக் குறைவில்லை.

பரிகாரம்

குரு பகவான் 9-ல் உள்ள இந்த காலகட்டத்தில் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வாருங்கள். நன்மைகள் கூடும்.  குலதெய்வத்தையும், குருபகவானையும் நினைத்து காரியத்தைத் துவக்குங்கள். செய்யும் காரியத்தில் வெற்றி நிச்சயம்.

……………………………………………………………………………………………………………………………..

 

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம்,
அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிஅன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு 8-ல் வரும்போது சிரமங்களை அடைவோமா என்று நினைக்கத்தோன்றும். ஆனால் குரு பகவானால் உங்களுக்கு தாக்கம் வராது. குரு 8-ல் வரும்போது நீங்கள் செய்யவேண்டியது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். நேரத்திற்கு உணவுண்ண வேண்டும். உங்கள் கடமைகளை மட்டுமே செய்யவேண்டும். மற்றவர்களுக்கென்று நீங்கள் உதவப்போகும்போதுதான் சிரமம் வரும். ஜாமீன் போட்டு யாருக்கும் பணம் வாங்கிக் கொடுக்காதீர்கள். வாகனப் போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் ஆண்டு முழுவதும் தக்க மருந்தினை, மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும். உங்கள் காரியங்களுக்காக மற்றவர்களை அணுகக்கூடாது. உதவி செய்வார்கள் என்று நம்பியவர்கள்கூட உதவிசெய்ய மாட்டார்கள்.

குரு பகவான் ராசிக்கு 8-ல் சிம்மத்தில் அமர்ந்து தன் சொந்த வீட்டை 5-ஆம் பார்வையாகப் பார்க்கின்றார். எனவே மலைபோல் வந்த காரியத் தடைகள் பனிபோல் விலகிச் சென்றுவிடும். இதனை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள். குடும்பத்தில் குழப்பம் செய்துவந்தவர்கள் இப்போது விலகிச்செல்வார்கள். நகை வாங்குவது, இடம் வாங்குவது போன்ற நிகழ்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும். கைவசம் உள்ளதைப் பாதுகாத்தாலே போதும். இப்போது கோபம் அதிகமாக வரப்பார்க்கும். எனவே நீங்கள் கோபத்தை அடக்கி நிதானத்துடன் செயல்பட வேண்டும். இப்போது உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் அடிக்கடி வெளியூர் சென்றுவருவீர்கள். கடிதம்மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். உங்களைவிட்டுப் பிரிந்த மகன் இப்போது உங்களைத் தேடிவருவார்.

முருகன் அருளால் வழக்குகள் கடுமையாக இருக்காது. வயிற்று வலி வந்தால் உடனே சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் அயல்நாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டத்தில் மேலும் மூன்று மாதங்கள் தாமதமாகலாம். தொழிலாளர் ஒற்றுமை உண்டு. கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் எல்லாரும் நிதானமாகப் பேசவேண்டும். குருபகவான் 8-ல் அமர்ந்து குதர்க்கமான பேச்சுகளை பேசவைப்பார். எனவே எதையும் சிந்தித்து, யோசனை செய்து பேசவேண்டும். சகோதாரர்கள் மத்தியில் ஒற்றுமைக் குறைவு வராது. ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக்கொடுத்துச் செல்வதால் சுமுகமாக அனைத்து காரியங் களும் நடக்கும். காதல் செய்துவருவோர் மனதை ஒருநிலைப்படுத்தி காதல் தேவைதானா என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்களால் எந்த பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள். பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

முருகன் அருளால் கடந்த காலங்களில் இருந்து வந்த தொல்லைகள் குறையும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழில் போட்டியால் மந்தநிலையைக் காண்பீர்கள். மற்ற வேலை செய்கின்றவர்கள் உழைப்பால் உயர்வார்கள். கை கால்களில் வலிவந்து நீங்கும். அரசு ஊழியர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பார்கள். ஒருசிலர் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளை அடைவார்கள். அவர்கள் மற்றவர்களை நம்புவதால் தொல்லைகள் கூடும். உங்கள் பணிகளில் தொய்வு வராது. கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள்தான் சிரமத்தை அடைவார்கள். காவல்துறை நடவடிக்கைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சிகளைக் கைவிடவேண்டும். குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கக்கூடாது. நீங்கள் உண்டு, உங்கள் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. தொழில் துறையில் லாபகரமான நிலையே ஏற்படும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

உங்கள் செயல்கள் அனைத்தும் திருப்தியைத் தரும். விலகிநின்ற சொந்தங்கள் வந்துசேரும். “வரும்- ஆனால் வராது’ என்றிருந்த நிலுவைத் தொகைகளும், கடன் தொகைகளும் வசூலாகும். உடல்நிலையில் தெளிவுண்டு. சிக்கனமாக செலவு செய்தால் பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். வரவுக்கு குறைவில்லை. தொழிலதிபர்கள், தொழிலாளிகளை மிகவும் கவனமாக அனுசரித்துச் செல்லவேண்டும். அவர்கள் யூனியனில் சேர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றங்களைச் சந்திப்பார்கள். எந்த இடத்துக்கு மாறுதல் வந்தாலும் செல்வது நல்லது. கேன்சல் செய்ய முயற்சிக்காதீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த நேரத்தில், நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல்நிலை சீராகும். பெற்றோர்வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்களாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசுகள் அமையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வாகனப் பராமரிப்பில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் குறையும். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலைக் காண்பார்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தி கூடும். எதிர்பார்த்ததைவிட லாபம் பெருகும். தற்காலிகப் பணிநீக்கத்திலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இப்போது குருபகவான் உங்களுக்கு ஆதரவான வழிகளைக் காட்டுவார். உடல்நிலையில் இருந்துவந்த பின்னடைவுகள் நீங்கும். நீங்கள் உற்சாகத்தோடு வேலைசெய்வீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் வந்துசேரும். சகோதரர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். சொத்துப் பிரிவினை சுமுகமாக வரும். ஒருசிலர் அயல்நாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல கல்வியைப் பயின்று அரசு வேலைக்கான தேர்வெழுதியவர்களில் சிலர் பணிக்கான உத்தரவைப் பெறுவார்கள். தொழிற்கல்வியில் பயின்றுவரும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள். அவர்களில் சிலர் காம்பஸ் செலக்ஷனில் வேலை வாய்ப்பையும் பெறுவார்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். காதலர்கள் எண்ணம் கைகூடாது. நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இறைவன் கருணையால் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். குருபகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் வாகனங்களில் மிகவும் நிதானமாகச் செல்லவேண்டும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அண்டை அயலார், உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். பேச்சில் மிகவும் நிதானம் வேண்டும். நீங்கள் நல்லது சொன்னாலும் பொல்லாததாக மாறும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றியைப் பெறலாம். சகோதரர்களிடையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாடு சென்று படிக்க நினைத்த மாணவர்களின் எண்ணம் ஈடேறும். செய்யும் தொழிலில் அதிகமான லாபத்தைக் காண்பீர்கள். அடுத்தவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளக் கூடாது. அரசுப் பணியாளர்கள் உங்கள் சக பணி யாளர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். பெண் பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மேலதிகாரிகளிடம் கோள் சொல்வார்கள். எனவே நிதானமான பேச்சால்தான் பணியில் நீங்கள் சிறக்க முடியும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

நீங்கள் பொறுமையாகச் செயல்பட்டு காரியங்களில் வெற்றியைக் காணவேண்டும். நீண்டகாலமாக காணாமல்போன பொருட்கள் வந்துசேரும். பெற்றோர்களுக்காக மருத்துவச் செலவுகள் செய்வீர்கள். தொழில் துறையில் போட்டியாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே டெண்டரை கவனித்துப் போடவேண்டும். வியாபாரிகள் புதிதாகக் கிளை துவங்கும் திட்டத்தை கொஞ்சகாலம் தள்ளிவைப்பது நல்லது. நஷ்டங்களைத் தவிர்க்கலாம். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் தொகைகள் வந்துசேரும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குரு 8-ல் சுக்கிரன் சாரத்தில் இருக்கும்போது, மிகவும் கறுப்பாக உள்ள மணமகனைத் தேர்வுசெய்யாதீர்கள். உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நல்ல வரனாகத் தேர்வுசெய்யுங்கள். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா

