USA/அமெரிக்கா

Gefällt dir · Heute ·

ૐ The White House(USA) Diwali-2013
ૐ The White House(USA) DIWALI-2013 Celebrations
LIKE THIS PAGE–>www.facebook.com/WesternHindu
Viedo Courtesy–> White house.

The White House(USA) celebrated Diwali-2013 by lighting the White House DIYA, as Michelle Obama addressed the gathering in the Blue Room. This marks the fifth time that the Obamas have celebrated Diwali, also known as the Festival of Lights.
US First Lady Michelle Obama led the Diwali celebrations at the White House with Bollywood music at the State Room of the building along with Indian-American children and a popular band.Canada

http://tamilelibrary.org/teli/templeus5a.html

 http://www.vinaayagar.com/

http://en.wikipedia.org/wiki/BAPS_Shri_Swaminarayan_Mandir_Toronto

Canada Uthayans Status geteilt.
——————————————————————————————————————————————————————-
Statusmeldung
Von மிசா செல்வா
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

வாஷிங்டன், ஏப். 11–

அமெரிக்க பெண் எம்.பி.க்கு இந்து முறைப்படி திருமணம்

அமெரிக்க பெண் எம்.பி.க்கு இந்து முறைப்படி திருமணம்

 

அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர்.

அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும்.

இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் யாதவ் பங்கேற்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு மற்றும் சிறப்பு வாழ்த்து செய்தியுடன் சென்றார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் (பொறுப்பு) தரம்ஜித் சாந்துவும் திருமணத்தில் பங்கேற்றார். மேலும் பல இந்து குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

துள்சி கப்பார்டு அமெரிக்காவில் கடந்த 1981–ம் ஆண்டு கரோஸ்–மைக் கப்பார்டு தம்பதியரின் 4–வது குழந்தையாக பிறந்தார். இவரையும் சேர்த்து உடன் பிறந்தவர்கள் 5 பேர்  ஆவர்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

வேர் தேடும் கிளைகள் …..
”ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!” – அடைந்த அர்ஜென்டினா இளைஞர்
”சிறு வயதில் வழக்கம்போல பள்ளிhttps://www.facebook.com/photo.php?fbid=830378520315264&set=pcb.830378973648552&type=1ப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், இந்து மதத்தின் ‘ஈசாவாஸ்ய உபநிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன. தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச… அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை!
எனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம். அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். பகவத் கீதையும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது” என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.
அவரே தொடர்ந்து, ”பிறகு என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். இந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.” – எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.
பகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். ‘கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.
கிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந் தது ஸ்ரீரங்கத்தில்தான்.
வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.
2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ”திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்!” என்கிறார் பெருமிதத்துடன்.
”புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் (மிஷிரிசிளிழி) முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது” என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன்.
தற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்… என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.
”சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு” என்றவர், நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்!
”வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது’ என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்:
”இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி… உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.’ என்றார்.
சரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை?
”அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி’ என்கிறார் மெல்லிய சிரிப்புடன்!
நன்றி;இணையம்

——————————————————————————————————————————————————–
கனடாவில் ” உலக சைவ திருச்சபை” உருவானதுகனடாவில் சைவ சமயத்தின் ஒரு உயர் பீடமாக கருதப்படும் நோக்கமாக ”உலக சைவத் திருச்சபை” இன்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உருவானது.
ஸ்காபுறோ நகரில் உள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெ்ற்ற அதன் அங்குராரMehr anzeigen

(4 Fotos)

Foto

 

கனடாவில் இடம்பெற்ற சித்ரா பவுர்ணமி பெருவிழா! (Photos)

 

கனடாவின் பர்ன்பை நகரில் உள்ள அருள்மிகு துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தில் ஏப்ரல் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகப் பெருமான், துர்க்காதேவி அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அம்பாளுக்கு நவகலச அபிஷேகம் செய்யப்பட்டது.

