விநாயகர்

பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா?

நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம். அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

நன்றி – தினகரன்

 

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.

விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.

மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.

இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியபின், நம்  வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும். அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும். பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பை யில் காசு வைக்கவேண்டும்.

பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும். பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும். பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.

இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும். நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார்முன் வைக்கவேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும். பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம். வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர், கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம். சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.

எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

முதலில்,

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்
யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’

என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

அதன்பின்,

“ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத
சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா’

என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம். குழந்தைகளையும் சொல்லச்செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும். அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவுசெய்யவேண்டும்.

பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்கவேண்டும். அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

பிள்ளையாரை நீரில் விடும் நாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாக இருக்கக்கூடாது. இவ்வாண்டு வியாழனன்று பிள்ளையார் சதுர்த்தி வருவதால், 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள் செய்யலாம். அப்படி செய்ய எடுத்துச் செல்லும்போது தொப்பை யிலுள்ள காசை எடுத்து பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.

“மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்யவேண்டும். எத்தனை நாள் பிள்ளையார் நம் வீட்டில் உள்ளாரோ, அத்தனை நாளும் விளக்கேற்றி மூன்று வேளையும் நிவேதனம் செய்யவேண்டும்.

கணக்கு சொன்ன பிள்ளையார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் துவக்கினான். அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்குமுன் இந்த கனக விநாயகர் கோவிலை அமைத்து, கோவிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரி டம் ஒப்படைத்தான்.

திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கியபின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். (இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சிதருவார்.) இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக்கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், “”திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கட்டளை இட்டுவிட்டுச் சென்றான் மன்னன்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை.

அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம்தான் தம்மைக் காக்க வேண்டுமென்று கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார். “”பெருமானே, மன்னர்
திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்டவேண்டும்” என கண்ணீர்மல்கி மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “”அமைச்சரே, வருந்தாதீர். இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்” என அருளி மறைந்தார். கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சந்நிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் “எத்து நூல் எட்டு லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டார்.

மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பர். இதைக்கொண்டே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் கல், மரம், மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டுவிடலாம். எத்து நூல்தான் முக்கிய இடம் வகிக்கிறது.

மறுநாள் அமைச்சர் மன்னரிடம் விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். “”இவ்வளவு செலவானதென்றால் நாம் நினைத்தபடியே கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! அமைச்சரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டீர்கள்” என்று கேட்டான் மன்னன்.

நடந்த உண்மைகளை அமைச்சர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் கனக விநாயகர் சந்நிதிமுன் நின்று கண்ணீர் மல்க வணங்கினான். “”விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கானதால் அது சரியாகத்தான் இருக்கும். இதன்மூலம் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப விநாயகரே ஆசி வழங்கவிட்டார். எனவே இந்த கனக விநாயகர் இனிமேல் நமக்குக் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.

இந்த விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறிடத்திற்கு மாற்றிவிடக்கூடாதென்று எண்ணி, 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இவரின் சந்நிதிமுன் மிகச்சிறிய நுழைவாயிலைக் கட்டிவிட்டான். அந்நியர் படையெடுப்பு வந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருள்தான் காரணம்.

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இவ்வால யம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

பிரபஞ்சங்களனைத்தையும் படைத்த இறைவனை வழிபட ஒரு சிறிய இலையே போதுமானது என்பது சான்றோர் கூற்று. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உகந்த இலைகள் என்று உள்ளன. விநாயகப் பெருமானுக்குகந்த இலை களாக வன்னியும் மந்தாரையும் கருதப்படுகின்றன. இவை தோன்றியதற்கான சுவையான வரலாறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

நந்தி கோத்திரர் என்ற முனிவரின் மகன் அவுரவர். அவரது மனைவி சுமேதை. இந்த தம்பதியரின் மகள் சமி. தௌமிய முனிவரின் மகனான மந்தாரனுக்கு சமியை மணம் செய்துவைத்தனர்.

திருமணம் முடிந்து மந்தாரன் சமியுடன் தங்கள் ஆசிரமத் துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, விநாயகரின் சாரூபத்தைப் பெற்றிருந்த புருசுண்டி முனிவர் எதிரே வந்தார். மந்தாரனும், சமியும் முனிவரது உருவத்தைக்கண்டு நகைத்தனர். இதனால் கோபம்கொண்ட புருசுண்டி முனிவர், “”என்னைக் கண்டு நகைத்த நீங்கள் இருவரும் மரங்களாகக் கடவது” என்று சபித்தார்.

முனிவரின் சாபத்தைக் கேட்டு வருந்திய இருவரும், தாங்கள் அறியாமையினால் செய்த பிழையைப் பொறுத்தருளும்படி முனிவரிடம் வேண்டினர். அவர்கள் வேண்டுதலுக்கிரங்கிய முனிவர், “”விநாயகர் உங்களிடம் எழுந்தருளும் போது நீங்கள் சாபநிவர்த்தி பெறுவீர்கள். விநாயகர் அருளால் மரவுருவம் நீங்காமலே நீங்கள் பெருமையுடையவர்களாவீர்கள். உலகம் உள்ளளவும் இந்த வனத் திலேயே வசித்திருங்கள். முடிவில் முக்திபெறுவீர்கள்” என்று கூறினார்.

முனிவரின் சாபப்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். அதனால் அவர்களால் ஆசிரமத்துக் குச் செல்லமுடியவில்லை. அவர்கள் திரும்பி வராததால் மனக்கலக்கமடைந்த தௌமியர்அவுரவரிடம் தூதுவர்களை அனுப்பினார்.

தூதுவர்கள் அவரிடம் சென்று கேட்டபோது, சமியும் மந்தாரனும் பல நாட்களுக்கு முன்பேபுறப்பட்டுச் சென்றுவிட்ட தாகக் கூறினார். அவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும்அவர்களைக் காணமுடியவில்லை. தௌமியர் தன் ஞான திருஷ்டியால் அவர்களுக்கு என்னநடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார்.

வருத்தம்கொண்ட தௌமியர், சமியின் தந்தை அவுரவரிடம் சென்று, மந்தாரனும் சமியும் மரமாகும்படி சபிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கூறி, அவர்களை சாபத்திலிருந்து விடுவிக்க தாங்கள் இருவருமாகச் சேர்ந்து ஏதாவது முயற்சி செய்யவேண்டுமென்ற கருத்தையும் கூறினார்.

இருவரும் 12 ஆண்டுகாலம் விநாயக மந்திரத்தை ஜெபித்து விநாயகரை தியானம் செய்தனர். அவர்களது தவத்தில் திருப்தியுற்ற விநாயகர் பத்து கரங்கள் உடையவராய், யானை முகத்துடன் சிங்க வாகனத்தில் அமர்ந்த நிலையில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

முனிவர்கள் இருவரும், தங்கள் மக்கள் சாபத்தின் காரணமாக மரமாகிவிட்டதைக் கூறி, அவர்களுக்கு சாபவிமோசனம் அருளுமாறு வேண்டினர்.

விநாயகர், “”புருசுண்டி எனது அம்சமாக விளங்குபவர். அவர் கொடுத்த சாபத்தை யாராலும் மாற்றமுடியாது. அதனால் அவர்கள் இருவரும் மரமாகவே இருப்பார்கள். என்றாலும் நீங்கள் இருவரும் கேட்டுக்கொண்டதால் அவர்கள் சிறப்பு பெறுவதற்கு நான் அருளுகிறேன். வன்னி, மந்தாரை ஆகியவற்றின் இலைகளைக்கொண்டு என்னை வழிபடுவோர், நேரடியாக என்னையே பூஜித்த பலனைப் பெற்று தங்கள் துன்பங்கள் நீங்கப்பெறுவர். மந்தாரை, வன்னி ஆகிய இரண்டு பத்திரங்களால் எம்மை பூஜிப்பவர் அறுகம்புல் சாற்றி பூஜித்த பலனைப் பெறுவர்” என்று அருளினார்.

அவர்களுக்கு காட்சிதந்த விநாயகர் அந்த வன்னி, மந்தார மர நிழல்களில் எழுந்தருளினார்.

அதுமுதல் தௌமியர், அவுரவர், தேவர்கள் மற்றும் முனிவர்கள் எல்லாரும் வன்னி, மந்தாரை இலைகளால் விநாயகரை வழிபட்டனர்.

அறுகம்புல் இல்லாத குறையை மந்தாரை மலர் நிரப்புவதாலும், அறுகும் மந்தாரையும் இல்லாத குறையை வன்னி இலை நிரப்புவதாலும், உலகிலுள்ள இலைகள் எல்லாவற்றிலும் வன்னி இலை விசேஷமானது என்பதாலும், சிவபெருமான் வன்னி இலையை தமது சடாமகுடத்தில் அணிந்திருக்கிறார்.

விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபங்களை விளக்கும் ஐந்து வகை மரங்களில் வன்னி மரம் அக்னி சொரூபம். யாகாக்கினியானது எப்போதும் வன்னியில் வாசம் செய்கிறது.

பாண்டவர்கள் அக்ஞாத வாசத்தின்போது சகாதேவனின் யோசனைப்படி தங்கள் ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில் மறைத்துவைத்தனர். போருக்குச் செல்லும்போது அவற்றை எடுத்துச் சென்று வெற்றி பெற்றார்கள் என மகாபாரதம் கூறுகிறது.

வன்னி மரம் வெற்றி தேவதையின் வடிவமாக வழிபடப்படுகிறது. வன்னி வெற்றியைத் தரும் மரம்.

 

விநாயகர் அகவல் – VINAYAGAR AGAVAL
பாடியது ஔவையார் – By Poetess Aouvai

சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே

Seedha kkaLapach chendhaamaraip poom
Paadhach chilampu palavisai paata
ponnarai gnaaNum poondhukil aataiyum
vanna marungil vaLarndhazhakerippap
pEzhai vayiRum perum pArak kOdum
vEzha mukamum viLangku sinthUramum
anchu karamum angkusa pAsamum
nenchit kudi koNda neela mEniyum
naandra vaayum naaliru puyamum
mUnRu kaNNum mummathach chuvadum
iraNdu seviyum ilangku pon mudiyum
thiraNda muppuri nUl thikazh oLi maarpum
sot patham kadantha thuriya mey gnaana
atputham ninRa katpakak kaLirE

While the anklets on the cool sandal anointed feet
Which has the colour of the red hibiscus flower,
Sings various songs, while the golden waist belt,
And his clothes as soft as flower,
Shine in pretty and beautiful colours of the rainbow,
While his box like paunch, weighty tusks
Elephant like face, the saffron dot applied on it,
Five hands and the goad and rope that he has,
His blue body which attracted our mind,
Hanging mouth, his four sets of shoulders,
His three eyes, three trails of his feet’s,
His two ears, his shining golden hair,
His glowing broad chest wearing the holy thread,
His divine knowledge of Thuriya, his mastery over words,
Stood in awe at the wish giving elephant.

முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை நான் மகிழ்ந்தெனக் கருளி

muppazham nukarum mushika vaahkanaa
ippozhudhennai aadkoLLa vENdith
thaayaayenakkuth thaanezhundharuLi
maayaap piRavi mayakkam aRuththE
thirundhiya mudhalaindhezhuththum theLivaaip
porundhavE vandhen uLandhanil pukundhu
kuruvativaakik kuvalayam thannil
thiruvati vaiththuth thiRamidhu poruLena
vaataavakai naan makizhndhenak karuLi

OH god who rides on an elephant and eats three fruits,
Now for taking me and making me yours,
You come in the shape of my mother,
Cut off the trance like feeling of this illusory birth,
Make clear to my mind the meaning of the
Five lettered Namasivaya, enter then in to my mind,
Step in to this world in the form of a teacher in this world of ours,
And tell me with happiness that this is its real meaning

கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலம் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

kOtaayudhaththaal kotuvinai kaLaindhE
uvattaa upadhEsam pukatti en seviyil
thevittaadha gnaanath theLivaiyum kaatti
aimpulam thannai atakkum upaayam
inpuRu karuNaiyin inidhenakkaruLi

After removing my great fate by the weapon of his tusk,
After giving me very sweet and not boring advices in my ears,
After showing sweetest clarity in the case of Jnana,
After teaching me the trick to control my five senses,
After sweetly telling me about mercy which gives happiness,

கருவிகளொடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்து
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆராதாரத் தங்கிசை நிலையும்
தேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்தறிவித்து

karuvikaLotungum karuththinai aRiviththu
iruvinai thannai aRuththiruL kaLaindhE
thalamoru naankum thandhenak karuLi
malamoru moondrin mayakkamaRuththu
onpadhu vaayil oru mandhiraththaal
aimpulak kadhavai ataippadhum kaatti
aaraadhaarath thangisai nilaiyum
thERaa niRaththip pEchchurai aRuththE
itaipingalaiyin ezhuththaRiviththu

After teaching me the knowledge of subjugating the senses,
After cutting of this birth as well the next and removing darkness,
After granting me mercifully the four stages of salvation,
After cutting off the trance created by the three types of ignorance,
After showing me how by one chant the five senses
Can be controlled and the nine gates of the body closed,
After teaching me how to control the chakras of the body using the goad,
After cutting off talk and making me stand firm,
After teaching me the alphabets of Ida and Pingala Nadi,

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலியதனிக் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயம் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
ஷண்முக சூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி

kataiyiR suzhumunaik kapaalamum kaatti
moondru maNtalaththin muttiya thooNin
naandrezhu paampin naaviluNarththi
kuNtaliyadhanik kootiya asapai
viNtezhu mandhiram veLippata uraiththu
moolaadhaaraththu mooNtezhu kanalai
kaalaalezhuppum karuththaRiviththu
amudha nilaiyum aadhiththan iyakkamum
kumudha sakaayam kuNaththaiyum kooRi
itaich chakkaraththin eerettu nilaiyum
utaRsakkaraththin uRuppaiyum kaatti
shaNmuka soolamum sadhurmuka sootchamum
eNmukamaaka inidhenak karuLi

After showing that the end of circle’s edge is in the head,
After making me realize that the snake keeps on hanging,
On the pillar that is at the junction of three realms,
After showing the silence at the junction of Kundalini,
After clearly telling me the chant to waken it up,
After pointing out the raging fire in the Mooladhara,
After telling me the idea of waking it up,
After telling me about the deathless state and the position of the Sun,
After telling me about properties of moon, the helper of lotus,
After teaching me the sixteen positions of the intermediate Chakra,
After showing me the position of wheels in the body,
After sweetly teaching me , the secret of Shanmuga,
And the principle behind the subtle four faces,

புரியட்டகாயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயிற்காட்டி
இருத்தி முக்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடமென்ன

puriyattakaayam pulappata enakkuth
theriyettu nilaiyum therisanap patuththi
karuththiniR kapaala vaayiRkaatti
iruththi mukdhi inidhenakkaruLi
ennaiyaRiviththu enakkaruL seydhu
munnai vinaiyin mudhalaik kaLaindhE
vaakkum manamum illaa manOlayam
thEkkiyE endhan sindhai theLiviththu
iruL veLi iraNtiRku ondritamenna

After making it clear about the eight subtle principles,
And making me see the real meaning of them,
After showing in my mind the gateway to the skull,
After telling me that the salvation is sweet,
After informing me, after showering his grace on me,
After removing the assets earned in the previous births,
After showing me the mental state where mind and words are absent,
After awakening my mind which was asleep,
After showing me the places of light and darkness in me,

அருள் தரும் ஆனந்தத்தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

aruL tharum aanandhaththazhuththi en seviyil
ellaiyillaa aanandhamaLiththu
allal kaLaindhE aruL vazhi kaatti
saththaththinuLLE sadhaasivam kaatti
siththaththinuLLE sivalingam kaatti
aNuviRkaNuvaai appaaluk kappaalaai
kaNumutri nindra karumpuLLE kaatti
vEtamum neerum viLanga niRuththi
kootum meyth thoNtar kuzhaaththutan kootti
anjak karaththin arumporuL thannai
nenjak karuththin nilaiyaRiviththu
thaththuva nilaiyaith thandhenaiyaaNta
viththaka vinaayaka viraikazhal saraNE

After giving me limitless happiness by pressing me down in ecstasy in my ear,
After removing all problems, after showing me the way of grace,
After showing lord Shiva in the sound “Om”,
After pointing out the Shiva Linga within my mind,
After showing atom within atom and distance beyond distance,
In the joints of the well ripened sugar cane like body,
After clarifying the role of Vedas and sacred ash.
After making me one with the crowd of realized devotees,
After pointing out the principle of five letters “Namashivaya”,
After showing me the state of my mind,
After giving me the philosophic state and after ruling me,
My wise Vinayaka ruled me and I seek refuge in his fee

பிள்ளையார் சுழி போட்டுதான் எந்தவொரு செயலையும் தொடங்குகிறோம். அதுபோல் “வினைகள் தீர்ப்பவன் விநாயகன்; கஷ்டங்களைத் தீர்ப்பவன் கணபதி’ என்பதும் நமது வழிபாட்டுப் பழமொழிகள். விநாயகரை வழிபடாமல் செய்யும் எந்த செயலும் முறையான பலன்களைக் கொடுப்பதில்லை என்பது, கடவுள் களிலிருந்து மனிதர்கள்வரை கண்டறிந்த உண்மையாகும். அந்த அளவுக்கு விநாயகப் பெருமானுக்கு ஒரு பெருமையும், மகிமையும் உண்டு.

பூட்டுக்குப்பெயர் பெற்ற திண்டுக்கல் மாநகரம், இன்று நன்மைதரும் 108 விநாயகர் திருக்கோவில்மூலம் வழிபாட்டுத்தலமாக பெருமை பெற்று வருகிறது.

திண்டுக்கல் நகரின் மத்தியிலுள்ள கோபாலசமுத்திரம் கரையில், ஓங்கி உயர்ந்த அரச மரத்தின்கீழமர்ந்து பக்தர் களுக்கு அருள்வழங்கி வந்தவர்தான் ஆதிவிநாயகர். இந்த ஆதிவிநாயகர் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். காலப்போக்கில் பராமரிப்பு இல்லாதநிலையில், அரசமரமும் சாய்ந்துபோனது. ஆனாலும் அதன் அடி வேர்களுக்கிடையே ஒய்யாரமாக காட்சியளித்து வந்தார் ஆதிவிநாயகர். இதைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் என்ற பக்தர் ஒருவர் ஆதிவிநாயகருக்கு அதே இடத்தில் மண்ணால் மேடையமைத்து, அதன்மேலே தென்னங்கீற்றுகளால் கூரை வேய்ந்து, அதைச்சுற்றி மூங்கில் குச்சிகளைக்கொண்டு படல்போன்ற வேலியமைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு வசதி செய்துகொடுத்து தானும் வழிபட்டு வந்தார். 1967-ல் தன்னிடமிருந்த எட்டணாவைக் கொண்டு ஆதிவிநாயகரைச் சுற்றி மண்சுவர் எழுப்பி, வண்ணம்பூசி கோவிலாக உருவாக்கினார். அதைத் தொடர்ந்து 1968-ல் நகரில் வசித்த ஆதிவிநாயகர் பக்தர்களின் துணையோடு, முதன்முதலில் திண்டுக்கல் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இப்படி ஆதிவிநாயகர் கோவிலென்று அழைக்கப்பட்ட கோவில்தான் காலப்போக்கில் நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்றது. இப்படி அழைக்கப்படுவதற்கும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

ஆதிவிநாயகர் கோவிலுக்கு மின் இணைப்பு இல்லாததால், புதிதாக மின் இணைப்பு வாங்கவேண்டுமென்று எண்ணினர். என்ன பெயரில் மின் இணைப்பு பெறலாம் என்று யோசித்து, பல பெயர்களை எழுதி திருவுளச்சீட்டு போட்டதில் “நன்மைதரும் விநாயகர் திருக் கோவில்’ என்று வந்தது. அன்று முதல் எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் திருவுளச்சீட்டு எழுதிப்போட்டு அதன் உத்தரவுப்படிதான் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. 1971-ஆம் ஆண்டு கோவிலுக்கு முன்மண்டபம் கட்ட திருவுளச்சீட்டு மூலம் உத்தரவு கொடுத்ததைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு மூலஸ்தான கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு பஞ்சலோகத்தால் உற்சவ மூர்த்தியும், 1997-ஆம் ஆண்டு ராஜகோபுரமும், கோவிலின் உள்ளே ஸ்ரீமுருகன், ஸ்ரீதுர்க்கை, நவகிரகங்கள் மற்றும் ஆஞ்சனேயரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு (2002-ல்) திருவுளச்சீட்டு உத்தரவுப்படி 108 விநாயகர் சிலைகள் (2 அடி உயரத்தில்) வைக்க முடிவுசெய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தாங்களே முன்வந்து ஆளுக்கொரு பிள்ளையாருக்கு நிதியுதவி செய்ததன்பேரில், ஆலயத்தில் 108 பிள்ளையார்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதனால் “நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில்’ என்று பெயர்வந்தது.

இங்கு திருவுளச்சீட்டு எழுதிப்போட்டு வந்த உத்தரவுப்படிதான், திண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.வி.நகர் காளியம்மன் கோவிலும், கோவிந்தாபுரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும், பிள்ளையார்பாளையம் காளியம்மன் கோவிலும், அபிராமியம்மன் கோவிலிலுள்ள வன்னிமரத்து விநாயகரும், செல்லாண்டியம்மன் கோவிலிலுள்ள விநாயகரும், ராஜக்காபட்டி பால விநாயகரும், சாஸ்திரி நகர் விநாயகர் கோவிலும் என மாவட்ட அளவில் பல கோவில் கட்டுவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் திருவுளச்சீட்டு அனுமதியுடன்தான் செய்துவருகிறார்கள். அதுபோல் வியாபாரிகளும் புதிதாக கடை வைக்கவேண்டுமென்றாலும் திருவுளச்சீட்டு எழுதிப்போட்டு அதன் அனுமதியின்மூலம்தான் தொடங்குகிறார்கள். ஆலயத்துக்கு வரும் பக்தர்களும் தங்கள் வேண்டுதல் சம்பந்தமாக திருவுளச்சீட்டின் மூலம் தீர்வு காண்கிறார்கள்.

