மாசி மகத்தன்று

free counters

மாசிமாத ராசிபலன்கள் உள்ளே………..



 



மகாமக சிறப்புக் கட்டுரை-5
கே. குமார சிவாச்சாரியார்

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் நாம் செய்கின்ற பாவங்கள் முழுவதும் விலகுகின்றன என்ற நம்பிக்கை முற்காலத்திலிருந்தே உள்ளது. மாணிக்கவாசகப் பெருமான் தீர்த்த நீராடலின்போது சொல்லவேண்டிய பாடலைத் தன் திருநாவால் பாடியுள்ளார். இதனை மகாமகத் தீர்த்தவாரி சமயத்தில் பாடிவிட்டு முழுகியெழுவது புண்ணியம் பல சேர்க்கும்.

“ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கழல்கள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோ ரெம்பாவாய்!’
மகாமக விரதம்

இந்த விரதத்தை ஐந்து தினங்கள் கடைப் பிடித்தல் வேண்டும். முதல் நாளன்று கன்யா தீர்த்தத்தில் நீராடுதல் முறையாகிறது. பிறகு கலசம் வைத்து வருணனை ஆவாஹனம் செய்து, புண்யாகவாசனம் செய்து, கும்பகோணத்தில் தங்குமிடத்திலிருந்து நீர் தெளித்துக் கொண்டு, மூன்று முறை (ஆசமனம்) நீர் அருந்துதல் வேண்டும். குரு பூஜை நடத்தி, பசுவின் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் கலந்து, சிவனது பஞ்ச பிரம்ம மந்திரம் (ஈசானம் முதல் அகோரம் வரை) கூறி உட்கொள்ளவேண்டும். ஒருவேளை மட்டும் உணவுண்டு தரையில் படுத்து உறங்குதல் வேண்டும்.

இரண்டாவது நாள்: அதிகாலை பிரம்மமுகூர்த்த காலத்தில் எழுந்து நீராடி, சிவன், விஷ்ணு ஆலயங்களை தரிசனம் செய்து அன்னதானம் செய்தல் வேண்டும்.

மூன்றாம் நாள்: காலையில் கன்னியா தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தத்திலுள்ள தேவதைகளை வணங்கி, நவகன்னியர்களை பூஜை செய்து, அரசமரப் பிரதட்சணம் செய்யவேண்டும். பின்னர் ஒன்பது கன்னிப் பெண்களை அழைத்து ரவிக்கைத்துணி, குங்குமம், தாம்பூலம் தந்து அன்னதானம் செய்யவேண்டும். தொடர்ந்து சாரங்கபாணி, சக்கரபாணி, கும்பேசுவரர் சந்நிதிகளுக்குச் சென்று ஆலய வலம் வந்து வழிபட்டபிறகு, ஒருவேளை மட்டும் உணவுண்ணல் வேண்டும்.

நான்காம் நாள்: நமது முன்னோர்களை வணங்கி சங்கல்பம் செய்து ஆலய தரிசனம் செய்துவிட்டு பால், பழம் உண்ணவேண்டும். விரதமிருப்பதால் அதிகாலையில் குளிக்கும் முன்பு தலைமுடி எடுத்துக்கொண்டு முகக்ஷவரம் செய்துகொள்ளலாம்.

ஐந்தாவது நாள்: அதிகாலை எழுந்து நீராடியபின் பித்ருக்களை நினைத்து மகாசங்கல்பம் (அன்றைய நாள், நட்சத்திரம், திதி சொல்லி) செய்துவிட்டு, மகாமகப் புனித நீராடல் செய்வதற்கு முன் பிரதான வழிபாடாகிய தீர்த்தத்தால் அர்க்கிய தர்ப்பணம் விடுதல் வேண்டும். இங்கே பதினாறு தலைமுறை பித்ருக்களை நினைத்து பொறுமையாக தீர்த்த சிரார்த்த முறை செய்யலாம். தொடர்ந்து சூரியனை வணங்கிவிட்டு மகாமகத் தீர்த்தக் குளத்திற்குள் இறங்கி, கும்பேஸ்வரர் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு புனித நீராடல் செய்யவேண்டும். இப்படி மகாமக விரதமிருந்து இந்நாளில் வழிபடுவோர் சகல போகபாக்கியங்களையும் அடைவர் என்பது நீராடல் விதி.

கும்ப லிங்க துதி!

“திருக்குடந்தை’ என்று புகழப்படும் கும்பகோணத்தின் சிறப்பை அறிந்த பிரம்மதேவர், மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை துதித்த அபூர்வ துதி இது. இதைச் சொல்லி வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் குரு, சூரியன், சுக்கிரன் முதலிய கிரகங்கள் தோஷ மடைந்திருந்தால் அவை விலகும். அற்பாயுள் தோஷம் நீங்கி, ஆரோக்கியம், புத்திரலாபம் போன்ற நலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீகுருப்யோ நம:
நமோ நம: காரண காரணாய
ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய/
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பீமாய பீமாதிஹராய சம்பவே
நாகாய சாந்தாய மநோஹராய/
மஹாஜடாஜுட தராய பூதயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸர்வாகமாம்நாய சரீரதாரிணே
ஸோமார்க்க நேத்ராய மஹேஸ்வராய/
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

காத்யாயனீ காமித தாயகாய
துர்க்கார்த்த தேஹாய க்ருதாகமாய/
காலாய காலேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

விபூதி தாநேக சரீர தாரிணே
கல்பாய கல்பாந்தகராய சம்பவே/
விஸ்வாய வைஸ்வாநர லோசநாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மாயா ப்ரபஞ்சாய மனோஹராய
மாயா கடேசாய மஹாதிஹாரிணே/
மாயா ப்ரபஞ்சைக நிதான மூர்த்தயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

போகீந்த்ர ஸம்பூஜித விக்ரஹாய
போகீந்த்ர பூஷாய பவாந்தகாய/
ஸ்ரீபாரதி சங்கர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தாம்ராய சாமீகர பூஷிதாய
ஸ்ரீசோம கோடீர விபூஷிதாய/
ஸமஸ்த ஸத்க்ஷேத்ர கலாவராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸ்ருஷ்டி ஸ்திதி த்வம்ஸன காரணாய
ஸ்ரீஸ்ருஷ்டி பீஜாங்க மனோகராய/
ஸச்சாஸ்த்ர வேதாந்த களேபராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஷட்வர்க்க ஸம்பேதன தீக்ஷிதாய
ஷடானனாதித்ய பலப்ரதாய/
ஸமஸ்த மந்த்ரார்த்த நிதான ரூபிணே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

கும்போத்பவ ப்ரமுக பூஜித விக்ரஹாய
வீராய வீராந்தகராய மாயினே/
பக்தேஷ்டதான நிபுணாய பவாப்தி போத்ரே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மூலாய மூலாகம பூஜிதாய
பாதாள மூலாய நிதீஸ்வராய//
நித்யாய ஸித்தேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸமஸ்த கல்யாண வரப்ரதாய
ஸமஸ்த கல்யாண நிதான மூர்த்தயே/
ஸ்ரீமங்களாம்பார்ச்சித பாதபத்மிநே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

லக்னாதி பேசாய க்ரஹார்ச்சிதாய
ஸ்ரீகாமதேநு சுரஸங்க சுபூஜிதாய/
பஞ்சாநநாய பரமார்த்த நிதர்ஸகாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தீர்த்தாதி நாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே/
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரீ வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பஞ்ச குரோச தல யாத்திரை: மகாமகப் புனித நீராடலுக்கு முன்பாக விரதமிருந்து யாத்திரை சென்று வரவேண்டிய ஐந்து தலங்களாக திருவிடை மருதூர், சுவாமிலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், கருப்பூர் என்னும் திருப்பாடலவனம் ஆகியவை விளங்குகின்றன.

அஷ்டாதச தல யாத்திரை: பதினெட்டு சிவஸ்தலங்களுக்கு மகாமகக் காலத்தில் யாத்திரை சென்றுவருதல் முக்கியம். அவை:

திருவிடைமருதூர் என்ற மத்யார்ஜுனம், திருப்புவனம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், செம்பியவரம்பல் (அய்யாவாடி), சிவபுரம், சாக்கோட்டை, மருதாநல்லூர், பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, இன்னம்பூர், திருப்புறம்பியம், கொட்டையூர், கருப்பூர், வாணாதுரை.

பஞ்ச குரோச தலங்களையும், அஷ்டாதச ஸ்தானம் என்னும் தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பவர்கள், பூமியை வலம் வந்த பலனை அடைவார்கள் என்பது ஐதீகம். பழங்கால கல்வெட்டுச் செய்திகளின்படி இத்தகவல் உள்ளது. இடைச்செருகலாக வரும் மடங்கள், பீட தரிசனம் போன்றவற்றை நம்பிச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஸ்ரீ மங்களாம்பிகை சடாதார மங்கள துதி

ஸமஷ்டி மந்த்ர ரூபாம் தாம்
மஹாயாக ப்ரியாம் சிவாம்/
மூலதார ஸ்திதாம் வந்தே
அமிர்தேச ப்ரியாம் தலாம்//

மங்களாம் மாத்ருகாம் தேவீம்
ஸர்வ மங்கள ரூபிணீம்/
ஸ்வாதிஷ்டான ஸ்திதாம்
வந்தே ஸர்வ மங்கள தாயிம்//

ஸர்வகாமப்ரதாம் திவ்யாம்
ஸர்வக்ஞாம் ஞானதாம் சுபாம்/
துர்கடார்த்த ப்ரதாம் வந்தே
மணிபூரக வாஸினீம்//
கணபீத ஹராம் காளீம்
காருண்யாம்ருத ரூபிணீம்/
கணாம்பிகா மஹம் வந்தே
அநாஹத நிவாஸினீம்//
ஸர்வரோக ஹரீம் கௌரீம்
ஸர்வ தாரித்ரிய நாஸினீம்/
ருக்விபேதிநீ மஹம் வந்தே
விசுத்தே ஸ்தேதித காமிநீம்//
ஸர்வைஸ்வர்ய ப்ரதா தாத்சீம்
ஸர்வானந்த ப்ரதாயினீம்/
ஸர்வேப்ஸித ப்ரதாம் வந்தே
ஆக்ஞா சக்ர நிவாஸிநீம்//
மங்களம் தேஹி மந்த்ரேசி
சர்வ மந்த்ர ஸ்வரூபிணி/
கும்பேச வாமபாகஸ்தே
கும்பகோண நிவாஸினி//
மங்களாம்பிகா துதி நித்யம்
ய படேத் பக்தி மாந்நர:/
சர்வ சௌபாக்ய மவாப்னோதி
ஸகல கார்ய சித்திதம் ஸதா//

துதியின் சிறப்பு: மங்களாம்பிகை தேவி 51 அட்சரங்களுடன் கூடிய சக்தி வடிவினளாகவும், மகாயாகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீவித்யா பூஜையில் விருப்பம் கொண்டவளாகவும், அமுதேச சிவபெருமானின் அன்புக்குப் பிரியமானவளாகவும், 64 கலைகளோடு கூடிய மூலாதார சக்கரத்தில் வீற்றிருப்பவளாக வும் விளங்குகிறாள்.

சர்வமங்கள ரூபிணியாகவும், ஞானத்தை அளிப்பவளாகவும், நமது மனவிருப்பத்தை அறிந்து கிடைப்பதற்கரிதான பொருளைத் தருபவளாகவும், நோய்கள், தோஷங்களை அகற்றி, தரித்திரங்களை விலகச் செய்து, நாம் விரும்புகிற அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள்பவளாகவும் காட்சி தருகிறாள். மந்திர அட்சரங்கள் எல்லாம் அவளுக்குள் ஒடுங்கியிருப்பது போற்றுதலுக்குரியது என இத்துதி அம்பிகையின் சக்தியை எடுத்துச் சொல்கிறது. மகாமகத் திருவிழா நாளில் இந்த சக்தியுள்ள சடாதாரத் துதியைக் கூறுபவர்க்கு சர்வ வல்லமையும் கூடுவது சாத்தியமே.

பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தார். அதனால் கடலரசன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியுடன் திருமால் வைகுண்டம் சென்றுவிட்டதால், “நாம் எப்போது மீண்டும் மகாவிஷ்ணுவைக் காண்பது’ என்று கவலைப்பட்டார் சமுத்திரராஜன். இதனையறிந்த மகாலட்சுமி திருமாலைப் பார்க்க, “நான் ஆண்டுக்கு ஒருமுறை கடற்கரைக்கு வந்து தரிசனம் தருகிறேன்’ என்று அருளினார்.

அந்த நாள்தான் மாசிமகம் என்கிறது புராணம். அதனால்தான் கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணியில் அருள்புரியும் ஸ்ரீபார்த்த சாரதி கருடவாகனத்தில் புறப்பட்டு, தெற்கு மாட வீதி, துளசிங்கத் தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலைவேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் மூலவர் தீர்த்தபாலீஸ்வரரும் மாசி மகத்தன்று அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரியுடன் சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தம்பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். மேலும், மயிலை கபாலீஸ்வரர், அம்பாள் ஸ்ரீகற்பகாம்பிகை ஆகியோரும், மயிலையிலுள்ள சிவாலயங்களில் அருள்புரியும் தெய்வங்களும் கடற்கரைக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள்.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்று கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம். இங்குள்ள கடலில் நீராடுவது ராமேஸ்வரம் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடுவதற்கு சமம். இங்கு தலசயனப்பெருமாள் கிழக்குமுகம் நோக்கி சயனக் கோலத்தில் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.

