தீபாவளி

Devarajan Natarajans Foto
Devarajan Natarajans Foto
Devarajan Natarajans Foto
Devarajan Natarajans Foto
Devarajan Natarajans Foto
Devarajan Natarajan hat 6 neue Fotos hinzugefügt — mit Godnathan Anmikam und 92 weiteren Personen.

சூர சம்ஹாரம் எங்கு நிகழ்ந்தது – திருச்செந்தூரிலா அல்லது இலங்கையிலா ? – ஆதார பூர்வ விளக்கங்கள்:
(சூர சம்ஹார தினம் அக்டோபர் 29 2014)
*
ஐப்பசி மாதத்தில் கொண்டாடப் பெறுவது ‘கந்த சஷ்டி திருவிழா’. அமாவாசை முடிந்து முதல் திதியான பிரதமையில் தொடங்கி ஆறாம் தினமான சஷ்டித் திதியில் கந்த சஷ்டி விரதம் நிறைவுறும். சஷ்டியிலேயே சூர சம்ஹாரம் நடந்தேறும்.
*
சூர சம்ஹார நிகழ்வுகளை கந்த புராணத்தின் யுத்த காண்டம் விரிவாகப் பேசுகிறது. ஆறுமுகக் கடவுளின் படை திருச்செந்தூர் தலம் வந்து சேர்கின்றது. குமரன் சூரபத்மனுக்கு இறுதி வாய்ப்பளிக்க திருவுளம் பற்றி, நவ வீரர்களுள் ஒருவரான வீரவாகுவை சூரனிடம் தூது செல்லுமாறு பணித்து அருளுகிறார்.
*
வீரவாகு கடல் கடந்து இலங்கையில் அமைந்துள்ள சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்தை அடைகிறார். தூது பலனளிக்கவில்லை. ஆணவம் அழியாத நிலையில் சூரபத்மன் ஆறுமுகக் கடவுளைப் போரில் வெல்வதாய் சூளுரைக்கிறான்.
*
தூதின் விவரமறிந்து வெகுளும் ஷண்முகப் பெருமான் படையுடன் வீரமகேந்திரபுரம் அடைகிறார். ஆறு நாட்கள் உக்கிரமான போர் நடைபெறுகிறது. சூரனின் சகோதரர்களான சிங்கமுகனையும் தாரகாசுரனையும் பெருமான் சம்ஹரித்து அருள்கிறார். யாவற்றையும் இழந்து தனித்து நிற்கும் நிலையிலும் சூரன் சரணடைய மறுக்கிறான்.
*
ஆறாம் நாள் ஏமகூடம் எனுமிடத்தில் வேலவன் சூரனை சம்ஹரித்துப் பின் சேவற்கொடியாகவும் மயிலாகவும் அவனை ஆட்கொண்டு அருளுகிறார். வீரமகேந்திரபுரம் முழுவதும் கடலில் அமிழ்கிறது. ஆறுமுகன் படையுடன் கடல் கடந்து திருச்செந்தூர் தலம் அடைகிறார். அங்கு முன்னமே எழுந்தருளி இருந்த சிவலிங்க மூர்த்தத்தைப் பூசிக்கிறார்.
*
செந்தூர் தலத்தில் மூல மூர்த்தியின் திருவுருவத்துக்குப் பின்னால் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். ஆக சூரசம்ஹார நிகழ்வு நடந்தேறியது இலங்கையிலுள்ள வீரமகேந்திரபுரத்தில். எனினும் சம்ஹார வெற்றியை தேவர்கள் அனைவரும் கொண்டாடிய பரம புண்ணியத் தலமாகத் திகழ்கிறது திருச்செந்தூர்.
*
திருச்செந்தூரில் வேலவன் விசேட சானித்தியம் கொண்டு எழுந்தருளி இருப்பதால் கடல் அலையென பக்தர் கூட்டம் திரள்கிறது. மேலும் ஆண்டுதோறும் அதி அற்புதமாய் நிகழ்ந்தேறி வரும் ‘சூர சம்ஹார’ விழாவை தரிசிக்கும் எவருக்கும் ‘செந்தூரே சம்ஹாரத் தலம்’ என்ற எண்ணம் தோன்றுவதில் வியப்பேதுமில்லை.
*
எனினும் வியாசரின் வடமொழி புராணமும், கச்சியப்பர் அருளிய கந்த புராணமும் ‘இலங்கையே சம்ஹாரத் தலம்’ என்று எண்ணற்ற பாடல்களில் ஐயம் திரிபறச் சான்றுரைக்கின்றன.
*
கந்த புராணம்: யுத்த காண்டம் – ஏமகூடப் படலம்):
இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளம்
கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
எவ்வமது அடைந்த தொல்லை இலங்கையங் குவடு நீங்கி
மைவரை புரைசூர் மேவு மகேந்திரபுர முன் போந்தான்
              புண்ணியம் செய்யப்போனால் பல இடையூறுகள் வரும். ஆனாலும், விடாமுயற்சியுடன் அந்தப் புண்ணியத்தைச் செய்து பலன் தேடிக்கொள்ள வேண்டும்.