விநாயகர் பக்தரான குமார் இவ்வாலய மகிமைபற்றிக் கூறும்போது, “”ஒவ்வொரு மாதமும் நடக்கும் சங்கடஹர சதுர்த்தியன்று 108 விநாயகருக்கும் நம் கையாலேயே அபிஷேகம் செய்து என்ன வேண்டுகிறோமோ, அது அடுத்த மாதத்திற்குள் நடந்துவிடும். என்னைப் பொறுத்தவரை தொழிலில் நஷ்டமாகி அடுத்தவரிடம் வேலைக்குப் போகும் நிலை ஏற்பட்டது. அப்பொழுதுதான் இந்த விநாயகர் கோவிலுக்கு வந்து திருவுளச்சீட்டு வாங்கி, “இந்தத் தொழிலே செய்யலாமா? அல்லது வேறு வேலைக்குப் போகலாமா?’ என்று எழுதிப் போட்டதில், “இந்தத் தொழிலே செய்யலாம்’ என்று வந்தது. அதை தொடர்ந்து பொன்ஆசாரி பட்டறை நடத்திவந்தபொழுது, திடீரென என்னைத் தேடிவந்த சில நண்பர்கள் பண உதவி செய்ததன்மூலம், இன்று இரண்டு தொழிலாளர்களை வைத்து நான் நல்ல முறையில் தொழில்செய்து வசதியாகவும் இருந்துவருகிறேன். என்னைப்போல் தொழில் நலிவடைந்த பலரும் நன்மைதரும் விநாயகர்மூலம் நல்லமுறையில் இருக்கிறார்கள்.

அதுபோல் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்குள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மைக்கு பிரதோஷ நாளில் மாலை அணிவித்து, அந்த மாலைகளை எடுத்துப்போட்டுக்கொண்டாலே திருமணம் கைகூடிவிடுகிறது.

குழந்தை வரம் கேட்டுவரும் தம்பதிகள் இங்குள்ள 108 பிள்ளையாருக்கு தயிரபிஷேகம் செய்தாலே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுகிறது. என்னுடைய நண்பர்களான நடராஜன், சீனிவாசன், செந்தில்குமார் தம்பதிகளுக்கு 11 வாரம் 108 விநாயகருக்கு தயிரபிஷேகம் செய்ததன் விளைவாக குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டது. இதைவிட அதிசயம் என்னவென்றால், சிங்கப்பூரிலுள்ள எனது நண்பன் ரமேஷின் தங்கையான சுமதிக்குகுழந்தைவரம் கேட்டு நண்பரே இங்கு தயிரபிஷேகம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. இப்படி வேண்டியவருக்கு வேண்டிய வரம் கொடுக்கும் விநாயகராக இருந்துவருகிறார்” என்றார்.

திருக்கோவிலின் நிர்வாகியான மருதநாயகமோ, “”பொதுவாகவே விநாயகர் சதுர்த்திக்காக உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளையெல்லாம் நீர்நிலைகளில் கரைக்கவேண்டுமென்பது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கஜமுக விநாயகர், 2000-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ராஜகணபதி ஆகியோரின் சிலைகள், திருவுளச்சீட்டு எழுதிப்போட்டு கரைப்பதற்கு அனுமதி கிடைக்காததால் இன்றளவும் ஆலயத்தின் முன்புறம் கம்பீரமாகக் காட்சியளித்துவருகின்றனர். திருவுளச்சீட்டின் அனுமதியின் பேரில்தான் எல்லா காரியமும் நடந்துவருகின்றன. மும்மதத்தினரும் வந்து வழிபடும் மத நல்லிணக்க ஆலயமாகவும் இந்த விநாயகர் திருக்கோவில் விளங்கிவருகிறது.

ஒவ்வொரு வருட விநாயகர் சதுர்த்தி யன்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அதுபோல் பக்தர்களும் ஆலயத்திலுள்ள 108 விநாயகர் மற்றும் இங்குள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாங்களே அபிஷேகம், ஆராதனை செய்துகொள்வதும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

தற்போது திருவுளச்சீட்டு அனுமதியின் பேரில் 200 டன் எடைகொண்ட ஒரே கல்லில் உருவாக் கப்பட்ட 32 அடி உயர சங்கடஹர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறோம். ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட விநாயகர் சிலை இதுதான். இந்த சங்கடஹர விநாயகர் நெற்றியில் கைலாய சிவனின் திருவுருவமும், வயிற்றில் நாகாபரணமும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இந்த சங்கடஹர விநாயகருக்கு பக்தர்களே தங்கள் கரங்களால் பாலாபிஷேகம் செய்துகொள்ளலாம்” என்றார்.

இந்த நன்மைதரும் 108 விநாயகரை தரிசிப்பதின் மூலமும், திருவுளச்சீட்டு பலன்கள் மூலமும் பக்தர்களின் கோரிக்கையும் குறைகளும் நிறைவடைந்து வருவது கண்கூடு. கோவை, பொள்ளாச்சி, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் தினசரி நூற்றுக் கணக்கானோர் வருகை தருகின்றனர். திருவருளும் பெறுகின்றனர்.


ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

விநாயகப் பெருமான் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார்.

வெள்ளை விநாயகர்

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.

இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால்  ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.

இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிருதயுகத்தில் திருக்கயிலையிலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் சத்யலோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார்.

கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.

வடநாட்டில் வெண்பளிங்குக் கல்லாலான விநாயகரை பல இடங்களில் தரிசிக்கலாம். தமிழகத்தில் வெள்ளை நிறத்தில் விநாயகரை தரிசிப்பது அரிது. ஆனால் தற்பொழுது வெள்ளைப் பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்ட வெண்விநாயகர், மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீநவசக்தி சாரதாதேவி கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். கருங்கல்லாலான விநாயகரை அரசமரத்தடியிலும், பல கோவில்களிலும் தரிசிக்கலாம்.

சிவப்பு விநாயகர்

செந்நிறம் கொண்ட விநாயகரை திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் காணலாம். ஸ்ரீசம்பந்த விநாயகர் என்று பெயர்பெற்ற இவர், கஜமுகாசூரனைக் கொன்று அவனுடைய குருதியை உடலில் பூசிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவருக்கு அபிஷேகம் முடிந்ததும் செந்தூரக்கலவையைக் காப்பிடுவது வழக்கம். குங்குமத்தில் அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடக்கும்.


மஞ்சள் விநாயகர்

வேலூர் சேண்பாக்கத்தி லுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் மஞ்சள் பிள்ளை யார் எழுந்தருளியுள்ளார். மஞ்ச ளில் பிடித்த லிங்கவடிவில் உள்ளார். கூரை இல்லாத திறந்தவெளிக் கோவில் இது. மேலும், நாகை- திருவாரூர் சாலையிலுள்ள மாஞ்சாடி கிராமத்தில், ஸ்ரீபாலசுப்பிரமணியரால் உருவாக்கப்பட்ட மஞ்சள் பொடி விநாயகரை தரிசிக்கலாம். மஞ்சளால் உருவான விநாயகரை “ஹரித்ரா கணபதி’ என்று போற்றுவர். ஹரித்ரம் என்றால் நம் தரித்திரத்தைப் போக்குபவர் என்று பொருள்.

தெய்வ காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மஞ்சளை மங்கலப் பொருளாக வைக்கவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. அந்தவகையில் மஞ்சள்தூளை கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து விநாயகராக பாவித்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மேலும், வெள்ளெருக்கம் வேரினைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவார். இந்த வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால் பில்லி, சூன்யம், தீயசக்திகள் அண்டாது.

சந்தன விநாயகர்

கர்நாடக மாநிலம், பேலூரிலுள்ள நர்த்தன விநாயகரின் திருவுருவம் சந்தன மரத்தாலானது.

கும்பகோணத்திற்கு வடமேற்கில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் ஸ்ரீசாட்சிநாதர் சிவாலயம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் வித்தியாசமானவர். சந்தன நிறம்கொண்டு திகழ்பவர். கிருதயுகத்தில் ஏற்பட்ட பிரளயத்தின்போது மக்களைக் காத்தவர். இவர் ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து, சப்த சாகரத்தின் (ஏழு கடல்) பெருக்கையும் ஒரு கிணற்றில் அடக்கினார். அப்போது வருண பகவான் தன் திருமேனியிலிருந்து சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் விநாயகரை உருவாக்கி பிரதிஷ்டை செய்து, அவருக்கு “பிரளயம் காத்த விநாயகர்’ என்று பெயரிட்டு போற்றி வழிபட்டார். சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதைக் காணலாம். இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. தேனாபிஷேகத்தின்போது தேன் முழுமையாக விநாயகரின் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். அப்போது செம்பவளமேனியராய் காட்சிதருவார்.

பசுமை விநாயகர்

கிராமப்புறங்களில் பசுஞ்சாணத்தை கூம்பு வடிவில் பிடித்து, அதில் அறுகம்புல் செருகி வழிபடுவர். பெரும்பாலும் வயல்வெளிகளில் இவர் பிரசித்தம். பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்ட பின்பே நாற்று நடுவார்கள். அதேபோல் அறுவடை சமயத்திலும் வழிபடுவர். அறுவடையான நெற்கதிர்களை களத்துமேட்டில் அடித்து நெல்மணிகளை உதிர்த்தபின், அதிலுள்ள பதர்களைப் பிரிக்க முறத்தினால் தூற்றுவார்கள். அப்பொழுது இளங்காற்று வீசாவிட்டால் பதர்கள் பிரியாது. அதுபோன்ற சமயங்களில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் செருகி, ஒரு கூடை போட்டு மூடி, அதை கோணிப்பையால் போர்த்திவிடுவார்கள். பின்னர், “பிள்ளையாரே, இளங்காற்று வீசணும். இல்லைன்னா நீ மூச்சுமுட்ட கூடைக்குள்ள இருக்கவேண்டியதுதான்’ என்று சொல்வார்கள். அப்படிச் சொன்ன சில நிமிடங்களில் இளங்காற்று வீச ஆரம்பிக்கும். உடனே கூடையை அகற்றி பிள்ளையாரை வணங்கிவிட்டு பதர்பிரிக்கச் சென்று விடுவது வழக்கம். இது இன்றும் கிராமப்புறங்களில் கடைப் பிடிக்கப்படுகிறது.

நிறம் மாறும் விநாயகர்

குமரி மாவட்டம் பத்மநாப புரத்துக்கு அருகேயுள்ள கேரளபுரத்தில், அரசமரத்தடியில் சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட விநாயகரை தரிசிக்கலாம். இவர் உத்தராயன காலத்தில் (தை முதல் ஆனி வரை) கறுப்பாகவும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெண்ணிறத்திலும் காட்சியளிப்பார். இவர் வீற்றிருக்கும் அரசமரமும் நிறம் மாறுகிறது. விநாயகர் கறுப்பாக இருக்கும்போது ஒரு பக்க மரம் அடர்த்தியான பச்சையாகக் காட்சிதரும். மறுபக்கம் இலைகள் உதிரும். விநாயகர் வெள்ளை நிறத்தில் மாறும்போது மறுபக்கம் இளம் பச்சையாகக் காட்சிதரும். இம்மரத்தருகில் இருக்கும் கோவில் கிணற்று நீரும், விநாயகரின் நிறத்திற்கேற்றாற்போல் நிறம் மாறும். கேரளவர்மா என்ற மன்னன் ராமேஸ்வர அக்னிக்கடலில் நீராடும்போது கிடைத்த விநாயகர் என்பர். இவருக்கு அரசமரம் தவிர மேற்கூரையில்லை.

உச்சிஷ்டகணபதி என்ற பெயர் கொண்ட விநாயகர் நான்கு கைகள் கொண்டு திகழ்வார்.