குரு பகவான் 8-ல் உள்ளார் என்பதை மறந்துவிடக்கூடாது. உங்கள் பேச்சால் குடும்பத்தில் குழப்பம் வரும். எனவே நிதானமாகப் பேச வேண்டும். குழந்தைகள் வழியில் கல்விச்செலவு கூடுதலாகும். பணவரவுகள் திருப்தி தரும். சிக்கனமாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். எனவே அவர்களிடம் பண உதவி கேட்காதீர்கள். சகோதரர்களிடையே வீண் சண்டைகள் வரவாய்ப்புகள் உள்ளன. எனவே அளவோடு பேசவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் கூட்டாளிகள் சொல்லும் கணக்குகளை படித்துப்பார்த்து கையெழுத்துப் போடுங்கள். அவர்களில் ஒருசிலர் பொய்க் கணக்கு சொல்லி ஏமாற்றிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே யோசித்துச் செயல்படுங்கள். வீட்டில் சுபகாரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கைகூடும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். குரு 02-08-2016 முதல் உங்கள் ராசிக்கு 9-ல் வருவார். அதன் பலன்களை இப்போதே நீங்கள் உணர்வீர்கள். நல்ல பலன்களாக நடக்கும்.

அரசு ஊழியர்கள்

குரு 8-ல் வந்தாலும் அவர் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை சீராகத் தருவார். வேலைபார்க்கும் இடத்தில் வேலைப்பளு கூடுதலாகும். அதேநேரத்தில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வில் தடை எதுவும் வராது. கீழ்நிலை பதவியில் உள்ளவர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பீர்கள். அதற்கான பலனும் உங்களுக்கு வந்துசேரும். மாறுதலை வேண்டி காத்திருப்போருக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள்.

வியாபாரிகள்

எலக்ட்ரானிக் பொருட்கள் விநியோகம் செய்கின்றவர்கள், தரமுள்ள பொருட்களை வாங்கி விநியோகம் செய்யவேண்டும். உங்கள் பெயர் கெட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். டெலிவரியையும் உங்களது நேரடிப் பார்வையில் செய்யவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் உங்கள் சுய ஜாதகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 10-க்குரியவர் 6-ல், 6-க்குரியவர் 10-ல் வரக்கூடாது. அப்படி வந்தால் உங்களுக்கு கூட்டுத் தொழில் ஆகாது. எனவே நீங்கள் சுயமாகத் தொழில் செய்து முன்னேற வேண்டும். வாடிக்கையாளர்களை கூடுதலாகப் பெற்று, விற்பனையை அதிகம் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சீட்டு பிடிப்பவர்கள், ஏலச்சீட்டு நடத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில், தொழிலதிபர்கள், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளிகளுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும். மனசாட்சிப்படி தொழிலாளர்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்தால், தொழிலாளிகள் பிரச்சினை எதுவும் வராது. தொழிலதிபர்கள் எதிர் பார்த்தபடி, அரசாங்கத்தில் புதிய கடனை அடைவார்கள். தொழிலாளி களுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம், போனஸ் வகைகள் தடையின்றிக் கிடைக்கும். பங்குதாரர்கள், தொழிலதிபர்கள் இடையே சுமுகமான உறவே நீடிக்கும். தொழில் தகராறுகள் எதுவும் தொழிற்சாலையில் ஏற்படாது. தீத்தடுப்பு சாதனங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள்

பெண்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் உங்கள் உடல்நலனை பேணிக்காக்க வேண்டும். இனம்தெரியாத பயம் தோன்றும். ஆனால் உங்களது உடல்நிலையில் பாதிப்பு எதுவுமில்லை என்பதை உணர வேண்டும். மனதினால் ஏற்பட்ட நோய் என்பதை நீங்கள் உணர்ந்தால் மனத்தெளிவு பிறக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் அதிக செலவுகள் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குவார். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். எனவே தாய்வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம். எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை யோடு, நிதானமாக நீங்கள் செயல்பட்டால் காரிய வெற்றியுண்டு.

மாணவர்கள்

குரு பகவான் 8-ல் உள்ளார். எனவே கல்வியில் நாம் உயர முடியாதென்று நீங்கள் நினைக்கக்கூடாது. உங்களது முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் கல்வியில் உயர்ந்துவருவீர்கள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வகையில் கல்வித்தடை எதுவுமில்லை என்றாலும் படிக்கட்டுகளில்- கட்டடத்தின் சுற்றுச்சுவர்களில் அமர்ந்து பேசக் கூடாது. கவனக்குறைவால் விபத்துகள் நேரலாம். எனவே பாதுகாப்பான இடங்களில் உட்கார வேண்டும். வாகனங்களில் அதிகமான வேகத்தை மேற்கொள்ளாதீர்கள். கோஷ்டிப்பூசலுக்குள் உங்களை இணைத்துக் கொள்ளக் கூடாது. கல்வி நிறுவனத்தின் தண்டனை உங்கள் கல்வியைக் கெடுக்கும். எனவே நீங்கள் உண்டு- உங்கள் வேலையுண்டு என்று மட்டும் செயல்பட வேண்டும்.

கலைஞர்கள்

இதற்கு முன்னர் சம்பாதித்ததைவிட இப்போது கூடுதலாக சம்பாத்தியம் செய்வீர்கள். உங்கள் நடிப்பு பளிச்சிடும். புதிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் குறைவிருக்காது. காதல் திருமணம் செய்துள்ள ஒருசில பிரபல நடிகர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் காதல் மனைவியால் பெருத்த இடையூறுகளை நீங்கள் சந்திப்பீர்கள். நாளேடுகளிலும், மற்ற இதழ்களிலும் விமர்சனம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் அமைதிகாத்து காரிய வெற்றியை அடையவேண்டும்.

விவசாயிகள்

8-ல் குரு உள்ள இந்த நேரத்தில் பணப்பயிர்கள் பயிரிடுவதை குறைக்கவேண்டும். கையிருப்பை வைத்து புதிய நிலம் வாங்கிப் போடுங்கள். மகசூலைப் பொறுத்தவரையில் குறைவாகவே லாபம் வரும். எனவே ஒரு போகம் மட்டும் பயிரிட்டு பலன்களை அடையலாம். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் தொழில் தனம் பெருகும். யாருக்கும் கடனுக்காக ஜாமீன் போடாதீர்கள். உங்கள் சொத்துக்களையும் அடமானம், ஈடு வைக்காதீர்கள். நண்பர்களுக்கு உதவப்போய் விளைநிலமும் வழக்கில் வந்துசேரும். எப்போதும் பயிரிடும் பொருட்கள் லாபத்தை தரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு குறைவு வராது.

அரசியல் பிரமுகர்கள்

எந்தவொரு சொல்லையும் மிகவும் நிதானமாகக் கையாளவேண்டும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதுகூட மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணும். அவர்கள் தலைமையில் தேவையில்லாமல் சொல்லி வைப்பார்கள். உங்கள் உண்மையும் உழைப்பும் பயனின்றிப் போகலாம். நாவடக்கத்தோடு செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையவேண்டும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

எப்போதுமே குருபகவான் உங்களுக்கு சாதகமாகவே இருப்பார். எனவே நீங்கள் எந்த காரியத்திலும் சிரமமின்றி வெற்றிகளைக் காண்பீர்கள். இந்த குருப்பெயர்ச்சி ஆண்டில் எல்லா வகையான நன்மைகளையும் அடைவீர்கள். திடீர் யோக பலன்கள் கிட்டும். வருமானம் எப்போதும்போல வந்துசேரும். நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வீர்கள். 70 சதவிகித நன்மையுண்டு.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:

குரு 8-ல் உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பயம்கொள்ளாமல் உங்கள் பணியை செய்யலாம். கூடுதல் லாபத்தையும் பெறுவீர்கள். மக்களால் மகிழ்ச்சி உண்டு. மற்றவர்கள் விமர்சனம் உங்களை பாதிக்காது. ஆனால் உதவிகேட்டு மற்றவர்கள்தான் உங்களைச் சுற்றியிருப்பார்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒருசிலர் வெளிநாடு சென்றுவருவார்கள். செல்வாக்கு கூடுதலாகும். வருவாய் கூடும். தொழில் சிறப்பும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மத்தியில் பிணக்குகள் எதுவும் வராது. 80 சதவிகித நன்மையுண்டு.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

குருபகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாகனங்களில் பார்த்துச்செல்ல வேண்டும். கை, கால்களில் பந்தனம் ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடும். கையூட்டு வாங்கும் ஒருசில அரசு ஊழியர்கள் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எனவே 01-08-2016 வரை கையூட்டு பெறாமல் இருந்தால் அரசு நடவடிக்கையிலிருந்து தப்பலாம். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகிச்செல்வார்கள். ஒருசிலருக்கு தொழிலில் கூடுதல் வருவாய் உண்டு. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 60 சதவிகித நன்மையுண்டு.