புண்டரீக மகரிஷி தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணி கடற்கரைக்கு வந்தார். மலர்க்கூடையை கரையில் வைத்துவிட்டு, கடல்நீரை இறைத்து விட்டால் பெருமாளைக் கண்டுவிடலாம் என்றெண்ணி, கைகளால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். அப்போது, “நாராயணா நாராயணா’ என்றபடியே ஸ்ரீமன் நாராயணன் முதியவர் வேடத்தில் அங்கே வந்தார். அவர் புண்டரீக மகரிஷியிடம், “”எனக்கு பசியாக இருக்கிறது. நீங்கள் ஊருக்குள் சென்று ஏதேனும் உணவு வாங்கிவாருங்கள். அதுவரை கடல்நீரை நான் இறைத்துக்கொண்டி ருக்கிறேன்” என்றார்.

சிறிது நேரத்தில் உணவு வாங்கிவந்த முனிவர் கடல் நீர் உள்வாங்கியிருப்பதைக் கண்டார். அந்த வயோதிகரைக் காணவில்லை. அந்த சமயத்தில் ஓர் ஒலி கேட்டது. அந்த திசையில் முனிவர் பார்த்தபோது, அங்கே முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரை மலர்கள் அடங்கிய கூடையிருந்தது. அதிலிருந்த மலர்களை தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்டு சயனக் கோலத்தில் சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன். திருமால், தன் திருக்கரங்களால் கடல்நீரைத் தொட்டு இறைத்ததனால் இத்தலம் அர்த்தசேது என்று போற்றப்படுகிறது.

முனிவருக்கு பெருமாள் அருள்புரிந்த நன்னாள் மாசிமகம் என்பதால், இத்தல பெருமாள் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி காண்கிறார்.

அன்று இக்கடலில் நீராடி, தலசயனப் பெருமாளை தரிசித்தால் சகலபாக்கியங்களும் கிட்டுமென்பது ஐதீகம்.

புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீமுஷ்ணத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இத்தலம் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மூலவர் ஸ்ரீபூவராகர்; தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி.

இங்கு, மாசி மகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். இத்தலத்திற்கு கிழக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சமுத்திரம் உள்ளது. கடற்கரையிலுள்ள தைக்கால் என்ற கிராமத்திற்கு பூவராக சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போது அந்த ஊரில் வசிப்பவர்கள் சீர்வரிசையுடன், மேளதாளங்களுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைப்பார்கள். பட்டு, பீதாம்பரம், மாலைகள் அணிவிப்பார்கள். வீதியில் எழுந்தருளிச் செல்லும்போது, நவாப் அடக்கம் செய்யப் பட்டிருக்கும் மசூதியின் மேற்புற வாசலின் எதிரில் பெருமாளை நிறுத்தி, சுவாமிக்கு மாலை அணிவித்து சர்க்கரை, பழங்கள் நிவேதனம் அளித்து மரியாதை செய்வார்கள். இதேபோல ஹாஜியா சமாதியின்மேல் மாலை அணி வித்து மரியாதை செலுத்திய பிறகு, கிள்ளை மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.

மாசி மகத்தில் மாமனாரான சமுத்திரராஜனுக்கு மகாவிஷ்ணு கடற்கரையில் காட்சி தந்ததுபோல, ஈசனும் மீனவர் தலைவனுக்கு மாப்பிள்ளையானதாக புராணம் கூறுகிறது. ஒரு காலகட்டத்தில் அம்பிகையானவள் மீனவ குலத்தில் அவதரிக்க நேர்ந்தது. இறைவன், அம்பிகையை மணக்க தகுந்த காலம் கனிந்தபோது, மீனவர் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடத்திற்குச் சென்றார். அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிலங்கத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி தந்ததுடன், மீனவப் பெண்ணாக இருந்த அம்பிகையை மணம்புரிந்தார்.

மீனவர் தலைவன் ஈசனிடம், “தாங்கள் அடிக்கடி தரிசனம் தர அருள்புரியவேண்டும்’ என்று வேண்டவே, அதன்படி ஈசன், “மாசி மகத்தன்று கடல்நீராட வருவேன்’ என்று அருளினார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. இத்தலம் காரைக்காலிலிருந்து பொறையார் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு அருகில் இன்னொரு தலம் உள்ளது. அது திருவேட்டங்குடி என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் திருமேனியழகர்;

அம்பாள் சாந்தநாயகி. சம்பந்தர் பாடிய திருத்தலம். இத்தலத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்குதான் ஈசன் மாசி மகத்தன்று மீனவ வேட மூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். அப்போது காளிக்குப்பம், மண்டபத்தூர், அக்கம்பேட்டை ஆகிய கடலோர ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்கு சீர்வரிசைகள் அளித்து சிறப்பு வழிபாடுகள் செய்வர்.

மீனவர் தலைவனுக்கு ஈசன் மாப்பிள்ளை யானதுபோல், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரி ராஜப் பெருமாளும் “மாப்பிள்ளை’ அந்தஸ்தை மாசி மகத்தில் பெறுகிறார்.

நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியிலுள்ளது திருப்புகலூர். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருத்தலம் திருக்கண்ணபுரம். மூலவர் சௌரிராஜப் பெருமாள்; தாயார் கண்ணபுரநாயகி. மாசி மகத்தையொட்டி, கிழக்குக் கடலிலுள்ள கருடபர்வதத்திற்கு காட்சி தரும் வகையில், திருமலைராயன் பட்டினக் கடற்கரையில் எழுந்தருள்கிறார் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். அப்போது அவருடன் சுற்றுவட்டாரக் கோவில்களிலுள்ள பெருமாள்களும் வீதியுலா வருவார்கள்.

திருக்கண்ணபுரத்திலிருந்து அதிகாலையில் தங்கப் பல்லக்கில் புறப்படும் சௌரிராஜப் பெருமாள், திருமருகல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் செல்வார். வழியெங்கும் வெண்பட்டு மற்றும் ரோஜா மாலையுடன் பக்தர்கள் காத்திருப்பார்கள். அங்கே திருமலைராயன் பட்டினம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீரகுநாதப் பெருமாள், ஸ்ரீவிழிவரதராஜப் பெருமாள், நிரவிஸ்ரீ கரிய மாணிக்கம் பெருமாள், காளைக்கோவில்- பத்து ஸ்ரீநித்தியப்பெருமாள் முதலான பெருமாள்கள் காத்திருப்பார்கள். பிறகு, அனைவரும் ஒன்றுகூடி மாலை 5.00 மணிக்கு கடலில் தீர்த்தவாரி காண்பர். இதை ஒரு பெருந்திருவிழாபோல கொண்டாடுவர்.

ஒருசமயம், இந்திரனின் நண்பனான உபரிசிரவசு எனும் வேந்தனுக்கு திருமகள் மகளாக அவதரித்தாள். அப்போது திருமகள் பெயர் பத்மினி. இந்த பத்மினியை திருமால் திருமணம் செய்துகொண்டதால், ராமபிரானை மிதிலை நகரத்து மக்கள் மாப்பிள்ளையாகக் கொண்டாடி மகிழ்ந்ததுபோல், திருமலை ராயன் பட்டினத்து மீனவர்கள் ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை “மாப்பிள்ளை’ என்று அழைத்து சீர்வரிசைகள் செய்து மரியாதை செய்கின்றனர்.

ஈஸ்வரனும் பெருமாளும் இணைந்து மாசி மகத்தில் தீர்த்தவாரி காணும் திருத்தலங்களும் உள்ளன.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் ஸ்ரீஉலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் இருவரும் ஒன்றுகூடி தீர்த்தவாரி காண்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதே போல புதுவையில் மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான ஆலயங்களில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அன்று கடற்கரை திருவிழா கோலம் காணும். அனைத்து சுவாமி களும் வந்ததும், தீர்த்தவாரி விழா நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, கடலில் நீராடி புனிதம் பெறுவர்.

நாகை மாவட்டம், பொறையார் தலத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீகோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீகோதண்டராமர் அருள்புரிய, சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதரும் காட்சிதருகிறார். அவருடன் ஸ்ரீதேவியும் எழுந்தருளியுள்ளார். அடுத்த சந்நிதியில் பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

இத்தலத்தில் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது. அந்நாளில் பொறையார் ஸ்ரீகோண்டராமர், அதே திருத்தலத்திலுள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர், தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோர் சூழ்ந்துவர, தரங்கம்பாடி கடற்கரையில் தீர்த்தவாரி விழா மூன்று தலத்து உற்சவமூர்த்திகளுடன் நடைபெறும். ஒரே சமயத்தில் இவர்களை வழிபட பாவங்கள் நீங்கி புனிதம் சேரும் என்பர்.

சிவபெருமானும் திருமாலும் கடற்கரையில் தீர்த்தவாரி காண்பதுபோல், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலிலும் மாசி மகத்தன்று தீர்த்தவாரி விழா நடைபெறும். இதனையொட்டி ஸ்ரீசெந்திலாண்டவர் மற்றும் ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த விழாவினையொட்டி நடைபெறும் உருகுசட்ட சேவை பிரபலம். மேலும், பச்சை சார்த்துதல், சிவப்பு சார்த்துதல், வெள்ளை சார்த்துதல் என விதவிதமான அலங்காரங்களில் அருளும் செந்தூர்முருகன், மாசி மகத்தன்று கோவில் எதிரேயுள்ள கடற்கரையில் தீர்த்தவாரி காண்பார். அப்போது பக்தர்களும் நீராடி புனிதம் பெறுவர்.

பொதுவாக மாசிமகத்தன்று கும்ப கோணத்தில் அமைந்துள்ள அமிர்தகுளமான மாமாங்கக் குளத்தில் நீராடுவது சிறப்பு. அதுவும் இந்த வருடம் மகாமகம் என்பதால் மிகவும் போற்றப்படுகிறது. அங்குசெல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெறலாம்.


அனுமன் ஜெயந்தி 9-1-2016

பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையாலும், அயோத்தி மாநகர மக்களின் நற்பயனாலும், தசரத மகாசக்கரவர்த்தியின் புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாகவும் பூலோகத்தில் சூரிய வம்சத்தில் ராமன் என்கிற பெயரில் மகாவிஷ்ணு அவதரித்தார் என்பதை இராமாயணம் நமக்கு சொல்லுகிறது. நல்லவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு அருளாசி தரவும், தீயவர்களைத் திருத்தவும் அல்லது அழிக்கவும் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இராமநாமத்தை ஜெபிப்பதால் கிட்டும் அதே பயன் இராமாயணத்தைக் கேட்டாலோ, படித்தாலோ, பாராயணம் செய்தாலோ கிட்டுமென்பது நம் முன்னோர்களின் வாக்கு.

திரேதாயுகத்தில், வாழ்க்கையை எப்படி அறநெறியுடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை செயல்வடிவில் விளக்குவதற்காகவே மகாவிஷ்ணு மானிட வடிவில் பிறந்தார். இராமன் காட்டிய வழி எது என்பதை விளக்குவதுதான் ஸ்ரீமத் இராமாயணம்.

“ராமாயணேதி யந்நாம
ஸ்க்ருதப்யுச்யதே யதா
ததைவ பாபநிர்முக்தா
விஷ்ணுலோகம் ஸ கச்சதி’

என்று இராமாயண மாகாத்மிய சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இராமாயணம் என்ற பெயரை எப்பொழுது ஒருவன் சொல்கிறானோ அப்போதே அவன் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணு லோகத்தை (வைகுண்டம்) அடைகிறான் என்பது இதன் பொருள்.

இராமன், சீதையைத் தேடி கிஷ்கிந்தை எனும் காட்டில் செல்லும் வழியில், அனுமனின் நட்பு இராமனுக்குக் கிட்டியது. இராமனுக்காக செயற்கரிய செயலைச் செய்த- கம்பீரமான உருவம் கொண்ட அனுமனை நினைத்தாலே நம் மனதிற்குள் உற்சாகம் பெருகும். சரஸ்வதியை வணங்கினால் கல்வி, ஞானம் கிட்டும்; லட்சுமியை வணங்கினால் செல்வ வளம் கிட்டும் என்கிற நம்பிக்கையைப்போல தைரியம், வீரம் கிட்ட அனுமனை வணங்குதல் என்பது ஓர் நம்பிக்கை.

இராவணனால் சிறைப்பட்ட சீதையைத் தேட சம்பாதி, ஜாம்பவான் உள்ளிட்ட பல மாவீரர்கள் கடல்தாண்டி இலங்கைக்குச் சென்றுவரத் தயங்கியபோது தம்முடைய வீர தீரத்தை உணர்ந்து, தன்னால் இக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்கிற அபரித தன்னம்பிக்கையில் துணிந்து அனுமன் ஏற்றுக்கொண்டது அனுமனின் தைரியத்திற்கு ஒரு சான்றாகும்.

இராமனுக்கு நிகரான பலத்தைப் பெற்றிருந்த பராக்கிரமசாலியான இலங்கை மன்னன் இராவணனை, சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுக்கியதுபோல இராவணனின் அரண்மனைக்கு தனியாக நேரில் சென்று அவனிடம் வாதிட்டது அனுமனின் வீரத்திற்கு சான்றாகும்.

வீரத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெற்ற அனுமனின் முக்கிய மூன்று  அகப்பண்புகளான அன்பு காட்டியமை, சாதுர்ய திறமை, சக்தியுடன் கூடிய வீரம் என்பதை இராமாயணத் தின் சுந்தரகாண்டம் மூலம் அறியலாம்.

