சந்தியாந்ருத்த மூர்த்தி

 

free counters

சிவனுக்கு இனியவன்s Foto.

சிவனுக்கு இனியவன்

 

சந்தியாந்ருத்த மூர்த்தி

தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும் இழுக்கும் பொருட்டு வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார். இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.
சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் – நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று ஆர்ப்பரித்தனர். ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க மதுரை செல்ல வேண்டும். சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார். செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள் ஒழிவர். நன்மை பாராட்டுவர். மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு மேன்மையடையும் என்பது ஐதீகம்.

பல்வேறு வகையான பூஜைகளில் சாந்தி கிரியையும் ஒன்று. எதிர்பாராத தீய பலன்களைத் தடுப்பதற்காக செய்யப்படுவதாகும். வேதம், ஆகமம், ஸ்மிருதி, புராணாதிகளின் கர்மகாண்டத்தில் பல்வேறு கிரியைகள் இடம் பெற்றுள்ளன. அவை நித்தியக் கிரியை, நைமித்திகக் கிரியை, காம்யக் கிரியை என்று மூன்று வகைப்படும். தினமும் செய்யப்படுவதாகிய அனுஷ்டானம், ஜெபம், தபம் முதலானவை நித்தியக் கிரியைகள் ஆகும். விருப்பமான பயனைப் பெற்றிட விரும்பினால் மட்டுமே செய்யப்படுவன காம்யக் கிரியைகள் ஆகும். மனித வாழ்க்கை புனிதச் சடங்குகளாலேயே சிறப்பு நிலையைப் பெறுகிறது. அறிந்தும் அறியாமலும் நிகழும் தவறுகளுக்குப் பரிகாரமாகவே (சாந்தியாகவே) தினமும் அனுஷ்டானமும் ஜெபமும் செய்யப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டம் வருகிறபொழுது ஏற்படக்கூடிய தீமைகளைக் களைந்து, நெடுநாள் வாழ்ந்திடும் நோக்கில் யாவரும் செய்துகொள்ள வேண்டியவை நைமித்திக சாந்திகளாம். இவை பரிகார சாந்திகள் அல்ல; விரும்பினால் செய்துகொள்வதும் அல்ல. ஆயுள் விருத்திக்கும், சிலவகை சிறப்புப் பயனைப்பெறவும் குறித்த காலத்தில் செய்யப்பட வேண்டுவனவாகும். மனிதனின் பெறற்கரிய பேறு மன அமைதியே. வேதங்களும் ஆகமங்களும் “ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’ என்று மூன்று முறை கூறி, யாவரும் சாந்தி பெறவேண்டி இதனை வலியுறுத்துகின்றன.

மனித உடலுக்கு மட்டுமின்றி தேச நலனுக்கும், கிராம நலனுக் கும், வீட்டு நலனுக்கும், கால்நடை முதலிய பிராணிகளின் நலத்திற்கும் உரியவையென்று பலவகை சாந்திக் கிரியைகள் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, உதக சாந்தி, ரக்ஷோக்ன சாந்தி ஹோமம், கூஷ்மாண்ட ஹோமம், சாந்தி ஹோமம், அஸ்த்ரயாகம் முதலிய கிரியைகளைச் சொல்லலாம். பஞ்சபூதங்களில் ஒன்றான பூமிக்கு புனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் விளைவிப்பதற்காக செய்யப்படுவது வாஸ்து சாந்தியாகும். அது குறிப்பிட்ட காலங்களில் பயன் கருதி செய்யப்படுவது போலவே, மனித உடலுக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் விளையும் தீய பலனைப் போக்கி ஆயுளை நீட்டிக்கும் நோக்கில் சாந்திகள் செய்யப்படவேண்டுமென்பது பொதுவிதியாகும்.

வேள்வி விளக்கம்

“அறம் எனப்படுவதே இல் வாழ்க்கை’ என்றும்; “அன்பும் அறமும் இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்’ என்றும் திருவள்ளுவர் கூறுவார். மேலும் “கற்றதனால் ஆயபயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே’ என்பார். இதனையே ஆன்றோர்கள், இறைவனை மகிழ்விப்பதையே யாகம் என்றனர். “தேவர்கள் வேள்வியினாலேயே படைக்கப்பட்டும், வல்லமை பெற்றும் இவ்வுலகைக் காக்கின்றனர். வேள்வியே அறங்களுக்கெல்லாம் தலையாவது’ என்கிறது யஜுர்வேதம்.

நாம் வேள்விகள் செய்வதால் மழைவளம் பெருகும். மழை வளத்தால் உலகம் செழித்து தன்னிறைவு பெறும். “கற்றாங்கே எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்’ என்பது அப்பர் பெருமான் திருவாக்கு. “அந்தணர் நூல்விதிப்படி வேள்விகள் செய்ய உலகின் துன்பம் நீங்கும்’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். மேலும் தேவாரத்தில், “மண்ணிற் பெருவேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணிற் புயல் காட்டும் வீழிமிழலையே’ என்னும் இலக்கியச் சுவைமிக்க ஞானசம்பந்தரது திருவாக்கு, வேள்விகள் மழைக்குக் காரணமென்பது உண்மை என்பதையும், இதனைச் செய்வது நித்தியக்கடமையாக இருந்தது என்பதையும் அருளாணையிட்டு உணர்த்துகிறது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் இதனை,

“அந்தணர் தேவ ரானினங்கள் வாழ்க வென்
றிந்த மெய்ம் மொழிப் பயனுலக மின்புறச்
சந்த வேள்விகள் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடு மன்னவாம்.’

என்று விவரிக்கிறார்.

வள்ளுவப் பெருந்தûகையும் “சிறப்பொடு பூசனை செய்யாது வானம்’ என்று மழைக்கென பூஜையின் தேவையைக் குறிப்பிட்டுள்ளார்.

யாவருக்கும் யோகம் தருவது ஹோமமே. யாகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது தியாகமே.

அக்னியில் பல பொருட் களால் ஹோமம் செய்வதன் மூலமாக, நம்முடைய பொருட்களை தெய்வங்களுக்காக நாம் தியாகம் செய்கிறோம். மேலும் யாகத்தின் அங்கமாக உள்ள தட்சிணை தருவது, தான தருமம் செய்வது போன்றவற்றால் நாம் பலருக்குப் பொருளையளித்து கொடையாளியாகிறோம்; புனிதராகிறோம்.

ஜெபம், தபம் முதலானவற்றால் ஒருவன் தனிப்பட்ட முறையில் தான் உயர்ந்து மோட்சத்தை அடையலாம். ஆனால் மனித குல சமூகத்திற்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால் யக்ஞம்தான் சிறந்தது. யாகத்தின் பயனாக தேவர்களும் மற்றவர்களும் கருத்து வேற்றுமை, பகைமை நீங்கப்பெற்றவர்களாகி நண்பர்களாவர் என்றும், உலகில் யாவும் வேள்வியிலேயே நிலைபெற்று விளங்குவதாயும், ஆதலால் வேள்வியே மேலான அறமென்றும் யஜுர் வேதம் கூறுகிறது.

யக்ஞம் என்பது, தேவதைகளுக்கான அவிர்பாகத்தை (விருப்பமான பொருளை) அந்தந்த தேவதைக்குரிய மந்திரங்களைச் சொல்லி யாக அக்னியில் இடுவது. அவற்றை அக்னிதேவன் அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறார். தேவர்கள் அக்னியையே திருவாயாகக் கொண்டு ஹவிஸ்ஸை ஏற்பதாக வேதம் கூறுகிறது. யக்ஞத்தின் மூலமாக தேவதைகள் திருப்தியடைந்து உலகிற்குத் தேவையான மழையை அளிக்கிறார்கள்.

அக்னியானது தானும் தூய்மையாக விளங்கி, மற்றவற்றையும் புனிதமாக்க வல்லது. எனவே பூஜையிலும், சாந்திஹோமம் முதலிய கிரியைகளிலும் அக்னி இடம்பெறுகிறது. ஹோமத்துடன் செய்யப் படும் கிரியையே உத்தமமான உயர்தரக் கிரியை என்று வேதம் வலியுறுத்துகிறது.

ஆகம நெறியில் ஆயுள்தரும் ஹோமம்வேதநாயகன் அருளிய சிவாகமங்கள் பசு, பதி, பாசம் எனும் முப்பொருளையும் உணர்த்தி. அவற்றுள் பசுக்களாகிய உயிர்கள், பாசமாகிற மலபந்தங்களிலிருந்து விடுபட்டு, பதியாகிய இறைவனைச் சேரும் நெறியைச் கூறுவனவாம்.

இவ்வுலகம் ஓசை வடிவிலும் ஒளி வடிவிலும் இருவகையாகத் தோன்றி ஆறு அத்வாக்களாக (வழிகளில்) யாவுமாக விளங்குகிறது. அவற்றுள் மந்திரம், பதம், வர்ணம் எனும் மூன்றும் சப்தப் பிரபஞ்சம் எனப்படுபவை. தத்துவம், புவனம், கலா எனும் மூன்றும் அர்த்தப் பிரபஞ்சம் எனப்படும். அதாவது உடல், தத்துவங்கள், உலகங்கள் ஆகிய மூன்றுமாம். இதில் ஆத்மாவானது போக மோட்சங்களை அடைய சாதனமாக இருப்பவை 36 தத்துவங்களாகும். உடல் இயக்கத்திற்கு இவை மிகவும் அவசியமானவை. இந்த 36-ம் போக்ய காண்டம், போக காண்டம், ப்ரேரக காண்டம் என மூன்று பகுதியாக விளங்குபவை. அதாவது ஆத்மதத்துவம் 24-ம் அனுபவிக்கப்படுபவை. வித்யா தத்துவம் ஏழும் அனுபவிக்க உதவுபவை.

சிவதத்துவம் ஐந்தும் அனுபவிக்க துணைநின்று தூண்டுபவை.

ஆத்ம, வித்யா தத்துவங்கள் 31-ம் கூடியவனே புருஷன் எனும்- அனுபவித்திடும் உயிரெனும் ஆன்மா. இந்த தத்துவங்கள் 31-ம் பிரகிருதி மாயை, அசுத்த மாயை சம்பந்தம் உடையவை. எதைப்பற்றி சொல்கிறோமோ அதன் உண்மையே தத்துவம் எனப்படும். இவை புலன்கள் அல்ல. சூட்சும நிலையில் மகாபிரளய காலம்வரை இருப்பவை. தத்துவரூபமான உலகம் பாசமாகும். உலகுடன் இயங்கும் சித்தே ஆத்மாவாகும். ஆத்மாவான சித் என்பது, பாசமயமான உலகுடன் சேர்ந்து தன்னை மறந்து உலகிலேயே உழல்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் முதலில் தன்னை அறிந்து, அடுத்து மாயா சம்பந்தம் நீங்கி, சிவஞானபோதம் ஏற்பட்டு, சிவயோகம் கூடினால் பிறவித்துன்பம் நீங்கும். பிறவியிலிருந்து நீங்குவதே மோட்சமென்பது.

சைவசித்தாந்தத்தில் மோட்சத்திற்கு சாதனமாக பத்து காரியங்கள் சொல்லப்படுகின்றன. தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆத்மரூபம், ஆத்மதரிசனம், ஆத்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவையே அவை. இதன்மூலமாக சிவத்துடன் மலர்கிற சிவயோகத்தை அடையலாம். இதுவே பேரின்ப நித்யானந்த பரமுக்திநிலையாகும்.

எனவே நாம் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்களைப் போற்றவேண்டும். இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே என்பது அப்பரின் அருள்வாக்கு. தோன்றிய பொருள் எதுவாயினும் அது ஒடுக்கமுடையதே. எனவே உடலானது முறையே பாதுகாக்கப்பட்டால், பல ஆண்டு காலம் கூடுதல் ஆயுள்பெறும். ஒழுக்கநெறியின் உன்னத சடங்குகளால்- உரிய சாந்தி ஹோமங்களால் வாழ்நாள் நீட்டிப்பை அடையுமென்பது நமது சமய உண்மையாம். இதை அடிப்படையாகக் கொண்டே 60 வயதில் உக்ர ரத சாந்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் விஜயரத சாந்தி என்று செய்வார்கள். அதன் விளக்கத்தை அடுத்த இதழில் காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது திருக்குறுங்குடி என்ற வைணவத் தலம். அதற்கு மேற்கே மகேந்திரகிரி என்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவன் வாழ்ந்துவந்தான்.

அவனுக்கு திருக்குறுங்குடி பெருமாள்மீது அதீத பக்தி. கைசிகப் பண் என்னும் ராகத்தை இசைத்தபடி ஏகாந்தமாய் வாழ்ந்துவந்தான். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியன்று விரதமிருப்பது அவன் வழக்கம். அப்படி ஒருமுறை விரதம் மேற்கொண்ட அவன் கானகத்தின் வழியாக  திருக்குறுங்குடி நோக்கிச் சென்றான். அப்போது காட்டிலிருந்த பிரம்மராட்சதன் நம்பாடுவானைப் பிடித்து தின்னமுயன்றான். அப்போது நம்பாடுவான், “”இந்த உடல் உன் பசியைப் போக்க பயன்படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்று நான் விரதம் மேற்கொண்டுள்ளதால், பெருமாளை சேவித்துவிட்டு வந்து உனக்கு உணவாகிறேன்” என்று கூறினான்.

“”உன்னை நான் எப்படி நம்புவது” என்று பிரம்மராட்சதன் கேட்க, “”பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்” என்று சத்தியம் செய்துகொடுத்தான். அதை ஏற்றுக்கொண்ட பிரம்மராட்சதன்  அவனை விடுவித்தான்.

ஆலயத்தினுள் சென்று தரிசிப்பதற்கு அவன் குலம் தடையாக இருந்ததால், அவன் வெளியே ஓரிடத்தில் நின்று மானசீகமாக வழிபட்டுப் பாடியாடுவான். இம்முறையும் வழக்கம்போல வெளியே நின்று பெருமாளை வணங்கியவன், “”பெருமாளே! உன்னை நான் தரிசிப்பது இதுவே கடைசியாக இருக்கலாம். உன் திருமுகத்தைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லையே” என்று சொல்லி கண்ணீர்விட்டான். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. நந்தனாருக்காக நந்தி விலகியதுபோல, நம்பாடுவானுக்காக கொடிமரம் விலகியது. பெருமாளின் திவ்ய தரிசனத்தைக் கண்டு பேரானந்தம் கொண்டான். பாடினான்… ஆடினான். (இச்சம்பவத்தின் காரணமாக திருக்குறுங்குடி கோவிலில் கொடிமரம் சந்நிதிக்கு நேரெதிரே இல்லாமல் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.)

பிரம்மராட்சதனுக்கு அளித்த வாக்குறுதி நினைவுக்கு வரவே, அதை நிறைவேற்ற அவன் இருப்பிடம் நோக்கிச் சென்றான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்மராட்சதன், “”நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். உன்னை உணவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியை எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுயஉரு பெறுவேன்” என்றான்.

அதைக்கேட்டு வியப்புற்ற நம்பாடுவான், “”உனக்கு எப்படி இந்த வடிவம் வந்தது?” என்று கேட்டான்.
“”நான் முற்பிறப்பில் யோகசர்மா என்ற அந்தணனாய் இருந்தேன். வேள்வி இயற்றுவதை இழிவாகக் கருதி, பற்றில்லாமல் யாகம் நடத்திக்கொடுத்தேன். அதனால் இப்பிறவியை அடைந்தேன்” என்றான்.

 

கேதாரகௌரி நோன்பு

இவ்விரதத்தை ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பினை பார்வதிதேவி கடைப்பிடித்து ஈசனின் பாதி உடலைப் பெற்றாள். இப்பூஜை செய்வதால் கணவருடன் இணைபிரியாது வாழலாம்.

நோன்பு நோற்கும் முறை: பூஜையறையில் சுவாமி படத்தின்முன் 21 இழை மஞ்சள் சரடு வைத்து, 21 அதிரசம் வைத்து கௌரி பூஜை செய்து, பின்னர் கணவனை வணங்கி சரடு கட்டிக்கொள்ளவேண்டும். மாங்கல்ய பலம் கூடுவதுடன் கணவனின் ஆயுளும் விருத்தியடையும்.

காஞ்சி அருகே உத்திரமேரூரில் உள்ள கேதார கௌரீஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏராளமான பெண்கள் இந்த நோன்பினை மேற்கொள்வர். ஆலய லிங்கத்தின்மீது சரடுகளை வைத்து அர்ச்சகர் பூஜித்துக் கொடுக்க, பெண்கள் 21 அதிரசம் வைத்துப் படைத்துவிட்டு அந்த சரடைப் பெற்றுக்கொண்டு இல்லம் வந்து, கணவன் காலடியில் நமஸ் காரம் செய்தபின் சரடைக் கட்டிக்கொள்வார்கள்.

காசியில் தீபாவளி

காசியில் உள்ளோர் நிஜமாகவே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு அன்னபூரணியை வழிபடுவார்கள். அன்று அன்னை தங்கமயமாக ஜொலிப்பதை முழுமையாக தரிசிக்கலாம். அன்றிரவு, தங்க அன்னபூரணி லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஊர்வலம் வருவாள். அவளுக்குமுன் தங்க காலபைரவர் வலம்வருவார். இவரை கருவூலப் பெட்டகத்திலிருந்து எடுத்து வந்து ஊர்வலம் நடத்துவார்கள். முடிந்தபின் மீண்டும் கருவூலப் பெட்டகத்திலேயே பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஊர்வலம் முடிந்தபின் லட்டுத் தேர் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

அன்னலிங்கம்

இதை தென்னாட்டவர்கள் காசியில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். காசி கங்கைக்கரையில் மீராகாட் பகுதியை தூய்மை செய்து கோலமிட்டு, தலைவாழை இலையைப் பரப்பி, அதன்மீது சுத்த அன்னத்தால் அன்னலிங்கம் அமைப்பார்கள். மூன்று சதுர அடி பரப்பில் இரண்டு அடி உயரத்தில் லிங்கம் அமைத்து, அதன்முன் சிறிய அன்ன நந்தி அமைப்பர்.

அன்னலிங்கத்தை லட்டு, வடை, பலகாரங்கள், காய்கறிகளால் அலங்கரித்து பூமாலையும், ருத்திராட்ச மாலையும் அணிவிப்பார்கள். பின் 11 மணிக்கு யாத்ரீகர் முன்னிலையில் பூஜை செய்து, பின் 200 பிச்சைக்காரர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பார்கள். பின் 31 ரூபாய் தட்சணை தருவார்கள். இது தீபாவளியன்று நடைபெறும். முன்பெல்லாம் பிராமணர்களுக்குத் தந்த விருந்தை இப்போது பிச்சைக்காரர்களுக்குத் தருகின்றனர்.

துளசி கல்யாணம்

தீபாவளிக்குப்பின் வரும் துவாதசியன்று துளசி கல்யாணம் செய்வார்கள். மணப்பெண் துளசி; மணமகன் நெல்லிக்கொம்பு. (திருமால்). அன்று துளசி மாடத்திற்கு செம்மண் இட்டு, செடிக்கு மாலை போட்டு, மாடத்தின்முன் கோலமிட்டு விளக்கேற்றி, துளசிக்கும் நெல்லிக் கொம்பிற்கும் ஆடை அலங்கரித்து பெண்கள் பூஜை செய்வார்கள். இதனால் சுமங்கலி பாக்கியம்
கூடும் என்பர்.


