நவராத்திரி தோன்றிய கதை14:51:39Thursday2012-10-11![]() ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர். துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி. க.செந்தில் |

சூரபத்மாதியரின் வதத்திற்கென்றே தோன்றிய வன் முருகப்பெருமான். எனினும், அவன்அரங்கேற்றிய ஞானத் திருவிளையாடல்கள் எண்ணிறந்தன.
சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து, அவனை சேவலாகவும் மயிலாகவும் ஏற்றுஎன்றென்றும் தன்னுடனேயே வைத்துக்கொண்ட அளப்பரிய கருணையை என் சொல்வது?
பிரணவப் பொருளறியான் படைப்புக் கடவுளா என வெகுண்டு, பிரம்மனை சிறையிலடைத்து, “உமக்கு பொருள் தெரியுமா?’ என கேட்ட தந்தைக்கே குருவான சுவாமி நாதனைப் புகழ சொற்களேது!

அகத்தியர் தமிழ் தந்தாரென் பர். அவருக்குத் தமிழ் தந்தவன் முருகன். பொதிகை மலையில் அகத்தியர் தவம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில் தெய்வீக மணம் வீசியது. எதிலிருந்து அந்த மணம் வருகிறதென்று அறியாத அகத்தியர் முருகப் பெருமானை பிரார்த் திக்க, அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்தார். ஆறுமுகனையே ஆசானாகக் கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணம் செய்து தமிழை வளர்த்தார். முருகப் பெருமான் செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுத்தான் என்றும்; அதை அகத்தியர் பாண்டியனுக்கு வழங்கினாரென்றும் திருநெல் வேலித் தலபுராணம் கூறுகிறது.
சிவபூஜை செய்யும்போது சித்தத்தை வேறிடம் செல்ல விட்டார் நக்கீரர். அதனால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருளால் விடுபட்டார்.
ஔவைக்கும் முருகனுக்கும் நடந்த தமிழ் விளையாட்டு நாடறிந்த ஒன்று.
“சும்மா இரு’ என்று அருணகிரிக்கு உபதேசித்து, அவரை திருப்புகழ் அருளச் செய்து நீடுபுகழ் வழங்கியவன் முருகன்.
கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு “திகடச் சக்கர’ என அடியெடுத்துக் கொடுத்து, அதற்கு விளக்கம் சொல்ல தானே புலவனாக வந்து கந்தபுராணத்தை அரங்கேறச் செய்ய அருளியவன் முருகன்.
குமரகுருபரர், தேவராய சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் என பலருக்கு அருளி தரிசனம் தந்தவன் முருகன்.

இவ்வாறு பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன், வேண்டுவோர் வினை தீர்த்து வாழ வைக்கும் வள்ளலாகவும் திகழ்கிறான்.
அவன் கோவில்கொண்டுள்ள இடங்ளெல்லாம் அருள் மன்றங்களே! அத்தகைய சிறப்புமிக்க முருகன் தலங்களில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ஆகிய ஆறு படைவீடுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக சிறப் பிக்கப்படுகின்றன. இந்த தலங்களைச் சென்று ஒருமுறையேனும் தரிசித்து வரவேண்டியது முருக பக்தர்களின் கடமையாகும்.