சுந்தரகாண்டத்தின் கதாநாயகனான அனுமன், சீதையின் இருப்பிடத்தை சம்பாதி எனும் பட்சிராஜன் (கழுகு) மூலம் அறிந்து இலங்கைக்குச் செல்ல ஆயத்தமானார் என்பதை சுந்தரகாண்டத்தின் கீழ்க்கண்ட முதல் சுலோகம் நமக்குத் தெரிவிக்கிறது.

“ததோ ராவணநீதாயா:
ஸீதாயா: ஸ்த்ருகர்சந:
இயேஷ பத மந்வேஷ்டும்
சாரணாசரிதே பதி:’

மகேந்திர மலையிலிருந்து (திருநெல்வேலி அருகே) கிளம்பி இலங்கைக்கு ஆகாயமார்க்கமாகச் செல்லும்போது அவருக்கு மூன்று இடைஞ்சல்கள் தொடர்ந்து வந்தன. அவற்றைத் தமது மதிநுட்பத்தாலும், அகப்பண்புகளாலும் தகர்த்து இராமகாரியத்தைச் செவ்வனே நிறைவேற்றினார். வீறுகொண்டு மிக வேகமாகப் புறப்பட்ட அனுமன் கடலைக் கடக்கும் போது மைநாக மலையால் முதல் தடை ஏற்பட்டது. இதைக் கம்பன்,

“இந்நாக மன்னா னெறிகாலென வேகும் வேலைத்
திந்நாக மாவிற் செறிகீழ்த்திசை காவல் செய்யும்
கைந்நாக மந்நாட் கடல்வந்ததொர் காட்சி தோன்ற
மைந்நாக மென்னு மலைவானுற வந்த தன்றே’

என்கிறார்.

சமுத்திரராஜனின் உதவி யால், கடலுள்ளே இருந்த மைநாகம் என்னும் மலை கடலிலிருந்து மேலே வந்து அனுமனை தன்மீது சற்று நேரம் அமர்ந்து இளைப் பாறுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டது. அங்ஙனம் ஓய்வெடுத்தால், தான் எடுத்த காரியம் நிறைவேறாது என்பதை உணர்த்தி, மலையைக் கைகளால் கட்டித் தழுவி புன்னகை புரிந்தவாறே அன்பு பாராட்டி, மைநாக மலையிலிருந்து விடுபட்டு மீண்டும் விண்ணில் பறந்தார்.

அனுமனின் வைராக்கியத்தை சோதிக்க தேவர்கள் இரண்டாம் தடையாக நாகங்களின் தாயான சுரசை என்கிற நாகர்கண்ணியின் உதவியை நாடினர்.

“மூன்றுற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலியெம்மை யுணர்ந்து நீயென்
றான்றுற்ற வானோர் குறைநேர வரக்கி யாகித்
தோன்றுற்று நின்றாள் சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள்’

என்று கம்பன் இதை விவரிக்கிறார்.

சுரசை எனும் பெயர் கொண்ட நாகமாதா நீண்ட நெடிய உருவம் எடுத்து வான்வெளியில் சென்ற அனுமனைத் தடுத்து, “நீ எனது வாய்க்குள் சென்று வெளியே வந்தால், உன்னை எனது இரையாகக் கொள்ளாமல் விட்டுவிடுவேன்’ எனக் கூறியது. இந்த சவாலை ஒருகணம் யோசித்த அனுமன் சரியென ஒப்புக்கொண்டு, சுரசையை வாய் திறக்குமாறு கூறி தனது உடலைப் பெருக்கிக் கொண்டார். அதற்கேற்ப சுரசை தனது வாயைத் திறந்தாள். இப்படியே இருவரும் போட்டிபோட்டு வளர்ந்து கொண்டிருந்த சமயத் தில், சட்டென்று தனது உருவத்தை சிறிய குரங்காக மாற்றிக்கொண்டு சுரசையின் வாய்க்குள் சென்று நலமுடன் வெளியே வந்து விட்டார். வாமன அவதாரத்தில், மகாவிஷ்ணு சிறிய குழந்தை வடிவில் வந்து பின்னர் எப்படி நீண்ட நெடிய உருவம் எடுத்தாரோ, அதுபோல நீண்ட நெடிய உருவம் கொண்ட அனுமன் பின்னர் சிறு குரங்குக் குட்டியின் உருவத்தை எடுத்தார்.

சுரசையின் சவாலை தனது சாதுர்ய திறமையால் கணநொடியில் வென்றார். இவரது மதிநுட்பத்தை தேவர்கள் போற்றி அனுமனை வாழ்த்தினர்.

இரண்டாம் தடையைத் தகர்த்த அனுமன் மீண்டும் பறந்து செல்லும்போது ஸிம்ஹிகை (தமிழில் அங்காரதாரை) எனும் அரக்கியால் மூன்றாம் தடை உண்டாயிற்று.

“வெங்கார் நிறப்புணரி வேறேயு மொன்றப்
பொங்கார் கலிப்புனல் தரப்பொலிவ தேபோல்
இங்கார் கடத்திரெனை யென்னா வெழுந்தாள்
அங்கார தாரைபிறி தாலால மன்னாள்’

என்பது கம்பர் வாக்கு.

ஆகாயத்தில் பறந்தாலும், கடல்மேல் படும் அனுமனின் நிழலைப் பிடித்து, மேற்கொண்டு பறக்கவிடாமல் தடுத்து, சாயாக்ராஹி என்கிற ஸிம்ஹிகை அரக்கி தனக்கு உணவாக வேண்டுமெனக் கூறினாள்.

அவளை சமாளிப்பதற்காக, அகலமான அவளின் வாய்வழியாக சிறிய வடிவம் கொண்டு உள்ளே புகுந்தார். உள்ளே சென்ற அதே வேகத்தில் தனது முழு பலத்துடன் (சக்தி) அரக்கியின் உடலைப் பிளந்துகொண்டு வெளியே வந்தார். நீண்ட, நெடிய அரக்கியை ஆற்றலுடன் கொன்ற அனுமனின் சக்தியுடன் கூடிய வீரத்தை தேவர்கள் போற்றினார்கள்.

சிலருக்கு வேகம் இருக்கும்; விவேகம் இருக்காது. சிலருக்கு விவேகம் இருக்கும்;

ஆனால் வேகம் இருக்காது. இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கே கொண்ட செயல்திறன் அனுமனிடம் இருப்பதைக் காணலாம்.

இப்படியாக மூன்று தடைகளையும் தனது மதிநுட்பத்தால் தகர்த்து பெருங்கடலின் அக்கரையான இலங்கையை அடைந்தார்.

மேற்கண்ட மூன்று சம்பவங்கள் மூலம் நாம் அறியவேண்டியது என்னவென்றால், நம் வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் (இடைஞ்சல்) கண்டு மனம் வருந்தி, அதைப் பற்றி நினைத்து மனதையும் உடலையும் வருத்திக்கொள்ளாமல், பார்த்தவுடன் உற்சாகம் தரும் அனுமனை மனதார துதித்தால், சூரியனைக் கண்ட பனிபோல் எல்லா தடைகளும் நம்மைவிட்டு விலகும்

 

உலக மக்கள் அனைவரும் 2016ம் எல்லோருக்கும் வெற்றி , மங்களகரமான ஆண்டாக சிறக்க
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழன்புடன்
பி.சி. இராஜகருணா
உலகக்கோவில்

Foto: உலக மக்கள் அனைவரும் 2016ம் எல்லோருக்கும் வெற்றி , மங்களகரமான ஆண்டாக சிறக்க<br /> இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /> தமிழன்புடன்<br /> பி.சி. இராஜகருணா<br /> உலகக்கோவில்

 


திருஞானசம்பந்தரை முருக அவதாரம் என்று அருணகிரியார் பல பாடல்களில் பாடியுள்ளார். ஆதிசங்கரர் சிவ அவதாரம் என்று துதிகளே உண்டு. ஆதிசேஷ, லட்சுமண அவதாரம் ஸ்ரீராமானுஜர்.

இப்படியே பட்டியல் நீளும். அந்தவகையில் காஞ்சி காமாட்சியின் அவதாரம் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் என்பர்.

ஆதிசங்கரர் காமாட்சி தேவியை ஆராதிப்பதற்கு நர்மதை நதி தீரத்திலிருந்து 30 குருமார்களை நியமித்தாராம். அவர்களுக்கு காமகோடி என்று பெயர். பத்து பேர் பௌரகுத்ஸ, பத்து பேர் கௌசிக, பத்து பேர் கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 15 பேர் அஷ்ட சாஸ்திர வகுப்பு; 15 பேர் வாம வகுப்பு. ஆனால் இப்போது பௌரகுத்ஸ, கௌண்டின்ய கோத்திரத்தவர்களே உள்ளார்களாம். அவர்களுள் காமகோடி சாஸ்திரிகள் என்ற ஆழ்ந்த ஸ்ரீவித்யா உபாசகரும் ஒருவர். வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், இதிகாசம், காந்தர்வ வேதம் எனப்படும் சங்கீதம் என பலவற்றிலும் தேர்ச்சியுற்றவர்.

அவரது பேத்தியான மரகதம் என்பவர் காமகோடி சாஸ்திரிகள் வம்சத்தைச் சார்ந்த வரதராஜன் என்பவரை மணந்தார். இத்தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறு கிட்டாததால் ராமேஸ்வரம் சென்று வழிபட்டனர்.

சஷ்டி விரதமும் அனுஷ்டித்தனர். அந்தசமயம் காமகோடி சாஸ்திரிகள் கனவில் தோன்றிய காமாட்சி, “என்னைப் பூஜித்து, வெண்ணெய் நிவேதனம் செய்து மரகதத்துக்குத் தரவும்; சத்புத்திரன் பிறப்பான்’ என்று அருளினாள். அவ்வாறே செய்ய, மரகதம் கருவுற்றார். 1870-ஆம் ஆண்டு, தை மாத ஹஸ்த நட்சத்திரத்தில், தேய்பிறை சஷ்டி திதியில், சனிக்கிழமையன்று குழந்தை பிறந்தது. அவர்களின் குலதெய்வம் ஸ்ரீநிவாசன் என்பதாலும், குழந்தை பிறந்தது சனிக்கிழமை என்பதாலும் சேஷாத்ரி என்று ஜாதக முறையில் பெயர் வைத்தனர்.

(சேஷாத்ரி பிறந்த வீடு இன்றும் காஞ்சி வரதராசர் கோவில் மாடத்தினருகிலேயே விளங்குகிறது. ஜயந்தி, ஆராதனை விழாக்கள் காஞ்சி மகாபெரியவர் ஆக்ஞையால் கொண்டாடப்படுகின் றன. ஞானமனம் ஈயும் புனித இடம் அது.)

சேஷாத்ரி தெய்வீகக் குழந்தை என்பதற்கு உதாரணமாக நான்கு வயதிலே ஒரு சம்பவம் நடந்தது. மரகதம் அம்மையார் குழந்தையுடன் தினமும் காமாட்சி, ஏகாம்பரநாதர், வரதராஜ சுவாமி கோவில்களுக்குச் சென்று வணங்கி வருவார்.

வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ சமயம். பெரியதாக பந்தல் போடப்பட்டு, பல கடைகளும் இருந்தன. ஒரு கடையில் வெண்ணெய் ஏந்திய பாலகிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த குழந்தை, “அம்மா எனக்கு அது வேணும்’ என்றது. தாயாரோ “வேண்டாம் வா’ என்று இழுத்தார். கடைக்காரருக்கு குழந்தையைப் பார்த்ததில் என்ன தோன்றியதோ, பணம் வாங்காமலே அந்த சிலையை எடுத்து குழந்தையிடம் கொடுத்துவிட்டார். மறுநாளும் மரகதம் குழந்தையுடன் வந்தார். கடைக்காரர் குழந்தையை வணங்கி அதன் கைக்கு முத்தம் கொடுத்து, “இது தங்கக் கை. பதினோரு நாள் உற்சவத்தில் நூறு சிலைகளே விற்கும். ஆனால் நேற்றே நான் கொணர்ந்த ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டன. கண்ணனே வாங்கிக்கொண்டான் போலும்’ என்று நெகிழ்ந்தார். (அந்த விக்ரகம் இன்றும் அவரது சந்ததிகளிடம் உள்ளது.)

சேஷாத்ரிக்கு ஐந்து வயது முதல் தந்தையே கல்வி கற்பித்தார். ஏழு வயதில் பூணூலும் போட்டு வேத அத்யயனமும் செய்யப்பட்டது. அதற்கடுத்து சில காலத்தில் தந்தை இறந்துவிட்டார்.

ராமாயணம், பாகவதம் போன்றவற்றைக் கற்ற சேஷாத்ரி, சிறப்பாக சொற்பொழிவாற்றும் வல்லமையை சிறுவயதிலேயே பெற்றுவிட்டார். அவரது திறமை கண்டு பலரும் வியந்தனர். சேஷாத்ரிக்கு பக்தி, ஞான வைராக்கியம் வளர்ந்ததே தவிர ஆசை, பணம், அந்தஸ்து, இல்லற வாழ்க்கை என எதிலும் ஈடுபாடு இல்லை. சேஷாத்ரிக்கு 17 வயது நடந்துகொண்டிருந்தது. திருமணம் செய்துவைத்தால் மனம் மாறும் என பெண் பார்த்தனர். ஜாதகத்தைப் பார்த்தவர்கள், “சந்நியாச யோகம்தான்; மணவாழ்க்கை இல்லை’ என்றனர். இதனால் மரகதத்தின் மனம் ஒடிந்தது. தான் பூவுலக வாழ்வை நீங்கும் தருணம் நெருங்கியதை அறிந்த அம்மையார் சேஷாத்ரியை அழைத்து,

“ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன்முக்தம்’

என்ற ஆதிசங்கரரின் பஜகோவிந்த துதியைச் சொல்லி, பின்

“தர்ஸனாத் அப்தஸரஸி
ஜனனாத் கமலாலயே காஸ்யாம் து
மரணாத் முக்தி:
ஸ்மரணாத் அருணாசல’
என்று சொன்னார்.