ரங்கன் பெறும் சீர்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மாமனார் பெரியாழ்வார்; ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. இவரிடம் தீபாவளியன்று ரங்கர் சீர் பெற்றுக்கொள்வார்.

கோவில் சிப்பந்திகளுக்கு கோவில் சார்பில் முதல் நாள் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் கொடுப்பார்கள். மறுநாள் தீபாவளியன்று நீராடியபின் ஆலயம் வருவார்கள். அங்கு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள். அத்துடன் ஆலயத்திலுள்ள ஆழ்வார்கள் சந்நிதிகளில் திருமஞ்சனம் செய்வித்து புத்தாடை அணிவிப்பார்கள்.

அதன்பின் அனைவரும் கிளிமண்டபத்திற்கு வந்துசேர்வார்கள். ரங்கநாதர் திருமஞ்சனமானபின் புத்தாடை அலங்காரத்துடன் சந்தன மண்டபம் வந்தடைவார். அங்கு மாமனார் சீர்வரிசை தர காத்துக்கொண்டிருப்பார். ரங்கர் வந்ததும், 1,000 ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புத்தாடைகளில் கட்டி ரங்கனின் காலடியில் வைப்பார்கள். மாமனாரிடம் சீர்பெற்றபின் ரங்கர் ஒரு ரூபாய் நாணயத்தை பக்தர்களுக்குத் தருவார். இதைக் காண்பவர்களும் பெறுபவர்களும் பணத்தட்டுப்பாடின்றி நன்கு வாழ்வார்கள்.

சிரார்த்தம் செய்யும் சாரங்கன்

ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் குடந்தை சாரங்கபாணி கோவிலில் ஆராவமுதன் வலது மோதிர விரலில் பவித்திரம் அணிந்து, அர்ச்சகர் கையில் தர்ப்பை அளித்து சிரார்த்தம் செய்ய உத்தரவிடும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமிக்கு அன்று சிரார்த்த சமையல்தான் நிவேதனம் செய்யப்படும். பின் இரண்டு பிராமணர்களுக்கு சிரார்த்த திதி போஜனம் அளிப்பார்கள்.

சாரங்கபாணி கோவிலுக்கு 140 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் லட்சுமி நாராயணன் எனும் பக்தர். பலரிடமும் உதவிபெற்று செய்து முடித்தார். இதற்காக அவர் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. ஒரு தீபாவளியன்று அவர் பரமபதம் சேர்ந்தார். பிள்ளையில்லாத அந்த பக்தருக்காகவே சாரங்கபாணி சிரார்த்தம் கொடுக்கிறார்.

தீபாவளியன்று நடந்தவை

ஆதிசங்கரர் ஞானபீடம் நிறுவினார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாள். விக்ரமாதித்தன், மகாபலி, நரகாசுரன் மகன் பகதத்தன் ஆகியோர் முடிசூட்டிக் கொண்டு அரியணை ஏறிய நாள். ஜைனகுரு மகாவீரர், சீக்கியகுரு குருநானக், ஆரிய சமாஜ தயானந்த சரஸ்வதி ஆகியோர் முக்திபெற்ற தினமும் தீபாவளிதான். பாண்டவர்கள் வனவாசம் முடித்து இந்திரப் பிரஸ்தம் திரும்பிய நாளும் இதுதான்.

பாற்கடல் கடைந்தபோது லட்சுமி தேவி தோன்றினாள். தோன்றிய அன்றே திருமாலை மணந்துகொண்டாள். குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப்பெற்றதும் தீபாவளி தினத்தில்தான்.

வரலாற்றில் தீபாவளிமதுரை மாநகரில் திருமலைநாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது என்பர்.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னன், தன் கன்னட கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளிப் பரிசு தந்ததாக குறிப்புகள் உள்ளன. தென்னிந்திய தீபாவளியின் முதல் குறிப்பு இதுதான். குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டில் தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜை செய்ய மானியம் அளித்த தகவல் உள்ளது.

அதுபோல காளஹஸ்தி ஆலயத்திலுள்ள கல்வெட்டில் தீபாவளியன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது குறிக்கப்பட்டுள்ளது.

மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து சமபந்தி போஜன முறை செய்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும், காமசூத்ராவில் கூராத்திரி என்றும், காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் தீபாவளியை சுக்ராத்திரி எனவும் கூறியுள்ளனர்.

தஞ்சை சரஸ்வதி மகாவிலிலுள்ள ஆகாச பைரவர் ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம் பிக்கப்பட்டது.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப என்ற உருதுச் சொல்லே மத்தாப்பு ஆனது.

 

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் – கேதார கௌரி விரதம் …விரதம் பகுதியில் மேலும் பார்க்க

சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில்- குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் நவராத்திரி காலங்களில் வழிபடுகிறார்கள்.

இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். அன்னையின் முதல் வடிவமான சைலபுத்ரி இமவான் மகளாகப் பிறந்து, கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை மணந்தாள். இந்த தேவியானவள் கையில் சூலத்துடன் காளை மாட்டின்மீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட மங்களகரமான  வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும்.

இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத் தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சிதருவாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதிபிறக்கும்; எதையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இரண்டாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் “துர்க்காகாட்’ படித்துறையில் கோவில் உள்ளது.

திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.

இந்த ஆட்டத்தின்போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சித்திரகாண்டா. இவள் பத்து கரங்கள் கொண்டவள். புலிமீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும்; மனதிற்கு சாந்தி கிட்டும். மூன்றாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது.

சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக்கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா. எட்டுக்கரங்கள் கொண்ட இவள் வேங்கைமீது அமர்ந்திருப்பாள். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள். நான்காம் நாள் வழிபடப்படும் இந்த அன்னைக்கு காசியில் சௌக் கடைத்தெரு பகுதியில் ஆலயம் உள்ளது.

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும்பொருட்டு சிவபெருமான் உண்டார். அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தின்போது வரையப் பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையை “வாகீஸ்வரி’ என்றும் சொல்வர். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் மடியில் ஆறுமுகப் பெருமான் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பார். இந்த தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள் இவள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்கு கோவில் உள்ளது.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின்போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. நான்கு கரங்கள் கொண்டவள். சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். “சிம்மவாஹினி’ என்றும் சொல்வர். ஆறாம் நாள் வழிபடப்படும் இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறாள்.

யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூத தாண்டவம். இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள். இவள் புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத் தோற்றத்தில் காட்சிதருவாள். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். இவளது வாகனம் கழுதை. இவளை வழிபட தீயவர்கள் அழிவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது. ஏழாம் நாள் வழிபடப்படும் தெய்வம் இவள்.

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்ட, இறைவன் அந்த அசுரர்களை அழித்த பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து “மகாகௌரி’ என்ற அன்னை தோன்றினாள்.

நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ரிஷபத்தின்மீது அமர்ந்து திரிசூலம் ஏந்தி காட்சிதரும் இந்த தேவியை வழிபட பசிப்பிணி நீங்கும்; உடல் வளம்பெறும். இவளுக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது. இந்த தெய்வத்தை எட்டாம் நாள் வழிபடுகிறார்கள்.

கயிலைநாதன் சிருங்கார தாண்டவம் ஆடியபோது நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது தன் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்திதாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஆதிசக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள். தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் இவளை வழிபட முக்தி கிட்டும்.

ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் “சித்திதாத்ரி சங்கடா’ என்னும் கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.

மேற்கண்ட தகவல்களை காசி புராணம் விவரிக்கிறது. தென்னகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் வரிசையில் நவராத்திரி கொண்டாடுகிறோம்.

காசியில் உள்ளவர்கள், சிவபெருமான் ஆடிய தாண்டவத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்பது தேவியரின் சுதை விக்ரகங்களை வாங்கிவந்து கொலுவைப்பார்கள்.

பத்தாம் நாளை, பார்வதிதேவி மீண்டும் தாய் வீடான இமயத்திற்குச் செல்லும் நாளாகக் கொண்டாடுவர். அன்று சுதையினாலான அம்பாள் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்வர். கைகளில் வளையல்கள் அணிவித்து, கால்களுக்கு சிவப்பு சாந்து பூசி, மலர்களால் அலங்கரிப்பர். வேதவிற்பன்னரை வரவழைத்து சிறப்புப்பூஜை செய்வதும் உண்டு. பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு, தங்கள் சக்திக்கு ஏற்ப புடவை மற்றும் ரவிக்கைத் துணிகளை மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய், பழங்கள், இனிப்புப் பண்டங்களை அதற்குரிய வாழை மட்டைத் தட்டுகளில் வைத்து வழங்குவர்.

அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவம் கொலுவில் நடுநாயகியாகக் காட்சி தருவதால், அனைவரும் பக்திப் பாடல்களைப் பாடி மீண்டும் பூஜிப்பார்கள். பிறகு, பத்து நாட்களும் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் உருவச்சிலைகளை கங்கை நதியில் கரைத்து விழா கொண்டாடுவர்.

காசி வருண்காட் அருகில் துர்க்கா கோவிலிலுள்ள இந்தப் பத்து தேவியரின் பளிங்குச் சிலைகளுக்குப் பூஜைகள் செய்து நவராத்திரி விழாவினை பூர்த்திசெய்கிறார்கள்.’

………………………………………………………………………………………………………………….

அனைத்து செல்வங்களும் கிடைக்க லலிதா. பரமேஸ்வரி வழிபாடு

கோயில்களில் குறிப்பிட்ட ஒரு சித்தரை  மட்டும் வேண்டுமானால் தரிசிக்கலாம். ஆனால், இங்கு பாம்பாட்டி சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை  சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர்,  கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர்,  சட்டைமுனி, புலிப்பாணி, காகபுஜண்டர், போகர் ஆகிய பதினெட்டு சித்தர்களையும் ஒரு சேர  தரிசிக்கலாம். எல்லா சித்தர்களுக்கும் அற்புதமான சிலை உண்டு. இவர்களைத் தரிசித்தால், வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று நம் சித்தம்  (மனம்) தெளிவடையும்.

இங்கு ஒரே பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சந்நிதி உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிருந்தா சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளது. நவக்கிரகங்களுக்கு சந்நிதி கிடையாது. 18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி, நவக்கிரகங்களின் சக்திகளையும், செயல்பாடுகளையும் ஏற்று அருள்பாலித்து வருவதால் இவ்வாறு செய்துள்ளனர். இங்கு பசுமடம் உள்ளது. தினமும் அன்னதானம் உண்டு.

இலவச மருத்துவமுகாம், முதியோர்களுக்கு ஆடைதானம் போன்ற சமூக நல திட்டங்களும் நடக்கிறது. திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துகின்றனர். அவர்களே நேரிடையாக பூஜையும் செய்யலாம். சித்தர்களுக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அனைத்து செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில் மாடம்பாக்கம் சென்னை.

நன்றி -தினகரன்

………………………………………………………………………………………………………………………

விஜயதசமி என்றால் என்ன ?

வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.

நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.

அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்

விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.

வட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியைகொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.

எனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.

குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.

 ஜப்பான் நாட்டில் பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை!

Kumar Siva
புத்த மதம் பரப்பப்பட்டதால் இந்து மதம் அழிந்தாலும் இந்து மதத்தின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை. ஜப்பானில் சரஸ்வதி தேவி இன்றும் பூஜிக்கப்படுகிறாள். கல்வி வரம் அருளும் தேவியை உலகம் மறந்து விடுமா என்ன!இங்கே சரஸ்வதி எட்டு கைகளுடன் தாமரை மலரில் வீற்றிருந்து வீணை வாசிப்பது போன்று மிக அழகிய சிலையாக வடிக்கப்பட்டு தொன்று தொட்டு இன்று வரை பூஜிக்கப்படுகிறாள்.பலரின் இஷ்ட தெய்வமாகவும், குழந்தைகளின் மனம் கவர்ந்த கடவுளாகவும் நம் சரஸ்வதி தேவி விளங்குகிறாள்.கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு இன்று சிறப்பு பூஜை செய்து அகம் மகிழ்கின்றனர்.

உலகின் உன்னத ஒப்பற்ற மதம் நம் இந்து மதம்!

அனைவருக்கும் இந்த அடியேனின் சரஸ்வதி சிறப்பு பதிவு சமர்ப்பணம். நன்றி!

நவராத்திரி_எட்டாம்_நாள்‬:-

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான செவ்வாய் கிழமை அன்னை ரத்த பீஜனை வதம் செய்யும் நாளாகும். அந்த அசுரனை வதம் செய்த பிறகு கரும்பு வில் ஏந்தி சுற்றிலும் அனிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் அன்னை துர்க்கை கருணையுடன் வீற்றிருப்பாள்.

இந்த துர்க்கையை நரசிம்ஹி என்கிறார்கள். சில ஊர்களில் நரசிம்மி என்றும் அழைக்கிறார்கள். இந்த அன்னையை வழிபட காசுகளால் பத்ம கோலம் போட வேண்டும். நிவேதனமாக பால் சாதம் படைத்தல் வேண்டும். இவளுக்கு பிடித்த மலர் ரோஜா.

எனவே நரசிம்மியை ரோஜாவால் அர்ச்சனை செய்தல் வேண்டும். ரோஜாப் பூ கிடைக்கா விட்டால் கஸ்தூரி இலை, மருதோன்றி மற்றும் சம்பங்கி பூக்களை பயன்படுத்தலாம். பன்னீர் பூக்களும் உகந்ததுதான். பூஜை நிறைவில் பெண்கள் கும்மியடித்து புன்னாகவராளி ராகத்தில் பாடுவது நல்லது.

அன்று 9-வயது பெண் குழந்தையை மரகத பச்சை மாலைகளால் அலங்கரித்து வழிபட வேண்டும். அந்த குழந்தைகளுக்கு பரிசாக மரகத பொருட்கள், பந்து, ஸ்ரீசூர்ணம், திராட்சை மற்றும் முறுக்கு போன்றவற்றை கொடுக்கலாம். இத்தகைய வழிபாட்டால் சரஸ்வதி மனம் குளிர்ந்து போவாள். நீங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் அன்னை அள்ளி அள்ளி தருவாள்.

வாழ்க_வையகம்‬
‪வாழ்க_வளமுடன்‬
‪நலமுடன்‬

………………………………………………………………………………………………………………….
முனைவர் இரா. இராஜேஸ்வரன்

பராசக்தியே இந்த உலகத்தை உருவாக்குகிறாள்; அவளே எல்லா உயிர்களை யும் காப்பாற்றுகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும்; இந்திரன், சூரியன், அக்னி, வாயு உள்ளிட்ட தேவதை களுக்கும் தங்களுடைய காரியத்தை தானாகச் செய்ய தனிப்பட்ட சக்தி இல்லை. அவர்கள் எல்லாரும் பராசக்தியிடமிருந்து சக்தியைப் பெற்றுதான் தங்களின் கடமைகளை சரிவரச் செய்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரர் “சிவ; சக்த்யா யுக்தோ’ என்ற சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோ கத்தில், “பராசக்தி இல்லை யெனில் பரமசிவனுக்கே சக்தி இல்லை’ என உணர்த்து கிறார்.
த்வயைதத்தார்யதே விச்வம் த்வயைதத் ஸ்ருஜ்ய தேஜகத்/
த்வயைதத் பால்யதே தேவி த்வமத்ஸ்யந்தே ச ஸர்வதா//இந்த உலகம் பராசக்தி யால் உருவாக்கப்படுகிறது. அவளாலே காக்கப்படுகிறது. இறுதியில் அவளாலே சம்ஹாரம் (முடிவு) செய்யப்படுகிறது என்பதை மேற்கண்ட தேவி மாகாத்மிய சுலோகம் தெரிவிஹக்கிறது.”நானே ஜகத்தின் தோற்றத்துக்கும் மறைவுக்கும் காரணம்’ என கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். இவ்விதம் தோற்றுவித்தல், மறையச்செய்தல் போன்ற பணியைச் செய்யும் பரமாத்மாவின் சக்தியே பராசக்தி. இந்த ஜகத்தை தோற்றுவித்ததால் பராசக்திக்கு “ஜகன்மாதா’ என்கிற பெயரும் வந்தது. சக்தியை பெண்பால் இறைவியாக- அதாவது தேவியாக வழிபடுவது நமது இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பாகும். “மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர’ என்கிற கருத்துப்படி தேவி, மஹேஸ்வரன் ஆகிய இருவரும் ஒருவரே. அம்மையும் அப்பனும் ஒருவரே. இதே கருத்தைதான் சௌந்தர்ய லஹரியில்,“சரீரம் த்வம் சம்போ: சசிமிஹிர வசஷாருயுகம்
தவாத்மாநம் மந்யே பகவதி நபாத்மாஜமநகம்
ஆத: சேஷ: சேஷீத்யயம் உபயஸாதாரண தயா
ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸபராந்த் தபரேயோ.’”ஹே பகவதியே! பரமசிவனை  உனது சரீரமாக (உடல்) எண்ணுகிறேன்’ என ஆதிசங்கரர் கூறுகிறார்.பரமசிவனின் இடப்பாதியில் பராசக்தி வீற்றிருக்கிறாள். இந்த அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் இருவர் இருந்தாலும் ஒரே மூர்த்தியாகவே கருதப்படும். பாதி பாதியாக இணைந்த இந்த கோலத்தைப் பற்றி அபிராமி பட்டர்,”உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார்’எனப் பாடுகிறார்.அளவற்ற கருணையுடன்கூடிய அன்னை பராசக்தியானவள், தான் தோற்றுவித்த மனிதர்கள் சுலபமாக வழிபட்டு ஞானமடைய பல பெயர்களுடன் திகழ்கிறாள். கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி என்கிற சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற வடிவங்கள் உண்டாயிற்று.அம்பிகையை “ஸர்வக’ (எங்கும் நிறைந்திருப்பவள்) என லலிதா சகஸ்ரநாமாவளியில் கூறப் பட்டுள்ளது. இதே பொருளில் பாரதியார் காளி ஸ்தோத்திரம் என்கிற கவிதையில்,”யாதுமாகி நின்றாய்- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்’எனப் பாடினார்.ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நவராத்திரி நாயகியான பராசக்தியைப் பற்றி குறிப்பிடும்போது, “அவள் கலியுகத்தில் துர்க்கை என்றும் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள்’  என சொல்லியிருக்கிறார். பராசக்தியின் பரிபூரண அருள்கிடைக்க நவராத்திரி விரத பூஜையைச் செய்தல் அவசியம். இந்த பூஜையின் மகிமையைப் பற்றி பகவான் வேத வியாசர் ஜனமேஜய மகாராஜாவுக்கு விளக்கியுள்ளார்.நவராத்திரியானது வருடத் திற்கு நான்கு முறை வசந்த நவராத்திரி, சாரதா சரன் நவராத்திரி, மகா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என்கிற பெயர்களில் வந்தாலும், சாரதா சரன் நவராத்திரிதான் மிக விசேஷமான நவராத்திரியாகும். இதையே “துர்க்கா பூஜை’ யென அழைப்பதுண்டு. புரட்டாசி மாத சுக்லபட்ச பிரதமையன்று நவராத்திரி பூஜையை முறைப்படி பக்தியுடன் ஆரம்பித்து, மகாநவமி வரை ஒன்பது நாட்கள் ஜகன்மாதாவான அம்பிகையை துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்கிற தேவிகளின் ரூபத்தில் வழிபடவேண்டும். புனிதமான நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் கோவில்களிலும் பூஜை, விரதம், ஹோமம், பாராயணம் என ஒரு பக்கம் வைதீக சம்பிரதா யங்கள் இருந்தாலும், மறுபக்கம் தெய்வம், மனிதன், விலங்கினங்கள், இயற்கை காட்சிகள் போன்ற உருவ பொம்மைகளைக்கொண்டு அழகான கொலுப்படி வைக்கும் மகிழ்ச்சியான சம்பிரதாய நிகழ்வு பாரம்பரியமாக கடைப் பிடிக்கப்படுகிறது.நவராத்திரி நாட்களில் கோவில்களில் தினமும் அம்பிகைக்கு ஹம்ஸ வாஹினி (ப்ராஹ்மி), ரிஷப வாஹினி (மகேஸ்வரி), மயூர வாஹினி (கௌமாரி), கருட வாஹினி (வைஷ்ணவி), சிம்ம வாஹினி, கஜலட்சுமி, வீணா சரஸ்வதி போன்ற பல விதவித அலங்காரங் கள் செய்து சிறப்பு பூஜையைச் செய்வார்கள். ஸ்ரீதேவி பாகவதம், ஸ்ரீ தேவி மாகாத்மியம், துர்க்கா ஸப்தசதி போன்ற அம்பிகைக்கான பாராயணங்கள், சதசண்டி ஹோமம் ஆகியவற்றை முறைப்படி செய்வார்கள். குறிப்பாக பெண்களுக்காக சுமங்கலி பூஜை, திருவிளக்குப் பூஜை, சிறுமிகளுக்காக கன்னியா பூஜை போன்ற சடங்குகளைச் செய்வார்கள்.மீன்கள் தன் கண் பார்வையாலேயே தனது குஞ்சுகளை வளர்ப்பதுபோல, அம்பிகையும் தமது அருட்கண்களால் தம்மை வணங்கும் குழந்தைகளை வளர்க்கிறாள். உலகத்திற்கே தாயான பராசக்தியை நவராத்திரி நாட்களில் விசேஷமாக வழிபடுவது சாலச்சிறந்தது.”எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள சுலோகத்தை ஜெபிப்போம்.யாதேவீ ஸர்வ பூதேஷீ சக்திரூபணே ஸம்ஸ்த்திதா/
நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமோ நம/
————————————————————————————————————————–