ஆனால், பாவம் செய்வதற்கு எந்த இடையூறும் வராது. சுலபமாகச் செய்துவிடலாம்.

அப்படி தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவத்தைப் போக்கக்கூடியவை புண்ணிய நதிகள். பாரத தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அதனால்தான் பாரத தேசம் புண்ணிய பூமி என்று அழைக் கப்படுகிறது.

புனித நதிகளில் முனிவர்களும் ஞானி களும் ரிஷிகளும் மகான்களும் பக்தியுடன் நீராடி ஞானத்தைப் பெற்றார்கள். அந்த நதிக்கரைகளில் அமர்ந்து தவம், தியானம், யோகம் செய்து பல நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். 

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதியில் நீராடினால் சித்தம் சுத்தி அடைகிறது. உடல் பிணியைத் தீர்க்கிறது. மோட்சத்தை அளிக்கிறது.

எவ்வளவுதான் பணத்தை செலவு செய்தாலும் ஒரு நதியை உருவாக்க முடியாது. கடவுளின் கருணைதான் நதியை வரவழைக்கும். பாவத்தை சுமந்துகொண்டு, அதை இறக்கிவைக்க இடம் தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு சரியான இடம் நதிகள்தான். பாவத்தை ஏற்றுக்கொள்ளும் சுமைதாங்கிகள் அவை. வடநாட்டில் கங்கை, தென்னாட்டில் காவேரி. இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் குறைகின்றன; பாரங்கள் தொலைகின்றன.

இவைபோன்றே தலைசிறந்த புண்ணிய நதியாகக் கருதப்படுவது கோதாவரி. ஏழு புண்ணிய நதிகளிலே கங்கையைப் போன்று கோதாவரியும் பெருமைக்குரிய நதி. கௌதம முனிவரின் தவத்தாலும், அவருடைய தவத்தைப் போற்றிய மகேஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் இந்த பூமிக்கு கோதாவரி வந்தது. 

புராண காலத்தில் ஒருசமயம் பாரத பூமியில் பஞ்சம் நிலவியது. அப்போது மழை பொழிந்து பூமியில் தானியத்தை முளைக்கச் செய்ய கௌதம மகரிஷி மாபெரும் தவமியற்றினார். வருண பகவானின் அருளால் பூமியில் தானியங்கள் வளர்ந்தன. ஒரு குழியிலிருந்து முளைத்த தானியங்கள் முனிவரின் ஆசிரமத்தை நிறைத்தன. அவரது ஆசிரமத்தைச் சுற்றி தானியங்கள் கிடந்தன. 

அவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுத்தார். 

கௌதம முனிவர் பாராட்டப்படுவதைக் கேள்வியுற்ற சில முனிவர்கள் பொறாமை கொண்டு, கௌதம முனிவரின் ஆசிரமத்திலிருக்கும் தானியங்களை நாசப்படுத்த ஒரு பசுவை அனுப்பினார்கள். பசுவும் சென்று தானியங்களை நாசப்படுத்தியது. ஆனால், அந்த பசுவின்மேல் பரிதாபப்பட்டு, அதற்குப் புல்லைக் கொடுத்து உண்ணச் சொன்னார் கௌதம முனிவர். ஆனால், அந்தப் பசு தானியத்தையே குறிவைத்து நாசப்படுத்தியது.

வேறு வழி தோன்றாமல் முனிவர் அந்த பசுவைத் துரத்தினார். பசு அடி வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் தானியத்தை நோக்கியே ஓடியது. இப்போது அதிக வேகமாக பசுவை அடித்துத் துரத்திச் சென்றார். வேகமாக ஓடிய பசு தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்து இறந்துபோனது. பசுவைக் கொன்ற பாவத்துக்காக விமோசனம் தேடி பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்தார் கௌதமர். அவரது கடுமையான தவத்தைக் கண்ட ஈசன் தன் சடைமுடியிலிருந்து கங்கையைப்போல ஒரு நதியை உருவாக்கி அதில் கௌதமரை மூழ்கி எழச்செய்து பாவத்தைப் போக்கினார். அப்படி உருவான நதிதான் கோதாவரி.