இவரது வண்ணம் சிவப்பு. மகாகணபதி ஆறு கைகளுடன் மஞ்சள் நிறத்துடன் காட்சிதருவார். இதேபோல் மஞ்சள் நிறம் கொண்ட ஊர்த்துவ கணபதிக்கு ஆறு கைகள் இருக்கும்; பிங்கலகணபதிக்கும் ஆறுகைகள். ஸ்ரீலட்சுமி கணபதி நான்கு அல்லது எட்டு கைகள் கொண்டவர். இவரது நிறம் வெள்ளை என்கிறது புராணம்.

யுக விநாயகர்

பொதுவாக, விநாயகரின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு யுகத்திலும் அவரது வாகனம் மாறியிருக்கிறது.

கிருதயுகத்தில் விநாயகரின் வாகனம் சிம்மம்.

திரேதாயுகத்தில் விநாயகரின் வாகனமாக மயில் இருந்திருக்கிறது. கமலாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக “மல்லாளர்’ என்ற திருநாமத்துடன் தோன்றிய விநாயகர், போருக்குமுன் யாகம் வளர்த்தார்.

அந்த யாக குண்டத்திலிருந்து மயிலை உருவாக்கி அதை வாகனமாகக்  கொண்டு அந்த அசுரனை அழித்தார். பிறகு, தாருகன் என்ற அசுரன் போருக்கு வந்தபோது, தன்னிடமிருந்த மயிலை முருகனுக்கு அளித்துவிட்டார்.

துவாபர யுகத்தில் இவரது வாகனம் மூஷிகம். கிரௌஞ்சன் என்ற அரசன், சௌபரி என்ற முனிவரின் பத்தினிமீது மோகம் கொண்டான். அதனால் அந்த மன்னனை பெருச்சாளியாக மாற முனிவர் சபித்தார். பெருச்சாளியான மன்னன் அனைவரையும் பல வழிகளில் துன்புறுத்தவே, அவனை அடக்கி தன் வாகனமாக்கிக்கொண்டார் விநாயகர்.

விநாயகர் வாகனங்கள்கலியுகத்தில் விநாயகரின் வாகனம் குதிரை என்கிறது விநாயக புராணம்.

சிம்மம், மயில், மூஷிகம், குதிரை மட்டுமின்றி, காளை (ரிஷபம்), யானை ஆகியவையும் விநாயகருக்கு வாகனங்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் விநாயகர் கோவில்களில் மூஷிகம் வாகனமாய் இருப்பதைக் காணலாம். மற்ற வாகனங்கள் உள்ள திருத்தலங்கள்:

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலிலும்; சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்குமுன் அமைந்திருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலிலும் சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் பஞ்சமுக விநாயகரை தரிசிக்கலாம்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் சுதை வடிவத்திலும், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலிலுள்ள சித்திரத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் கோவிலிலும் மயில்வாகனத்துடன் விநாயகர் காட்சிதருகிறார்.

கோவை குரூபதேசிக கவுண்டர் விநாயகர் கோவிலிலும், கடலூர் சென்னப்ப நாயக்கன்பாளையம் மலையாண்டவர்  விநாயகர் கோவிலிலும் குதிரை வாகனத்துடன் அருள்புரிகிறார். சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலும், நெல்லை காந்திமதியம்மன் கோவிலிலும் விநாயகர் சந்நிதிக்கு முன் வாகனமாக காளை இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வைத்தியநாத சுவாமி ஆலய வாசலில் அருள்புரியும் ஸ்ரீகல்யாண விநாயகரும், திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையிலுள்ள அரசாள் வார் விநாயகரும் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்கள்.

விநாயகர்-21

விநாயகரை இருபத்தியொரு எண்ணிக் கையிலான பூஜைப் பொருட்களால் வழி படுதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

மலர்கள் 21, இலைகள் 21, பழங்கள் 21, அறுகம்புல் 21, மோதகம் 21, அதிரசம் 21, அப்பம் 21.மனிதனுக்குள் இருக்கும் இந்திரியங்கள் 21.அவை: ஞானேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; மனம் 1. ஆக இந்திரியங்கள் 21. இந்த 21 இந்திரியங்களிலும் நிறைந்து அருள்பாலிக்கும் ஓங்கார உருவம் படைத்தவர் விநாயகர் என்று ஞான நூல்கள் கூறுகின் றன.

21 பொருட்களை சமர்ப்பித்து வழிபட நமக்கு 21 அம்சங்களை அள்ளிக்கொடுப்பார் விநாயகர்.

தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வு, அழகு, வீரலட்சுமியின் அருள், விஜயலட்சுமியின் கடாட்சம், எல்லாரும் விரும்பும் தன்மை, குடும்பத்தில் ஒற்றுமை, மக்கட்செல்வம், நல்லறிவு, பதவி, நற்புகழ், துன்பம் வராமை, தீயதை அகற்றுதல், செல்வாக்கு, சாந்த
குணம், பிறர் நம்மீது பொறாமைப்படாமல் இருத்தல் ஆகிய 21 சிறப்புகளை நமக்கு அள்ளித்தரும் மாபெரும் வள்ளல் விநாயகப் பெருமான்!

விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.

நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்து                     லம்போதராய
ஏக தந்தாய விக்ன நாசினே
சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:

விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.


மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப… அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது’

என்கிறார் வள்ளுவர். ஆழி என்றால் கடல். பிறவாழி என்று குறிப்பிட்டுள்ளது

அன்பு, ஆசை, பாசம், நோய் போன்றவை. ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்து கிறோம் என்றால் அது அன்புக்கடல். அந்த அன்பு மிகுதியாகும்பொழுது வருவது ஆசை. அது மிகுதியாகும்போது ஆசைக்கடல். அதுவும் மிகுதி யாகும்போது பாசக்கடல்.

அந்த பந்தபாசம் மிகுதியாகும் பொழுது வருவது நோய்க்கடல். இத்தகைய பிற ஆழிகளைக் கடக்கவேண்டுமென்றால் அறவாழி அந்தணனிடம் சரணா கதி அடைவதுதான் வழி. அப்படி யென்றால் யார் அவன்?

தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவன் அண்ட சராசரங்களை படைக்கின்ற இறைவன். அனைத்து தெய்வங் களும் சக்திவாய்ந்தவைதான். அதேசமயம் முதலில் பிள்ளையார் சுழி போட்டுதான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு. எனவே அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர். அவரைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம். ஞானமுதல்வனான அந்த விநாயகப் பெருமான் சிறப்புடன் விளங்கும் தலங்கள் பலவுண்டு. அவற்றிலொன்று கோவையில் அமைந்திருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில்.

மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படுகின்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கோவிலுக்காக ஒரு விநாயகர் சிலை வடிக்க மதுரையிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அங்கு அழகுற வடிவமைத்த சிலையை மாட்டுவண்டி மூலம் பேரூருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வாறு வரும்போது கோவை எல்லையில் ஈச்சங்காடு என்ற இடத்தில் வண்டியின் அச்சு உடைந்துவிட்டது. எனவே விநாயகர் சிலையை இறக்கி மேடான பகுதியில் வைத்துவிட்டு வண்டியைப் பழுதுபார்த்தனர். பின்னர் விநாயகர் சிலையை எடுத்து வண்டியில் வைக்க எவ்வளவோ முயன்றும் அதை அசைக்கவே முடியவில்லை.

அச்சமயம் யானை பிளிரும் சப்தத்துடன் ஒரு அசரீரி குரல், “நான் இங்கேயே இருக்கிறேன்’ என்று ஒலித்தது. அதைக்கேட்டு அதிசயித்த பக்தர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விநாயகர் விருப்பப்படி- ஈசன் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே ஈச்சங்காட்டு விநாயகர் என்ற திருநாமத்துடன் சிறிய அளவில் கோவில் எழுப்பினர். அதன்பின் ஒரு பிராகாரத்துடன், ஒரு சுற்று மண்டபத்துடன் 1973 வரை காட்சி யளித்தது. அதன்பின் ராஜகோபுரம், உள்சுற்று மண்டபம், வெளிச்சுற்று மண்டபம், யாகசாலை மண்டபம், மகாமண்டபம் என எழிலுடன் வடிவமைத்து 13-6-1977-ல் சிறப்பாக கும்பா பிஷேகம் செய்தனர். ஈச்சங்காட்டு விநாயகர் என்ற பெயர் மருவி ஈச்சனாரி விநாயகர் என்றானது.

இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், சிறப்பு டன் விளங்குகிறது ஆலயம்.

இந்த விநாயகர் பெருமை குறித்து ஒரு செவிவழிச் செய்தி உண்டு. சுமார் எண்பது வருடங் களுக்குமுன் ஒரு வசதிமிக்க குடும்பம், ஈச்சனாரிக்கு தென்புறம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்தது. ஒருநாள் நள்ளிரவில் கொள்ளையர் இருவர் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை களைக் களவுசெய்து தப்பித்துச் சென்றனர். பொழுது விடிந்த பின்னரே நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டிலிருந்தபடியே இந்த விநாயகப் பெருமானை வணங்கி கோரிக்கை வைத்தாள் அந்த குடும்பத் தலைவி. அச்சமயம் கொள்ளையர்களை ஒரு ஒற்றை யானை பிளிறிய வண்ணம் துரத்திவந்தது. கொள்ளை யர்கள் அங்குமிங்கும் ஓடி ஈச்சங்காட்டு வழியே வந்து, விநாயகர்முன் நகைகளைப் போட்டு விட்டு வடக்கு நோக்கி ஓடி, ரயிலில் அடிபட்டு மாண்டனர். அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி விரத மிருந்து விநாயகப் பெருமானை வழிபடுவது அந்தப் பெண்மணியின் வழக்கம். களவுபோன நகைகள் அந்தப் பெண்மணிக்கு திரும்பக் கிடைத்தது. எனவே சங்கடஹர சதுர்த்தியில் இவரை வழிபட்டால் இழந்ததைத் திரும்பப் பெறலாம் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

அஸ்வினி முதலான ஒவ்வொரு நட்சத்திர நாளிலும், அந்த நட்சத்திரப் பெயரில் இந்த விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் படுகிறது.

அஸ்வினி- தங்கக் கிரீடம், அறுகம்புல் அலங்காரம்.

பரணி- அறுகம்புல் மாலை.

கார்த்திகை- வெள்ளிக்கவச அலங்காரம்.

ரோகிணி- சந்தன அலங்காரம்.

மிருகசீரிடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

திருவாதிரை- நிறைமணி (காய்கறி) அலங்காரம்.

புனர்பூசம்- தாமரைப் பூமாலை.

பூசம்- தங்கக் கிரீடம், மாலை அலங்காரம்.

ஆயில்யம்- பச்சிலை அலங்காரம்.

மகம்- திருநீறு அலங்காரம்.

பூரம்-  அன்னம், கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

உத்திரம்- பழ அலங்காரம்.

ஹஸ்தம்- வஸ்திர அலங்காரம்.

சித்திரை- தங்கக் கிரீடம், வெள்ளிக்கவச அலங்காரம்.

சுவாதி- தங்கக் கவசம், அன்ன அலங்காரம்.

விசாகம்- தங்கக் கிரீடம், ரோஜா மாலை.

அனுஷம்- தங்கக் கிரீடம், வெள்ளிக்கவசம், அறுகம்புல் அலங்காரம்.