சித்ரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அன்று நாள் முழுவதும் அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கா தேவி அம்மனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

morepic_97926

morepic_3503535

morepic_5209162

morepic_5276453

morepic_9420435


1 Sri varasiththi vinayakar .Totonto
3025Kennedy Rd,Unit10,
Scarborough,
ON M1V1S3
Tel:- 001.416.291.8500
http://www.vinaayagar.com/
2. thirusenthur murugan thevasthanam
2400 Finch Ave West,Unit -10
(West & Finch)
North York.ON M9M 2C8
Tel:001.416- 744-9568
3. Canada Sri Iyappan hindu Alayam
635 Middlefield Road. Scarborough,
On.M1V 5B8
Tel: 001. 416-321-6104
4. Thurkeswaram Sri Durka Hindu Tempel
30 Carnforth Road
416-759 9648

http://www.durka.com/

5. Canada nainathiu Nakammal Kovil
Warden Ave,Scarborough
ON M1R4Z8 (warden &Ellesmere)
Tel,416-293-4000
6. SRi AthiParasakthi Hindu temple
3021 Markham Rd,
Unit 45,46&47
Scarborough,
Ontario M1X1l8
416 293 -1226

 

 

 

USA

Chicago
BAPS Shri Swaminarayan Mandir
4N739 IL Route 59,
Bartlett, IL 60103.
USA
Tel: (1-630) 213 2277
Fax: (1-630) 213 2088
Email: 
info.chicago@usa.baps.org
Website: 
http://chicago.baps.org

அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு அருகேயுள்ள கோவில்களில் இரண்டு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, முருகன் கோவில்; மற்றொன்று ஸ்ரீ சிவா- விஷ்ணு கோவில்.

ஸ்ரீ சிவா- விஷ்ணு கோவில் வாஷிங்டனிலிருந்து பத்தொன்பது கிலோ மீட்டர் தொலைவில், மேரிலாண்டைச் சேர்ந்த லான் ஹாம் என்னுமிடத்தில் உள்ளது. கோவிலுக்கு அருகில் அமெரிக்காவின்- நாசா அமைப்பின் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு மையமும், ராக்கெட் ஏவுதளமான கோடாக் விண்வெளி ஏவு மையமும் அமைந்துள்ளது.

வெகுதூரத்திலிருந்தே தரிசிக்கும் வண்ணம், உயரமான இடத்தில் கம்பீரமான ராஜகோபுரத்துடன் கோவில் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தின்மீது ஒன்பது கலசங்கள் காணப்படுகின்றன. கோவிலுக்குள் நுழைய படிக்கட்டுகளில் ஏறிச்செல்லவேண்டும். சிரமமின்றி ஏறிச்செல்ல, கைப்பிடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

சைவ- வைணவ இணைப்பை பறைசாற்றும் கோவில் இது. 1988-ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டு, படிப்படியாக வளர்ந்து 2002-ல் முழுமை அடைந்தது. இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் வாஷிங்டனில் ஏறக்குறைய 2,000 இந்துக் குடும்பங்கள் இருந்தன. தற்போது வாஷிங்டன் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களையும் சேர்த்து சுமார் 8,000 குடும்பங்கள் வசிப்பதாகவும்;  கோவிலுக்கு வரும் பக்தர்களின்  எண்ணிக்கை வாரமொன்றுக்கு ஆறாயிரம் முதல் எட்டாயிரம் வரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாலயத்தினுள் பல்வேறு சந்நிதிகள் காணப்படுகின்றன. சிவன், விஷ்ணு, வேங்கடேஸ்வரர், விநாயகர், முருகன், ராமர், ஹனுமான், கிருஷ்ணன், ஆண்டாள், துர்க்கை, பார்வதி, லட்சுமி, அய்யப்பன் ஆகியோருக்கு தனிச்சந்நிதிகள் காணப்படுகின்றன. மேற்சொன்னவற்றில் பெரும்பாலானவை கல்லாலான விக்ரகங்களே. சின்முத்திரையுடன்கூடிய அய்யப்பன் பஞ்சலோகத்தில் உருவானவர். பதினெட்டுப் படிகளுடன்கூடிய தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறார். சந்நிதியின் மேற்கூரை கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. சிவன், விஷ்ணு, வெங்கடேஸ்வரர், கணபதி, முருகன் சந்நிதிகளின்மேல் அழகிய விமானங்கள் காணப்படுகின்றன.அனைத்து தெய்வங்களுக்கும் உரிய பண்டிகைகள்இங்கு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.  மதுரை மீனாட்சி கோவிலில், மீனாட்சி-சோமசுந்தரர் திருக்கல்யாண வைபவத்தைப்போல், இங்கும் மீனாட்சி கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் இத்தகைய கொண்டாட்டங்கள் சனி, ஞாயிறுகளில் வருமாறு அமைத்துக்கொள்கிறார்கள். திருமண வைபவத்தில் செய்யப்படும் எல்லாவிதமான சடங்குகளும் விமரிசையாகச் செய்யப்படுகின்றன.

