புத்தாண்டு பலன்கள்- 2015 – /ராகு- கேதுவு பெயர்ச்சிகள்


(1-1-2015 முதல் 31-12-2015 வரை)
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக  ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால்  உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு  உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல்  ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள்  போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால்  வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால்  தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு 

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

மாதப் பலன்கள்

ஜனவரி 

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-01-2015 அதிகாலை 02.42 மணிமுதல் 18-01-2015 காலை 07.33 மணி வரை.

பிப்ரவரி

மாதக் கோள் என வர்ணிக்கப்படும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. அசையும்- அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமண சுப காரியங்களுக்கான  முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-02-2015 காலை 11.08 மணி முதல் 14-02-2015 மாலை 05.37  மணி வரை.

மார்ச்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.  கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 11-03.2015 மாலை 05.41 மணிமுதல் 14-03-2015 அதிகாலை 01.31 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 4-ல் குருவும் 8-ல் சனியும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-04-2015 இரவு 11.19 மணி முதல் 10-04-2015 காலை 07.28 மணி வரை.

மே

ராசிக்கு 2-ல்  சுக்கிரனும் 6-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப் படையும். கடன்கள் சற்று குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 05-05-2015 அதிகாலை 05.33 மணி முதல் 07-05-2015 மதியம் 01.02 மணிவரை.

ஜூன்

ராசிக்கு 6-ல் ராகுவும் மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்று வீர்கள். என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிருக்காது. கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். உற்றார்-  உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-06-2015 மதியம் 01.06 மணி முதல் 03-06-2015 இரவு 07.49 மணி வரை. மற்றும் 28-06-2015 இரவு 09.46 மணி முதல் 01-07-2015 அதிகாலை 04.17 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக் கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-07-2015 காலை 06.40 மணி முதல் 28-07-2015 மதியம் 01.50 மணி வரை.

ஆகஸ்ட்

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவையற்ற வீண் பயணங்களைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையி ருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-08-2015 மதியம் 02.42 மணி முதல் 24-08-2015 இரவு 11.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-09-2015 இரவு 09.22 மணி முதல் 21-09-2015 காலை 07.03 மணி வரை

அக்டோபர்

ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமான நிலையில் நடைபெறும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாகச் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கப்பெறும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-10-2015 அதிகாலை 03.09 மணிமுதல் 18-10-2015 மதியம் 01.11 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குருவும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறமுடியும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது,

சந்திராஷ்டமம்: 12-11-2015 காலை 09.11 மணி முதல் 14-11-2015 மாலை 06.44 மணி வரை.

டிசம்பர்

5-ல் குருவும் 6-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். பணம் சேமிக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 09-12-2015 மாலை 04.28 மணி முதல் 12-12-2015 அதிகாலை 01.19 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; நிறம் – ஆழ் சிவப்பு;  கிழமை – செவ்வாய்; கல்- பவளம்; திசை – தெற்கு;  தெய்வம் – முருகன்.பரிகாரம்மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது.

—————————————————————————————————————————
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல்கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்திலுள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று சாதகமின்றி இருந்தாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். உத்தியோ கஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங் களைப் பெற்று உயர்பதவிகளைப் பெறுவீர்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்துவதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டு முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குருவும் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, கை, கால்களில் அசதி, எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படவியலாத நிலை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். மனைவிக்கும் எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  05-07-2015-ல் ஏற்படும் குரு மாற்றத்தால் குரு 4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். அன்றாடப் பணிகளிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களை ஆண்டின் தொடக்கத்தில் அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். இந்த வருடம் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஜீவனாதிபதி சனி 7-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிடமுடியும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.  உயரதிகாரிகள் உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள்மீதிருந்த தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.

தொழில், வியாபாரம்

உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு, வழக்குகளை சந்திக்கநேரிடும். தொழில்ரீதியாக நண்பர்களும் எதிரியாவார்கள். தொழிலிலும் மந்தமான நிலையிலேயே நடைபெறும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்துச் செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள உதவும்.

பெண்களுக்கு

இந்த ஆண்டானது அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கணவரிடம் பிரச்சினை, உறவினர்களிடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் போன்றவை உண்டாகி, மனநிம்மதி குறையும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒற்று மையும் நிம்மதியும் சிறக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தனகாரகன் குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதால் உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள்.  கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கும் நல்ல லாபம் அமையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை முதலீட்டிற்குப் பயன்படுத்தும்போது கவனம்  தேவை.

அரசியல்வாதிகளுக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகளும் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சியடைவீர்கள்.

விவசாயிகளுக்கு

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தன வரவுகளும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பொருளாதாரரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்குப் பின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். உடன்பழகும் நண்பர் களிடம் கவனமுடன் செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டுநடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்கள்


ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சனியும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரியங் களுக்கான முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது  நல்லது.

சந்திராஷ்டமம்: 18-01-2015 காலை 07.33 மணி முதல் 20-01-2015 காலை 08.57 மணி வரை.

பிப்ரவரி

10-ம் தேதி முதல் செவ்வாய் 11-ல் சஞ்சரிக்கவுள்ளதாலும்  11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணவரவுகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைப் பளு சற்று கூடும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-02-2015 மாலை 05.37 மணி முதல் 16-02-2015 இரவு 08.05 மணி வரை.

மார்ச்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்று வீர்கள். தொழில், வியாபாரரீதியாக இருந்த போட்டிகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படு வார்கள். எதிரிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். தொழில். வியாபாரமும் சிறந்த நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-03-2015 அதிகாலை 01.31 மணி முதல் 16-03-2015 காலை 05.47 மணி வரை.

ஏப்ரல்

3-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எல்லாவகையிலும் லாபங்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். 7-ல் சனி சஞ்சாரம் செய்வதால் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-04-2015 காலை 07.28 மணி முதல் 12-04-2015 பகல் 12.57 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 3-ல் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும். நெருங்கியவர்கள் வீண் பிரச்சினைகளை உண்டாக்கு வார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம் என்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதும், பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதைக் குறைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-05-2015 மதியம் 01.02 மணி முதல் 09-05-2015 மாலை 06.30 மணிவரை.

ஜூன்

ஜென்ம ராசியிலேயே சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆராக்கியத்தில் கவனமுடன் இருப்பது,  எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதியாக மாறக்கூடும். பணவரவுகளிலும் இடையூறுகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-06-2015 இரவு 07.49 மணி முதல் 05-06-2015 இரவு 12.18 மணி வரை.

ஜூலை

ராசிக்கு 6-ல் சனியும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எதிலும் ஓரளவுக்கு ஏற்றங்களை அடையமுடியும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் அமையும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-07-2015 அதிகாலை 04.17 மணி முதல் 03-07-2015 காலை 07.52 மணி வரை. மற்றும் 28-07-2015 மதியம் 01.50 மணி முதல் 30-07-2015 மாலை 05.19 மணி வரை.

ஆகஸ்ட்

3-ல் சூரியன், செவ்வாயும் 11-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக உயர்வுகள் உண்டாகும். பூர்வீக வழியிலும் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். கொடுத்த வாக் குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 24-08-2015 இரவு 11.10 மணி முதல் 27-08-2015 அதிகாலை 03.36 மணி வரை.

செப்டம்பர்

ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு ஏற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும்-. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமும் திறமைக்கேற்ற பதவிகளும் கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங் கள் நடைபெறும். பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 21-09-2015 காலை 07.03 மணி முதல் 23-09-2015 மதியம் 01.05 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், குரு சஞ்சரித்தாலும்  11-ல் கேதுவும் மாத- பிற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்க உதவும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தட்சிணாமுர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-10-2015 மதியம் 01.11 மணி முதல் 20-10-2015 இரவு 08.32 மணி வரை.

நவம்பர்

6-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் நிறைய பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்க முடியும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடையமுடியும். சிவனை வழிபடுவது, பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-11-2015 மாலை 06.44 மணி முதல் 17-11-2015 அதிகாலை 02.11 மணி வரை.

டிசம்பர்

ராசிக்கு 4-ல் குருவும் 7-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்பு யாவும் உண்டாகும் என்றாலும் 11-ல் கேது இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 12-12-2015 அதிகாலை 01.19 மணி முதல் 14-12-2015 காலை 07.54 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5, 6, 8; நிறம் – வெண்மை,  நீலம்; கிழமை – வெள்ளி, சனி;  கல் -வைரம்; திசை – தென்கிழக்கு; தெய்வம் – விஷ்ணு, லட்சுமி.பரிகாரம்ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ஆண்டு 7-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வதும்  நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபடலாம். குரு பகவானும் சாதகமின்றி  சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது,  தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

————————————————————————————————————————

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும் தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4-லும்,  கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றிச் செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டிருப்பவர்களுக்கும் உடல்ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறை வேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கி யமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வரும் ஜூலை 5-ஆம் தேதி குரு 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர்,  புகழ் யாவும் உயரும்.