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து வரவேண்டும். முடியாதவர்கள் உங்கள் ஊர் அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கி வரலாம். வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் 27 கொண்டைக்கடலையை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து அதனை பர்சில், பையில், தொழிற்கூடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். துன்பங்கள் விலகும்.

……………………………………………………………………………………………………………………………..

 

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப  ராசி அன்பர்களே!

குரு பகவான் 05-07-2015 முதல் 01-08-2016 வரை கும்ப ராசிக்கு 7-ல் அமர்ந்து அருள் பாலிக்க உள்ளார். இப்போது நீங்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். குரு 6-ல் அமர்ந்திருந்தபோது எந்த பக்கம் திரும்பினாலும், எந்தக் காரியம் செய்தாலும் தடை, தாமதங்களே ஏற்பட்டது. தற்போது 7-ல் அமர்ந்துள்ளதால் எல்லா நிலைகளிலும் உயர்வு வரும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. இதுவரை குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏட்டிக்கு போட்டியாக நடந்துவந்தார்கள். இனி குடும்ப சீர்திருத்தத்தில் பங்குகொள்வார்கள். மணமானபின் கோபித்துக்கொண்டு சென்ற மருமகள் இப்போது திரும்பிவருவார். மகனும் மருமகளும் இனிமையாக குடும்பம் நடத்துவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையோடு குழந்தை பாக்கியமும் வந்துசேரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஒருசிலர் ஓய்வுபெற்ற பின்னர் பணப்பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக பணப்பலன்களைப் பெறுவார்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பெற்றோர்களின் சொத்து உங்களுக்கு இனி தாமதமின்றிக் கிடைக்கும். இளைஞர்கள் வெளிநாடுபோய் சம்பாத்தியம் செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் அரசுத் தேர்வெழுதி வெற்றியும் பெற்று, பணி வாய்ப்பையும் பெறுவார்கள். அலங்காரப் பொருட்கள் வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்துவைத்த பொருட்கள் இரட்டிப்பான விலைக்கு விற்கும். ஒருசிலர் மறைமுகப் பொருள் விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நேர்வழியில் வியாபாரம் செய்ய வேண்டும். ஒருசிலருக்கு காவல்துறை நடவடிக்கைகள் தேடிவரும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டு நின்ற திருமணம் நடக்கும். உங்கள் உறவுகள், உங்களுக்கும் தாய்- தந்தையருக்கும் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மேல்நாடுகளில் விரிவுபடுத்து வார்கள். அதற்கேற்ற தருணம் இது. வியாபாரிகள் தங்கள் விற்பனைக் கிளைகளை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துவார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு பரிந்துசெல்லும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் நல்ல பிள்ளையாக வாழ்ந்து, பின்வயதில் உங்கள் தேவைகளை வெளிநாடு சென்று சமாளிப்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமையில், பொருளாதாரப் பிணக்கு மட்டும் தொடர்ந்து இருந்து வருகின்றது. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். அரசு ஊழியர்கள் மிகவும் சிக்கனத்தைக் கையாளவேண்டும்.

மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது உங்கள் பழைய ஆவணங்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். குடும்பத்தில் பொன், பொருள் சேர்க்கையுண்டு. தொல்லை கொடுத்துவந்த கடன் தொகைகள் பைசலாகும். நீண்டகாலமாக சுணங்கிவந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக மாறும். இப்போது குருபகவான் உங்கள் பக்கம் இருந்து அருள்பாலிக்கின்றார்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்டபடி எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கும். மருத்துவ சம்பந்தமான கல்விக்கு ஒருசிலர் தேர்வுபெறுவார்கள். காணாமல்போன உங்கள் மகன் இப்போது தேடிவருவார். காதலர்கள் எண்ணம் கைகூடாது. அரசுப்பணியில் உள்ளவர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். கல்வி நிறுவனம் அமைக்க திட்டமிட்ட உங்கள் எண்ணம் ஈடேறும். கோர்ட் வழக்குகள் சாதகமாகும். வருமானம் சிறிது சிறிதாகக் கூடுதலாகும். சேமிப்புகள் உயரும். கணவன்- மனைவி ஒற்றுமையில் விரிசல்வராது. பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில்  நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்கின்ற காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பண வரவுக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டிலிருந்து உங்கள் பிள்ளைகள் நீங்கள் கேட்காமலேயே பணத்தை அனுப்பிவைப்பார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை திட்ட மிட்டபடி நடக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கும்ப ராசியில் பிறந்து திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்- பெண் இருபாலருக்கும் திருமணம் முடியும். நல்ல வரன்களாக வரும். இதுவரை உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். வழக்குகள் பைசலாகும். சகோதரர்களுக்குள் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

இப்போது உங்கள் பணியில் கூடுதல் லாபங்கள் வந்துசேரும். உடல்நிலை சீராகும். காரிய வெற்றிகளும் காரிய பலிதமும் நடைபெறும். நிலம் வாங்கிச் சேர்ப்பீர்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கிச்சேர்ப்பீர்கள். பிள்ளை களுக்கு திருமணப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரனாக அமையும். கணவன்- மனைவி நேசத்தோடு வாழ்வார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இப்போது சொந்தங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். பொதுவாக இதற்கு முன்னர் உறவினர்கள் மத்தியில் நல்லபெயர் இல்லை. இப்போது கௌரவம் உயரும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

இப்போது பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் எண்ணியபடி திருமணத்தை செய்துமுடிப்பீர்கள். விவசாயத்தில் அதிக விளைச்சல் உண்டு. கதிர் அறுக்கும் இயந்திரம், நவீனக் கருவிகளைக் கொண்டு விவசாயத் துறையை மேம்படுத்துபவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். தொழில் சிறக்கும். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கூடுதல் உற்பத்தியை செய்வார்கள். நீங்கள் திட்டமிட்டப்படியே எல்லா காரியங்களும் நடக்கும். வாகன விருத்தி உண்டு. ஒருசிலர் வெளிநாடு சென்று நல்ல வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. தீர்வும் சாதகமாக வரும். எதிரிகள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பொதுச்சேவையில் உள்ளவர்கள் தக்க பாதுகாப்புடன் செல்வது நல்லது. அரசு ஊழியர் ஒருசிலர் தங்கள் சொந்த காரியத்துக்காக விருப்ப ஓய்வு பெறுவார்கள். யோசித்துச் செய்ய வேண்டும். பின்னாளில் கஷ்டம் குறையும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

மிகவும் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். உடல்நிலை சீராக இருக்கும். எப்போதும் மனம் தெளிவாக இருக்கும். துணிச்சலோடு பணிசெய்வீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு உதவியுண்டு. அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். செய்யும் காரியங்களில் அதிக லாபம் உண்டு. புதிய நூதனமான பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் உறவுகள் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் ஒற்றுமையுண்டு. சகோதரிகள் எதிரானவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களாலும், அவர்கள் கணவராலும் தொல்லைகள் உண்டு. தொழில் வளம் சிறப்புண்டு. அரசுப் பணியாளர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள் வெளிநாட்டில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனைத்து தேவைகளும் நிறைவேறும்.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இது வசந்த காலம். பலவழிகளில் பணம் வரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். நல்ல வரன்களாக அமையும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். படித்த இளைஞர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெறுவார்கள். உரிய பதவியும் அடைவார்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திட்டமிட்டபடி கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஒருசிலர் நீதிபதிக்கான தேர்வெழுதி உத்தரவுக்காக காத்திருப்பார்கள். அவர்கள் ஜட்ஜ் பதவியை அடைவார்கள். உடன் பணிபுரிபவர்கள் இப்போது உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு இந்தக் காலம் பொற்காலம். நினைத்தபடி மாறுதல், ஊதிய உயர்வு, பதவி உயர்வு வந்துசேரும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

குரு பகவான் 7ல் அமர்ந்துள்ள இந்த நேரத்தில் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வார். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். திருமணம் நல்லபடியாக நடக்கும். பெற்றோர் வகையில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். தொழில் சிறக்கும். வருவாய் இரட்டிப்பாகும். நீங்கள் செய்துவரும் தொழில் நிலையான தொழிலாக மாறும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் லாபகரமானதாக அமையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வாட்டி வதைத்துவந்த உடல் பிணி நீங்கும். பணவசதிகள் கூடுதலாகும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். மாமியார்- மருமகள் சண்டை தீரும். குடும்பத்தில் எல்லா வகையிலும் தன்னிறைவு ஏற்படும். குடும்பம் குதூகலமாகும்.