ஞான மார்க்கத்துக்கு அத்வைதம் பரப்பிய ஆதிசங்கரர், பக்தி மார்க்கத்துக்கு அறுசமய வழிபாட்டை வகுத்தார். அதில் சக்தி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சிவபெருமானுக்கு வளர்பிறை, தேய்பிறையில் வரும் பிரதோஷம் (13-ஆவது திதி) உகந்ததென்றால், அம்பிகைக்கு அமாவாசை, பௌர்ணமி உகந்த தினங்கள்.

மகாசிவராத்திரியன்று விஷ்ணு ஆலயங்களில் விசேஷங்கள் இருக்காது. அதுபோல வைகுண்ட ஏகாதசியன்று சிவாலயங்களில் விசேஷங்கள் இருக்காது. இவ்விரு ஆலயங்களிலும் பொதுவாக நடக்கும் விழாக்கள் பங்குனி உத்திரம், நவராத்திரி ஆகியவையே. நவராத்திரியின்போது சிவாலயங்களில் அம்பிகைக்கே சிறப்பு ஆராதனைகள் நடக்கும்.

தேவியை நாம் பலவிதங்களிலும் கொண்டாடுகிறோம். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, மாஹேந்திரி, சாமுண்டா என்று ஏழு கன்னியராகவும்; காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா என்று தசமகா வித்யா தேவிகளாகவும்; வனதுர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரீ துர்க்கா, ஜ்வல துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆஸூரி துர்க்கா என்று ஒன்பது துர்க்கைகளாகவும் (வேறு பெயர்களும் உண்டு); சிவ, விஷ்ணு, பிரம்ம சக்திகளாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதியாகவும் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி) வழிபடுகிறோம்.

ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு வகையான ஆற்றல், பயன்கள் என்றாலும், எந்த இஷ்டதெய்வத்தையும் ஆழ்ந்து பணிந்தால் நாம் விரும்பியதைப் பெறலாம் என்பதே பரப்பிரம்ம தத்துவம்.

தாட்சாயணியின் உடற்கூறுகள் பதிந்த தலங்களை 51 சக்தி பீடங்களாக வழிபடுகிறோம். அந்த அன்னையருக்கும் வெவ்வேறு பெயர்கள். நம் தமிழகத்தில் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவத்தலங்களிலும், அன்னைக்கு வெவ்வேறு பெயர்கள். இவற்றில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி (திருவானைக்கா) அகிலாண்டேஸ்வரி ஆகிய மூன்று தல தேவிகளும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார்கள். என்ன காரணம்?

காஞ்சி காமாட்சி

ஏழு மோட்சபுரிகளில் ஒன்று காஞ்சி. சதி தேவியின் ஒட்டி யாணம், தொப்புள் பகுதி விழுந்த சக்தி பீடம். ஆதிசங்கரர் மறைந்த தலம்.

காஞ்சியிலுள்ள 108 சிவத்தலங்களுக்கும் ஒரே தனிக்கோவில் காமாட்சி கோவிலே. அன்னை கம்பையாற்றங்கரையில், வேதமாகிய மாமரத்தினடியில் ஈசனுடலில் பாகம் கேட்டு தவம்புரிந்த தலம். சரஸ்வதியும் (கா) லட்சுமியும் (மா) அவளது கண்கள். (அக்ஷி). எனவே காமாட்சியைத் துதிக்க கல்வி, கலை, பொருள் என யாவும் கிட்டும். காமகோடி- அதாவது ஆசைகள் கோடி இருந்தாலும் பெறலாம். ஆசைகளின் கோடி (இறுதி) எனும் முக்தியையும் பெறலாம்.

மதுரை மீனாட்சி

பாண்டிய அரச தம்பதியர் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, அக்னி குண்டத்திலிருந்து உதித்தவள் மீனாட்சி. ராணியாகப் பட்டமேற்று, சிவனிடமே போருக்குச் சென்று, அந்த சோமசுந்தரனையே மணந்தாள். மதுரையில் மீனாட்சிக்கே முன்னுரிமை. தூப தீப நிவேதன ஆராதனை எல்லாம் முதலில் தேவிக்கே. மீனாட்சி என்றால் மீன்போன்ற கண்கள் உடையவள். மீன் தன் பார்வையாலேயே தூரத்திலிருக்கும் குஞ்சுகளை வளமடையச் செய்யும். அதுபோல தன் கடாட்சத்தாலேயே பக்தர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்குபவள் மீனாட்சி.

திருச்சி அகிலாண்டேஸ்வரிகாஞ்சிபோலவே தேவியானவள் இங்கும் சிவனை பூஜை செய்தாள். எதற்கு?

இந்த அகிலமெங்கும் வாழும் உயிரினங்கள் அனைத்தும் நலமுடன் வாழ்வதற்காக. இங்கு நண்பகல் சிவபூஜையின்போது, அர்ச்சகர் புடவை கட்டி, கிரீடம் தரித்து பூஜை செய்வார். அம்பாளே பூஜிப்பதாக ஐதீகம். வேறெங்கும் காணமுடியாத காட்சி. எல்லா தலங்களிலும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆனால் இங்கு அன்னை உலக நன்மைக்காக சிவபூஜை செய்வதால் கல்யாண உற்சவம் நடத்துவதில்லை.

அன்னை பராசக்திக்கு விநாயகர், முருகன் மட்டுமல்ல; நாம் அனைவரும் குழந்தைகளே. இனம், மதம், மொழி, ஆண்- பெண், உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன் என எந்த பேதமும் இல்லாதவள். ஆழ்ந்த பக்திக்கு லயமாக அருள்பவள். அவள் ஆங்கிலேயருக்கு அருளிய இரு சம்பவங்களைக் காண்போமா…

பீட்டரைக் காத்த மீனாட்சி

1812-ல் ரோஸ் பீட்டர் என்பவர் மதுரை கலெக்டராக இருந்தார். அவர் பிரம்மாண்டமான கோவில் கோபுரங்களைப் பார்த்து பிரமித்தார். சிறப்பாக விழாக்கள் நடைபெறுவதையும், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவதையும் கண்டு நெகிழ்ந்தார். அவர் அயல் நாட்டவரென்பதால் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை. அவர் ஆலய அதிகாரிகளை அழைத்துப்பேசி, மீனாட்சி ஆலய மகிமையையும், பக்திச் சிறப்பையும் உணர்ந்தார். ஆலய விழாக்களின்போது உற்சவ மூர்த்திகள் வீதியுலா வருவதன் தத்துவமென்ன? வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற ஆலயத்துக்கு வர இயலாதவர் களுக்கு தெய்வமே வெளியில் வந்து காட்சி தருவதுதான். இந்த கலெக்டர் போன்றோருக்கும் அது பொருந்தும்.

விழாக்காலங்களில் அன்னை மீனாட்சி அற்புதமான அலங்காரங்களுடன் வீதியுலா வருவாள். நாதஸ்வரம், மேளம், தேவாரப் பாடல்கள் போன்றவை பக்தர்களுக்கு குதூகலமூட்டும். இவற்றையெல்லாம் கண்டு பீட்டருக்கு மீனாட்சிமீது பக்தி உண்டானது. அவரது பக்தியைக் கண்டு பீட்டர் பாண்டியன் என்றே மக்கள் அழைத்தனர்.

ஒருநாள் இரவு அவர் தன்வீட்டு மாடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம். ஒரு சிறு பெண் அவர் அறைக்கு வந்து, “பீட்டர், எழுந்திரு’ என்று உத்தரவிட்டாள். விழித்தெழுந்தார் பீட்டர். வெளியே பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. யாரிந்த சிறு பெண்? அறைக்குள் எப்படி வந்தாள் என்று யோசிக்கும்போதே, “சீக்கிரம் கீழே போ’ என்று அதட்ட லாகச் சொன்னாள். அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து பீட்டர் வீட்டைவிட்டு வெளியேவர, அவர் படுத்திருந்த அறையின் கூரை சரிந்து விழுந்தது. அங்கு அவர் இருந்திருந்தால் நிச்சயம் இறந்திருப்பார். பதட்டத்துடன் அவர் அந்த சிறுமியைப் பார்க்க, ஒரு விநாடி மீனாட்சிபோல் தோற்றம்காட்டி மறைந்துவிட்டாள் சிறுமி. நெருக்குருகி நின்றார் பீட்டர். “மீனாட்சி தேவியே!

சாற்றப்பட்டிருந்த அறைக்குள் சிறு பெண் வடிவில் வந்து, ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி உயிரைக் காப்பாற்றினாயே!’ என்று கண்ணீர் சிந்தினார்.

அதற்கு நன்றி தெரிவிக்க மீனாட்சியின் குதிரை வாகனத்துக்கு தங்கக் காப்பு வழங்கினாராம். அன்னையின் கருணையில் வேற்றுமை உண்டோ?

வில்லியத்துக்கு அருளிய பவானி கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் இடம் திரிவேணி சங்கமம். பிதுர் கடன் செய்ய உகந்த இடம். அதுபோல தமிழகத்தில் காவேரி, பவானி, அமுத நதி கூடும் இடம் பவானி முக்கூடல். அமுத நதி வெளியே தெரியாது. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகள் சூழ அமைந்த தலம். குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர் வழிபட்ட தலம். இதை திருநனா என்றும் சொல்வர். அதாவது எந்த தீங்கும் நண்ணாத தலம். தட்சிணப்பிரயாகை என்று சொல்லப்படும் இத்தலத்திலும் பித்ரு கடன் செய்கின்றனர்.

இங்கு 1802 முதல் வில்லியம் காரோ என்பவர் பத்தாண்டுகள் கலெக்டராகப் பணியாற்றினார். இவர் மனநிலையும் பீட்டரைப் போன்றதே. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவற்றின் பெருமையும், தேவியின் மகிமையும் அவரை மிக ஈர்த்தது. கோவில் அதிகாரிகள், ஆன்மிக அன்பர்களிடம் இனிமையாகப் பழகுவார். அவரை ஆலயத்தினுள் அனுமதிக்காவிட்டாலும், கோவில் மதில் சுவரில் ஒரு துளையிட்டனர். அதன்மூலம் கொடிமரம், பலிபீடம், கருவறை விளக்கு வரை பார்க்கலாம். (அது தற்போதும் உள்ளது.)

அந்த துவாரம் வழியாக தரிசித்தும்; உற்சவ காலங்களில் வீதியுலாவின்போது தரிசித்தும் இன்புற்றார். திருநீறு, குங்குமமும் அணிந்தார். இவ்வாறிருந்த நாளில் பீட்டருக்கு நடந்தது போன்றே இவருக்கும் நடந்தது. ஒரு மழை நாள் இரவில் சிறுபெண்ணாக வந்த பவானி, வீட்டிலிருந்து வில்லியத்தை வெளியேற்றி உயிர்காத்தாள். ஒரு விநாடி பவானியாக காட்சிதந்து மறைந்தாள். சிலிர்ப்படைந்த வில்லியம், நன்றிக்கடனாக அன்னைக்கு தங்கக் கட்டில் ஒன்றை 11-1-1804-ல் வழங்கினார். அதை இப்போதும் கோவிலில் காணலாம். “அந்தர்முக சமாராத்யா’ என்று லலிதா சகஸ்ரநாமம் கூறும். உள்ளன்புடன் வழிபடுப வரைக் காப்பவள் என்று பொருள்.

மகாராஷ்டிர மாநிலத்தில், துல்ஜாபூரில் பவானி கோவில் உள்ளது. மாவீரன் சிவாஜியின் உள்ளம் கவர்ந்த தேவி இவள். இந்த தேவியே சிவாஜிக்கு வீரவாள் கொடுத்தாள். பவானி தேவிக்கென்றே உள்ளங்கவர் சகஸ்ரநாமம் உள்ளது.

ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியின் 22-ஆவது துதியில், “பவானி’ என்னும் நாம மகிமையைக் குறிப்பிடுகிறார்.

“பவானி த்வம் தாஸே மயி
விரத திருஷ்டிம் ஸ கருணம்
இதிஸ் தோதும் வாஞ்சன்
கதயதி பவானி த்வம் இதி
ததைவத்வம் தஸ்மை திஸஸி
நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த பிரம்ம இந்த்ர
ஸ்புட முகுடா நீராஜித பதாம்.’

“பவ’ என்பது சிவனது ஒரு பெயர். பவானி என்றால் அவனது தேவி. “பவ’ என்றால் “அப்படியே ஆகட்டும்’ என்றும் பொருள். பவானி, என்மீது கருணை வை. சாயுஜ்ய பதவியைத் தா. முகுந்த, பிரம்ம, இந்திரன் வணங்கும் உன் பாதத்தில் நான் சேரவேண்டும் என்று கேட்க ஆரம்பிக்கும்போதே- “பவ’ என்றதுமே “அப்படியே ஆகட்டும்’ என்கிறாளாம். என்னே அன்னையின் கருணை!

……………………………………………………………………………………………………………………………………..

 

——————————————————————————————————————————————

……………………………………………………………………………………………………………………………………………………………………………………

வெள்ளிக்கிழமை 28/08/2015
வரலக்ஷ்மி விரதம்

பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?

மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர். வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும். அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள். வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.

……………………………………………………………………………………………………………………

ஆடிப்பூரம்!

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். ஸ்ரீலட்சுமியின் மறு அவதாரமாக, ஸ்ரீஆண்டாள் ஆடிமாதத்தில் அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

இந்த நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்து உபசரித்தால், ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

ஆடிப்பூரம்… ஆண்டாள் தரிசனம்!
இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் உற்சவம்!

படம்: ஆர்.எம்.முத்துராஜ்

நன்றி .Sakthi vikatan

 

ஆடி அமாவாசை- 14-8-2015

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை). ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.

ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும்  சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.

அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப் பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும், அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள் தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டாக்கள் (வேதவிற்பன்னர் கள்) காட்டுவர்.

ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.


டி.ஆர்.பரிமளரங்கன்

சித்ரா பௌர்ணமி எப்படி சித்ரபுத்திரனுக்குரிய நாளாகவும் போற்றப்படுகிறதோ, அதேபோல் வைகாசிப் பௌர்ணமி எமதர்மராஜனையும் போற்றி வழிபடும் நாள் என்று கூறுகிறது சாஸ்திரம்.

தர்மராஜன் என்று போற்றப்படும் காலனான எமன், சூரிய பகவானுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன். இவனது சகோதரன்தான் சனி பகவான்.

எமன் என்றாலே முரட்டு மீசையும், மிரட்டும் பார்வையும், கரிய நிறமும், உயிரைப் பறிக்கும் பாசக்கயிறும் என பயமுறுத்தும் தோற்றம் நமக்குள் தோன்றும்.

அவன் வடிவத்தை இவ்வாறு தான் புராணங்கள் விவரிக் கின்றன. ஆனால் ஒளிமயமான சூரியனுக்குப் பிறந்த மகன் அவ்வாறா இருந்திருப்பான்?

செந்நிற மேனி, கவர்ச்சியான முகம், காந்தக்கண்கள், எடுப்பான நாசி, செம்பவள உதடுகள், முத்துப்போன்ற பற்கள் என பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் அழகிய உருவம்! பல யுகங் களுக்குமுன் இப்படித்தான் காட்சி தந்தான் எமன்.

தேவலோகத்துப் பெண் களையே மயக்கும் பேரழகு பெற்றிருந்ததால், எமதர்மனைக் கண்டு அஞ்சுவதற்கு மாறாக அவன்மீது மோகம் கொண்டனவாம் ஜீவராசிகள். சில தருணங் களில் தனது அழகில் மயங்கி தேவலோகத்துப் பெண்கள் வீசும் காதல் வலையில் எம தர்மன் சிக்கித் தவிக்கவும் நேரிட்டது. இதன்காரணமாக காலதேவன் தனது கடமையை மறந்ததால் பூபாரம் கூடியது. ஒரு கட்டத்தில் மரணமே இல்லாத நிலை ஏற்பட்டது. பார்த்தார் பரமன். உடனடியாக எமதர்மனை அழைத்துவரும்படி ஆணை பிறப்பித்தார். அதன்படி அங்குவந்து பணிந்த எமனிடம், “”எமதர்மா, உன்னைக்கண்டு யாரும் பயப்படுவதில்லை யாமே?”

“”ஆம் பிரபு.”

“”தேவலோகத்துப் பெண் களுடன்…”

“”மன்னிக்க வேண்டும் பிரபு. அவர்கள்தான் என்னைச் சுற்றிவருகிறார்கள்” என்று தலைகுனிந்தான் எமதர்மன்.