தொழில்,  வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் போன்றவை சிறப்பாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன காரகன் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும், குரு மாற்றத்திற்குப் பின் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பதும், பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. வீண் வம்பு வழக்கு ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பும் மூலம் நற்பலனை அடைவீர்கள். விளை யாட்டு போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.

மாதப் பலன்கள்

ஜனவரி
ஜென்ம ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உயர்வுகளைப் பெறமுடியும். கடன்கள் நிவர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.சந்திராஷ்டமம்: 20-01-2015 காலை 08.57 மணி முதல் 22-01-2015 காலை 08.49 மணி வரை.

பிப்ரவரி

ஜென்ம ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சனியும் சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும் அமைப்பாகும். உங்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் கிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கூடும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிவ வழிபாடு,  பிரதோஷ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-02-2015 இரவு 08.05மணி முதல் 18-02-2015 இரவு 07.57 மணி வரை.

மார்ச்

6-ல் சனியும் 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக லாபங்களை அடையமுடியும். பண வரவுகள் சரளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிரிபார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் தடையின்றிக் கிடைக்கும் கடன்கள் படிப்படியாகக் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 16-03-2015 காலை 05.47 மணி முதல் 18-03-2015 காலை 06.58 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சனி,  10, 11-ல் சூரியன்,  11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-04-2015 பகல் 12.57 மணி முதல் 14-04-2015 பகல் 03.52 மணி வரை.

மே

தன ஸ்தானமான 2-ல் குருவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் சிறப்பான வரன்கள் தேடிவரும். தொழில், வியாபாரத்திலும் லாபம் பல மடங்கு பெருகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 09-05-2015 மாலை 06.30 மணி முதல் 11-05-2015 இரவு 10.18 மணி வரை.

ஜூன்

6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும், 12-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-06-2015 இரவு 12.18 மணி முதல் 08-06-2015 அதிகாலை 03.40 வரை.

ஜூலை

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில்  கவனம் தேவை. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-07-2015 காலை 07.52 மணி முதல் 05-07-2015 காலை 10.00 மணி வரை. மற்றும் 30-07-2015 மாலை 05.19 மணி முதல் 01-08-2015 மாலை 06.30 மணி வரை.

ஆகஸ்ட்

3-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விஷயங்களிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கவே எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-08-2015 அதிகாலை 03.36 மணிமுதல் 29-08-2015 அதிகாலை 04.11 மணிவரை.

செப்டம்பர்

ராசிக்கு 3-ல் சூரியனும், 5-ஆம் தேதி முதல் 6-ல் சனியும், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். பண வரவுகளிலிருந்த பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றதை அடையமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தொழில், வியாபாரமும் முன்னேற்ற நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபாடு செய்வது  நல்லது.

சந்திராஷ்டமம்: 23-09-2015 மதியம் 01.05 மணி முதல் 25-09-2015 மதியம் 03.35 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனியும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை  வழிபாடு செய்வது  நல்லது.

சந்திராஷ்டமம்: 20-10-2015 இரவு 08.32 மணி முதல் 22-10-2015 இரவு 12.48 மணி வரை.

நவம்பர்

ராசிக்கு 3-ல் செவ்வாயும் 6-ஆம் வீட்டில் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மைகள் ஏற்படுவதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் சாதகப் பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-11-2015 அதிகாலை 02.11 மணி முதல் 19-11-2015 காலை 07.33 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் விரோதம் பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 14-12-2015 காலை 07.54 மணி முதல் 16-12-2015 பகல் 12.54 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8; நிறம் – பச்சை, வெள்ளை; கிழமை – புதன், வெள்ளி; கல் – மரகதம்; திசை – வடக்கு; தெய்வம் – விஷ்ணு.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 முதல் குரு  3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது, கொண்டக்கடலை மாலை, மற்றும் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை  செய்வது  நல்லது.

————————————————————————————————————————-
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தன ஸ்தானத்துக்கு மாறுதலாகிறார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உடல் ஆராக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் நிம்மதியான உறக்கம்கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால், உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை  5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப் பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவி னர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.

உத்தியோகம்

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

பெண்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகளும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குருமாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக் குப்பின் பணம் கொடுக்கல்- வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்த வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை  மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனி 2 -ஆம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.

மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். குருப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-01-2015 காலை 08.49 மணி முதல் 24-01-2015 காலை 09.14 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சி ளில் நிறைய தடைகளுக்குப் பின்தான் வெற்றிகிட்டும். சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-02-2015 இரவு 07.57 மணி முதல் 20-02-2015 மாலை 07.15 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதும் 8-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடைகளும் நெருங்கியவர்களிடம் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையைக் கொடுக்கும். கணவன்- மனைவி யிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்ப ஒற்றுமையும் குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தை அடைவீர்கள். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-03-2015 காலை 06.58 மணி முதல் 20-03-2015 காலை 06.34 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சூரியனும் 10-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-04-2015 பகல் 03.52 மணி முதல் 16-04-2015 மாலை 04.55 மணி வரை.

மே

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 2-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் விலகிச்செல்லும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரரீதீயாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உறவினர்களை சற்று அனுசரித் துச்செல்வது  நல்லது. விநாயக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-05-2015 இரவு 10.18 மணி முதல் 13-05-2015 இரவு 12.50  மணி வரை.

ஜூன்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும், பயணங்களால் அனுகூலங்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே இருக்கும். என்றாலும் பிறரை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-06-2015 அதிகாலை 03.40 மணிமுதல் 10-06-2015 காலை 06.39 மணி வரை.

ஜூலை

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது வீண் விரயங்களையும் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளையும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கும் அமைப்பாகும். என்றாலும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-07-2015 காலை 10.00 மணி முதல் 07-07-2015 பகல் 12.08 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானத்தில் குருவும் முயற்சி ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள், பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரம் உயர்வதால் கடன்களும் குறையும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-08-2015 மாலை 06.30 மணி முதல் 03.08.2015 இரவு 07.11 மணி வரை. மற்றும் 29.08.2015 அதிகாலை 04.11 மணிமுதல் 31-08-2015 அதிகாலை 04.37 மணி வரை.

செப்டம்பர்

தன ஸ்தானமான 2-ல் குருவும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகளும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்

சந்திராஷ்டமம்: 25-09-2015 மதியம் 03.35 மணி முதல் 27-09-2015 பகல் 03.37 மணி வரை.

அக்டோபர்

தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் ராகு, சூரியனும் சஞ்சாரம் செய்வதால் செல்வம், செல்வாக்கு உயர்வடையும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களும், வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்துகொண்டால் சற்று அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனிப்ரீதி உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-10-2015 இரவு 12.48 மணி முதல் 25-10-2015 அதிகாலை 02.18 மணி வரை.

நவம்பர்

ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்பத்தில்  மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-11-2015 காலை 07.33 மணி முதல் 21-11-2015 காலை 10.48 மணி வரை

டிசம்பர்

தன ஸ்தானத்தில் குருவும் 3-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வ தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகவே நடைபெறும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான நிலை நிலவும். உற்றார்- உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-12-2015 பகல் 12.54 மணி முதல் 18-12-2015 மதியம் 04.48 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9; நிறம் – வெள்ளை, சிவப்பு; கிழமை- திங்கள், வியாழன்; கல் -முத்து; திசை – வடகிழக்கு; தெய்வம் – வெங்கடாசலபதி.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு  வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது, படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயக ரையும் வழிபாடு செய்யலாம்.

———-…………………………………………………………………………………………………………………………..

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறும் ஆற்றல்கொண்ட சிம்ம ராசி  நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 05-07-2015-க்குப் பிறகு ஜென்ம ராசிக்கு மாறுதலாகிறார். இந்த வருடம் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. தயாள குணம்கொண்ட நீங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டு என்றாலும் அதை சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக உங்களின் முன்கோபமே காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு உண்டென்றாலும் இந்த வருடம் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும் மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பதின்மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடையமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிக அலைச்சல்களையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் இருக்கும் பதவிகளுக்கு பங்கம்வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாத காரணத்தால்  உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள் விருப்பத்தை சற்று தள்ளிவைப்பது உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பெறாமைகளை சமாளித்தே லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதை பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. அரசு வழியில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் அதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் சுமாரான லாபத்தை அடையமுடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது. தொழிலாளர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்று மையை நிலைநாட்டமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந் தாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சில நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும் பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று கூடும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி நடப்பதாலும், குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். கொடுத்த கடன்களை சிறிது சிறிதாக வசூலித்துவிட முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு தகாரறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குக் கிடைத்துவிடும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியாத நிலை போன்றவை உண்டாகக் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  பயணங்களிலும் நிதானம் தேவை.