அரசு ஊழியர்கள்

அரசுப் பணியாளர்களுக்கு இது ஒரு பொற்காலம். அவர்கள் விரும்பியபடி பதவி உயர்வு, பொருளாதார உயர்வு, வேண்டிய கடன்கள் அனைத்தும் வந்துசேரும். இப்போது பதவி உயர்வில் செல்பவர்கள் கடல் சார்ந்த பகுதி, மலை சார்ந்த பகுதிக்கு மாறுதல் பெறுவார்கள். செல்கின்ற இடத்தில் நல்ல மதிப்பு மரியாதையுடன் வாழ்வார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் வேறிடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். எப்போதும் உற்சாகத்துடன் பணிசெய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும்.

வியாபாரிகள்

வியாபாரிகள் இந்த குருப்பெயர்ச்சி ஆண்டில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அந்த கிளையிலும் வியாபாரம் கூடுதலாகும். லாபம் கூடும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தேவைகள் முழுவதையும் பூர்த்திசெய்வீர்கள். வியாபாரம் செய்யுமிடத்தில் பொறுமையும், நிதானமும் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அது பயனுள்ளதாக அமையும்.

தொழிலாளர்கள்- தொழிலதிபர்கள்

தொழிலாளி- தொழிலதிபர்கள் ஆகிய இருதரப்பினரும் நன்கு இணைந்து செயல்படுவார்கள். உற்பத்தி கூடும். லாபம் பெருகும். தொழிலாளிகள் கேட்ட போனஸ், கடன், ஊதிய உயர்வு அனைத்தும் கிடைக்கும். தொழிற்சங்கப் பிரச்சினைகள் எதுவும் வராது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த கேட்டிருந்த அரசுக் கடன் கிட்டும். மானியமும் கிட்டும். தொழிற்சாலை கணக்குக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். பங்குதாரர்கள் கொடுத்துவந்த நெருக்கடி குறையும். புதிய பங்குதாரர்கள் வருகை சிறப்பாகும்.

பெண்கள்

கடந்த வருடம் குரு 6-ல் இருந்தபோது ஏற்பட்ட இருண்ட சூழ்நிலை மாறும். இப்போது உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். மனதில் தைரியம் வந்துவிடும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. நீங்கள் பிள்ளைகளால் பெருமைப்படும் காலம். ஒருசிலரது பிள்ளைகள் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எப்போதும் உங்களை கேலி பேசிவந்தவர்கள் இப்போது உங்களின் அபாரமான முன்னேற்றத்தைக் கண்டு மரியாதையுடன் நடப்பார்கள். யாரும் நிரந்தரமாகக் கெட்டுப்போக மாட்டார்கள் என்பதை உங்கள்மூலம் உறவுகள் உணரும். சகோதர- சகோதரிகள் ஒற்றுமையுண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். ஞாபக சக்தி கூடும். பள்ளியில் முதல் மாணவன் என்ற பெயர் வரும். இந்த நிலையை மாணவர்கள் கடைசிவரை கொண்டுசெல்வார்கள். ஹாஸ்டலில் படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுடன் சண்டை போடுவது கூடாது. அது பின்னாளில் உங்கள் கல்வியை பாதியில் நிறுத்தும். ஒருசில மாணவர்களது பெற்றோரின் உடல்நிலையில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.

கலைஞர்கள்

தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். இந்த குருப்பெயர்ச்சிக் காலம் உங்களுக்கு பொற்காலம். நீங்கள் திட்டமிட்டபடி படவாய்ப்புகள் கூடும். அதில் வரும் வருமானத்தை பொன், நிலத்தில் போட்டு சேமிப்பீர்கள். ஆனந்தமான குடும்ப வாழ்க்கை அமையும். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக காலம் கழிப்பீர்கள். உரிய நேரத்தில் படத்தை முடித்துக் கொடுப்பீர்கள். கலைத்துறையில், காதல் திருமணம் செய்துகொண்ட அன்பர்களுக்கு மட்டும் இது போதாத காலம். அவர்கள் மத்தியில் இனங்காணாத பகை வளரும். ஒருவரையொருவர் தாக்கிப் பேசி பிரிந்துவிடுவார்கள். வம்பு, வழக்குகள் வரும். இந்த மாதிரி சூழ்நிலை ஒரு சில கலைஞர்களுக்கு ஏற்படும். அவர்கள் இந்த வருடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு இது பொற்காலம். நீங்கள் எந்த மாதிரியான பயிர்களைப் பயிரிட்டாலும் அதில் கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்திசெய்வீர்கள். புதிய இடம் வாங்குவீர்கள். மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணப்பயிர்கள் பயிரிட்டு பன்மடங்கு லாபம் பெறலாம். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். புகையிலை பயிர்செய்வோர் இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெறுவார்கள். நல்ல லாபத்தையும் அடைவார்கள்.

அரசியல் பிரமுகர்கள்

உங்கள் கருத்துகளை ஒதுக்கித்தள்ளிய மக்கள், இப்போது அதனை விரும்பிவந்து கேட்பார்கள். உங்கள் ஆலோசனைப்படி நடப்பார்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இப்போது நேரம் சிறப்பாக உள்ளது. எனவே உங்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். ஒருசிலர் வாரியத் தலைவர், அமைச்சர் ஆகும் யோகமும் உள்ளது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்தவேண்டும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

குரு பகவான் 7-ல் உள்ள இந்த நேரத்தில் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. தாராளமாக செலவுசெய்ய பணம் பலவழிகளில் வந்துசேரும். வீட்டில் தடைப்பட்டு நின்ற சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களாக அமையும். உங்கள் வீட்டில் அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். வழக்குகளில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். பிரிந்துவாழ்ந்த பிள்ளைகள் இப்போது மனைவி, மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். குலதெய்வ வழிபாடு தடையின்றி நடக்கும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு:

கடந்தகாலத்தில் அதிகமான சிரமத்தை அடைந்தீர்கள். இப்போது உங்கள் சொந்தத் தொழில் உயரும். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக உள்ளனர். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக அமையும். தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். அரசுப் பணியில் இருந்துவந்த நெருக்கடியும், வேலைப்பளுவும் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

கடந்தகாலத்தில் குரு 6-ல் இருந்தபோது அதிகமான துயரங்களை அடைந்தீர்கள். நளச்சக்கரவர்த்தி தன் மனைவி, மக்களைவிட்டுப் பிரிந்ததுபோல நீங்களும் பிரிந்து வாழ்ந்து வருகின்றீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் இந்த சூழ்நிலை மாறும். கணவன்- மனைவி ஒன்று சேர்வார்கள். தொழில் வளர்ச்சி கூடும். கூடுதல் லாபம் வரும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் லாபத்தைப் பெறுவீர்கள்.

பரிகாரம்

உங்கள் அருகிலுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வர மேலும் விருத்திகள் வரும்.  27 கொண்டைக்கடலையை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில், பையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறையாவது திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், அங்கு அமர்ந்துள்ள குரு பகவானையும் தரிசித்து வருவது நல்லது. தரிசித்தவர்களுக்கு மேலும் பலன் கிட்டும்.