அவனது பேரழகே எல்லாவற்றுக்கும் காரண மென்பதைப் புரிந்துகொண்ட பரமன், எமதர்மனின் உருவத்தை மாற்றினார்.

பிறகு, “”எமதர்மா, அதோ அந்தத் தடாகத் திலுள்ள தெளிந்த நீரில் உனது உருவத்தைப் பார்” என்றார்.

எமதர்மன் தடாகத்துக்குச் சென்று நீர்ப்பரப்பைப் பார்த்தான். அதில் தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்து சிவனாரிடம் ஓடோடிவந்தான்.

“”சுவாமி, அந்தத் தடாகத்துக்குள் கோரரூபம் கொண்ட ஒருவன் ஒளிந்திருக்கிறான். அவனது கோரைப்பற்களும் கரிய நிறமும் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. முரட்டு மீசையும் சிவந்த கண்களும் தலையில் கொம்புகளும் புஜபலமும் கூடிய அவன் யார் பிரபு?” என்று கேட்டான். அதைக்கேட்டு கயிலைமலை அதிரச் சிரித்த பரமன், “”காலதேவா, அங்கு எவரும் ஒளிந்துகொண்டிருக்கவில்லை. நீ பார்த்தது உனது உருவத்தைதான்” என்றார்.

“அழகில் தேவர்களை மிஞ்சும் எனது உருவமா இப்படி மாறிவிட்டது’ என்று கலங்கி கண்ணீர் மல்கிய எமன், “”சுவாமி, எனக்கு ஏன் இந்த அலங்கோலம்? நான் பழைய நிலையை அடைய வழியே இல்லையா?” என்றான்.

புன்முறுவல் பூத்த பரமனார், எதுவும் சொல்லாமல் நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

மனம் சோர்ந்த எமதர்மன் மீண்டும் ஒருமுறை சிவனாரை ஏறிட்டுப் பார்த்தான். நிஷ்டையைக் கலைத்தால் சபித்துவிடுவார் என்ற பயத்தில் அங்கிருந்து புறப்பட்டு, பிரம்மாவைக் காண சத்தியலோகம் சென்றான்.

அங்கு ஓலைச்சுவடியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் பிரம்மா. நான்முகனான பிரம்மதேவனைக் கண்டதும், எமதர்மனின் மனதில் ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டது. “இவரே ஐந்து தலைகளில் ஒருதலையை இழந்து அவலட்சணத்துடன் திகழ்கிறார். இவரிடம் பரிகாரம் கேட்பது வீண்’ என்றெண்ணி திருமாலை தரிசிக்கப் புறப்பட்டான்.

வைகுண்டத்தில் கால்வைத்தான் எமதர்மன். அங்கே திருமகளிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் திருமால்.

“மகிழ்ச்சியுடனிருக்கும் தம்பதிக்கு இடையூறு செய்யக்கூடாது’ என்று சிந்தித்த எமதர்மன், பூலோகம் சென்று தவம்செய்து இழந்த அழகை மீண்டும் பெறுவதென்று முடிவுசெய்தான்.

அதன்படி பூலோகம் வந்தவன் தென்திசை நோக்கிப் பயணித்தான். வழியில் ஓரிடம் எமதர்மனை மிகவும் கவர்ந்தது. அங்கு மலையடிவாரத்தில் மகாவிஷ்ணுவை தியானித்து தவத்தில் ஆழ்ந்தான்.

காலம் கடந்தது. எமதர்மனின் தவத்தால் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவன்முன் தோன்றினார்.

தன்முன் நிற்கும் பரந்தாமனைக் கண்டதும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி, “”சுவாமி, என்னைத் தெரிகிறதா?” என்றான். “”எல்லாம் தெரியும் எமதர்மா! அழகனாகத் திகழ்ந்த நீ கடமைகளை மறந்து உல்லாசத்தில் திளைத்ததனால் ஏற்பட்ட விளைவு.”

“”மன்னியுங்கள் சுவாமி. தாங்கள்தான்
எனக்கு விமோசனம் தரவேண்டும்.”

“”வருந்தாதே எமதர்மா! உனது தலையில் முளைத்திருக்கும் கொம்புகள் மறைந்துபோக அருள்கிறேன். அதற்கு பதிலாக கொம்புகளுடன் கூடிய எருமை உனக்கு வாகனமாகும். அத்துடன் ஆயுள் நிறைவடைந்த உயிர்களை எமலோகம் கொண்டுவர உதவியாக பாசக்கயிறு ஒன்றும் தருகிறேன்” என்றார்.

இந்த வரம் எமதர்மனுக்குத் திருப்தி தரவில்லை. “”சுவாமி, எனது கோரைப் பற்களும் மறைந்து நான் பழைய பொலிவுடன் திகழ அருள்புரியுங்கள்” என வேண்டினான்.

“”காலதேவனே, நீ சத்தியலோகம் சென்றபோது பிரம்மனை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டாய். எனவே இந்த கோர உருவமே என்றும் நிலைத்திருக்கும்படி விதித்து விட்டார் பிரம்மா. அவரது விதியை மாற்ற என்னால் முடியாது. ஆனாலும் வருந்தாதே. இந்த கோர உருவம், உலக உயிர்களிடம் உன்மீது பயபக்தியை உருவாக்கும். உனது கோரைப் பற்கள் உலகில் நோய் நொடியை ஏற்படுத்தி மரணத் தொழிலுக்கு உதவிசெய்யும்” என்றார். (ஆடி, புரட்டாசி மாதங்களை எமனின் கோரைப் பற்கள் என்பர்.) இதுதான் தனது விதி என்பதை அறிந்து, ஒருவாறு ஆறுதல் அடைந்தான் எமதர்மன்.

இதை சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கு கிறது திருவாரூர் புராணம்.

“காசியில் இறந்தால் முக்தி; திருவாரூரில் பிறந்தால் முக்தி’ என்று சொல்லப்படுகிறது. பிறப்பும் இறப்பும் நம்வசம் இல்லை. எல்லாம் இறைவன் அருள் என்பர். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் சிவகணங்கள் என்பதால், அங்கு எமதர்மனுக்கு வேலையே கிடையாது. எனவே இத்தலத்தில் எமன் சண்டேஸ்வரர் பதவியை வகிக்கிறார். ஜடை, தாடி முதலியவற்றுடன், ஒரு காலை ஊன்றி முழந்தாளில் தலைவைத்த நிலையில் காட்சிதரும் இவரது அழகிய முகம் சாந்தமாகத் திகழ்கிறது. வழக்கமாக சிவன் கோவிலில் காணப்படும் சண்டிகேஸ்வரரும் இங்கு ஆதிசண்டராகக் காட்சிதருகிறார்.

இத்தலத்தில் மூலவரை தரிசித்தபின், பிராகாரத்தை வலம்வந்தால் ரிண ஈஸ்வரரை தங்க ரூபத்தில் தனிச்சந்நிதியில் தரிசிக்கலாம். இவர் தெற்குநோக்கி எழுந்தருளியுள்ளார். இவரது இடப் பக்கத்தில்தான் எமதர்மனின் தனிச்சந்நிதி உள்ளது. ஆதியில் எமதர்மராஜன் இருந்த திருவுருவம் இதுதான் என்கிறது புராணம்.

ரிண விமோசனரை வழிபட்டு வலம்வரும் போது, எமன் சந்நிதியையும் சேர்த்தே வலம் வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தோற்றத்தில் எமதர்மனை எங்குமே தரிசிக்க இயலாதென்று கூறப்படுகிறது. இந்த எமதர்மராஜனை அர்ச்சித்து வழிபட்டால் நம் கவலைகளும் சோகமும் விலகுமென்பது ஐதீகம்.

அழகனாகத் திகழ்ந்த எமதர்மராஜன், கோர உருவம் பெற்றதன் விவரங்களை அறிந்தோம். இவருக்கென்று தனிசபை உள்ளது.

அங்குதான் எமதர்மராஜனின் தூதுவர்கள் பூலோகத்திலிருந்து இழுத்துவந்த ஜீவன்கள் விசாரிக்கப்படுவார்கள். எமதர்மனின் அருகில் அமர்ந்திருக்கும் சித்ரகுப்தன் அந்த ஜீவன் செய்த பாவ- புண்ணியங்களை எடுத்துக்கூறு வார். அதற்கேற்ப தண்டனை அல்லது சுவர்க்க லோகத்தில் இடம் அளிக்கப்படுமென்று புராணங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் எமதர்மராஜனுக்கு சில இடங்களில் கோவில்கள் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது. இதன் கருவறையில் எருமை வாகனத்தில் மேற்கு திசைநோக்கி நான்கு திருக்கரங்களுடன்  எமதர்மராஜன் அருள்புரிகிறார். கீழ்வலக்கையில் தீச் சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதம் தாங்கியும், இடக்கரத் தில் கதையுடனும் காட்சிதருகிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம் என்கிறார்கள். இங்குவரும் பக்தர்கள் எமதர்மராஜனுக்கு தங்கள் வேண்டுதல்களை கடிதமாக எழுதி, அவற்றை நிறைவேற்ற வேண்டுவர். அந்தக் கடிதங்களை கறுப்புநிற நூலில் மாலைபோல் கட்டி எமதர்மராஜனின் வலக்கையில் அணிவிப்பது இங்கு செய்யப்படும் முக்கிய வேண்டுதலாகும்.

கும்பகோணம் அருகே, நன்னிலம்- குடவாசல் சாலையிலுள்ள அச்சுதமங்கலத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு ஸ்ரீவாஞ்சிநாதர் அருள்புரிகிறார். இக்கோவில் வளாகத்தில் அக்னி மூலையில் எமதர்மராஜனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இத்தல இறைவனான ஸ்ரீவாஞ்சிநாதருக்கு வாகனமாக இருப்பவர் எமதர்மராஜன். இவரை முதலில் வழிபட்டபின்தான் அங்குள்ள மற்ற தெய்வங்களை வழிபடவேண்டுமென்பது விதியாகும்.

இங்குள்ள எமதர்மன் நான்கு கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி, இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் தெற்கு நோக்கி காட்சிதருகிறார்.

அருகில் சித்ரகுப்தனும் உள்ளார். இங்கு எமனுக்கு வாகனமாகத் திகழ்வது நரன்- அதாவது மனிதன்.

கோவை மாநகரில் சிங்காநல்லூர்- வெள்ள லூர் பாதையில் அமைந்துள்ளது சித்ரகுப்த- எமதர்மராஜன் ஆலயம். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில், எமதர்மன் தனது வாகனமான எருமையின்மீது அமர்ந்திருக்க, அருகில் சித்ரகுப்தன் நின்றுகொண்டிருக்கிறார்.

மரணபயம் ஏற்படாதிருக்கவும், திருமணத் தடைகள் நீங்கவும், நீண்ட சுமங்கலி பாக்கியம் பெறவும், விபத்துகள் ஏற்படாமலிருக்கவும், பல தீயசக்திகள் விடுபடவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.

திருச்சி- மண்ணச்சநல்லூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்குள்ள ஸ்ரீஞீலிவனேஸ்வரர் கோவிலில் எமதர்மனை தரிசிக்கலாம். சுமார் பத்தடி ஆழத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் சந்நிதியில், எமன் ஈஸ்வரனின் காலடியில் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். ஒரேசமயத்தில் ஈஸ்வரனையும் எமனையும் தரிசிக்க நீண்ட ஆயுள் கிட்டுவதுடன், ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம். இத்தலம் ஓர் பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா திருக்கோவில், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீமொரட்டாண்டி என்னும் சித்தர் முக்தி அடைந்ததால் அவரது சமாதியும் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் எமதர்மராஜனுக்கு வடதிசை நோக்கிய சந்நிதி உள்ளது. இங்கு, எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கும் எமதர்மராஜன் இரண்டு கரங்களுடன் அருள்புரிகிறார். வலக்கையில் சிறிய சூலாயுதமும் இடதுகையில் கதையுடன் காட்சிதரும் இவரது முகத்தில் சாந்தம் தவழ்கிறது. முரட்டு மீசையோ, அடர்ந்த புருவங்களோ, கோரைப்பற்களோ இல்லாமல், யோக நிலையில் கண்கள் மூடி தவத்திலிருப்பதுபோல் காட்சிதருகிறார். இவரை வழிபட ஆரோக்கியமான வாழ்வு கிட்டுமென்பர்.

வைகாசிப் பௌர்ணமியன்று எம தர்மராஜன் அருள்புரியும் கோவிலுக்குச் சென்று அவரை வழிபட்டால் எமபயம் நீங்கும். இறுதிக்காலத்தில் எமவாதனை இருக்காது. மேற்சொன்ன ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவன் கட்டுப்பாட்டிலிருக்கும் எமதர்மராஜனை நினைத்து வழிபட, சகல பாக்கியங்களும் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சர்வ வியாபியான மகாவிஷ்ணுவைப் பற்றி விஷ்ணு புராணத்தில், “விசோதாதோ; ப்ரவேசனாத்’ என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. எங்கும், எப்பொழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாவிஷ்ணுவைப் பற்றி எல்லாரும் உணரவேண்டும் என்பதற்காகவும், தனது பக்தனைக் காக்கவும் மகாவிஷ்ணு சுவாதி நட்சத்திரத் திருநாளில் நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். நரசிம்மரை ஆழ்வார்கள் பலவாறு போற்றி வழிபட்டுள்ளனர். அதில் குறிப்பாக ஆண்டாள்,

“அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழி’

என்றும்;

திருமங்கையாழ்வார்,

“தூணா யதனூடரியாய் வந்து தோன்றி
பேணா வவுண னுடலம் பிளந்திட்டாய்!
சேணார் திருவேங்கட மாமலைமேய
கோணா கணையாய் குறிகொள்ளெனை நீயே!’

என்றும்;

“மகரம் வளருமளவில் பௌவம்
அடையவுற்ற லைத்தனை
வடிவு கமடமென வமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியும சுரனுரமிடத்து வசுதையைப் பெயர்த்தனை
வலிகொ ளவுணனுடல் பிளந்து மதலை மெய்க்குதித்தினை’

என ஸ்ரீவேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைணவச் சான்றோர் பாடியுள்ளனர்.

நரசிம்ம அவதாரத்தின் கதை அனைவரும் அறிந்ததே. அதாவது, இரண்ய கசிபு என்பவன் ஓர் கொடிய அசுரன். அவனது மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தன். இரண்ய கசிபு மகாவிஷ்ணுவைத் தனது பரம எதிரியாகக் கருதியவன். பிரம்மா தந்த வரத்தால் உலகையே ஆட்டிப்படைத்தான். தேவர்களைக் கொடுமைப்படுத்தியவன்; பல பாவ காரியங்களைச் செய்தவன்; மகாவிஷ்ணுவை வணங்கிய தனது மகனையே கொல்ல முற்பட்டவன். தனது பரம பக்தனைக் காக்க, மகாவிஷ்ணு சிங்கமுகத்துடன் மனித உருவில் வந்து இரண்ய கசிபுவை அழித்தார். இப்படிப்பட்ட செய்திகளைச் சொல்லலாம்.

இந்தக் கதையை மேலேட்டமாகப் பார்க்கும்போது, நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் என்பது “துஷ்ட சம்ஹாரமும்; சிஷ்ட பரிபாலனமும்’ எனத் தெரியும். ஆனால் இந்தக் கதையின் உண்மையை சற்று புதிய கோணத்தில் ஆராய்ந்து பார்த்தோமானால் நான்கு முக்கிய காரணங்கள் புலப்படும்.

✷ துன்பத்திலும் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.

✷ தீயதைச் செய்தால், அவன் சக்கரவர்த்தியாக இருந்தாலும் இறைவனிடம் தண்டனை நிச்சயம்.

✷ பக்தனை இறைவன் என்றும் கைவிட மாட்டார்.

✷ இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதாகும்.

முதலாவதாக, இரண்ய கசிபு தனது எதிரியான மகாவிஷ்ணுவை தனது மகன் துதித்ததால் அவனை பலவகையில் கொடுமை செய்தான். ஒரு கட்டத்தில் கொல்லவே துணிந்தான். இப்படியாகப் பல சித்திரவதைகளையும்  துன்பங்களையும் அனுபவிக்கும் நேரத்திலும், பிரகலாதன் தனது முடிவில் சற்றும் மாறாமல் திருமாலை தொடர்ந்து துதித்தவண்ணம் இருந்தான். இந்த செயலைப் போற்றவேண்டும்.

காரணம், பொதுவாக தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்கும்போது, இறைவன் நம்மைக் காக்கவில்லையே என்று வெறுப்புண்டாகும். நாத்திக வாதம் வெளிப்படும்.

அங்ஙனமின்றி பிரகலாதன் தூய பக்தியுடன் திருமால்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தான். இந்த மனப்பாங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நரசிம்ம அவதாரம் காட்டுகிறது.

இரண்டாவதாக, இரண்ய கசிபு தனது அரச பதவியையும், பிரம்மா கொடுத்த வரத்தையும் ஒரு கவசமாகக்கொண்டு பல அக்கிரமங்களைச் செய்தான். பூமியெங்கும் தனது பெயரைத்தான், இறைவன் பெயர் போன்று உச்சரிக்க வேண்டுமென கட்டளையிட்டான். மகாவிஷ்ணுவை தனது முதல் எதிரியாகவே பாவித்தான். தேவர்களையும் மக்களையும் பல வகையில் துன்புறுத்தினான்.

இப்படியாகப் பல அதர்மச் செயல்களையே செய்தது மட்டுமின்றி, தனது மகனையே கொல்லத் துணிந்தான். தர்மநெறியைத் தவறி நடக்கும் நபர்கள் தங்களின் பதவி, அந்தஸ்து, பட்டம் போன்றவற்றைக் கொண்டு தண்டனையிலிருந்து தப்பிக்க முயலுவதுண்டு. அங்ஙனமின்றி தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம் என்பதை அசுர குலத்தின் அரசனான இரண்ய கசிபுவைக் கொன்றதன் மூலம் நிரூபித்தார். அனைவரும் அறவழியில்தான் செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது நரசிம்ம அவதாரம்.

மூன்றாவதாகத் தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களை, சகல பாவங்களிலிருந்தும் துன்பத்திலிருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பது நிரூபிக்கப்படுகிறது. இதையே கண்ணன் பகவத் கீதையில் சொல்கிறான்.

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சச//

(எல்லா தர்மங்களையும் விட்டு, என் ஒருவனையே சரணமாக அடைவாயாக. நான் உன்னை சகல துன்பத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்).

நான்காவதாக, மகாவிஷ்ணு தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார். இதைத் தான் பாரதியார் தனது கவிதையில்,

“சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே? சொல்லென்று
ஹிரணியன்தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான்- தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளன் என்றான்!
வல்லப் பெருங்கடவுளிலா அணுவொன்றில்லை!’

என பாடியுள்ளார். தனது பக்தன் பிரகலாதனின் வாக்கை நரசிம்மர் மெய்ப்பித்துக் காட்டினார்.

இதேபோன்று ஓர் சம்பவம் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. ஸ்ரீ சங்கரரை காபாலிகன் ஒருவர் பலிகொடுக்க முற்பட்டபோது, ஸ்ரீ சங்கரரின் சீடரான பத்மபாதர் தமது இஷ்ட தெய்வமான நரசிம்மரை வேண்டவே, உக்கிரமான வடிவில் நரசிம்மர் தோன்றி காபாலிகனைக் கொன்று ஸ்ரீ சங்கரரைக் காப்பாற்றினார்.