கேட்டை- வெள்ளிக் கவசம், குங்கும அலங்காரம்.

மூலம்- வெற்றிலை அலங்காரம்.

பூராடம்- சம்பங்கி மாலை அலங்காரம்.

உத்திராடம்- சுவர்ண அலங்காரம்.

திருவோணம்- மலர் அலங்காரம்.

அவிட்டம்- குங்கும அலங்காரம்.

சதயம்- அன்ன அலங்காரம்.

பூரட்டாதி- தங்கக் கவசம், ரோஜா மாலை அலங்காரம்.

உத்திரட்டாதி- தங்கக் கவச அலங்காரம்.

ரேவதி- வெண்ணெய் அலங்காரம்.

ஈச்சனாரி விநாயகர் ஆலயத்தின் சிறப்பம்சங்கள்

அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து சேவார்த்திகள் தரிசிக்கும் வண்ணம் திறந்திருக்கும் ஆலயம்.

அனுதினமும் பிரம்மமுகூர்த்த வேளையில் கணபதி ஹோமம் நடக்கும்.

ஆறுகால பூஜைகளுடன் அபிஷேகம், அர்ச்சனைகள் சிறப்புற நடக்கும்.

அனுதினமும் மதியம் அன்னதானம் நடக்கும்.

வெள்ளிக்கிழமையன்று வாகன பூஜைகள் விமரிசையாக நடக்கும்.

கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கினால் பதிவெண்ணை வாகனத்தில் எழுதுவதற்குமுன் விநாயகரிடம் சமர்ப்பித்த பின்தான் (அதாவது ஈச்சனாரியில் வருகைப் பதிவு செய்தபின்தான்) மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளனர். வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம்.

அனுதினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார்.

அம்மையப்பன் அம்சமாக (அர்த்தநாரி) இங்கு விநாயகர் அருள்புரிகிறார்.

அன்பே சிவம் என்பதற்கேற்ப, காலணி விடும் இடத்திலும் சரி; தரி சனம் செய்யும் இடத்திலும் சரி; அர்ச்சகர்களிடமும் சரி; திருக்கோவில் நிர்வாகி களிடமும் சரி- இன்முகத் துடன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம். குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் என்பது கண்கூடு.

தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, சதவிகித அடிப்படையில் பகிர்ந்துகொள்கின்ற பண்பு வேறெங்குமில்லாத சிறப் பம்சம்.

அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.

ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.

இத்தகைய சிறப்புமிகு ஆலயம் கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், கோவையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆலயத் தொடர்புக்கு: 0422- 2672000, 2677700.

உமையொரு பாகம் கொண்ட ஈசனின் ஒருங்கிணைந்த வடிவமுடைய ஈச்சனாரி விநாயகரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டு கிடைத்தற்கரிய பெரும் பேறைப் பெறுவோம்!

படங்கள்: போட்டோ கருணா

———————————————————————————————————————–

           விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார்.

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.

கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.

பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர்  இயற்றினார்.)

வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங் கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.

ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)

கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.

கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.

லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.

விகடன்- குள்ளமாக இருப்பவர்.

விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.

விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.

தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.

கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.

பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.

கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.

வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.

கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.

ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.

ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.

கணபதிக்கு 21 கொழுக்கட்டைகள் நிவேதனம் செய்வதால் கிட்டும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

1 முதல் 4- தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம்.

5 முதல் 8- கல்வி, பெருந்தன்மை, மோட்சம், அழகான முகம்.

9 முதல் 12- வீரம், விஜயம், மற்றவர்களின் அன்பு, கர்ப்பரட்சை.

13 முதல் 16- குழந்தை, நுண்ணறிவு, நற்புகழ், துக்க நிவாரணம்.

17 முதல் 19- அசுபம் அகலல், வாக்கு சாதுர்யம், கோபம் தணிதல்.

20, 21- பிறர் செய்த ஆபிசாரம் நீங்குதல், துயர் களைதல்.

எளிமையான கொழுக்கட்டை நிவேதனத் திலேயே எவ்வளவு பலன்கள் இருக்கின்றன.

ஒருசமயம் ஔவையார் கணபதி பூஜை செய்துகொண்டிருந்தபோது சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைப் பார்த்தார். உடனே தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பூஜை செய்தார். அப்போது விநாயகர் “நிதானமாகவே பூஜை செய்யுங்கள்’ என்றார். அதன்படி ஔவை, விநாயகர் அகவல் பாடி கணேசனைப் பூஜித்தார். அடுத்த கணம், சுந்தரர் கயிலை அடையும் முன்னரே ஔவையை கொண்டுபோய் சேர்த்துவிட்டார் விநாயகர். அத்த கைய விநாயகர் அகவலின் சில வரிகளைக் காண் போமா.

“எல்லையில்லா ஆனந்த மளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத் துள்ளே சதாசிவம் காட்டி
சித்தத் துள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்
அப்பாலுக் கப்பாலாய்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுஅக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.’

அருணகிரியார் தம் திருப்புகழில் ஆனைமுகனை எவ்வாறு துதிக்கிறார் என்று காண்போமா?

“உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகி பலகாலும்
எந்தனுக் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.’

வள்ளி கந்தனை அணைந்திட வள்ளி மலைக்கு வந்த ஐந்துகர விநாயகனே! தந்தையை வலம்வந்து கனி பெற்றவனே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு நிலைப்பொருளாக  விளங்கி, தேவலோகத்து கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி போன்று கேட்பனவற்றையெல்லாம் தந்து மகிழச் செய்பவனே என்று போற்றுகிறார் அருணகிரி.

தமிழில் “கந்தபுராணம்’ செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு “திகடச் சக்கர’ என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது  முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.

முதல் பாடலான-

“திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம்            போற்றுவாம்’

என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கர’ என்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். “முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்க ணப் பிழையென்கிறார்களே… நான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் “யாமிருக்கப் பயமேன்’ என்றான்.

மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி “திகடச்சக்கர’ என்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.
“திகடச்சக்கர’ என்பது “திகழ் தசக் கர’ என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

இவ்வாறு பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியாக ஒரு சுவாரசியம் காண்போமா…

நான் கோவாவில் வசித்துக்கொண்டிருந்த சமயம்… 1981-ல் சங்கராச்சாரியாருக்கு பாதபூஜை நடந்தது. அதை நடத்தி வைத்தவர் ஒரு வைணவப் பெரியவர். பூஜைகள் முடிந்ததும் நான் வைணவப் பெரியவரை வணங்கி, “போய் வருகிறேன்’ என்றேன். அவர், “சுக்லாம் பரதரம் வரப்போகிறது. இரு, சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்றார். எனக்குப் புரியவில்லை. சற்று நேரத்தில் காபி வந்தது; அருந்தினோம். பிறகு நான் அவரிடம் “சுக்லாம் பரதரம் வருகிறது என்றீர் களே’ என்று கேட் டேன். அவர் “கணபதி- காபி சுலோகம் தெரியாதா?’ என்று கேட்டுவிட்டு இவ் வாறு விவரித்தார்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே’

என்பது கணபதி சுலோகம். இது காபிக்கும் பொருந்தும்.

சுக்லாம் பரதரம்- நிறைய வெண்மை (பால்).

விஷ்ணும்- கருப்பு. (டிகாக்ஷன்).

சசிவர்ணம்- சந்தன நிறம். (பாலும் டிகாக் ஷனும் சேர்ந்த நிறம்).

சதுர்புஜம்- நான்கு கரங்கள். (சூடாக இருப் பதால் இரண்டு கைகள் அல்லாது இரண்டு கைக்குட்டையும் தேவை).

பிரசன்ன வதனம்- ஆனந்த முகம். (அத்த கைய காபி குடித்தால் முகம் நன்கு விளங்கும்).

சர்வ விக்னோப சாந்தயே- தடைகள் அகலும். (காபி குடித்தால் சோர்வு எனும் தடை அகன்று மூளை நன்கு வேலை செய்யும்.)

கணபதி சுலோகத்தை காபிக்கும் பொருத்தி விட்டார் அவர். எதிலும் பொருந்தும் எளிய வரல்லவா கணபதி.

            திமுதல்வன் என்று போற்றப் படுபவர் பிரணவ வடிவினரான விநாயகப் பெருமான். “இல்லாத  இடமில்லை’ என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்களைக் காண்போமா….

தமிழகத்திலேயே மலை உச்சியில் தனக்கென தனிக்கோவில் கொண்டு அருள்புரிபவர் திருச்சி மலைக்கோட்டை யிலுள்ள உச்சிப்பிள்ளையார். ஸ்ரீராமபிரான், இலங்கைப் போரில் தனக்கு உதவிபுரிந்த விபீஷணனுக்கு  ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசளித்தார். அதை  தரையில் வைக்கக்கூடா தென்றும் அறிவுறுத்தினார். விபீஷணன் அந்த விக்ரகத்துடன் இலங்கை நோக்கிச் செல்லும்போது திருச்சி பகுதிக்கு வந்தான். காவேரியில் நீராடி தன் அன்றாடக் கடமைகளைச் செய்ய எண்ணினான் அவன். ஆனால் விக்ரகத்தைக் கீழே வைக்கக்கூடாதே. என்ன செய்வதென்று அவன் யோசித்தபோது அங்கு விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் தோன்றினார். சிறுவனைக் கண்டு மகிழ்ந்த விபீஷணன், விக்ரகத்தை சற்றுநேரம் வைத்திருக்குமாறு கூறிவிட்டு நீராடச் சென்றான். சிறிது நேரம் பொறுத்திருந்த விநாயகர் விக்ரகத்தைக் கீழே வைத்துவிட்டார். திரும்பிவந்த விபீஷணன் விக்ரகம் தரையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அதைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் முடியவில்லை. இப்படி, உச்சிப்பிள்ளையாரின் திருவிளையாடலால் அமைந்ததுதான் ஸ்ரீரங்கம் திருக்கோவில்.காரைக்குடி அருகிலுள்ள பிள்ளையார் பட்டி திருத்தல விநாயகர் வித்தியாசமானவர். அவர் குடைவரைக் கோவிலில் எழுந்தருளியுள்ளார். அதாவது பாறையைக் குடைந்து வடிக்கப்பெற்ற உருவம். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பிள்ளையாருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. வலது திருக்கரத்தில் சிறிய லிங்கத்திருமேனியை வைத்துள்ளார். இடக்கரம் தொந்தியைச் சுற்றியுள்ள கச்சைமீது உள்ளது. வலம்புரி விநாயகரான இவரைச் சுற்றி ஒன்பது சரவிளக்குகள் தொங்குகின்றன. இந்த ஒன்பது விளக்குகளும் நவகிரகங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இவர் இங்கு மூஷிக வாகனம் கொண்டு விளங்கவில்லை. இடப்பக்கம் பெண் யானையைப்போல் தந்தம் குறுகியும், வலப்பக்கம் ஆண் யானையைப்போல் தந்தம் நீண்டும் ஆண் பாதி- பெண் பாதி என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பேதங்களைக் கடந்தவராகக் காட்சி தருகிறார்.