……………………………………………………………………………………………………………………..

 

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு 16-12-2014-ல் அஷ்டமத்துச் சனி முடிந்துவிட்டது. இதுவே ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயம். தற்போது குரு 5-7-2015 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் வருகிறார்.

6-ஆம் இடத்தில் குரு வந்தால் கை, கால்களில் பந்தனம் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 6 என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். அங்கு குரு வந்துவிட்டதால் நாம் கால்கள் உடைந்து படுத்து விடுவோமோ என்று நினைக்கக்கூடாது. ஒருசிலருக்கு 6-ல் உள்ள குருபகவான் கடன் தொந்தரவுகளைக் கொண்டு வருவார். எனவே எப்போதும் சிக்கனமாக நடந்துகொள்ள வேண்டும். கடன் தொல்லைகள் வராமல் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஒருசிலருக்கு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டைக் கொடுத்து கடன் கவலைக்கு சமமான கஷ்டங்களை மட்டும் கொடுப்பார். எப்போதும் வாழ்க்கையில் யார் சொல்லையும் கேட்காது, தான் என்ற அகங்காரத்துடன் இருப்பவர்கள் மட்டும் விபத்தைச் சந்திப்பார்கள். வாகனம் ஓட்டிச் செல்லும்போது எப்போதும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். படித்த பாடத்தையே மீண்டும் மீண்டும் படித்தால் பாடம் மனதில் நிற்கும். குருபகவான் 6-ல் உள்ள இந்த நேரத்தில், மாணவர்கள் தங்கள் கூட்டாளிகளை ஒதுக்கிவைத்து வாழ்வது நல்லது. சக மாணவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது வரும்.

தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தை அடிக்கடி ஆய்வு செய்தால் தான் உண்மை நிலை புரியும். அடிக்கடி நீங்கள் நிறுவனத்தை கவனித்தால் தவறு செய்கின்றவர்கள் திருந்திவிடுவார்கள். உங்கள் வீட்டுக்குவந்த விருந்தினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பீர்கள். ஒருசிலர் உழைத்ததுபோதும் என்ற உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். இப்போது கோடைமழை பொய்க்காமல் பெய்யும். மழையால் விவசாயம் செழிக்கும். தாய்மாமன் உறவுகளில் விரிசல் வரலாம். அவர்களால் உங்களுக்கு உதவி எதுவுமில்லை. வீட்டிற்கு வந்துள்ள மருமகன் நல்லவராக வாழ்வார்.

உங்களது நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சேமிப்புகள்  உங்களுக்கு உதவியாக இருக்கும். எல்லா காரியத்திலும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து நடப்பவர்களை குருபகவான் கெடுக்கமாட்டார். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நன்கு விசாரித்து மணமக்களைத் தேர்வுசெய்ய வேண்டும். 40 வயதைக் கடந்தவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது. கூட்டாளிகளைச் சேர்க்காதீர்கள்.

தெளிவான பேச்சுகளை மட்டும் கையாளவேண்டும். பேச்சில் கனிவு இருக்கவேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. உங்கள் தாய்மாமன் நல்லவராக இருந்தாலும், தற்போது உதவி செய்யமுடியாத நிலையிலிருப்பார். தண்ணீர் வந்தவுடன் பிடித்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக மீன ராசி அன்பர்கள்  உறவுகளின் வீட்டிற்குச் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் பெரியவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். ஓரளவு மருத்துவம் செய்தால் போதும். உடல்நிலை சீராகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் சிரமங்கள் குறையும். சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா

இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நினைத்த காரியங்களை செய்துமுடிப்பதில் தடை, தாமதங்கள் வரும். பணநிலையைப் பொறுத்தவரை தேவைகள் அதிகம் உண்டு. வருவாய் குறைந்த அளவே வரும். எனவே மிகவும் சிக்கனமாக இருக்கவேண்டும். உடலில் அடிக்கடி உபாதைகள் ஏற்படலாம். டென்ஷன் ஆகாமல் இருந்தாலே உடல் உபாதைகள் குறையும். கடன் வாங்கும்போது யோசித்து வாங்கவேண்டும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழில் செய்கின்றவர்களும், வியாபாரம் செய்கின்றவர்களும் புதிய கிளைகளை ஆரம்பிப்பதை தள்ளிப் போட வேண்டும். அந்நிய மதத்தவர் உங்கள் கடைகளில் வேலைக்கு இருந்தால், அவர்களிடம் பொறுப்புகளைக் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் வழியில் உள்ள சுபகாரியப் பேச்சுகளைத் தள்ளிவைப்பது நல்லது.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா

கடந்த காலத்தில் அனைத்து நிலைகளிலும் நீங்கள் தடை, தாமதங்களை சந்தித்திருப்பீர்கள். இப்போது எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறலாம். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்க நல்ல நேரமிது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொன், பொருள் வாங்கும் திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் பிரச்சினையின்றி வரும். வயது முதிர்ந்த தாய், தந்தையருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அவர்கள் உடல்நலனும் தேறும். அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் விரும்பிய இடத்துக்கு மாறுதல் உண்டு. தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஒருசிலரது கோரிக்கை ஏற்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்வார்கள். குலதெய்வ வழிபாடு உண்டு.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்

கடந்த இரண்டு மாதமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டீர்கள். இப்போது மீண்டும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றது. 6-ல் குரு உள்ள இந்த நேரத்தில் நீங்கள் எதிலும் நிதானமாகச் செல்லவேண்டும். யாருக்கும் கடனுக்காக ஜாமீன் போடாதீர்கள். அந்தக் கடனை நீங்கள்தான் கட்டவேண்டியது வரும். பெற்றோர்கள் உடல்நலன் பாதிக்கலாம். தகுந்த மருத்துவச் செலவுகள் செய்யவேண்டும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் நிதானித்துச் சென்றால் விபத்துகளைத் தவிர்க்கலாம். சகோதரர்கள் வழியில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். மாணவர்கள் ஏற்ற- இறக்கத்துடன் படிப்பார்கள். மிகவும் கவனத்துடன் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தொழில்துறையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அந்த முயற்சியை தள்ளிவைக்கவேண்டும். வியாபாரிகள் போட்டி வியாபாரி களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசு ஊழியர்கள் தான் உண்டு- தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் பாடு கஷ்டம். பதவியில் சிரமம் வரும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்

இந்த காலகட்டத்தில் அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஒருசிலர் தொழிலுக்காக இருப்பிடத்தை மாற்றிக்கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்றமான நேரமிது. லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணலாம். பிள்ளைகள் இப்போது உங்கள் சொல்லைக்கேட்டு நடப்பார்கள். அவர்களின் உயர்படிப்பு தொடரும். தொழிற்கல்வியிலுள்ள மாணவர்கள் புதிய கருவிகளைக் கண்டு பிடிப்பார்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல் வந்துசேரும். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக நடந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. அன்யோன்யமாக வாழ்வார்கள். பிரிந்துசென்ற தம்பதியர் மீண்டும் வந்துசேர்வார்கள். இனி சண்டை, சச்சரவு வராது.

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா

இந்த காலகட்டத்தில் உங்களுடன் பணியாற்றும் அல்லது பக்கத்தில் உள்ளவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சக ஊழியர்களில் கறுப்பாக இருப்பவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பில்லை. வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் வரும். எனவே பராமரிப்பு அவசியம். உடன்பிறந்த சகோதரர்கள் மறைமுகமான உதவிகளை உங்களுக்குச் செய்வார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வுகள் கிடைக்கும். ஊதிய உயர்வும் வரும். தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். வாகனத்தில் மெதுவாகச் சென்றால் விபத்துகளைத் தவிர்க்கலாம். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு பிடித்த மில்லாத வரனைத் தேர்வுசெய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் மகள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். காணாமல்போன பிள்ளை மீண்டும் வந்துசேரும். அதேபோல பெற்றோரைவிட்டுப் பிரிந்து மனைவியே கதியென்று இருந்த பிள்ளைகளும் பெற்றோரைத் தேடிவருவார்கள்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரகதியில் உலா

பாலைவனத்தில் சோலையைப் பார்ப்பதுபோல, நீங்கள் இதுவரை சிரமம் அடைந்ததற்கு மாறாக செழிப்போடு வாழும் நிலை உருவாகும். இப்போது உங்கள் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். காதல் திருமணம் செய்த மனைவியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தாய், தந்தையர் உடல்நலன் தேறும். அவர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வெளிநாடுகளில் பிள்ளைகள் நல்ல சம்பளத்தைப் பெறுவார்கள். அவர்கள் தன் குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் உதவியாக இருப்பார்கள். ஏற்கெனவே இருந்துவந்த கஷ்டமும் நீங்கும். பொருளாதார நிலை உயரும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளுக்கு வரன் தேடும் முயற்சிகள் வெற்றியாக முடியும். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மத்தியில் இருந்துவந்த இறுக்கமான மனநிலை மாறி, சகஜ நிலைக்கு வருவார்கள். தொழில் உயரும். 