மாதப் பலன்கள்
ஜனவரிஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகளும் நெருங்கியவர்களால் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அம்மனை வழிபடவும்.சந்திராஷ்டமம்: 24-01-2015 காலை 09.14 மணி முதல்26-01-2015 பகல் 11.48 மணி வரை.

பிப்ரவரி

பஞ்சம ஸ்தானமான 5-ல் புதனும் 6-ல் சூரியனும் சஞ்சரிக்கவுள்ளதால் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். என்றாலும் எதிலும் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-02-2015 இரவு 07.15 மணி முதல் 22-02-2015 இரவு 08.01 மணி வரை.

மார்ச்

குடும்ப ஸ்தானமான 2-ல் ராகுவும் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், சுக்கிரன், கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களும், அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவதோடு, நெருங்கியவர்களாலும், வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத் துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-03-2015 காலை 06.34 மணி முதல்22-03-2015 காலை 06.29 மணி வரை.

ஏப்ரல் 

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியனும் விரய ஸ்தானத்தில் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 16-04-2015 மாலை 04.55 மணி முதல்18-04-2015 மாலை 05.22 மணி வரை.

மே 

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும் 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால்  எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலுண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் அமையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கொடுக்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும். ஆஞ்சனேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 13-05-2015 இரவு 12.50 மணி முதல் 16-05-2015 அதிகாலை 02.41 மணி வரை.

ஜூன்

இம்மாதம் ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபத்தைப் பெறமுடியும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருக்குமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-06-2015 காலை 06.39 மணி முதல்12-06-2015 காலை 09.31 மணி வரை.

ஜூலை

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது பணவரவுகள் தேவைக்கேற்றப்படி இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. புத்திர வழியில் அடிக்கடி மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அம்மன், விநாயகர் வழிபாடு  உத்தமம்.

சந்திராஷ்டமம்: 07-07-2015 பகல் 12.08 மணி முதல் 09-07-2015 மதியம் 03.07 மணி வரை.

ஆகஸ்ட்

முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுகவாழ்வு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சிவ வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் 03-08-2015 இரவு 07.11 மணி முதல் 05-08-2015 இரவு 08.57 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் குருவும் 2-ல் ராகுவும் 12-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆராக்கியத்தில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். நெருங்கியவர்களே துரோகம் செய்யக்கூடுமென்பதால் உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 31-08-2015 காலை 04.39 மணி முதல் 02-09-2015 அதிகாலை 04.48 மணி வரை. மற்றும் 27-09-2015 பகல் 03.37 மணி முதல் 29.09.2015 மதியம் 03.00 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் குரு, செவ்வாயும், 4-ல் சனியும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு எதிலும் வெற்றிகளைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொருளாதார நிலை சற்றே உயரும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-10-2015 அதிகாலை 02.18 மணி முதல் 27-10-2015 அதிகாலை 02.12 மணி வரை.

நவம்பர்

இம்மாத முற்பாதி வரை சூரியன் 3-ல் சஞ்ரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை  ஏற்படுத்துமென்றாலும் ஜென்ம ராசியில் குருவும், 4-ல் சனியும் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத்தானிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். சனி பகவானை வழிபடுவதன் மூலம் நற்பலன்  உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 21-11-2015 காலை 10.48 மணி முதல் 23-11-2015 மதியம் 12.07 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசியில் குருவும் 2-ல் செவ்வாய், ராகுவும் 4-ல் சூரியன், சனியும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகளும் அதனால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 18-12-2015 மதியம் 04.48 மணி முதல்20-12-2015 இரவு 07.44 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9; நிறம் – வெள்ளை, சிவப்பு; கிழமை – ஞாயிறு, திங்கள்; கல் – மாணிக்கம்; திசை- கிழக்கு; தெய்வம் – சிவன்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சனி இந்த ஆண்டு 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச்  சனி நடைபெறுகிறது.  இதனால் சனிக் கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை  குரு விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் வழிபடுவது நல்லது. அந்தணர்களுக்கு தானங்கள் செய்வது உத்தமம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் துர்க்கை வழிபாடு,  விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

———————————————————————————————————————
கன்னி  
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளந்துபேசும் தன்மையுடைய கன்னி ராசி நேயர்களே! கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து இந்த 2015-ஆம் ஆண்டில் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதாரரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.  தொழில், வியாபாரரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானமாகிய 12-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், சனி பகவான் 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பவர்களும் படிப்படியான ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள்கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானத்திற்குச் செல்லவிருப்பதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நல்ல நிர்வாகத் திறமையும் உங்களிடம் பளிச்சிடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடையமுடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியமானது இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி யுண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். பணிபுரியக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போருக்கு நல்ல வருமானம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வரும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பண விஷயங்களில் கவனமுடனிருத்தல் நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்குக்கு காரகனான சனியே 3-ல் சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை, காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தனசேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமே. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்கமுடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக்குவிப்பீர்கள்.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளும் உங்களால் பெருமையடையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள்.


மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம  ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் போட்டிகளின்றி நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். பெயர், புகழ், உயர்வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-01-2015 பகல் 11.48 மணி முதல் 28-01-2015 மாலை 05.12 மணி வரை.

பிப்ரவரி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியன் 6-ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பலமும் வலிமையும் கூடி எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-02-2015 இரவு 08.01 மணி முதல் 24-02-2015 இரவு 11.46 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் லாபத்தினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக்கூட லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர் களும் உயர்வடைவார்கள். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் தோன்றிமறையும். முருக வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 22-03-2015 காலை 06.29 மணி முதல் 24-03-2015 காலை 08.35 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் ராசிக்கு 7-ல் சூரியனும் 8-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திலிருப்பதால் வீண் விரயங்களும், பொருளாதாரத் தடைகளும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் சில காலம் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகஸ் தர்களுக்கு இடமாற்றங்கள் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-04-2015 மாலை 05.22 மணி முதல் 20-04-2015 மாலை 06.54 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் ராகுவும் 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென் றாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-05-2015 அதிகாலை 02.41 மணி முதல் 18-05-2015 அதிகாலை 04.52மணி வரை.

ஜூன் 

லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரனும் மாத பிற்பாதியில் 10-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் தற்போது மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 12-06-2015 காலை 09.31 மணி முதல் 14-06-2015 மதியம் 01.04 மணி வரை.

ஜூலை

ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாயும் 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழிலில் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். வரும் 5-ஆம் தேதி முதல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 09-07.2015 மதியம் 03.07 மணி முதல் 11-07-2015 இரவு 07.18 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டது துலங்கும். எதிலும் நற்பலன்களையே பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலமென்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-08-2015 இரவு 08.57 மணி முதல் 07-08-2015 இரவு 12.41 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் சனி 3-ல் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்துமென்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள்  உண்டாகும். உடல் ஆரோக்கியமும் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பிரதோஷ விரதமிருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-09-2015 அதிகாலை 04.48 மணி முதல் 04-09-2014 காலை 07.02 மணி வரை; மற்றும் 29-09-2015 மதியம் 03.00 மணி முதல் 01-10-2015 மதியம் 03.39 மணி வரை.

அக்டோபர்  

ஜென்ம ராசியில் சூரியன், ராகுவும், 12-ல் குரு, செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பென்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். என்றாலும் சனி பகவான் சாதகமாக 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 27-10-2015 அதிகாலை 02.12 மணி முதல் 29-10-2015 அதிகாலை 02.14 மணி வரை.

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க விருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். முருக வழிபாடு, சஷ்டி விரதம் இருக்கவும்.

சந்திராஷ்டமம்: 23-11-2015 மதியம் 12.07 மணி முதல் 25-11-2015 மதியம் 01.04 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரித்தாலும் 3-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். குரு 12-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் மேலோங்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்

சந்திராஷ்டமம்: 20-12-2015 இரவு 07.44 மணி முதல் 22-12-2015 இரவு 10.04 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4, 5, 6, 7, 8; நிறம் – பச்சை,  நீலம்; கிழமை- புதன், சனி; கல்- மரகதப் பச்சை; திசை – வடக்கு; தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு.