எங்கெங்கும் வியாபித்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது நரசிம்ம அவதாரம்.

இப்படியாக, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் ஒவ்வொரு அவதாரத்தையும், திருவிளையாடல் நிகழ்வையும் ஏதோ கதை என்றோ கற்பனை என்றோ பாராமல், அந்த நிகழ்வின் மூலம் சொல்லவரும் கருத்தையும் காரணத்தையும் அறிந்துகொள்வது அவசியம். அதுமட்டுமின்றி அதில் புதைந்திருக்கும் தத்துவ உண்மையின்படி நடக்க முயற்சிக்கவேண்டும்.

இறைவனுக்கு செய்யும் பூஜையில் அபிஷேகமே தலையாயது என்று கடந்த இதழில் கண்டோம். அதுபற்றி ஆகமங்கள் கூறும் நியதிகள் சிலவற்றை இங்கு காண்போம்.

பொதுவாக அபிஷேகம் என்பது தெய்வ சிலாரூபங்களிலுள்ள அழுக்குகளைப் போக்குவதற்காகக் கூறப்படவில்லை. அபிஷேகத்தால் தெய்வத் திருமேனியில் பிரபஞ்ச அருட்சக்திகள் வேகமாகத் தோயும்.

அதன்மூலம் தெய்வச்சிலையிலும் அதனடியிலுள்ள யந்திரத்திலும் இறைசக்தியானது வியாபித்து நிற்கும். அதன் காரணமாகவே அபிஷேகத்திற்கான பலவகை திரவியங்கள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.

அதேசமயம், அபிஷேகப் பொருளுக்குரிய எட்டுவித சமஸ்காரங்களைச் செய்யாமலும், அவற்றில் மந்திர உருவேற்றாமலும், அபிஷேகத்தின்போது சொல்லவேண்டிய மந்திரங்களை ஓதாமலும் கடனே என்று செய்யும் அபிஷேகத்தினால் பயனிராது. ஆகவே ஆலயங்களில் அபிஷேகம் செய்விக்கும் அன்பர்களும் அதிகாரிகளும் முறைப்படி திருமஞ்சனம் செய்யுமாறு அர்ச்சகரிடம் வற்புறுத்தவேண்டும். அவர்களுக்கு உதவியாக தகுதியுடையவர்களை நியமிக்கவேண்டும். அவர்களுக்குத் தக்க வெகுமதியும் அளிக்க முன்வரவேண்டும்.

விதிப்படி அபிஷேகம் நடைபெறு மாயின், இறை பிம்பத்திலும் யந்திரத்திலும் சேமிக்கப்பட்டுள்ள தெய்வீக சக்தி வசீகர அருள்பிரகாசத்தைக் கொடுக்கும். அடியார் களுக்கு அருள்செய்வது பிம்ப சக்தியும் யந்திர சக்தியுமே என்பதை நாம் உணரவேண்டும்.

பால், தயிர், தேன், இளநீர், பஞ்சகவ்யம் என பலவகை அபிஷேக திரவியங்கள் உள்ளன. இவற்றின் சிறப்பை தேவார மூவரும் தம் பாடல்களில் குறித்துள்ளனர். அப்பர் சுவாமிகள் பஞ்சகவ்ய அபிஷேகத்தைக் குறிப்பிடும்போது-

“பாவமும் பழிப் பற்றற வேண்டுவீர்
ஆவிலைஞ் சுகந் தாடுமவன் கழல்
மேவராய் மிகவும் மகிழ் துள்குமின்
கூவாளன் கலந் தருள் செய்யுமே’

என்கிறார். நமது பாவங்களும் பழிகளும் பஞ்சமா பாதகக் குற்றங்களும் நம்மைவிட்டு நீங்கிட ஆவிலஞ்சு (பஞ்சகவ்யம்) அபிஷேகம் செய்ய வேண்டுமென்கிறார். இது அவனுக்கு மிகவும் விருப்பமானது என்றும் குறிப்பிடுகிறார். பசுவின் பால், தயிர், நெய், எரு, நீர் ஆகியவையே பஞ்சகவ்யம் எனப்படும். இவற்றுடன் பசுவின் கோரோசனையும் சேர்த்து ஷடாங்க மந்திரங்களால் அபிஷேகிப்பர். இது ஷடகவ்யம் எனப்படும். (கன்று குடித்தபின்பு பசுவின் மடியை நீரால் கழுவாமல், கன்றின் எச்சத்துடனே பாலைக் கறக்கவேண்டும். இந்தப் பாலே சிவனுக்கு விருப்பமானதாகும்.)

பாவத்தை அழிக்கவும், எல்லாவிதமான கெடுதல்களைப் போக்கிக் கொள்ளவும், சகல சாப தோஷங்களிலிருந்து விடுபடவும், ஆயுள் முடிவில் இறைவனின் திருவடி நிழலை அடையவும் பஞ்சகவ்ய அபிஷேகம் துணை நிற்கும்.

பல கொடிய நோய்கள் துன்புறுத்தும் காலத்திலும், பெரும்பயம் ஏற்படும்போதும், பீடை காலத்திலும், மற்ற நாடுகளால் அச்சுறுத்தப்படும்போதும், கெட்ட சகுன அறிகுறிகள் தென்படும்போதும், மகாமாரியின் கோபத் தால் வரும் அம்மை, வைசூரி, வறட்சி ஏற்படும்போதும், திசைகள் தீப்பற்றி எரியும்போதும், அமங்கலம், தொல்லை, கலக்கம் ஏற்படும்போதும், மழையின்றி பஞ்சமேற்படும் காலங்களிலும், மாதப்பிறப்பு, கிரகணம் முதலான காலங்களிலும் மற்றும் சிறப்பு புண்ணிய காலங்களிலும் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யவேண்டுமென பூர்வ காரணாகமம் குறிப்பிடுகிறது.

தூய நீரால் செய்யப்படும் அபிஷேகம் மனசாந்தியைத் தரும். தைலாபிஷேகம் இன்பம் தரும். பஞ்சாமிர்தம் ஐஸ்வர்யத்தையும், வாழைப்பழ அபிஷேகம் பயிர் வளத்தையும், பலாப்பழம் உலக வசீகரத்தையும், மாம்பழம் சகல வெற்றிகளையும், மாதுளை கோப சாந்தியையும், கரும்புச்சாறு வருத்தம் போக்கியும், சாத்துக்குடி, நாரத்தம்பழ அபிஷேகம் அமைச்சர் பதவியையும் தரும்.

எலுமிச்சம் பழ அபிஷேகம் எமபயம் போக்கும். சர்க்கரை சத்ருக்களை அழிக்கும். இளநீர் அபிஷேகம் ராஜ்ஜியத்தைத் தரும். பசும்பால் அபிஷேகம் விரும்பிய பயனையும், அழகு, செல்வம், மகப்பேறு போன்றவற்றை தயிராபிஷேகமும், தேனாபிஷேகம் சிறந்த சங்கீத ஞானத்தையும், அறிவு, ஆயுளை நெய்யபிஷேகமும், பன்னீர் அபிஷேகமானது திசைகளில் வெற்றியையும் தரும். இவ்வாறு மேலும் பல பொருட்களும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன.

ஐப்பசி பௌர்ணமியில் மிகச்சிறப்பிக்கப்படு வது அன்னாபிஷேகமாகும். “அன்னம் என்பது உயிர்சக்தியை உள்ளடக்கிய சிறந்த உணவாகும்.

அனைத்துயிர்களிடமும் ஜீவன் நிலைத்திருப்பது அன்னத்தால்தான். ஆகவே அன்னத்தால்  செய்யப்படும் அபிஷேகமானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். எனது மற்றொரு உருவமே அன்னம். அதுவே எனது சிறப்பு வடிவமுமாகும். அன்னாபிஷேகத்திற்கு மேலாக எதுவுமில்லை; எதுவும் இருக்கப்போவதுமில்லை. அன்னபூஜையே மிகச்சிறந்ததாகும். எனவே அனைத்து வகை பெருமுயற்சிகளாலும் அன்னாபிஷேகத்தைச் செய்திட வேண்டும்’ என்று இறைவனே பூர்வ காரணாகமத்தில் அருளியுள்ளார். “அன்னமும், அன்னத்தை உண்பவனுமான பிரம்மமும் நானே’ என்று வேதம் கூறுகிறது. மந்திரத்துடன் அன்னத்தை சமைத்து நிவேதனம் செய்வதும்; அபிஷேக அலங்கார பூஜையின் முடிவில் அன்னப் பெரும்படையல் அளித்தலும் அன்ன பூஜையாகும்.

சங்கினால் அபிஷேகம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. சங்கு என்பது நாதத்தை உடையதாகையால், ஜீவனுள்ள பாத்திரமாய் சிறப்பு பெறுகிறது. கடல், நதி, குளம் ஆகியவற்றுள் தோன்றும் சங்குகள் வரிசைப்படி தரத்தைப் பெறுகின்றன. தாமிரபரணி நதியில் தோன்றுவது உத்தம சங்கு. கங்கையில் தோன்றுவது மத்திமம். நர்மதையில் தோன்றுவது கன்யச சங்கம். இடம்புரிச் சங்கை விட வலம்புரிச்சங்கு மேலானது. இவற்றில் ஒருபடி நீர்பிடிக்கும் சங்கு உத்தம சங்காகும். இந்த சங்கின் அமைப்பால் ஆண்- பெண்- அலி என்று மூன்று வகைப்படுகிறது. அடிப்பகுதி பருத்திருந்தால் பெண் சங்கு. முனைப்பகுதி பருத்திருந்தால் அலி சங்கு. மத்திய பகுதி பெருத்திருப்பதே ஆண் சங்கு. இதனை சூட்சும ஆகமம் விளக்கு கிறது.

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று; பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகள்; ஏழு கடல்கள், அனைத்து நதிகள், அனைத்து புண்ணிய தீர்த்தங்கள் ஆகியவற்றின் அம்சங்கள் சங்கில் நித்யமாய் விளங்குகின்றன. சங்கிலிருக்கும் நீருக்கு மட்டுமே தீர்த்தம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. மற்ற பாத்திரங்களிலுள்ள நீர் வெறும் நீர்தான். எனவே விசேஷ அர்க்கியத்துக்கு சிறப்பு பூஜாபாத்திரமாக சங்கே விளங்குகிறது.

மூன்று தத்துவரூபமான முக்காலியின்மீது, ஆதிகூர்மமான ஆமையின் முதுகில் அனந்த பத்மாசனத்தின்மீது சங்கை வைத்து, அதில் நீர்நிறைத்துப் பூஜித்து, பின்பு அந்த நீரை அபிஷேகத்துக்கும் பூஜைக்கும் பயன்படுத்தலாம். சங்கு இல்லாதபோது சங்கு வடிவ முத்திரையாவது காட்டப்பட வேண்டும். சங்கினால் அல்லது சங்கு வடிவ முத்திரையால் செய்யப்படுவதே சிறந்த அபிஷேகமாகும்.

பன்னிரு மாதங்களிலும் வரும் திருவாதிரை நாள், தேய்பிறையில் வருகிற சிவ திதியாகிய சதுர்தசி, அஷ்டமி திதி மற்றும் சிறப்பு பூஜைக்காலங்களில்  புதியதும் உருக்கியதுமான பசுநெய்யால் அபிஷேகம் செய்யவேண்டுமென சைவாகமங்கள் விதித்துள்ளன. (இதனுடன் கோஷ்ணோதகம் எனப்படும் இளஞ்சூடான நீராலும் அபிஷேகம் செய்யவேண்டும்.) அக்னியின் வடிவாய் விளங்கி நமக்கு நீண்ட ஆயுளைத் தருவது பசு நெய்யாகும். கல்பகோடி வருடங்களாக செய்து நாம் சேர்த்துவைத்துள்ள பாவங்களெல்லாம் முறையாக நாம் செய்யும் ஒரேயொரு நெய்யபிஷேகத்தால் அழிந்துவிடும் என்கிறது சிவாகமம்.

அபிஷேகத்தால் அழியும் பாவங்கள் பற்றி சிவதருமோத்ர ஆகமம் பின்வருமாறு கூறுகிறது.

தூய தண்ணீரால் செய்யப்படும் அபிஷேகமானது பத்து பாவங்கள் வரை போக்கும். பாலாபிஷேகம் நூறு பாவங்களையும், தயிராபிஷேகம் ஆயிரம் குற்றங்களையும், தேனாபிஷேகம் பத்தாயிரம் அபராதங்களையும் போக்கும். பசுநெய் அபிஷேகம் ஒரு லட்சம் பாவங்கள் தீர்க்கும். மூன்று லட்சம் தோஷங்களை வெண்கரும்புச்சாறு அபிஷேகமும், கோடி பாவங்களை இளநீர் அபிஷேகமும் தீர்க்கும். எண்ணிலடங்கா பாவங்களை அரைத்த சந்தனக் குழம்பின் அபிஷேகம் அழித்துவிடும்.

இவ்வாறு அபிஷேக திரவியங்களும் முறைகளும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.

அபிஷேக முடிவில் மெல்லிய பருத்தித் துணியால் ஆண்டவனின் திருமேனியைத் துடைத்துவிட வேண்டும். பின்னர், சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, விளாமிச்சம் வேர் ஆகிய ஆறு பொருட்களையும் அரைத்து, அந்த சுகந்த பரிமள திரவியங்களை ஒன்று சேர்த்துக் குழைத்து பூசிவிடவேண்டும். பின்னர் புதிய அல்லது துவைத்து உலர்த்திய ஆடையை சுவாமிக்கு அணிவிக்கவேண்டும்.

அபிஷேக காலம், நிவேதனம் செய்யும் காலம், ஆடை, சந்தனம், மலர்கள் சாற்றி அலங்காரம் செய்யும் காலம் ஆகியவை பூஜாகாலம் எனப்படும்.

இந்தக் காலங்களில் சந்நிதியைத் திரையிட்டு மறைக்கவேண்டியது அவசியம். ஏனெனில் பாவிகள், கடும் நோயாளிகள், கல்வி நிந்தை செய்வோர், சாஸ்திரங்களைப் பழிப்போர் போன்றோர் மேற்சொன்ன தெய்வ விசேஷங்களைக் கண்டால் பூஜை பயனற்றுப்போய்விடும்.

“பிரச்சந்நபட காலே நகர்த்தவ்யம் லிங்க தர்சனம்
பிரமாதாத் தர்சனம் கிருத்வா சாக்ஷயம் நரகம் விரஜேத்’

என்கிறது வீராகமம். அதாவது திரை போட்டி ருக்கும் காலத்தில் தரிசனம் செய்யக்கூடாது. அவ்வாறு தரிசித்தால் குறைவற்ற நரகம் கிட்டும் என்கிறது.

எனவே திரைபோட்டி ருக்கும் காலத்தில் எட்டிப்பார்ப்பது போன்ற காரியங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். திரை நீக்கியபின் தரிசித்து பேரானந்தம் கொள்ளலாம்.

அபிஷேகம், அர்ச்சனை, தூபதீபம், ஹோமம் போன்றவற்றைச் செய்யும்போது அதற்கேற்றபடி மந்திரம் சொல்வர். அந்த மந்திர வாக்கியத்தின் முடிவில் ஏழு மந்திர பல்லவங்களை உரியபடி இணைத்துச் சொல்லவேண்டும். சப்தகோடி மகாமந்திர பல்லவங்கள் எனப்படும் அந்த ஏழு மந்திரங்கள் நம:, ஸ்வாஹா:, ஸ்வதா:, ஹும்:, பட்:, வஷட்:, வௌஷட் அல்லது சுவௌஷட்: என்பவையாகும். உதாரணமாக, தூபதீபம் காட்டும்பொழுதும், நிவேதனம் செய்யும்பொழுதும், ஹோமத்தில் ஆகுதி செய்கிறபொழுதும் சுவாஹா என்பதை மந்திரமுடிவில் உச்சரிப்பார்கள். அதுபோல அபிஷேக காலத்தில் நம: என்பதை உச்சரிக்கவேண்டும்.

இவ்வாறு முறையான அபிஷேகங்கள் உலகமக்கள் அனைவருக்கும் நன்மை தரும்; தேசங்களையும் செழிப்புடையதாக்கும்.

(தொடரும்)

மதம் என்பது ஒருவகை வாழ்க்கை நெறியே ஆகும். அந்த வாழ்க்கை நெறிக்குத் தேவைப்படுவது நல்லொழுக்கம், நற்சிந்தனை, நன்னெறி போன்ற அறநெறிகள். இந்துமதத்தில் “தர்மம்’ என்பது அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லாகும். தமிழில் இதை “அறம்’ எனக் கூறுவதுண்டு. “அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம்…’ என்கிற நற்றிணை பாடற்குறிப்பும், “நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்’ என்கிற மணிமேகலை பாடற்குறிப்பும், “அறம் செய்ய விரும்பு’ என்கிற ஔவையாரின் ஆத்திச்சூடி மூலமும் அறத்தின் பெருமையை உணரலாம். அறத்தில்தான் அனைத்துமே இருக்கின்றன என்று வேதங்கள் உபதேசிக்கின்றன. தர்மத்தின்படி மனிதன் நடக்கவேண்டுமென்பதை “தர்மம் சர’ என தைத்திரீய உபநிஷத் வலியுறுத்துகிறது. தர்மம்தான் வேதத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. அந்த வேதம்தான் நம்முடைய வாழ்க்கை நெறியை வகுக்கிறது. வாழ்க்கைக்கு நல்ல பயனைத் தரக்கூடிய அம்சங்களை நமக்கு அறிவிப்பவையே வேதங்கள்.

“வேதத்தை விட்ட அறம் இல்லை
வேதத்தில் ஓதத் தகும் அறமெல்லாமுள- தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே’

எனத் திருமூலரின் பாடல்மூலமும் இதை அறியலாம். வேதம்தான் ஒவ்வொரு மதத்திற்கும் ஆணிவேராக உள்ளது. “பைபிளை’ ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள் கிறிஸ்துவர்கள்; “திருக்குர்-ஆன்’-ஐ ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள்; “குரு கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள் சீக்கியர்கள். இதுபோல், வேதத்தை ஆதாரமாகக்கொண்டு வாழ்பவர்கள் இந்துக்கள். வேதத்திற்கு சமஸ்கிருதத்தில் “ச்ருதி’ என்கிற பெயரும் உண்டு. “ச்ருதி’ என்றால் கேட்பது அல்லது கேட்க வைப்பது என்று பொருள்படும். இந்த வேதங்கள் எந்தவொரு மனிதராலும் எழுதப்பட்டவையல்ல. பரம்பொருளான சிவனிடமிருந்துதான் வேதங்கள் தோன்றின. “யஸ்ய நிஸ்வஸிதோ வேத:’ வேதம் ஈஸ்வரனின் மூச்சுக்காற்று. ஆகவேதான் வேதமும் இறைவனும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் “வேதா; சாஸ்த்ரா; மமை வாக்ஞா’ எனக் கூறியுள்ளார். அதாவது வேதங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் என் கட்டளை என்பதே இதன் பொருள்.