அரசு ஊழியர்கள்

 குருபகவான் 6-ல் உள்ள இந்த காலகட்டங்களில் நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கிரகம் ஒத்துவரவில்லை என்றாலும், நமது நல்ல பழக்கவழக்கங்களால் காரிய வெற்றிகளை அடையலாம் என்பதை மறந்துவிடக்கூடாது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமாகும். மற்ற பணியாளர்களையோ, அதிகாரிகளையோ விமர்சிக்காமல் இருப்பது நல்லது. அதிகாரிகள் இட்ட பணியைத் தட்டாமல் செய்தால் மட்டுமே நல்ல பெயரோடு பணியாற்றிட முடியும். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் குடும்ப நலனைக் கருதி பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருசிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.

வியாபாரிகள்

வியாபாரிகளைப் பொறுத்தமட்டில், புதிய வாடிக்கையாளர்களை விட, பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தவிர வேறு எந்தக் கடையிலும் பொருட்களை வாங்க மாட்டார்கள். வேறு பகுதியில் கிளை துவங்கும் திட்டத்தை நீங்கள் இப்போது அமுல்படுத்தக்கூடாது. பாத்திர வியாபாரம் செய்பவர்கள், இரும்பு வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் தடை, தாமதம் வரலாம். பங்குதாரர்களிடம் மிகவும் எச்சரிக் கையாகப் பேசி செயல்பட வேண்டும். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்துசெல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழிலாளிகள் வேலைப்பளு கூடும். அவர்கள் தாங்கள் வேலைசெய்யும் கம்பெனியின் நிலைமையை உணர்ந்து கோரிக்கைகளை வைக்க வேண்டும். யூனியன் நடவடிக்கைகள் கைகொடுக்காது.

பெண்கள்

பெண்கள் தியானம் மூலம் மன அமைதியை அடையலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்கும். பிள்ளைகள்மீதும், ஆண்டவன்மீதும் நம்பிக்கை வையுங்கள். நிம்மதியுண்டு. உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் வந்துபோகும். அதிகமான மருத்துவச் செலவுகளைத் தராது. விருந்தினர் வருகையால் செலவுகள் கூடும். சிக்கனம் ஒன்றே உங்களைக் காக்கும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராது. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகளைத் தள்ளி வைக்கவேண்டும். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கோபித்துக்கொண்டுபோன மனைவி எந்தவிதமான நிபந்தனையுமின்றி வந்துசேர்வார்.

மாணவர்கள்

மாணவர்கள் குரு 6-ல் உள்ள இந்த நேரத்தில் பாடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்கவேண்டும். உங்களின் விடாமுயற்சி கை கொடுக்கும். உல்லாசப் பயணம் செல்லும் மாணவர்கள் தண்ணீரில் நீந்துவதைத் தவிர்க்கவேண்டும். தண்ணீர் கண்டம் உள்ளது. உடல் ரீதியாக சில பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மாடிகளில், படிக்கட்டுகளில் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும். தடுமாற்றம் ஏற்பட்டு சிறு விபத்துகள் வரலாம். அதனால் மருத்துவச் செலவுகள் கூடும். உங்கள் நலன் உங்கள் கையில் உள்ளது.

கலைஞர்கள்

புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். ஒருசில கலைஞர்கள் வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்றுவருவார்கள். விட்டுப்போயிருந்த பழைய படங்களை நடித்துக் கொடுப்பீர்கள். தாய்- தந்தை இருவரில் யாரேனும் ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் வரும். எனவே தாய்- தந்தையர்களின் உடல்நிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் சிலரது குடும்பத்தில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும். கணவன்-மனைவிக்குள் பிரிவினை வரும் சூழல் ஏற்படும். நீங்கள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வருவாய் கூடுதலாகவே உள்ளது. போதைப் பொருள் பழக்கமுள்ள சிலருக்கு பக்க விளைவுகள் வரும். எனவே போதைப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. 

விவசாயிகள்

இந்த ஆண்டில் நல்ல மழை பெய்வதால் நீங்கள் பயிர் செய்த வகையில் கூடுதல் மகசூலைப் பெறுவீர்கள். பணப்பயிர்கள் மேலும் லாபத்தைத் தரும். புகையிலை வியாபாரம் செய்கின்றவர்கள் கூடுதல் லாபம் பெறுவார்கள். உற்பத்தியும் விற்பனையும் செய்கின்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம் வரும். ஒருசிலர் சொத்துக்கள் வாங்கிச்சேர்ப்பார்கள். கடினமாக பாடுபட்டு விவசாயம் செய்வீர்கள். டிராக்டர் போன்ற கருவிகளில் பழுதுகள் நேரலாம். அதனால் செலவுகள் கூடுதலாகும். தென்னை விவசாயம் செய்கின்றவர்கள் அதிக மகசூலைப் பெறுவார்கள். பூக்கள் உற்பத்தி செய்கின்றவர்களும் அதிக விளைச்சலைப் பெற்று எப்போதும் வரும் லாபத்தைவிட கூடுதலான லாபத்தைப் பெறுவார்கள்.

அரசியல் பிரமுகர்கள்

அரசியில் பிரமுகர்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் பாராட்டுவார்கள். ஒருசிலருக்கு எதிர்பார்த்தபடி வாரியத் தலைவர், அமைச்சர் பதவி வந்துசேரும். நீங்கள் நல்லதே செய்தால், குருபகவான் உங்களுக்கு நல்லதே செய்வார். மற்றவர்களுக்கு தீமை செய்தால் பதவியில் மாற்றம் வரும். தொட்ட காரியம் எதுவும் துலங்காமல் போகும். எனவே அரசியல் பிரமுகர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

நீங்கள் மிகவும் மனத்தெளிவோடு இருக்கவேண்டும். குடும்பச் சண்டைகள் தீரும். கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். மற்றவர்கள் சொல்வதை மறுத்துப்பேசும் குணத்தைக் கைவிடவேண்டும். பொருளாதார உயர்வுகள் ஓரளவு வரும். தாய்- தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பவர்கள் அதிக பலனை அடைவார்கள். போதைப் பொருளால் அழிவுகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மருத்துவச் செலவுகளை அதிகம் அடைவார்கள். போதைப் பழக்கத்தை கைவிடுவது நல்லது. 60 சதவிகித நன்மையுண்டு.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

செயல்களில் தடை, தாமதங்களை சந்திப்பார்கள். ஆனால் எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். சமூகத்தில் எப்போதும் உங்கள் பேச்சுக்கு முதலிடம் உண்டு. மற்றவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்களில் நல்ல பலன்களை அடைவீர்கள். எப்போதும் பணம் பையை நிரப்பும். மனைவிவழி சொந்தங்களால் உபத்திரவத்தை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். 80 சதவிகித நன்மையுண்டு.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கூடுதல் செலவுகள் ஆகும். பணவரவுகளுக்கு பஞ்சமில்லை. பாக்கிகளை கட்டிமுடிப்பீர்கள். வாகனங்களில் பார்த்துச் செல்ல வேண்டும். விபத்து வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. உங்கள் தாய், தந்தையர் நலனில் அக்கறை அதிகம் வேண்டும். அவர்களைக் கண்காணித்து வருவது நல்லது.

