மாசி மாத எண்ணியல் பலன்கள்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள். உங்களைவிட்டு விலகியிருந்த பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் மதிப்பும் மரியாதையும் அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கவேண்டிய மாதம். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர் களால் சில பிரச்சினைகளை சந்தித்து சுமுக தீர்வைக் காண்பீர்கள். லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரத்திலும் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்க வேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். வேலை தேடும் இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். கடிதத் தொடர்பில் அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் நினைத்தபடி அனைத்து நிலைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பொருளாதாரம் எப்போதும் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குரிய மதிப்பெண்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து அதிக லாபம் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் திட்டமிட்டபடி நல்லாட்சி செய்வார்கள். பொதுமக்கள் ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை சந்தித்துவந்த தடை, தாமதங்கள் விலகிச் செல்லும். பணநிலை யில் திருப்தியான வரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனையாகும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணப் பேச்சுகள் கைகூடும். உங்களை நேசித்த ஒருவரை திடீரென்று பிரிய வேண்டிவரலாம். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் படிப்பிற்காக கேட்ட இடஒதுக்கீடுகளைப் பெறுவார்கள். கடிதத் தொடர்புகள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட்டப் படுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல விற்பனையை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் விருப்பப்படி பள்ளிகளில் இடம் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். ஒருசில மாணவர்கள் அரசாங்கப் பரிசுகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டு புகழ்பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நடக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தகுந்த வருமானம் வருவதால் இந்த மாதம் முழுவதும் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒருசிலர் பெற்றோர்களுக்காக கூடுதல் மருத்துவச் செலவு செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் துவங்குவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளால் சிரமத்தை அடைவார்கள். பிரிந்துசென்ற நண்பர்கள் வந்து சேர்வார்கள். புதிய கடன்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்ப சீர்திருத்தம் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத உறவினர்கள் வந்துபோவார்கள். சில தம்பதியர் கருத்து வேற்றுமையால் பிரியநேரலாம். அரசியல்வாதிகள் நியாயத்துக்கு மட்டும் துணைபோவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் எல்லா நிலைகளிலும் காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். பணவரவுக்குக் குறைவில்லை. பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவியின் சேமிப்பு தக்க நேரத்தில் கைகொடுக்கும். ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட போட்ட திட்டம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும். ஒருசில பிள்ளைகள் உயர் பதவியில் அமர்வார்கள். கலப்புத் திருமணம் செய்யவுள்ள காதலர்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை பெருகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். பழ வியாபாரிகள் நல்ல விற்பனையோடு கூடுதல் லாபத்தையும்
அடைவார்கள். கான்ட்ராக்ட் தொழில்புரிவோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் புதிய சிந்தனையோடு கல்வியைத் தொடங்குவார்கள். சிலருக்கு இதுவரை விற்பனையாகாமல் இருந்துவந்த சொத்துகள் விற்பனையாகும். அரசியல்வாதிகள் புதிய நட்புகளால் உயர்வடைவார் கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை குடும்பத்தில் குழப்பம் விளைவித்த உறவுகள் விலகிச்செல்வார்கள். திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதி யருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போதும் சுற்றித் திரிந்த பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டுதல்படி வேலைக்குச் செல்வார்கள். பிள்ளைகளால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை உங்களை வாட்டிவதைத்த பிணி, பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் காண்பார்கள். வழக்குகள் சாதகமாகச் செல்லும். ஒருசிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைத்துவிடும். அரசியலில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைமையால் மாற்றப்படுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இந்த மாதம் அதிர்ஷ்ட பாக்கியங்களைப் பெறுவார்கள். இவர்கள் யோகத்தில் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த தேதிகளில் பிறந்து கலைத்துறையில் வாய்ப்பு தேடும் பெண்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். காலம் கடந்துவந்த திருமணம் இனிதே நடைபெறும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபங்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரம் செய்யக்கூடாது. எப்போதும்போல் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார் கள். அரசு ஊழியர்கள் ஒருசிலர் வேலைப் பளு காரணமாக விருப்ப ஓய்வில் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். சகோதரர்களி டையே இருந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். அரசியல்வாதிகள் பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய பதவிகள் தேடிவரும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந் தூர் முருகன்.

செல்: 94871 68174

ஜூன் மாத எண்ணியல் பலன்கள்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத் துவக்கம் சற்று மந்தமாக இருக்கும். பணத்தை கணக்குவைத்து செலவிட்டால் கூடுதல் செலவினத்திலிருந்து தப்பலாம். செய்யும் தொழிலில் கெடுதல் ஏற்படாமலிருக்க மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும். தனியார் துறைகளில் பணிபுரிவோர், வேறு கம்பெனிக்கு மாறுதல் அல்லது இடமாற்றத்தை சந்திக்கலாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்குவதை தாமதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களால் எந்தப் பிரச்சினையும் வராது. வியாபாரிகள் புதிய தொழில் துவங்குவதையும், கூடுதல் கொள்முதல் செய்வதையும் தவிர்க்கவேண்டும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். அரசுப் பணியாளர்கள் உடன்பணிபுரிகின்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவர்கள் வீணான பொழுதுபோக்கில் நேரத்தைக் கழிக்க மனம்போகும். அதனைத் தவிர்க்