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமற்று சஞ்சரிப்பதால்  சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 05-07-2015 முதல் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

……………………………………………………………………………………………………………………………….

 

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசி நேயர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும்.

குடும்பம்,  பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்களுக்கு

இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி வாக்கு ஸ்தானத்தி லிருப்பதால் உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது  நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும்.

மாணவ- மாணவியருக்கு

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.

மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும்  உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபம் காணமுடியும். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2015 பகல் 11.47 மணி முதல் 03-01-2015 இரவு 07.24 மணி வரை; மற்றும் 28-01-2015 மாலை 05.12 மணி முதல் 31-01-2015 பகல் 01.17 மணி வரை.

பிப்ரவரி

குடும்ப ஸ்தானமான 2-ல் சனியும் சுக ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவுக்கு லாபம் கிட்டும். புதிய முயற்சிகளிலும் சாதகப் பலன் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-02-2015 இரவு 11.46 மணி முதல் 27-02-2015 காலை 07.01 மணி வரை.

மார்ச்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். துர்க்கை யம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-03-2015 காலை 08.35 மணி முதல் 26-03-2015 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதாலும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.  முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-04-2015 மாலை 06.54 மணி முதல் 22-04-2015 இரவு 11.10 மணி வரை.

மே

கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் சிறுசிறு நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிலும் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதால் வீண் பிரச்சினைகளும் குறையும். பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 18-05-2015அதிகாலை 04.52 மணி முதல் 20-05-2015 காலை 08.50 மணி வரை.

ஜூன்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். தொழில், வியாபாரத்திலும் வீண் விரயங்களும், கூட்டாளிகளிடையே பிரச்சினைகளும் உண்டாகும். சஷ்டி விரதம், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 14-06-2015 மதியம் 01.04 மணி முதல் 16-06-2015 மாலை 05.42  மணி வரை.

ஜூலை

இம்மாதம் வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப  ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும்  பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் பணம் பல வழிகளில் தேடிவரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். பண வரவு களிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-07-2015 இரவு 07.18 மணி முதல் 13-07-2015 இரவு 12.56 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்கவிருப்பதால்  தொழில், வியாபாரரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளி  மற்றும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் அமைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாவதோடு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதாரம் உயர் வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07-08-2015 இரவு 12.41 மணி முதல் 10-08-2015 காலை 06.42 மணி வரை.

செப்டம்பர்

செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எதிலும் ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பச் சூழலும் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-09-2015 காலை 07.02 மணி முதல் 06-09-2015 மதியம் 12.17 மணி வரை.

அக்டோபர் 

ஏழரைச் சனி தொடர்ந்தாலும் 11-ல் செவ்வாய், குரு இருப்பதால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். திருமண சுப காரியங்களும் கைகூடும். பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-10-2015 மதியம் 03.39 மணி முதல் 03-10-2015 இரவு 07.14 மணி வரை; மற்றும் 29-10-2015 அதிகாலை 02.14 மணி முதல் 31-10-2015 காலை 04.21 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி தொடர்வதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும்  அமைப்பென்றாலும் 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைப் பளு சற்று கூடும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-11-2015 மதியம் 01.04 மணி முதல் 27-11-2015 மதியம் 02.50 மணி வரை.

டிசம்பர் 

லாப ஸ்தானத்தில்  குருவும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமையும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-12-2015 இரவு 10.04 மணி முதல் 24-12-2015 இரவு 12.46  மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 7, 8; நிறம்- வெள்ளை, பச்சை; கிழமை – வெள்ளி, புதன்; திசை – தென்கிழக்கு; கல் – வைரம்; தெய்வம் – லட்சுமி.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான  ராகு  12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்,  துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

………………………………………………………………………………………………………………………………

 

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசி நேயர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும்.

குடும்பம்,  பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்களுக்கு

இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி வாக்கு ஸ்தானத்தி லிருப்பதால் உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது  நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும்.

மாணவ- மாணவியருக்கு

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.

மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும்  உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபம் காணமுடியும். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2015 பகல் 11.47 மணி முதல் 03-01-2015 இரவு 07.24 மணி வரை; மற்றும் 28-01-2015 மாலை 05.12 மணி முதல் 31-01-2015 பகல் 01.17 மணி வரை.

பிப்ரவரி

குடும்ப ஸ்தானமான 2-ல் சனியும் சுக ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவுக்கு லாபம் கிட்டும். புதிய முயற்சிகளிலும் சாதகப் பலன் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-02-2015 இரவு 11.46 மணி முதல் 27-02-2015 காலை 07.01 மணி வரை.

மார்ச்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். துர்க்கை யம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-03-2015 காலை 08.35 மணி முதல் 26-03-2015 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதாலும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.  முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-04-2015 மாலை 06.54 மணி முதல் 22-04-2015 இரவு 11.10 மணி வரை.

மே

கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் சிறுசிறு நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிலும் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதால் வீண் பிரச்சினைகளும் குறையும். பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 18-05-2015அதிகாலை 04.52 மணி முதல் 20-05-2015 காலை 08.50 மணி வரை.

ஜூன்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். தொழில், வியாபாரத்திலும் வீண் விரயங்களும், கூட்டாளிகளிடையே பிரச்சினைகளும் உண்டாகும். சஷ்டி விரதம், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 14-06-2015 மதியம் 01.04 மணி முதல் 16-06-2015 மாலை 05.42  மணி வரை.

ஜூலை

இம்மாதம் வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப  ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும்  பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் பணம் பல வழிகளில் தேடிவரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். பண வரவு களிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-07-2015 இரவு 07.18 மணி முதல் 13-07-2015 இரவு 12.56 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்கவிருப்பதால்  தொழில், வியாபாரரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளி  மற்றும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் அமைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாவதோடு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதாரம் உயர் வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07-08-2015 இரவு 12.41 மணி முதல் 10-08-2015 காலை 06.42 மணி வரை.

செப்டம்பர்

செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எதிலும் ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பச் சூழலும் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-09-2015 காலை 07.02 மணி முதல் 06-09-2015 மதியம் 12.17 மணி வரை.

அக்டோபர் 

ஏழரைச் சனி தொடர்ந்தாலும் 11-ல் செவ்வாய், குரு இருப்பதால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். திருமண சுப காரியங்களும் கைகூடும். பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-10-2015 மதியம் 03.39 மணி முதல் 03-10-2015 இரவு 07.14 மணி வரை; மற்றும் 29-10-2015 அதிகாலை 02.14 மணி முதல் 31-10-2015 காலை 04.21 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி தொடர்வதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும்  அமைப்பென்றாலும் 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைப் பளு சற்று கூடும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-11-2015 மதியம் 01.04 மணி முதல் 27-11-2015 மதியம் 02.50 மணி வரை.

டிசம்பர் 

லாப ஸ்தானத்தில்  குருவும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமையும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-12-2015 இரவு 10.04 மணி முதல் 24-12-2015 இரவு 12.46  மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 7, 8; நிறம்- வெள்ளை, பச்சை; கிழமை – வெள்ளி, புதன்; திசை – தென்கிழக்கு; கல் – வைரம்; தெய்வம் – லட்சுமி.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான  ராகு  12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்,  துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

……………………………………………………………………………………………………………………………………

 

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எதையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!  இந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு  குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு,  மந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் இந்த வருட ஜூலை 5-ம் தேதி வரை குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடுசெய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதாலும், வரும் ஜீலை 5-ஆம் தேதி முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும்  ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.

பெண்களுக்கு

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகலாம். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் சிக்கனத்தைக் கையாள்வதும் மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 9-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு பண விவகாரங்களில் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடுமென்பதால் பெரிய தொகைகளை தவிர்த்துவிடவும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்,  கனி,  பூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு சிறப்பான பலனை ஏற்படுத்தும். ஏழரைச் சனி நடைபெறுவது, தொழிலில் முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடவும்.

மாணவ- மாணவியர்களுக்கு

மாணவர்களின் கல்விநிலை சற்று மந்தமாகத்தானிருக்கும். எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவுக்கு படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வழிநடத்திச் செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

மாதப் பலன்கள்

ஜனவரி  

ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில்  சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதும் பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை விலகி லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் பிரச்சினைகள் விலகி சகஜநிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-01-2015 இரவு 07.24 மணி முதல் 06-01-2015 அதிகாலை 04.55 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகளும் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண  சுப காரியங்களும் தடை விலகி கைகூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.