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து வரவேண்டும். 27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ளவேண்டும். விபத்துகள் எதுவும் வராது. நன்மையே நடக்கும்.

…………………………………………………………………………………………………………………………

 

மேஷம்

இந்த மாதம் 14-ஆம் தேதி (சித்திரை 1-ஆம் தேதி) மன்மத வருடம் பிறக்கிறது. மகர ராசி, கடக லக்னம், அவிட்ட நட்சத்திரத்தில் பிறக்கிறது. அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிநாதன். எனவே இந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் மிகமிக நல்ல திருப்பங்களும் யோகங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். உங்களுடைய நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். கவலைகள் எல்லாம் மறையும். பிள்ளைகளின் கல்வி, திருமணம், வேலை போன்ற அவர்களின் எதிர்கால திட்டங்களெல் லாம் வெற்றியடையும்; இனிதாக நிறைவேறும். அதேபோல இதுவரை உங்களை வாட்டிவதைத்த நோய்த் தொல்லைகளும் உடல் உபாதைகளும் ஓடிவிடும். ஆரோக்கியமும் ஆனந்தமும் பெருகும். புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.

ரிஷபம்

இந்த மாதம் 14-ஆம் தேதி மன்மத வருடம் மகர ராசி, அவிட்ட நட்சத்திரத்தில் பிறக்கிறது. அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் 7, 12-க்குடையவர். மகரம் சனியின் நட்சத்திரம். சனி 10-க்கும் 11-க்கும் உடையவர். எனவே இந்த மாதத்தில் இருந்து உங்களுக்கு தொழில் முன்னேற் றம் அடையும். வளர்ச்சி திட்டங்களை தளர்ச்சியில்லாமல் நிறைவேற்றலாம். கணிசமான லாபம் தேடலாம். சேமிப்பும் பெருகும். பணி புரிகிறவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற நன்மைகள் உண்டாகும். இதுவரை திருமணத் தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து சந்தித்து நொந்துபோனவர்களுக்கு (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இனி திருமண யோகம் கூடிவரும். மனதிற்கேற்ற மனைவி அல்லது கணவன் அமையும் யோகம் வந்துவிடும். சுயதொழிலதிபர்களுக்கும் தொழில் முன்னேற்றம், உபதொழில் யோகம் அமையும்.

மிதுனம்

இந்த மாத மத்தியில் மன்மத வருடப்பிறப்பு. மிதுன ராசிக்கு 6, 11-க்குடைய செவ்வாயின் நட்சத்திரத்திலும் 8-ஆவது ராசியிலும் பிறப்பதால், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, கடன், வைத்தியச் செலவு போன்ற ஆதிக்கம் அதிகமாக உங்களைத் தாக்கினாலும், 2-க்குடைய கடக லக்னத்தில் பிறப்பதால் பொருளாதார நெருக்கடி இருக்காது. தாராளமான வரவு- செலவு காணப்படும். தேவைகள் பூர்த்தியடையும். பையில் பணம் இருந்துகொண்டே இருப்பதால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உதயமாகும்; உங்களை வழிநடத்தும். குடும்பத்திலும் மங்கள நிகழ்ச்சிகள் உண்டாகும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். தவிர்க்கமுடியாத கடன்கள் உருவானாலும் சொன்னபடி அடைத்துவிடலாம். வரவேண்டிய பணமும் வசூலாகிவிடும்.

கடகம்

ஏப்ரல் 14-ல் மன்மத ஆண்டு உங்கள் ராசியான கடக லக்னத்தில்தான் பிறக்கிறது. 5, 10-க்குடைய செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலும், 7-ஆவது ராசியான மகர ராசியிலும் புதுவருடம் பிறப்பதால் உங்களுக்கு இனி ராஜயோக காலம்தான். இதுவரை நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று வாழ்ந்தவர் களுக்கும் சரி; சாண் ஏறினால் முழம் வழுக்கிய மாதிரி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தவர்களுக்கும் சரி- இனி நற்காலம்; பொற்காலம்! செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். தொழில் முன்னேற்றம், பதவியில் மனநிறைவு, நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறுதல், பிள்ளைகள் வகையில் நல்லவை நடப்பது போன்ற எல்லா இனிய பலன்களையும் எதிர்பார்க்கலாம். கணவன்- மனைவிக்குள் அன்பும் பாசமும் அன்யோன்யமும் உண்டாகும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் ஆரோக்கியமும் முழுமையான சுகமும் உண்டாகும். சிலருக்கு முதல் திருமண யோகமும், சிலருடைய ஜாதகப்படி மேலுமொரு திருமண யோகமும் நடக்கும். வாரிசு யோகமும் உண்டாகும்.

சிம்மம்

இம்மாத மத்தியில் மன்மத வருடப்பிறப்பு 6-ஆவது ராசியான மகரத்திலும், 12-ஆவது லக்னமான கடகத்திலும் பிறக்கிறது. இதில் மகர ராசியும் கடக லக்னமும் 6, 12 என்பதால் சிக்கல் உண்டாகும். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, வழக்கு, விவகாரம் போன்றவற்றால் உங்கள் அமைதிக்கும் ஆனந்தத்துக்கும் சோதனை உண்டாகும். சிலருக்கு வழக்கு விவகாரத்தில் எதிர்மறையான தீர்ப்புகளினால் தண்டனை கிடைப்பதும், மேல் முறையீடு (அப்பீல்) செய்வதும் உண்டாகும். எதிர்பாராத விரயங்களும் வீண்செலவுகளும் ஏற்படலாம். பதவி இழப்பு, வேலையில் டென்ஷன், கடன்காரர்களின் படையெடுப்பு போன்றவையெல்லாம் ஒன்றுசேர்ந்து, யாரை நம்புவது- யாரை நம்பக்கூடாதென்ற தடுமாற்றமும் ஏற்படும். அதேசமயம் சிம்ம ராசிக்கு 4, 9-க்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் புதுவருடம் பிறப் பதால், ஜாதகரீதியான தசாபுக்திகளுக்கேற்ற பரிகாரங்களையும் ஹோமங்களையும் செய்து நிவர்த்தி தேடிக்கொள்ளலாம்.

கன்னி

இந்த மாதம் 14-ஆம் தேதி மன்மத வருடம் உங்கள் ராசிக்கு 5-ஆவது ராசியான மகரத்திலும், 11-ஆவது லக்னமான கடகத்திலும் பிறப் பது நல்லது. அதேசமயம் 3, 8-க்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் (அவிட்டத்தில்) பிறப்பது கெடுதல். அதனால் ஒருபக்கம் உங்களுக்கு யோகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சேதமும் வந்து தாக்கும். ஓட்டைப் பானையில் நீர் நிரப்பி வைப்பதுபோல எல்லாம் வீணாகிவிடும். உங்கள் முயற்சிகளில் வேகமும் முன்னேற்றமும் தெரிந்தாலும், கடைசி நேரத்தில் புயலும் மழையும் வந்து பயிரை நாசமாக்குவதுபோல நஷ்டத்தை உண்டாக்கலாம். அதற்குத் துணை செய்வதுபோல கன்னி ராசியில் ஜென்ம ராகுவும், அடுத்து ஜூலை மாதம் 12-ல் வரும் குருவும் எதிர்மறையான பலன்களை உருவாக்கி உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கலாம். யாரைப் பெரிதாக நம்பியிருக்கிறீர்களோ அவர்களே உங்களுக்கு துரோகிகளாக மாறலாம். மிகுந்த முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வதோடு, ஜாதகரீதியாக தேவையான பரிகாரங்களையும் செய்தால் தப்பிக்கலாம். சத்ரு சம்ஹார ஹோமம் செய்வது நல்லது.