அருணாசல நாம நினைப்பு முக்தி அளிக்கும் என்று கூறி, “அருணாசல’ என்னும் இறுதி வார்த்தையுடன் உயிர்நீத்தார். தாயாருக்கு இறுதிக் காரியங்களை செய்துமுடித்தார் சேஷாத்ரி. “அருணாசல’ என்ற நாமம் ரமணமகரிஷி போன்ற பல மஹனீயர்களை  ஈர்த்ததுபோல, அந்த நாமம்- அன்னையின் அந்திம நாமம் சேஷாத்ரியையும் ஈர்த்தது.

அப்பனும் அன்னையும் இல்லாத தால் விவேக வைராக்கியம் அதிக மானது. வீட்டில் ஜெபம் செய்வது வசதிப்படாததால் ருத்ரபூமியில் (சுடுகாட்டில்) ஜெபதபம் செய்யத் தொடங்கினார். “அது கூடாது’ என்றால், “அங்கு தவம் செய்ய 1,000 மடங்கு அதிக பலன்’ என்று சொன்னார்.

ஒருசமயம் தகப்பனாருக்கு திவசம் வந்தது. சுடுகாடு ஜெபத்திற்கு போகக் கூடாதென்று, வீட்டின் ஓர் அறையில் சேஷாத்ரியை பூட்டிவைத்தனர். தம்பி நரசிம்மன் தான் திவசம் செய்தான். யாதும் முடிந்து அட்சதை பெற்று அன்னம் உண்ணலாம் என்று பூட்டிய கதவைத் திறந்தால், அங்கே  சேஷாத்ரியைக் காணவில்லை! சேஷாத்ரியின் மகிமை அப்போது அவர்களுக்குப் புரியவில்லை. வியந்து நின்றனர்.

பின்னர் சேஷாத்ரி, காஞ்சி தீர்த்தக்கரையில், பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றார். (ரமண மகரிஷி சன்யாசம் பெறவில்லை!) ஆக, குடும்ப பந்தம் விட்டது. காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் காவேரிப்பாக்கம் உள்ளது. அங்கு அவர் மாமி சுந்தரம்மாள் இருந்தார். அங்கு சென்றார். முக்தீஸ்வரர் கோவில் புன்னை மரத்தடியில் ஒரு நாகம் இருக்கக் கண்டு, “நாகப்பா வா’ என்றார். சிவபெருமானுக்கு ஆபரணம்போன்று அது சேக்ஷாத்ரி கழுத்தில் மாலையாயிற்று. அங்கிருந்து செங்கல்பட்டு, வந்தவாசி வந்து, சில மாதங்கள் தங்கிவிட்டு திண்டிவனம் வந்தார்.

அங்கே அவர் பெயர் மௌன ஸ்வாமிகள். எவருடனும் எதுவும் பேசுவதில்லை. அங்குள்ள சிவன் கோவிலில் ஆழ்ந்த தியானம் செய்யவேண்டி கோவிலில் ஒரு அறையில் வைத்துப் பூட்டச் சொன்னார். அதற்கு குப்புசுவாமி குருக்கள் இசைந்து, சேஷாத்ரியை ஒரு அறைக் குள் வைத்துப் பூட்டினார்.

ஐந்து நாட்களாயின. அறைக்குள்ளிருந்து எந்த சப்தமும் வராததைக் கண்டு பயந்துபோன குப்புசுவாமி, கதவைத் திறந்து பார்க்க, சலனமின்றி இருந்தார் சேஷாத்ரி.

அங்கிருந்து வேலூர், வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் வந்து, குமாரசுவாமி கோவிலைச் சேர்ந்தார். இவர் வந்ததை அறிந்த வெங்கடராமன் என்பவர் அவருடன் தங்கினார்.

ஆனால் இரவே அவருக்குத் தெரியாமல் மறைந்துபோனார் சேஷாத்ரி. சித்தர் போக்கு சிவம் போக்கு என்பர். நமக்குப் புரியாது.

அங்கிருந்து ஜமதக்னி, ரேணுகாதேவி கோவிலுள்ள படவேடு வந்தார். அம்மனையும் சந்நியாசிப் பாறையையும் தரிசித்து நெகிழ்ந்து அருணாசலம் வந்தார். 1889-ல் தனது 19-ஆவது வயதில் காஞ்சியைவிட்டுப் புறப்பட்ட சுவாமிகள் 1929 வரை 40 வருடங்கள் திருவண்ணாமலை வாசமே! மதுரை மீனாட்சி ரமணரை அருணாசலம் அனுப்பினாள். காஞ்சி காமாட்சி சேஷாத்ரியை அருணாசலம் அனுப்பினாள்.

வினோத அனுபவங்கள். இன்றும் சித்தர்கள், தபோதனர்கள் வாழும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. காஞ்சி காமாட்சியே தவமிருந்து இறைவன் உடலில் பாதியைப் பெற்ற தலமல்லவா! சேஷாத்ரி சுவாமிகளின் தோற்றம் மிக எளிமையாக இருக்கும். சடைமுடி, அழுக்குப் படிந்த கிழிந்த உடை, வெறித்துப்பார்க்கும் கண்கள், நெற்றியில் மூன்று கோடுகள்- விபூதி இடவே தேவையில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர்போல் அரைக்கண்ணே திறந்திருக்கும்.

அருணாசலேஸ்வரர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் என திருவண்ணா மலையில் மூன்று லிங்கங்கள் என்பர். ஒருமுறை அவர் மலைக்கருகிலிருந்த ஏழு கழுதைகளைத் தொட்டு, வலம்வந்து வணங்கினாராம். பார்த்தவர்கள் அதை பைத்தியக்காரத் தனம் என்று சொல்ல, சப்த ரிஷிகள்  அல்லவா இவ்வுருவத்தில் வந்துள்ளனர் என்றாராம்.

சேஷாத்திரி சுவாமிகள் உட்காருவது வினோதமாக இருக்கும். சம்மணமிட்டு அமர்ந்திருப்பதுபோல் படங்களில் பார்க்கிறோம். அப்படியல்ல. ஸ்வஸ்திக ஆசன அமைப்பில் அமர்ந்திருப்பார்.

காஞ்சி மகாபெரியவர் பரணிதரனிடம், “அம்மாதிரி உட்கார்ந்து அவர் நிலைக்கு நான் செல்வேனா’ என்றாராம். வெகு கடைசி தினங்களில் அவரை மிக மதித்தார். சேஷாத்ரி சுவாமிகளின் பேச்சு மென்மையாக இருக்கும்.

அவர் தூங்கியே பார்த்ததில்லை என்பார்கள். தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டு செல்வார். அதனால் பலரும் அவரை பைத்தியம் என்றே நினைத்தனர்.

அவரது வெளித்தோற்றத்தைக் கண்டு விலகாமல், அவரது உள்ளம், மகிமை புரிந்து உணர்ந்தோரும் இருந்தனர். இதற்கு உதாரணமாக ஒருசில சம்பவங்களை சிந்திப்போம்.

திருச்சுழி வெங்கடராமனே திருவண்ணாமலையில் ரமண மகரிஷி என்றும், அவர் கந்தன் அவதாரம் என்றும் கணபதி மஹாமுனி கூறினார் என்றால், அதற்குக் காரணம் சேஷாத்ரி சுவாமிகளே! திருவண்ணாமலை வந்த வெங்கடராமன் பல நாட்கள் பாதாள லிங்க குகையில் ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். உண்ணவில்லை; நீர் அருந்தவில்லை. உட்கார்ந்த நிலையில் கால்கள் மரத்துபோயின. எலும்புகள் தெரிந்தன. வண்டுகள் உடல் தசைகளை உண்டன. சிறுவர்கள் கல்லெறிந்தனர். இதையறிந்த சேஷாத்ரி சுவாமிகள் அவர்களை விரட்டினார். வெங்கடாசலத்தை அழைத்து, “என் மகன் ஆழ்ந்து தவம் செய்கிறான். அவனை வெளிக்கொணர வேண்டும்’ என்று கூறி அவ்வாறே செய்தார். “என் மகன்’ என்றதன் மூலம், தான் காமாட்சி என்றும், ரமணர் கந்தன் என்றும் உணர்த்திவிட்டார்.

ஆகவேதான் மந்த்ர த்ரஷ்டா கணபதி மாமுனி ரமணரை, “குரவே தாரகாயே’- “தாரகனை அழித்த குருவே’ என்று முருகனாய்ப் புகழ்ந்தார். உலகமும் ரமணரை அறிந்தது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வருடாவருடம் திருத்தணியில் திருப்புகழ் படிவிழா நடக்கிறது. இதை 1918-ல் ஆரம்பித்தவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். வள்ளிமலைக் கோவில் குகையை சீர்படுத்தியது அந்த திருப்புகழ் சுவாமிகளே. அதற்கு மூலகர்த்தா ரமண மகரிஷியும் சேஷாத்ரி சுவாமிகளுமே. வயிற்றுவலியால் அவதிப்பட்ட மைசூர் அரண்மனை சமையல்காரர், கட்டட வேலை செய்யும் ஒருவர் சொன்னதன் பேரில் பழனி வந்தார். அபிஷேக நீர் பருகிட வயிறு வலி தீர்ந்தது. ஒரு திருப்புகழ் நடனப் பாடல் கேட்டு, திருப்புகழ் கற்க ஆரம்பித்தார். பழனி ஆண்டி, “திருவண்ணாமலை போ’ என்றான்.

அருணாசலம் வந்து ரமணரை தரிசித்த அவர், தான் பாடும் திருப்புகழை ரமணர் மூலம் திருத்திக்கொண்டார். (அவர் கன்னட மொழி பேசுபவர்.) ஒருநாள் ரமணர், “கீழே போ’ என்றார். அவர் மிக வருத்தத்துடன் இறங்க, எதிரே வந்த சேஷாத்ரி சுவாமிகள் சிரித்து, ஆதிசங்கரரின் சிவமானஸ பூஜையின் கடைசி துதியைச் சொல்லி, “இதற்கு ஈடான- ஒப்பான திருப்புகழ் உண்டா?’ என்று கேட்டார். உடனே அவர் ஒரு திருப்புகழ் கூறினார். அதைக்கேட்ட சேஷாத்ரி சுவாமிகள், “திருப்புகழே உனக்கு மகாமந்திரம். வள்ளிமலைக்குப் போ, நான் அங்கு வருவேன்’ என்றார். அந்த மகத்தான வாக்குகள் சிறந்த உபதேசமாயிற்று. வள்ளிமலை வந்து குகைகளை நன்கு செப்பனிட்டார். திருப்புகழிலேயே ஆழ்ந்தார்; பரப்பினார். அவர் மதியம் நிவேதனம் செய்த பிரசாதத்தை வெளியே வைப்பது வழக்கம். காக்கை போன்றவை உண்ணும். சில சமயங்களில் ஒரு கீரிப்பிள்ளையும் உண்ணும். ஒருநாள் “ஸ்வாமிகள் வள்ளிமலை வருவேன் என்றாரே’ என்கிற சந்தேகம் வந்தது! அடுத்த கணம் வள்ளிமலையில் கீரிப்பிள்ளை சேஷாத்ரி சுவாமியாக காட்சி தந்தது.

தெருவில் சுவாமிகள் இஷ்டம்போல் நடப்பார். கடை முதலாளிகள் வெளியே வந்து நின்று வணங்கி, “சுவாமிகள் கடைக்கு வரணும்’ என்று வேண்டுவர். காரணம் என்ன?

தின்பண்டங்கள் எடுத்து சாப்பிடுவாரா- அல்ல. வாசலில் வீசியெறிவார். முதலாளி தலையில் கொட்டுவார். இப்படி செய்தால் கடை முதலாளிக்கு வெகு ஆனந்தம். ஏனென்றால் அன்றைய தினம் வழக்கத்தைவிட பத்து மடங்கு வியாபாரம் நடக்கும்.

சிவப்ரகாச முதலியார் ஒரு பக்தர். சுவாமிகள் அவரிடம், “இன்கிரிமென்ட் (உயர்வு) தருகிறேன். வாங்கிக்கோ’ என்றார்.

அவரோ, “என் வேலைக்கே குந்தகம் வரும்போலுள்ளது. எனது அதிகாரிக்கு என்னைப் பிடிக்கவில்லையே’ என்றார். அவரோ தலையில் கையால் அடித்து “போ போ’ என்றார். வருத்தத்துடன் வீடு வந்தார். சிவப்பிரகாச முதலியார் வீட்டில் ஒரு கடிதம். பிரிக்கவே தயங்கினார். வேலை நீக்கமா என்ற பயம். சுவாமிகளை நினைத்துத் திறக்க, அவருக்கு பதவி உயர்வுடன் இருபது ரூபாய் சம்பள உயர்வும் வழங்கப்பட்டிருந்தது.மேலதிகாரியின் சிபாரிசாம். சுவாமிகள்தான் மேலான அதிகாரியாயிற்றே! இதுபோன்ற நிகழ்வுகள் பலப்பல!

1929, டிசம்பர் 29-ல் பக்தர்கள் ஒன்றுகூடி சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யவிரும்பினர்.