இந்த நதி “த்ரயம்பக’ என்னும் மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு, தெற்காக ஓடுகிறது. இந்த நதிக்கரையில் பல முக்கிய தலங்கள், நகரங்கள், நீராடும் கட்டங்கள் உள்ளன. கோதாவரியின் தென்கரையிலிருக்கும் நாசிக்கும், வடகரையிலிருக்கும் பஞ்சவடியும் மகாபுண்ணிய க்ஷேத்ரங்கள். இங்குள்ள “ராமகுண்டம்’ என்ற தீர்த்தம் “சுக்லதீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காவியத்தில் மிக அற்புதமான இடமாக வர்ணிக்கப்படும் இடம் பஞ்சவடி. கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் லட்சுமணன் பர்ணசாலை அமைக்க, அதில் ஸ்ரீராமனும் சீதாதேவியும் வாழ்ந்தார்கள். இந்த நதியிலே ராமனும் சீதையும் நீராடி காயத்ரி, பிரம்மா, சூரியன் போன்ற தேவர்களுக்கு தினமும் பூஜை செய்தனர். பித்ருக்களுக்கு, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், அர்க்கியம் அளித்து அவர்களைத் திருப்திபடுத்தினர். அதனால், இது ராம குண்டம் என்று பெயர் பெற்றது.

இந்த ராம குண்டத்தில், நமது முன்னோர்களின் அஸ்தியை ஆச்தி விலய தீர்த்தத்தில் கரைத்தால், முன்னோர்களின் ஆத்மா மோட்சத்தை அடைவதாக ஐதீகம். மேலும், இந்த நதிக்கரையில் “த்ரயம்பகேஸ்வரர்’ என்ற ஆலயம் மிகச் சிறப்புவாய்ந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும் இங்கு மூன்று லிங்க வடிவில் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். கர்ப்ப கிரகத்தில் ஜோதியாய் பிரகாசிக்கின்றனர். இதை பரமேஸ்வரனின் “ப்ரதிக்’ சின்னமாகக் கருதுகின்றனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருவும் சூரியனும் சிம்ம ராசியில் நுழையும்போது, இங்கு கும்பமேளா என்ற திருவிழா அமோகமாக நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு ராம குண்டத்தில் நீராடி பாவத்தைப் போக்கிக்கொள்வார்கள்.

தீபாவளித் திருநாளில் இந்த ராமகுண்டத் தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம், அர்க் கியம் விட்டால் அதைப்போல புண்ணியம் வேறு எதுவுமில்லை. பித்ருக்களின் ஆசீர்வாதம் நம்மை நல்வழிப்படுத்தும். எல்லா செல்வங் களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம்.

வாழ்கின்ற காலத்தில் ஒரு முறையேனும் இந்த கோதாவரி நதி தீரத்திலுள்ள ராம குண்டத் தில் நீராடுவது பிறவிப் பயன் கொடுக்கும்.தீபாவளி 2-11-2013

பொன்மலை பரிமளம்

        தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.

“தமஸோ மா ஜ்யோதிர்கமய’ எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு.

தீபாவளியின் முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்பவன் பௌமன்.

ஒருசமயம், இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியை கடத்திச் சென்று கடலுக்குள் ஒளித்துவைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அந்த அரக்கனை அழித்து பூமியைக் கடலுக்குள்ளிருந்து மீட்டுவந்தார். அப்போது, பூமிதேவியின்மீது அவரது ஸ்பரிசம், அருள்பார்வை பட்டதால் உருவானவன்தான் பௌமன்.

அவன் வளர்ந்து பிராக்ஜோதிஷபுரம் எனும் நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான். 

தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்றால் அது தன் தாயால் மட்டுமே ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். 

அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனுக்கு அசுரகுணம் தோன்றியது. அதனால் கொடுமைகள் பல புரிந்தான். தீய செயல்களில் ஈடுபட்டான். அவனது கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பகவானை பிரார்த்தித்தார்கள்.

அந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார்.