சந்திராஷ்டமம்: 31-01-2015 பகல் 01.17 மணி முதல் 02-02-2015 11.28 மணிவரை; மற்றும் 27-02-2015 காலை 07.01 மணி முதல் 01-03-2015 மாலை 05.17 மணி வரை.

மார்ச் 

சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் 9-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் வீண் அலைச்சல், டென்ஷன்கள்  அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் ஓரளவுக்கு ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிட முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-03-2015 மதியம் 02.15 மணி முதல் 28-03-2015 இரவு 11.35 மணி வரை.

ஏப்ரல் 

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மையையும், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும் உண்டாக்கும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-04-2015 இரவு 11.10 மணி முதல் 25-04-2015 காலை 07.12 மணிவரை

மே

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரரீதியாகவும் முன்னேற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக  நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறமுடியும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-05-2015 காலை 08.50 மணி முதல் 22-05-2015 மதியம் 03.53 மணி வரை.

ஜூன் 

9-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பதும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களாலும் மனநிம்மதி குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-06-2015 மாலை 05.42  மணி முதல் 18-06-2015 இரவு 12.40 மணிவரை.

ஜூலை

அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க நேரிடுமென்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். முருக வழிபாடு செய்வது நற்பலனைத்  தரும்.

சந்திராஷ்டமம்: 13-07-2015 இரவு 12.56 மணி முதல் 16-07-2015 காலை 08.30 மணி வரை.

ஆகஸ்ட் 

ராசிக்கு 9-ல் சூரியன் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும் அமைப்பும், எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகக் கூடிய நிலையும் ஏற்படுமென்றாலும், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் அபி விருத்தியைப் பெருக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-08-2015 காலை 06.42 மணி முதல் 12-08-2015 மதியம் 02.59 மணிவரை.

செப்டம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் லாபங்களை ஏற்படுத்தும்.  குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் மேன்மைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 06-09-2015 மதியம் 12.17 மணி முதல் 08-09-2015 இரவு 08.38 மணி வரை.

அக்டோபர்

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாயும் 11-ல் சூரியன் ராகுவும் சஞ்சாரம் செய்வது தொழில்ரீதியாக முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப் பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். எனவே ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத் தேவைகளுக்காக சில நேரங்களில் கடன் வாங்கவும் நேரிடும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-10-2015 இரவு 07.14 மணி முதல் 06-10-2015 அதிகாலை 02.38 மணிவரை.

நவம்பர்

ஜென்ம ராசியில்  சனியும், 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்களும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். 6-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 31-10-2015 காலை 04.21 மணி முதல் 02-11-2015 காலை 10.11 மணிவரை; மற்றும் 27-11-2015 மதியம் 02.50 மணி முதல் 29-11-2015 இரவு 07.27 மணிவரை

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள பணநெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்பு களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெறுவீர்கள். உற்றார்-  உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது உத்தமம். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 24-12-2015 இரவு 12.46 மணி முதல் 27-12-2015 காலை 05.18 மணிவரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9; நிறம்- ஆழ்சிவப்பு, மஞ்சள்; கிழமை- செவ்வாய், வியாழன்; திசை- தெற்கு; கல் – பவளம்; தெய்வம்- முருகன்.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 05-07-2015 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

…………………………………………………………………………………………………………………………………

 

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய தனுசு ராசி நேயர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி குரு பகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து  வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ராசியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் சனியால் ஏற்படும் பிரச்சினைகள்  யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்  கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒருசில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டு முழுவதும் ஆயுள் காரகன் சனி பகவான் விரயஸ்தானமான 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற பயணங்கள் அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ணமுடியாத நிலை ஏற்படும். அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் உடல் உபாதைகளும், வீண் செலவுகளும் படிப்படியாகக் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமையானது ஆண்டின் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்யநேரிடலாம். வரும் ஜூலை 5-ஆம் தேதி ராசியாதிபதி குரு பகவான் 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைந்து குடும் பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்பு போன்றவை உண்டாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். செலவுகளும் கட்டுக்குள்ளிருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறுசிறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உணவு முறைகளோடும், உடன்பணிபுரிபவர்களிடமும் ஒத்துப்போகமுடியாத நிலை உண்டாகும்.  என்றாலும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.  உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளின்  ஆதரவு உங்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தும் என்றாலும் வேலைப் பளு குறையாது. நிறைய உழைக்க வேண்டி வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாகச் செயல்படமாட்டார்கள். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். சனி இந்த வருடம் சாதகமின்றி சஞ்சரித்தாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிட்டும். போட்டிகளையும் சமாளித்து விடுவீர்கள். வெளியூர்,  வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். இந்த ஆண்டு சனி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 8-ல் சாதகமற்று சஞ்சரிப்பதாலும், சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகள்,  விரயங்கள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.  வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய ஆண்டாகும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் மக்களிடம் ஆதரவு குறையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாமல் போகும்.  கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்யநேரிடும். எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்குமென்றாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது.  தாமதம் ஆகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. புழு, பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் ஆண்டின் பிற்பாதியில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வாய்ப்புகள் நல்லதாகத் தேடிவரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பணவரவுகள் ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவ-  மாணவியருக்கு

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை

மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியுமென்றாலும் ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவிஷயத்தில்  பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 06-01-2015 அதிகாலை 04.55 மணி முதல் 08-01-2015 மாலை 04.28 மணி வரை.

பிப்ரவரி 

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 02-02-2015 11.28 மணி முதல் 04-02-2015 இரவு 11.17 மணி வரை.

மார்ச்

ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் வீண் விரயங்களும் உண்டாகும் என்றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும், நல்ல வரன்கள் தேடிவரும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிலிருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-03-2015 மாலை 05.17 மணி முதல் 04-03-2015 காலை 05.26 மணி வரை; மற்றும் 28-03-2015 இரவு 11.35 மணி முதல் 31-03-2015 பகல் 11.40 மணி வரை.

ஏப்ரல்

சுக ஸ்தானமான 4-ல் சூரியனும் 5-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளே ஏற்படும். கடன்கள் சற்று குறையும். நிறைய பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-04-2015 காலை 07.12 மணி முதல் 27-04-2015 மாலை 06.37 மணிவரை.

மே

இம்மாதம் 2-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாயும் மாத பிற்பாதியில்  6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகளில் தடைகள் ஏற்படாது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் சற்று லாபம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை  வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-05-2015 மதியம் 03.53 மணி முதல் 25-05-2015 அதிகாலை 02.27 மணி வரை

ஜூன்

ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் வீண் விரயங்கள் குறையும். உங்களது பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் நல்ல மேன்மைகள் ஏற்படுவதால் கடன்கள் சற்றே தீரும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-06-2015 இரவு 12.40 மணி முதல் 21-06-2015 காலை 10.41 மணி வரை.

ஜூலை

களத்திர ஸ்தானமான 7-ல்  சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும் 5-ஆம் தேதி முதல் குரு 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் குடியேறும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களிலிருந்த  மனசஞ்சலங்கள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் மனதில் நினைத்தவரையே கைப்பிடித்து மகிழ்வர். பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-07-2015 காலை 08.30 மணி முதல் 18-07-2015 மாலை 06.31 மணி வரை.

ஆகஸ்ட்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுமென்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிகள் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். புதிய பூமி, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். சஷ்டி விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 12-08-2015 மதியம் 02.59 மணி முதல் 15-08-2015 அதிகாலை 01.28 மணி வரை.

செப்டம்பர் 

குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும், செய்யும் தொழிலில் நல்ல மேன்மைகள் ஏற்படும். என்றாலும் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி,  வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-09-2015 இரவு 08.38 மணி முதல் 11-09-2015 காலை 07.34  மணி வரை.

அக்டோபர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம், அசையும்- அசையாச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில்  சிறப்பான லாபம் அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆஞ்சநேயரை  வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-10-2015 அதிகாலை 02.38 மணி முதல் 08-10-2015 மதியம் 01.27 மணி வரை.

நவம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். கனவுகள் அனைத்தும் நனவாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-11-2015 காலை 10.11 மணி முதல் 04-11-2015 இரவு 08.03 மணி வரை; மற்றும் 29-11-2015 இரவு 07.27 மணி முதல் 02-12-2015 அதிகாலை 04.01 மணி வரை.