ஏனெனில் 60 வயது ஆகப்போகிறது. அவர், “வேண்டாம்; எனக்கு ஜுரம் வந்துவிடும்’ என்றார். பக்தர்கள் மனம் வேறு. “மரியாதை செய்கிறோம்; கொண்டாடுகிறோம்’ என்று அவர்கள் எண்ணினார்கள். பிரமாதமாக பலரால் குடம்குடமாக அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. சுவாமிக்கு குளிர் ஜுரம் கண்டது. அன்ன ஆகாரம் இல்லை. கம்பளி போர்த்தினாலும் தள்ளிவிட்டார். அவர் மனம் வேறுபோலும். இதுவும் ஒரு வியாஜமே. (லீலையே). மார்கழி 21- 1929-ல் அவர் மூச்சு நின்றது. முத்திநிலை அடைந்தார். ரமண மகரிஷி முன்பு சமாதி அமைக்கப்பட்டது. அவர் இன்றும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வரப்ரசாதி. ரமணாசிரமம் முன் அவர் சமாதிக் கோவில் உள்ளது. சேஷாத்ரி சுவாமிகளின் அவதார தினம் இவ்வாண்டு 30-1-2016 அன்றும், முக்தியடைந்த தினம் 3-1-2016 அன்றும் அமைகிறது. மிகச்சிறந்த அந்த ஞானியை வணங்கி சித்தம் தெளிவோம்.

★ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

★ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ;

இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;

★அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

★இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

★ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப்படுவதையும்
மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திரஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர்.

★இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்( Wavelet
Transforms,Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

★ஓம் என
உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்
மூளையில் ஒலியினால் மின் செயல்
மாறுபாடுகள் ஏற்படுவதையும்
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம்
என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும்
பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும்
மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.

★மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான
நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

★ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம்
கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள
★அகார,உகார ,மகாரங்கள் “ பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரனை ” க் குறிப்பதையும்
அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச
ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள்
மூலமாக நமது உடலில்
நுழைகின்றன.வாயின் பின்புறம்
உதிக்கும் “ அ” சுவாசிப்பு அமைப்பில்
அடிவயிற்றில் உணரப்படுகிறது.

★வாயின் நடுவில் பிறக்கும் “ உ ”
மார்புப்பகுதியில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த
உதடுகளில் வழியே வரும் “ ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள
சுவாச அமைப்பில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

★இந்த ஒவ்வொரு ஒலியும்
ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின்
சிறு திசுவிலிருந்து முழுசுவாச
அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண
ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

★ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில்
குர்ஜருக்கு ஏன்
ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர்
வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது திடீரென
அவரது தாயாருக்குப் பேசும்
சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம்
கட்டிவிட்டதால் நினைவையும்
இழந்து அவர் பக்கவாதத்தால்
பீடிக்கப்பட்டார்

★.அடுத்த நாள்
அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய
ஆற்றல்
வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி
எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம்
தரப்பட்டதே இதற்குக்காரணம்.

★அவருக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
மூளையில் ரத்தம் உறைவதற்கான
காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக
மன அழுத்தமே என
தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக அவர் ஓம்
ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின்
அற்புத
ஆற்றல்களை அறிந்தார்.

★மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

★ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

★இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த
போது அது இருபகுதிகளைக்
கொண்டிருப்பதைக் கண்டு “ ஓ ”
என்று ஆரம்பித்து “ ம்”
என்று முடிக்கும்போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான
விளைவுகளை ஏற்படுத்துவது
ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும்
தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

★ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40
வயது வரை உள்ள ஆண் பெண்கள்
அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

★அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்புமண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

★1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட
ஓம் ,உடலின் ஏழு சக்கரங்களில்
அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று
கண்டார்.

★மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ,ஸ்வாதிஷ்டானத்தில் 288
ஹெர்ட்ஸீம் ,மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம் ,விசுத்தாவில்(தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில்
(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம்
,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.

★ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான
காதுகள் மெடுல்லா மூலமாக
உடலின்
திசுக்களை இணைக்கிறது.நமது
உடலின் தன்மை ,சமன்பாடு ,நெகிழ்வுத்
தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால்
பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும்

★நல்ல ஒலி நன்மையைத்
தருகிறது.இது வேகஸ்
நரம்பு மூலமாக உள்காது
,இதயம் ,நுரையீரல்,வயிறு
,கல்லீரல் , சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள் ,சிறுகுடல், பெருங்குடல்
ஆகிய அனைத்து உறுப்புக்களையும்
இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான
ரீதியாக விளக்கிக்
கொண்டே போகலாம்.

★அவ்வளவு
உண்மைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்திருக்கிறார் அனில்
குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல்
சித்தார்த் லடாகே.இவர்களின்
ஆராய்ச்சி இன்னும்
தொடர்கிறது.மந்திரங்களின்
மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப்
புதுமைகள் இன்னும் அதிகமாக
வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்

 

 

ஸ்ரீபிரத்யங்கிராதேவி

Sakthi Vikatans Foto.

Sakthi Vikatan

ஞாயிற்றுக்கிழமை பிரத்யங்கிராதேவையை வழிபடுங்கள்!

ஸ்ரீபிரத்யங்கிராதேவி மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம் இந்த தேவி. இவளை வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என் கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி.

சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.

ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங் கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.

பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினை களும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.

மேலும், ‘மகா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி’ என்று எளிய முறையில் துதித்து, உடல்உள்ள சுத்தியுடனும் பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், நமது பிரச்னைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
படம்: சென்னை காளிகாம்பாள் கோயில் பிரத்யங்கிராதேவி

தீபாவளியன்று அதிகாலை 4.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்துவிட வேண்டும். நீர் நிரப்பும் பண்டிகையை தீபாவளிக்கு முதல்நாள் கொண்டாடுவார்கள். பெரிய அண்டாவை தூய்மைசெய்து பொட்டிட்டு நீர் நிரப்புவார்கள். பின் அதில் ஆல், அத்தி, அரசு, பலா, மாவிலங்கை என ஐந்து மரப்பட்டைகளை ஊறவிடுவார்கள். தீபாவளியன்று அதிகாலை மூன்று மணிக்கே சுடவைத்துவிடுவார்கள்.

இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய்விட்டு, அதில் ஓமம், பூண்டு, வேப்பிலை, வெற்றிலை, புழுங்கல் அரியைப் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத்தான் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

தீபாவளி மருந்தை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கலாம். வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, சீரகம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, அதில் நெய்விட்டுக் கிளறி தேன்கலந்து, கங்கா ஸ்நானம் முடிந்தபின் நெல்லிக்காயளவு விழுங்க வைப்பார்கள். இப்படி தீபாவளி வெந்நீர், எண்ணெய், லேகியம் யாவும் சளி, ஜுரம் வராமல் தடுக்கும். சாப்பிடும் தீபாவளி பட்சணத்தால் வரும் வயிறு உபாதையையும் தடுக்கும்.

அன்றுமட்டும் எல்லா நீர் நிலைகளிலும் விடியற்காலைக்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை ஆவிர்பவித்திருப்பாள். எங்கு நீராடினாலும் கங்கா ஸ்நானம்தான்.

பாற்கடலைக் கடைந்தபோது பல பொருட்கள் தோன்றின. அப்போது மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானும் தோன்றினார். கையில் அமுத கலசம், மருத்துவ ஓலைச்சுவடிகளுடன் காட்சிதந்தார். தீபாவளியன்று அவரை வணங்கி தீபாவளி லேகியம் சாப்பிட்டால் நோய் அண்டாது.

தீபாவளி பூஜைகள்மகாலட்சுமி பூஜை

கங்கா ஸ்நானம் முடிந்தபின் பூஜையறையில் மகாலட்சுமி விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் விளக்கேற்றி, இனிப்புப் பண்டம் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழவேண்டும். இதனால் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும். பிள்ளைப்பேறு கிட்டும். சுமங்கலிகள் மேன்மையடைவார்கள்.

லட்சுமி குபேர பூஜை

தீபாவளிக்கு மறுநாள் செய்யலாம். இப்பூஜையில் குபேர படத்துடன் மகாலட்சுமி படம் வைத்துப் பூஜிக்கவேண்டும். “சுக்லாம் பரதரம்’ என்று கணபதி பூஜை ஆரம்பித்து, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை குங்கும அர்ச்சனை செய்து, “ஓம் குபேராய நம, ஓம் மஹாலட்சுமியே நம’ எனக் கூறி பூஜை செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கவேண்டும். சென்னை அருகிலுள்ள ரத்தினமங்களத்தில் லட்சுமி குபேரனுக்கு தனி ஆலயம் உள்ளது. இங்கு தீபாவளிக்கு மறுநாள் மிக சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை- குறிப்பாக பெண் தெய்வங்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்த உடை, நிவேதனங்களுடன் வணங்கவேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மேலும் சிறப்பாகும்.

முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களுக்குப் பிரியமானவற்றைப் படைத்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும். இதனால் நம் குடும் பத்திற்கும் வம்சத்திற்கும் நன்மை கிடைக்கும்.

 

கேதாரகௌரி நோன்பு

இவ்விரதத்தை ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பினை பார்வதிதேவி கடைப்பிடித்து ஈசனின் பாதி உடலைப் பெற்றாள். இப்பூஜை செய்வதால் கணவருடன் இணைபிரியாது வாழலாம்.

நோன்பு நோற்கும் முறை: பூஜையறையில் சுவாமி படத்தின்முன் 21 இழை மஞ்சள் சரடு வைத்து, 21 அதிரசம் வைத்து கௌரி பூஜை செய்து, பின்னர் கணவனை வணங்கி சரடு கட்டிக்கொள்ளவேண்டும். மாங்கல்ய பலம் கூடுவதுடன் கணவனின் ஆயுளும் விருத்தியடையும்.

காஞ்சி அருகே உத்திரமேரூரில் உள்ள கேதார கௌரீஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏராளமான பெண்கள் இந்த நோன்பினை மேற்கொள்வர். ஆலய லிங்கத்தின்மீது சரடுகளை வைத்து அர்ச்சகர் பூஜித்துக் கொடுக்க, பெண்கள் 21 அதிரசம் வைத்துப் படைத்துவிட்டு அந்த சரடைப் பெற்றுக்கொண்டு இல்லம் வந்து, கணவன் காலடியில் நமஸ் காரம் செய்தபின் சரடைக் கட்டிக்கொள்வார்கள்.

காசியில் தீபாவளி

காசியில் உள்ளோர் நிஜமாகவே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு அன்னபூரணியை வழிபடுவார்கள். அன்று அன்னை தங்கமயமாக ஜொலிப்பதை முழுமையாக தரிசிக்கலாம். அன்றிரவு, தங்க அன்னபூரணி லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஊர்வலம் வருவாள். அவளுக்குமுன் தங்க காலபைரவர் வலம்வருவார். இவரை கருவூலப் பெட்டகத்திலிருந்து எடுத்து வந்து ஊர்வலம் நடத்துவார்கள். முடிந்தபின் மீண்டும் கருவூலப் பெட்டகத்திலேயே பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஊர்வலம் முடிந்தபின் லட்டுத் தேர் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

அன்னலிங்கம்

இதை தென்னாட்டவர்கள் காசியில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். காசி கங்கைக்கரையில் மீராகாட் பகுதியை தூய்மை செய்து கோலமிட்டு, தலைவாழை இலையைப் பரப்பி, அதன்மீது சுத்த அன்னத்தால் அன்னலிங்கம் அமைப்பார்கள். மூன்று சதுர அடி பரப்பில் இரண்டு அடி உயரத்தில் லிங்கம் அமைத்து, அதன்முன் சிறிய அன்ன நந்தி அமைப்பர்.

அன்னலிங்கத்தை லட்டு, வடை, பலகாரங்கள், காய்கறிகளால் அலங்கரித்து பூமாலையும், ருத்திராட்ச மாலையும் அணிவிப்பார்கள். பின் 11 மணிக்கு யாத்ரீகர் முன்னிலையில் பூஜை செய்து, பின் 200 பிச்சைக்காரர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பார்கள். பின் 31 ரூபாய் தட்சணை தருவார்கள். இது தீபாவளியன்று நடைபெறும். முன்பெல்லாம் பிராமணர்களுக்குத் தந்த விருந்தை இப்போது பிச்சைக்காரர்களுக்குத் தருகின்றனர்.

துளசி கல்யாணம்

தீபாவளிக்குப்பின் வரும் துவாதசியன்று துளசி கல்யாணம் செய்வார்கள். மணப்பெண் துளசி; மணமகன் நெல்லிக்கொம்பு. (திருமால்). அன்று துளசி மாடத்திற்கு செம்மண் இட்டு, செடிக்கு மாலை போட்டு, மாடத்தின்முன் கோலமிட்டு விளக்கேற்றி, துளசிக்கும் நெல்லிக் கொம்பிற்கும் ஆடை அலங்கரித்து பெண்கள் பூஜை செய்வார்கள். இதனால் சுமங்கலி பாக்கியம்
கூடும் என்பர்.


ரங்கன் பெறும் சீர்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மாமனார் பெரியாழ்வார்; ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. இவரிடம் தீபாவளியன்று ரங்கர் சீர் பெற்றுக்கொள்வார்.

கோவில் சிப்பந்திகளுக்கு கோவில் சார்பில் முதல் நாள் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் கொடுப்பார்கள். மறுநாள் தீபாவளியன்று நீராடியபின் ஆலயம் வருவார்கள். அங்கு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள். அத்துடன் ஆலயத்திலுள்ள ஆழ்வார்கள் சந்நிதிகளில் திருமஞ்சனம் செய்வித்து புத்தாடை அணிவிப்பார்கள்.