“ஈர விறகைக்கொண்டு மூட்டிய தீயிலிருந்து எழும் புகை எவ்வாறு மேகக்கூட்டம் போல பிரிந்துசெல்லுமோ, அவ்வாறே பரமாத்மாவிலிருந்து வேதங்கள் தோன்றின. இவை பரமாத்மாவின் மூச்சுக்காற்றேயாகும்’ என பிருஹதாரண்யக உபநிஷத்தில் யாக்ஞவல்கிய மகரிஷி கூறியுள்ளார்.

எந்தவொரு தனிமனிதனாலும் வேதங்கள் இயற்றப்படாததால் வேதத்திற்கு “அபௌருஷேயம்’ என்கிற பெயரும் உண்டு. பரமேஸ்வரன் வேதத்தை பிரம்மாவுக்கு முதலில் உபதேசம் செய்தார் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. பின்னர் படிப்படியாக ரிஷிகள் தங்களின் தவசக்தியாலும், ஞானத்தாலும் உணர்ந்தனர். குருகுலத்தில் குரு- சிஷ்யன் என்ற உறவுமுறை மூலம் காலம்காலமாக தொன்றுதொட்டு- பரம்பரையாக உபதேசிக் கப்பட்டது.

வேதங்கள் இன்றும் அழிவில்லாமல் நிலைத்துநிற்கின்றன. இதைத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

“ஆதி யந்த மரியென யாவையும்
ஓதி னாரல கில்லன வுள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி…’

எனக் கூறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகள் வரை எழுதப் படாமல், தமிழில் சொல்லப்படுவதுபோல “எழுதாக் கிளவி’யாகவே வேத மந்திரங்கள் முன்பு இருந்தன. பின்னர் ஓலைச்சுவடிகள் மூலம் இயற்றப்பட்டன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று வேதங்கள் புத்தக வடிவிலும், கணினி வடிவிலும் உருப்பெற்றன.

வேதங்கள் ஞான காண்டம், கர்ம காண்டம் என இருவகைப்படும். ஞான காண்டம் என்பது பரம்பொருளான பிரம்மத்தைப் பற்றிய தெளிவைத் தருவது. கர்ம காண்டம் என்பது இந்திரன், வாயு, அக்னி முதலான தேவதைகளைப் பூஜிப்பது.

வேதங்கள் எல்லாக் காலத்திலும் நிலைத்திருக்க வேண்டி, வேத வியாசர் வேதத்தை ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனும் நான்காகப் பிரித்து, அவற்றை முறையே ஸுமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் என்கிற நான்கு சீடர்களுக்கு உபதேசித்தார். இவர்கள் தங்களுடைய சீடர்களுக்கு உபதேசித்தனர்.

இப்படியாக வழிவழியாகக் காதினால் கேட்டு, வாக்கினால் ஸ்வர சுத்தமாய் அத்யயனம் (மனப்பாடம்) செய்யப்பட்டு பரம்பரை பரம்பரையாக வேதங்கள் வந்து கொண்டி ருக்கின்றன.

21 சாகைகள் (கிளை), சுமார் 10,500 மந்திரங்களைக் கொண்ட ரிக்வேதம் அக்னி, இந்திரன், வாயு போன்ற தேவதைகளைத் துதித்தல் பற்றியும், பல வேதாந்த விஷயங்களையும் கவிதை நடையில் கூறுகிறது.

101 சாகைகளைக் கொண்ட யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என இரு பிரிவுகள் உண்டு. யஜுர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ர மந்திரமாகும். யாகங்களைச் செய்து இறைவனை எப்படித் துதிக்கலாம் என்பதை மையமாகக் கொண்டு உரைநடை வடிவில் கூறுகிறது.

1,000 சாகைகளைக் கொண்ட சாம வேதத்தை கானவேதம் என்றும் கூறுவார்கள். உலகிலுள்ள ஜீவன்களை வாழவைக்கும் பல்வேறு தெய்வங்களை இசையுடன் துதித்தலை சாமவேதம் உணர்த்துகிறது. தற்கால சங்கீதம் சாமவேதத்திலிருந்தே பிறந்ததாக சங்கீத வித்வான்கள் கூறுவார்கள். சாம வேதத்தைப் பற்றிய அதிகமான நூல்கள் டச்சுக்காரர்களால் அச்சிடப்பட்டன. பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் நூலாக அச்சிடப்பட்டன.

ஒன்பது சாகைகளும் சுமார் 6,000 மந்திரங்களையும் கொண்ட அதர்வண வேதம் உலகியல் வாழ்வுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை எப்படித் தீர்ப்பது போன்ற விஷயங்களைக் கொண்டதாகும். நான்கு வேதங்களுக்கும் முக்கியமான நான்கு மகாவாக்கியங்கள் உள்ளன.

அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்).

தத்வமஸி (நீதான் அது).

சுயம் ஆத்மா ப்ரம்ம (உள்ளே வசிக்கும் ஆத்மாவே பிரம்மம்).

ப்ரஞானம் பிரம்ம (உயர்ந்த அறிவே பிரம்மம்).

இந்த வேதங்களைக் காப்பாற்ற வேதத்தின் அங்கங்கள் வகுக்கப்பட்டன. அவற்றுள் “சிக்ஷா’ (சிட்சை) என்பது எழுத்துக்களின் உச்சரிப்பையும், அவற்றை ஒலிக்கவேண்டிய தன்மையையும் உணர்த்துகிறது. “கல்பம்’ என்பது யாகங்கள் உள்ளிட்ட மதச் சடங்கு களை விளக்குகிறது. “வியாகரணம்’ என்பது இலக்கணத்தை விளக்குகிறது. “நிருக்தம்’ என்பது சொல்லிலக்கணத்தை விளக்குகிறது. “சந்தஸ்’ என்பது செய்யுள் விதிகளையும், அவற்றை உச்சரிக்க வேண்டிய அளவுகளை யும் விளக்குகிறது. கடைசியாக “ஜோதிஷம்’ என்பது ஜோதிட, கணித சாஸ்திரங்களை விளக்குகிறது. நான்கு வேதங்களுக்கு நான்கு உப வேதங்கள் உள்ளன. அவை, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்தசாஸ்திரம் முதலியன. இப்படியாக பதினான்கு நூல்களும் “வித்யாஸ்தானங்கள்’ எனக் கூறப்படுகின்றன. இவையே இந்து மதத்தின் அடிப்படையான வேத நூல்களாகும்.

இந்து மதத்தின் அடிப்படையான அம்சங்களை விளக்கும் தத்துவ நூல்களை “பிரஸ்தானத்திரயம்’ என்று கூறுவார்கள். அவை உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றுமாகும்.

நான்கு வேதங்களுக்கு அடுத்தபடியாக இருப்பது வேதத்தின் சாரமான உபநிஷத்துகள். (உபநிடதங்கள்). இவை வேத தத்துவ சிந்தனைக்கு மணிமகுடமாகத் திகழ்கின்றன. முன்பு உபநிஷத்துகள் பல இருந்தன. அவற்றுள் 108 மட்டுமே பொதுவாக வழக்கத்தில் உள்ளன.

அவற்றுள் ஈச, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, ப்ரசன, சாந்தோக்ய, சுவேதாஷ்வதர, பிருஹதாரண்யக உள்ளிட்ட உபநிஷத்துகள் முக்கியமானவையாகும்.

உபநிஷத்துக்கு அடுத்தபடியாக ஆறுவகை தரிசனங்களைச் சொல்லலாம். அவை கபிலர் அளித்த “சாங்கியம்’, ஜைமினி அளித்த “பூர்வ மீமாம்சை’, வியாசர் அளித்த “உத்தர மீமாம்சை’ (வேதாந்தம்), பதஞ்சலி அளித்த “யோக சூத்திரங்கள்’, கௌதமர் அளித்த “நியாயம்’, கணாதர் அளித்த “வைசேஷிகம்’ முதலியனவாகும். இப்படி வேதாந்தமான ஸ்ருதிக்கு அடுத்ததாக ஸ்மிருதிகள் (நினைவு) என அழைக்கப்படும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் (மகாபாரதத்தின் நடுவே வரும் பகவத் கீதை) மட்டுமின்றி 108 புராணங்களும் அடங்கும். சாந்தோக்ய உபநிஷத்தில் “இதிஹாஸ புராணம் பஞ்சமம் வேதாநாம் வேதம்’ என, இதிகாசங்களும் புராணங்களும் வேதத்திற்கு நிகராக இறைவனை அடைய வழிகாட்டும் அம்சமாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழில், திருஞானசம்பந்தர் முதல் சேக்கிழார் வரையுள்ள சமயக் குரவர்களால் வகுக்கப்பெற்ற “பன்னிரு திருமுறை’ மற்றும் ஆழ்வார் பெருமக்களால் அருளப்பெற்ற “நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ போன்ற பல சமயப் பெருமக்களின் அரும்தொண்டால் உருவான வேதாந்த, தத்துவ நூல்களை அடிப்படையாகக்கொண்டு “இந்து மதம்’ என்கிற கட்டடத்திற்கு வலுச்சேர்க்கும் கட்டமைப்பாக உள்ளன. மேற்படி அறநெறிக் கொள்கையாலும், ஒப்பற்ற கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இன்றும் இந்துக்கள் கடைப்பிடித்து வருவதாலும் இந்துமதம் உலக அளவில் மூன்றாவது பெரிய மதமாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. உலகமக்கள் தொகையில் சுமார் 15 சதவிகிதம் இந்துக்கள் இருப்பதாக ஓர் புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கிறது.

 கோயில் கருவறை ஏன் சிறியதாக உள்ளது…..?

மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.

இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.

இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.

என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.

கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.

இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.

அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.

கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம். குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.

ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.

தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.

கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.

கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.

கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்.

இறைவனால் படைத்தருளப்பட்ட இம்மண்ணுலகில் மலர்கள்தான் எத்தனை எத்தனை வகைகள்! அவற்றில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களையும் தெய்வீக ஆற்றலையும் என்னவென்று சொல்வது! என்றும் அழியாத- நித்தியமான உயிர் உறையும் இடம் நமது உடலேயாகும். அறம்செய்ய உதவிடும் உன்னத சாதனமும் இந்த உடலே. இவ்வுடலை செயலிழக்கச் செய்யும் பலவித பிணிகளைப் போக்கி, உயிர்கள் நலம்பெற பலவகைப் பூக்களையும் இலைகளையும் இறைவன் படைத்தளித்துள்ளான். இவை இறைவழிபாட்டில் முதலிடம் வகித்து, மக்களின் உடற்பிணி, உளப்பிணி நீக்கும் மருந்தாகின்றன.

அத்தகைய சிறப்புவாய்ந்த மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது நாம் சில நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். மலர்களைக் கிள்ளியோ சிதைத்தோ இறைவனுக்கு அணிவித்தலாகாது. வில்வம், துளசி இரண்டையும் முழு இதழாகவே அணிவிக்கவேண்டும். பிற இலைகளைத் தனி இதழ்களாக அர்ச்சிக்கலாம். மஞ்சள் சாமந்தி, ரோஜா போன்ற மலர்களை தனி இதழ்களாக்கி பூஜிக்கக்கூடாது. எனினும் தானாக உதிர்ந்த ரோஜா மற்றும் செண்பக இதழ்கள் ஏற்கத்தக்கன. தாமரையை மட்டும் தனி இதழாகப் பூஜிக்கலாம். ஆனால் அது முழு இதழாக இருக்கவேண்டும்.

இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது மலர், இலை, பழம் போன்றவற்றை கீழ்முகமாக கவிழ்த்து சாற்றக்கூடாது. மலர்களை மேல்நோக்கியே சாற்றவேண்டும். பொதுவாக, அவை இயல்பாக எந்த நிலையில் விளங்கினவோ, அவ்வாறே இறைவனிடம் சமர்ப்பிக்கவேண்டும். கீழ்முகமாக வைத்துப் பூஜித்தால், அது பூஜிப்பவருக்கு துக்கத்தைத் தருமென்று ஆகமங்கள் கூறுகின்றன. புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச் சனை செய்யும் காலத்தில் விதிவிலக்குண்டு. அக்காலத்தில் மலர் கீழ்நோக்கி விழுவது குற்றமாகாது.

மேலும், மலர்களின் நடுவேயுள்ள மகரந்தம், கேசரம் உள்ளிட்டவை இல்லாமலும் அர்ச்சிக்கக்கூடாது.

துளசியின் சிறப்பு

பூஜைக்குரிய இலைகளில் துளசி சிறந்தது. இதுவொரு தெய்வீக மூலிகையுமாகும். நீருள்ள நிலத்தில் மட்டுமல்ல; வறண்ட பூமியிலும் வளரும் தன்மையுடையது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய தனிச்சிறப்பு மிக்கது. காக்கும் கடவுள் திருமால் உறையும் ஆலயங்களில் தலத் தாவரமாக துளசி விளங்குவதைக் காணலாம். கருந்துளசி, பெருந்துளசி, ராமதுளசி, கிருஷ்ணதுளசி, சிவதுளசி, வனதுளசி, சிறுதுளசி என இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் துளசி காணப்படுகிறது. கருந்துளசியே உயர்ந்த பலன் தரவல்ல தென்பர். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணம்கொண்ட துளசியை தமிழில் “திருத்துழாய்’ என்று வைணவ அடியார்கள் போற்றுவர்.

சமஸ்கிருதத்தில் காரணப்பெயர்களாக பலவுள்ளன. சாறுடையதாகையால் சரசா, எங்கும் எளிதில் கிடைப்பதால் சுலபா, பல பூங்கொத்துகளைக் கொண்டதால் பகுமஞ்சரி, விஷ்ணுவுக்கு உகந்ததாகையால் விஷ்ணுவல்லபா- விஷ்ணுப்ரியா, அதிக இதழ்கள் கொண்டதால் பகுபத்திரி, கிருமிகளையும் துயரங்களையும் போக்குவதால் அபேராக்ஷஸி, வயிற்றுவலியைப் போக்குவதால் சூலக்னி, இதன் அடிமண் எப்போதும் புனிதமுடையதென்ப தால் பவானி, ராம- கிருஷ்ணர் களின் அன்பைப் பெற்றதால் ஹரிப்ரியா என பலவாறு துளசி போற்றப் படுகிறது.

துளசி இலையின் சாறானது ஜலதோஷம், கபம், வயிற்று உளைச்சல், எலும்புச்சூட்டு ஜுரம், தாகம், மாந்த ஜுரம் போன்றவற்றைப் போக்கும். நாவில் ருசியற்ற தன்மையை மாற்றும். குழந்தை முதல் பெரியவர் வரை சளியை நீக்கி, நன்கு சுவாசித்து ஆரோக்கியம் பெற உதவும் உன்னத மூலிகை துளசியாகும். துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் பாவங்கள் நீங்குமென்பர். தீயவர்களின் கண்பார்வை அகலும். தீய எதிரிகளின் பில்லி, சூன்யம் போன்ற ஆபிசார ஏவல்கள் துளசி இருக் கும் இடத்தை அணுகாது. துர் தேவதைகள் விலகியே நிற்கும்.

இத்தகைய துளசியை பூஜைக்காகப் பறிக்கும்போது, கொத்து கொத்தாகப் பறிக்கக் கூடாது. ஒவ்வொரு இலையாகப் பறிக்கவேண்டும். பூவை ஒரு ஈர்க்கு அளவே பறித்துப் பயன் படுத்த வேண்டும். குளித்து தூய்மையாக இருக்கும்போதே பறிக்கவேண்டும். மாலை நேரம், இரவு நேரம், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, புண்ணியகாலம், சிரார்த்த திதி ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக்கூடாது. அதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்தாலும், பூஜித்திருந்தாலும் நீரால் கழுவி மீண்டும் பூஜிக்கத்தக்க சிறப்புடையது துளசி.

துளசி நீரைப் பருகுபவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்களென்பது உறுதி. கணவனைப் பெறவிரும்பும் பெண்களும், பதிவிரதாதன்மை நிலைத் திருக்கவும் தினமும் காலையில் தலைக்கு குளித்து, துளசி செடிக்கு மஞ்சள் நீரூற்றி வலம்வந்து வணங்கினால் எண்ணியது ஈடேறும். துளசியை மங்களதேவியின் அம்சமாகக் கருதி வழிபடவேண்டும். துளசியின் அடிப்பகுதியில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், நடுவில் எல்லா தேவதைகளும், முனைகளில் அனைத்து வேதாகம சாஸ்திர வித்தைகளும் இருப் பதாலும்; மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளாக இருப்பதாலும் அனைவராலும் பூஜிக்கத்தக்கவள் துளசி.

துளசி துதி

யன்மூலே ஸர்வதீர்த்தானி
யன்மத்யே ஸர்வதேவதா:
யுதக்ரே ஸர்வவேதாஸ் ச
துளசீம் தாம் நமாம்யஹம்.
நமஸ் துளசி கல்யாணி
நமோ விஷ்ணுப் பிரியே சுபெ
நமோ மோக்ஷப்ரதே தேவி
நமஸ் ஸம்பத் ப்ரதாயிகே.

துளசி பிரார்த்தனை சுலோகம்
நமஸ்தே துளசீதேவி
சர்வாபீஷ்ட பலப்ரதே
நமஸ்தே திரிஜகத் வந்தியே
நமஸ்தே லோகரக்ஷிகே.

மேற்கண்ட துதிகளைக்கூறி துளசியை போற்றிவணங்குவோர் விரும்பியவற்றையெல்லாம் அடைவர் என்பது ரிஷிகளின் வாக்கு. சைவ- வைணவ ஆகமங்கள் யாவுமே, எல்லா தெய்வங்களுக்குரிய சிறப்பு பத்திரமாக துளசியைக் குறிப்பிட்டுள்ளன. விநாயகர் துளசி தேவியை தாயின் அம்சமாகக் கருதுவதால், தினசரி பூஜையில் விநாயகருக்கு துளசியை சமர்ப்பிக்கக்கூடாது. ஆவணி மாத மகாசதுர்த்தி மற்றும் உற்சவ அலங்காரம் போன்ற சிறப்பு காலங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.

சிவாகமங்களும் சிவபூஜையில் துளசிக்கு திங்கட்கிழமைக்குரிய சோமவார பத்திரம் எனும் சிறப்புத் தகுதியை அளித்துள்ளன. சைவாகமங்கள் வில்வத்திற்கு இணையாக துளசியையும் குறிப்பிட்டுள்ளதால், இதன் மகிமையை உணர்ந்து பயன்படுத்தவேண்டும். அதுபோல வில்வத்தால் விஷ்ணுவை வழிபடுவதும் சிறப்பாகும்.

இனி, பூஜைக்காக கொய்துவரும் மலர்களை சேமித்துவைக்கும் காலத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். தாமரை மலரை ஐந்து நாட்களும், அலரிப்பூவை மூன்று நாட்களும், வில்வத்தை ஆறு மாதங்களும், துளசியை மூன்று மாதங்களும், தாழம்பூவை ஐந்து நாட்களும், கருநெய்தல் என்னும் நீலோத்பலத்தை மூன்று நாட்களும், செண்பகத்தை ஒருநாளும், விஷ்ணு கிராந்தியை மூன்று நாட்களும், மஞ்சள் நிற விலாமிச்சம் வேரை ஓராண்டு வரை வைத்திருந்து  உரியமுறையில் உபயோகிக்கலாம். பூஜைக்கு பூ இல்லையெனில், அவ்வூரில் வாழும் அனைவருக்கும் சங்கடம் நேரும் என்கிறது ஆகமம். புதிய பூக்களும் மணம்மிக்கவையும் மிகவும் பயன்தருவன.