டிசம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும், 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது தாராள தனவரவுகளை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுமென்பதால் எதிலும் கவனம் தேவை. தனவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 27-12-2015 காலை 05.18 மணி முதல் 29-12-2015 மதியம் 01.03 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  1, 2, 3, 9; கிழமை – வியாழன், திங்கள்; திசை – வடகிழக்கு; நிறம் – மஞ்சள், சிகப்பு; கல் -புஷ்பராகம்; தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு  ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது, திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
………………………………………………………………………………………………………………………………

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
 

பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும், வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் கவனமுடன் செயல்படும் மகர ராசி நேயர்களே! இந்த ஆண்டில் உங்கள் ராசியாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ஆண்டுக் கோளான குரு பகவானும் 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால்  நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக்கூடிய வாய்ப்பும், அதனால் லாபமும் அபிவிருத்தியும் பெருகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களும் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்றாலும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகங்களான கேது 3-ஆம் வீட்டிலும், ராகு 9-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்துசென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். சனியின் பலமான சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாகவே இருக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய ஆற்றலுண்டாகும். குடும்பத்தி லுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். ஆயுள்காரகன் சனி பகவான் 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில்  எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சரியாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.

குடும்பம்,  பொருளாதார நிலை

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த வகையிலும் பணநெருக்கடியோ, உற்றார்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடோ ஏற்படாது. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் குரு 7-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள்கூட நிறைவேறிவிடும். இதுவரை உங்களை விரோதிபோல பார்த்தவர்களும் உரிமையோடு நட்புபாராட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும்.

உத்தியோகம்

உங்கள் ஜென்ம ராசியாதிபதியான சனி பகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில்  சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும், அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில்,  வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையுமென்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதாயம் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். தெய்வீக, ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, யோகம், வண்டி, வாகன யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சாதகமான பலனை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். இந்த ஆண்டு பிற்பாதியில் குரு பகவான் 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் துணிவும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி பகவானே லாப ஸ்தானமான 11-ல்  சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு அரசியல் காரணங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப்படுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் படப் பிடிப்புக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவ-  மாணவியருக்கு

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.

மாதப் பலன்கள்

ஜனவரி
முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும் லாப ஸ்தானமான 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம்கிட்டும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-01-2015 மாலை 04.28 மணி முதல் 11-01-2015 அதிகாலை 05.23  மணி வரை.

பிப்ரவரி 

ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் வெற்றிமேல் வெற்றிகள் கிட்டும், இம்மாதம் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் அபரிமிதமான லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.  தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 04-02-2015 இரவு 11.17 மணி முதல் 07-02-2015 மதியம் 12.09 மணி வரை.

மார்ச்

3-ல் செவ்வாயும், 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சேமிப்பு பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தைப் பெருக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறமுடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-03-2015 காலை 05.26 மணி முதல் 06-03-2015 மாலை 06.20 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் எளிதாக லாபத்தை அடையமுடியும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக் கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 31-03-2015 பகல் 11.40 மணி முதல் 02-04-2015 இரவு 12.36 மணி வரை; மற்றும் 27-04-2015 மாலை 06.37 மணி முதல் 30-04-2015 காலை 07.32 மணிவரை.

மே

சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பது வீண் அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு  என்றாலும் 7-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால்  பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் ஒற்றுமை நிலவும். மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-05-2015 அதிகாலை 02.27 மணி முதல் 27-05-2015 மதியம் 03.10 மணி வரை.

ஜூன்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் பெருகுவதுடன் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 21-06-2015 காலை 10.41 மணி முதல் 23-06-2015 இரவு 11.07 மணி வரை.

ஜூலை 

இம்மாதம் 3-ல் கேது, 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு ஏற்றங்களைப் பெறமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளுக்குப்பின் பதவி உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-07-2015 மாலை 06.31 மணி முதல் 21-07-2015 காலை 06.49 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாயும், 8-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள், தடைகள், அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியாவிட்டாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-08-2015 அதிகாலை 01.28 மணி முதல் 17-08-2015 மதியம் 01.48  மணி வரை.

செப்டம்பர் 

அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் உண்டாகும். வரும் 5-ஆம் தேதி முதல் சனி 11-ல் சஞ்சாரம்   செய்யவிருப்பதால் பிரச்சினைகள் சற்றே விலகும். தனவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷகால விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-09-2015 காலை 07.34 மணி முதல் 13-09-2015 இரவு 08.07 மணி வரை.

அக்டோபர்

லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளிவைக்கவும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-10-2015 மதியம் 01.27 மணி முதல் 11-10-2015 அதிகாலை 02.11 மணி வரை.

நவம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். குடும்பத்தின் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-11-2015 இரவு 08.03 மணி முதல் 07-11-2015 காலை 08.39 மணி வரை.

டிசம்பர்

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரனும் லாபஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-12-2015 அதிகாலை 04.01 மணி முதல் 04-12-2015 மாலை 04.00  மணி வரை; மற்றும் 29-12-2015 மதியம் 01.03 மணி முதல் 31-12-2015 இரவு 12.13 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5, 6, 7, 8; கிழமை – சனி,  புதன்; திசை – மேற்கு; நிறம் – நீலம், பச்சை; கல் -  நீலக்கல்; தெய்வம்- ஐயப்பன்.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 05-07-2015 முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. கேது 4-லும் ராகு 10-லும் சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது, துர்க்கையம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.

………………………………………………………………………………………………………………………………..
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

வெள்ளை உள்ளமும், நெறிதவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! இந்த 2015-ஆம் ஆண்டு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஆண்டுக்கோளான குரு பகவான் ஆண்டின் முற்பாதிவரை ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால்  குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்.

உடல் ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் ஆயுள்காரகன் சனி பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பற்ற நிலை, எந்தவொரு பணியிலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும்.  வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குரு ஆண்டின் தொடக்கத்தில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும்  ஒற்றுமையுடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 7 -ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்.

உத்தியோகம்

இந்தாண்டு சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்துமுடிக்க முடியாத நிலை, மேலிடத்தில் அவப்பெயர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமைய சற்று தாமத நிலை உண்டாகும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம  ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும், கிடைக்கும் என்றாலும் இந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில்,  வியாபாரம்

இந்த வருடம் முழுவதும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகளும் வீண் விரயங்களும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். அரசு வழியில்  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்த நிலை விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாகவே செயல்படுவார்கள்.

பெண்களுக்கு

இந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  பணவிவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம  ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

கொடுக்கல்-  வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால்  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் சனி 10-லும் குரு 6-லும் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.  நிறைய போட்டி பொறாமைகள் நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மாணவ-  மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்தநிலையே இருக்கும் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற நல்ல முறையில் நடந்து கொள்வது நல்லது.

மாதப் பலன்கள்


ஜனவரி

ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும்  குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக முடித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-01-2015 அதிகாலை 05.23 மணி முதல் 13-01-2015 மாலை 05.37 மணி வரை.

பிப்ரவரி

அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அபிவிருத்தி குறையும். பிரிவு, பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-02.2015 மதியம் 12.09 மணி முதல் 09-02-2015 இரவு 12.47  மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசியில் சூரியனும், 2-ல் செவ்வாயும், 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால், உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாமல் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரி பவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பயணங்களால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-03-2015 மாலை 06.20 மணி முதல் 09-03.2015 காலை 06.50 மணி வரை

ஏப்ரல்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்  உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.   உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம்  நற்பெயரை எடுக்கமுடியும். விநாயகரை தினமும் வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 02-04-2015 இரவு 12.36 மணி முதல் 05-04-2015 மதியம் 12.50 மணி வரை.

மே

மாத முற்பாதிவரை சூரியன் 3-ல் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்றாலும் குரு 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் சற்றே அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு  பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 30-04-2015 காலை 07.32 மணி முதல் 02-05-2015 மாலை 07.38 மணிவரை; மற்றும் 27-05-2015 மதியம் 03.10 மணி முதல் 30-05-2015 அதிகாலை 03.24 மணி வரை.

ஜூன் 

சுகஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 6-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருக்கும். எதிர்பாராத வீண் விரயங்களால் பண நெருக்கடிகள் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவவழிபாடு, முருகவழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-06-2015 இரவு 11.07 மணி முதல் 26-06-2015 காலை 11.41 மணி வரை.

ஜூலை

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் குரு 7-லும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடந்த காலப் பிரச்சினைகள் சற்றே விலகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். ஆஞ்சனேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 21-07-2015 காலை 06.49 மணி முதல் 23-07-2015 மாலை 07.43 மணி வரை.

ஆகஸ்ட்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளின் உதவியால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும்.  ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.