நரகாசுரன் என்று சிறப்புப்பட்டம் பெற்றிருந்த பௌமனின் கொடுமைகளை அழிக்க பகவான் உறுதிகொண்டார். தன் மனைவி சத்யபாமாவுடன் தேரில் ஏறி போருக்குப் புறப் பட்டார்.

கடும்போர் நடந்தது. சத்யபாமா, கிருஷ்ணனின் சாரதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பௌமனின் ஆயுதத்தால் அடிபட்டதுபோல்  பாவனை செய்து மயக்கமுற்று வீழ்ந்தார் கிருஷ்ணன். கோபம்கொண்ட சத்தியபாமா, பௌமன்மீது பாணத்தை எய்தாள். அடிபட்டு தரையில் வீழ்ந்த பௌமன், “”அம்மா அம்மா” என்று குரல் கொடுத்தபடி சத்தியபாமாவைப் பார்த்தான். அவனது “அம்மா’ என்ற குரல் சத்தியபாமாவுக்கு உண்மையை உணர்த்தியது. அடிபட்டு வீழ்ந்து கிடப்பவன் தன் மகன் என்பதை உணர்ந்தவள், தேரில் கிடந்த கிருஷ்ணனைப் பார்த்தாள். கிருஷ்ணன் சத்தியபாமாவைப் பார்த்தார். கிருஷ்ணரின் மாயா விளையாட்டினைப் புரிந்து கொண்டாள் சத்தியபாமா. தன் மகனை தானே கொன்ற துயரம் இருந்தாலும், தீயசக்தியாகத் திகழ்ந்த தன் மகன் இறந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியோடு தீபங்கள் ஏற்றி கொண்டாட வேண்டுமென பகவானிடம் வரம் கேட்டாள். பகவானும் அப்படியே அருளினார். இது புராணச் செய்தி. இன்னொரு தகவலும் புராணத்தில் உண்டு.

தீர்க்கதமஸ் என்ற முனிவர், இயற்கை சூழ்ந்த இடத்தில் குடில் அமைத்து தன் மனைவி, மக்களுடன் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் அரக்கர்களாலும், காட்டில் வாழும் மிருகங்களாலும் அவரது தவத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதற்கு வழிகாண இறைவனை வேண்டினார். 

அப்போது அங்கே தவத்தில் சிறந்த சனாதன முனிவர் வந்தார். 

அவரை வணங்கிய தீர்க்கதமஸ் தனக்கு ஏற்படும் இடையூறுகளைச் சொல்லி வருத்தப்பட்டார்.

“”தீர்க்கதமஸ் முனிவரே, உமது துயரங்களும் இன்னல்களும் நீங்க ஓர் அருமையான விரதம் உண்டு. அதனைக் கடைப்பிடித்தால் நீங்கள் நலமுடன் வாழலாம்” என்றார் சனாதன முனிவர்.

துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும். எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது. மேலும் தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். மேலும் நம் வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது” என்றார். மேலும் சில தகவல்களையும் சொன்னார்.

நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைவதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.

இந்தப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினி களும், புத்தாடைகளில் விஷ்ணுவும், பட்சணங் களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு தீபாவளி வழிபாடு குறித்த நியதிகளை சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு இறையருள் பெற்றார்.

மேலும் சில நிகழ்வுகள் தீபாவளித் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது.  இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.

கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.

சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.

வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.

தீபாவளி குறித்து இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

“தீபாவளியார்’ என்றொரு துறவி கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அப் போது, அவர் வாழ்ந்த பகுதியை சந்திரகுப்தன் ஆட்சி புரிந்துவந்தான்.

ஒருநாள் அந்தத்துறவி மன்னனைச் சந்தித்து, “ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த நாளை திருநாளாகக் கொண்டாடவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால், மன்னன் ஏற்கவில்லை. உடனே அந்தத் துறவி, மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். 

இதனால் கோபமடைந்த மன்னன் அந்தத் துறவியை கழுவேற்றிக் கொன்றுவிட்டான். 

அந்தத் துறவி மரணமடைந்ததிலிருந்து நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அரண்மனை ஜோதிடர்கள் துறவியின் வேண்டுகோளை நிறைவேற்றினால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்றனர். எனவே சந்திரகுப்தன் ராமபிரான், இராவணனை வென்ற நாளை திருநாளாகக் கொண்டாட ஆணையிட்டான். அதற்குப்பின் நாட்டில் மழை பெய்தது; நாடு சுபிட்சம் அடைந்தது. அந்தத் துறவியான “தீபாவளியார்’ பெயரிலேயே, ராமரின் வெற்றித்திருநாளாக அனைவரும் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள் என்று ஒரு கதை உள்ளது.

தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும் 

பொருட்டு சிவபெருமான் உண்டார். அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். இந்நிகழ்ச்சி கள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.

பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான். 

புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மனிதநேயம் வளர்ப்போம்.

 

தீபாவளி 26-10-2011
இரா. இராதாபாய்

ஒருவன் இறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். நரகாசுரன் இறந்த நாளான நரக சதுர்த்திதான் தீபாவளி.

ஒருசமயம் திருமால்வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில்அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்த வன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது.

எல்லாருக்கும் பல தொல்லைகளைக் கொடுத்த நரகாசுரனை வதம் செய்ய எண்ணி திருமால் தேரில் வரும்போது, தன்னுடன் சத்யபாமாவையும் அழைத்து வந்தார். போரின் உச்சகட்டத்தில் திருமால் மயங்கியதுபோல் நடிக்க, சத்யபாமா அம்பெய்தி நரகாசுரனைக் கொன்றாள். அப்போது அவளுக்கு, பூர்வஜென் மத்தில் தான் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்தவனே இந்த நரகாசுரன் என்பதும்; அவன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே இறந்துவிட்டான் என்பதும் நினைவுக்கு வந்தது.

அவன் இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும்; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்றாள். அதைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது. எனவேதான் அவள் அப்படி வரம் பெற்றாள். தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.

தீபாவளி வெந்நீர்

அக்காலத்தில் தீபாவளிக்கு முதல் நாளை நீர் நிரப்பும் பண்டிகை  என்பர். ஒரு அண்டாவை சுத்தம் செய்து பொட்டிட்டு அதில் நீர் நிரப்புவார்கள். பின் அந்த நீரில் அரசு, பலா, ஆல், அத்தி, மாவிலங்கை ஆகிய ஐந்து வகை மரப்பட்டைகளை ஊற வைப்பார்கள்.

அந்த நீரை பின்னிரவு 3.00 மணிக்கே சுடவைத்து விடுவார்கள். அந்த வெந்நீரில்தான் கங்காஸ்நானம் செய்வார்கள். இதனால் சளி பிடிக்காது; தலைவலி வராது.

அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில் அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.

பண்டிகை பூஜை

பூஜையறையில் தட்டுகளில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள், தீபாவளி மருந்து வைத்து படைக்க வேண்டும். பின் மருந்தை விழுங்கிவிட்டு, புத்தாடை உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும்.

தீபாவளி மருந்து எளிய வகை: வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, வெல்லம் சிறிது சிறிது வைத்து, மைபோல அரைத்து சுண்டைக்காயளவு விழுங்கலாம். தீபாவளி மருந்து சாப்பிடுவதால்  பின்னர் உண்ணும் பலகாரங்கள் ஜீரணமாகும்.

தீபாவளி பூஜைகள் பல உள்ளன. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்.

மகாலட்சுமி பூஜை

கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.

லட்சுமி குபேர பூஜை

தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லலாம்.

குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.

முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர் களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.

கேதார கௌரி நோன்பு

இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீ ஆன நாள் இது. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். 21 அதிரசம் படைப்பர்.

தன்வந்திரி பூஜை

பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். இவர் மருத்துவக் கடவுள். கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

யமதீபம்

தீபாவளியின் முதல் நாள் இரவு யமதீபம் ஏற்ற வேண்டும். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி  வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும்.

யமத்வீதியாஉறவுகளை உறுதிப்படுத்தி உயர்வடையச் செய்யும் உன்னத நாள். தீபாவளியன்று இந்துக்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் அனுப்பும் வழக்கம் உள்ளது.

சூரியனின் பிள்ளை யமன்; பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.

யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை “தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது. யமத்வீதியா நன்னாளில் சகோதரனை சந்தோஷப்படுத்தும் சகோதரிகளுக்கு விதவைக் கோலம் உண்டாகாது என்பது நம்பிக்கை.

காசியில் தீபாவளி

காசியில் உள்ளோர் கங்கையில் நீராடி அன்னபூரணியை வணங்குவர். அன்று அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும்

அன்றைய தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.