அதன்பின் அனைவரும் கிளிமண்டபத்திற்கு வந்துசேர்வார்கள். ரங்கநாதர் திருமஞ்சனமானபின் புத்தாடை அலங்காரத்துடன் சந்தன மண்டபம் வந்தடைவார். அங்கு மாமனார் சீர்வரிசை தர காத்துக்கொண்டிருப்பார். ரங்கர் வந்ததும், 1,000 ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புத்தாடைகளில் கட்டி ரங்கனின் காலடியில் வைப்பார்கள். மாமனாரிடம் சீர்பெற்றபின் ரங்கர் ஒரு ரூபாய் நாணயத்தை பக்தர்களுக்குத் தருவார். இதைக் காண்பவர்களும் பெறுபவர்களும் பணத்தட்டுப்பாடின்றி நன்கு வாழ்வார்கள்.

சிரார்த்தம் செய்யும் சாரங்கன்

ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் குடந்தை சாரங்கபாணி கோவிலில் ஆராவமுதன் வலது மோதிர விரலில் பவித்திரம் அணிந்து, அர்ச்சகர் கையில் தர்ப்பை அளித்து சிரார்த்தம் செய்ய உத்தரவிடும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமிக்கு அன்று சிரார்த்த சமையல்தான் நிவேதனம் செய்யப்படும். பின் இரண்டு பிராமணர்களுக்கு சிரார்த்த திதி போஜனம் அளிப்பார்கள்.

சாரங்கபாணி கோவிலுக்கு 140 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் லட்சுமி நாராயணன் எனும் பக்தர். பலரிடமும் உதவிபெற்று செய்து முடித்தார். இதற்காக அவர் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. ஒரு தீபாவளியன்று அவர் பரமபதம் சேர்ந்தார். பிள்ளையில்லாத அந்த பக்தருக்காகவே சாரங்கபாணி சிரார்த்தம் கொடுக்கிறார்.

தீபாவளியன்று நடந்தவை

ஆதிசங்கரர் ஞானபீடம் நிறுவினார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாள். விக்ரமாதித்தன், மகாபலி, நரகாசுரன் மகன் பகதத்தன் ஆகியோர் முடிசூட்டிக் கொண்டு அரியணை ஏறிய நாள். ஜைனகுரு மகாவீரர், சீக்கியகுரு குருநானக், ஆரிய சமாஜ தயானந்த சரஸ்வதி ஆகியோர் முக்திபெற்ற தினமும் தீபாவளிதான். பாண்டவர்கள் வனவாசம் முடித்து இந்திரப் பிரஸ்தம் திரும்பிய நாளும் இதுதான்.

பாற்கடல் கடைந்தபோது லட்சுமி தேவி தோன்றினாள். தோன்றிய அன்றே திருமாலை மணந்துகொண்டாள். குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப்பெற்றதும் தீபாவளி தினத்தில்தான்.

வரலாற்றில் தீபாவளிமதுரை மாநகரில் திருமலைநாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது என்பர்.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னன், தன் கன்னட கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளிப் பரிசு தந்ததாக குறிப்புகள் உள்ளன. தென்னிந்திய தீபாவளியின் முதல் குறிப்பு இதுதான். குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டில் தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜை செய்ய மானியம் அளித்த தகவல் உள்ளது.

அதுபோல காளஹஸ்தி ஆலயத்திலுள்ள கல்வெட்டில் தீபாவளியன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது குறிக்கப்பட்டுள்ளது.

மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து சமபந்தி போஜன முறை செய்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும், காமசூத்ராவில் கூராத்திரி என்றும், காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் தீபாவளியை சுக்ராத்திரி எனவும் கூறியுள்ளனர்.

தஞ்சை சரஸ்வதி மகாவிலிலுள்ள ஆகாச பைரவர் ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம் பிக்கப்பட்டது.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப என்ற உருதுச் சொல்லே மத்தாப்பு ஆனது.


ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழாவினை, வெகுவிமரிசையாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அருப்புக்கோட்டையில் நடத்தினார்கள் புளியம்பட்டி- திருநகரம் சாலிலியர் மகாஜன பரிபாலன சபையினர். அனைத்து சமுதாய மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்ட அந்த பிரம்மாண்ட திருவிழா ஊரையே பரவசப்படுத்தியது.

ஏழு கோவில்கள் எவை எவை?

மாகாளியம்மன் திருக்கோவில், சிவன் விநாயகர் திருக்கோவில், தெப்பக்குளம் ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில், மோதக விநாயகர் திருக்கோவில், சஞ்சீவி விநாயகர் திருக்கோவில், பழனியாண்டவர் திருக்கோவில், பிரம்ம ஸ்ரீ அய்யா கோவில் என ஏழு கோவில்களுக்கும் யாக சாலை பூஜைகள் நடத்தி, புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடந்தது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி யில் கிடைத்துள்ள சக்தியின் உருவச் சிலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் சக்தி வழிபாடு நடந்திருப்பதை உறுதிசெய்கிறது. ஆதிசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியதாக தேவி பாகவதம் கூறுகிறது. தெய்வத்தை தாய் வடிவில் வணங்குவதில்தான் எத்தனை இன்பம்! அவளது அருள் வடிவங்களோ ஆயிரமாயிரம்! ஊர்தோறும் பேர்மாறி அருள்மாரி பொழிகிறாள். அகிலத்தை ஆள்வதில் மீனாட்சி, அன்பர்களைக் காப்பதில் காமாட்சி, அருள் வழங்குவதில் அபிராமி, மழை பொழிவதில் மாரியம்மாள், அதர்மத்தை அழிப்பதில் மாகாளி! அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த அம்சம் அல்லவா துர்க்கை என்னும் மாகாளியின் வடிவம்.

சிங்க வாகனமேறி மகிஷனை வென்று தன் காலடியில் வீழ்த்திய துர்க்கையானவள் கரிய நிறத்துடன் காட்சியளித்தமையால் காளி எனப்பட்டாள். வெற்றி தெய்வம் கொற்றவை எனப்படும் அன்னை, இங்குள்ள திருக்கோவிலிலின் கருவறையில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். சூலத்தால் மகிஷன் சிரம் குத்தி துஷ்ட நிக்ரகமும் சிஷ்ட பரிபாலனமும் செய்தவண்ணம் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிலா விக்ரகம் உளியால் செதுக்கப்பட்டதல்ல என்றும், தானே தோன்றிய சுயம்பு என்றும் கூறுவர். ஏர்க்காலால் நிலத்தை உழுதபோது கிடைத்த இச்சிலையை வழிபட்டு வந்த பக்தர் ஒருவர், சாலிலியர் குல மக்களிடம் கொடுத்து கோவிலை நிர்மாணிக்க வேண்டினாராம். சிலையின் முழு உருவமும் செப்பமுற இல்லாததை வைத்தே இதைச் சுயம்பு என்கின்றனர்.

வானில் வட்டமிட்ட கருடன்!

கருடனை கிருஷ்ண பருந்து என்றும் சொல்வார் கள். மகாவிஷ்ணு பல்வேறு வாகனங்களில் அருள் பாலிலித்தாலும் கருடவாகனத்தில் எழுந்தருள்வதே சிறப் பாகும். விஷ்ணு தலங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். கருட தரிசனம் என்பது சுப சகுனமாகக் கருதப்படுகிறது. கருடன் மங்கள வடிவினன்.  வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாகும். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களைக் கொண்டுவரும்போது ஊர்வலப் பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். அப்போது பக்தர்கள்“”கிருஷ்ணா… கிருஷ்ணா…’’’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்வார்கள். இத்தனை சிறப்புவாய்ந்த கருடனின் வரவை கோவில் கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அருப்புக்கோட்டையில்  ஏழு கோவில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பாக வானம் இருட்டியது. புனித நீர் ஊற்றும்போது மேகத்தைக் கிழித்துக்கொண்டு சூரிய ஒளி பாய்ந்தது.  கோபுர கலசம் தகதகத்தது. இத்தருணத்தில் எங்கிருந்தோ பறந்துவந்த கருடன், ஏழு கோவில்களையும் வட்டமிட்டது. பக்தர்களும் கிருஷ்ண கோஷம் எழுப்பினர்.


ஊருக்கே சோறு!

மிகப்புனித நீரின் ஒரு துளியாவது  அனைவர்மீதும் படவேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, ஏழு கோவில்களிலிருந்தும் எடுத்து வரப்பட்ட குடமுழுக்கு நீரை தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் பீய்ச்சி அடித்தனர். சாலியர் பாவடித் தோப்பு வளாகத்தில் குறைகள் எதுவுமில்லாமல் அன்னதானம் வழங்கிய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து ஊர் மக்களுக்கு வழங்கினர்.

குடமுழுக்கு நடைபெற்றபோது கோவில் விமானம் வரை ஏறி வழிபட்டார் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன். ராமலிலிங்கா மில் அதிபர் டி.ஆர். தினகரன், ஜெயவிலாஸ் டிரான்ஸ்போர்ட் அதிபர் டி.ஆர். வரதராஜன், மண்ணின் மைந்தரான நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், அருப்புக் கோட்டை நகராட்சி ஆணையர் மணி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மிக நல்ல முறையில் செய்திருந்தார் சாலிலியர் மகாஜன பரிபாலன சபைத் தலைவரும் நடைமுறை நிர்வாகியுமான என்.ஏ. சுப்பிரமணியம்.

குழந்தைப் பேறு உண்டாக, தீராத நோய்கள் நீங்கிட, திருமணம் கைகூட, மாங்கல்ய பலம் பெற, வேலை வாய்ப்பு கிடைத்திட, வியாபாரம் விருத்தியடைய, ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட தன்னை நாடி வருவோர்க்கு கேட்ட வரம் தந்து அருள்பாலிலித்து வருகிறார்கள் ஆயிரங்கண் மாரியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள்!

படங்கள் : ராம்குமார்

இறைவனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதையே ஆன்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்றார் அப்பர் பெருமான். “மலரால் உனைப் பணிந்தேத்த’ என்றார் சம்பந்தர். இவ்வாறு திருமுறைகளிலும் தேவாரத்திலும் மலர்களால் வணங்கும் சிறப்பு பலவிடங்களிலும் பேசப்பட்டுள்ளது.

ஆகமங்கள் மலர்களை உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று வகையாகப் பிரிக்கின்றன. அதாவது தங்கள் வீட்டுத் தோட்டங்களிலிருந்து சேகரிக்கும் மலர்கள் உத்தமமானவை- உயர்நிலைப் பயனளிப்பவை என்றும்; பொது இடங்களான வனப்பகுதிகளிலிருந்து சேகரிக்கும் மலர்கள் மத்திமமானவை- இடைநிலை பயனளிப்பவை என்றும்; கடைகளில் விலைகொடுத்து வாங்கப்படும் மலர்கள் அதமம்- கடைநிலை பயனளிப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது.

தரமற்றதும், பிறரிடமிருந்து யாசித்துப் பெற்றதுமான மலர்கள் பயன் தராது என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.

நிறத்தைக்கொண்டு நான்குவகை மலர்களை சிவாகமங்கள் விளக்குகின்றன. வெண்ணிற மலர்கள் சாத்விக குணமுடையவை என்றும்; செந்நிற மலர்கள் ராஜஸ குணமுடையவை என்றும்; நீலவண்ண மலர்கள் (நீலோத்பலம் தவிர்த்து) தாமச குணமுடையவை என்றும்; மஞ்சள் வண்ண மலர்கள் சாத்விகம், ராஜஸம் எனும் இரு குணங்களும் இணைந்த மலர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. கோட்டுப்பூ (மரக்கிளைகளில் பூப்பது), கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று நான்குவகையிலும் மலர்களைப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளனர்.

(பூக்கள் கிடைக்காதபோதும், பிள்ளைப்பேறு உள்ளிட்ட தேவைகளுக்காக வழிபடும்போதும் பசுமையான- புதிய இலைகளைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கான இலைகளைப் பட்டியலிட்டுள்ள ஆகமங்கள், இவற்றில் மிகவும் உயர்ந்ததாக வில்வ இலையையும் துளசி இலையையும் முன்னிலைப்படுத்துகின்றன.)

சிறப்பான எட்டு மலர்களைக்கொண்டு இறைவனைப் பூஜிப்பதை அஷ்ட புஷ்ப்பார்ச்சனம் என்பர். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ, கொன்றைப்பூ அல்லது புன்னைப்பூ, நந்தியாவட்டை, பாதிரிப்பூ, கண்டங்கத்திரிப்பூ, அரளிப்பூ, தும்பைப்பூ ஆகிய எட்டு மலர்களால் சிவனைப் பூஜிக்குமாறு காரணாகமம் கூறுகிறது.

மற்றொரு வகையாக, தாமரைப்பூ, வெள்ளெருக் கம்பூ, புரசம்பூ, நந்தியாவட்டைப்பூ, மல்லிகைப்பூ, செவ்வலரிப்பூ, கொக்கு மந்தாரைப்பூ, கருநெய்தல்பூ ஆகிய எட்டு மலர்களைக் குறிப்பிடுகிறது அம்சுமதாகமம். மேற்கண்டவை சிறப்புப் பூஜைகளின்போது சிறப்பு வாய்ந்த மந்திரங்களால் அர்ச்சிக்கப்படவேண்டிய பெருமைமிகு மலர்களாகும்.