பஞ்சலோக உற்சவர்களான மீனாட்சியையும் சோமசுந்தரரையும் பல்லக்குகளில் அமர்த்தி, தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கோவிலின் உட்புறத்தில் வலம் வருகிறார்கள். இந்த வைபவத்தில் வயது பேதமின்றி ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்துகொள்கின்றனர்.

அமெரிக்காவில் மிகப்பெரும் பதவியில் இருப்பவர்களும், மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தங்கள் தோள்களின்மீது சுமந்துசெல்ல ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் வேங்கடேஸ்வரருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதுபோல் ஏறக்குறைய அதே சமயத்தில் இங்கும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

2012-ல் அங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரிடரும், ஸ்ரீனிவாச கல்யாணத்தின் போது இறைவனின் வைபவத்துக்கு இடைஞ்சல் தராமல் போன நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்வு இறைவனின் அருளையும் பக்தர்களின் ஆர்வத்தையும் விளக்கும் என்பதால் இங்கு விவரிக்கப்படுகிறது.

30-6-2012 அன்று ஸ்ரீனிவாச கல்யாண வைபவம். அதற்கு முதல்நாள் பெரும் புயல் உருவாகி பெருமாளின் கல்யாண வைபவத்துக்காகப் போட்டிருந்த பந்தல்களைச் சரித்துச் சென்றுவிட்டது. அத்தனை புயலிலும் ஹோமகுண்டத்தில் எரிந்துகொண்டிருந்த ஹோமத் தீ அணையவில்லை.

மறுநாள் காலையில் அந்த இடத்தை வைதீகச் சடங்கு நடத்துபவர்களும், விழாக் குழுவினரும் வந்து பார்த்தனர்.

வைதீகச் சடங்குகள் நடத்துமிடத்தில் சேதம் எதுவுமில்லாததால், திட்டமிட்டபடி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

பந்தலை நிறுவியவர், மிகுந்த சிரமத்துக்கிடையில் தொடர்பு கொண்டு அழைக்கப்பட்டார். அவர் கோவிலின் முன்பு போட்டிருந்த பந்தலொன்றைச் சரிசெய்தார். தன்னார்வத் தொண்டரொருவர் வேறு சில தொண்டர்களை உதவிக்கு அழைத்து சில பந்தல்களைச் சரிசெய்தார்.

இரண்டு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, கோவில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவத்தை பலரும் காணும்படி ஒளித்திரைகள் அமைக்கப்பட்டன. ஐந்து மைக்குகள், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டன.  இரண்டாயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது. புயல் ஓய்ந்த அந்த மறுநாள் பொழுதில்கூட 1,500 பேர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

திருப்பதியைப்போல் வெங்கடாசலபதிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், சடங்குகள் நடத்தப்பட்டன. அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து இறை தரிசனம் செய்து தீர்த்தமும் பெற்றுச் சென்றார்கள்.

650 மாங்கல்யச் சரடுகளை பூஜைத்தட்டுகளில் வைத்து இளம் பெண்களுக்கு வழங்கினர். இரவு முழுவதும் சுவையான தென்னிந்திய உணவு அடங்கிய அட்டைப் பெட்டியையும், குளிர்ந்த நீர் பாட்டில்களையும் பக்தர்களுக்கு வழங்கினர். இயற்கையும் இறை வைபவத்துக்காக பெரிய இடைஞ்சல் செய்யாமல் விலகிக்கொண்ட நிகழ்வுக்கு உதாரணமாக இதைச் சொல்லலாம்.

உற்சவ காலங்களிலும் பிரம்மோற்சவ சமயத்திலும் கோவிலின் உள்ளேயே, அழகிய தேர் ஒன்று இழுக்கப்படுகிறது. இச்சமயங்களில் வெங்கடாசலபதி பலவிதமான ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்படுகிறார். சில பெண்கள் மைக்கின் முன்னால் அமர்ந்து வெங்கடாசலபதியின் துதிகளைப் பாடுகின்றனர். இறைவனுக்கு பதினாறு விதமான உபசாரங்களும் செய்யப்படுகின்றன. தேரிழுப்பைக் காண அமெரிக்கர்களும், பிற நாட்டவர்களும் கூட வருகின்றனர்.