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவை புலியங்குளம் திருத்தலத்தில் அருள்புரிகிறார். 19 அடி, 10 அங்குலம் உயரமும்; 11 அடி 10 அங்குலம் அகலமும்; 190 டன் எடையும் கொண்டு ஒரே கல்லில் அமைக்கப்பெற்றவர். வலப்புறம் ஆண் தோற்றமும், இடப்புறம் பெண் தோற்றமும் கொண்டுள்ளார். மாதம்தோறும் சங்கடஹரசதுர்த்தி மற்றும் சித்திரை முதல் தேதியில், பத்து டன் எடையுள்ள பழங்களைக்கொண்டு மாலை அணிவித்து அலங்கரிப்பர்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும், திருச்சி பாலக்கரைப் பகுதியிலும், மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்திலும், திருச்சி உத்தமர் கோவிலிலும், ஊட்டி பேருந்து நிலையம் அருகிலும், மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடியிலும், கொல்லிமலை கொல்லிப்பாவைக் கோவிலுக்குச் செல்லும் வழியிலும் மற்றும் சில கோவில்களிலும் ஒரே சந்நிதியில் இரட்டைப் பிள்ளையார்கள் அருள்புரிவதைக் காணலாம். இவர்களை தரிசித்தால் இரட்டைப் பலன்கள் கிட்டும் என்பர். மேலும் துவிமுக கணபதி என்ற பெயரில் இரண்டு தலைகளையுடைய விநாயகரை சில கோவில்களின் கோபுரத்தில் சுதை வடிவில் காணலாம்.

மூன்று விநாயகர்கள் ஒரே சந்நிதியில் அமர்ந்து அருள்புரிவதை திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் கோவிலில் தரிசிக்கலாம். இத்திருக்கோவிலில் அருள்புரியும் மாரியம்மன் ஆரம்பகாலத்தில் கோரைப்பற்கள்  தெரிய, சிவந்த கண்களுடன் மிகவும் உக்கிரமாக இருந்தாள். அவள் உக்கிரத்தைக் குறைக்க காஞ்சி மாமுனிவர் யோசனைப்படி, ஆலய நுழைவாயிலின் வலப்புறத்தில் ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி  என்ற மூன்று விநாயகர்களை எழுந்தருளச் செய்தனர். பின்னர் அம்மனின் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சாந்தசொரூபியாக புதிய தோற்றம் கொண்டாள். 1970-ஆம் ஆண்டு புதிய திருவுருவை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்குள்ள மூன்று விநாயகர்களை தரிசிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சாந்தம், வளமான வாழ்வு கிட்டும் என்பர். இதேபோல் மூன்று விநாயகர் கள் ஒரே சந்நிதியில் எழுந்தருளியிருப்பதை திருப்பரங் குன்றம் முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.

நான்கு தலைகள் கொண்ட விநாயகரை  துவிஜ கணபதி என்பர். இவர் தன் கரங்களில் மின்னல் கொடிபோன்று ஒளிவீசக்கூடிய வளையல்கள் அணிந்தவர்; சந்திரன் போன்ற நிறமுடையவர்; புத்தகம், ஜெபமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவர் என்று விநாயக புராணம் கூறுகிறது.

ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம் அறந்தாங்கி. ஆவுடையார் கோவிலிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப் புனவாசலிலும் இதுபோல தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் ஒரே பீடத்தில் தனித்தனியாக ஐந்து பிள்ளையார்கள் வரிசையாகக் காட்சி தருகின்றனர்.

வரிசையாக ஆறு விநாயகர்கள் எழுந்தருளியிருப்பதை தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் சிவாலயத்தில் காணலாம்.

ஒரே சந்நிதியில் ஏழு விநாயகர்கள் வரிசையாக அருள்புரிவதை நெய்வேலி சிவாலயத்தில் தரிசிக்கலாம். இதேபோல் திருச்சிக்கு  அருகிலுள்ள லால்குடி திருத்தலத் திலுள்ள ஸ்ரீசப்தகிரீஸ்வரர் கோவிலிலும் காணலாம்.

ஒரே சந்நிதியில் ஒன்பது விநாயகர்கள் அருள்புரியும் திருத்தலம், திருவெண்காடு அருகே அமைந்துள்ள திருநாங்கூர் ஆகும்.

வடஆற்காடு மாவட்டம், சேண்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் பதினோரு விநாயகர்களை தரிசிக்கலாம். இந்த பதினோரு விநாயகர்கள் லிங்க வடிவில் காட்சி தருகிறார்கள். மேலும் திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் சிவாலயத்திலும் பதினோரு விநாயகர்கள்  ஒரே சந்நிதியில் காட்சி தருகிறார் கள்.

ராமேஸ்வரம் ஸ்ரீசங்கரமட வளாகத்திலுள்ள ஒரு தூண் பீடத்தில் பதினாறுவிதமான விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு  பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோவிலில், வாதாபி கணபதியைச் சேர்த்து 56 கணபதிகள் உள்ளனர்.

108 விநாயகர்கள் ஒரே இடத்தில் வரிசையாக அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் உள்ளன. அந்த வகையில், திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் அமைந் துள்ள விநாயகர் கோவிலில், 108 விநாயகர்கள் எட்டு அடுக்குகளில் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோவிலில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி யிருக்கும் விநாயகர் சுமார் 16 அடி உயரத்தில் விஸ்வரூபத்தில் அருள்புரிகிறார். இதேபோல் காரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர்.

ஒரே சந்நிதியில் 108 விநாயகர்கள் அருள் புரியும்  திருத்தலம் கோவை பந்தயசாலை (ரேஸ்கோர்ஸ்) பகுதியிலுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம். இங்கு ஸ்ரீசக்கர வடிவில் 108 விநாயகர் சிலைகள் உள்ளன. இவையனைத்தும் 108 நாம வழிபாட்டின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த 108 விநாயகர்களும் உருவத்தில் வேறுபாடு கொண்டவர்கள் என்பது தனிச்சிறப் பாகும்.

விநாயகர் யானை முகத் துடன் பெரும்பாலான கோவில்களில் அருள்புரிவதைப்போல், மனித முகம்கொண்ட ஆதிவிநாயகர் நாகை மாவட்டம் செதலபுரி திருத்தலத்தில் அருள்புரிகிறார். இதேபோல் தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலிலும், திருச்சி துறையூருக்கு அருகிலுள்ள புளியஞ்சோலை என்னுமிடத்திலும் நரமுக கணபதியை தரிசிக்கலாம். கோவை, குனியமுத்தூர் கோவிலில் சபரிமலை ஐயப்பனைப்போல் யோக பட்டம் தரித்து, இளஞ்சூரிய நிறத்தோடு, யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார் விநாயகர். இடது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும்; இடது முன்கையில் யோகதண்டமும், பின்கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். இவர் பக்தர்களுக்கு அஷ்ட யோகங்களையும் வழங்குவதாக ஐதீகம்.

விநாயகரின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் விநாயகரின் வாகனம் சிங்கம்; திரேதாயுகத்தில் மயில்; துவாபரயுகத்தில் மூஷிகம்; கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் தரிசிப்பது அரிது.

நாகை நீலாயதாட்சி ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர் சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இதேபோல் சென்னை திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங் களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ளார்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும், திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலிலுள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோவை குரூபதேசீகக் கவுண்டர் ஆலயத்திலும், கடலூர் வட்டம், சென்னப்ப நாயக்கன் பாளையத்திலும், மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருவதைக் காணலாம். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில், வைத்தியநாதசுவாமி ஆலயத்திலுள்ள விநாயகருக்கு யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலய விநாயகருக்கு வாகனமாக காளை உள்ளது. இதேபோல் நெல்லை காந்திமதியம்மன் கோவில் விநாயகர் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.

இந்தோனேஷியா நாட்டில் விநாயகரின் வாகனம் ஆமை. பொதுவாக, விநாயகர் திருவுரு வில் நான்கு கரங்கள் இருக்கும். சில கோவில்களில் இக்கரங்கள் மாறு பட்டிருப்பதையும் தரிசிக்கலாம்.

ஒரு கரம், தும்பிக்கை கொண்ட வர் மதுரை, மாத்தங்கரையிலுள்ள கோடாரி விநாயகர் ஆவார்.

இரண்டு கரங்களுடைய விநாயகரை பிள்ளையார்பட்டியில் தரிசிக்கலாம்.

சீனாவில் மூன்று கரங்களுடன் விநாயகர் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் கொண்ட விநாயகரை பல திருக்கோவில்களில் தரிசிக்கலாம்.

ஆறு கைகள் கொண்ட கணபதி மும்பையில் அருள்புரிகிறார்.

திருச்செந்தூரில் ஏழு கரங்களுடன் காட்சி தரும் விநாயகரை உச்சிஷ்ட கணபதி என்பர்.

நான்கு முகங்கள், எட்டு கைகளுடன் கணபதி சீன நாட்டில் அருள்புரிகிறார்.

ஒன்பது கரங்கள் கொண்ட கணபதியை தருண கணபதி என்பர். சில கோவில் கோபுரங்களில் காணலாம்.

பத்துக் கரங்கள் கொண்ட பஞ்சமுக கணபதியை சேலம் கந்தாஸ்ரமத்திலும், குச்சனூர் திருத்தலத்திலும் தரிசிக்கலாம்.

பதினோரு கரங்களுடைய கணபதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் எழுந் தருளியுள்ளார்.

பதினைந்து கரங்கள் கொண்ட ஹேரம்ப கணபதி மும்பையில் பல இடங்களில் கோவில் கொண்டுள்ளார்.

பதினேழு கரங்கள் கொண்ட கணபதியை வீரகணபதி என்பர். பதினெட்டு கரங்கள் கொண்ட கணபதியை தமிழகத்தில் சில கோவில் விமானங்களில் காணலாம்.

விநாயகப் பெருமான் எந்தவிதமான தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சியை வழங்குவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை

              சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கினால்தான் அக்காரியம் விக்னமின்றி நல்ல முறை யில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும்.

நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது வினைகள். இந்த வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி. இவர் 18 கணங்களுக்கும் அதிபதி. இவரை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இவர் இணையற்றவர். மிகவும் எளிமையானவர். அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இந்தியாவில் சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காணமுடியாது. ஈடிணையற்ற தெய்வங் களான ஈசன், பெருமாள் இவர்களுக்கு எல்லா இடங்க ளிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியல்ல.

தெருக்கோடி, முச்சந்தி, மரத்தடி, குளக்கரை- ஏன் வீட்டில் விளக்கு மாடம் போன்ற சிறு இடத்திலேயேகூட பிள்ளையாரை நிறுவி வழிபடலாம். இதுவன்றி பசுஞ்சாணம், மஞ்சள் பொடி யில்கூட பிள்ளையாரை உருவாக்கிவிடலாம். பிடித்து வைத்தால் பிள்ளையார் தான்.

திதிக்குரிய கணபதிகள்

பொதுவாக விநாயக ருக்கு சதுர்த்தி திதிதான் உகந்தது. என்றாலும் திதி ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்தந்த நாளுக்குரிய கணபதியை வழிபடுவ தால் சிறந்த நற்பயன்கள் பெறலாம்.

பிரதமை- பால கணபதி, துவிதியை- தருண கணபதி, திரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி, சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லட்சுமி கணபதி, திரயோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. ஒவ்வொரு நாளிலும் அந்தந்த திதிக்குரிய கணபதியின் நாமத்தை 21 முறையோ, 108 முறையோ ஜெபித்து பக்தியுடன் வழிபட் டால் விக்னங்கள் யாவும் விலகி, சகல வளங்களும் கைகூடும்.

நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்று கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும் இவரை வழிபட்ட  பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடையும்போது கணபதியை வணங்காமல் செய்ததால் முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர். கடல் நுரை விநாயகரை திருவலஞ்சுழி தலத்தில் காணலாம்.

சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் விரைவாகச் சென்றார். வழியில் தேரின் அச்சு முறிந்தது. கணபதியை வழிபடாததால்தான் இப்படியானது என்று, கணபதி வழிபாடு செய்து அதன்பின் திரிபுரத்தை எரித்து முடித்தார் சிவன். அச்சு முறிந்த இடம்தான் சென்னை அருகே யுள்ள அச்சிறுபாக்கம்.

பஞ்சபூத விநாயகர்கள்

திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும்; திருவானைக்கா விநாயகர் நீரையும்; சிதம்பரத்திலுள்ள விநாயகர் ஆகாயத்தையும்; திருக்காளத்தி விநாயகர் வாயுவையும்; காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும் என்பர்.

தேசிய விழா

ஆதிகாலம் முதலே விநாயகர் சதுர்த்தி விழா இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய விழா வாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும், தியாகியுமான பால கங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் உள்ள தகடுசேத் கணபதி கோவிலில் தான் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாகக் கொண்டாடினர். இவ்விழா பத்து நாட்கள் நடந்தன.  இதையே ஆண்டுதோறும் பற்பல இடங் களில் பொதுவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

கணபதி பட்டம்

ஒருசமயம் சிவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. திருக் கயிலாயத்தில் தன்னை வணங்கி வழிபடும் கணங்கள் அனைத் திற்கும் அதிபதியாக தன் பிள்ளை கள் இருவரில் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். யாரை நியமிப்பது என்று யோசித்த வர், முன்பு செய்த ஞானப்பழ திருவிளையாடல் போல் மற்றுமோர் திருவிளையாடலை நடத்த திட்டமிட்டார்.

மகன்கள் இருவரையும் அழைத்து, “”யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறாரோ அவரே கணங்களின் தலைவர்” எனக் கூறினார். ஏற்கெனவே ஏமாந்த கந்தன் இம்முறை உடனே தாய்- தந்தையரை சுற்றிவர ஆரம்பித்தார்.

பிரபஞ்சமே “ராம’ நாமத்தில் அடங்கியுள்ளது என்ற ரகசியம் அறிந்த பிள்ளையார் தரையில் “ராம’ என எழுதி உடனடியாக அதைச் சுற்றிவந்து முருகனை முந்திவிட்டார்; வெற்றியும் பெற்றார்.

விநாயகரின் புத்திசாலித்தனத்தையும், சமயோசித புத்தியையும் வியந்த ஈசன் கணங் களுக்கு அதிபதி பதவியைக் கொடுத்து, “”விநாயகா, இனி கணபதி என்ற திருநாமத்துடன் விளங்கு வாய்” என்றார்.

கணபதி ஞானத்தின் உருவம். வேதங்களில் உள்ளதுபோல யோக அடிப்படையில் வேதாந்த பூர்வமாக உள்ளவர். மூலாதாரமானவர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம்

அதிகாலை வீட்டை தூய்மைப்படுத்தி நீராடிவிட்டு, மூஷிக வாகனனை நினைத்து கடைக்குச் சென்று வலம்புரியாகவுள்ள மண் பிள்ளையாரை வாங்கி வரவேண்டும். அலங் காரம் செய்தபின் தொப்பையில் காசு வைத்து, விநாயகருக்கு குடை வைக்கவேண்டும்.

பின் இவரை பூஜையறையில் மனையில் அமர்த்தி, இருபுறமும் விளக்கேற்றி, முன்புறம் இலை யில் 21 வகையான நைவேத்திய பண்டங்களை வைக்கவேண்டும். இதில் மோதகம், சுண்டல் கண்டிப்பாக இருக்கவேண்டும். எத்தனை மலர்மாலை இட்டா லும் அறுகு மாலையும், எருக் கம்பூ மாலையும் கண்டிப்பாக சூட்டவேண்டும்.

“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’
என்ற கணபதி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அத்துடன்,
“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’

என்ற விநாயகர் சித்தி மந்திரத்தையும் கூறலாம். முடிந்தால் 21 முறை அல்லது 108 முறைகூட ஜெபிக்கலாம். பின் தூப தீப நைவேத்தியம் முடிந்ததும், பட்சணங்களை மற்றவருக்கு கொடுத்தபின் நாம் உண்ணவேண்டும். விநாயகர் சிலை பின்னப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்று முதல் 1, 3, 5, 7-ஆம்  நாட்கள் ஒன்றில் விநாயகரை ஆறு, ஏரி, கிணறு, சமுத்திரம் எங்காவது நீரில் கரைக்க வேண்டும். இதை ஆண்கள்தான் செய்ய வேண்டும். 1, 3, 5, 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை வந்தால் அன்று செய்யாமல் மற்றொரு ஒற்றைப் படை நாளில் கரைக்கலாம். அப்போது விநாய கரைப் பார்த்து, “பிள்ளையாரப்பா! இன்று போய் அடுத்த வருடம் வா’ எனக் கூறவேண்டும்.

கணபதியின் அறுபடை வீடுகள்

முருகனுக்கு உள்ளதுபோல் அண்ணன் கணபதிக் கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. திருவண்ணா மலை செந்தூர விநாயகர், விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார், மதுரை முக்குறுணிப் பிள்ளை யார், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திரு நரையூர் பொள்ளாப் பிள்ளையார்.


தூர்வா கணபதி விரதம்

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லை நிறைய பரப்பி, புல்லின்மீது ஸ்ரீகணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில், “கணபதயே நம: உமாபுத்ராய நம: அகநாசநாய நம: ஏகதந்தாய நம: இபவக்த்ராய நம: மூஷிகவாஹனாய நம: வினாயகாய நம: ஈசபுத்ராய நம: ஸர்வஸித்திப்ரதாயகாய நம: குமாரகுரவே நம:’ என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//

இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்துஇடையூறுகளும் விலகி எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். 10-8-2013 

அன்று இந்த விரதநாள் அமைகிறது.

சீதளா சப்தமி விரதம்

சிராவண மாத சுக்ல பக்ஷ சப்தமிக்கு சீதளா சப்தமி என்று பெயர். அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

அசுரர்களின் தொல்லையால் கடும் வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும் (வைசூரி) கடும் ஜுரத்துடனும் உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள். தேவர்களின்துயர் துடைக்க சிவனின் ஜடையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் சுடரொளி ஒன்று தோன்றி அம்மனாக உருப்பெற்றது. அந்த அம்மனே சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

சீதளா சப்தமியன்று சீதளா தேவியை பூஜை செய்து, மாம்பழமும் வெள்ளரிக்காயும் தயிர் சாதமும் நிவேதனம் செய்து அதை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம். அதாவது அன்று காலை நித்யகர்மாவை முடித்துவிட்டு, “மம புத்ரபௌத்ராதி அபிவிருத்தி த்வாரா சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் ச்ராவண சுக்ல ஸப்தமி புண்யகாலே ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதன தானமஹம் கரிஷ்யே’ என்ற சங்கல்பம் சொல்லி, ஒரு வெள்ளரி இலையில்  தயிர்சாதம் வைத்துக்கொண்டு, ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காயுடன் சேர்த்து, “ஸ பரிவார சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதனம் சீதளா ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே’ என்று சொல்லி தெய்வ சந்நிதியில் வைத்து, பின்னர் அதை ஏழைக்குத் தந்து சாப்பிடச் செய்யவேண்டும். இதனால் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தாலேற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி முதலான நோய்கள் விலகும். மேலும் ஒருபோதும் இதுபோன்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்கும் தோன்றாது என்கிறது ஸ்காந்த புராணம். இது 13-8-2013 அன்று வருகிறது.

அசூன்ய சயன விரதம்

சிராவண மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு,

“லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின்  வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பாத்ம புராணம். இவ்வாண்டு அசூன்ய சயன விரதம் 22-8-2013 அன்று வருகிறது.


முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயங்களில் யானை முகத்தோனாகவே தரிசிக்கிறோம். சற்று வித்தியாசமான வடிவில் நரமுக விநாயகராக திலதர்ப்பணப்புரியிலும், முகமில்லா விநாயகராக சித்தமல்லியிலும் தரிசிக்கலாம்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது.

முதன்முதலில் உருவானவர் என்பதால் இவ்விநாயகர் ஆதிவிநாயகர் என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தலம் பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. திலம்- எள்; தர்ப்பணம்- இறந்தவர்களுக்குச் செய்யப்படும் பித்ருக் கடன்; புரி- தலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யச் சிறந்த இடம் என்பதால் இத்தலம் திலதர்ப்பணப்புரி என்று அழைக்கப்படுகிறது.

ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.

இவ்வாலயத்து ஈசன் முக்தீஸ்வரர்; இறைவி சொர்ணவல்லித் தாயார்.

ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கும், தந்தைக்கு நிகராகத் தான் கருதிய ஜடாயுவுக்கும் இத்தலத்தில்தான் பிண்டம் இட்டார். தசரதர் அதை நேரில் பெற்றுக்கொண்டார் என்பதும், ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறி ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்தன என்பதும் வரலாறு. ஆலயத்தில் பிதுர் லிங்கங்களுக்கு நேராக, ஸ்ரீராமர் வலது காலை மண்டியிட்டு தர்ப்பணம் செய்யும் நிலையில் உள்ள சிலை ஒன்று உள்ளது.

இவ்வாலயத்தைப் பற்றி சிறப்பான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.

கோதாவரி நதிக்கரையில் உள்ள போகவதி நாட்டை நற்சோதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருசமயம் நாரத முனிவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். மன்னன் நாரதரிடம், “”இப்பூவுலகில் எந்தத் தலம் மிகவும் சிறந்த புண்ணியம் வாய்ந்த தலம்?” என்று கேட்டான்.

மன்னனே கண்டறிந்து கொள்ளட்டும் என்பதற்காக தலத்தின் பெயரைச் சொல்லாமல் நாரதர், “”எந்தத் தலத்தில் பித்ருக்கள் பிண்ட தானத்தை நேரில் தோன்றி பெற்றுக் கொள்கிறார்களோ அதுவே உத்தம புண்ணியத்தலம்” என்று கூறினார். பின்னர் நாரதர் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.

நாரதர் கூறியபடி நற் சோதி மன்னன் இந்திய நாட்டிலுள்ள பல தலங்களுக்கும் சென்று திலதர்ப்பணமும், பிண்ட தானமும் செய்துகொண்டு வந்தான். எந்த இடத்திலும் பித்ருக்கள் நேரில் வராத தால் மனம் வருந்திய மன்னன் தன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்தான். அப்போது மன்னன் எதிரில் நாரதர் தோன்றி, “”நான் கூறிய புண்ணிய தலத்திற்கு அருகில் வந்துவிட்டாய்.

சில காத தூரத்திற்கு அப்பால் “திலதைப்பதி’ என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று அரிசிலாற்றில் நீராடி, உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும் பிண்ட தானமும் செய்.

அவர்கள் உன் எதிரில் தோன்றி அவற்றை வாங்கி உண்பார்கள்” என்று கூறினார்.

மன்னன் திலதைப்பதி சென்றான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசிபெற்றான். ஆலயத்திற்குச் சென்று இறைவன்- இறைவியை வணங்கினான்.