அதிகாலை, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, நடுநிசி போன்ற பூஜைக் காலங்களில் பயன்படுத்தவேண்டிய மலர்களையும் ஆகமங்கள் வகைப்படுத்தியுள்ளன. அதுபோல வாரத்திற்கான மலர்களும் இலைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெண் தாமரை மலரும், அறுகம்புல் நுனியும்; திங்கட்கிழமை புன்னை மலரும் வில்வ இலையும்; செவ்வாய்க்கிழமை செந்தாமரை மலரும், ஆத்தி இலையும்; புதன்கிழமை பாதிரிப்பூவும், துளசி இலையும்; வியாழக்கிழமை செண்பகப்பூவும், மருவு இலையும்; வெள்ளிக்கிழமை ஜாதிமல்லிப்பூவும், மாதுளம் இலையும்; சனிக்கிழமை நீலோத்பல (கருநெய்தல்) மலரும், விஷ்ணுகாந்தி இலையும் கொண்டு பூஜிக்க வேண்டும். இவை காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைக்கும் ஏற்றவை.

இனி மாதங்களுக்கான மலர்களைக் காண்போம்.

சித்திரை மாதத்தில் முல்லைப்பூ, கானர்ப்பூ, கடம்பம்பூ, வாழைப்பூ ஆகிய மலர்களுடன் கோங்கு, அறுகு, நாயுருவி, விளா, வில்வம், மருக்கொழுந்து ஆகிய இலைகளைக்கொண்டு பூஜை செய்வதால் செல்வச்செழிப்பு ஏற்படும். இம்மாதத்தில் மலர் வகை யாவுமே தனிச்சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.

வைகாசி மாதத்தில் அரளி, செந்தாமரை, பாதிரி, நெருஞ்சில், சிறுவழுதலை, செவ்வந்தி ஆகிய மலர்களுடன் வன்னி, அறுகு, நாயுருவி, நொச்சி, விளா, வில்வம் ஆகிய இலைகளைக்கொண்டு பூஜை செய்வதால் சிவலோக முக்திநிலை கிட்டும். இம்மாதத்தில் இலை வகைகள் தனிச்சிறப்புமிக்கதாக ஆகமங்களில் கூறப் படுகிறது.

ஆனி மாதத்தில் கடம்பம், சிவப்பு செண்பகம், தாமரை, பாதிரி, காக்கரட்டான் ஆகிய பூக்களும்; இம்மாதத்தின் விசேஷ அபிஷேகத் திரவியமான புஷ்போதகத்திற்காக (மலர்கள் ஊறிய நீர்) சொல்லப்பட்டுள்ள புன்னை, நாகமல்லி, நந்தியாவட்டம், கருஊமத்தம்பூ, வெள்ளெருக்கம்பூ, மகிழம்பூ ஆகியவையுமாகும். இவற்றால் அபிஷேகித்தும், அர்ச்சித்தும் எண்ணிய பலன்களைப் பெறமுடியும். இம்மாதத்தில் பழவகைகள் தனிச்சிறப்புமிக்க பலனைத் தருவனவாகும். எனவே பழமாலைகளை அணிவிப்பது சிறப்பானது.

ஆடி மாதத்தில் அலரிப்பூ, ஊமத்தம்பூ, கருங்குவளை, தும்பைப்பூ ஆகியவற்றுடன் வில்வ இலை சேர்த்து அர்ச்சித்தால் எதிர்ப்பு நீங்கும்; எதிரிகள் அழிவர். இம்மாதத்தில் பாலாபிஷேகம்; பால்பாயசம், திரட்டுப்பால், பால்பலகார வகை நிவேதனம் ஆகியவை தனிச்சிறப்பு பெறும்.

ஆவணி மாதத்தில் விஷ்ணுகிராந்தி, காக்கரட்டான்பூ, மல்லிகை, புன்னைப்பூ, சண்பகப்பூ, முல்லை மலர் ஆகியவற்றுடன், ஆலமரத்தளிர் இலைகொண்டும் அர்ச்சித்தால் மண்ணுலகில் மட்டற்ற மகிழ்ச்சியை அடையலாம்.

புரட்டாசி மாதத்தில் தேவதாருமரப்பூ, விஷ்ணுகாந்தி, பொன்னூமத்தம்பூ, வெள்ளெருக்கம்பூ, தாமரைப்பூ ஆகிய வற்றுடன், சிறுசெண்பக இலை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வச்சேர்க்கை ஏற்படும்.

ஐப்பசி மாதத்தில் வெள்ளைநிற சங்குப்பூ, வில்வப்பூ, சிறுவழுதலைப்பூ, சரக்கொன்றைப்பூ, மகிழம்பூ, பட்டிப்பூ, முல்லைப்பூ ஆகியவற்றுடன் தாமரை இலை சேர்த்து அர்ச்சித்தால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நால்வகை புருஷார்த்தங்களையும் அடையலாம்.

கார்த்திகை மாதத்தில் குடமல்லி, கரு நெய்தல், மல்லிகைப்பூ, வில்வப்பூ, பொரசம்பூ, பாக்குப்பூ ஆகியவற்றுடன் குருக்கத்தியிலை கொண்டு பூஜைசெய்தால், பிராம்மணரைக் கொன்ற தோஷம் முதல் சகலதோஷமும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் தும்பைப்பூ, வெள்ளருகு, வெண்தாமரை, செந்தாமரை, அறுகுநுனி கொண்டு அர்ச்சனை செய்வதால் வீடுபேறு எனும் மோட்சம் பெறலாம்.

தை மாதத்தில் ஒற்றை நந்தியாவட்டம், அடுக்கு நந்தியாவட்டம், தாமரைப்பூ ஆகியவற்றுடன் நாயுருவியிலை கொண்டு அர்ச்சனை செய்தால் வெகுகாலம் வாழ்வதற்கான ஆயுள்விருத்தி உண்டாகும்.

மாசி மாதத்தில் வெண்தாமரைப்பூ, மருதானிப்பூ, சரக்கொன்றைப்பூ, மல்லிகைப்பூ, பொன்னூமத்தம்பூ எனும் சிவமல்லிகை ஆகியவற்றுடன் துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் அனைத்து பிணிகளும் நீங்கப்பெற்று நல்ல ஆரோக்கியம் ஏற்படும்.

பங்குனி மாதத்தில் தாமரைப்பூ, காசித் தும்பைப்பூ ஆகியவற்றுடன் நாகவல்லி எனும் வெற்றிலையைக்கொண்டு அர்ச்சனை செய்வதால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நாடு செழிக்கவும், நாட்டு மக்கள் நலம்பெறவும் இறையருள் வேண்டும். அவ்வருளைப்பெற பக்தியே சிறந்த சாதனமாகும். பக்தி ஒன்பது வகையாக வெளிப்படக்கூடியது.

காதால் இறைவனைப் பற்றிக் கேட்டறிதல் சிரவணம்.

இறைவனது புகழை வாயாரப் பேசுதலும் பாடுதலும் கீர்த்தனம்.

இறைவனது ஐந்தொழில்களின் பெருமையை எண்ணுதல் ஸ்மரணம்.

இறைவனது திருவடிகளுக்குப் பணிவிடை செய்தல் பாதசேவனம்.

உரிய பூக்கள், இலைகளை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்தல் அர்ச்சனம்.

பலவகையில் இறைவனைப் பணிந்து வணங்குதல் வந்தனம்.

இறைவனைத் தலைவனாகக் கருதி அடியவராக சேவை செய்தல் தாஸ்யம்.

இறைவனை தோழனாகக் கருதி அன்பை வெளிப்படுத்துதல் சக்யம்.

தனது உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனுடையதாக உணர்ந்து, முழுமையாக தன்னை இறைவனிடம் அர்ப்பணித்தல் ஆத்மநிவேதனம்.

இவ்வாறான ஒன்பது வகை பக்தியுள் அர்ச்சனம் என்பது நடுநாயகமாக விளங்குகிறது. மூல மந்திரத்தை தொடர்ந்து பலமுறை உச்சரிப்பதால் அதற்குரிய தேவதை அருள்செய்வதைப்போல- இறைவனின் திருநாமங்களைச் சொல்லிச் செய்யப்படும் அர்ச்சனையானது தெய்வ சாந்நித்யத்தை உருவாக்கும். பூஜை செய்பவரின் நல்லொழுக்கத் தாலும், பலமுறை செய்யப்படும் அர்ச்சனைகளாலும், சிற்ப இலக்கணப்படி அமைந்துள்ள கல்லானது கடவுளாகிறது என்று ஆகமங்கள் சொல்கின்றன. அர்ச்சனையானது தேவதையின் சாந்நித்யத்துக்குக் காரணமாவது போல, வணங்குவோருக்கும் இம்மை- மறுமைப் பயனை அளிக்கவல்லது. இதுகுறித்து இன்னும் பல விவரங்களை சாஸ்திர பிரம்மாணங்கள் விவரிக்கின்றன. அவற்றை அடுத்த இதழில் காண்போம்.


கபினி (கபிலா) நதியின் வடகரையில் அமைந்துள்ளது பழமைமிக்க நஞ்சன்கூடு நகரம். இங்கு புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ் வரர் ஆலயம் உள்ளது. ஏழுதலை நாகம் குடைபிடிக்க, லிங்க வடிவில் காட்சி தருகிறார் சிவபெருமான். ஆலகால விஷத்தை உண்டதால் நஞ்சுண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காந்தேஸ்வரர், நஞ்சுண்டையா என்ற பெயர்களும்; ஹக்கீம் நஞ்சுண்டையா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

ஒருகாலத்தில் இங்கு வாழ்ந்துவந்த கௌதம முனிவர், பார்வதிதேவியின் விருப்பத்திற்கிணங்க, காந்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டுவந்தார். அப்போது மைசூரிலுள்ள ஒரு குன்றின்மீது தேவிரி என்ற பெயரில் கோவில்கொண்டி ருந்தாள் பார்வதிதேவி. அவளே தற்போது சாமுண்டீஸ்வரி (சாமாயி) என்ற பெயரில் புகழ்பெற்று வணங்கப் பட்டு வருகிறாள்.

பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்ட இடம் காராளபுரி என்ற தற்போதைய நஞ்சன்கூடு நகரம் என்பது சிறப்புத் தகவல். “”ஏன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து விஷத்தை அருந்தினீர்கள்?” என்று பார்வதிதேவி கேட்க, “”பூவுலகில் கயிலைக்கு ஒப்பான புனிதத்தலம் இதுதான். அதனால்தான்  இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்றாராம் சிவபெருமான்.

மைசூரை ஆண்ட ஹைதர் அலி (1762- 1782) ஆட்சிக்காலத்தில், அவரது பட்டத்து யானை கண் நோய்க்கு ஆளாகி பார்வையிழந்தது. பல வைத்தியர்கள் பார்த்தும் பயனில்லை.

இறுதியில் அமைச்சர் ஒருவரின் யோசனையின்படி ஹைதர் அலியின் சம்மதத்துடன், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு யானை  கொண்டு வரப்பட்டது. அங்கு தினமும் சுவாமிக் குச் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம்  யானையின் இரண்டு கண்களிலும் வார்க்கப்பட்டது. கோவில் பிராகாரத்தை யானை தினமும் வலம்வந்தது. சில நாட்களிலேயே யானைக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த மன்னர் ஹைதர் அலி, விலையுயர்ந்த மரகதப் பச்சைக்கல் பதித்த அழகிய மாலை ஒன்றை நஞ்சுண்டேஸ்வரருக்கு சமர்ப்பித்தார். இதனால் இந்த சிவபெருமானுக்கு ஹக்கீம் நஞ்சுண்டையா (வைத்தியர் நஞ்சுண்டையா) என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை மக்களின் நோய்களைத் தீர்க்கும் கடவுளாகவும் விளங்கிவருகிறார் நஞ்சுண்டேஸ்வரர்.

இக்கோவில் கட்டுமானப் பணி கங்கமன்னர்கள் (9-ஆம் நூற்றாண்டு) ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பின்னர் ஹொய்சாள மன்னர்கள் ஆட்சியிலும், அதன்பின்னர் கிருஷ்ண தேவராயரின் தந்தை வீரக்ஷத்திரியர், கிருஷ்ண தேவராயர் ஆகியோரது காலத்திலும் தொடர்ந்து சுமார் 1,000 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது.

பல மன்னர்களின் ஆட்சி மாறியபோதும், இக்கோவில் கட்டுமானப்பணி எந்த பாதிப்புமில்லாமல் நடந்துவந்தது ஒரு உலக சரித்திர அதிசயம்! ஆனால் உண்மை.

பின்னாளில் மைசூர் மன்னராக இருந்த மூன்றாவது கிருஷ்ண தேவராஜ உடையார் காலத்தில், தெற்கு பார்த்த பெரிய நுழைவாயிலுடன் ஏழு நிலைகள் கொண்ட 120 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதன் உச்சியில் ஏழு தங்கக் கலசங்களும் அமைக்கப்பட்டன.

சந்நிதிக்குள் சென்று பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் செய்ய விசாலமான நடைபாதை அமைக்கப் பட்டுள்ளது. உள்பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், விநாயகர், சுப்பிரமணியர், சாரதா; ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு சந்நிதிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய சிவலிங்கங்கள், சஹஸ்ரலிங்கம் ஆகியவையும் உள்ளன.

பார்வதிதேவி நான்கு திருக்கரங்களுடன் மூலவருக்கு அருகிலேயே தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். ஸ்ரீதாண்டேஸ்வரர் என்ற பெயரில் நடராஜப் பெருமானும் காட்சியளிக்கிறார்.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் கறுப்புக் கல்லாலான பிரம்மாண்டமான நந்திதேவர் மூலவரைப் பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.

இக்கோவிலில் மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது கர்நாடக மாநிலம் தவிர மற்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நஞ்சுண்டேஸ்வரரை வழிபடுகின்றனர்.

நஞ்சுண்டேஸ்வரரை நம்பினோர்க்கு நாளும் நல்லதே நடக்கும். நேற்று- இன்று- நாளை எனும் முக்காலத்திலும் இதுவே சத்தியம்!