சந்திராஷ்டமம்: 17-08-2015 மதியம் 01.48 மணி முதல் 20-08-2015 அதிகாலை 02.54  மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாயும்  7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால்  குடும்பத்தில் மகிழச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தனவரவுகள், சமுதாயத்தில் கௌரவமான நிலை போன்ற நற்பலன்களை அடையமுடியும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைத் தடையின்றிப் பெறுவர். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-09-2015 இரவு 08.07 மணி முதல் 16-09-2015 காலை 09.11 மணி வரை.

அக்டோபர்

ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமேற்படாது என்றாலும் 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்புண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-10-2015 அதிகாலை 02.11 மணி முதல் 13-10-2015 மதியம் 03.10 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் 9-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக மேன்மைகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்களும் தேடிவரும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-11-2015 காலை 08.39 மணி முதல் 09-11-2015 இரவு 09.37 மணி வரை.

டிசம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.  துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-12-2015 மாலை 04.00 மணி முதல் 07-12-2015 அதிகாலை 05.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5, 6, 7, 8; கிழமை – வெள்ளி,  சனி; திசை – மேற்கு; நிறம் -வெள்ளை, நீலம்; கல் – நீலக்கல்; தெய்வம் -  ஐயப்பன்.

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு  எள் எண்ணெய் தீபமேற்றுவது சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். வரும் 05-07.2015 வரை குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது

…………………………………………………………………………………………………………………………….

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நீதி, நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் ஆற்றலும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்

சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு பஞ்சம ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் மருத்துவச் செலவுகளும் உங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம்,  பொருளாதார நிலை

குடும்பத்தில் பொருளாதார நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம்

உங்கள்  ராசிக்கு அதிபதியான குரு இந்த ஆண்டின் முற்பாதி வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வது நல்ல அமைப்பாகும். இதனால் தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாராளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்த முடியும். என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

குரு பகவான் இந்த ஆண்டின் முற்பாதியில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவானும் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றிவிடுவீர்கள். கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும்  கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டென்றாலும்  சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடுமென்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

மாதப் பலன்கள்


ஜனவரி

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எளிதாக வெற்றிகளைப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-01-2015 மாலை 05.37 மணி முதல் 16-01-2015 அதிகாலை 02.42 மணி வரை.

பிப்ரவரி

பாக்கிய ஸ்தானத்தில் சனியும், 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாகச் செயல் படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியாகச் செயல்படமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 09-02-2015 இரவு 12.47 மணி முதல் 12-02-2015 காலை 11.08 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் கண்களில் கோளாறும் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-03-2015 காலை 06.50 மணி முதல் 11-03-2015 மாலை 05.41 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் சோர்வு, எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 05-04-2015 மதியம் 12.50 மணி முதல் 07-04-2015 இரவு 11.19 மணி வரை

மே

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு  சஞ்சாரம் செய்வதும் 2-ஆம் தேதி முதல்  3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும்.  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-05-2015 மாலை 07.38 மணி முதல் 05-05-2015 அதிகாலை 05.33 மணிவரை; மற்றும் 30-05-2015 அதிகாலை 03.24 மணி முதல் 01-06-2015 மதியம் 01.06 மணி வரை.

ஜூன்

முயற்சி ஸ்தானத்தில் சூரியன், செவ்வாயும் 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றமுடியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. கொடுக்கல்- வாங்கலில்  சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-06-2015 காலை 11.41 மணி முதல்  28-06-2015 இரவு 09.46 மணி வரை.

ஜூலை

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உற்றார்- உறவினர்களும் பகைமை உணர்வுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத வீண் விரயங்களால் கடன் வாங்க வேண்டிவரும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர் களும் லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-07-2015 மாலை 07.43 மணி முதல் 26.07.2015 காலை 06.40 மணி வரை.

ஆகஸ்ட்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சமுதாயத்தில் கௌரவமான நிலை உண்டாகும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-08-2015 அதிகாலை 02.54 மணி முதல் 22-08-2015 மதியம் 02.42  மணி வரை

செப்டம்பர்

இம்மாத முற்பாதி வரை சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின்  வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலும் ஓரளவுக்கு நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். அசையும்- அசையாச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் உண்டாகி லாபங்கள் சற்று குறையும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-09-2015 காலை 09.11 மணி முதல் 18-09-2015 இரவு 09.22 மணி வரை.

அக்டோபர் 

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பென்றாலும் சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உறவினர்களிடையே கருத்துவேறுபாடு உண்டாகும். வீண் அலைச்சல் களால், உடல்நிலையில் சோர்வு,  எதிர்பாராத விரயங்களால் பணத் தட்டுப்பாடு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-10-2015 மதியம் 03.10 மணி முதல் 16-10-2015 அதிகாலை 03.09  மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும், 7-ல் ராகுவும், 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். தொழில், வியாபாரத்திலும் நெருக்கடிகள் உண்டாவதால் லாபங்கள் குறையும். உத்தியோகஸ்தர்களும் வீண்பழிச் சொற்களை சுமக்க வேண்டிவரும். உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 09-11-2015 இரவு 09.37 மணி முதல் 12-11-2015 காலை 09.11 மணி வரை.

டிசம்பர்

ராசிக்கு 6-ல் குருவும் 7-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால்  உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது, பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-12-2015 அதிகாலை 05.00 மணி முதல் 09-12-2015 மாலை 04.28 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9; கிழமை – வியாழன், ஞாயிறு; திசை – வடகிழக்கு; நிறம் – மஞ்சள், சிவப்பு; கல் – புஷ்பராகம்; தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.

 

————————————————————————————————————

கன்னி ராகு- மீன கேது பெயர்ச்சி

ஜய வருடம், ஆனிமாதம் 7-ஆம் தேதி (21-6-2014) பகல் 11.15 மணியளவில் (உதயாதி நாழிகை 13.15) கன்னி ராசிக்கு ராகுவும் மீன ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இது பாம்பு பஞ்சாங்கம் -வாக்கியப் பஞ்சாங்கப்படி! மற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களில் நிமிடக்கணக்கில் சில வித்தியாசம் காணப்படும். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சி போன்ற முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் எல்லாம் பாம்புப் பஞ்சாங்கப்படிதான் திருக்கோவில்களில் உற்சவம், பூஜை கொண்டாடப்படுகிறது.

திருக்கணிதப் பஞ்சாங்கங்களிலும் பல பஞ்சாங்கங்கள் வெளியிடப்பட்டாலும், வாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே முக்கியமானதாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ராகு- கேதுப் பெயர்ச்சி 12-7-2014 என்று குறிக்கப்படுகிறது.

இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையே சில நாட்கள் வித்தியாசம் இருந்தாலும் வாசகர்கள் 21-6-2014-ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கப்படியே ராகு- கேதுப் பெயர்ச்சியைக் கடைப்பிடிக்கலாம். தேதி முன் பின் இருந்தாலும் பலன்கள் வித்தியாசப்படாது. பஸ்ஸில் வாசற்படி அருகில் இருப்பவர் உடனே இறங்கிவிடுவார். கடைசி சீட்டில் இருப்பவர் எழுந்து நடந்துவந்து இறங்குவதற்கு சில வினாடிகள் ஆகலாம். அதுபோல ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் சில நாட்கள் வித்தியாசத்தில் நடக்கலாம். அதிலும் சிலருடைய சொந்த ஜாதகப்படி கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் சீக்கிரமாகவோ தாமதமாகவோ நடக்கலாம். அனுபவ ரீதியாக வாக்கியப் பஞ்சாங்கப்படியே பலன் நடக்கிறது. இந்த ராகு- கேது பெயர்ச்சிப் பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் என்ன செய்யும், எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, ராகு- கேது யார்? அவர்களின் வரலாறு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதேபோல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும், கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.

சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.

மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் “வில் பவர்’ -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். அதேசமயம் 6-ல் ராகுவோ கேதுவோ வந்தால், 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்பதால் அவற்றைக் கெடுக்கும். அதாவது எதிரி, விவகாரம், வைத்தியச் செலவு, கடன் ஆகியவற்றைக் கெடுப்பார். அதனால் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். எனவே ராகு- கேதுவுக்கு 3, 6, 8, 11, 12-ஆம் இடங்கள் நற்பலன்களைத் தரக்கூடிய இடங்கள் என்றும்; மற்ற இடங்கள் அனுகூலம் இல்லை என்றும் கூறலாம். ராகுவும் கேதுவும் தாம் நின்ற ராசியில் இருந்து 3-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். பொதுவாக எல்லா கிரகங்களும் 7-ஆம் ராசியை (180- ஆவது டிகிரி) பார்க்கும். குருவுக்கு 5, 9-ஆம் பார்வையும், சனிக்கு 3, 10-ஆம் பார்வையும் செவ்வாய்க்கு 4, 8-ஆம் பார்வையும் விசேஷப் பார்வை என்பது போல, ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 11-ஆம் பார்வை விசேஷப் பார்வை.

ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளியையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.

இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துடனாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன்களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மையென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.

ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள்களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.


1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்பினும் ஒருசிலருக்கு அடிவயிறு, கால் பாதத்தில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் தங்களது வேலையாட்களை கண்காணிக்க வேண்டும். அரசு ஊழியர், அரசியல்வாதி இருதரப்புமே நல்ல பலனைப் பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வும், புதிய பதவியும் தேடிவரும். ஆனால் மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தைகூட எதிர்மறையாகிவிடும். எனவே வாய்ப்பதனம், கைப்பதனம், மெய்ப்பதனம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் வாழும் மாதம். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்தபடி திருமணம் நடக்கும். இளைஞர்கள் நீர்நிலைகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மகான்கள், உறவினர்களின் சந்திப்பு கிட்டும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் வரும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. எனவே நிதானமாக செயல்படவேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்கவேண்டி வரும். வியாபாரிகளும் நல்ல லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்துசேரும். அருகிலுள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படலாம். எனவே கவனமுடனும் எச்சரிக்கையாகவும் செயல்படவேண்டும். பிள்ளைகளின் உயர்வால் பெற்றோர்கள் மகிழ்ச்சி பெறுவார் கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். அயல்நாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்புகளையும் பொதுமக்களின் பாராட்டையும் பெறுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பதவி உயர்வு வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொறுமையாக செயல்படுபவர்கள் வெற்றியை அடைவர். திடீர் பணவரவுகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். நன்றாக ஆலோசித்து திருமணத்தை நடத்த வேண்டும். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் லாபம் பெறுவார்கள். நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டுவந்த தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு ஊழியர்கள் கவனத்துடன் பணியாற்றவேண்டும்; உங்கள் நண்பர்களே எதிரியாகலாம். எந்தக் காரியம் செய்தாலும் உங்கள் முடிவுப்படி செய்யவேண்டும். சிலருக்கு கட்டாய மாறுதல் வரலாம்; அது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டாலும், நன்மையாக இருக்கும். பிள்ளைகளின் தொல்லைகள் மாறும். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பொருட்களால் லாபம் இரட்டிப்பாகும். கனவுத் தொல்லைகள் உண்டு. சில பெண்கள் பிரச்சினை தீர்ந்து கணவர் வீட்டுக்குச் செல்வார்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் விலகி நிற்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அரசு ஊழியர்கள் வேலைபார்க்கும் இடத்தில் நிதானமாகச் செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கலாம். மற்றவர்கள் தவறை நீங்கள் பெரிதுபடுத்துவதால் உங்களது தவறு விசுவரூபமெடுக்கும். மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகாமல் செயல்படவேண்டும். பணவரவுகள் சீராக இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு எதுவும் வராது. தொழிலதிபர்களுக்கு உற்பத்தி செலவு கூடினாலும், லாபம் இரட்டிப்பாகப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிலருக்கு இதுவரை அரசாங்கத்தால் இருந்துவந்த தொல்லை நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நினைத்தபடி நடக்கும். வெளியிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். பெண்கள் கணவருடன் பொறுமையாக அனுசரித்துச் செல்லவேண்டும். கருத்துவேறுபாடு காரணமாக ஒருசிலர் பிரியநேரிடும். பிள்ளைகள் தாய், தந்தையரை அனுசரித்துச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், ஸ்ரீதுர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதிய தொழில் தொடங்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் கைகொடுக்கும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும், கையில் காசில்லை என்ற நிலைமை உங்களுக்கு எப்போதும் வராது. பிரிந்துசென்ற தம்பதிகள் ஒன்றுகூடுவார்கள். வழக்குகள் சாதகமாகும். ரேஸ், ஷேர்மார்க்கெட்டில் லாபம் பெருகும். இளைஞர்கள் அயல்நாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ராணுவத்தில் சேரும் வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழிகளில் லாபம் பெருகும். வியாபாரிகள் ஏற்கெனவே வாங்கிவைத்த சரக்குகளை விற்கவேண்டும். மேலும் கொள்முதல் செய்வதைத் தவிர்த்தால் நஷ்டத்திலிருந்து மீளலாம். தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் தொழிலதிபர்கள் லாபம் பெறுவர். இதுவரை வராமலிருந்த பூர்வீக சொத்துகள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை விலகும். வாகன விபத்துகள் ஒருசிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனங்களில் நிதானமாகச் செல்லவேண்டும். பேங்க் பேலன்ஸ் கூடும். பெண்களால் நன்மையுண்டு. மனைவி சொல்லே மந்திரமாகக் கொள்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வியாபாரிகள், வியாபாரத்தைப் பெருக்க புதிய யுக்தியுடன் போட்ட திட்டம் நிறைவேறும். உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்களிடையே நேசம் கூடும். தொழிலாளர்- முதலாளி கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். மனைவி பயன்பெறும் மாதம். விலைபோகாமலிருந்த பூர்வீக சொத்து நல்ல விலைக்குப் போகும். ஒருசில இளம்பெண்கள் மாந்திரீகர்கள் தொந்தர வால் அவதிப்படலாம்; எச்சரிக்கை தேவை. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூர் செல்பவர்கள் உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். களவுபோகும் வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வாங்கிப் போட்டுள்ள இடம் விற்றுவிடும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தாய்- தந்தையரது அனுசரிப்பு உண்டு. பொற்கொல்லர்கள், விவசாயத் தொழில்புரிவோர், ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வோர் அதிக லாபம் பெறும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, ஸ்ரீவெங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அலைந்து திரிந்து வேலை செய்தாலும் சரியான வருமானமில்லையென்று இருப்பவர்கள் இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவர். அரசு ஊழியர்களுக்கு வேலைப் பளு கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் லாபம் பெறலாம். வேலை பார்க்கும் இடத்தில் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலர் பூமியிலிருந்து புதையல் போன்றவற்றைப் பெறுவர். கடன் தொல்லை நீங்கும். வழக்குகள் சாதகமாகச் செல்லும். இதுவரை பிள்ளைகளுக்கு தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். வாங்கி வைத்த சரக்குகள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை கட்ட போட்ட திட்டம் நல்லபடி நடக்கும். அரசாங்க ஆதரவு கிட்டும். மாணவர்கள் திட்டமிட்ட உயர்கல்வி கைகூடும். பெண்கள் தங்க ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். ஆறுத லான மாதம்; கடனும் தீரும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20; 1, 10, 19.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்தபடி அனைத்து காரியங்களும் நிறைவேறும். நன்மையான பலன்கள் நடக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் வந்துகூடுவார்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை தாமதமாகிவந்த சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரிகள் கொள்முதலை உயர்த்திக்கொள்வார்கள். “கணவர் பேச்சைமீறி ஏன் தாய்வீடு  சென்றோம்’ என்று மனம் வருந்தி, பெண்கள் மீண்டும் தன் கணவர் வீடு வந்துசேர்வார்கள். தந்தை- மகன் உறவு சுமுகமாக இருக்கும். தொழிலாளர்கள் கூடுதல் லாபம் பெறுவர். கலைஞர்கள் திட்டமிட்டபடி புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் லாபம் இரட்டிப்பாகும். காலதாமதமாகி வந்த திருமணம் கைகூடும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் பெருமையடைவார்கள். ஒருசிலர் பெண்களாலும், நண்பர்களாலும் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: ஸ்ரீவெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் வீட்டுத் தேவைகளைமட்டும் பூர்த்திசெய்யும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் ஆர்வம் காட்டினால் நிறைய சம்பாத்தியம் வரும். கடன் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். வீட்டுக்குத் தேவையான வசதிகளை செய்துகொள்வதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் செய்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டு வந்த பிள்ளைகளின் திருமணம் கைகூடும். வியாபாரிகள் சரக்குகளை கூடுதலாகக் கொள்முதல் செய்வதால் எதிர்காலத்தில் அதிக லாபம்கிட்டும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தத்தால் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தன்னை நம்பியுள்ள குடும்பத் தார்க்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அரசு ஊழியர்கள் வேலைப் பளு கூடினாலும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் கம்பெனி கணக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.  எப்போதும் பணம் கையிருப்பு குறையாது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.