விரும்பத்தக்கவற்றை விளக்கும் ஆகமங்கள் விலக்கத்தக்கதையும் வலியுறுத்துகின்றன.

தனது வெறுங்கையில் சேர்த்துவைத்துக் கொண்டுவந்தது, துணியில் வைத்துக் கொணர்ந்தது, ஆமணக்கு, எருக்கு போன்ற இலைகளில் வைத்துக் கொணர்ந்தது போன்றவை விலக்கத்தக்கதாகும். இவை நாம் முன்னர் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் அனைத்தையும் போக்கிவிடும்.

மேலும், தாம் உடுத்திய துணியில் வைக்கப்பட்டவை, வாசனை இல்லாதவை, தலைமுடி, புழு, பூச்சி, நோய் இவற்றால் நிந்தனைக்கு ஆட்பட் டவை, அளவுக்கு மீறிய மணமுள்ளவை, அழுக்கடைந்தவை, அசுத்தமானவை, தூய்மை யில்லாத நிலையில் உள்ளவர்களால் தொடப்பட்டவை, பூசித்த பழைய நிர்மால்யத்தின்மீது விழுந்தவை, மனிதன், கால்நடைகளால் முகரப்பட்டவை, வாடியவை, மொட்டாகப் பறித்து தன்னால் மலரச் செய்தவை, தூய்மையற்ற பாத்திரத்தில் சேமித்துக்கொண்டு வந்தவை, குளித்துவிட்டு ஈரத்துணியுடன் பறித்துக்கொண்டு வந்தவை, பிறரிடமிருந்து விரும்பி யாசித்துப்பெற்றவை, எடுத்துவைத்து உலர்ந்து போனவை போன்ற மலர்களும் விலக்கத்தக்கவை.

நிலத்தில் விழுந்திருந்தவை, வாடிவதங்கி அழுகியவை, பக்குவமடையாத சிறுமொட்டு, கொத்தாக உள்ளவை, தகாத இடத்தில் இருந்தவை, வியாதியுள்ளவர்களால் பறிக்கப்பட்டவை, நறுமணமிருந்தும்கூட புனிதத்தன்மையற்றவை, ஒரே நிறம் மட்டுமே உள்ளவை, பூக்காத மொட்டுக்களாக உள்ளவை ஒருபோதும் பூஜைக்கு ஏற்றுக்கொள்ளத்தகாத- விலக்கிடத்தக்கவையே ஆகும்.

நறுமணமே இல்லாதபோதும், தர்ப்பைப்பூ முதலிய சில பூக்கள் என்றும் புனிதமாய் விளங்குவதால் ஏற்கத்தக்கவையே என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன. புஷ்பவிதிமுறைகள் யாவும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். கடைப்பிடிக்கத் தவறினால்,இயல்பாகவே மாசற்ற பரம் பொருளிடம், மாசை சேர்த்திட்ட குற்றம் புரிந்தவராகிவிடுவோம். எவ்வாறெனில், சுத்தமான சிவத்தை, நாம் அசுத்தமாயுள்ள பத்திர புஷ்பங்களின் சேர்க்கையால் மாசுபடுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை.

பூவின்றி அமையாது பூஜை. ஆயினும், அப்பூக்கள் கூறப்பட்ட வகை, நிறம், குணம், தரம், மணம் உள்ளவைகளாய் இருத்தல் மிகவும் அவசியம். உரிய வகையும், மணமும் பெற்றிருந்தாலும்கூட, அவை குற்றம், குறை தோஷமின்றி இருத்தல் மிகவும் அவசியம். எனவே, விலக்கத்தக்கவை பற்றிய விதிமுறையை முதலில் முற்றிலும் பொருத்திப் பார்த்து சோதித்திடவேண்டும்.

பொதுவாக மலர்களை அதற்கென உரிய தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தில் மட்டுமே பறித்து சேமித்திடவேண்டும். பின்பு பூஜைக்குரிய புஷ்ப பாத்திரத்தில் வைத்து சமஸ்காரத்தால் புனிதமாக்கி, அப்பூவை சோபை உள்ளவரை கையாளவேண்டும். பூஜையில் செண்பகப்பூவின் மொட்டுகள் மட்டுமே, மொட்டாக சாற்றக்கூடியவை. மற்ற மலர் வகைகளின் மொட்டுகளை ஒருபோதும் சாற்றக்கூடாது.

சுத்தமான உலோகம் அல்லது மரத்தாலான பாத்திரத்திலோ, தென்னை இலைக்கீற்றால் பின்னிய பூக்குடலை அல்லது மூங்கில் கூடைகளில் பூப்பறித்து சேமிப்பது முறையாகும்.

இது குறித்து மேலும் பல விளக்கங்களை ஆகமங்கள் கூறுகின்றன. அவையனைத்தும் எழுதினால் மேலும் இது விரியும். எனவே, ஆகமங்கள் கூறும் வேறுபல அரிய தகவல்கள் குறித்து அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

Germany கம் காமாட்சி அம்பாள் ஆலயம் எழில் தோற்றம் அற்புதங்களை அருளும் அற்புத அம்பாள் பல்லினமக்களும் கைதொழும் நாயகி ஸ்ரீ கம் காமாட்சி அம்பாள்
01.01.2015
photo by- worldkovil-com
P.S.Rajakaruna (

 

 

பி. ராஜலக்ஷ்மி

“அரிது அரிது மானிட
ராய்ப் பிறப்பதரிது’ என்
றார் ஔவையார். பல பிறவி

களுக்குப் பிறகே நமக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது. இந்த மனிதப் பிறவியில்தான் இறைவனை அனுபவித்துணர்ந்து அவனுடன் ஐக்கியமாகும் பேறு கிடைக்கும். அரிதான இப்பிறவியை வீணாக்காமல் ஒவ்வொரு வினாடியும் அவனருளைப் பெறுவதற்கு முயலவேண்டும். மனிதப் பிறவி எடுத்ததன் முழுப்பயனைப் பெறுவதற்கு திருநீறு என்னும் சாதனத்தை பரமேஸ்வரனே அருளியுள்ளார்.

அக்காலத்தில் அடியார்கள் எப்போதும் விபூதிப்பை வைத்திருப்பார்கள். இந்தத் திருநீறுக்கு இருக்கும் மகிமையும் பெருமையும் சொல்லில் அடங்காது. நாயன்மார்கள் எல்லாருமே திருநீறுக்கு ஏற்றம் கொடுத்துப் பாடியுள்ளனர்.

திருஞானசம்பந்தப் பெருமான் “திருநீற்றுப்பதிகம்’ என்றொரு பதிகமே பாடியுள்ளார். சிவபெருமானே திருநீறு அணிந்து “பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்’ என்று காட்சிதருகிறார். ஞானசம்பந்தர், “காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார், “பூசுவது வெண்ணீறு’ என்று பாடுவார். “எழில்பட இடுதிருநீறு சேர்த்திறம்’ என்று அருண கிரிநாதர் உருகுவார். சிவபெருமான் திருநீறு அணிந்தாடும் கூத்தை பண்டரங்கம் என்று அழைப்பர்.

திருவண்ணாமலையில் சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக காட்சி அளிக்கிறார். அவருடைய நெருப்புத் திருமேனியைச் சுற்றி விபூதியானது ஒரு கவசம்போல சூழ்ந்துள்ளது. இவ்வாறு இறைவனின் திருமேனி நீறுபூத்த நெருப்பாக இல்லாதிருந்தால், மானிடப் பிறவியின் கண்கள் இறைவனின் திருமேனியின் வெப்பசக்தியை தாங்கி தரிசிக்க இயலாது. இந்தத் திருமேனியை அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் “நெருப்பணைய திருமேனி வெண்ணீற்றானை’ என்று பாடுவார். இந்தத் திருமேனியின் ஒரு பாகத்தில் இறைவியும் சேர்ந்து வாசம் செய்கிறாள். அம்பிகையும் விபூதி தரித்து காட்சிதருகிறாள். திருநீற்றையே செல்வம் என்றும், திருநீறு அணிவதுதான் வாழ்க்கையின் மிகப்பெரும் பாக்கியம் என்றும் வாழ்ந்துகாட்டிய பல சான்றோர்களைப் பற்றி சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சொல்கிறது.

பெருமாக்கோதையார் என்ற மன்னன், தன்னெதிரே வந்த ஆடை வெளுப்பவனின் மேனி உவர் மண்ணால் வெளுப்பாக இருந்தது கண்டு, அவனை திருநீறணிந்த சிவன் அடியாராக பாவித்து வணங்கினான். அவனோ மன்னனை நோக்கி, “”அரசே,  அடியேன் துணிவெளுக்கும் வண்ணான். யாரென்று நினைத்து என்னை வணங்கினீர்” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். மன்னன், “”அடியேன் அடிச்சேரன். நீர் சிவனடியாராக இல்லாவிடினும் உங்கள் தோற்றம் சிவனடி யார்களின் நினைவை ஏற்படுத்தியது”
என்றார்.

திருநீறு பற்றி சேக்கிழார் பெருமான் கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகர்பம் என்று மிக விரிவாகப் பாடியிருக்கிறார். பசுவின் சாணத்தை கோசலம் விட்டுப்பிசைந்து உலர்த்தி, நெல்பதரைக்கொண்டு சிவ மந்திரம் சொல்லி அக்னியிலிட்டு, சிவன் திருவடிகளை நினைந்து தயார் செய்வது தூயநீறு. இந்த திருநீறை சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று தயாரிப்பார்கள். இது கற்பம் எனப்படும். இந்த உலகிலுள்ள பொருட்களெல்லாம் அழிந்து போகக்கூடியவை. சாம்பலாகிவிடும் தன்மைகொண்டவை என்ற கருத்தை உணர்த்துவதே திருநீற்றின் பெருமை; உண்மைத்தத்துவம். இந்த நிலையாமையை உணர, உணர்த்திட பூசுவதே திருநீறு. நிலையாமையை உணர்ந்தால் ஆணவம் ஒடுங்கும். ஆணவம் நீங்கும்போது கன்மம், மாயை என்ற மலங்களும் நீங்கிவிடும். பின் இறைவனை எளிதில் அடைந்துவிடலாம். இறைவன் உயிர்களை அணைந்துகொள்வான் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியது திருநீறு.

திருநீற்றுக்குப் பெருமை சேர்ப்பதற்காகவே இந்த உலகில் முருகனின் அம்சமாக அவதாரம் செய்தவர் திருஞானசம்பந்தர். சமணர்களுடன் வாதப் போர் செய்ய அவருக்கு கருவியாக அமைந்தது திருநீறே. ஞானசம்பந்தர் அளித்த திருநீறு கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கி, கூனையும் போக்கி, நின்றசீர் நெடுமாறனாகவும் மாற்றியது. அதற்காக சம்பந்தர் பாடிய, “மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகம் பாராயணம் செய்வதற்கு சிறந்தது.

மந்திரமாகவும் தந்திரமாகவும் உள்ள இறைவன், திருநீறு பூசினால் இடையூறுகளை நீக்கி இன்பம் அருளுவான். முன்பு வைணவர்களும் திருநீறணிந்து வில்வத்தால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்தார்கள் என்று சில வரலாறுகள் சொல்கின்றன. திலகவதியார் அளித்த திருநீறு, சமணம் சேர்ந்து சூலைநோய்க்கு ஆட்பட்ட மருள்நீக்கியாரின் நோயைத் தீர்த்து, சைவம் தழுவச்செய்தது.

திருவீழிமிழலை என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், திருமால் திருநீறணிந்து தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களால் சிவபெருமானை அர்ச்சனை செய்துவந்தார். ஒருநாள் பூஜையின்போது ஒரு மலர் குறையவே, தன் கண்மலரையே எடுத்து அர்ச்சனை செய்தார் என்று தலபுராணம் கூறுகிறது. “நீற்றினை நெற்றியில் பூசி நித்தம் ஆயிரம் பூக்கொண்டு’ என்பர்.

சில தலங்கள், சில விக்ரக மூர்த்தங்கள் திருநீற்றோடு சம்பந்தமுள்ளவை. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஒரு தொட்டிகட்டி அதிலொரு விநாயகரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இவரை விபூதி விநாயகர் என்பர். இவரைச் சுற்றி விபூதி நிறைந்திருக்கும். பக்தர்கள் விபூதியால் விநாயகருக்கு அபிஷேகம் செய்து பின்பு பிரசாதமாக தரிக்கிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோவில் உட்பிராகாரத்தின் தெற்கு திசையில் ஜடாயுகுண்டம் என்ற தொட்டி உள்ளது. ஸ்ரீராமபிரான் ஜடாயுவுக் காக இத்தலத்தில் அந்திமக் கிரியைகள் செய்ததாக ஐதீகம். இந்த குண்டத்திலுள்ள விபூதி சாம்பல் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே திருக்குறுக்கை என்னும் பாடல்பெற்ற தலம் உள்ளது. அட்டவீரட்டானத் தலங்களில் இதுவும் ஒன்று.

இந்த தலத்தில் சிவபெருமான் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். மன்மதன் சாம்பலான இடம் இன்றும் விபூதிக் குட்டை என்ற பெயரோடு விளங்குகிறது. இந்த இடத்திலுள்ள மண் இன்றுவரை வெண்மை நிறத்தோடு காட்சியளிக்கிறது.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. இதில் நான்காவது பிராகாரம் “திருநீற்று மதில்’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகப்பெரியது. இதைக் கட்டியபோது சிவபெருமான் ஒரு சித்தராக வந்து, திருநீற்றையே வேலையாட்களுக்கு கூலியாக அளிக்க, அந்த விபூதி அவரவர் தகுதிக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்பது வரலாறு.

இந்த நான்காவது மதிலை வணங்குபவர் களுக்கு இறைவன் சகல வரங்களையும் அளிக்கிறார்.

சீர்காழி அருகேயுள்ள திருநல்லூர்ப் பெருமனம் என்ற இடத்தில், திருஞான சம்பந்தர் தன் மனையாளோடும் மற்ற அடியார்களோடும் சிவஜோதியில் ஐக்கிய மானார். இந்த தலத்து அம்பிகையின் பெயர் சுவேத விபூதிநாயகி. (வெண்ணீற்றம்மை).

இங்கு அம்பிகையின் சந்நிதியில் குங்குமத் திற்கு பதிலாக விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

வடஇந்தியாவில் உள்ளது உஜ்ஜயினி நகரம். இந்நகரத்து ஈசன் மகாகாளேஸ்வரர். இந்த சிவலிங்கம் இந்தியாவிலுள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்துள் ஒன்று. முதல் நாள் நடுநிசியில் மயானத்தில் சேகரிக்கப்படும் சாம்பலே மறுநாள் சிவலிங்கத்தின் சந்நிதியில் படைக்கப்பட்டு, பின்பு அதுவே விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

“கங்காளன் பூசும் கவசத்திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வாரே’

என்று திருமூலர் திருமந்திரப் பாடலில் பேசுகிறார். இவ்வளவு மகிமையும் புனிதமும் பெற்ற திருநீற்றை எல்லாரும் தினந்தோறும் தவறாமல் பூசி இறைவன் அருளைப்பெற வேண்டும். அதனால் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிவகதி பெறுவர் என்பது உறுதி. தற்காலத்திலும் திருநீற்றின் பெருமையை உணர்த்தும் பாடல்கள் நிறையவே உள்ளன. புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“திருநீறில் மருந்திருக்கு தெரியுமா- அதை
தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா (முருகன் திருநீறில்)
அருள் மணக்கும் ஐயனின் திருமருந்து- நல்ல
அறிவுக் கண்ணை திறந்து வைக்கும்
அருமருந்து
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து- நல்ல
ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து (வேலன் திருநீறில்).’

இந்த அருமையான பாடல் புலவர் பாரதிசாமி அவர்களால் இயற்றப்பட்டு, இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால் இசையமையப் பெற்றது.

திருநீறு நம்மைக் காக்கும் கவசம். இரவில் படுக்கும்முன்பு திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு இறைவனைப் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கினால் கெட்ட கனவுகள் வராது.


பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலங்களில் ஒன்று திருஉத்தரகோச மங்கை. பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம். சிவத் தலங்களிலேயே பாடல்பெற்ற முதல் க்ஷேத்திரம் உத்தரகோசமங்கை.

சிவன் உண்பதும் உறங்குவதும் உத்தரகோச மங்கை தலத்தில்தான் என்பார்கள். இத்தலத்தில்தான், “சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே’ என்று சிவபெருமானிடம் மாணிக்கவாசகர் கேட்கிறார்.

மற்றும் நீத்தல் விண்ணப்பம் என்ற பாடலை மனமுருகிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். எல்லா சிவாலயங்களிலும் அர்த்தஜாம பூஜையில் பாடக்கூடிய ஊஞ்சல் பாடல் (திருப்பொன்னூஞ்சல்) உத்தரகோசமங்கை பாடல்தான்.

மங்களநாதர் பார்வை பட்டால் அனைத்துப் பாவங்களும் நம்மை விட்டோடும். உலகைப் படைத்து அதில் பெரும் மாயையைப் பரப்பிய நான்முகனாகிய பிரம்மனுக்கு ஒருசமயம் சொல்லொணாக் கோபம் தன்னையறியாமல் சூழ்ந்து உலகத்து உயிர்களை ஆட்டுவித்தது. தன்னுள் புதிதாக உருவான ராட்சத குணத்தையழிக்க பிரம்மா பலவாறு முயன்றார்.

இந்தத் தீவினையை அகற்ற தவத்தை நாடினார். தகுந்த இடத்தில் அமர்ந்து தவம்செய்தால் ஊழ்வினை அகலுமென்று எண்ணி உத்தரகோசமங்கை வந்தடைந்தார். அங்கே அக்னி தீர்த்தக் கரையில் கடும் தியானத்தில் ஈடுபட்டார்.

கோபமெனும் பாவத்திலிருந்து விமோசனம் கிடைத்தது. பிரம்மனுக்கு சிவன் இன்னருள் புரிந்த இடம் இதுவென்பதால், உத்தரகோசமங்கை பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு 

முதலில் நம்மை வரவேற்பது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கும் இலந்தை மரமும், அங்கு வீற்றிருக்கும் சகஸ்ரலிங்கமும்தான். ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் பொதிந்திருப்பதுதான் சகஸ்ரலிங்கம். பதரி (இலந்தை) மரத்துடன் சிவபெருமான் வீற்றிருப்பதாலேயே இவ்விடத்துக்கு இலந்திகைப் பள்ளி என்றும், பத்ரிகா க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. சகஸ்ரலிங்கத்தை வேத வியாசரும் புஜண்ட மகரிஷியும் பூஜை செய்ததாகக் கூறுவர்.

இலந்தை மரத்தின்கீழ் வேத வியாசரின் பாதரட்சையும், அவர் வணங்கி பூஜை செய்த வலம்புரி விநாயகரும் இத்தலத்தின் பழம்பெருமையை உணர்த்துகின்றன.