காசியில் தீபாவளி- அன்ன லிங்கம்

இது தென்னாட் டவர்களால் நடத் தப்படுகிறது. தீபாவளி யன்று காலை 10.00 மணிக்கு கங்கைக்கரை ஓரத்தில் தரையை சுத்தப்படுத்தி கோல மிட்டு, மிகப் பெரிய வாழை இலைகளைப் பரவலாக வைப்பர். இலையின்மீது மூன்றுக்கு மூன்று சதுர அடிப் பரப்பில் இரண்டு அடி உயரத்தில் சுத்த அன்னத்தால் லிங்கப் பிரதிஷ்டை செய்வர். அதற்கு விபூதி குங்குமம் வைத்து, மலர் மாலையிட்டு ருத்ராட்ச மாலையும் சாற்றுவர். அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடையால் அலங்காரம் செய்வர்.

நந்தியையும் அன்னத்தால் செய்து எதிரே வைப்பர். பச்சை மிளகாயால் நந்திக்கு காது, வாய் வைத்து, புளியங்கொட்டையால் கண் வைத்து அலங்கரிப்பார்கள். 11.00 மணியளவில் யாத்ரீகர்கள் முன்னிலையில் கணபதி பூஜையுடன் வடை, பாயசத்துடன் பூஜை முடிப்பார்கள். சுமார் 200 பிச்சைக்காரர்களுக்கு அந்த லிங்கத்தின் அன்னத்தாலே அன்னதானம் செய்வர். இலைக்கு 31 ரூபாய் தட்சணையும் தருவார்கள். ஆரம்பத்தில் பிராமணர்களுக்கு செய்தனர்; இப்போது பிச்சைக்காரர்களை அமரவைத்து விருந்து படைக்கிறார்கள். காசியில் மீராகாட் என்ற இடத்தில்தான் இது நடக்கிறது.

ஜைன தீபாவளி

ஜைன மதகுரு மகாவீரர் முக்தியடைந்த தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவர். உலகின் பேரொளியாகத் திகழ்ந்த அவர் மறைந்ததால், உலகில் சூழ்ந்த இருளைப் போக்க தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

சத்பூஜை

தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி பூஜை.

அதன்பின் ஆறாம் நாள் வருவது சத்பூஜை. முதல் நாளும் மறுநாளும் முறம் ஒன்றில் ஐந்து வகை பழங்களும், ஐந்து வகை உலர் பழங்களும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு வைத்து, நதி அல்லது கடல் நீரில் நின்று, சூரிய பகவானுக்கு தீபாராதனை செய்து முறத்தை சுற்றிக்காட்டி வழிபடுவது சத்பூஜை. இதனால் நினைத்தது நிறைவேறும். இரு கிண்ணம் கோதுமை மாவை நெய்யில் வறுத்து, கால் கிலோ வெல்லம், உலர் பழங்கள் சேர்த்து நீர் விட்டுக் கிளறி வடை போல நெய்யில் பொரித்து எடுப்பர். நினைத் தது நிறைவேறியதும் இந்த பிரசாதத்தை அனைவருக்கும் தருவர்.

கோவர்த்தன பூஜை

வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது.
பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கிஅலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி கல்யாணம்

தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளிஅமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி.

அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.

வரலாற்றில் தீபாவளி

மதுரை மாநகரில் திருமலை நாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான்.

ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.

குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது.

காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது.

மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார்.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; “கால விவேகம்’, “ராஜமார்த்தாண்டம்’ ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

நேபாளத்தில்…

திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின் றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின் றனர்.

உலகெங்கும் தீபாவளி

இங்கிலாந்தில் கைபாகஸ் என்றும்; ஸ்வீடனில் லூசியா என்றும்; ஜப்பா னில் டோராநாக்ஷி என்றும்; சீனாவில் தஹிம் ஹீபர் என்றும்; பர்மாவில் தாங் கீஜி என்றும் தீபாவளிப் பண்டிகையை வரிசையாய் தீபம் ஏற்றி கொண்டாடுவர்.

பர்மா, சீனா, சயாம் நாடுகளில் மூங்கிலில் வண்ணக் காகித அலங்காரம் செய்து அதில் தீபமேற்றி ஆடிப் பாடுவர். இது ஆகாய தீபம். கனடா நாடாளுமன்றத்தில் 1998-ல் தீபாவளி கொண்டாடினர். வண்ண விளக்கு அலங்காரத் துடன் மகாலட்சுமி பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கயானாவில் இந்துக்கள் வாழும் இடத்தில், சம்பிரதாயப்படி தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். அன்று அங்கு தேசிய விடுமுறை நாள்.

இந்தியாவில் ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்.

Leave a Reply