துலாம்

ஏப்ரல் 14-ல் பிறக்கும் மன்மத வருடப் புத்தாண்டு ஓரளவு நல்லதாக அமையுமென்று எதிர்பார்க்கலாம். திருமணமாகாமல் தடைகளைச் சந்தித்து நொந்துபோன ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடிவிடும். சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடென்று கவலைப்பட்டு கலங்கிய குடும்பஸ்தர்களுக்கு இனி ஒற்றுமையும் உல்லாச வாழ்க்கையும் இன்பமும் உண்டாகும். “நித்திய கண்டம்- பூரண ஆயுசு’ என்று வைத்தியம் பார்த்து வாடி வதங்கியவர்களுக்கு இனி விமோசனமும் பூரண ஆரோக்கியமும் உண்டாகும். புதிய வீடு, புதிய வாகனம் என்று கனவு கண்டவர்களுக்கு கனவுகள் நனவாகும். தவறான வழியில் தடம்புரண்ட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத கடன்களைத் தாங்கிச் சுமந்து தவிப்பவர்களுக்கு, மனைவியின் உதவியாலும் தாயாரின் உதவியாலும் ஆதரவு கிடைத்து சிக்கல்களை தீர்க்கலாம். புதுமுயற்சிகளும் வெற்றிபெறும். இருண்ட வாழ்க்கையில் சூரியன் உதயமாகி ஒளி கிடைக்கும்; வழிபிறக்கும்.

விருச்சிகம்

சித்திரை 1-ஆம் தேதி மன்மத வருடம் உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சாரத்திலேயே (அவிட்டம்) பிறக்கிறது. உங்களுக்கு 3-ஆவது ராசியான மகரத்திலும், 10-ஆவது இடமான கடக லக்னத்திலும் பிறக்கிறது. எனவே இந்த வருடம் முழுவதும் இனி ஆனந்தமும் அமைதியும் இன்பமும் தேடிவரும். உடன்பிறந்தவர்களாலும் பழகிய நண்பர்களாலும் ஆன்மார்த்தமான உறவினர்களாலும் உங்களுக்கு நல்லது நடக்கும். உதவியும் ஆதரவும் உண்டாகும். புதிய தொழில் முயற்சி கைகூடும்; தனலாபம் பெருகும். அதேசமயம் செவ்வாய் 1, 6-க்குடையவர் என்பதால், சிலசில மறைமுக எதிர்ப்புகளும் இடையூறுகளும் ஏற்படும். என்றாலும் அவரே உங்கள் ராசிநாதன் என்பதால் நீரடித்து நீர் விலகாது என்பதுபோல ஆறுதலும் உண்டாகும். சிலர் விருத்திக்கான கடன்கள் வாங்கலாம். அப்படி கடன் வாங்காவிட்டால் வைத்தியச் செலவை சந்திக்கநேரும். சிலருக்கு ஜென்மச் சனி பொங்கு சனியாக பொலிவைத்தரும். காலபைரவருக்கு தொடர்ந்து மிளகு தீபமேற்றி வழிபடலாம்.

தனுசு

புத்தாண்டான மன்மத வருடம் பிறக் கும் அவிட்ட நட்சத்திரமும், கடக ராசியும் உங்களுக்கு சாதகமாக அமைந்தாலும், 8-ஆவது கடக லக்னம் என்பது ஒரு மைனஸ் பாயின்டாகத் தெரியும். இருந்தாலும் உங்கள் ராசிநாதன் குருவுக்கு அந்த எட்டாவது இடமான கடகம்தான் உச்சவீடு என்பதால், தன் நகத்தால் காயம் ஏற்பட்டால் விஷமல்ல என்ற விதிவிலக்குப்படி பாதிக்காது. வாக்கு, தனம், குடும்பம் இவற்றில் குறையேதும் வராது. பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லாதபடி தாராளமான வரவு- செலவு காணப்படும். உங்களுடைய எல்லாத் தேவைகளும் நிறைவேறும். சிலருக்கு அத்தியாவசியமான கடன்கள் ஏற்பட்டாலும் வாக்கு நாணயம் கெடாது- காப்பாற்றப்படும். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். தெய்வப் பிரார்த்தனைகளும் ஈடேறும். 5- புத்திர ஸ்தானம்; 12- விரய ஸ்தானம். இதற்கு அதிபதி செவ்வாய் என்பதால் பிள்ளைகள் வகையில் சுபமங்கள காரியங்கள் கைகூடும். 8-ஆம் இடமான கடக லக்னத்தில் வருடம் பிறப்பதால், உறவினர்கள் வகையில் சில அசம்பாவிதங்கள் நடப்பதால் வருத்தமும் கவலையும் ஏற்படுமே தவிர, பெரும் பாதிப்புக்கு இடமில்லை. சிலர் குடியிருப்பு மாறலாம்.

மகரம்

புதுவருடம்- மன்மத வருடம் உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. அதனால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் ஓங்கும். திறமையும் செயலும் சிறக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் ராசிக்கு 4-க்கும் 11-க்கும் உடைய செவ்வாயின் நட்சத்திரத்திலும் (அவிட்டம்), 7-ஆவது இடமான கடக லக்னத்திலும் மன்மத ஆண்டு பிறப்பதால், அதுவும் உங்களுக்கு அனுகூலமான நிலைதான். பூமி, வீடு, வாகனம் போன்ற 4-ஆம் இடத்துக் கனவுகள் நனவாகும்.  மாணவ- மாணவியருக்கு கல்வி மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். இதுவரை டாக்டர்களாலேயே கண்டுபிடிக்கமுடியாமல் உடலை வருத்திய பிணி, பீடையெல்லாம் விட்டு விலகியோடிவிடும். 11-ஆம் இடம் லாபம், வெற்றியைக் குறிக்கும் இடம். 7-ஆம் இடம் திருமணம், உபதொழிலைக் குறிக்கும் இடம். திருமணமாக வேண்டியவர்களுக்கு திருமணம் கூடிவரும். தொழிலில் புதுமுயற்சி கைகூடும். நடந்துவரும் தொழில் முன்னேற் றத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் சிலர் கடன் வாங்கி முதலீடு செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 12-ஆவது மகர ராசியிலும், 6-ஆவது கடக லக்னத்திலும், 3, 10-க்குடைய செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலும் மன்மத வருடம் (சித்திரைப் புத்தாண்டு) பிறக்கிறது. புதிய தொழில் முயற்சிகளில் புதுப்பொலிவு உண்டாகும். அதற்கு அன்னிய நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். அல்லது உடன்பிறந்தவர்களின் உதவி உண்டாகும். சிலர் பழைய கடன்களை அடைத்துவிட்டு புதிய கடன்களை வாங்கி தொழில்துறையில் முதலீடு செய்யலாம். கடன் வந்தாலும் அது விருத்திக்கடன்- சுபக்கடன்! 12-ஆவது இடம் விரய ஸ்தானம் என்பதால், வட்டி நட்டம், விரயம் என்று எடுத்துக் கொள்ளலாம். சிலர் வீடு மாற்றம், ஊர் மாற்றம்,  தொழில் மாற்றம், இடம் மாற்றம் செய்யலாம். அந்த மாறுதல் முன்னேற்றம் கருதிய ஆறுதல்! சிலருக்கு தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ளவை யாக அமையும். கும்ப ராசிநாதன் சனி 10-ல் இருந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகளும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், கடன் வாங்காவிட்டால் வைத்தியச் செலவு வந்துவிடும். அதனால் கடன் வருவது பற்றி கவலை வேண்டாம்.

மீனம்

சித்திரை 14-ல் வருடப் பிறப்பு (மன்மத வருடம்) உங்கள் ராசிக்கு 11-ஆவது மகர ராசியிலும், 5-ஆவது கடக லக்னத்திலும் பிறப்பதோடு, 2, 9-க்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் (அவிட்டம்) பிறக்கிறது. எனவே இந்த வருடம் எல்லா வகையிலும் உங்களுக்கு யோகமான வருடமென்று இன்பமடையலாம். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் உண்டாகும். பிள்ளைகள், பேரன், பேத்திகள் வகையில் நல்லவை நடக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்கி வாடுவோருக்கு சாதகமான தீர்ப்பும் வெற்றியும் உண்டாகும். சொந்தத்தொழில் புரிவோருக்கும் அல்லது பணியில் இருந்துகொண்டே உபதொழில் புரிவோருக்கும் லாபமும் வெற்றியும் அனு கூலமும் உண்டாகும். பதவி உயர்வு, பணியில் பாராட்டு, நிதி நிலையில் நிறைவு, குடும்ப ஒற்றுமை, உற்றார்- உறவினர், நண்பர்கள் வகையில் பெருமை, மகிழ்ச்சி ஆகிய நன்மை கள் உண்டாகும்.