இந்த ஆலயத்துக்கு அருகில் அக்னி தீர்த்தக்கரை அருகே மரகத நடராஜர் காட்சியளிக்கிறார். ரத்தினசபாபதி, ஆதி சிதம்பரேசன் என்றழைக்கப்படும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த மரகத நடராஜருக்கு வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத திருவாதிரையன்று சந்தனப்படி கலைந்து விசேஷ அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினத்தில் மட்டும் நடராஜரை மரகத மேனியாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காப்பு அகற்றிய தினம் அதிகாலை மீண்டும் சந்தனம் வைத்து அருணோதய காலத்தில் தரிசனம் நடைபெறும். அதை ஆருத்ரா தரிசனம் என்று கூறுவர். அதைக் காண கண்கோடி வேண்டும். 5-1-2015-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை உத்தரகோசமங்கையில் காணுங்கள்.

மற்ற நாட்களில் மரகத நடராஜருக்கு அபிஷேகம் இல்லையென்பதால், அதற்கு மாற்றாக சிறிய ஸ்படிகம் மற்றும் மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. இவற்றை தரிசித்தாலே பச்சை வண்ண நடராஜரை தரிசித்த பலனில் பாதி கிட்டிவிடும் என்பர்.

மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கிறார் மங்கள நாதர். அவருக்குப் பக்கத்தில் தேவி மங்களநாயகி தனியாகக் காட்சி யளிக்கிறார். இவர்கள் இருவரையும் தரிசிப்பதற்குமுன், அங்கு வீற்றிருக்கும் பாண லிங்கத்தை தரிசித்தால் முழுமையான பிரார்த்தனைப் பலன் கிட்டும்.

திருமணம் கைகூடாதவர்கள் மரகத நடராஜருடன், சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து விமோசனம் பெறுகிறார்கள்.

இம்மையிலேயே நன்மை அனைத்தையும் நல்கி, மறுமையில் முக்தியைக் கொடுக்கும் தலமாக இது விளங்குகிறது. மாணிக்கவாசகருக்கு இங்கு தனிச்சந்நிதி உண்டு. இங்கு மாணிக்கவாசகர் சடையுடன் காணப்படுகிறார்.

இவ்வாலயத்தை தரிசிக்கும் பேறு அனைவருக்கும் கிட்டாது. தரிசிக்கவேண்டுமென்ற பாக்கியம் பெற்றவருக்கே கைகூடும். ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் இங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழியும். நிறைய திருமணங்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன.

ராமநாதபுரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உத்தரகோசமங்கை அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதியுண்டு.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

அடியார்கள் எல்லாரும் இறைவனைப் பாடும்போது, ஒளிக்கு மிகவும் ஏற்றம் கொடுத்துப் பாடி அனுபவித்துள்ளார்கள். ஒளியினால்தானே உலகமே இயங்குகிறது!

வெகுகாலத்திற்கு முன்பாகவே நமது முன்னோர்கள் கொண்டாடிய பண்டிகை கார்த்திகை தீபம்.

தீபங்களில் அதிதேவதைகள் உள்ளனர். கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்தால் நாம் செய்த பாவங்களெல்லாம் மறையும்.

பரமாத்மாவான பரமேஸ்வரன் ஜோதி ஸ்வரூபமானவர். ஆதி, அந்தம் இல்லாதவர்.

ஒருசமயம் பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடி, முடியைத் தேடும்போது, சர்வேஸ்வரன் அண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.

“வேழவெண் கொம்பு ஒசித்த மாலும்
விளங்கிய நான்முகனும் சூழ எங்கும் தேட
ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்’

என்பார் ஞானசம்பந்தர்.

மாணிக்கவாசகரும் திருவண்ணாமலையில் திருவெம்பாவை பாடும்போது தொடக்கத்தில், “ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி’, “சொற்றுணை வேதியன் சோதி வானவன்’ என்றெல்லாம் இறைவனை ஒளிமயமாக அனுபவிக்கிறார்.

கார்த்திகை தீபம் மிகவும் விசேஷமானது.

கார்த்திகைப் பௌர்ணமியன்று தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று தீபமேற்றி வழிபட் டால் செல்வம் பெருகும். நோயின்றி வாழலாம். கார்த்திகை தீப ஒளிபடும் எல்லா உயிரினங்களின் பாவமும் அகலும். தீபத் திருநாளன்று எல்லா சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு செய்வார்கள். அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத்தான் இவ்வழிபாடு நடத்தப்படுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை தரிசித்தால், நாம் என்ன பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறுமென்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. நம் மனதை இறைவனிடம் வைத்து தீப ஒளியைப் பிரகாசிக்கச் செய்யவேண்டும். நம் மனதில் மூடிக்கிடக்கும் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவது தீப ஒளி.

இதையே “தமஸோ மா ஜோதிர்கமய’ என்கிறது உபநிடதம். நம்மை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுபோக உதவுகிறது.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்.

பிதாமகர் பீஷ்மர் தனது பேரன்களான தர்மனிடமும், துரியோதனனிடமும் தனித் தனியே பணத்தைக் கொடுத்து, “வீடு நிறைய பொருட்களை வாங்கிவையுங்கள்’ என்று, அவர்களுடைய அறிவுத்திறனை ஆராயும் வகையில் சொன்னார்.

உடனே துரியோதனன் வீடு நிறைய வைக்கோல் கட்டுகளை வாங்கி நிரப்பிவிட்டு, “இன்னும் கொஞ்சம் வைக்கோல் வேண்டும்; காசு போதவில்லை’ என்று குறைபட்டுக் கொண்டான். தருமபுத்திரர் சிறிய அகல் விளக்குகளை வாங்கி தீபமேற்றி வீடு நிறைய வைத்துவிட்டார்.

தருமபுத்திரர் ஏற்றிய தீப ஒளியால் வீடு மங்களகரமாகவும், வீடு நிறைந்த பொருளாகவும் இருந்தது.
பெருமாளிடம் எல்லையற்ற பக்திகொண்ட பூதத்தாழ்வார்.

“அன்பு என்ற தகழியிலே ஆர்வம் என்ற நெய்யைவிட்டு, என் மனத்தையே திரியாக்கி ஞான விளக்காக ஏற்றுகிறேன்’ என்று ஒளிக்கு மிகுந்த ஏற்றம் கொடுத்துப் பாடுவார்.

இதை திருமூலரும்,

“விளக்கின் முன்னே வேதனைகள் மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையவர்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே’
என்று தீபத்தின் பெருமையை உரைப்பார்.

“தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று முருகனையும், “காந்தமலை ஜோதியே’ என்று ஐயப்பனையும் பாடுவதைக் கேட்கிறோம்.

“கருமுகில் கொழுந்தெழில் காட்டும் ஜோதி’

என்று ராமபிரானையும், “உயர் நின்ற ஜோதி’ என்று திருமாலையும் போற்றி ஜோதியின் பெருமையை விளக்குவார்கள்.

நாம் வெளியுலகத்திற்கு வெளிச்சம்தரும் ஜோதியை ஏற்றும் அதே வேளையில், நம் மனதினுள்ளே இருக்கும் ஆத்மாவுக்கும் ஒளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நம்முள்ளே இருக்கும் அஞ்ஞானமென்னும் இருட்டை விரட்டி ஞானமாகிற தீபத்தை ஏற்றவேண்டும். பகவத்கீதையில்  “விச்வ ரூப தர்சன’ யோகத்தில், கண்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே உதித்தாற்போல ஒளிவெள்ளமாகக் காட்சிதந்ததாக சொல்லப்படுகிறது.

“அருட்பெருஞ்ஜோதி- என்னை ஆண்டு கொண்ட தெய்வம்’ என்று வள்ளலார் உருகுவார்.

“ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ என்றபடி, நம்முள்ளே இருக்கும் இறைசக்தி என்ற ஒளியைத் தேடி அந்த அருளைப் பெறுவோம்.

“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.’

மக்கள் தம் வாழ்வில் பின்பற்றவேண்டிய தர்மங்களையும், வாழ்க்கை நெறிகளையும் எடுத்துக்காட்டுவதற்காக இறைவன் புரிந்த லீலைகள் அநேகம்.

ஒருசமயம் கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். விளையாட்டினிடையே அவ்வப்போது இருவருமே தான் வெற்றிபெற்றதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறைவி தன் கூற்றில் பிடிவாதமாக இருந்ததால் கோபம்கொண்ட இறைவன், இறைவியை பூவுலகில் பசுவாகப் பிறந்து அலைந்து திரியும்படி சாபமிட்டார்.

இறைவன் பசுபதி. அடங்காமல் அலைந்து திரியும் இந்திரியங்களாகிய பசுக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் பதி அவர்.

ஆணவம் கொண்டவர்கள் இறைவனருளைப் பெறமுடியா தென உலகோருக்கு உணர்த்துவதற்காகவே சிவபெருமான் தேவியைப் பசுவாகத் திரியும்படி செய்தார். தேவி கணவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாக, தன் தவறை உணர்ந்து இறைவனின் ஆணைப்படி பசுவாகப் பிறப்பெடுத்தாள். ஸகஸ்ர நாமாவளியில் “கோமாதா’ எனக் குறிப்பிடப்படும் தேவி பசு வடிவெடுத்ததில் வியப்பில்லை.

பார்வதிதேவியின் சகோதரரான விஷ்ணுபகவான் தன் சகோதரி பசுவாகப் பிறந்திருப்பதை அறிந்தார். சிவபெருமான் தேவியைக் காத்து ரட்சிப்பதற்கு  பதில் சபித்துவிட்டாரே என்றெண்ணிய அவர், அவளைத் தானாவது காப்பாற்றுவோமென்று இடையனாகத் தோன்றினார். இவர் மனிதனாகப்  பிறக்கவேண்டுமென்ற சாபமெதுவும் இல்லை. ஆனால் பூலோகவாசிகளுக்கு சகோதர அன்பின் வலிமையைக் காட்டுவதற்காகவே, தேவிக்குப் பாதுகாவலராக இடையன் வடிவில் தோன்றினார்.

பகவானும் பார்வதிதேவியும் பசுவாகவும் இடையனாகவும் தோன்றிய ஊர் தேரழுந்தூர் எனப்படும் திரு அழுந்தூர் திருத்தலமாகும். இது கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் இங்குள்ளது. அக்கோவிலில் பசுவோடு கோபாலமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

பசுவுக்கு “ஸகா’வாக பெருமாள் இங்கு எழுந்தருளியதால் அவருக்கு கோஸகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. கோஸகர் என்பது தமிழில் ஆமருவியப்பன் எனப்படுகிறது.

கோஸகர் எழுந்தருளியிருப்பதால் தேரழுந்தூர் கோஸக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சம்பந்தரால் பாடல்பெற்ற சிவன் கோவிலும் உள்ளது.

சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் வேதபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பசுவும் இடையனுமாகிய தேவியும் பகவானும் ஈஸ்வர தியானம் செய்வதற்காக, இத்தலத்தில் வேதபுரீஸ்வரரை பகவான் பிரதிஷ்டை செய்தார் என்பது புராண வரலாறு.

தேரழுந்தூரிலுள்ள பசுவானது அவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களில்தான் மேயும். அவ்வாறு பசுவால் மேயப்பட்ட இடங்கள் பில்(புல்)லூர், மேக்கிரி மங்கலம், ஆன்ஆங்கூர் என வழங்கப்படுகின்றன.

ஒருநாள் பசு மேய்ந்து கொண்டிருந்தபோது அதன் குளம்பு இடித்து பூமியிலிருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. லிங்கத்தைக்கண்டு மிரண்ட பசுவை இடையனாகிய பகவான் சமாதானப்படுத்தினார். குளம்பினால் லிங்கம் வெளிப் பட்ட இடம் திருக்குளம்பியம் என அழைக்கப்படுகிறது!

தன் தங்கையும் ஈசனும் மீண்டும் இணையவேண்டுமென மகாவிஷ்ணு வேண்டிக்கொண்டார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், விஷ்ணு பகவானிடம் “”பசுவை காவிரியில் நீராடச் செய்தால் அவள் பழைய உருவம் பெறுவாள். பிறகு நான்வந்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறேன்” என்றருளினார்.

இடையனாகிய பகவான் பசுவை மேய்த்துக்கொண்டே காவிரிக்குச் சென்று அதை நீராடச் செய்து தானும் நீராடினார்.

இருவரும் சுய உருவம் பெற்றனர். அங்கிருந்து அவர்கள் சென்றடைந்த ஊர்தான் திருவாவடு துறை. ஆ+ அடு+ துறை (பசு நீராடிச் சென்று சேர்ந்த ஊர்) என்பதே திருவாவடுதுறை எனப்படுகிறது.

பசு வடிவம் மறைந்து தேவி சுயரூபம் பெற்றபோது இறைவன் அவளுக்குக் காட்சி கொடுத்தருளினார். திருத்துருத்தி தலத்தில் தவம்செய்துகொண்டிருக்கும் ரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக- தேவியை அவரது மகளாக அவதரிக்கும்படி கூறி அனுப்பிவைத்தார். அவ்வாறே தேவியும் ரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். திருமணஞ் சேரியில் விஷ்ணு பகவான் முன்னிலையில் பார்வதி, பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது.

இறைவன் கோபம்கொண்டு தேவியை சபித்ததும், தேவி பசுவாகவும், பகவான் இடையனாகவும் பூமியில் வடிவெடுத்ததும் இறைலீலைகள்தான். இதன்மூலம் ஆணவம் கொள்ளக்கூடாது; கணவன் சொல்லை மீறக்கூடாது; உடன்பிறந்தோர் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல நன்னெறிகளை மக்களுக்கு போதித்துள்ளார்.

 


கோவை ஆறுமுகம்

“மனம் ஒரு குரங்கு’ என்பார்கள். ஆனால் சிலருடைய நடவடிக்கைகளைப் பார்த்தால் “மனம் ஒரு உடும்போ?’ என்ற ஐயம் எழும். தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் உடும்புப்பிடியாய்ப் பிடித்திருப்பார்கள். எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இவர்கள் மனதில் நல்லுரைகள் பதியாது. இவர்களது எல்லா நடத்தைகளுக்கும் அடிப்படையாக இருப்பது மன இச்சைகள். மனம் என்ன விரும்புகிறதோ- மன இச்சை என்ன வழிகாட்டுகிறதோ அதற்குப் பின்னாலே ஓடுவார்கள். தங்களின் இச்சைகளுக்காகவே வாழ்வார்கள். அவற்றை நிறைவேற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் மன இச்சைக்கு இவர்கள் அடிமைகள்.

இப்படிப்பட்டவர்களையும் இறைவழிபாடு மாற்றிவிடுகிறது. அவர்களது கட்டற்று ஓடும் இச்சைகளுக்கு மூக்குக்கயிறு மாட்டி நேர்வழியில் திருப்பிவிடுகிறது இறைவழிபாடு. இறைவழிபாட்டிலே பலவகை உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதம், மாத சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷ விரதம், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், திங்கட்கிழமை விரதம், சனிக்கிழமை விரதம் போன்றவற்றில் ஏதேனுமொன்றை உடும்புப்பிடியாகப் பிடித்தால், இச்சைகளுக்கும் கீழ்த்தர உணர்வுகளுக்கும் அல்ல; மேலான ஆதிபகவனுக்கும் அவனது கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது என்பதை உணர்கிறார்கள்.

இச்சைகளைக் கட்டுப்படுத்தவும், இனிய ஒழுக்கங்களைக் கற்றுத்தரவும் இறைவழிபாட்டுக்கு இணையாக வேறெதுவுமில்லை என்று சான்றோர்கள் அனுபவப்பூர்வமாகக் கூறியுள்ளனர். இப்படி அர்த்தமில்லாமல் வாழ்கின்றவர்களின் தீய உணர்வுகளைப் பொசுக்கி, நல்லுணர்வுகளாக மாற்றி நல்லதொரு திருப்பத்தைத் தருகின்ற திருத்தலம்- காவிரித் தென்கரை வைப்புத்தலங்களில் ஒன்றான தலம்- பரணி நட்சத்திரத்தன்று வழிபடுவோர்க்கு பன்மடங்கு பலன்களை அள்ளித்தரும் தலம்- சிவநேச நாயன்மார்க்கு சிவன் காட்சிதந்த தலம்- இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஒரு தலம்தான் நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீஅக்னீஸ்வரர்.

இறைவி: சுந்தரநாயகி.

ஊரின் பெயர்: நல்லாடை.

தலவிருட்சம்: வில்வமரம், வன்னி மரம்.

எத்தனை எத்தனையோ திருநாமங்கள் உண்டு ஈசனுக்கு. அத்தனைக்கும் ஒரு காரணமும் இருக்கும். ஆனால் ஒரு ஊரின் பெயருக்கு இறைவனின் திருவிளையாடல் காரணமாகி இருக்கிறதென்றால் அதுதான் நல்லாடை. இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.

ஒருசமயம் மிருகண்டு மகரிஷி இத்தலத்திற்கு வந்து, இங்குள்ள ஈசனுக்கு யாகம் செய்ய ஏற்பாடு செய்தார். அதில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் கூடினர்.

அவர்கள், “”யாகத்தின் புண்ணியபலன் எங்களுக்கும் சேர அருள் செய்யவேண்டும்” என்று முனிவரிடம் வேண்டினர். “”அப்படியானால் யாகத்துக்கு வேண்டிய பொருட்களை நீங்களே வழங்கலாம்” என்றார் முனிவர். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருட்களை யாகத்திற்கு வழங்கினர். அவ்வூரிலிருந்த நெசவாளர்கள் தங்கஜரிகை மின்னும் மூன்று பட்டாடைகளை நெய்து ஒன்றை இறைவனுக்கும், மற்றொன்றை முனிவருக்கும், மீதமுள்ள ஒன்றை அரசனுக்கும் வழங்கினார்கள்.

வேத கோஷங்கள் முழங்க யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்தின்  முடிவில் இறைவனுக்கு கொடுக்கப்பட்ட பட்டாடையையும் தனக்கு வழங்கப்பட்ட பட்டாடையையும் சேர்த்து யாகத் தீயில் போட்டுவிட்டார் மிருகண்டு மகரிஷி. நெசவாளிகள் திடுக்கிட்டனர்.

“”சுவாமி, எவ்வளவு இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு நீங்களும் இறைவனும் அணிந்துகொள்ள வேண்டித்தான் பட்டாடைகளை அளித்தோம். தங்களுக்கு வழங்கியதை தீயிலிட்டதை உங்கள் உரிமை என்றே கொள்வோம்.

ஆனால் இறைவனுக்காக அளித்ததை அவருக்கு அணிவிக்காமல் இப்படி யாக குண்டத்திலிட உங்களுக்கு என்ன உரிமை? நீங்கள் யாக குண்டத்தில் போட்ட பட்டாடை இறைவனைச் சென்றடைந்துவிடுமா?” என்று கோபித்தனர்.

மகரிஷி புன்னகைத்தபடி, “”அனைவரும் சென்று இறைவனின் மூலஸ்தானத்தில் பாருங்கள். உங்களின் சந்தேகத்திற்கான விடை அங்குதான் இருக்கிறது” என்று கூறினார். ஊர் மக்கள் மிகவும் ஆர்வமாக கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின்மேல் யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார

Comments are closed.