அமாவாசையன்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பித்தான். பித்ருக்கள் அவன்முன் தோன்றி, படைக்கப்பட்டபிண்டத்தை ஏற்று உண்டு மகிழ்ந்து மன்னனுக்கு நல்லாசி வழங்கி மறைந்தனர். மன்னன் மனம் மகிழ்ந்தான்.

திலதர்ப்பணப்புரி தலத்திற்கு வந்து பித்ருசாபம், பித்ருதோஷம் போன்றவை நீங்க தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும், இத்தலத்தில் எப்போது வேண்டுமானாலும் பித்ருக்கடன் ஆற்றலாம்.

பார்வதிதேவி உருவாக்கிய திருமேனியின் தலையை சிவபெருமான் வெட்டியபிறகு உள்ள வடிவில் சித்தமல்லி என்ற தலத்தில் தலையில்லாத விநாயகராக அருள்பாலிக்கிறார்.

யானை முகத்தோனாகிய விநாயகரை மனித முகத்துடன்கூடிய வடிவில் திலதர்ப்பணப்புரி யிலும், தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள வடிவில் சித்தமல்லியிலும் வழிபடலாம்

நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் இரண்டு இதிகாசங்களும் போற்றுவது முழுமுதற் கடவுளான விநாயகரையே. நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்கவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த விரதத்தையும் பூஜையையும் மேற்கொள்வதற்கான சில அடிப்படை விவரங்களைக் காண்போம்.

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப் பலகையை வைத்து,அதன்மேல் தலை வாழையி லையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசி யின்மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் “ஓம்’ என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்கவேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண் டும். குன்றிமணி யால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர் கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

“ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா’

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை- மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு.

விநாயகர் சதுர்த்திக்குப் பின், விநாயகர் சிலையை “விவர்ஜனம்’ செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து,

அன்றைய தினமோ அல்லது ஒற்றைப் படையில் அமையும்படியாக 3, 5, 7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளை யார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வழியனுப்பும் நாளன்று, “மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்ப வேண்டும். தொப்பையில் பதித்த காசை  எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

நாத- பிந்து தத்துவம்

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் “ப்ர’ என்பதற்கு விசேஷ என்பது பொருள்; “நவம்’ என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம். “ஓம்’ என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவை யிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

ஆவணியில் வருடப்பிறப்பு

சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே நாம் நாட்களைக் கணிக்கிறோம். சூரியனின் சொந்த வீடு சிம்மம். அங்கிருந்து சூரியன் 12 வீடுகளுக்கும் சென்று வருகிறார். எனவே சூரியன் சிம்மத்திலிருக்கும் ஆவணியே வருடப் பிறப்பாகவும், முதல் மாதமான ஆவணியை, விநாயகரை வணங்கித் தொடங்கும் வழக்கமும் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமுன் வழக்கில் இருந்துவந்தது. காலமாற்றத்தால் சித்திரையே வருடப் பிறப்பாகிவிட்டது. இன்றைக்கும் கேரளாவில் கொல்லம் ஆண்டு ஆவணியில் தொடங்குவதைக் காணலாம்.

தேசிய விழா

விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாகக் கொண்டாடப் பட்டது.

விநாயகரின் திருக்கோலங்கள்

உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக் கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்தபோதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகிறான்.

அந்த விதத்தில் விநாயகரும், அஷ்ட (8) கணபதி, ஷோடச (16) கணபதி, 21 கணபதி, 51 கணபதி, 108 கணபதி என பல கோலங்களில் வழிபடப்படுகிறார். இத்தகைய சில ஆலயங்கள் குறித்துக் காண்போம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தி லும் திருவாலங்காடு அருகேயுள்ள பாசூரிலும் 16 அம்ச ஷோடச கணபதிகளைக் காணலாம். தூத்துக்குடியில் இந்த 16 விநாயகர் சிலைகளும் அடுத்தடுத்து வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள் ளன. நடுவில் பதினாறு திரிகளைக் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாசூரில் விநாயகர்கள் வரிசையாக அடுத்த டுத்து காட்சி தருகின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் 33 விநாயகர்களும், திருவாரூர் ஆலயத்தில் 52 கணபதிகளும் காணப் படுகின்றனர். திண்டுக்கல் சமுத்திரக்கரைத் தெருவில் 108 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குளக்கரையில் மண்சுவர்  கட்டடத்தில் இருந்த இக்கோவிலை மீண்டும் எடுத்துக்கட்ட முனைந்தபோதே 108 விநாயகர் கோவிலாக உருவாக்கும் திட்டம் உருப்பெற்றது.

இவற்றுள் 16 விநாயகர்கள் இரண்டரை அடி உயரத்திலும், மற்றவை 12 அங்குல உயரத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆலய வாசலில் காணப்படும் பிரம்மாண்டமான ஐந்து விநாயகர்களையும் கணக்கில் கொண்டால் 113 விநாயகர்களை தரிசிக்கலாம். இதேபோன்று விதவிதமான விநாயகர் ஓவியங்களை தரிசிக்கும் ஆவல் உள்ளவர்கள் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வரலாம். ஆலயச் சுவரில் 200 விதமான விநாயகரின் ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம்.

“காசியை விட வீசம் உயர்ந்த தலம் கும்ப கோணம் என்று கூறப்படுகிறது. இத்திருத் தலத்தை கோவில் மாநகரம் என்றும் அழைப் பர். புனிதத் தீர்த்தங்கள் ஒன்றுசேர காட்சி யளிக்கும் மகாமகக் குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது. பல பெருமைகள் பெற்ற இத்தலத்தில், காவேரிக் கரையோரம் மடத்துத் தெருவில் எழுந்தருளியுள்ளார் பகவத் பிள்ளையார்!

இந்தப் பிள்ளையார் ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள மடத்துத் தெருவிற்கு அருகில், அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்தார்.

அப்போது வேதாரண்யம் தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத் தில் சேகரித்து புனிதத் திருத்தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறி காட்சி தருகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில் கரைத்து விடு!’ என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தார்.

அவர் சொன்னது போல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து, துணியில் மூட்டைபோல் கட்டி வைத்துக் கொண்டார். அதை ஒரு ஓலைக்கூடை யில் வைத்துக் கொண்டு சீடர் களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயண மானார்.

காசி புனிதமான திருத்தலம்; அங்கு ஓடும் கங்கை புனிதமானது என்பதால், “காசியில்தான் தன் தாயாரின் அஸ்தி பூக்களாக மாறும்’ என்று கருதிய பகவத் முனிவர் காசி நோக்கிப் பயணமானார். வழியில் கும்பகோணம் திருத் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவேரியில் நீராட விரும்பினார். அஸ்தி கலசக்கூடையை அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர், தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு காவேரியில் நீராடச் சென்றார்.

குருநாதர் நீராடிக்கொண்டிருக்கும்போது சீடனுக்கு பசியெடுத்தது. கூடையில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று எண்ணியவன், மண்பாண்டமான அஸ்திக்கலசத்தை ஆவலுடன் திறந்து பார்த்தான். கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பிருந்ததுபோல் வைத்து பத்திரப்படுத்திவிட்டு குருநாதருக்காகக் காத்திருந்தான். நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர் விநாயகரை வழிபட்ட பின், மேற் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

சில நாட்களில் காசிமாநகரத்தை அடைந்து கங்கைக் கரைக்குச் சென்றார். கங்கையில் நீராடிவிட்டு அஸ்திக்கலசத்தைத் திறந்து பார்த்தார். மண் கலசத்திற்குள்ளிருந்த எலும்பு மற்றும் சாம்பல் (அஸ்தி) அப்படியே இருந்தது. அப்போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டி ருந்த சீடன், “கும்பகோணத்தில் கலசத்திலிருந்த பூக்கள் எப்படி அஸ்தியாக மாறியது’ என்று குழப்பமடைந்தான்.

பகவத் முனிவர், “”அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன், மாறவில்லையே” என்று முணுமுணுத்தார். உடனே சீடன், “”குருவே, என்னை மன்னித்துவிடுங்கள். இது அஸ்திக் கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவேரியில் நீராடும்போது, எனக்கு பசி எடுத்தது. மண்பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்தில் பூக்கள் மலர்ந்திருந்தன” என்று பயத்துடன் கூறினான்.

“”இதை ஏன் அங்கேயே கூறவில்லை?” என்று கோபித்துக்கொண்ட பகவத் முனிவர், திரும்ப கும்பகோணம் நோக்கிப் பயணமானார். கும்பகோணம் வந்தடைந்ததும் முன்பு நீராடிய இடத்துக்கு வந்து, காவேரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன் அஸ்திக்கலசத்தை வைத்து விநாயகரை வேண்டினார். பிறகு கலசத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த அஸ்தி பூக்களாக மாறியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தார். அந்தப் பூக்களை அதற்குரிய வழிபாடுகள் செய்து காவேரியில் சங்கமம் செய்தார். இதனால்தான் “காசியைவிட வீசம் அதிகம் கொண்ட திருத்தலம்’ என்று கும்ப கோணம் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவேரிக் கரையே பகவத் படித்துறை என்றும், பகவத் முனிவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையார் “ஸ்ரீபகவத் விநாயகர்’ என்றும் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் பகவத் விநாயகர் காவேரிப் படித்துறையையொட்டியே இருந்தார். கால ஓட்டத்தில் காவேரி குறுகி விட்டது. தற்பொழுது, இங்கே கோவில் கிழக்கு நோக்கி தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.

அரசமரத்தடியிலிருந்த பிள்ளையாருக்கு பகவத் முனிவர் அங்குள்ள பக்தர்கள் உதவியுடன் கோவில் கட்டினார். மிகவும் பழங் காலக் கோவிலான இது தற்பொழுது பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு விக்ரகம் உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் கும்பகோணம் சங்கரமடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம்.

1952-ஆம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீசந்திரமௌலீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவர் யானையின் இரண்டு தந்தங்களையும் இந்த விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்று அடி உயரமுள்ள இரு தந்தங்கள் விநாயகரின் இருபுறமும் அலங்கார மாக வைத்து அருளினார்.  மகாபெரியவர் அளித்த இரண்டு யானைத் தந்தங்களை சங்கட ஹர சதுர்த்தி,  விநாயக சதுர்த்தி மற்றும் சிறப்பு நாட்களில் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு அருகே வைத்து அலங்கரிப்பார்கள்.

இந்தப் பகவத் விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவதுடன், பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேரும் என்பது ஐதீகம்.

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இந்தியாவில் ஒரு சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காண்பது அபூர்வம். ஈடிணையற்ற தெய்வங்களான ஈசனுக்கும் பெருமாளுக்கும் எல்லா இடங்களிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியில்லை. ஒரு தெருக்கோடியிலோ, முச்சந்தியிலோ விநாயகரை ஸ்தாபித்துவிடலாம். ஏன், வீட்டிலேகூட விளக்கு மாடம் போன்ற சிறு இடத்தில் பிள்ளையார் சிலையை நிறுவி வழிபடுபவர்கள் பலர். பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோகூட கையால் பிடித்து பிள்ளையாராக உருவகித்து வழிபடுகிறோம்.

கணபதிக்கு பிரியமான 21

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ,

அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5; கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள் 5+5=10; மனம்-1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்தி ரியங்களும் கர்மேந்திரியங் களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவு படுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் – 21

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

இலைகள் – 21

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக%E