அந்த ஆறுபடைவீடு முருகப் பெருமான்களையும் ஒரே இடத்தில் காணும் ஆவல் எல்லாருக்குமே இருக்குமல்லவா? அந்த ஆவலைப் பூர்த்தி செய்து ஆத்ம சுகம் தருகிறது- சென்னை பெசன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோவில்.
மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் செந்தூரைப்போலவே கடற்கரையையொட்டி அமைந்துள்ள விதம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
கானாடுகாத்தான் என்னும் ஊரைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், அருணாச்சல செட்டி யார் என்னும் சகோதரர்களின் அரிய முயற்சி யால் 1983-ஆம் ஆண்டு இவ்வாலயம் உருவாக் கப்பட்டது.
இங்கு முதன்முதலில் அமைக்கப்பட்டது சுவாமிமலை முருகன் சந்நிதியாகும். பின்னர் மற்ற படைவீட்டு சந்நிதிகள் ஒவ்வொன்றாக அமைக்கப் பெற்றன.
ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்? ஒரு மனிதன் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறக்கிறான். பின்னர் உடன்பிறந்தோருக்கு அண்ணனாகி றான்; தம்பியாகிறான். அவனே ஒரு பெண் ணுக்கு கணவனாகிறான். பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். உறவுகளுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமன், மைத்துனன் என பல உறவு களாகிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவனே. அதுபோலவே நம் ஆத்ம திருப்திக்கு இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். மனநிம்மதி பெறுகிறோம். இத்தகைய நிம்மதியை- மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது இந்த அறுபடை முருகன் ஆலயம்.
ட்ரஸ்ட் ஒன்றின்மூலம் நிர்வகிக்கப்படும் இவ்வாலயம், அறங்காவலரான திருமதி அலமேலு ஆச்சி அவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுபடை முருகன் திருவுருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் அற்புதமாக விளங்குகின்றன.
இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் வேலை வாய்ப்பிற்கும், வெளிநாடு செல்ல “விசா’ கிடைப்பதற்கும் வரம் நல்குபவர்.
தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த மன அமைதியைத் தருவதாய் விளங்கு கிறது இவ்வாலயம்.
பக்தர்களுக்கு முதலில் சோதனைகள் வரலாம்; துன்பங்கள் தொடரலாம். ஆனால், “நீயே சகலமும்; உன் பாதமே அடைக்கலம்’ என்று சரணடைந்துவிட்டால், நம்மைப் பற்றியுள்ள இடர்களனைத்தும் இல்லாமல் போய்விடும். துயரங்கள் தொலைதூரம் ஓடும்.
நோயற்ற வாழ்வு, சகல சௌபாக்கியங்கள், மணப்பேறு, மகப்பேறு என எல்லாம் அள்ளித் தரும்- ஓரிடத்தில் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டு முருகனை வணங்கி திருவருள் பெறுவோம்!

நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும். அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம். அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால், நம்முள் சிவலயம் உண்டாகி, ஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. “செய்யாதே’ என்றால் செய்யத் துடிக்கும்; “சாப்பிடு’ என்றால், “பசியில்லை’ என்று சொல்லும்; “உட்காரு’ என்றால், “பரவாயில்லை நிற்கிறேன்’ என்று சொல்லும். இப்படி சஞ்சலமும் சபலமும் கொண்ட மனதை அந்த சிவபெருமானாலேயே கடைத்தேற்ற முடியும்.
மாதுளையில் வீற்றிருக்கும் மகேசனே! உம் கருணையினால் மனமதைச் செம்மையாக்கி செழிப்பாய் வாழ முனைகிறோம் ஐயனே! உம் அருள்பெற்ற மாணிக்க வாசகரைப்போல் உம்மையே நினைக்கும் மனதை எமக்கும் தாரும் ஐயா!
கீழ்வேளூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனே! உம் திருவடி சரணமே இப்பிறவி யின் பயனாம்! பெருமான் உறைந்த மாதுளையை மருந்தாக்கி மக்கள் பிணி தீர்க்க முனைகிறோம் இறைவா!
விடாத இருமல் தீர…
உலர்ந்த மாதுளம்பூ மொட்டு, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், காய்ந்த திராட்சை, தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப் பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சினைக்கும் நல் மருந்தாய் அமையும்.
வயிற்றுப்போக்கை நிறுத்த…
ஒரு மாதுளம்பிஞ்சு, அதிவிடயம், கோரைக் கிழங்கு, விளாம்பழ ஓடு, சுண்டைக்காய், கசகசா, மாம்பருப்பு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கும் நொடியில் விலகும்.
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் தீர…
மாதுளம்பூ, மாசிக்காய், அருகம்புல் ஆகிய மூன்றையும் வகைக்கு பத்து கிராம் எடுத்து கஷாயமிட்டு, பாதியாகச் சுண்டச் செய்து சாப்பிட, மூக்கிலிருந்து அடிக்கடி உண்டாகும் ரத்தப்போக்கு சரியாகும்.
பற்களைப் பற்றிய வியாதிகள் தீர…
மாதுளை துளிர், மாதுளம் மொட்டு, மாதுளம்பூ, மாதுளம்பிஞ்சு, மாதுளை ஓடு, ஆலம்பட்டை, அரசம்பட்டை, மருதம்பட்டை, கருவேலம்பட்டை, மாசிக்காய், கடுக்காய், இந்துப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேகரித்து தூள் செய்து, இத்துடன் 20 கிராம் அளவு பச்சைக் கற்பூரத்தையும் தூள் செய்து கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பற்பொடியில் பல்துலக்கி வர முக வசீகரம் உண்டாகும். மேலும் பல்வலி, பல்கூச்சம், பல்ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம், ஈறுஅரிப்பு, பல் அசைவு, சொத்தைப்பல் போன்ற பற்களைப் பற்றிய அனைத்து வியாதிகளும் தீரும். மேலும் நாக்கில் உண்டாகும் புண், நாசியில் உண்டாகும் புண், தொண்டைப்புண் போன்றவையும் இப்பற் பொடியால் தீரும்.
ரத்த பேதி நீங்க…
மாதுளம்பூ, அத்தி, துத்தி, ஆவாரம்பூ, பிரண்டை, பொடுதலை, வில்வம், வில்வ ஓடு, மாதுளை ஓடு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேர்த்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை ஐந்து கிராம் அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, ரத்தபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும். மேலும் ஆசனவாய்ப் பகுதியில் உண்டாகும். புண், அரிப்பு, தடிப்பு, வெடிப்பு போன்ற குறைபாடுகளும் முழுமையாய் நீங்கும்.
வாந்தியை நிறுத்த…
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வாந்தியை நொடிப்பொழுதில் நிறுத்தும் சக்தி மாதுளைக்கு மட்டுமே உண்டு. சித்த மருத்துவ மருந்துக்கடைகளில் கிடைக்கும், “மாதுளை மணப்பாகு’ என்ற மருந்தினை வாங்கி, மணிக்கு ஒருமுறை கொடுத்து வாருங்கள். ஐந்தாறுமுறை கொடுத்தபின் வாந்தி வருவது நின்றுவிடும். கடைகளில் வாங்க இயலாதபட்சத்தில் இங்கே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
மாதுளைச் சாறு, நெல்லிச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து ஒன்றாக்கி, 300 மி.லி. தேனுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும் சாறுசுண்டி பாகுபதம் வரும்பொழுது எடுத்து பத்திரப்படுத்தவும். எளிய முறையில் செய்யப் படும் இம்மாதுளை மணப்பாகு கடுமையான வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.
விக்கலை நிறுத்த அற்புதமான வழி…
மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத் துக் கொண்ட அன்பர்களுக்கு, அவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று சொல்கிறேன். தீவிர மதுப்பழக்கம் உடையோ ருக்கு, கல்லீரல் கெட்டு ரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும். விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டென்பதை அடித்துச் சொல்லலாம்.
மாதுளம் பிஞ்சு, மாதுளம்பூ, வறுத்த சீரகம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை விக்கல் கண்டபோது தேனில் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படு பவர்களும், குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன் படுத்தலாம். கல்லீரல் சார்ந்த பிற நோய்களான கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப் பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப் படுத்தும். இம்மருந்தினை, எம்பெருமான் ஈசனை சரணடைந்து சாப்பிடுங்கள்; சகலமும் பெறுவீர்கள்.
மன உளைச்சலுக்கு மாதுளையே மாமருந்து…
சமீபத்திய மேலைநாட்டு ஆய்வறிக்கை, “மாதுளம்பழச் சாறை மனநோயால் பாதிக் கப்பட்டவர்கள், ரத்த அழுத்த இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்’ என்று தெரிவிக்கிறது.
ஆண்மைக் குறைவு நீங்க…
மாதுளை ஓடு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்கிரகாரம், பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, நீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகி, போக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.
உயிரணுக்கள் பெருக…
மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும். குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல், மருந்து செய்யும் வேலையை மகேசனை வேண்டி ஆரம்பியுங்கள்!
(தொடரும்)