 













 

“கண்கண்ட தெய்வம்’ என்று போற்றப்படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் குறித்து புராணங்கள் பலவாறு பேசுகின்றன. “வைவஸ்சதமன்’ என்னும் மந்திர நூல், ஸ்வேத வராக கல்பத்தின் தொடக்கத்தில் விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சூரியன் அவதரித்தான் என்கிறது. உலகம் தோன்றியதும் ஓம் என்ற ஒலி எழுந்தது. அந்த ஓசையிலிருந்து சூரியன் தோன்றினான் என்கிறது சூரிய புராணம்.

கச்யபர்- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவன் சூரியன். பிரபவ ஆண்டு மகாசுக்ல சப்தமியில், விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அந்தப் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்றுசேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலா வருகிறான் என்கிறது சாம்ப புராணம்.

சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களுண்டு. அவையெல்லாம் காரணப் பெயர்கள். அதிதிதேவியிடமிருந்து தோன்றிய அண்டம் இரண்டாகப் பிளந்து அதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பெயர் மார்த்தாண்டன். தேவர்களுக்கெல்லாம் தேவனாக இருப்பதால் சூரியன் “மகாதேவன்’ எனப்படுகிறார். உலகில் உயிரினங்கள் படைப்புக்குக் காரணமாக இருப்பதால் “பவன்’ எனப்படுகிறார். உலகப் பிரதிகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால் “பிரஜாபதி’ எனப் பெயர் பெற்றார். அதிதியின் மகன் என்பதால் “ஆதவன்’ எனப்படுகிறார். எங்கும் பிரகாசமாய் ஒளிவீசுவதால் “சவிதா’ எனப்படுகிறார். ஒளியில் பல வண்ணங்கள் இருப்பதால் “சித்ரபானு’ என்று சிறப்பிக்கப்படுகிறார்.

மிகவும் பிரகாசமாகத் திகழ்வதால் “பாஸ்கரன்’ என்றும்; மிகவும் விரைவாகப் பயணிப்பதால் “அரியமான்’ என்றும்; தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்புரிவதால் “மித்திரன்’ என்றும்; கேட்ட வரத்தைத் தருவதால் “வருணன்’ என்றும்; தேவர்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பதால் “விஸ்வான்’ என்றும்; எல்லா உலகங்களையும் காப்பதால் “பூஷ்யா’ எனவும் போற்றப்படுகிறார்.

அதிகாலையில் சூரியன் ரிக் வேதமாகவும், உச்சிக்காலத்தில் யஜுர் வேத சொரூபமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபனாகவும் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.

வெளிநாடுகளிலும் சூரியனுக்குப் பல பெயர்கள் உள்ளன.

எகிப்தியர் “ஆமன்ரா’ என்றும், கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலா’ என்றும், ஈரானியர் “மித்ரா’ என்றும், சுமேரியர்கள் “சாமாஷ்’ என்றும் அழைக்கிறார்கள்.

பாபிலோனியாவிலும், ரோமாபுரியிலும் சூரிய வழிபாடு உண்டு. மேலும், சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளி லும் சூரிய வழிபாடு உண்டு.

தமிழ்நாட்டில், குடந்தைக்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் புகழ்பெற்றது. தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் கல்ப சூரியன் அருள்புரிகிறார். மற்றும் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய ஊர்களிலும் சூரியனுக்குக் கோவில்கள் உள்ளன. இதேபோல் வடநாட்டில் துவாரகா, கோனார்க், பூரி, கயா ஆகிய நகரங்களில் சூரியனுக்கென்றே புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. காசியில் (வாரணாசி) மட்டும் சூரியனுக்கு 12 கோவில்கள் உள்ளன. அவை: கங்காதித்யர், விருத்தாதித்யர், திரௌபதி ஆதித்யர், லோலார்க்கர் ஆதித்யர், மயூராதித்யர், அருணாதித்யர், பொம்பாதித்யர், உத்திர ஆதித்யர், சுஷோல்கா ஆதித்யர், யம ஆதித்யர், கேசவாதித்யர், விமலாதித்யர்.

தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், சூரியனுக்கு அமைந்த கோவிலை “வாட் அருண்’ என்று அழைப்பர். ஜப்பானில் இஸ்கு நதிக்கரையில் உள்ள சூரியன் கோவில் “இசே’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தினமும் கற்களால் அக்னி உண்டாக்கி வழிபாடுகள் நடைபெறுகின்றன. எகிப்தில் நைல் நதிக்கரையோரம் அமைந்துள்ள “அபுசிம்பெல்’ என்ற சூரியக்கோவிலில், சூரியன் உதிக்கும்பொழுது அதன் ஒளிக்கதிர்கள் கோவிலின் கருவறைக்குள் விழும்படி அமைத்துள்ளார்கள்.

சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருண்டு. தை மாதத்தில் விஷ்ணு, மாசி மாதத்தில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன் என்றும் பெயர் பெறுகிறார்.

சூரிய மண்டலத்தில் முக்கியமான ஆயிரம் கதிர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் ரிஷிகளும் ஞானிகளும். இவற்றில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் 300 கதிர்கள் “சுக்ரம்’ என்ற பெயரில் வெம்மையூட்டும். அடுத்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் 400 கதிர்கள் “அம்ருதம்’ என்று பெயர் கொண்டு மழையைப் பொழியவைக்கும். அடுத்து மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் 300 கதிர்கள் பனியைக் கொடுத்து குளிர்வைத் தரும்.

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று மூன்று முறை சொல்லி வணங்கினால் நற்பலன்கள் கிட்டும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன.

சூரிய பகவானை சகஸ்ரநாமத்தால் துதித்து பூஜை செய்தால் மிகுந்த பலனைப் பெறலாம். அந்த சகஸ்ரநாமத்தை முழுமையாகச் சொல்ல முடியாத பட்சத் தில், சூரியனது இருபத்தொரு பெயர்கள் கொண்ட மந்திரங்களைச் சொன்னால் போதும் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்வர்.

“இந்த மந்திரத்தை யார் ஒருவர் காலையிலும் மாலையிலும் ஜெபிக்கிறாரோ அவர் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்; நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார்’ என்று கூறப்பட் டுள்ளது.

“ஓம் விகர்த்தனோ விவஸ்வாமஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி

லோகப்பிரகாசக ஸ்ரீமான் லோகசக்ஷர் க்ரஹேச்வர:

லோக ஸாக்ஷீ த்ரி லோகேச: கர்த்தா
ஹர்த்தா தமிஸ் ரஹா:
தபனஸ் தாபனஸ் சைவகசி:
ஸப்தாச்வ் வாஹன
கபஸ்திஹஸ்தோ ப்ரஹ்மாச
ஸர்வதேவ நமஸ்க்ருத:’

சூரிய வழிபாட்டினை மேற்கொள்வதில் பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் தினமும் “அக்னி ஹோத்ரம்’ செய்பவர்கள் (இது ஒரு யாகம்) சூரிய உதயவேளையில் பூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்லி யாகத்தீ வளர்த்து, ஹோமத்துக்குரிய சமித்துகளை நெய்யிலிட்டு அக்னியில் சமர்ப்பிப்பார்கள்.

 

 

டி. பரிமளரங்கன்

உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியன். அவனது ஒளியாலேயே உயிரினங்கள் வாழ்கின்றன. எனவேதான் சூரிய வழிபாடு பழங்காலந்தொட்டே கடைப்பிடிக்கப்படுகிறது. காலை வேளையில் சூரியனுக்குரிய மூல மந்திரத்தினை ஜெபித்து, கிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்தால், புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிட்டுவதுடன், உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும்; கண்ணொளி பிரகாசிக்கும்; இதயம் வலிமைபெறும்.

“காலையில் ரிக்வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாகவும் சூரியன் திகழ்கிறான்’ என்கிறது சூரிய அஷ்டகம்.

சூரியன் வலம்வரும் தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்கள், ஏழு ஜுவாலைகள், ஏழு சமித்துக்கள், ஏழு ஹோமங்கள் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன.

சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள். நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை தெய்வங்களான சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்கள். குறிப்பாக தமிழர்கள் சூரிய வழிபாட்டை தெய்வ வழிபாடாகக் கருதும் அதேவேளையில், ஒரு மருத்துவ சிகிச்சையாகவும் கருதி கையாண்டிருக்கிறார்கள்.

இந்தியத் திருவிழாக்களில் சூரியனை பிரதான தெய்வமாகக் கருதி வழிபடும் விழாக்களும் உண்டு. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை “மகர சங்கராந்தி’ என்று வட இந்தியாவிலும், “பொங்கல் திருநாள்’ என்று தமிழகத்திலும் கொண்டாடுகிறார்கள். இரண்டுமே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாக்களாகும்.

இந்தியாவில் வேத காலத்திலிருந்தே சூரிய வழிபாடுகள் நடந்ததாக வேதநூல்கள் கூறும். கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கள் கூறுகிறார்கள்.

எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இயற்கையின் வடிவமைப்பில் முதலிடம் பெறும் சூரியனை ஒரு கிரகமாகக் கருதினாலும், புராணங்கள் கூறும் தகவல்கள் நம்மைக் கவர்வதாகவே உள்ளன. காசிபர்- அதிதி தம்பதியினருக்குப் பிறந்த- விஸ்வான் என்றழைக்கப்படும் சூரியன் ரஜினி, சுவர்ணா, சாயா, ஸுவர்ச்சலா ஆகிய நான்கு மனைவிகளைக் கொண்டவன் என்றும், செம்பொன் மேனியை யுடையவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணம் கூறுகிறது. அதனை அறிவியலும் ஏற்கிறது.

சித்திரை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரில் ஆயிரம் கதிர்களுடனும்; வைகாசி மாதத்தில் அர்யமான் என்ற பெயரில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும்; ஆனி மாதத்தில் விஸ்வஸ் என்று பெயர் பெறும் சூரியன் ஆயிரத்து நாநூறு கதிர் களுடனும்; ஆடி மாதத்தில் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களுடனும்; ஆவணி மாதத்தில் பர்ஜன் என்ற பெயரில் ஆயிரத்து நாநூறு கதிர்களுடனும்; புரட்டாசி மாதத்தில் வருணன் என்ற பெயரில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் பிரகாசிக்கும் சூரியன், ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஒளிரச் செய்கிறான். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் பெற்று ஆயிரத்து நூறு கதிர்களையும்; மார்கழி மாதத்தில் நண்பனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களுடனும் விளங்குகிறான். தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயரில் ஆயிரம் கதிர் களுடன் ஒளிவீசுபவன், மாசி மாதத்தில் பகன் என்ற பெயரில் ஆயிரம் கதிர்களுடன் ஒளிவீசுகிறான். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரில் ஆயிரத்து நூறு கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான். மேலும், வடக்கு நோக்கிச் செல்லும் உத்ராயன காலத்தில் அதிகமான ஒளிக்கதிர்களுடனும்; தெற்கு நோக்கிச் செல்லும் தட்சிணாயன காலத்தில் குறைந்த ஒளிக்கதிர்களுடனும் பவனிவந்து அனைத்துலகையும் காக்கிறான். சூரியனுக்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சூரியன் அருளிய பெயர்கள் குறித்து புராணத்தில் தகவல்கள் உள்ளன.

“ஆயிரம் நாமங்கள் கொண்டு எவரொருவர் என்னைத் துதித்து வழிபடுகிறார்களோ. அவர்களின் எண்ணங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வேன். எனது ஆயிரம் நாமங்களை நினைவுகூர்ந்து ஜெபிக்க இயலாதவர்கள், எனது இருபத்தொரு நாமங்களைக் கொண்டு பூஜித்தாலும் முழுத் திருப்தி அடைவேன்’ என்று சூரிய பகவான் கூறிய இருபத்தொரு நாமங்கள்:

“ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாச: ஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:
கர்த்தா ஹர்த்தா தமிஸரஹ’
தபனஸ் தாபனஸ் சைவ கசி:
ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:’

மேற்கண்ட நாமங்களை சூரிய வழிபாட்டின்போது ஜெபித்தால் சூரிய பகவானின் முழு அருளையும் பெற்று வளமுடன் வாழலாமென்று கூறப்படுகிறது.

பலவாறு புகழப்படும் சூரியனைப் போற்றி வழிபடும் நாளாக தமிழகத்தில் தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர். ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள். தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர். உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.

இங்கிலாந்தில் பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் திறந்தவெளியில் ஒன்றுகூடி, ஒரு சமூக விழாவாக “சூரியன் உலகைப் படைத்தவர்’ என்று போற்றி வழிபடுகிறார்கள்.

பாரீஸில் வாழும் மக்கள் “உடல்நலனுக்கு அடிப்படை சூரியன்’ என்று போற்றுவர். ஜப்பானிலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நாம் “பொங்கலோ பொங்கல்’  என்று குரல் கொடுப்பதுபோல ஜப்பானியர்கள் “ஹங்கரோ ஹங்கரோ’ என்று குரல் கொடுப்பர். பொங்கலுக்கு மறுநாள் நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுபோல் அவர்கள் குதிரைப்பொங்கல் கொண்டாடுவர். பர்மாவில் (மியான்மர்) பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து சூரிய வழிபாடு செய்வதுடன் கால்நடைகளுக்கும் பூஜைசெய்து போற்றுவர்.

எனவே, உலகம் போற்றும் சூரியனை தைப்பொங்கல் திருநாளில் வழிபடுவதுடன், தினமும் வழிபட்டு சுகம்பெறுவோம்.

Comments are closed.