கோவிலில் நடைபெறும் எல்லா பூஜைகளையும் சடங்குகளையும் நாராயணாச்சார் எனும் பட்டாச்சார்யார் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

சனிக்கிழமையும், உத்திர நட்சத்திர தினங்களிலும் அய்யப்பனுக்கு அபிஷேகம் நடக்கிறது. சங்கடஹர சதுர்த்தியன்று கணபதிக்கும், பிரதோஷ தினத்தன்று சிவனுக்கும் அபிஷேகம் நடக்கிறது. சனிக்கிழமைதோறும் வெங்கடாசலபதிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் மாலை ஆறரை மணியளவில் ஆரத்தி நடக்கிறது.

கோவிலில் இருக்கும் கலையரங்கில், உள்ளூர் கவிஞர்களும் இந்தியாவிலிருந்து வரும் கவிஞர்களும் கவி நிகழ்ச்சிகளை நடத்துகிறார் கள். கேரளாவில் இருந்து வரும் கலைஞர்கள் அடிக்கடி கதகளி நிகழ்த்துவதையும் காணலாம். கோவில் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்
திருக்கும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை திறந்திருக்கும்.

உலகியல் வாழ்வுக்காக- திரைகடல் தாண்டி திரவியம் தேடிப்போன இந்தியர்கள், தங்களது ஆன்ம தேடலின் அடையாளமாக எழுப்பியிருக்கும் இந்த சிவா- விஷ்ணு கோவிலை, வாஷிங்டன் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் தரிசித்து  வரவேண்டும்.

நியூயார்க் மகாவல்லப கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா
First Published : 11 Sep 2011 03:46:42 PM IST
Last Updated : 12 Sep 2011 03:21:41 PM IST
நியூயார்க் நகரில் பிளஷிங் ரகுதியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள அருள்மிகு மகாவல்லப கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, 9 நாள் திருவிழாவாக ஆகஸ்டு 26ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

9 நாட்களிலும் தினசரி விபூதி, சந்தனம், குங்குமம், பூக்கள், தங்க ஆபரணங்கள், உணவுப் பொருட்கள் என விதவிதமான சிறப்பு அலங்காரங்களில் மூலவர் மகா வல்லப கணபதி மிக அற்புதமாகக் காட்சியளித்தார். சதுர்லட்ச மூல மந்திர ஜபம் (நான்கு லட்சம் முறை மூல மந்திரத்தை ஜபித்தல்), யாகசாலை பூஜை மற்றும் உற்சவ மூர்த்தியுடன் நாதசுர இசை முழங்க பிரகார ஊர்வலம், மகா ஆராதனை என தினசரி நிகழ்வுகள் ஒன்பது நாட்களிலும் மிக விமரிசையாக நடைபெற்றது.

 

 

 

விழாவின் கடைசி நாளான செப்டம்பர் 4ந் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ரத யாத்திரை மிகச்சிறப்பாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் நியூயார்க் நகர வீதிகளில் வலம் வந்த ரத யாத்திரையில் சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடனமாட, பெரியோர்கள் பலர் விநாயகர் பக்திப் பாடல்கள் பாடிவர, ரதயாத்திரை நடைபெற்ற பகுதி முழுவதும் திருவாழாக்கோலம் கொண்டிருந்தது.

 

 

 

கோவிலுக்கு வந்தவர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வந்திருந்த சிவகுருநாதன் குழுவினரின் நாதஸ்வர தவிலிசை 9 நாள் கோவில் வைபவங்களுக்கும், ரத யாத்திரைக்கும் மேலும் பெருமை சேர்த்தது.

 

 

 

இந்த விழா மிகச்சிறப்பாக அமைய கோவில் நிராவ்கத் தலைவர் டாக்டர் உமா மைசூரேக்கர் தலைமையில் அனைத்து சிவாச்சார்யார்களும், கோவில் பணியாளர்களும், சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் இரவு பகல் பாராது முழு அர்ப்பணிப்புடனும், பேரார்வத்துடனும் செயலாற்றியது மிகவும் பாராட்டத்தக்கது.

Leave a Reply